அஞ்சலி சென்னையில்தான் இருக்காராமே!

Is Anjali Hiding Chennai

சென்னை: நடிகை அஞ்சலி எங்கே... எங்கே... அவரது உறவினர்களும் என சினிமாக்காரர்களும் பத்திரிகையாளர்களும் தேடிக் கொண்டிருக்க, அவர் சென்னையிலேயே பாதுகாப்பாக மறைந்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

அவரைக் கண்டுபிடிக்க, சென்னையில் அவர் யார் யாரோடெல்லாம் பேசினார் என்ற விவரங்களோடு விசாரணையைத் தொடங்கியுள்ளனர் போலீசார்.

சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்த அஞ்சலி, ஹைதராபாதில் தஸ் பல்லா என்ற ஹோட்டலில் தங்கினார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்கிருந்து மாயமானார்.

ஹோட்டல் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, அவர் காலையில் ஹோட்டலை விட்டு ஒரு இளைஞருடன் வெளியேறி, சாம்ஷாபாத் விமான நிலையத்துக்குப் போனது தெளிவாகியுள்ளது. அதன் பிறகு அவர் சென்னைக்குப் போனாரா பெங்களூர் போனாரா என்று தெரியாமல் இருந்தது.

ஆனால் அவரை யாரும் கடத்தவில்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

அடுத்து அஞ்சலி எங்கே தங்கியிருக்கக் கூடும் என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறது போலீஸ்.

ஹைதராபாதில் அஞ்சலி தங்கியிருந்தபோது, அவர் சென்னையில் உள்ள 18 பேருக்கு செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகுதான் அவரது மொபைல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த 18 பேர் மொபைல் எண்களையும் கைவசம் வைத்துள்ள போலீசார், ஒவ்வொருவராக விசாரித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த சுமின் சாலமன் என்ற டாக்டரிடம்தான் அடிக்கடி அஞ்சலி பேசியுள்ளார். அண்ணா நகரில் வசித்து வரும் அவரிடம் போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அடுத்து அஞ்சலி தொடர்பு கொண்ட சினிமா நண்பர்களிடமும் விசாரிக்கப் போகிறார்களாம்.

அஞ்சலி கடைசியாக போன விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே விமானங்கள் போகின்றன. அஞ்சலி பெங்களூரில் இல்லை, அங்கு வரவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியெனில் அவர் சென்னையில்தான் பாதுகாப்பாக எங்கோ இருக்கிறார் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை தொடர்கிறது.

எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் அஞ்சலி வந்துவிடுவார்... மர்மங்கள் விலகும் என அவரது நண்பர்கள் சொல்லி வருகின்றனர்.

 

அத்தனை பிரச்சினையும் தீர்ந்து மீண்டு வா அஞ்சலி - வசந்தபாலன் உருக்கம்

Vasanthabalan Comments On Anjali

சென்னை: நடிகை அஞ்சலிக்கு, அங்காடித் தெரு மூலம் புதிய அடையாலம் கொடுத்தவரான இயக்குநர் வசந்தபாலன் அஞ்சலி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக எழுதியுள்ளார்.

வசந்த பாலனின் வரிகளிலிருந்து...

கற்றது தமிழ் படம் பார்த்த போது
நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி
பல இடங்களில் கேட்கும் போது
எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது
போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.

பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில்
அவள் சுடிதாரின் நிறம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது.
சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது
மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.
உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல்
எல்லையற்ற மனதின்
சந்தோச பெருவெள்ளத்தில்
காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள்
ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.

ரத்தமும் சதையுமான
பல்வேறு பெண்களின் சித்திரங்களை
அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள்.
ஒரு வானம் பல்வேறு வண்ணங்களை எழுப்பி எழுப்பி காட்டுவது போல பல்வேறு மத்திய ரக பெண்களில் ஒன்றாக எனக்கு தோன்றினாள்.
இப்படியாக அந்த படம்
என் மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களை உசுப்பி விட்டது/

மஹாராஸ்ராவில் எங்கோ மாமாவின் வீட்டில் அவள் தங்கியிருப்பாள்
ஜீவா போய் பார்க்க போவார்
அதன் பிறகு ஒரு விபசாரவிடுதியில் அஞ்சலியை பார்ப்பான்.
இப்படியாக அவளின் துயரம்
இருளுக்கும் இருண்மைக்கும் புதிருக்கும் நடுவே
ஒரு முறுக்கப்பட்ட கயிறாக சுற்றியபடியேயிருக்கும்.
இப்படியாக இந்த படம் பல்வேறு மின்மினிகளை
மனதிற்குள் பறக்கவிட்டபடி நிறங்களை உதறியபடியே இருந்தது.
ஒரு புதிய பெண் இத்தனை அழுத்தமாக அழகாக
பல்வேறு விதமான கால கட்டங்களை
மனதில் கொண்டு வந்து நடித்துவிட்டாளே என்று தோன்றியது.
நம்பிக்கையான புதிய வரவு என்று தோன்றியது

அங்காடித்தெரு படத்திற்காக
சேர்மக்கனி கதாபாத்திரத்தில் நடிக்க
பல புதிய பெண்களை பார்த்துக்கொண்டிருந்தேன்,
கதைநாயகன் மகேஷ் என்று முடிவானவுடன்
இது காதல் படம்
இவனும் புதுசு
கதாநாயகியும் புதுசுன்னா
இரண்டு பேரும் தயக்கத்திலேயே கூச்சத்திலே
காதல் காட்சிகளில் விலகி விலகி நடித்து
காதலை கொண்டு வராமல் சொதப்பி விடுவார்கள்
என்று எண்ணினேன்.

உடனே என் மனசுக்குள் வந்த ஒரு உருவம் அஞ்சலி.
அவளை பார்க்க வேண்டும் என்று அழைத்தேன்,
அவள் அம்மா(இப்போது சித்தி)வுடன்
ஜிலுஜிலு சுடிதாருடன் வந்தாள்.
உடனே குழப்பமாக இருந்தது.
வேறு சுடிதார் வாங்கி வந்து டெஸ்ட் சூட் பண்ணினேன்,
கதை நாயகன் மகேஷ்
பெண் என்பதால் தயங்கினான்,
விலகி நின்றான்,
அவன் தயக்கத்தை புரிந்து கொண்டு
நான் பிரச்சினையை விளக்காமலே
அஞ்சலி அந்த நெருக்கத்தை வரவழைத்து நடித்தாள்.

மிக அற்புதமான ரசாயன மாற்றம் இருந்தது,
இருவரும் நல்ல ஜோடி என்று தோன்றியது.
உடனே அஞ்சலியை தேர்வு செய்தேன்.
படப்பிடிப்பு துவங்கியது.
மெல்ல மெல்ல சேர்மக்கனியாக மாறத்துவங்கினாள்
முதல் 3 நாட்களில் படத்தின் அதி முக்கியமான காட்சியை
படமாக்கும் போதே அற்புதமான நடிப்பை வழங்கத்துவங்கினாள்,
என் மனம் மலர்ந்தது
கதைக்கு உயிர் வந்தது,
மகேஷ் சுமாராக நடிக்கும்
பல இடங்களில் அஞ்சலி தூக்கி சாப்பிடத்துவங்கினாள்,

கவனம் அவள் பக்கம் திரும்பியது,
மகேஷ் நடிக்க தயங்கிய
நெருக்கமான காதல் காட்சிகளில்
அவனின் கூச்சத்தை இவள் போக்கினாள்.
இடைவிடாது அவனிடம் பேசிபேசி நெருக்கத்தை வரவழைத்துக்கொண்டாள் அங்காடித்தெரு திரைப்படத்தில்
காதல் இத்தனை அழுத்தமாக வந்தது அஞ்சலியால் தான்.
பாசாங்கற்ற பெண்.
புத்திசாலி.
ஒரு இயக்குனரின் கதாநாயகி.

காலம் அவள் நடிப்பைக்கண்டு கொண்டது.

அவளின் உலகம்
கனவின் மர்ம வெளிகளாலும் பைத்திய நிலையின் பல்வேறு புதிர்களாலும் நிலைகளாலும் கட்டப்பட்டவை.
கனவுக்கும் நனவுக்குமிடையே
யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே
எப்போதும் பெருகி கரைபுறண்டு ஓடிக்கொண்டிருக்கும்
ரகசிய நதியின் கரையில் அவள் வாழ்கிறாள்,
வாழ்வின் சூட்சுமமான முடிச்சினை அவிழ்த்தபடி
காலத்தின் சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில்
அவள் அத்தனை துயரத்தோடு சஞ்சரித்தபடியே இருக்கிறாள்,

கடந்த காலத்தின் மெல்லிய ஏக்கம் கனவு துயரம் ரகசியம்
அவளின் முகத்தில் தெரியாதபடி புன்னகையால் மறைத்தபடியிருந்தாள்,
அவளை பற்றிய அத்தனை சித்திரங்களும்
மாய காற்றில் மிதந்தபடியிருக்கின்றன.
அவள் ஏக்கத்தின் வெக்கையும் கனவின் பெருவிம்முதலும்
எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டவளாக அவள் இருக்கிறாள்
விதியின் மாபெரும் கதை.

அவள் விநோதமானதும் கொடூரமானதுமான வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அழகியல் வரம்புக்குள் சிக்காத
எத்தனையோ அழகிகளில் அவளும் ஒருத்தி,
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
பாடலில் வரும் சிறுசிறு ரியாக்சன்
அத்தனை அழகாக இருக்கும்.

இன்று அவள் மீது சுமத்தப்படும பிம்பங்கள்
கனவுகளற்ற உலர்ந்த விச மொழியில் உள்ளது,
விரிக்கப்படும் அத்தனை கனவுகளும்
மாய மொழியிலும் வியாபார நிமிர்த்தமான மீறல்கள் கொண்டதாக உள்ளது.

திரைக்குடும்பத்தில் இல்லாத ஒரு பெண்
திரைத்துறையில் நுழைய
எத்தனை ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கிறது.
நிறைய மர்மமான பொய்களையும் புதிர்களையும்
அவிழ்க்க வேண்டியிருக்கிறது.
அதீத புனைவுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது
இந்த கதைகளை கேட்கும் போது
அந்த மனிதர்களை பார்க்கும் போது
வாழ்வின் மதிப்பீடுகளும் கனவுகளும் உடைந்து நொறுங்குகின்றன.

அவள் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து
புதிதாக மீண்டு வர இறையை வேண்டுகிறேன்.

 

கூட்டுறவு சங்க தேர்தலில் விசி குகநாதன் மோசடி - அமீர் குற்றச்சாட்டு

Ameer Alleges Vc Guhanathan

இயக்குநர் அமீர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இயக்குநர் வி.சி.குகநாதன் மீது மோசடி குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவர் கூறுகையில், "பெப்சியில் இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு கொடுக்கப்பட்ட பையனூர் இடத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைக்கப்பட்டது. இதற்கு தலைவராக வி.செ.குகநாதன் இருந்தார். அவரது தலைமையிலான குழு கலைக்கப்பட்டபின் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுகுறித்து பெப்சிக்கு முறையான எந்த வித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அந்த சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கட்டிய பணத்திற்கு முறையான தகவலும், விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

பெப்சியில் பொதுக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே சொசைட்டியின் தேர்தலில் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்பது மரபு.

ஆனால் வி.செ.குகநாதன் அவர்கள் தேர்தல் அதிகாரியை கைக்குள் வைத்துக் கொண்டு அவருக்கு சாதகமானவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து, பெப்சி நிர்வாகிகளின் மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்ய வைத்துள்ளார்.

அதேபோல ஏற்கனவே கலைக்கப்பட்ட பழைய கூட்டுறவு சங்கத்தை மீண்டும் புதுப்பித்து, அதிலும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

அதுபோல இது சம்பந்தமான முறைகேடுகளை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துச் செல்வதாக உள்ளோம். துறையின் அமைச்சர் அவர்களுக்கும், தொடர்புடைய அரசு அதிகாரிக்கும் தெரிவித்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

சரத்குமார், ராதாரவி

சில தினங்களுக்கு முன் இந்த சங்கத்துக்கு நடந்த தேர்தலில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு மற்றும் கானா உலகநாதன், எம்.என்.கே.நடேசன், கே.ஆர்.செல்வராஜ், சுகுணா வீரமணி ஆகிய 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேறு யாரும் எதிர்த்து மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து பத்து பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

அஞ்சலியுடன் காரில் இருந்தது தெலுங்கு இளம் நடிகராக இருக்கலாம்: அண்ணன் சந்தேகம்

Young Telugu Actor Was With Anjali In The Car

ஹைதராபாத்: அஞ்சலியுடன் காரில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் என்று கூறப்பட்டது. தற்போது அந்த நபர் தெலுங்கு இளம் நடிகர் ஒருவராக இருக்கலாம் என்று அவரது அண்ணன் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமானார். அவர் ஹோட்டல் வாசலில் நின்ற கார் ஒன்றில் ஏறிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. காரில் இருந்த நபரின் முகம் வீடியோவில் சரியாகத் தெரிவில்லை. அந்த மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அஞ்சலியை கண்டுபிடித்து தருமாறு அவரது அண்ணன் ரவிசங்கர் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் அவரது அண்ணன் ரவிசங்கர் தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஹைதராபாத் ஹோட்டலில் எங்கள் சித்தப்பா சூரிபாபுவுடன்(பாரதியின் கணவர்) அஞ்சலி தங்கியிருந்தார். சித்தப்பா குளித்துக் கொண்டிருக்கையில் அஞ்சலி வெளியே சென்றுள்ளார். எனக்கு சித்தப்பா மீது சந்தேகமாக உள்ளது. காலை 9.50 மணிக்கு ஹோட்டலில் இருந்து கிளம்பிய அஞ்சலி கடைசியாக 11 மணிக்கு ஒரு நடிகருடன் செல்போனில் பேசியிருக்கிறார். ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து அந்த அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி ஏறிச் சென்ற காரில் தெலுங்கு இளம் நடிகர் ஒருவர் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையே தோகாவில் இருக்கும் எங்கள் அம்மா பார்வதி தேவி எனக்கு போன் செய்தார். அஞ்சலி தன்னை அழைத்து தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியதுடன், அண்ணன் கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்லுங்கள் என்று கூறியதாக எங்கள் அம்மா தெரிவித்தார். அஞ்சலியை பார்த்தால் தான் புகாரை வாபஸ் பெறுவேன் என்று கூறினேன் என்றார்.

அதன் பிறகு அவர் காவல் நிலையத்தில் புகாரை வாபஸ் பெற சென்றார். ஆனால் அஞ்சலியை நேரில் பார்க்காமல் புகாரை வாபஸ் பெற அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

அஞ்சலியின் தாய் ஆந்திராவில் இருப்பதாக அவரது சித்தி பாரதி தேவி தெரிவித்தார். ஆனால் ரவிசங்கரோ அவர் தோகாவில் இருப்பதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வடிவேலு மகள் திருமணம்... சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் ஒருவரையும் அழைக்கவில்லை!

Vadivelu Daughters Marriage Without Any Vip

தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் வடிவேலு. தன் மூத்த மகள் திருமணத்துக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளில் கூட ஒருவரையும் அழைக்கவில்லை காமெடிப் புயல்.

வடிவேலு மகள் கன்னிகா பரமேஸ்வரி - சதீஷ்குமார் திருமணம் மதுரையில் இரு தினங்களுக்கு முன்பு மகா எளிமையாக நடந்தது. மண்டபம் இருந்த இடம்கூட மதுரைக்கு வெளியே ஒதுக்குப் புறமான புறநகர் பகுதி.

என்ன பொண்ணுக்கு கல்யாணமாமே என்று கேட்ட அத்தனை திரையுலக, அரசியல் நண்பர்களுக்கும், 'ஆமாம்ணே... ஆனா யாரும் சிரமப்பட்டு வரவேணாம்னுதான் நானே எல்லார் வீட்டுக்கும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றேன்," என்று கூறிவிட்டாராம் வடிவேலு. ரசிகர்கள் யாரையும் மண்டபம் பக்கமே வரக்கூடாது என்று கூறிவிட்ட வடிவேலு, பத்திரிகையாளர்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

தன்னை சினிமாவில் ஒரு ஆளாக்கிய ராஜ்கிரணிடம் கூட, நிலைமை சரியில்லண்ணே. நானே உங்க வீட்டுக்கு பிள்ளைகளை கூட்டிட்டு வர்றேன் என்று கூறியிருக்கிறார்.

'அப்படியென்னய்யா நிலைமை... நீ என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி ஒதுங்கி நிக்கிற..' என்று உரிமையுடன் கண்டித்தாராம் ராஜ்கிரண்.

வடிவேலுவை அரசியலுக்கு அழைத்து வந்த திமுகவின் மதுரை தலைமை முக அழகிரிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ கூட அழைப்பில்லை.

"நமக்கு அரசியல், சினிமா என அனைத்து தரப்பிலும் நண்பர்கள் ஏராளம் உண்டு. ஆனால் இப்போது அவர்களை அழைக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அவர்களும் என்னைப் புரிந்து கொண்டு இதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் என் மகன் கல்யாணத்தை பிரமாண்டமா செய்வேன். அப்போ அமர்க்களப்படுத்திடலாம்ணே,' என்கிறார் வடிவேலு.

வடிவேலுவுக்கு மூன்று மகள்கள், ஒரே ஒரு மகன். இன்னும் மூன்று திருமணங்கள் அவர் வீட்டில் நடக்கவிருக்கின்றன. சினிமாவில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ள வடிவேலு, தன் வீட்டின் அடுத்தடுத்த திருமணங்களை எந்த வித நெருக்கடியுமில்லாமல் நடத்தட்டும்!

 

ஃபெட்னா 2013: முதல் முறையாக கனடாவில் தொடக்கவிழா!

டொரான்டொ(கனடா): வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னா (FeTNA) வின் விழா ஆண்டுதோறும் வெவ்வேறு நகரங்களில் நடைபெறுவது வழக்கம்.

2013 ஆம் ஆண்டிற்கான ஃபெட்னா விழா, கனடாவின் டொரான்டொ நகரில் உள்ள சோனி அரங்கத்தில் ஜூலை 5, 6, 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கனடியத் தமிழர் பேரவையின் முன்னின்று நடத்தும் இந்த ஃபெட்னா விழா, கனடா நாட்டில் முதன் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

fetna 2013 inauguration canada
தமிழக உறவுகளையும் ஈழத் தமிழர்களையும் இணைக்கும் விழா

இதற்கான தொடக்க விழா கடந்த சனிக்கிழமை டொரான்டொ பிரின்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளரும், ஃபெட்னா 2013 மார்கெட்டிங் கமிட்டி தலைவருமான துரைரத்தினம் துஷ்யந்தன் தொகுத்து வழங்கினார்.

ஈழத்தின் விடியலுக்காகத் உயிர் ஈந்தோரையும், உலகெங்கும் விடுதலைக்காக உயிர் தந்தோரையும் நினைவு கூர்ந்து அமைதி வணக்கத்தோடு நிகழ்ச்சி தொடர்ந்தது. ஃபெட்னா 2013 ஒருங்கிணைப்பாளர் பிரகல் தொடக்க உரையாற்றினார்.

'தமிழையும் தமிழரையும் போற்றும், ஏற்றும் விழாவாக இவ்விழா தொடர்ந்து அமைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், தமிழ்நாட்டு உறவுகளையும் புலம்பெயர் ஈழத் தமிழரையும் பல கோணங்களில் இணைக்கும் ஒரு நிகழ்ச்சியாக ஃபெட்னா 2013 விழா அமையும் என உறுதிபட கூறினார்.

கனடா அரசு ஆதரவுடன்

டொரான்டொ சுற்றுலாத் துறையும், அன்டாரியோ மாநில அரசும் ஃபெட்னா 2013 விழாவை ஆதரிப்பதுடன், உடன் பங்கேற்று நடத்தவும் செய்கிறார்கள்.

அன்டாரியோ மாநில அரசின் குடியேற்ற மற்றும் குடியுரிமை அமைச்சர் 'மைக்கேல் கூட்ரோ' தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அன்டாரியோ மாநில முதல்வர் 'கத்தலின் வின்' அனுப்பியிருந்த வாழ்த்து மற்றும் வரவேற்புச் செய்தியை அமைச்சர் மைக்கேல் கூட்ரோ தெரிவித்தார். முதல்வரின் வாழ்த்துச் செய்தியில், டொரான்டொ ஃபெட்னா 2013 விழா குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் அனைத்து உதவிகளையும் மாநில அரசு நிறைவேற்றித் தரும் என உறுதி அளித்திருந்தார்.

முன்னதாக, அன்டாரியோ வின் விளையாட்டு, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் 'மைக்கேல் சான்' வெளியிட்ட அறிக்கையில், ஃபெட்னா 2013 விழா அன்டாரியோ வின் வளர்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு

அமெரிக்காவிலிருந்து ஃபெட்னா 2013 நிகழ்ச்சிக் குழு தலைவர் சுந்தர் குப்புசாமி மற்றும் ஃபெட்னா துணைத்தலைவர் நாஞ்சில் பீட்டர் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழைப் போற்றும் வகையிலேயே நிகழ்ச்சிகள் அமைக்கப்படுவதாகவும், உள்ளூர் கலைஞர்களுக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈழத் தமிழரும் 'தழிழ்த்தூது' என போற்றப்படுபவரும் தமிழ்த் தொண்டருமான தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக ஃபெட்னா 2013 நடைபெற உள்ளது. நூற்றாண்டு நிகழ்வுகள் தொடர்பாக தனிநாயக அடிகளாரின் விழாத் துணைக் குழு உறுப்பினர் ராஜன் பிலிப் அவர்களும் விழாக் குழுத் தலைவர் சிவன் இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.

தமிழையும் தமிழரையும் உயர்த்தும் வகையிலும் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை புலம்பெயர் தமிழர்களை சரியான முறையில் முன்னிலைப்படுத்தியும் ஃபெட்னா 2013 விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைய வேண்டும் என்ற உறுதிமொழியுடன் தொடக்க விழா நிறைவடைந்தது.

இந்தாண்டு பெட்னா விழாவில் இதுவரை இல்லாத அளழுக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்களும், இலக்கியவாதிகளும் பங்கேற்க உள்ளனர்.

ஃபெட்னா 2013 குறித்த மேலதிக தகவல்களை www.fetna2013.ca என்ற இணையத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

டோலிவுட் ஸ்டிரைக்: அஜீத் பட ஷூட்டிங் ரத்து

Ajith Shooting Cancelled

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலக வேலைநிறுத்தத்தால் ஹைதராபாத்தில் நடந்து வந்த அஜீத்-சிவா பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது என்று இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் நடந்து வந்த அஜீத் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அஜீத் சென்னைக்கு கிளம்புகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஷூட்டிங் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து இப்படத்தில் நடிக்கும் வித்யுலேகா ராமன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

தெலுங்கு திரையுலக ஸ்டிரைக். அதனால் தல, என்டிஆர் ஷூட்டிங் இல்லை. சென்னைக்கு இன்று திரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

ஏ ஆர் ரஹ்மானுக்கு தமிழறிவு இல்லையாம்!- சொல்கிறார் தேவயானி வீட்டுக்காரர்!

யாரை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது.

தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று சொன்ன உன்னத தமிழன் ஏ ஆர் ரஹ்மானை, வெற்று விளம்பரத்துக்காக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர்தான் தேவயானி கணவர் என்ற அடையாளத்தோடு உலாவரும் இயக்குநர் ராஜகுமாரன்.

திருமதி தமிழ் என்ற படத்தை மனைவி தேவயானி தயாரிக்க, ராஜகுமாரனே இயக்கி நடித்துள்ளார். இந்தப் பட ஸ்டில்களைப் பார்த்த அனைவருமே இன்ஸ்டன்டாக ராஜகுமாரனுக்கு பவுடர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துவிட, உடனே சோலார் ஸ்டார் என தனக்காக ஒரு புதுப் பட்டப் பெயரை உருவாக்கினார் ராஜகுமாரன்.

sa rajkumar attacks on ar rahman
இத்திரைப்படத்தின் பாடல்களை அருப்புக்கோட்டை தவசிமணி - மொரப்பூர் ஓவியன் - அந்தியூர் நித்யா ஆகியோர் எழுத, கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்தே போன எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார். ஆனால் எந்த நிறுவனமும் திருமதி தமிழ் திரைப்படத்தின் இசை உரிமையை வாங்க முன்வரவில்லையாம்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தேவயானி, "திருமதி தமிழ் திரைப்படத்தின் பாடல்களை வாங்க யாருமே முன்வரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் பாடல்களைத் தான் வாங்குகிறார்கள்," என்றார் ஆதங்கத்துடன்.

அப்போது மனைவி தேவயானியின் கையிலிருந்து ஆக்ரோஷமாக மைக்கை பிடுங்கிய ராஜகுமாரன் "ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுக்கு தமிழறிவே சுத்தமாக இல்லை (இளையராஜா போலவே, பல மெகா ஹிட் பாடல்களுக்கு முதல் அடியை அல்லது பல்லவியை எழுதியவர் ஏ ஆர் ரஹ்மான் என்பதெல்லாம் ராஜகுமாரனுக்கு எங்கே தெரியப் போகிறது!)

திருமதி தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் இலக்கிய சுவை நிறைந்தவை. இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எந்த இசையமைப்பாளருக்கும் தகுதி கிடையாது.

எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு மட்டும் தான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க தகுதி இருக்கிறது," என்றார்.

பிதாவே, தாம் செய்வது என்னவென்று தெரியாமல் இவர்கள் செய்யும் பாவங்களை மன்னியும்!

 

மருத்துவமனை ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் மற்றும் மனைவி மீது போலீசில் புகார்!!

Power Star Srinivasan Big Trouble

சென்னை: காமெடி நடிகரும் பப்ளிசிட்டி பிரியருமான பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி துருவியாவிற்கு சொந்தமான 2 மருத்துவனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி வைத்திருப்பதால், இருவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் மற்றும் அவர் மனைவிக்கு சொந்தமான மருத்துவமனைகள் திருமங்கலத்தில் உள்ளன. இதில் டாக்டர்கள் உள்பட மொத்தம் 24 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையாம்.

இதுபற்றி நிர்வாகத்திடம் கேட்டும் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

இன்று காலை 24 பேரும் திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தனிடம் புகார் மனு அளித்தனர். அதில், "எங்களுக்கு 3 மாதமாக மருத்துவமனை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் கஷ்டத்தில் உள்ளோம். சம்பளம் பற்றி கேட்டும், உரிமையாளர்கள் "பவர்ஸ்டார்" சீனிவாசன், அவரது மனைவி துருவியா ஆகியோர் அலட்சியம் காட்டுகின்றனர்.

எனவே எங்களது சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, "புகாரின் அடிப்படையில் 'பவர் ஸ்டார்' சீனிவாசன், அவரது மனைவி துருவியாவிடம் விசாரிப்பதற்காக செல் போனில் தொடர்பு கொண்டோம். அவர்களிடம் பேச முடியவில்லை. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றனர்.

கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்து வருகிறார் இந்த சீனிவாசன். காமெடியன், ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், ஹீரோ என வெரைட்டியான ரோல்கள். ஒரு படத்துக்கு ரூ 1 கோடி சம்பளம் வாங்குவதாக அவரே ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்.

ஆனால் தொடர்ந்து 2 லட்சம், 9 லட்சம் என அற்ப தொகை பாக்கிக்காக செக் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளார். இப்போது தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கே சம்பள பாக்கி வைத்த புகாரில் சிக்கியுள்ளார்.

ஏற்கெனவே பல கோடி நிதி மோசடி குற்றாச்சாட்டில் கைதாகி ஜாமீனில்தான் வெளியில் நடமாடி வருகிறார் இந்த 'புவர் ஸ்டார்'!

 

அஞ்சலியை சமூகவிரோதிகள் கடத்திட்டாங்க: ஹைகோர்ட்டில் சித்தி ஹேபிஸ் கார்பஸ்

சென்னை: மாயமான அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சித்தி பாரதி தேவியுடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகு நடிகை அஞ்சலி தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி காலையில் அவர் மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை. அவரை யாரோ கடத்திவிட்டதாக அவரது சித்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

anjali s aunt files habeas corpus chennai hc

இந்நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி எனக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதை பார்த்த நான் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் சமூக விரோதிகளால் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கும், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதற்கிடையே அஞ்சலி முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரை சந்தித்து தனது பிரச்சனைகளைக் கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரைக் கூறி அவரிடம் பேசினால் உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அஞ்சலி அந்த தயாரிப்பாளரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தன்னைப் பற்றி வெளியாகும் பரபரப்பு தகவல்களுக்கும், மறைவு வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க அஞ்சலி போலீசில் சரணடைய திட்டமிட்டுள்ளாராம். அவர் ஆந்திரா அல்லது சென்னையில் போலீஸ் உயர் அதிகாரி முன்பு விரைவில் சரணடைவார் என்று கூறப்படுகிறது.

 

அஞ்சலி குறித்து எனக்குத் தெரியாது என்று சொல்கிறார் நடிகர் ஜெய் - சித்தி

Jai Other Heroes Have No Idea Aboutanjali

சென்னை: எனது மகள் அஞ்சலி காணாமல் போனதும் அவரை முன்பு காதலித்த நடிகர் ஜெய்யுடன் பேசினேன். தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறி விட்டார் என்று கூறியுள்ளார் அஞ்சலியின் சித்தியான பாரதி தேவி.

அஞ்சலி விவகாரத்தில் தற்போது பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட ஆரம்பித்துள்ளன. தெலுங்கு இளம் நடிகர் வேணு மல்லாடியுடன் அவர் கடைசியாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் ஹைதராபாத் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அஞ்சலியுடன் நடித்த நடிகர்கள் சிலரின் பெயரும் இதில் அடிபட ஆரம்பித்துள்ளது. அஞ்சலி பலரை காதலித்தவர் என்று அவரது சித்தி பாரதிதேவி நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் தீவிரமாக காதலித்ததாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் திடீரென நான் இனிமேல் ஜெய்யுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி அறிக்கையும் விட்டார். அத்தோடு அந்த விவகாரம் அமுங்கிப் போனது. தற்போது அஞ்சலி மாயமாகியிருப்பதால் ஜெய்யின் பெயர் மீண்டும் அடிபட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அஞ்சலியைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி புகார் கொடுக்க வந்திருந்த பாரதி தேவியிடம், ஜெய் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், அது 6 மாதத்துக்கு முன்பு நடந்த கதை. அந்த பிரச்சினை அப்போதே பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. நடிகர் ஜெய்யுடன் கூட பேசிவிட்டேன். அவர் அஞ்சலி பற்றி எதுவும் தெரியாது என்கிறார். அஞ்சலியுடன் நடித்த மற்ற கதாநாயக நடிகர்களிடமும் கேட்டுவிட்டேன். அவர்களும் அஞ்சலி பற்றி எதுவும் தெரியாது என்கிறார்கள் என்றார்.

 

மாயமான பிறகு 2 டாக்டர்கள், தெலுங்கு நடிகர் உள்பட 18 பேருடன் போனில் பேசிய அஞ்சலி...!

Anjali Talked 18 Persons After Gone Missing

ஹைதராபாத்: நடிகை அஞ்சலி மாயமான பின்னர் அவரது போனிலிருந்து 18 அழைப்புகள் போயிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒருவர் தெலுங்கு புதுமுக நடிகர் வேணு மல்லாடி என்று தெரிய வந்துள்ளது. அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் தனது சித்தப்பா சூரியபாபவுடன் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்து தப்பி விட்டார். அதன் பிறகுதான் அஞ்சலி விவகாரம் பெரிதாக வெடித்தது.

2 நாட்களுக்கு முன்பு அவர் காலை8 மணியளவில் சித்தப்பாவுடன் தங்கியிருந்த ஹோட்டலை விட்டுவெளியேறினார். பின்னர் சாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திற்குப் போனார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். பின்னர் பத்தரை மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. தொடர்ந்து மர்மமான முறையில் மாயமாகஇருக்கிறார்.

இந்த நேரத்திற்குள் அவர் 18 பேரிடம் பேசியுள்ளார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரது செல்போன் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளதாம்.

அமெரிக்க டாக்டர் ஒருவரிடமும், சென்னை அண்ணா நகர் டாக்டர் ஒருவரிடமும் அஞ்சலி பேசியுள்ளார். கடைசியாக அவர் தெலுங்கு புதுமுக நடிகர் வேணு மல்லாடி என்பவருடன் பேசியுள்ளார்.

அதேசமயம், தனது தாயாருடன் அஞ்சலி பேசியதாக தெரியவில்லை என்று போலீஸார் சொல்கிறார்கள். முன்னதாக தனது தாயாருடன் அஞ்சலி பேசியதாகவும், புகாரை திரும்பப் பெறுமாறு அப்போது அறிவுறுத்தியதாகவும் அஞ்சலியின் சகோதரர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி விவகாரம் பெரும் மர்மமாக இருப்பதால் ஆந்திர போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது சென்னை போலீஸிலும் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி புகார் கொடுத்திருப்பதால் சென்னை காவல்துறையினரும் விசாரணையை முடுக்கி விடவுள்ளனர்.

 

கமிஷனர் அலுவலகத்தில் அஞ்சலி பரபரப்பு - 'சேட்டை' குறித்து புகார் தர வந்த ஆர்யா!!

Arya Comments On Anjali Missing

சென்னை: சென்னை கமிஷனர் அலுவலகமே நடிகை அஞ்சலியின் சித்தி பெரும் கும்பலோடு வந்து புகார் கொடுத்ததால் பரபரப்பில் மூழ்கியிருந்த நிலையில் நடிகர் ஆர்யா தனது சேட்டை படத்தின் திருட்டு விசிடி கொடுத்து புகார் கொடுக்க வந்திருந்தார். அஞ்சலி குறித்து முதலில் கருத்து தெரிவிக்க மறுத்த அவர் பின்னர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

நேற்று கமிஷனர் அலுவலகமே டென்ஷனாக காணப்பட்டது. காணாமல் போன அஞ்சலியின் சித்தி பாரதி தேவி தனது கணவர் சூரியபாபு, வக்கீல் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஒரு பெரும் கும்பலுடன் புகார் கொடுக்க வந்திருந்தார்.

அதேபோல நடிகர் ஆர்யாவும் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவரும் அஞ்சலி தொடர்பாக கமிஷனரைப் பார்க்க வந்திருப்பாரோ என்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்யா உள்ளே போய் விட்டு திரும்பி வரும் வரை செய்தியாளர்கள் காத்திருந்தனர்.

புகார் கொடுத்து விட்டுத் திரும்பிய ஆர்யாவை செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர். அஞ்சலி குறித்து ஏதாவது பேசினீர்களா கமிஷனரிடம் என்று கேட்க அவரோ டென்ஷனானார். என்ன காமெடி பண்றீங்களா என்று கேட்டுவிட்டு கிளம்பப் பார்த்தார்.

இருப்பினும் செய்தியாளர்கள் விடவில்லை. அஞ்சலி குறித்து சொல்லுங்கள் என்று கேட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, சேட்டை படம் திருட்டு வி.சி.டி.யாக வெளிவந்து விட்டது. அதை தடுத்து நிறுத்தும்படி கேட்டு புகார் கொடுக்கவே வந்தேன்.

அஞ்சலி நல்லவர். அவர் காணாமல் போனது அவரது தனிப்பட்ட பிரச்சினை. அந்த பிரச்சினையை அவரே தீர்த்துக்கொள்வார். படப்பிடிப்பின்போது அஞ்சலி என்னிடம் பேசிக்கொண்டு இருப்பார். அப்போது அவர் என்னிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவர் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று கூறி விட்டுக் கிளம்பினார் ஆர்யா.

சேட்டை படத்தில் ஆர்யாவுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியில் ஆர்யா பலமுறை டேக் வாங்கியதாக செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

 

ஹோட்டலில் இருந்து நடிகை அஞ்சலி எங்கே தான் சென்றார்?..

Police Suspects Someone Had Kidnapped

ஹைதராபாத்: நடிகை அஞ்சலி காரில் கடத்தப்பட்டதாக அவரது அண்ணன் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஹைதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார். டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார். அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார்.

தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர்.

தேடித்தேடி ஓய்கிறது போலீஸ்...

ஹைதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஹோட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஹோட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது.

அஞ்சலி ஓட்டம்...

மறுநாள் திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஹோட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன. தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றாராம்.

காரில் சென்றார்...

ஹோட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள் அஞ்சலி ஏறிக் கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை.

மின்னலாய் மறைந்த கார்...

பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. கார் நம்பர் கேமராவில் பதிவாகவில்லை.

ஏற்கனவே இரண்டு தடவை காதல் வயப்பட்டு அஞ்சலி வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள்.

 

சென்னையில் ஒரு நாள் படத்துக்கு ரஜினி பாராட்டு!

Rajinikanth Lauds Chennayil Oru Naal Film

சென்னை: சரத்குமார், பிரகாஷ்ராஜ் நடித்த சென்னையில் ஒரு நாள் திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை இந்தப் படம் அருமையாக உணர்த்தியுள்ளது என்று அவர் தனது பாராட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மூளைச் சாவடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞனின் உடல் உறுப்புகளை, பெற்றோர் சம்மதத்துடன் எடுத்து தேவைப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்தினர். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு மலையாளத்தில் ட்ராபிக் என்ற படத்தை எடுத்தனர். அது பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அந்தக் கதையை தமிழில் சென்னையில் ஒரு நாள் எனும் பெயரில் படமாக்கினர்.

சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா, பார்வதி மேனன், இனியா உள்பட பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்த இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

படத்தை சமீபத்தில் ரஜினிக்கு போட்டுக் காட்டினர். படம் பார்த்த ரஜினி, அந்தக் கதையின் முக்கியத்துவத்தைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "மரணத்துக்குப் பின் உடல் உறுப்புகள் வீணாக அழிவது பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. அப்படி அழிய விடுவதைவிட, அதை ஒரு தேவைப்படும் நோயாளிக்குப் பொறுத்தி உயிரைக் காப்பாற்றுவதன் அவசியத்தை சென்னையில் ஒரு நாள் படம் உணர்த்துகிறது. இந்தப் படத்தில் நடித்த, படம் எடுத்த அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.