காதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த நடிகை சுஷ்மிதா சென்

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் பிறந்தநாள் விழாவுக்கு காதலர் ரித்திக் பசினுடன் கைகோர்த்து வந்திருந்தார்.

பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி தனது பிறந்தநாளையொட்டி பிரபலங்களுக்கு பிரமாண்ட பார்ட்டி அளித்தார். அந்த பார்ட்டியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர்.

காதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த சுஷ்மிதா சென்

பார்ட்டிக்கு வந்தவர்களின் கண்கள் எல்லாம் ஒரேயொரு ஜோடி மீது தான் இருந்தது. அது தான் சுஷ்மிதா சென், ரித்திக் பசின் ஜோடி. சுஷ்மிதா ரித்திக்கை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்தது பலரையும் வியப்படைய வைத்தது.

பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தபோதும் அவர்கள் கையால் முகத்தை மறைக்கவோ, பத்திரிக்கையாளர்களை திட்டவோ செய்யவில்லை. நைட்கிளப்கள் நடத்தி வரும் 33 வயது பசின் பாலிவுட் பிரபலங்கள் சிலரின் நண்பர் ஆவார்.

ரினீ, அலிஷா என்ற 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சுஷ்மிதா. ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றபோது தனக்கும் குழந்தை பெறும் ஆசை வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குரு சிஷ்யன் போல முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடிக்கிறார் ரஜினி?

ரஜினியின் அடுத்த படம் யாருக்கு... அடுத்து அவர் நடிக்கப் போவது ஆக்ஷன் படமா? காமெடிப் படமா என்றெல்லா்ம் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் சூப்பர் ஸ்டாரோ அமைதியாக, கிரேசி மோகனைச் சந்தித்து காமெடியாக ஒரு கதை தயார் பண்ணுங்கள் என்று கூறியிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.

‘தில்லுமுல்லு', ‘தம்பிக்கு எந்த ஊரு', ‘குரு சிஷ்யன்', சந்திரமுகி உள்ளிட்ட படங்கள் ரஜினியை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு போயின . குறிப்பாக குழந்தைகள்.

குரு சிஷ்யன் போல முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடிக்கிறார் ரஜினி?

சமீபத்திய அவரது படங்கள் அனைத்தும் ‘சீரியஸ் டைப் படங்களாகவே அமைந்தன. ‘சிவாஜி', ‘எந்திரன்', ‘கோச்சடையான்', ‘லிங்கா' போன்ற வகை கதைகளைத் தவிர்த்து, முழுக்க முழுக்க காமெடியாக இந்தக் கதை அமைய வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாம்.

கமலின் ஆஸ்தான எழுத்தாளர் என்றாலும், ரஜினிக்குப் புதியவரல்ல கிரேஸி. ஏற்கெனவே ரஜினியின் அருணாச்சலத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

அருணாச்சலம் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படமாகும்.

 

சினிமாக்காரன் சாலை 17: 'க்ளீன் இண்டியா’ குப்பையில் கொட்டவேண்டிய தேசிய விருதுகள்!

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

நேற்று 2014-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலை மேய்ந்துகொண்டிருந்தபோது ‘ சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருப்பவர் நடிகர் விஜய்' என்று படித்து மைல்ட் ஹார்ட் அட்டாக்கை அனுபவித்து அப்புறம் அது, ‘நான் அவனல்ல அவளு' படத்துக்காக கன்னட நடிகர் விஜய் என்று அறிந்தபோது, மருத்துவமனை செல்லும் அவசியமின்றி மெல்ல சகஜ நிலைக்கு திரும்பினேன்.

‘ஏன் நம்ம விஜய் விருது வாங்கக் கூடாதா? ஒரு கன்னட நடிகர் வாங்கினால் ஆசுவாசம். தமிழ் நடிகர் வாங்கினால் ஆவேசமா?. இப்படிப்பட்ட எண்ணம் உள்ள ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து ‘போனால்' கூட சந்தோஷம் என்று எண்ணும் விஜய் ரசிகர்கள் இருப்பீர்களானால், உங்கள் தளபதியை கொஞ்சமாவது ‘நடித்து' அவார்ட் வாங்கச் சொல்லி எனக்கு ஹார்ட் அட்டாக் வழங்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் இன்றைய பஞ்சாயத்து கண்டிப்பாக உங்களுக்கும் எனக்குமானது இல்லங்ணா. அதை விஜய் தேசிய விருது வாங்குறப்போ வச்சிக்கலாம்.

'க்ளீன் இண்டியா’  குப்பையில் கொட்ட வேண்டிய தேசிய விருதுகள்!

பத்மபூஷன் தொடங்கி சாகித்ய அகாடமி வழியாக சினிமாவுக்கான தேசிய விருதுகள் உட்ப்பட்ட இந்தியாவின் எந்த உயரிய விருதுகள் குறித்தும் எப்போதுமே எனக்கு துளி கூட மரியாதை இருந்தது இல்லை. காரணம் தேர்வுக் குழுவினர் எப்போதுமே ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருந்தே அவற்றைத் தேர்வு செய்யும் சூழலே எல்லாக்காலமும் இருந்து வந்திருக்கிறது. ஆட்சியாளர்களின் நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் இவர்கள்.

இப்போதைய ஒரே ஆறுதல் முன்பு இருந்தது போல் ஜூரிகளுக்கு நடிகைகள் சப்ளை செய்யும் காரியங்கள் இல்லை (?). மிகவும் தளர்ந்து போனவர்களை ஜூரியாக போட்டதனால் ஆன பயனென் கொள்க.

இந்த ஆண்டு 23 மொழிகளில், சிறந்தபடத்துக்கான போட்டியில் 320 படங்கள் பார்க்கப்பட்டதாம். அதில் குப்பைகள் கழித்துக் கட்டப்பட்டு அடுத்த கட்ட மய்யக்குழு பார்வைக்கு அனுப்பப்பட்ட படங்கள் 81.

பாரதிராஜா தலைமையிலான குழு, குட்டித் தூக்கங்கள், கொட்டாவிகளுடன் தினமும் எட்டு முதல் 9 மணிநேரம் வரை அந்த 81 படங்களைப் பார்வையிட்டு இறுதிப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

'க்ளீன் இண்டியா’  குப்பையில் கொட்ட வேண்டிய தேசிய விருதுகள்!

தமிழ்ப் 'படங்களர்கள்', கடந்த சில ஆண்டுகளைப் போலவே, பெருமையாய் சொல்லிக் கொள்ளும்படியும் இல்லாமல் அல்பத்தனமாகவும் இல்லாமல் சுமாரான எட்டு விருதுகளை வென்றிருக்கிறார்கள்.

இதில் ‘ஜிகிர்தண்டா' படம் தொடர்பாக சிறந்த துணை நடிகர் விருதுப் பெற்ற பாபி சிம்ஹாவும் அதன் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்சனும் பாராட்டு பெறப்பட வேண்டியவர்களே.

மற்றபடி திரைக்கே வராத ‘காக்கா முட்டை' குற்றம் கடிதல்' போன்ற படங்கள் விருது பெற்றிருப்பதை எங்ஙனம் பார்ப்பது என்று புரியவில்லை. இவ்விரண்டு படக் குழுவினரும் ஏற்கனவே சில திரையிடல்களில் விருதினைப் பெற்று'விற்று' அவை குறித்து ஊடகங்களில் அநியாயத்துக்கு செய்திகள் வரவழைத்து தேசிய விருதையும் பெறப்போவதை முன்கூட்டியே ஆணித்தரமாக அறிவித்திருந்தவர்களாவர்.

மோடியின் முகமூடிகள் அணிந்துகொண்ட ஜூரிகள் மட்டுமே பார்த்து நிர்ணயிக்கும் ஒரு படம் எப்படி தமிழின் சிறந்த பிராந்தியப் படம் ஆகும் என்று விளங்கவில்லை. ('அப்பா வேணாம்பா' என்ற பிராந்தியின் கொடுமையைச் சொன்ன படத்தைத்தான் இந்த ஆண்டின் சிறந்த பிராந்தியப் படமாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.) இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘கோர்ட்' படமும் கூட இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வராத படம்தான். இவர்கள் காக்கா முட்டைகளா அல்லது கூமுட்டைகளா என்று மேற்படி படங்களை திரையில் பார்த்த பிறகுதான் சொல்லமுடியும்.

'க்ளீன் இண்டியா’  குப்பையில் கொட்ட வேண்டிய தேசிய விருதுகள்!

கடந்த ஆண்டு ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்..' பாடலுக்காக தகுதியுடன் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற சின்ன 'வைர'முத்துக்குமார் இந்த ஆண்டும் உப்பு, புளி பெறாத ‘அழகு அழகு' பாடலுக்கு தொடர்ச்சியாக விருது வென்றிருக்கிறார்.

முப்பது வரிகள் இடம் பெற்றிருந்த அப்பாடலில் ‘வெயிலும் அழகு மழையும் அழகு,... வார்த்தை அழகு அது தீர்ந்தபின் மவுனம் அழகு' என்பதைத் தாண்டி ...பதகமபா ...தகதகபா... ரிசரிசரீ ...பதபதநீ' என்ற ஜதிகளே பாடல் முழுக்க நிறைந்து கிடந்தன. ஜூரிகளின் செவிகளில் ஈயத்தைக் காச்சி ஊற்ற.... இந்த ரீதியில் போனால் வைரமுத்து வயதை எட்டும்போது ‘தகதகபா பதகமபா' எழுதியே சுமார் டஜன் தேசிய விருதுகள் வாங்கிக் குவிப்பார் என்று கவிப்பேரரசு தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.

இந்த வரிசையில் இன்னொரு பரிதாபமான தேசிய எருதுக்கு சொந்தக்காரர் தயாரிப்பாளர் ‘தன'ஞ்செயன். ரூ.1500 விலை விதிக்கப்பட்டு கலர்ஃபுல் எருமை சைஸில் வெளியிடப்பட்டுள்ள இவரது ‘PRIDE OF TAMIL CINEMA" என்ற நூலுக்கு ஜூரிகளின் சிறப்பு விருதுகள் வழங்கியிருக்கிறார்கள்.

நாலெழுத்து எழுதத் தெரியாமல் இருந்தாலும் பணம் போட்டதாலேயே ‘ஆசிரியர்' ஆகிவிடுகிற கொடூர தமிழ்ச் சூழல் போன்றது இந்தப் புத்தகம். யூடிவி போன்ற ஒரு பெரிய படத் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கியப் பதவியில் இருப்பது தாண்டி, இந்த தனஞ்செயனுக்கு எழுத்துப் பிழையில்லாமல் தமிழில் தொடர்ந்து பத்து வரிகள் எழுதத் தெரியாது.

தமிழின் முதல் சினிமா தொடங்கி இன்றும் தள்ளாத வயதில் தமிழ் சினிமாவின் அத்தனை தகவல்களையும் சேகரிக்கும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் குறிப்புகளை வைத்துக் கொண்டு உதவி இயக்குநர்கள் சிலரைப் பாடாய்ப்படுத்தி தயாரான இந்தப் புத்தகம் எல்லாம் தேசிய விருது வாங்கும்போது, சினிமா தொடர்பான உண்மையிலேயே நல்ல புத்தகங்கள் எழுதினவர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்?

ஆர்ட் டைரக்‌ஷன், ஸ்டண்ட் டைரக்‌ஷன் போல இப்போது மியூசிக்கையும் டைரக்‌ஷனுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் போல. இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் யார் என்று தேடிய போது ‘பெஸ்ட் மியூசிக் டைரக்‌ஷன் விஷால் பரத்வாஜ் ‘ஹெய்டர்' படத்துக்காக என்று இருந்தது. சரி அப்படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்டுத்தான் பார்ப்போமே என்று முயன்றபோது 'அய்யகோ' என்ற வார்த்தைக்கு அப்போதுதான் முழு அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

தேசிய விருதுகளில் இந்த கூத்துக்கள் எப்போதும் நடப்பவைதான்.

'க்ளீன் இண்டியா’  குப்பையில் கொட்ட வேண்டிய தேசிய விருதுகள்!

வசூல்தான் ஆகவில்லை. ஆர்ட் டைரக்‌ஷன், மேக்கப்புகளுக்காக தனது ‘காவியத் தலைவன்' படத்துக்கு ரெண்டு சப்பை விருதுகளாவது கிடைத்திருக்கலாம் என்று வசந்தபாலன் வருந்துகிறார் போல.

தன்னுடைய ‘கதை திரைக்கதை விசனம் இயக்கம்' படம் குண்டக்க மண்டக்க பல விருதுகளை குவிக்கப் போகிறது என்று பார்த்திபன் குப்புற அடித்து படுத்துக் கொண்டு காத்திருந்து எதுவும் கிடைக்காமல் குமுறி அழுகிறார் போல.

இவர்களுக்கும் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் மற்றவர்களுக்குமாகச் சொல்கிறேன். இந்த தேசிய விருதுகள், பல சமயங்களில் அதுவும் குறிப்பாக, நமக்கு கிடைக்காத சமயங்களில் குப்பைகளுக்குச் சமம்.

மோடியின் ‘கிளீன் இண்டியா' திட்டத்தின் கீழ் அதை, வாங்கியவர்களிடம் சேகரித்து குப்பைகளில் கொட்டுவோம்.

பி.கு: குப்பைகளுக்கு மத்தியில் கோமேதகம் என்பார்களே அது இந்த வருட விருதுப்பட்டியலில் தங்கத்தாரகை கொங்கனா ரனவத் தான். ‘குயீன்' படம் பார்த்தபோதே, மும்பைக்கு நடந்தே போய் ஒரு பொக்கே வாங்கித்தர முடிவு செய்தேன். அவர் கொஞ்சம் கரடுமுரடான பார்ட்டி என்று கேள்விப்பட்டு எண்ணத்தை குழிதோண்டி புதைத்தேன்.

அவருக்கு சென்னையில் ரசிகர் மன்றம் துவங்கும் சபலம் உள்ளது. இதற்கு வேறு எங்கும் கிளைகள் வைக்க அனுமதியில்லை.


(தொடர்வேன்...)

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

சென்னை தொழிலதிபரை உடும்புப் பிடியாகப் பிடித்த சமந்தா!!

சித்தார்த்திடமிருந்து பிரிந்துவிட்டதாக அறிவித்த கையோடு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை உடும்புப் பிடியாகப் பிடித்துள்ளாராம் சமந்தா.

தந்தது பெரிய தோல்விப் படங்கள்தான் என்றாலும், சமந்தாவுக்கு மவுசு குறையவில்லா.

சென்னை தொழிலதிபரை உடும்புப் பிடியாகப் பிடித்த சமந்தா!!  

சமந்தாவும், சித்தார்த்தும் தனிக்குடித்தனமே நடத்துகின்றனர் எனும் அளவுக்கு செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருந்தன

இப்போது அதற்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.

சித்தார்த் தனக்கு பிடித்த தோழிகளுடன் பழக, எனக்கும் ஒருத்தர் கிடைக்காமலா போவார் என்று முறுக்கிக் கொண்டு சென்னைக்கு வந்தார் சமந்தா.

இந்த நிலையில் சென்னை தொழில் அதிபர் ஒருவருடன் காதல் சமந்தா வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த தொழில் அதிபர்.. அம்பலத்துக்கு வராமலா போய்விடும்?

 

மீண்டும் காதலில் நம்பர் நடிகை, ரப்பர் பாடி நடிகர்: ஆனால்...!!!

சென்னை: ஆளுக்கொரு பக்கமாக சென்ற ரப்பர் பாடி நடிகரும், நம்பர் நடிகையும் மீண்டும் காதலில் விழுந்துவிட்டார்களா என்று வியப்படைய வேண்டாம். இது உண்மை தான்.

நம்பர் நடிகைக்கு ஏனோ காதல் செட்டாகவே மாட்டேன் என்கிறது. முதலில் விரல் நடிகரை காதலித்து தோல்வி கண்டார். அதன் பிறகு ரப்பர் பாடி நடிகரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் காதல் முறிந்தது. இந்த காதல் முறிவுக்கு பிறகு ரப்பர் பாடி மும்பை சென்று செட்டிலாகிவிட்டார்.

நடிகையோ பிக்கப் டிராப் நடிகரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை தற்போது இயக்குனர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகை மட்டும் மீண்டும் காதலில் விழவில்லை, ரப்பர் பாடியும் தான்.

ரப்பர் பாடி கன்னட நடிகை ஒருவரை காதலிப்பதாக கோலிவுட்டும், சாண்டல்வுட்டும் கிசுகிசுக்கிறது. அண்மையில் சென்னையில் ரப்பர் பாடி அளித்த பார்ட்டியில் கன்னட நடிகை தான் சிறப்பு விருந்தினராம்.

கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த பார்ட்டியில் நம்பர் நடிகை மட்டும் கலந்து கொள்ளவில்லை.

 

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

62-வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பில். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள பாபி சிம்ஹாவுக்கு, இயக்குநர் மனோபாலா பாராட்டு தெரிவித்து கவுரவித்தார்.

‘ஜிகர்தண்டா' படத்திற்காக பாபி சிம்ஹா இந்த விருதினைப் பெற்றுள்ளார். பாபி சிம்ஹா தற்போது ‘பாம்பு சட்டை' படத்தில் நடித்து வருகிறார்.

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

இப்படத்தை ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றதற்கு தயாரிப்பாளரும் நடிகருமான மனோபாலா, பாபி சிம்ஹாவிற்கு மாலை அணிவித்து கவுரவித்தார்.

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாவை கவுரவித்தார் மனோபாலா

பாபி சிம்ஹாவைப் பற்றி மனோபாலா கூறுகையில், "பாபி சிம்ஹாவை திரையில் பார்த்து அவருடைய நடிப்பால் ஈர்க்கப்பட்டவன் நான். சிம்ஹா தன்னுடைய நடிப்பால் பல்வேறு பார்வையாளர்கள் மத்தியில் ஊடுருவி உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது ஒரு ஆரம்பம் தான். அவர் மேலும் பல வெற்றிகளை நிச்சயம் பெறுவார். என்னுடைய படமான ‘பாம்பு சட்டை'யில் அதிக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்," என்றார்.

 

இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி! - நா.முத்துக்குமார்

சென்னை: தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக விருது பெறுவதில் மகிழ்ச்சி! - நா.முத்துக்குமார்

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"தங்க மீன்கள்' படத்துக்காக நான் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது.

அதைத் தொடர்ந்து நிகழாண்டுக்கான தேசிய விருது பட்டியலிலும் எனது பெயர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி.

'சைவம்' படத்தில் இடம் பெற்ற 'அழகே அழகு...' பாடல் வாழ்வின் சில உன்னத விஷயங்களைச் சொல்லியிருக்கும். அந்தப் பாடலுக்கான சூழலை உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இந்த விருது அமையும். தொடர்ந்து தரப்படும் இந்த மாதிரியான அங்கீகாரங்கள் எனது பொறுப்புகளை அதிகமாக்கியுள்ளன," என்றார் நா.முத்துக்குமார்.

தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதி வருபவர் நா முத்துக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது.. பெருமிதத்தில் உன்னி கிருஷ்ணன்!

தன் மகள் உத்ரா பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் உள்ளார் பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன்.

நேற்று அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த பாடகிக்கான விருது சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு.. பாடலைப் பாடிய உத்ராவுக்குக் கிடைத்தது.

மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது.. பெருமிதத்தில் உன்னி கிருஷ்ணன்!

10 வயது சிறுமி இவர். பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள்.

தமிழ் சினிமாவில் தன் மகள் பாடிய முதல் பாடலிலேயே உத்ரா முத்திரை பதித்துவிட்டது உன்னிகிருஷ்ணனைப் பெருமிதமடைய வைத்துள்ளது.

காதலன் படத்தில் வரும் 'என்னவளே அடி என்னவளே' என்ற பாடலை முதல் முறையாகப் பாடினார் உன்னிகிருஷ்ணன். அந்தப் பாடலுக்காக 1994 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"என் மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது கடவுளின் பரிசு," என்கிறார் உன்னிகிருஷ்ணன்.

 

கொஞ்சம்... கூட்டிக் கொடுங்க... நிறைய முத்தம் தர்றேன்... இனிக்கும் ஆஃபர் தரும் நடிகை!

இப்பொழுதெல்லாம் நடிகைகள் கேட்கும் சம்பளத்தை கொடுத்துவிட்டால் போதும், சாதா கிஸ் என்ன... லிப் லாக் சீன்களுக்கே சம்மதம் சொல்லிவிடுகின்றனர்.

முதலில் லட்சுமிகர நடிகை லிப்லாக் சீனில் நடிக்க காரணமே இந்த சம்பளம்தான் என்று கூறப்பட்டது.

இதேபோல தற்போது "ஸ்வீட்யா" நாயகியும் இதை ஃபாலோ செய்கிறாராம். ஸ்வீட்யா புதிய படம் ஒன்றில், புது கதாநாயகன் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருவது தெரிந்த விசயம்தான். ஆனால் தெரியாத விசயம் இதில் தித்திக்கும் "லிப் லாக்" சீன் இருப்பது.

கொஞ்சம்... கூட்டிக் கொடுங்க... நிறைய முத்தம் தர்றேன்... இனிக்கும் ஆஃபர் தரும் நடிகை!

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இருவரும் ஒருவரது உதடுகளை மற்றவர் இறுக்கக் கவ்விக் கொள்ளும் காட்சி இடம்பெறுகிறதாம்.

இந்தக் காட்சி குறித்த இயக்குநர் விவரித்தபோது, நடிக்கத் தயார், ஆனால் கூடுதலாக ஒரே ஒரு லட்சம் வேணும் என்று கேட்டாராம் ஸ்வீட்யா.. இயக்குநர் தயாரிப்பாளர் காதில் மேட்டரைப் போட, போனா போகுது போட்டுக் கொடுப்போம் என்று அவரும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

பிறகென்ன இனிக்க இனிக்க உதடுகள் வலிக்க வலிக்க அந்த லிப் லாக்கில் சந்தோஷமாக நடித்து முடித்தாராம், இனிமை நாயகி!

 

அந்த ஆள் கூட நான் நடிக்க மாட்டேன்: கோபத்தில் கொந்தளித்த ஹீரோ

சென்னை: டைம் நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என சித்து நடிகர் கறாராக தெரிவித்துள்ளாராம்.

டைம் நடிகரும், சித்து நடிகரும் சேர்ந்து நடித்த மதுரையில் பிரபலமான இனிப்பு வகையின் பெயர் கொண்ட படம் நன்றாக ஓடியது. அந்த படத்தில் சித்துவை விட டைம் நடிகரை பற்றி தான் பலரும் பாராட்டி பேசினார்களாம். இதை அறிந்த சித்து கடுப்பாகிவிட்டாராம். இருப்பினும் அந்த கடுப்பை யாரிடமும் காட்டாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஒருவர் சித்துவை அணுகி கதை ஒன்றை சொல்லியுள்ளார். அதுவும் இரண்டு ஹீரோ கதையை சொல்லியுள்ளார். ஒரு ஹீரோ நீங்க சார், மற்றொரு ஹீரோ டைம் நடிகர் என்று இயக்குனர் சித்துவிடம் தெரிவித்துள்ளார்.

டைம் நடிகரின் பெயரை கேட்டதும் சித்துவுக்கு கோபம் வந்துவிட்டதாம். அந்த ஆள் நடிப்பதாக இருந்தால் உங்கள் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டாராம்.

இதை பார்த்த இயக்குனர் சரி, சரி கோபப்படாதீர்கள். நான் வேறு ஒருவரை இரண்டாவது ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என்று தெரிவித்து சித்துவை சமாதானம் செய்தாராம்.