'ஜில்லா' படத்திற்கு தடை கோரியவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஜில்லா படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவரை மர்ம கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.

விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

'ஜில்லா' படத்திற்கு தடை கோரியவர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் மகேந்திரன் தனது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் மகேந்திரனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைவா படம் பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானதால் ஜில்லா எந்த பிரச்சனையும் இன்றி வெளியாக வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். இந்நிலையில் தான் ஜில்லாவுக்கு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பைசூலின் நான்காவது ஜாமீன் மனுவும் தள்ளுபடி.. ஆனால் போலீசிடம் மட்டும் சிக்கவே இல்லை!

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா கொடுத்த புகாரில் கைதாமலிருக்க பைசூல் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நான்காவது முறையாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணி தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த மாதம் செக்ஸ் மற்றும் பண மோசடி புகார். அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி ‘செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டார் என்றும், ரூ.50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பைசூலின் நான்காவது ஜாமீன் மனுவும் தள்ளுபடி.. ஆனால் போலீசிடம் மட்டும் சிக்கவே இல்லை!

தலைமறைவாக இருந்த பைசூலை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் 3 முறை கோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகின.

இதனால் எந்த நேரத்திலும் பைசூல் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே பைசூல் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வந்த ராதா, யாரும் எதிர்பார்க்காத வகையில் மனம் மாறி தனது புகார் மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.

ஆனால் ராதா விவகாரம் அத்துடன் முடியவில்லை.

சில தினங்கள் கழித்து திடீரென மீண்டும் கமிஷனர் அலுவலத்துக்கு வக்கீலுடன் மீண்டும் வந்தார் ராதா. அப்போது அவர், 'என்னை மிரட்டி புகார் மனுவை வாபஸ் பெறச் செய்தனர். என்னை தனி அறையில் அடைத்து வைத்து பைசூல் தன்னை சித்ரவதை செய்ததுடன், செல்போனையும் உடைத்துப் போட்டு விட்டார்,' என்று பரபரப்பான புதிய குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் ராதா - பைசூல் பிரச்சினை மீண்டும் சிக்கலானது.

இதையடுத்து 4 -வது முறையாக பைசூல் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானது. போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக பைசூல் தொடர்ந்து தலை மறைவாகவே இருந்து வருகிறார். வழக்கமாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசார் வேகம் காட்டுவார்கள்.

ஆனால் 4 முறை முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான பின்னரும், பைசூல் கைது செய்யப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராதா, போலீஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் கண்ணை மறைத்து விட்டு இத்தனை நாளும் பைசூல் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.

இது தொடர்பாக தி.நகர் துணை கமிஷனர் பகலவன் கூறுகையில், "ராதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பைசூலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பைசூலை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்," என்றார்.

 

'ஜில்லா'வுக்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

சென்னை: ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

'ஜில்லா'வுக்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸாகுமா?

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன்.

படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

மலேசியாவில் எதிர்வீச்சு ஆடியோ ரிலீஸ்- ஜீவா, ஸ்ரேயா வெளியிட்டனர்

கோலாலம்பூர்: எதிர்வீச்சு படத்தின் இசை குறுந்தகடு வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் ஜீவாவும் நடிகை ஸ்ரேயாவும் பங்கேற்று குறுந்தகட்டை வெளியிட்டனர்.

இர்பான், உதயா, சாஹுல், சைபுதீன், ரஸ்னா, துஷாரா, நளினி, சிங்கமுத்து உள்பட பலரும் நடித்துள்ள படம் எதிர்வீச்சு.

மலேசியாவில் எதிர்வீச்சு ஆடியோ ரிலீஸ்- ஜீவா, ஸ்ரேயா வெளியிட்டனர்

கே குணா இயக்கியுள்ளார். பிர்லா போஸ் ஒளிப்பதிவு செய்ய, ராஜாமணி இசையமைத்துள்ளார்.

சாஹுல் மற்றும் ரஸீக் இணைந்து தயாரித்துள்ளனர்.

மலேசியாவில் எதிர்வீச்சு ஆடியோ ரிலீஸ்- ஜீவா, ஸ்ரேயா வெளியிட்டனர்

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. நடிகர் ஜீவா, நடிகை ஸ்ரேயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, இசைத் தட்டை வெளியிட்டனர். இந்தப் படத்தில் இருவருமே நடிக்கிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜில்லாவுக்கு உலகம் முழுவதும் மொத்தம் 1200 தியேட்டர்கள்- தயாரிப்பாளர் அறிவிப்பு

சென்னை: விஜய் நடித்து நாளை வெளியாகவிருக்கும் ஜில்லா படத்துக்கு உலகெங்கும் 1200 தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. முதல் முறையாக இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளார்கள் சவுத்திரியின் மகன்களும் நடிகர்களுமான ஜீவாவும் ஜித்தன் ரமேஷும்.

ஜில்லாவுக்கு உலகம் முழுவதும் மொத்தம் 1200 தியேட்டர்கள்- தயாரிப்பாளர் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது ஜில்லா. தமிழகத்தில் 400 அரங்குகளில் வெளியாகிறது.

கேரளாவில் மோகன்லாலே வெளியிடுகிறார் இந்தப் படத்தை. அங்கு மொத்தம் 300 அரங்குகளில் ஜில்லா வெளியாகிறது.

ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ஜில்லா வெளியாகிறது. விஜய் படங்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. எனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படம் வெளியாகிறது.

மொத்தம் 1200 அரங்குகளில் படம் வெளியாவதாக நேற்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி அறிவித்துள்ளார்.

 

நடிகர் விமலுக்கு இரண்டாவது ஆண் குழந்தை

நடிகர் விமலுக்கு இரண்டாவது ஆண் குழந்தை

சென்னை: நடிகர் விமல் இரண்டாவது ஆண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.

பசங்க படத்தில் அறிமுகமாகி, களவாணி படத்தில் பிரபலமானவர் நடிகர் விமல்.

இவரது மனைவி பெயர் ப்ரியதர்ஷினி. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும்.

2011 ஆகஸ்டில் இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தையும் ஆண்டுகுழந்தையாகவே அமைந்ததால், மகிழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார் விமல்.

அவருக்கு இயக்குநர்கள், நடிகர்கள், நண்பர்கள் வாழ்த்து கூறினர்.