2/9/2011 11:29:52 AM
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட, 'ஆடுகளம்' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு அடுத்த படத்துக்கான ஆய்வில் இருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்துக்கு வந்த பாராட்டுகள், விமர்சனங்கள் பிரமிப்பாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம். தொடர்ந்து இதுபோன்ற யதார்த்த கதைகளையே இயக்குவேன். அடுத்த படம் 'வடசென்னை'யா என்று கேட்கிறார்கள். அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்தப் படத்துக்கான கதைக்காக, தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன். சில விஷயங்களை ஆதாரப்பூர்வமாகச் சேகரிக்க வேண்டியுள்ளது. இப்போது அந்த வேலையில் இருக்கிறேன். யார் ஹீரோ, ஹீரோயின் போன்ற விஷயங்களும் முடிவாகவில்லை. விரைவில் முடிவாகும். இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.