சன்னி லியோனுக்கு சேலை கட்ட கற்றுக் கொடுத்த சல்மான் கான்

மும்பை: நடிகை சன்னி லியோனுக்கு சேலை கட்ட கற்றுக் கொடுத்துள்ளார் இந்தி நடிகர் சல்மான் கான்.

அண்மையில் நடந்த விருது விழா ஒன்றை இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். அந்த விழாவில் அவர் தனக்கு ஆகவே ஆகாத நடிகர் ஷாருக்கானை கட்டிப்பிடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

சன்னி லியோனுக்கு சேலை கட்ட கற்றுக் கொடுத்த சல்மான் கான்

மேலும் நடிகை சன்னி லியோனுக்கு சேலை கட்டுவது எப்படி என்று மேடையில் காமெடியாக செய்து காட்டினார். சல்மான் கான் பெயர் தற்போது அடிக்கடி செய்திகளில் வருகிறது.

அவர் நடித்துள்ள ஜெய் ஹோ படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது. ஏற்கனவே ரீமேக் படங்களில் நடித்து வெற்றி கண்டவர் சல்மான். இந்நிலையில் தெலுங்கு படமான ஸ்டாலினின் ரீமேக் தான் ஜெய் ஹோ என்பது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத்

சென்னை: வீரம் படத்தை அடுத்து அஜீத் குமார், இயக்குனர் சிவா மீண்டும் சேர்ந்து பணியாற்றவிருக்கிறார்கள்.

இயக்குனர் சிவா தமிழில் இரண்டு படங்கள் தான் எடுத்துள்ளார். ஆனால் இரண்டு படங்களுமே ஹிட். ஆம் சிவா எடுத்த முதல் தமிழ் படமான சிறுத்தை ஹிட்டானது.

மீண்டும் 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத்

அதையடுத்து அவர் அஜீத் குமாரை வைத்து வீரம் படத்தை எடுத்து பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்தார். இந்த படமும் ஹிட்டாகியுள்ளது. வீரம் படத்தை அடுத்து அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்நிலையில் கௌதம் மேனன் படத்தை முடித்த பிறகு அஜீத்தும், இயக்குனர் சிவாவும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறார்களாம். ஏற்கனவே வீரம் படத்தை ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்?

சென்னை: சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அஜீத் குமாரின் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியிலேயே அதை பார்த்துவிடுவார் சிம்பு.

அஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்?  

படத்தை பார்ப்பதோடு நிறுத்திவிட மாட்டார் அஜீத்தின் நடிப்பு பற்றி தனது படப்பிடிப்பில் புகழந்து பேசிக் கொண்டே இருப்பார். இப்படி தல புராணம் பாடும் சிம்பு தான் நடித்துக் கொண்டிருக்கும் வாலு படத்தை தனக்கு பிடித்த அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

அஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்?  

இந்நிலையில் அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் சிம்புவும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.