சுதந்திர தினத்தன்று வெளியாகும் அக்சய் குமாரின் பிரதர்ஸ்

மும்பை: 2011 ம் ஆண்டு வெளிவந்த வாரியர் என்ற ஹாலிவுட் திரைப் படத்தின் ரீமேக் படமாக இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் பிரதர்ஸ். அக்சய் குமார் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா ஆகிய இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் இது.

அக்சய் குமார், சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ள இந்தப் படம், வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என ட்விட்டரில் தகவலை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர்.

தகவல் வெளியான உடனேயே # BROTHERS This Independence Day என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கிய அக்சய் குமாரின் ரசிகர்கள் அதனை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி விட்டனர்.

அக்சய் குமார் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் குத்துச் சண்டை வீரர்களாக நடித்திருக்கும் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளனர்.

கரன் மல்கோத்ரா இயக்கி வரும் இந்தப் படத்தில் கரீனா கபூர் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஜூன் 10 தேதியன்று வெளியான இந்தப் படத்தின் டிரைலரை சுமார் 40 லட்சத்திற்கும், அதிகமானோர் யூ டியூபில் கண்டுகளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

"பர்னிங் ஸ்டார்" சம்புவின் பரபரக்கும் சிங்கம் 123... விரைவில் தமிழிலும் கர்ஜிக்கும்!

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர்களின் உருவம்தான் மாஸாக இருக்கும் என்றால் அவர்களின் பட்டப் பெயர்கள் படா மாஸாக இருக்கும்.

"மெகா பர்னிங் ஸ்டார்" சம்புவின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா, பார்க்கவில்லை எனில் ஒருமுறை அவரின் படங்களை பாருங்கள் மீண்டும் தியேட்டர் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டீர்கள்.

மனிதரின் நடிப்பில் ஆந்திராவே அதிர்ந்து கொண்டிருக்கிறது, ஆமாம் அந்த அளவுக்கு சக நடிகர்களின் படங்களை சகட்டுமேனிக்கு கிண்டலடித்து படங்களை எடுத்து வருகிறார்.

சம்புவின் முழுப்பெயர் சம்பூர்னேஷ் பாபு தனது முதல் படமான ஹ்ருதய கலேயம் திரைப்படத்தில் தெலுங்கு சினிமாக்களை கதறக்கதற .. தப்பா நினைக்காதீங்க.. கிண்டலடித்து இருந்தார். இவன் கொஞ்சம் வித்தியாசமா நடிக்கிறானே என்று ஆந்திர மக்கள் அந்தப் படத்தைப் பார்த்து ஹிட்டாக்கித் தொலைக்க, வந்தது வினை.

Sampoornesh Babu  Singham 123 Dubbed In Tamil

ஆமாம் தமிழில் சூர்யாவின் அந்தஸ்தை உயர்த்திய சிங்கம் படங்களையும், தெலுங்கு போலீஸ் படங்களையும் கிண்டல் செய்து சிங்கம் 123 என்ற படத்தில் நடித்தார். படம் தற்போது ஆந்திராவில் வெளியாகி பெரிய நடிகர்களின் படங்களின் அளவுக்கு வசூலில் கல்லா காட்டுகிறதாம்.

என்னதான் வாட்ஸ் ஆப்பில் கண்டபடி கலாய்த்தாலும், அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து அடுத்தவர்களின் படங்களைத் தாளித்துக் கொண்டிருக்கிறார் சம்பு.

அவரின் புகழ் பெற்ற படங்களின் வசனங்களை ஒருமுறை கேளுங்கள் ( மண்டையைக் கொண்டு போய் சுவத்தில் முட்டிக் கொண்டால் நாங்க பொறுப்பில்லை!

ஹ்ருதய கலேயம்

அந்தத் தைரியத்துக்கே பயம் வந்தா, என் போட்டோவைத்தான்டா தலையணைக்கு அடியில் வெச்சுட்டுத் தூங்கும்!',

'காசு கொடுத்து வாங்க அவன் ஷாம்பூ இல்லடா... சம்பூ',

'நான் கத்தி எடுத்து வெட்ட ஆரம்பிச்சா, பொணத்த அள்ளிட்டுப் போக பொக்லைன்தான் வரணும்

இவை ஹ்ருதய கலேயம் படத்தின் பன்ச் வசனங்களில் சில, படம் முழுவதுமே பன்ச் பேசி பார்த்தவர்களைக் கொன்றிருந்தார் சம்பு.

சிதையில் இருந்து மீண்டு வரும் சம்பூ

வில்லன்களால் அடித்து துவைக்கப்பட்டு, முதுகில் மிகப்பெரிய கோடாரி ஒன்றால் வெட்டப்பட்டு இறந்து போகும் ஹீரோ சம்பூர்னேஷை சிதையில் எரிக்கும்போது.... ஹீரோயினை வில்லன்கள் டார்ச்சர் செய்ய, அவர் ‘‘சம்பூ....'' என கத்துவார். அந்த ஒலி நேரடியாக எரிந்து கொண்டிருக்கும் சம்பூர்னேஷின் காதுகளுக்குள் புகுந்து இதயத்தை அடைந்து மீண்டும் உயிர் வர, சிதையிலிருந்து வெளிவந்து முதுகில் குத்தியிருக்கும் கோடாரியை எடுத்து வில்லன்களை பந்தாடுவார் நம்ம சம்பூ! இப்படி... இதுவரை இந்திய சினிமா கதாநாயகர்கள் செய்யாத ஒரு சாதனையைச் செய்தவர்தான் இந்த சம்பூர்னேஷ் பாபு. நம்ம ஊர் ‘பவர்ஸர்டார்' சீனிவாசனுக்கெல்லாம் குரு இவர்தான் என அகில உலகமே ‘ஹ்ருதய கலேயம்' படத்தைப் பார்த்த பிறகு மண்டியிட்டு ஒப்புக்கொண்டது.

சிங்கம் 123

உச்சகட்ட காமெடி இந்தப் படத்தில் தான் இந்த பன்ச் வசனங்களை ஒருமுறை படியுங்கள், வாழ்க்கை முழுவதுமே சம்புவின் தீவிர ரசிகனாகி விடுவீர்கள்.

நான் பொறந்தப்பவே போலீஸ் டிரஸ்ஸோடு பொறந்தவன்டா

பெண்களுக்கு ஆபத்து என்றால் அரைமணி நேரம் லேட்டாத்தான் வருவேன், ஆண்களுக்கென்றால் அரை நொடியில் வருவேன்.

நான் அடிச்சா அடிவாங்கினவன் ஒண்ணு கோமாவுல இருப்பான் இல்லேன்னா மார்சுவரியில இருப்பான்.

நான் கொசுடா, கொசு தாகம் எடுத்தாலும் ரத்தம்தாண்டா குடிக்கும்.

எமனுக்கு ரெஸ்ட் வேணும்னுதான் எண்கவுண்டரை நிறுத்தி வச்சிருக்கேன்டா.

எமோசனோட டூயூட்டி பார்த்தா புரமோசன் தானா வரும்டா.

ஆந்திராவில் இறந்து ஆப்பிரிக்காவில் உயிர்த்தெழும் சம்பூ

சிங்கம் 123 படத்தில் சம்பூவை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள வில்லன்கள். சம்பூவின் மரணம் தாங்காமல் ஆந்திராவே கதறி அழும்போது, ஆப்பிரிக்கக் கடலில் இருந்து உயிருடன் எழுந்து வருவார் சம்பூ. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் நீங்க.

தமிழில் விக்ரமுடன்

தமிழில் பவர் ஸ்டார் மற்றும் சோலார் ஸ்டார் ஆகியோருக்கு போட்டியாக ஆந்திராவில் தோன்றியிருக்கும் பர்னிங் ஸ்டார் சம்பூ தற்போது விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் சேர்ந்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை டப் செய்து ஆந்திராவிலும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆந்திராவில் விக்ரமுக்கு மார்க்கெட் இல்லையே என்று புருவம் உயர்த்தாதீர்கள், சம்புவிற்கு ஆந்திராவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான் சம்பு தற்போது தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்.

சிங்கம் 123 இப்போது தமிழிலும்

விஜயகாந்த், சூர்யா மற்றும் தெலுங்கு போலீஸ்ஹீரோக்கள் என அனைவரையும் ஒருசேரக் கலாய்த்த சிங்கம் 123 படத்தை தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டு உள்ளனராம். அது வருது எல்லோரும் ஓடுங்க.....செத்தாண்டா சேகரு!

 

மாசு படத்தில் சூர்யாவின் ஹேர் ஸ்டைலுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?

சென்னை: மூன்று முறை பெயர் மாற்றி, விளம்பரப்படுத்தி கடைசியில் படம் ஓடாததுதான் மிச்சம், மாசு என்கிற மாசிலாமணி படத்தைத் தான் சொல்கிறோம். முன்னணி ஹீரோயினான நயன்தாராவை வைத்து படத்தை எடுக்கின்றனர்.

கஜினி, ஆதவன் போல இதுவும் ஒரு வெற்றிப் படமாக மாறும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, கடைசியில் மிஞ்சியது ஏமாற்றம் தான். சரி, சரி பழசெல்லாம் கிளற வேண்டாம் மாசு படத்தில் சூர்யா அழகான ஹேர் ஸ்டைலிஷ்ட் போல குடுமி ஒன்று வைத்து இருப்பாரே, அதற்கு ரோல் மாடல் யார் தெரியுமா?

Maasu Movie : Who Is The Inspiration For Surya Hairstyle?

நம்ம கவுண்டமணி சார் தான் என்ன நம்ப முடியவில்லையா? இயக்குநர் வெங்கட் பிரபு அஜித் மற்றும் விஜய் படங்களின் வசனங்களை வைத்து மட்டும் தான் படத்தை எடுத்தார் என்று பார்த்தால், கடைசியில் நம்ம கவுண்டரின் தலையிலும் கையை வைத்து விட்டார்.

சிங்காரவேலன் படத்தில் டிரம்ஸ் சிவமணியாக நடித்து இருந்த கவுண்டமணி சாரின் அழகான ஹேர் ஸ்டைலைத் தான் மாசு படத்தில் சூர்யா பயன்படுத்தி இருக்கிறார், என்று ஆதாரத்துடன் போட்டோ போட்டு உண்மையை உலகத்துக்கு எடுத்து உரைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் பேஸ்புக் பக்கத்தில் அதிகமான நபர்களால் ஷேர் செய்யப்பட்டு, லைக் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹேர் ஸ்டைலையுமா?

 

'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே!

ஷாஜி கைலாஷ் இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் சண்டைக் காட்சிக்காக அமெரிக்கா போய் சேஸிங் கற்று வந்திருக்கிறார் ஆர்கே.

மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார்.

RK takes special chasing training for Vaigai Express

படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது கூறியதாவது, "இந்த படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம்பெறுகிறது . இதை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படிப் பண்ணவேண்டுமென்றால் இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் சொன்னார்.

அவர் சொன்னதை அடுத்து அமெரிக்கா சென்றேன். அங்கு நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டன்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்றேன். அங்கு பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி எடுத்தேன்.

5 நாட்கள் நடந்த இந்தப் பயிற்சியில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அது மட்டுமல்லாமல் அந்த சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்தேன். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சேசிங் காட்சியும் ஒன்றாக இருக்கும். விரைவில் அந்த காட்சிப் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படத்தின் ஷுட்டிங் முடிவடைகிறது," என்றார்.

 

எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நிலையில் முன்னேற்றம்.. டாக்டர்கள் தகவல்

சென்னை: கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"மெல்லிசை மன்னர்" என அன்போடு அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் சர்க்கரை நோய் மற்றும் வயோதிகத்தால் அவதிப்பட்டு வந்தார்.

Music director MSV in hospital

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு அவர் பூரண குணம் அடைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அவருக்கு 86 வயது நிறைவடைந்து 87வது வயது பிறந்தது. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக அவர் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக அவருடைய மகன் கோபி, ‘‘வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பாபநாசம் பட ரிலீஸ் தேதி திடீர் அறிவிப்பு: சிறுபடத் தயாரிப்பாளர்கள் போர்க்கொடி!

சென்னை: கமல் ஹாஸன் நடித்த பாபநாசம் படத்தை ஜூலை 3-ம் தேதி வெளியிட சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரிய நடிகர்களின் படங்கள் அல்லது பதினைந்து கோடி முதலீட்டைத் தாண்டிய படங்களை குறிப்பிட்ட பத்து தினங்களில்தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சில மாதங்களுக்கு முன் புதிய கட்டுப்பாட்டை விதித்தது.

Small Budget producers opposed Papanasam release date

அதன்படி கடந்த மே 1-ம் தேதி கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன் படம் வெளியானது.

இனி அவரது புதிய படம் வெளியாக வேண்டுமானால் விஜய தசமி அல்லது விநாயகர் சதுர்த்தி போன்ற ஏதாவது ஒரு தினத்தில்தான் வெளியிட முடியும். ஆனால் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி கமல் நடித்த பாபநாசம் படத்தை திடீரென ஜூலை 3-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி விவேக் நடித்த பாலக்காட்டு மாதவன், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், குற்றம் கடிதல் உள்ளிட்ட 5 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

அன்றைய தேதியில் கமல் படம் வெளியானால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல். எனவே பாபநாசம் படத்தை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேச்சுவார்த்தையும் இன்று நடக்கிறது.

Small budget producers shows their agitation for the sudden of release date (June 3rd) of Papanasam.

 

2 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதலிடம்... ட்விட்டரில் ட்ரெண்டிங்கான ரஜினி!

ட்விட்டரில் ரஜினியைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை இரண்டு மில்லியன்களைத் தாண்டியுள்ளது. இது ட்விட்டரில் ட்ரெண்டிங்காகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2013-ல் ட்விட்டருக்கு வந்தார் ரஜினி. வந்த இரு ஆண்டுகளில் மொத்தம் 13 ட்விட்டுகள் மட்டுமே அவர் போட்டுள்ளார்.

Rajini becomes top Tamil hero in Twitter

ரஜினி ட்விட்டருக்கு வந்த போது, சமூக வலைத் தளத்தை தனது பட புரமோஷனுக்குப் பயன்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றம்சாட்டினார்கள்.

ஆனால் அவர் ட்விட்டரில் தொடர்ந்து எதுவும் எழுதவில்லை. ஆரம்பித்தபோது தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்றி சொல்லி இரு ட்வீட்டுகள் போட்டார்.

நரேந்திர மோடி மற்றும் ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிகளுக்காக இரு ட்வீட்டுகளும், கோச்சடையான் வெளியான போது இரு ட்விட்டுகளும் போட்டிருந்தார்.

பின்னர் தனது பிறந்த நாளுக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறி ஒரு பதிவிட்டார். தனக்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள், அமிதாப் பச்சன் மற்றும் கமல் ஹாஸன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி இரு ட்வீட்டுகள் போட்டுள்ளார்.

கடைசியாக மார்ச் 23-ம் தேதி, சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் லீ க்வான் யூ இறந்த அன்று இரங்கல் தெரிவித்து ட்விட் போட்டுள்ளார்.

மற்றபடி அவர் ட்விட்டரை பெரிதாகக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் அவரைப் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை மட்டும் மளமளவென்று உயர்ந்து 20 லட்சத்தைக் கடந்துவிட்டது. தமிழ் சினிமா ஹீரோக்களில் ட்விட்டரில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோயர்களை வைத்திருப்பதில் ரஜினி முதலிடத்தில் உள்ளார்.

இந்த சாதனை ட்விட்டரில் ட்ரெண்டிங்காக முதலிடத்தில் உள்ளது.

 

'இதாங்க உண்மையான இளையராஜா!'

- இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்

'நீங்க நினைக்கிறாப்பல இளையராஜா இருக்கவே மாட்டார், பேசிக்கிட்டிருக்கப்ப அவர் அடிக்கிற ஒவ்வொரு கமென்ட்டும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ஒழுக்கமான, சிறிதும் பந்தாவே பண்ணாத ஆள், இளையராஜா.

மெல்லத் திறந்தது கதவு எம் .எஸ். விஸ்வநாதனுக்காக இளையராஜா கொடுக்க நினைத்த ஒரு படம். "எம் எஸ் வி ட்யூன் போடுவார், நான் கம்போஸ் பண்ணுவேன், நீ இயக்குற," என்று என்னிடம் சொன்னார் இளையராஜா. தயாரிப்பு ஏ வி எம்!

This is Real Ilaiyaraaja - R Sundarrajan shares experience

வழக்கமா பிரசாத் ஒலிப்பதிவு கூடத்துலதான் செண்டிமென்ட்டா எல்லா இசையையும் கம்போஸ் பண்ணுவார் ராஜா. ஆனா ஏ வி எம் நிறுவனம், "நம்மகிட்டயே தியேட்டர் இருக்கப்ப நீங்க ப்ரசாத்ல பண்ணா நல்லாருக்காது"ன்றாங்க.

நானே கொஞ்சம் திகைத்து, "சரிதான் ராஜா ஒத்துக்க மாட்டாரு"ன்னு பயந்துக்கிட்டிருந்தேன். பார்த்தால் ராஜா சொல்றாரு, "50 வருஷத்துக்கு மேல படம் எடுத்துக்கிட்டிருக்கிற தொழில் பக்தி கொண்ட ஒரு கம்பெனி, அவங்க சொன்னா மீற முடியாது, அதான் எல்லா வசதியும் அங்க இருக்குன்னுட்டாங்கள்ல? அங்கேயே வச்சுக்கலாம்.. காலைல ஏவிஎம்க்கு வந்துடு!"

எனக்கா ரொம்ப சந்தோஷமா போச்சு. ஏன்னா சாலி கிராமத்துலருந்து ஏவிஎம்க்கு கார்ல பத்து நிமிஷத்துக்குள்ள போயிடலாம், அதுவும் இளையாராஜாவுக்கு காலைலன்னா அது ஏழு மணி. பிரசாத்ன்னா நாம் விடிகாலைல எழுந்திரிச்சி அடிச்சி பிடிச்சி ஓடணும்.

ஆனா விதி பாருங்க, அன்னிக்கு பார்த்து இந்த டிரைவர் காலைல வரவே இல்ல. அப்பல்லாம் இந்த போன் வசதி எல்லோருக்குங் கிடையாதில்ல, லேட்டாப் போனா வம்பு, எனக்கு கார் ஓட்டத் தெரியும், ஆனா கார் சாவிய ட்ரைவர் எடுத்துக்கிட்டுப் போயிருந்திருக்காரு. பார்த்தேன், அப்பா சைக்கிள் சும்மா நின்னுக்கிட்டிருந்துச்சி.. எடுத்து ஒரு மிதி, பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள ஏவிஎம் வாசல் போயிட்டேன்.

அங்க பார்த்தா இளையராஜா ரோட்டுல நடந்து வந்திக்கிட்டுருந்தாரு. "கார் வடபழனி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் முன்னாடி ப்ரேக்டவுனாயிடுச்சி. இவ்வளவு காலைல நம்மள அடையாளம் கண்டு பிடிச்சி யார் என்ன செஞ்சுருப் போறாங்கன்னு நடந்தே வந்துட்டேன், அதுசரி நீ என்னய்யா சைக்கிள்ள வர்ற ?"ன்னாரு. என் கதையைச் சொன்னேன், சரி சரி டபுள்ஸ் அடிப்பல்ல? நான் கேரியர்ல ஒக்காந்துக்கறேன், விடுய்யான்னு ஜங்க்ன்னு அவர் பின்னால ஒக்கார, நாங்க ரெண்டு பேரும் ஸ்டூடியோவுக்குள்ள ஜாலியா சைக்கிள்ல போய் இறங்கினோம், அவ்வளவுதாங்க இளையராஜா."

-இசைஞானி பக்தர்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து...

 

பாம்புக்கே பயப்படாத ஹீரோயின் இவர்!

பாம்பென்றால் படையும் நடுங்கும்.. ஒரு சினிமா ஹீரோயின் எம்மாத்திரம்? ஆனால் இந்த வழக்குச் சொல்லை உடைத்தெறிந்திருக்கிறார் ஒரு நாயகி. அவர்தான் காவல் பட தயாரிப்பாளர் கம் ஹீரோயின் கீதா. ஆங்.. புன்னகைப்பூ கீதா.

அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களைத் தயாரித்த பின் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த கீதா, இப்போது நாகேந்திரன் இயக்கத்தில் காவல் என்ற படத்தை தயாரித்து, நாயகியாகவும் நடிக்கிறார்.

Punnagai Poo Geetha catches a snake

நாளை படம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கீதா சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதில் ஒன்றுதான் இந்த பாம்பு சமாச்சாரம். காவல் படத்திற்காக கேரளாவில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பக்கம் வந்துவிட்ட ஒரு நல்ல பாம்பை ஒன்றை அவர் சர்வசாதாரணமாக பிடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

படமெடுத்து ஆடிய அந்தப் பாம்பைப் பார்த்து, "படம் பிடிப்பவருக்கு உன் படத்தைக் காட்டு' என்று கூறி போஸ் கொடுக்க வைத்தாராம்!

 

யாருப்பா அது த்ரிஷா வேனிட்டி வேனில் அனுமதி இல்லாமல் நுழைந்தது?

சென்னை: நடிகை த்ரிஷாவின் வேனிட்டி வேனுக்குள் அணில் ஒன்று புகுந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

Who paid Trisha a visit in her vanity van?

நடிகை த்ரிஷா ஒரு விலங்கு பிரியை என்பது அனைவருக்கும் தெரியும். தன்னை போன்று பிறரையும் விலங்குகள் மீது பாசம் காட்டுமாறு வலியுறுத்தி வருகிறார் அவர். இந்நிலையில் படப்பிடிப்பில் த்ரிஷாவின் வேனிட்டி வேனுக்குள் திடீர் என ஒரு குட்டி அணில் புகுந்தது.

அணில் குட்டியை பார்த்த த்ரிஷா உற்சாகமாகி அதை தனது தோளில் போட்டு கொஞ்சினார். அதை அவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அணிலுக்கு லோலா என்று பெயர் வைத்துள்ளார் த்ரிஷா.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் வேனிட்டி வேனுக்கு யார் வந்தார்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். லோலா என்ற குட்டி அணில்... என்று தெரிவித்துள்ளார்.

 

ஆட்டோவில் போன அதிர்ஷ்டலட்சுமி.... லட்சுமி மேனனின் முதல் நாள் கல்லூரி அனுபவம்...!

ஒரு வழியாக பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்துவிட்டார் கோலிவுட்டின் அதிர்ஷ்டலட்சுமியான லட்சுமி மேனன்.

கேரளாவில் கொச்சியில் உள்ள பிரபல தூய நெஞ்சக் கல்லூரி (சேக்ரட் ஹார்ட் காலேஜ்)யில் தகவல் தொடர்பு ஆங்கிலம் சேர்ந்திருக்கிறார் லட்சுமி. இந்த கோர்ஸ் அவருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

Lakshmi Menon's first day at College!

இந்தப் படிப்பில் நான் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்துக் காட்டுவேன் என்று கூறும் லட்சுமி மேனனின் முதல் நாள் கல்லூரி அனுபவம் எப்படி இருந்தது?

கோடிகளில் சம்பாதித்து, விதவிதமாகக் கார்கள் வைத்திருந்தாலும், முதல் நாள் எல்லா மாணவர்களையும் போல ஆட்டோவில் சாதாரணமாகப் போயிருக்கிறார் லட்சுமி மேனன்.

அடுத்த நடந்ததை அவரே சொல்கிறார்:

"இந்த நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன். ரொம்ப ஆர்வமாக இருந்தது கல்லூரி செல்ல. கேரளாவின் மிக உயர்ந்த அந்தஸ்து கொண்ட தூய நெஞ்சக் கல்லூரியில் முதல் நாள் முதல் வகுப்பு மிக இனியாக அமைந்தது.

நான் சாதாரணமாக, மற்ற மாணவர்களுடன் சகஜமாகப் பழகவே விரும்புகிறேன். ஆனால் ஒரு நடிகை என்ற அடையாளத்தை மறைக்க முடியாதே... சக மாணவர்கள் என்னை ஆச்சர்யத்துடன்தான் பார்க்கிறார்கள். இன்னும் சில நாட்களில் எல்லாம் சகஜமாகிவிடும்," என்கிறார்.

லட்சுமி மேனன் சினிமாவில் நடிக்க தடையாக இல்லாத வகையில் அவருக்கு சலுகைகள் அளித்திருக்கிறது, கண்டிப்புக்கு பெயர் பெற்ற இந்தக் கல்லூரி என்பது இன்னொரு விசேஷம்.