சென்னை: அஜீத் குமார் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் வரும் 20ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்.
அஜீத் குமார் ஒவ்வொரு படத்தை முடித்த உடன் தனது குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு வருவார். ஆனால் பில்லா 2 முடிந்த கையோடு ஆரம்பம் படப்பிடிப்பு துவங்கியதால் அவரால் வெளிநாடு செல்ல முடியவில்லை. ஆரம்பம் முடியும் முன்பே வீரம் பட வேலைகள் துவங்கிவிட்டன.
இதனால் அவரால் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடமுடியவில்லை. தற்போது வீரம் படப்பிடிப்பு முடிந்துள்ளதால் அஜீத் வரும் 20ம் தேதி குடும்பத்துடன் ஆஸ்திரேலியா கிளம்புகிறார். அங்கு அவர் ஒரு மாத காலம் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஆரம்பம் படப்பிடிப்பின்போது அஜீத் காலில் அடிபட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் அஜீத் காயம்பட்ட காலில் ஆபரேஷன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆபரேஷனை தள்ளிப் போட்டுவிட்டார்.