வரி, வரியா பாடிட்டு, ரூ 5.5 கோடி வரி கட்ட மறந்துட்டீயே...: கம்பி எண்ணும் ‘கிரம்மி’ பாப் பாடகி

Lauryn Hill S Jail Sentence Tax Evasion Is Good News

லண்டன்: ரூ.5 1/2 கோடி வரிபாக்கிக்காக ‘கிரம்மி' விருது வாங்கிய பாப் பாடகி லாரன்ஹில்க்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகியான லாரன்ஹில், அரசாங்கத்துக்கு ரூ.5 1/2 கோடி வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தார். இது குறித்து அவருக்கு பலமுறை நோட்டீசு கொடுக்கப்பட்டது.

லாரன்ஹில், அதை கண்டு கொள்ளவே வில்லையாம். எனவே, அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு பாடகி லாரன் ஹில்லுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 3 மாதம் வீட்டு காவலும் விதித்தும் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து லாரன்ஹில் கூறும் போது, 'நான் எப்போதும் இது போன்று வரிபாக்கி வைத்ததில்லை. ஆனால், தற்போது எனக்கு சரிவர இசை நிகழ்ச்சிகள் கிடைக்காததால் வரி செலுத்த முடியவில்லை' என்றார்.

இவர் உயரிய விருதான, 'கிரம்மி' விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா மயான செட்டுக்குள் வந்த நிஜ பிணம்!

சினிமாவுக்காக போடப்பட்ட மயான செட்டை நிஜமென்று நினைத்து உண்மையாகவே ஒரு பிணத்தை எடுத்து வந்துவிட்டார்களாம் ஊர்க்காரர்கள்.

தங்கம்மாள் மூவீ மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக கணேசன், தங்கம்மாள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படமான ஞான கிறுக்கன் ஷூட்டிங்கில்தான் இந்த டம்பவம் நடந்தது.

கதையின் நாயகனாக ஜெகாவும், நாயகிகளாக பிரபல மலையாள நடிகையும் கேரள அரசு விருது பெற்றவருமான அர்ச்சனா கவி, சுஷ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ilayadevan s gnana kirukkan

முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, செந்தில், செவ்வாளை ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, தாஜ் நூர் இசையமைத்துள்ளார்.

எழுதி இயக்குபவர் - இளையதேவன்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் இது.

படத்தில் ஒத்த உசிர... கொண்டு வந்தோம் என்ற தத்துவப் பாடல் இடம் பெற்றுள்ளது. அதை படமாக்குவதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு ஏக்கர் பரப்பில் மயான அரங்கம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பை நடத்தும் வேளையில் அதை நிஜ மயானம் என நினைத்து ஒரு பிணத்தை எடுத்து வந்து புதைக்க வந்தார்களாம் அந்த ஊர்க்காரர்கள்.

"அவர்களிடம் இது சினிமா செட் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அவர்களிடம் புரிய வைத்து அனுப்பி வைக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்," என்கிறார் இயக்குநர் இளையதேவன்.

ஞானக் கிறுக்கன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.

 

குவியும் மோசடி புகார்கள்: நடிகர் சங்கத்திலிருந்து பவர் ஸ்டார் நீக்கம்?

Powerstar Be Dismissed From Nadigar Sangam

சென்னை: தொடர்ந்து மோசடி புகார்கள் குவிவதால், பவர் ஸ்டார் சீனிவாசனை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க ஆலோசித்து வருகின்றனர்.

லத்திகாவில் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன், தொடர்ந்து 9 படங்களில் ஹீரோவாகவும், 20 க்கும் மேற்பட்ட படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்ற அவர், இயக்குநர் சங்கத்திலும் உறுப்பினராகியுள்ளார்.

கடந்த வருடம் மோசடி புகார் ஒன்றில் பவர் ஸ்டார் கைதானதும் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது சங்கத்தில் சாதாரண உறுப்பினராக உள்ளார்.

கடந்த சில வாரங்களாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏராளமான மோசடி புகார்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த வண்ணம் உள்ளன. கடன் வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டி விட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பவர் ஸ்டாரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

எனவே நடிகர் சங்கத்தில் இருந்து பவர் ஸ்டார் சீனிவாசனை நீக்க வேண்டும் என்று நடிகர்கள் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

வரும் 30ம் தேதி நடக்கும் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் பவர் ஸ்டாரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்கிறார்கள்.

 

எதற்கு இப்படி எடுக்கணும்... தியேட்டரை விட்டு ஓடும்போது கத்தரிக்கணும்?

Moondru Per Moondru Kadhal Trimmed   

எண்பது, தொன்னூறுகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்களுக்கு உள்ள ஒரு மனநிலை... 'நம்மை விட சிறந்த காட்சியமைப்புகளை யாராலும் வைக்க முடியாது. ரசிகர்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை!' என்பதுதான்.

படத்தின் பிரஸ் ஷோவின் போதோ அல்லது சிறப்புக் காட்சியின் போதோ, 'சார், படம் கொஞ்சம் லெங்ந்தா இருக்கு.... அந்தப் பாட்டு, சண்டை காட்சிகளை குறைச்சிக்கலாமே.." என்று யாராவது சொன்னால், இயக்குநருக்கு அப்படி கோபம் வரும்.

படம் பார்க்கத் தெரியலய்யா உனக்கெல்லாம் என்று திட்டித் தீர்ப்பார்கள். படம் வெளியாகும். படத்தின் நீளத்தைப் பார்த்து, தியேட்டர் ஆபரேட்டரே ஜஸ்ட் லைக் தட் வெட்டியெறிந்துவிடுவார். இது நிதர்சனம். தியேட்டர் காத்தாடுவதை அறிந்து பின்னர் இயக்குநர் உட்கார்ந்து சில காட்சிகளைக் குறைத்து ட்ரிம் பண்ணுவார். அதற்குள் படம் பப்படமாகியிருக்கும்.

இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துள்ள படம் மூன்றுபேர் மூன்று காதல். படம் பார்த்த போதே பலரும் சொன்னது படத்தின் அநியாய நீளம். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டி வந்தது.

இப்போது படத்தின் பாடல்கள் மற்றும் விமல் சம்பந்தப்பட்ட சில காட்சிகளையெல்லாம் தியேட்டர் ஆபரேட்டரே கத்தரித்துவிட, இயக்குநர் வசந்த் ஆற அமர சில காட்சிகளைத் தூக்கிவிட்டு, ட்ரிம் பண்ணிட்டேன்... இப்போ பாருங்க என்று அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே மணிரத்னத்தின் கடல் உள்ளிட்ட சில படங்கள், சேரனின் பொக்கிஷம், கமலின் சில படங்கள் நீளம் குறைக்கப்பட்டு வெளியாகி தோல்வியைத் தழுவியது நினைவிருக்கலாம்.

 

தமிழில் இதுவரை சொல்லாத அழகிய காதல் கதை!

A Beautiful Love Story Ever Told Tamil Cinema

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத அழகிய காதல் கதை... என்ற அடை மொழியுடன் ஒரு படம் தயாராகிறது.

இந்தப் படத்தை இயக்குபவர் விஜய் ஆன்டனி நடித்த 'நான்' படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் இசை பிரதான பங்கு வகிக்கிறது. எனவே இசைக்கு யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்குப் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் பி மதன் தயாரிக்கும் படம் இது.

பிரபல முகங்கள் யாருமின்றி, முழுக்க முழுக்க புதுமுகங்கள் மட்டுமே நடிக்கும் இந்தப் படம், ஒவ்வொருவருக்கும் அவர்களின் இனிய இளமை நாட்களை நினைவுபடுத்தும் அளவுக்கு இருக்கும் என இயக்குநர் ஜீவா சங்கர் தெரிவித்துள்ளார்.

 

நடிப்பை மட்டும் விட்டுவிடாதே: அஞ்சலிக்கு ஹன்சிகா அட்வைஸ்

Hansika S Timely Advice Anjali

சென்னை: நடிப்பை மட்டும் விட்டுவிடாதே என்று அஞ்சலிக்கு ஹன்சிகா அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

சேட்டை படத்தில் நடித்தபோது அஞ்சலியும், ஹன்சிகாவும் உயிர் தோழிகளாகிவிட்டார்களாம். அந்த படத்தில் நடிக்கையில் யார் முதல் நாயகி என்பது குறித்து அஞ்சலியும், ஹன்சிகாவும் சண்டை போடுவார்கள் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் உல்டாவாக தோழிகளாகிவிட்டனர்.

செட்டில் இருவரும் சேர்ந்து ஆர்யாவை கலாய்த்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி மாயமானபோது ஹன்சிகா சோகமாக இருந்துள்ளாராம். என் தோழி எங்கே போனாள் என்று தெரியவில்லையே என்று ஹன்சிகா கவலைப்பட்டுள்ளார். அஞ்சலி திரும்பி வந்த செய்தியை கேட்ட பிறகு தான் அவர் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடிந்ததாம்.

அதன் பிறகு அஞ்சலியை நேரில் பார்த்துவிட்டு வந்துள்ளார். நடந்ததெல்லாம் போகட்டும் தொடர்ந்து படங்களில் நடி, நடிப்பை மட்டும் விட்டுவிடாதே என்று அஞ்சலிக்கு அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வருகிறாராம் ஹன்சி.

 

ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற 'கதிர்வேலன் காதலி' இயக்குநர்!

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வரும் இரண்டாவது படமான இது கதிர்வேலன் காதலி படத்தின் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன், திமுக பொருளாளர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கடந்த ஆண்டு உலகமெங்கும் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை முதல் முறையாக இயக்கி, எடுத்த எடுப்பிலேயே பெரிய இயக்குநர்கள் வரிசையில் சேர்ந்தவர் எஸ்ஆர் பிரபாகரன்.

அடுத்ததாக அவர் இயக்கும் படம்தான் 'இது கதிர்வேலன் காதலி'. உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா - சந்தானம் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. ரெட்ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

sr prabhakaran meets mk stalin

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், திமுக பொருளாளர் முக ஸ்டாலினை சந்தித்தார் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய பிரபாகரன், அவரிடம் ஷூட்டிங் பற்றிய விவரங்களைச் சொன்னார்.

அவருக்கு தனது மணி விழா சிறப்பிதழை வழங்கிய ஸ்டாலின், படம் பெரிய வெற்றிப் பெற வாழ்த்தினார்.

 

'சோக்காலி' சோனாவின் கவர்ச்சிக் காட்சிகள் நீக்கம்!

Sona S Adult Scenes Removed From Sokkali

சோக்காலி படத்திலிருந்து நடிகை சோனாவின் கவர்ச்சியான காட்சிகளை தணிக்கைக் குழு வெட்டி வீசிவிட்டது.

சோக்காலி படத்தில் நடிகை சோனா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகர்களாக சைதன்யா, ஜெயராம் ஆகியோரும் நாயகிகளாக ரீத்து, சுவாசிகாவும் நடிக்கின்றனர். இப்படத்தை சரணா இயக்குகிறார்.

சோனாவின் குடும்பத்தில் ஒருவர் ஏமாற்றப்படுவதும், இதற்காக சோனா பழி வாங்குவதுமே கதை. இப்படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்துள்ளார். அரை குறை ஆடையில் மயக்கி பழி தீர்ப்பதாகக் கதை போகிறது. படுக்கையறைக் காட்சிகள் எல்லாம் உண்டாம்.

நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியொன்றில் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக நடித்துள்ளாராம் சோனா. இதைப் பார்த்து அதிர்ந்த தணிக்கைக் குழுவினர் அந்த காட்சிகள் அனைத்துக்கும் கத்தரி போட்டனர்.

சோனாவுடன் நிஷா என்ற கவர்ச்சி நடிகையும் கிளுகிளு ஆட்டம் போட்டுள்ளாராம் படத்தில்.

இதுகுறித்து இயக்குநர் சரணா கூறுகையில், " சோனா நீச்சல் உடையில் தோன்றும் காட்சியில் சில சீன்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். சில காட்சிகளை நீக்கி விட்டு சான்றிதழ் அளித்தனர். படம் சிறப்பாக வந்துள்ளது. வெட்டப்பட்ட காட்சிகள் தவிர, மேலும் நிறைய கவர்ச்சிக் காட்சிகள் உள்ளன," என்றார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார். மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.