கிசு கிசு - அக்கா ரோல் வேணாம்.. அடம் பிடிக்கும் நடிகை..

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
அக்கா ரோல் வேணாம்.. அடம் பிடிக்கும் நடிகை..

8/4/2011 5:17:56 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சங்கீதமான நடிகைக்கு அக்கா, அண்ணி ரோல் நிறைய வருதாம்... வருதாம்... ஆனா நடிச்சா ஹீரோயினாத்தான் நடிப்பேன். இல்லேன்னா ஹீரோயினுக்கு இணையான வேடத்துலதான் நடிப்பேன்னு நடிகை அடம் பிடிக்கிறாராம்... அடம் பிடிக்கிறாராம்... உன் பாலிசியை மாத்திக்கோனு பாடகரான கணவரும் அட்வைஸ் பண்ணினாராம். ஆனா, நடிகை ஏத்துக்கலையாம்... ஏத்துக்கலையாம்...

அஞ்சாத வில்லன் நடிகருக்கு ஒரு படம்தான் கையில இருக்கு. அஞ்சாத இயக்குனர்கிட்ட நேரடியாவே வாய்ப்பு கேட்டாராம். உங்க அடுத்த படத்துல எந்த ரோலா இருந்தாலும் பண்றேன்னு சொன்னாராம்... சொன்னாராம்... ஸாரி, வாய்ப்பு இருந்தா நானே சொல்றேன்னு இயக்கம் எஸ் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

பிரகாசமான ஹீரோ, ஆனந்தமான இயக்குனர் படத்துல நடிக்கிறாரு. இதை முடிச்சிட்டு, அறுவா டைரக்டர் படத்துல நடிக்கப்போறாரு. அந்த படம் தொடங்க நிறைய நேரம் இருக்கிறதால, திரைக்கதைக்கு நிறைய நேரம் எடுத்து பண்ணுங்கனு டைரக்டருக்கு ஹீரோ அட்வைஸ் பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...




 

இந்தியிலும் நோ பிகினி : காஜல் முடிவு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியிலும் நோ பிகினி : காஜல் முடிவு!

8/4/2011 5:17:03 PM

'சிங்கம்' இந்தி படத்தில் நடித்தார் காஜல் அகர்வால். தமிழில் சூர்யாவுடன் 'மாற்றான்', தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிசினஸ்மேன்' படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியது: சம¦பத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்றேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய பாலிவுட் இயக்குனர்கள், படத்தில் நடிப்பது பற்றி பேச்சு நடத்தியுள்ளனர். இந்தி சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமே என சிலர் கேட்கிறார்கள். எந்த மொழியாக இருந்தாலும் கேரக்டருக்கு ஏற்றபடிதான் கவர்ச்சியாக நடிப்பதா, இல்லையா என்பது முடிவாகும். இந்தி படங்கள் என்பதால் எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். தென்னிந்திய படங்களில் பிகினி அணிவதில்லை என்பதை பாலிசியாக வைத்திருக்கிறேன். அதையே இந்தி சினிமாவிலும் பின்பற்றுவேன். பிகினி உடை எனது உடல்வாகுக்கு ஒத்துவராது என்பது என் கருத்து. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.




 

சினேகாவுக்காக பேஷன் ஷோவுக்கு வந்த பிரசன்னா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சினேகாவுக்காக பேஷன் ஷோவுக்கு வந்த பிரசன்னா!

8/4/2011 5:15:30 PM

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பங்கேற்றார் சினேகா. மேடையில் நவீன உடை அணிந்து அவர் ஒய்யாரமாக நடந்து வர, முன் வரிசையில் அமர்ந்திருந்த பிரசன்னா கைதட்டி ஆரவாரம் செய்தார். முன்னதாக இந்த ஷோவுக்கு சினேகாவும் பிரசன்னாவும் ஒன்றாக வந்தனர். இதற்கு முன் நடந்த ஒரு விழாவிலும் இருவரும் ஜோடியாக வந்தது குறிப்பிடத்தக்கது. சினேகாவை ஊக்குவிக்கவே பேஷன் ஷோவுக்கு வந்ததாக பிரசன்னா தெரிவித்தார். இருவரையும் இணைத்து பலமுறை கிசுகிசு கிளம்பியது. ‘நாங்கள் இருவரும் பிரெண்ட்ஸ். எங்களுக்குள் காதல் இல்லை’ என இருவரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்


பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் 150 கிலோ எடையுள்ள பைக்கைத் தூக்கி அசத்தியுள்ளார்.

இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு பைக் என்றால் உயிர். எந்த பைக் பற்றி எப்பொழுது கேட்டாலும் அசராமல் பேசுவார். தற்போது அவர் போர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு காட்சியில் பைக்கைத் தூக்க வேண்டும் என்று இயக்குனர் நிஷிகாந்த காமத் ஜானிடம் தெரிவித்துள்ளார். உடனே ஜானும் ஓகே சொல்லிவிட்டார்.

இது குறித்து படத்தி்ன் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியதாவது,

ஜான் பைக்கைத் தூக்கியபோது நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். ஜானை பைக்கைத் தூக்குமாறு கூறியுள்ளதாக இயக்குனர் தெரிவித்ததற்கு நான் வேண்டாம் என்றேன். அவ்வாறு செய்தால் ஜானுக்கு முதுகிலோ, முழங்காலிலோ காயம் ஏற்படலாம் என்றேன். ஆனால் இயக்குனருக்கு ஜான் மீது நம்பிக்கை இருந்தது.

ஜான் திடகாத்திரமானவர். சில காட்சிகளுக்கு நாங்கள் கயிறை பயன்படுத்தினோம். ஆனால் பைக் காட்சியில் பயன்படுத்தவில்லை. ஜான் தானாக பைக்கைத் தூக்கி அசத்தினார் என்று ஸ்டண்ட் இயக்குர் தெரிவித்தார்.

பிபாஷா பாசுவை தனது மனதில் பல காலமாக நிறுத்தி வைத்திருந்தவருக்கு பைக் ஒரு பெரிய விஷயமா?
 

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு செல்லப் பெயர் 'பேட்டி பி'!


மும்பை: ஐஸ்வர்யா ராய் பச்சனின் பெண் குழந்தைக்கு பேட்டி பி (Beti B) என்று செல்லப் பெயர் வைத்துள்ளனர்.

அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சன் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் சில தினங்களுக்கு முன் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்தக் குழந்தைக்கு செல்லமாக பேட்டி பி என்று அமிதாப் மற்றும் குடும்பத்தினர் பெயர் சூட்டி கொஞ்சுகின்றனர். மகளுக்கு பொருத்தமான பெயரைத் தேடி வருவதாகவும், அதுவரை பேட்டி பி என்றே அழைக்கப் போவதாகவும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயரை அவர்களின் குடும்ப நண்பர் சஹானா கோஸ்வாமி சூட்டினாராம். குழந்தையின் தாத்தா அமிதாப்பை திரையுலகமே பிக் பி என்று அழைத்துவருவதால், பேத்திக்கு பேட்டி பி என்று சூட்டிவிட்டார்களாம்.
 

நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு


சென்னை: பிரபல நடிகையும் தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதியின் முக்கிய தலைவருமான விஜயசாந்தி மீது சென்னை எழும்பூரை சேர்ந்த இந்தர்சந்த் ஜெயின் நிலமோசடி புகார் கொடுத்துள்ளார்.

ஓட்டல் அதிபரான இவர், எழும்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், ஒரு மனு கொடுத்தார்.

அதில், “சென்னை தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலையில், உள்ள 2 கிரவுண்டு நிலம் ஒன்றுக்கு நடிகை விஜயசாந்தி பவர் ஏஜெண்டாக உள்ளார். இந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புக் கொண்ட அவர், அதற்காக, ரூ.5 கோடி பணமும் பெற்றுக் கொண்டார். நிலம் விற்பனை தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் குறிப்பிட்ட நிலத்தை எனக்கு தராமல் வேறு ஒருவருக்கு விஜய சாந்தி விற்பனை செய்து மோசடி செய்து விட்டார். நான் கொடுத்த ரூ.5 கோடியையும் என்னிடம் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு விஜயசாந்தி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

 

மாப்பிள்ளை விவகாரம்.... அம்மாவுடன் த்ரிஷா மோதல்?


அம்மா – மகள் என்றில்லாமல், தோழிகளைப் போல பார்ட்டி, விழா என அமர்க்களப்படுத்துபவர்கள் நடிகை த்ரிஷாவும் அவர் அம்மா உமாவும். ஆனால் இப்போது இருவரும் கடும் பிணக்கில் உள்ளனராம்.

த்ரிஷாவுக்கு திருமணம் என்று நேற்று பரபரப்பாக செய்தி வெளியான நிலையில், அன்று மாலையே அதை மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டார் த்ரிஷா.

த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்த விவரத்தை மீடியாவுக்கு தகவலாகச் சொன்னவர் த்ரிஷாவின் அம்மா உமா. ஆனால் இதனை அடியோடு மறுத்து வருகிறார் த்ரிஷா.

இதற்குக் காரணம் மாப்பிள்ளை யார் என்பதி்ல இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல்தானாம்.

காதல் திருமணம்தான் செய்வேன் என்று நீண்ட நாட்களாகக் கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்குப் பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம். தனது மனதிலிருப்பதை சமீபத்தில் பேட்டியாகவும் கொடுத்திருந்தார் த்ரிஷா.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில்தான், த்ரிஷாவுக்கு வரன் பார்த்திருப்பதாகவும், மணமகன் சென்னை தொழிலதிபர் என்றும் உமா கிருஷ்ணன் பத்திரிகைகளுக்கு செய்தியை கசியவிட்டிருந்தார்.

இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த அம்மா – மகள் சண்டையில் அகப்பட்டுக் கொண்டது மீடியாதான்!

 

2012-ல் ஜெனிலியா - ரிதேஷ் திருமணம்


ஜெனிலியா – ரிதேஷ் தேஷ்முக் திருமணம் உறுதியாகியுள்ளது. 2012-ல் இரு வீட்டார் சம்மதத்தோடும் இந்த திருமணம் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிலியா – ரிதேஷ் காதலை மணமகன் வீட்டார் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, இரண்டு புதிய படங்களில் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தந்துள்ளார்களாம்.

இந்திரகுமாரின் மஸ்தி 2 மற்றும் புது இயக்குநர் மன்தீப் குமார் இயக்கும் புதிய படங்களில் ஜெனிலியாவும் ரிதேஷும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் துஜே மேரி கஸம். 2003 ல் வெளியானது. அப்போதே இருவருக்கும் காதல் என்று செய்தி வெளியானது. இருவரும் கோவா சர்ச்சில் திருமணம் செய்ய திட்டமிட்டு, அதை அன்றைய மராட்டிய முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் (ரிதேஷின் தந்தை) தடுத்துவிட்டதும் நினைவிருக்கலாம்.

இப்போது, ஒரு வழியாக மணமகன் வீட்டுத் தரப்பில் சமாதானமாகி திருமணத் தேதியை அறிவிக்கவும் தயாராகிவிட்டார்களாம். இதன் முதல்படிதான் புதிய படங்கள் இரண்டில் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனராம்.

விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டுக்கு மருமகளாக ஒரு நடிகை வருவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே ரிதேஷின் அண்ணன் அமித் ஒரு டிவி நடிகையைத்தான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முகமூடியில் பூஜா ஹெக்டே... முதல் படத்திலேயே ரூ 18 லட்சம் சம்பளம்


யுடிவி தயாரிக்க, மிஷ்கின் இயக்கும் புதிய படமான முகமூடியில் அமலாபால் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் புதிய படம் முகமூடி. இந்தப் படத்தில் நாயகியாக அமலா பால் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மும்பை பாந்திராவைச் சேர்ந்தவர் பூஜா. சமீபத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாவது இடம் பெற்றவர் பூஜா.

முகமூடி இவரது முதல் படம் என்றாலும், இந்தப் படத்துக்காக இவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ 18 லட்சம் என்கிறார்கள்.
 

வஸந்த்தின் "மூன்று பேர் மூன்று காதல்"?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வஸந்த்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’?

8/4/2011 12:34:34 PM

வஸந்த் தனது புதிய படத்துக்கு மூன்று பேர் மூன்று காதல் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்தப் படத்தில் அவ‌ரின் ‌ரிதம் படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், முதன்மை கதை நாயகனாக சேரன் நடிப்பார் எனவும் பலமாக கிசுகிசுக்கப்படுகிறது. முக்கியமான இன்னொரு வேடத்துக்கு புதுமுகம் ஒருவரை வஸந்த் அறிமுகப்படுத்தயிருக்கிறார். இந்த தகவல்களை வஸந்த் தரப்பு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

 

மங்காத்தா போல வேட்டை மன்னன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மங்காத்தா போல வேட்டை மன்னன்

8/4/2011 12:30:32 PM

மங்காத்தா படப்பிடிப்பு தொடங்கும் போதே படத்தின் மூடு எத்தகையது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அ‌‌ஜீத்தை வைத்து டீஸர் ஒன்றை வெளியிட்டார் வெங்கட்பிரபு. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மங்காத்தா போலவே தனது வேட்டை மன்னனுக்கும் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. வேட்டை மன்னன் கேங்ஸ்ட‌ர் படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது டீஸர். இணையத்தில் இது செம ஹிட்.

 

விஸ்வரூபம் படத்தில் ப்‌ரியா ஆனந்த் இல்லை : கமல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஸ்வரூபம் படத்தில் ப்‌ரியா ஆனந்த் இல்லை : கமல்!

8/4/2011 12:28:13 PM

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த பிரமாண்ட படம் 'விஸ்வரூபம்'. படத்தில் நாயகனாக தவிர அனைத்தும் சிக்கலாகவே உள்ளது. முதலில் படத்திற்கு ஹீரோயினாக இந்தி நடிகை 'சோனாக்ஷி' தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் படத்திலிருந்து விலகினார், இந்நிலையில் ஹீரோயின் வேட்டையில் கமல் தீவிரமாக இருந்தார். முன்னதாக கமல் நடிக்கும் இந்தப் படத்துக்காக நடிகை ப்‌ரியா ஆனந்தின் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதனை கமல் மறுத்துள்ளார். ப்‌ரியா ஆனந்துக்கும் விஸ்வரூபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.




 

ஃபார்முலாவை மாற்றிய மணிரத்னம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஃபார்முலாவை மாற்றிய மணிரத்னம்!

8/4/2011 12:16:31 PM

தேசிய பிரச்சனை… அதை தமிழ், இந்தி என இரு மொழிகளில் எடுப்பது என்ற மணிரத்னத்தின் ஃபார்முலா கடந்த சில படங்களில் வெற்றி பெறவில்லை. இதனை உணர்ந்து கொண்டவர் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போல தமிழ் சார்ந்த படமொன்றை அடுத்ததாக இயக்குகிறார். நடிகர்கள் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காகதான் திருவனந்தபுரம் சென்றுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

 

சூர்யா படத்தை அதிகம் விரும்பும் பாலிவுட்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூர்யா படத்தை அதிகம் விரும்பும் பாலிவுட்!

8/4/2011 12:17:34 PM

சூர்யாவின் படங்களை தான் பாலிவுட் ஹீரோக்கள் அதிகம் பார்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரீமேக் படங்களை உருவாக்குதில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் பாலிவுட், சூர்யாவின் படங்களை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். சூர்யா நடித்த சிங்கம், கஜினி, காக்க.. காக்க.., போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சூர்யா நடித்து வரும் ‘ஏழாம் அறிவு’ படமும் பாலிவுட்டில் அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது. சூர்யாவின் சிங்கம் படத்தை ரீமேக் செய்தனர். அஜய்தேவ்கான் நடித்தார். அவ‌‌ரின் திரைச் ச‌‌ரித்திரத்தில் இப்படியொரு ஹிட்டை அனுபவப்பட்டதில்லை. நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு இது சோதனை காலம். படமும் இல்லை, காதலி பிபாசாவும் உடன் இல்லை. ஒரு ஹிட் கொடுத்தால் மட்டுமே ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும். அதற்காக அவர் கையிலெடுத்திருப்பது சூர்யா நடித்த காக்க காக்க. இதன் ‌ரீமேக்கில் ஜான் நடித்து வருகிறார். இந்தப் படமும் வெற்றி பெற்றால் சூர்யாவின் மேலும் ‌சில படங்கள் இந்தியில் ‌ரீமேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.

 

ஐஸ்வர்யா படத்தில் ஜி.வி.பிரகாஷ்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஐஸ்வர்யா படத்தில் ஜி.வி.பிரகாஷ்?

8/4/2011 12:15:28 PM

ஐஸ்வர்யா தனுஷ் தன் கணவர் தனுஷை வைத்து இயக்கும் தனது முதல் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இசையமைப்பாளர் யார் என்பதும் முடிவாகவில்லை. படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்குமாரை தேர்வு செய்யலாம் என ஐஸ்வர்யா, தனுஷ் இருவ‌‌ரின் சாய்ஸ் என்று தெ‌ரிய வந்திருக்கிறது. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் பொறுத்து இருக்கிறது முடிவு.

 

அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு மாயாவதி அரசு அனுமதி மறுப்பு


லக்னோ: அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துவிட்டது.

அமிதாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரக்ஷான்’ இந்திப் படம் வெளியாக இருப்பதையொட்டி, அவரும் இயக்குநர் பிரகாஷ் ஜா, நடிகர் சைப் அலிகான், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் லக்னோ நகரில் இன்று (வியாழக்கிழமை) மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரபிரதேச மாநில அரசு நேற்று மறுத்து விட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின்னர் அமிதாப்பச்சன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க இருந்தார். அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

 

ஆகஸ்ட் 2ல் மறுபிறவி எடுத்தேன்: அமிதாப்


கூலி படபிடிப்பில் நடந்த விபத்தில் இருந்து பிழைத்த அபிதாப் தான் ஆகஸ்ட் 2-ம் தேதி மறுபிறவி எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 1942-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி பிறந்தார். கூலி படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. அமிதாப் பிழைப்பாரா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. இந்த விபத்து 26-7-1982 அன்று நடந்தது.

பெங்களூர் பல்கலைக்கழக வளாகத்தில் அமிதாப்புக்கும், நடிகர் புனீத் இஸாருக்கும் இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அமிதாப் உயரத்தில் இருந்து மேஜையில் விழுந்து பிறகு தரையில் விழ வேண்டும். மேஜை மீது விழுந்தபோது அதன் முனை அமிதாப் வயிற்றை பதம்பார்த்துவிட்டது.

இதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 2-ம் தேதி தான் கண் விழித்தார். இந்த விபத்தால் அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார்.

தான் மறுபிறவி எடுத்த நாளை அமிதாப் இன்னொரு பிறந்தநாளாகவே கருதுகிறார்.

 

பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல! - ஏ ஆர் முருகதாஸ்


யாருடைய ஆதரவுமில்லாமல் சென்னைக்கு வந்தேன். இன்று நிறைய மனிதர்களைச் சம்பாதித்துவிட்டேன். எனக்கு பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல, புதிய இயக்குநர்களை உருவாக்குவதே குறிக்கோள், என்றார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து எங்கேயும் எப்போதும் என்ற படத்தை தயாரிக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

ஜெய்-அஞ்சலி, அனன்யா – சர்வானந்த் ஜோடிகளாக நடிக்கும் இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார். சி சத்யா இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் சினிமாஸில் நடந்தது. நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இந்த விழாவுக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நடிகர் சங்கத் தலைவர் ஆர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் இருவருமே வரவில்லை. எனவே மிகத் தாமதமாகவே தொடங்கியது நிகழ்ச்சி.

விழாவில் பேசிய இயக்குநர் முருகதாஸ், “நான் சென்னைக்கு வந்தபோது என்னைத் தவிர யாரையும் தெரியாது எனக்கு. இன்று நிறைய மனிதர்களைச் சம்பாதித்துள்ளேன்.

என்னால் முடிந்த அளவு இந்த சமூகத்துக்கு திருப்பித் தர நினைக்கிறேன். நல்ல சினிமாக்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாக என்னால் முடிந்த அளவு உதவத்தான் இந்த தயாரிப்பு வேலையில் இறங்கினேன். ஹாலிவுட்டில் பெரிய நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நம்முடன் கைகோர்த்துள்ளது. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய லாபம் என்ற நோக்கம் எனக்கில்லை.

சின்ன பட்ஜெட், புதிய நடிகர்கள், இயக்குநர்களை வைத்து நல்ல சினிமா கொடுத்து குறைந்த லாபம் கிடைத்தால் போதும். அதுதான் இந்த எங்கேயும் எப்போதும் படத்தின் நோக்கம்.

இந்தப் படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அப்படி ஜெயித்தால் இன்னும் நிறைய படங்களை இணைந்து தயாரிப்போம். வருடத்துக்கு இரு இயக்குநர்களாவது அறிமுகமாவார்கள்,” என்றார்.

விழாவில் பேசிய சூர்யா, “எங்கேயும் எப்போதும் படம் என் சொந்தப் படம் மாதிரி. இந்தப் படம் ஜெயிக்க வேண்டும். இன்னும் நிறைய ஹாலிவுட் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரவேண்டும்,” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விவேக் உள்பட பலரும் வாழ்த்திப் பேசினர்.

 

ரஜினி மகள் அறிமுகப்படுத்தும் புது இசையமைப்பாளர் அனிருத்!


தனுஷை வைத்து தான் இயக்கும் முதல் படத்திலேயே புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார் ஐஸ்வர்யா ரஜினி.

அந்த இளைஞரின் பெயர் அனிருத். பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் தனு் – ஜிவி பிரகாஷ்குமார் காமிபினேஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் பிரகாஷ்குமார் தேதிகள் ஒத்துவராத நிலையில் இந்த புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், “அனிருத் நல்ல திறமைசாலி. ஏற்கெனவே ஒரு பாடலை உருவாக்கிவிட்டார். மற்ற பாடல்களுக்கு கம்போஸிங் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு நல்ல இசையமைப்பாளர் கிடைத்துவிட்டார்,” என்றார்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார். ரஜினியின் ராணா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

 

விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு


விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

தன் மீதான நில மோசடி புகார் குறித்தும் தன்னை போலீஸ் தேடி வருவதாகவும் வெளியான செய்திகள் குறித்து நேற்று வடிவேலு பரபரப்பாக பேட்டியளித்திருந்தார்.

இந்த பேட்டி தொடர்பாக இணையதளத்தில் வெளியான செய்திகளுக்கு வாசகர்கள் அளித்த கமெண்ட்களைப் படித்த வடிவேலு, அவற்றுக்கு பதிலளித்துள்ளார்.

வடிவேலு தனது தொழிலை மட்டும் செய்திருந்தால் நிலமோசடியில் சிக்கி இருக்க மாட்டார் என்று ஒரு வாசகர் கூறியதை மறுத்துள்ள வடிவேலு, “என் தொழிலை மட்டும்தான் செய்கிறேன். சம்பாதிக்கிற பணத்தை வரும் காலத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சேமித்து வைக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அந்த பணத்துக்கு சொத்துக்களை வாங்கி போடுவார்கள். அப்படித்தான் நான் செய்தேன். மோசடி செய்யவில்லை. மோசம் போனேன்,” என்றார்.

விஜயகாந்த் பெரிய மனசு வைத்து வடிவேலுவை மன்னித்து விடலாம். வடிவேலு தான் செய்த தவறை உணரவேண்டும், என மற்றொரு வாசகர் கூறிய கருத்துக்கு பதலிளித்துள்ள வடிவேலு, “இந்த கருத்தை சொன்னவர் எதிரி கூடாரத்தின் முக்கிய உறுப்பினர். யாரையோ இவர் சொல்கிறாரே அவர்தான் (விஜயகாந்த்) தவறை உணர்ந்து திருந்தி வருந்த வேண்டும். அவர் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்…” என்று கூறியுள்ளார்.

மேலும் ‘என் கிணற்றை காணோம் என்று சினிமாவில் நடித்தார். நிஜத்தில் சுடுகாட்டு நிலத்தை காட்டி சிங்கமுத்து ஏமாற்றி விட்டதாக கூறுகிறாரே’ என்ற வாசகரின் கருத்துக்கு, ‘அது பொய்யல்ல, மெய்’, என்று கூறியுள்ளார் வடிவேலு.

 

தன்னம்பிக்கை, திறமை இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம் : பாக்யராஜ்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3224.jpg
எஸ்.வி.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.வி.பாபு தயாரிக்கும் படம், ‘யுவன்’. சித்தார்த் ராஜ்குமார் ஹீரோ. ரகுல் பிரீத்தி சிங் ஹீரோயின். ஒளிப்பதிவு, ஏ.வெங்கடேஷ். இசை, ஜோஸ்வா ஸ்ரீதர். பாடல்கள், விவேகா. இயக்கம், ஆர்.என்.சரண். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடலை  வெளியிட்டு பாக்யராஜ் பேசும்போது, ‘‘உதவி இயக்குனராக பணிபுரிந்தால்தான், பிறகு இயக்குனராக முடியும் என்று சொல்ல முடியாது. இப்படத்தின் இயக்குனர் சரண் என்கிற சரவணன், என் அலுவலகத்தில் வேலை பார்த்தார். சரவணனுக்கு இருந்த சினிமா ஆர்வத்தைக் கண்டு ‘பிற்காலத்தில் பெரிய இயக்குனராக வருவாய்’ என்று அப்போது வாழ்த்தினேன். அந்த வாழ்த்து பலித்து, இப்போது இயக்குனராகியுள்ளார். கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் கண்டிப்பாக சினிமாவில் ஜெயிக்கலாம்’’ என்றார். விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைள், இயக்குனர்கள் பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், எடிட்டர் சுரேஷ் அர்ஸ், பாடலாசிரியர் விவேகா, தயாரிப்பாளர் எஸ்.வி.பாபு கலந்து கொண்டனர். ஆர்.என்.சரண் நன்றி கூறினார்.
 

விரைவில் திருமணமா? த்ரிஷா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விரைவில் திருமணமா? த்ரிஷா மறுப்பு

8/3/2011 5:39:35 PM

நடிகை த்ரிஷாவுக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று அவரது அம்மா உமா கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த த்ரிஷா, "பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் காதல் திருமணம்தான் செய்வேன்" என பேட்டியளித்தார். "தற்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. விரைவில் காதலர் கிடைப்பார் என நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார். இதற்கிடையே திரையுலகை சேர்ந்த ஒருவரை த்ரிஷா காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் த¢ரிஷாவுக்கு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி கேட்டபோது, த்ரிஷா மறுப்பு தெரிவித்தார். இது குறித்து த்ரிஷாவின் அம்மா உமா கூறியதாவது: த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கவில்லை. த்ரிஷா மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது வெளிப்படையாகவே நடக்கும்.  தமிழ், தெலுங்கு படங்களில் த்ரிஷா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் பற்றி இப்போதைக்கு அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சினிமாவில் அவர் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. இதனால் திருமணம் பற்றி வந்த செய்திகளில் உண்மையில்லை. இவ்வாறு உமா கூறினார்.




 

இந்த மாதம் 18 படங்கள் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்த மாதம் 18 படங்கள் ரிலீஸ்

8/3/2011 11:55:53 AM

இந்த மாதம் 18 படங்கள் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இது முந்தைய மாதங்களை விட அதிக எண்ணிக்கையாகும். பெரிய ஹீரோ படங்கள் ரிலீசானால், அதிகமான படங்கள் வழக்கமாக, வெளிவராது. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும். இந்த மாதம் முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ள படம் எதுவும் ரிலீஸ் ஆகாததாலும் சுதந்திர தினத்துக்கான விடுமுறையை கணக்கில் கொண்டும் அதிகமான படங்கள் வெளி வருகின்றன. 5-ம் தேதி, 'டூ', 'பட்டாபட்டி', 'ராமநாதபுரம்', 'சிங்க கோட்டை', 'ரைஸ் ஆஃப் தி ஏப்ஸ்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 12-ம் தேதி 'ரவுத்திரம்', 'சகாக்கள்', 'யுவன்' ஆகிய படங்கள் வருகின்றன. 19-ம் தேதி 'முதல் இடம்', 'தேனி மாவட்டம்', 'புலி வேஷம்' ஆகிய படங்களும் 26-ம் தேதி 'வாகை சூடவா', 'யுவன் யுவதி' படங்களும் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இவை தவிர, 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'உருமி', 'நாங்க', 'காதல் அல்ல' மற்றும் இரண்டு டப்பிங் படங்களும் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை வெளியானால் 18 படங்கள், இம்மாதம் ரிலீஸ் ஆகும்.




 

வித்தியாச கேரக்டர் : அம்பிகா ஆசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வித்தியாச கேரக்டர் : அம்பிகா ஆசை!

8/3/2011 12:03:09 PM

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன் என்றார் அம்பிகா. இதுபற்றி அவர்  கூறியதாவது: 'அவன்-இவன்' படத்தில் எனது கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. இனி ஏனோதானோ வேடங்களில் நடிக்க மாட்டேன். குறிப்பிட்டு சொல்லக்கூடிய, வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன். மலையாளத்தில் ஷஜிலால் இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இது விருது வாங்கும் நோக்கில் உருவாகும் படம். இந்த வேடம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னொரு மலையாள படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் நான் இயக்கும் 'அண்ணபெல்லா' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இவ்வாறு அம்பிகா கூறினார்.




 

முரண் தாமதம் ஏன்? இயக்குனர் விளக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முரண் தாமதம் ஏன்? இயக்குனர் விளக்கம்

8/3/2011 12:06:29 PM

சேரன், பிரசன்னா, ஹரிப்பிரியா, நிகிதா நடித்துள்ள படம் 'முரண்'. படம் பற்றி இயக்குனர் ராஜன் மாதவ் கூறியதாவது: முரண்பாடுள்ள கருத்துகளை கொண்ட இரண்டு பேர் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருமே ஒவ்வொரு விஷயத்தையும் வெவ்வேறுவிதமாகப் பார்ப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, சவால்தான் கதை. இதன் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். பெங்களூர்-சென்னை ஹைவேஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அருகே புதிதாக போடப்பட்டிருந்த 'நைஸ்' சாலையில் சிறப்பு அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இப்போது, அங்கு ஷூட்டிங் நடத்த தடை விதித்துள்ளனர். இந்த லொகேஷன் புதுமையானதாக இருக்கும். படம் தாமதம் என்று சொல்வதை ஏற்க மாட்டேன். ஷூட்டிங்கிற்கு கொஞ்சம் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டோம் என்று சொல்லலாம். இப்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. செப்டம்பர் மாதம் வெளியிட, யுடிவி நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. இவ்வாறு ராஜன் மாதவ் கூறினார்.




 

ஒரு பாடலுக்கு ஆட ஷிகா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரு பாடலுக்கு ஆட ஷிகா மறுப்பு

8/3/2011 12:04:58 PM

'கொல கொலயா முந்திரிக்கா' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷிகா. அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு 'ஓடி வா', 'படம் பார்த்து கதை சொல்' படங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் சரத்பாபு மகளாக 'மாயதந்தா மலே' படத்தில் நடிக்கிறேன். இது அப்பா, மகள் பாசத்தை சொல்லும் கதை. தமிழில் நிரந்தரமாக இடம் பிடிக்க ஆசை. எனவே, ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். சில படங்களில், குத்துப் பாடலுக்கு ஆட கேட்டார்கள். மறுத்துவிட்டேன். திறமையை வெளிப்படுத்தும் கேரக்டருக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு ஷிகா கூறினார்.




 

முனி 3ம் பாகம்: லாரன்ஸ் தகவல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முனி 3ம் பாகம்: லாரன்ஸ் தகவல்

8/3/2011 11:58:47 AM

முனி படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி நடிக்க இருப்பதாக, லாரன்ஸ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: முனி படத்தின் 2ம் பாகமான 'காஞ்சனா'வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'காஞ்சனா' படத்தை இந்தியில் இயக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. எனது வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். சரத்குமார் வேடத்துக்கு சஞ்சய்தத்தை கேட்க இருக்கிறேன். இப்போது தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா நடிக்கும் 'ரிபெல்' படத்தை இயக்கி வருகிறேன். இதை முடித்துவிட்டு இந்தி படத்தை இயக்குகிறேன். பிறகு முனி படத்தின் 3ம் பாகத்தை இயக்கி நடிக்க இருக்கிறேன். இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.




 

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் அடிதடி: எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீர் வெளிநடப்பு


சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் அடிதடி ரகளை நடந்தது. இதனால் சங்கத்தின் தலைவர் எஸ்ஏ சந்திரசேகரன் திடீரென வெளிநடப்பு செய்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் தற்காலிக தலைவராக உள்ளார். துணைத் தலைவராக அன்பாலயா கே.பிரபாகரனும், செயலாளராக கே.முரளிதரனும், பொறுப்பு செயலாளராக கதிரேசனும், பொருளாளராக காஜாமைதீனும் உள்ளனர்.

சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, வருகிற 28 ந் தேதி பொதுக்குழுவை கூட்டுவது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்க கட்டிடத்தில் நேற்று மாலை நடந்தது. பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தில், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் ஒரு தரப்பினர், பொதுக் குழுவை கூட்டித்தான் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றார்கள். அன்பாலயா கே.பிரபாகரன் தலைமையில் இன்னொரு தரப்பினர், பொதுக் குழுவை கூட்டக் கூடாது, நேரடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றார்கள்.

அடிதடி...

இதுதொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கூட்டத்தில் அடிதடி நடந்தது. ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் தலையிட்டு, சமரசம் செய்தார்கள். அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரன் திடீரென்று கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று 194 பட அதிபர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். கடந்த 20 ந் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஆகஸ்டு 28 ந் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று 130 பட அதிபர்கள் கையெழுத்திட்டு இருப்பதாக அன்பாலயா கே.பிரபாகரன், கே.முரளிதரன், டி.சிவா, சீனிவாசன் ஆகியோர் கூறுகிறார்கள். அவர்களாகத்தான் என்னை பொறுப்பு தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இப்போது, தெரியாமல் தேர்ந்தெடுத்து விட்டோம் என்கிறார்கள். பொதுக்குழுவை கூட்டுவதற்கு இவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? என்றார்.

இந்த பிரச்சினை தொடர்பாக அன்பாலயா கே.பிரபாகரன் கூறுகையில், "பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று 60 பேர்கள்தான் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதில், பல பேர் கையெழுத்துகள் போலியானவை. பொதுக்குழுவை கூட்டாமல், நேரடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று 144 பேர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில், பெரும்பான்மையானவர்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். தலைவர் வெளிநடப்பு செய்ததால், முடிவு எடுக்க முடியாமல் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

செயற்குழு கூட்டத்திலேயே அடிதடி நடக்கிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டினால் என்ன நடக்கும். அதனால்தான் வேண்டாம் எனகிறோம்," என்றார்.
 

சீமானைக் கைவிட்டார் விஜய்?


புலி வருது கதையாக சீமான் - விஜய் இணையப் போகிறார்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. காவலன் முடிந்த பிறகு, வேலாயுதம் முடிந்த பிறகு, இல்லையில்லை நண்பனுக்குப் பிறகு என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.

இப்போது சீமானுக்கு படமே இல்லையோ என்று கேட்கும்படியாகிவிட்டது நிலைமை.

காரணம் 2013 வரை விஜய் அடுத்தடுத்த படங்களுக்கு ஒப்பந்தமாகி, அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்யப்பட்டுள்ளது.

வேலாயுதம் படத்தை அடுத்து ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இயக்குனர் ஹரிதான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்கிறார்கள்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் அக்டோபரில் துவங்கக்கூடும். 2012-ல் கெளதம் மேனன் படம் தொடங்கி 2013 பொங்கல் வெளீயிடாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியெனில் சீமான் படம்? சீமான் இரண்டு வெவ்வேறு க்ளைமாக்ஸ்களைச் சொல்லியும் விஜய்க்கு திருப்தியில்லையாம். இப்போதைக்கு அதுபற்றி விஜய் பேச மறுக்கிறாராம்.

விஜய்யின் இந்த மவுனம் தொடர்ந்தால், கைவசம் தயாராக உள்ள 'கோபம்' படத்தினை தொடங்கிவிடுவார் சீமான். இதை ஏற்கெனவே அவர் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.