கெளதமுக்கும் எனக்கும் 'செம கெமிஸ்ட்ரி'... சொல்கிறார் 'கடல்' துளசி

Gautham Is An Amazing Person Says Tulasi   

கடல் படத்தில் எனக்கும் கவுதமுக்கும் இடையை கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மணிரத்னம் தான் எங்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுக்கும் குரு. எங்களை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கடல் நாயகி துளசி கூறியுள்ளார்.

துளசி மணிரத்னத்தின் ‘கடல்' படத்தில் அறிமுகமாகியுள்ளார். அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா, அக்கா கார்த்திகா ஆகியோரைப் போல பிரபலமாக வருவாரா என ஆகியோரைப் போல இவரும் பிரபலமாவாரா என்று எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே தனது கடல் படத்தின் அனுபவங்களை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளார் துளசி நாயர் கூறியுள்ளார்.

குடும்பத்தில் அம்மா, அக்கா, பெரியம்மா என எல்லோரும் சினிமாவில் இருந்தாலும் துளசி சினிமாவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லையாம் பள்ளியில் ஒரு நாடகத்தில் நடித்திராத தனக்கு மணிரத்னம்தான் குருவாக இருந்து நடிப்பு கற்றுக்கொடுக்கிறாராம்.

தன்னுடன் ஜோடியாக நடிக்கும் கவுதம் அமைதியான அழகான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்கிறார் துளசி. அவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

சினிமாவில் பல விசயங்கள் புரியாவிட்டாலும் மணி ரத்னம் உதவி செய்வதால் எந்தக் கவலையும் இல்லாமல் நடித்து வருகிறோம் என்கிறார் துளசி.

அக்கா கார்த்திகாவிடம் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை தவறாமல் பகிர்ந்து கொள்வாராம் துளசி. எனது நடிப்பையும், கதாபாத்திரத்தையும் மக்கள் விரும்புவார்கள். யாரோடும் என்னை ஒப்பிட வேண்டாம் புதிதாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளார் துளசி.

 

இயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு

Venkat Prabhu Supports Karthi Alex Pandian

ஒருபடத்தின் வெற்றி தோல்வியை இயக்குநரும் கதையுமே நிர்ணயிக்கின்றன என்று இயக்குநர் வெங்கட் பிரபு டிவிட்டரில் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலெக்ஸ் பாண்டியன், சமர், புத்தகம் ஆகிய படங்கள் ரிலீசானது. இதில் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியனுக்கு விமர்சனங்களை போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். இணையதளங்களில் மோசமான அளவில் விமர்சனங்கள் எழுதப்பட்டன.

இதற்கு டிவிட்டரில் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு கதாநாயகன் மட்டுமே காரணம் அல்ல என்று நடிகர் கார்த்திக்குக்கு ஆதரவராக வெங்கட் பிரபு பேசியுள்ளார்.

ஒரு படத்தில் கதாநாயகன் என்பவன் அவனது கதாப்பாத்திரத்தில் நடிக்க மட்டுமே செய்கிறான். அதை முதலில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு கதாசிரியரும், இயக்குநருமே முக்கிய காரணகர்த்தாவாக அமைகிறார்கள் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

அதே ரசிகர்கள் தானே படம் வெற்றி பெற்றால் கட்அவுட் வைக்கிறார்கள். படம் சரியில்லாவிட்டால் அவர்கள் கெட் அவுட் சொல்லாமல் இருப்பார்களாக வெங்கட் பிரபு.

நீங்களாவது கார்த்தியை வைத்து பிரியாணியை சாப்பிடும் வகையில் சமைத்துப் போடுங்களேன்.

 

சமர் சந்தித்த சதிகள்... - மனம் திறக்கும் விஷால்

Somebody Try Block Samar Vishal

பொங்கலுக்கு வெளியான சமர் படத்தை, முடக்க கடைசி நிமிடம் வரை சதிகள் நடந்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து வென்றதாகவும் விஷால் தெரிவித்தார்.

விஷால், திரிஷா ஜோடியாக நடித்த 'சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குநர் திரு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

விஷால் கூறுகையில், "சமர் படத்துக்கு பூஜை போட்டதிலிருந்து படத்தை முடித்து தேங்காய் உடைத்து ரிலீசுக்கு கொண்டு வருவதுவரை நிறைய பிரச்சினைகள், தடங்கல்கள் தொடர்ந்தன. இந்தப் படத்தை வர விடாமல் நிறுத்த சிலர் முயற்சித்தனர். திரைமறைவிலேயே அவர்கள் தீவிர வேலை செய்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த படம் ஒரு புது முயற்சி, எப்போது வந்தாலும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது நிஜமாகியுள்ளது. படம் ஹிட்டாகி இருக்கிறது. தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. படம் வராது என்று பலர் கூறினார்கள். அதை மீறி வந்து ஜெயித்து விட்டது. இதற்கு காரணம் நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள்தான்.

25-ந்தேதி தெலுங்கிலும் இப்படம் வருகிறது. திரு இயக்கத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

த்ரிஷாவுடன் நடித்த முதல் படமே நல்ல பெயரையும் வெற்றியையும் தட்டிச் சென்றுள்ளது மகிழ்ச்சி," என்றார்.

பொங்கல் விடுமுறை முடியும் தறுவாயில் இந்தப் படத்துக்கு மேலும் 60 தியேட்டர்கள் கிடைத்துள்ளனவாம்.

 

வாய்ப்பே இல்லை: கன்னடத்துக்கு போன பிரியாமணி, ஓவியா

Priyamani Oviya Plans Settle Sandalwood

பெங்களூர்: தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் பிரியாமணி கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போன்று ஓவியாவும் சாண்டல்வுட்டில் ஒரு ரவுண்ட் வர முயற்சி செய்கிறார்.

பிரியாமணிக்கு நடிக்கத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது. பருத்தி வீரன் படத்தில் பட்டைய கிளப்பியிருப்பார். ஆனால் என்னமோ தெரியவில்லை அவரை கோலிவுட் படங்களில் எடுப்பார் இல்லை. அவரும் நான் தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று பிட்டெல்லாம் போட்டுப்பார்த்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து அவர் தற்போது சாண்டல்வுட் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிவராஜ் குமார் ஜோடியாக லக்ஷ்மி என்ற படத்தில் நடிக்கிறார்.

பிரியாமணி போன்று ஓவியாவுக்கும் தமிழில் வாய்ப்புகள் இல்லை. அவரும் நமக்கு ஒரு பெரிய பிரேக் கிடைக்கும் கோலிவுட்டின் முன்னணி நடிகையாகிவிடலாம் என்று முட்டி மோதிப் பார்த்தும் ம்ம்ம் முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் நடித்த களவாணி படத்தின் கன்னட ரீமேக்கான கிராதகா நன்றாக ஓடியது. கன்னடத்தில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே அங்கேயே கொஞ்ச காலம் செட்டில் ஆனால் என்ன என்று நினைக்கிறார்.

வாய்ப்புகள் கிடைத்தால் அம்மணி பெங்களூரில் செட்டிலாகிவிடுவார் போல.

 

'உ' படத்தில் சூப்பர் சிங்கர் வின்னர் ஆஜீத், டபுள் அறிமுகம்!

Super Singer Junior Aajeedh Gets Double Entry

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் உ படத்தில், சூப்பர் சிங்கர் சுட்டி ஆஜீத் நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும் ஒரே படத்தில் இரட்டை பரிமாணத்தில் அறிமுகம் ஆகிறான்.

இந்த சுவாரஸ்மான டபுள் அறிமுகம் நடந்தது எப்படி என்று இயக்குநர் ஆஷிக் கூறுகையில், "எங்க படத்தில் ஒரு குட்டி டூயட் பாட்டு வருது. அதை யாரை பாட வைக்கலாம்னு இசையமைப்பாளர் அபிஜித் ராமசுவாமியும் நானும் பேசிட்டிருந்தோம். அப்போதான் சூப்பர் சிங்கர் போட்டில ஆஜித் பாடிட்டிருந்தான். எப்படியும் பைனல்ஸ்ல அவன்தான் ஜெயிப்பான்னு எல்லாரும் சொன்னாங்க. அப்டியே நடந்தது. ஆனா, அவன் பைனல்ஸ் ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க அவனை பாட வைக்கிறதுன்னு முடிவு பண்ணி அவங்க பெரியப்பா கிட்ட பேசிட்டோம். போட்டியில ஜெயிச்ச உடனே முதன்முதலாக 'உ' படத்திற்காக பாட வச்சோம்.

"திக்கித் தெணறுது தேவதை, வெட்கப்படுதொரு பூமழை"ன்னு தொடங்குற அழகான டூயட் பாட்டு. முருகன் மந்திரம் எழுதியிருக்கார். சூப்பரான வரிகள். ஆஜித் கூட பா.ஸ்ருதின்னு இன்னொரு குட்டிப்பொண்ணை பாட வச்சோம். செம காம்பினேஷன். 45 நிமிஷத்துல என்ஜாய் பண்ணி பாடி முடிச்சிட்டான். சினிமாவுல என்னோட முதல் பாட்டே இவ்ளோ அழகா அமைஞ்சது சந்தோசமா இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.

ரெக்கார்டிங் தியேட்டர்ல இருந்து வழியனுப்பி வைக்கிறப்போ, கூட வந்திருந்த ஆஜீத் பெரியப்பா கிட்ட ஆஜீத் அழகா பாடிட்டான். அந்த பாட்டுல நடிக்க வைக்கிறதுக்கு ஒரு சுட்டிப்பையனை தேடிட்டிருக்கோம்னு சொன்னோம். ஆஜித்துக்கு நடிக்கிறதுக்கும் ஆசை இருக்குன்னு, அவன் அழகா நடிப்பான்னு சொன்னாரு.

அப்டியே அடுத்த வாரத்துல அவனைக் கூட்டிட்டு அம்பாசமுத்திரம் கிளம்பிட்டோம். அவனுக்கு ஜோடியா மதுமிதான்னு ஒரு குட்டிப் பொண்ணைபொண்ணை நடிக்க வச்சோம். அவங்க காம்பினேஷனும் செம க்யூட். பாட்டு எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகா வந்திருக்கு.

'உ' படத்தில் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும் ஆஜீத் அறிமுகம் ஆகிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்னு ஆஜீத் அம்மா, பெரியப்பா, அக்கா எல்லாரும் சொன்னாங்க. அதையேதான் நாங்களும் அவங்ககிட்ட சொன்னோம்," என்றார்.

 

வாணி ராணி... ராதிகாவுக்கு ஜோடி வேணு அர்விந்த், பப்லு!

Radika S New Serial Vaani Raani

வாணி ராணி மெகா தொடரில் ராதிகாவுக்கு ஜோடியானார் சின்னத் திரை நடிகர் பப்லு.

ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய மெகா தொடர் வாணி ராணி.

திறமையான வக்கீல் வாணி, அப்பாவி தங்கை ராணி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ராதிகா.

வாணியும் ராணியும் பூமிநாதன், சாமிநாதன் என இரட்டையர்களுக்கு வாழ்க்கைப்படுகிறார்கள். இவர்களில் வாணி மிகவும் புத்திசாலி, நன்கு படித்தவள், ராணியோ படிக்காதவள் என்றாலும் குடும்பத்தை நிர்வகிப்பதில் படு கெட்டிக்காரி.

ஒற்றுமையாக இருக்கும் இந்த கூட்டுக்குடும்பம் ஒரு நாள் உடைகிறது. ஏன் இந்த விரிசல், எப்படி ஒற்றுமையானார்கள்? என்பதுதான் வாணி ராணியின் கதைச் சுருக்கம்.

ராதிகாவுக்கு ஜோடியாக வேணு அர்விந்த், பப்லு நடிக்கின்றனர். ரவிகுமார், புவனா, அருண் என ராதிகாவின் வழக்கமான ஆர்டிஸ்ட்களும் உண்டு.

ஓ என் ரத்னம் இயக்குகிறார். தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக ராதிகா பணியாற்றுகிறார். சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

 

சேவை வரி.. சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்

Tamil Actors Discuss Service Tax Issue

சென்னை: சேவை வரியை ரத்து செய்யக் கோரி நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்று டெல்லி செல்கின்றனர்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு மத்திய அரசு 12 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் நடிகைகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று, சேவை வரியை ரத்து செய்யக் கோரினர். தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகளும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நடிகர்- நடிகைகளிடம் சேவை வரி பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு டெல்லியில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.

பட்ஜெட் குழு தலைவர் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான், மத்திய அரசு வருவாய் துறை செயலாளர் சுமீத்போஸ் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள்மற்றும் திரையுலகின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றனர்.