சுந்தர் சி படம் என்றாலே ஆடைக்கு விடை கொடுக்கும் அஞ்சலி!

இயக்குநர் சுந்தர் சியைவிட, நடிகர் சுந்தர் சியைத்தான் அஞ்சலிக்கு முதலில் தெரியும். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ஆயுதம் செய்வோம்.

அதுவரை குடும்ப குத்துவிளக்காக வந்து போன அஞ்சலி, இந்தப் படத்தில்தான் செம க்ளாமர் காட்டி நடித்தார்.

ஒரு காட்சியில் கண்ணாடி முன்னால் ஒட்டுத் துணி இல்லாமல் அவர் நிற்பதுபோலவும், அதை சுந்தர் சி பார்த்து மிரள்வது போலவும் காட்சி வைத்திருந்தார்கள்.

 

மோகன் பாபு தந்தை மரணம்: துக்கம் விசாரிக்க திருப்பதி சென்ற ரஜினி

Rajini Consoles Mohan Babu

திருப்பதி: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் தந்தை காலமானார். இதையடுத்து துக்கம் விசாரிக்க ரஜினிகாந்த் திருப்பதி சென்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நெருங்கிய நண்பர்கள். மோகன் பாபுவின் தந்தை ஸ்ரீ மஞ்சு நாராயணசாமி நாயுடு கடந்த திங்கட்கிழமை தனது 95வது வயதில் திருப்பதியில் காலமானார். இதையடுத்து ரஜினிகாந்த் நேற்று காலை திருப்பதி சென்று அங்குள்ள வித்யா நிகேத்தன் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் இருக்கும் மோகன் பாபு வீட்டுக்கு சென்றார்.

அங்கு தனது நண்பரை சந்தித்த ரஜினி அவரின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்தார். தனது நண்பருக்கு அவர் ஆறுதல் கூறினார். ரஜினி போன்று பல திரையுலக பிரபலங்களும் நேற்று மோகன் பாபுவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

'சம்பளம் சரியா கேட்டதில்ல.. சொன்ன நேரத்துக்கு ஷுட்டிங் போனதுமில்ல.. நீயும் அப்படி இருந்துடாதே!!'

கடல் பட நாயகனுக்கு முதல் படமே ஊத்திக் கொண்டதில் ஏக வருத்தம். ஆனால் அப்படி இருந்துவிட்டால் என்னாவது...

வருவதில் நல்லதைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் அட்வைஸ் செய்வதால், கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.

ஆனால் இப்படி கதை கேட்கும்போது, அப்பா நடிகர் குறுக்கே வருவதே இல்லையாம். தன் தலையீடு வருகிறவர்களை விரட்டியடித்துவிடும் என்பதைப் புரிந்தவர் அல்லவா...

ஆனால் கதை கேட்ட பிறகு, மகனிடம் அவர் தவறாமல் சொல்வது, என்னைப் போல மட்டும் இருந்துடாதே என்பதுதானாம்.

"நான் பீக்ல இருந்த காலத்துல இஷ்டத்துக்கும் இருந்துட்டேன். கூத்தடிச்சேன். இவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்காமல் நடிச்சேன். பலர் எனக்கு பாக்கி கொடுக்கவே இல்ல. நானும் என் இஷ்டத்துக்குதான் ஷூட்டிங் போவேன். ஒரு நாள் கூட சொன்ன டயமுக்கு போனதில்லை. நீயும் அப்படி இருந்துடாதே.. பார்த்து பிக்கப் பண்ணிக்கோ... பொண்ணுங்க விஷயத்துலயும் கேர்ஃபுல்லா இருந்துக்க," என்கிறாராம்.

ம்ம்.. தனக்குன்னு வரும்போதுதான் எல்லார் கஷ்டமும் புரியுது!!

 

பியா பாஜ்பாயுடன் பர்த்டே கொண்டாடிய டாப்ஸி தோழன் மகத்

Mahat Celebrates B Day With Piaa Bajpai

ஹைதராபாத்: மங்காத்தாவில் பார் உரிமையாளராக நடித்த மகத் ராகவேந்திரா இன்று தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அஜீத் குமார் நடித்த மங்காத்தா படத்தில் தாராவி பார் உரிமையாளராக நடித்தவர் மகத் ராகவேந்திரா. இந்த படத்திற்காக அவர் சிறந்த புதுமுக நடிகர் பிரிவில் எடிசன் விருது பெற்றார். டாப்ஸியுடன் கிசிகிசுக்கப்பட்டவர். டாப்ஸிக்காக அவரும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் அடித்துப் பிரண்டது கோலிவுட், டோலிவுட் முழுவதும் பரவியது.

இந்நிலையில் மகத் மதுரா ஸ்ரீதரின் பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மகத்துடன் பியா பாஜ்பாய், அர்ச்சனா கவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகத்திற்கு இன்று 26வது பிறந்தநாள். அவர் தனது பிறந்தநாளை இயக்குனர் மதுரா ஸ்ரீதர் மற்றும் பியாவுடன் நள்ளிரவில் கொண்டாடினார்.

 

மனபலம் இருந்தால் உடலில் நோய் வராது... நீயா நானாவில் நம்பிக்கை!

Neeya Naana Discussion About Health Conscious

"நேர்மறை எண்ணம் கொண்டவர்களை கொடிய விஷம் கூட கொல்ல முடியாது... எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது" என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இன்றைக்கு பலரும், இந்த டானிக் குடித்தால் ஆரோக்கியம் அதிகமாகும்... இந்த பானம் குடித்தால் உயரமாக வளரலாம்... என்று கூறப்படுவதை நம்பி வாங்கி உபயோகிக்கின்றனர்.

நோய்களுக்கு செலவு செய்தது போய் இன்றைக்கு நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்காக சந்தையில் விற்கும் பல பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றனர் இன்றைய மக்கள்.

மூளை வளர்ச்சிக்கு இதை குடிங்க... கொழுப்பை கரைக்க இதை சாப்பிடுங்க என்று சந்தையில் எத்தனையோ பொருட்கள் விற்பனையில் குவிந்து வருகின்றன. பிஎம்ஐ ரிப்போர்ட் பார்த்து உயரத்துக்கு ஏற்ற வெயிட் இல்லையே என்று யாராவது கூறினால் போதும் உடனே பதறிப்போய் எதையாவது செய்து உடம்பை கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஜிம் போவது தொடங்கி வீட்டையே ஜிம் ஆக மாற்றுவது என அதீத அக்கறை எடுத்துக்கொள்கின்றனர். இதுபோன்ற அதீத அக்கறை கூட சில சமயம் ஆபத்தை விளைவித்துவிடும்.

இதுபோன்று ஆரோக்கியத்தில் அதீத அக்கறை எடுத்துக்கொள்பவர்களும், வாழும் வரை வாழ்வோம் அதற்காக மெனக்கெட வேண்டாம் என்ற கருத்துடையவர்களும் விஜய் டிவியின் நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று விவாதித்தனர்.

ஏரோபிக்ஸ் டான்ஸ்

உடல் ஆரோக்கியத்திற்காக அரிசி சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன் என்று கூறினார் ஒருவர். பழங்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதாக கூறினார் மற்றொருவர். ஜிம் போவதாக சிலரும், ஏரோபிக்ஸ் நடனம் ஆடுவதாக ஒரு பெண்மணியும் கூறினர். சொன்னதோடு மட்டுமல்லாது நடனமாடியே காண்பித்தார் அந்த பெண்மணி.

ஆரோக்கிய உணவு

கொழுப்பில்லாத பால், தோல் இல்லாத கோழி, கைக் குத்தல் அரிசி, 6 உணவு எடுத்துக்கொள்வதாக கூறினார் ஒரு பெண். உணவுக்கு பதிலாக மாத்திரை சாப்பிடுவதாக கூறி அதிரவைத்தார் ஒரு இளைஞர். தொப்பை குறைய ஆயுர்வேத எண்ணெய் தடவிக்கொண்டு தோட்ட வேலை செய்வதாக கூறினார்.

இதெல்லாம் காமெடியா இருக்கே

ஆனால் இதுபோன்று ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் நடவடிக்கைகள் எல்லாம் காசுக்கு பிடித்த கேடுதான் எல்லாமே காமெடியாக இருக்கும் என்று கூறி நக்கலடித்தனர் மற்றொரு தரப்பினர்.

நிறைய நாள் இருக்கணும்னு ஆசை

வீட்டை விட்டு கிளம்பும் போதே டானிக், மருந்து என பத்திரமாக கிளம்புகின்றனர். இதற்குக் காரணம் நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசைதான் என்றனர். நோய் எதுவும் வரக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற ஆரோக்கியமான வழிமுறைகளை கடைபிடிப்பதாக வருவதாக பலரும் கூறினார்.

இதெல்லாம் மார்க்கெட்டிங்தான்

ஆனால் இதெல்லாம் தங்களின் வருமானத்தை பெருக்குவதற்காக செய்யப்படும் வியாபாரம்தான் என்றனர் எதிர் அணியினர். மனிதர்களை அச்சுறுத்தி, அவர்களை நோயாளிகளாக்குகின்றனர் என்று குற்றம் சாட்டினார் மருத்துவர் ஒருவர். குண்டானவர்களை ஒல்லியாக்கவும், கருப்பானவர்களை சிவப்பாக்கவும் இன்றைக்கு பல மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன.

ஊடகங்கள் மூலம் பாதிப்பு

குண்டாக இருந்தால் கொழுப்பு அதிகமாகிறது. எனவே நோய் வந்துவிடும் என்று கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுவது, ஊடகங்களில் தெரிவிக்கும் செய்திகளால்தான் இதுபோன்று அச்சப்படுவதாக தெரிவித்தனர். இன்டர்நெட்டில் எத்தனையோ இருக்கிறது அதைப் படித்து அவற்றை பின்பற்றுவதாக கூறினர் ஆரோக்கியத்தின் மீது அக்கறைக் கொண்டவர்கள்.

உணவில் இருக்கிறது மருந்து

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய டாக்டர் கீதா அசோக், நம்முடைய சமையலறையிலேயே பல பொருட்கள் இருக்கின்றன என்றார். மூங்கில் உணவுப் பொருட்கள் சத்தான உணவு என்றார். விளம்பரம் பார்த்து அவற்றை சாப்பிடவேண்டிய அவசியம் இல்லை என்றார். நடைமுறையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவே போதும் என்றார் அவர்.

உணவுக்கும் ஆயுளுக்கும் தொடர்பில்லை

எத்தனையோ பக்குவமாக சாப்பிட்டு பல உடற்பயிற்சி செய்து பாதுகாப்பாக இருக்கும் பலர் குறைந்த வயதிலேயே மரணத்தை தழுவியிருக்கின்றனர். அதேசமயம் உடற்பயிற்சி இன்றியோ, சரியான உணவுகள் இன்றியோ வாழும் பலரும் 80 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்வதாக கூறினார் மற்றொரு சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் அபிலாஷ்.

அழகுக்கு முக்கியத்துவம்...

முன்பெல்லாம் இளம்பெண்கள் நன்றாக குண்டாகவேண்டும் என்று சத்தான உணவுகளை கொடுத்து வந்தனர். ஆனால் இன்றைய இளம் பெண்கள் உடல் இளைக்க உணவுகளை தவிர்க்கின்றனர். இதனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மயக்கம் போட்டு விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றார்.

உடல் ஆரோக்கியம் என்பது மனதோடு தொடர்புடையது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற உண்மைக் கருத்தை கூறி நிறைவு செய்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்.

 

விஸ்வரூபம் மீதான தடையை இன்னும் நீக்காத மலேசியா: கவலையில் கமல் ரசிகர்கள்

Malaysia Yet Lift The Ban On Vishwaroopam

கோலாலம்பூர்: விஸ்வரூபம் படத்திற்கு எதிராக மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை.

விஸ்வரூபம் படம் கடந்த 25ம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில் அதில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து ஜனவரி 24ம் தேதி அன்று படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து பிற மாநிலங்களிலும், இலங்கையிலும் விஸ்வரூபத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் பிரச்சனை பேசித் தீர்க்கப்பட்ட பிறகு தமிழக அரசு தடையை நீக்கியது. இதையடுத்து கடந்த 7ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்கள் மற்றும் இலங்கையிலும் தடை நீக்கப்பட்டு படம் ரிலீஸானது.

ஆனால் படம் குறிப்பிட்டபடி ஜனவரி 25ம் தேதி மலேசியாவில் ரிலீஸானது. ரிலீஸான மறுநாளே படத்திற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இடைக்கால தடை விதித்தது. கடந்த மாதம் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கைகள் எழுந்தபோதிலும் இன்னும் தடை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மலேசியாவில் உள்ள கமல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

 

சுத்தத் தமிழ் தெரிந்த பெண் வேண்டும்! - நாக்க மூக்க இயக்குநரின் தேடல்

Pv Prasad S New Movie As Sagunthalavin Kadhalan

நாக்க மூக்க பாடலை ஏக பாப்புலராக்கிய படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தை இயக்கியவர் பிவி பிரசாத். காதலில் விழுந்தேன் படம் அவருக்கு பெரிய பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

அடுத்து இவர் இயக்கிய "எப்படி மனசுக்குள் வந்தாய்" படம், இயக்குநர் கிச்சாவுடன் சேர்த்து கோர்ட், கேஸ் என வேறு மாதிரி பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டது.

இப்போது பிரசாத் இயக்கி நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு "சகுந்தலாவின் காதலன்" என்று பெயர் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகுந்தலாவை தான் தேடிகொண்டிருக்கிறேன்..... சுத்தத் தமிழ் தெரிந்த பெண்தான் வேண்டும். நானே தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிப்பதால் பொறுப்புகள் அதிகம் என்பதால் தமிழ் தெரியாத பெண்ணை வைத்து கஷ்ட பட நேரம் இருக்காது," என்கிறார்.

காதலில் விழுந்தேன் படத்தில் "நாக்க முக்க", எப்படி மனசுக்குள் வந்தாய் படத்தில் "ஊராகாளி" என வித்தியாசமான் வார்த்தைகளை பாடல் வரிகளாக்கிய பிரசாத் சகுந்தலாவின் காதலன் படத்திற்காக புதிய வரிகளை தேடி கொண்டிருக்கிறார்!

 

'மிஸ்டர் விக்ரம்... 10 தோல்விப் படம் கொடுத்திருக்கீங்க.. உங்க வேலையைப் பாருங்க!' - சீறும் ராணா

Rana Vs Vikram War Words

தெலுங்கு நடிகர் ராணாவின் இந்திப் பட பிரவேசம் குறித்து கமெண்ட் அடிக்கப் போய் ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம்.

தென்னிந்திய நடிகர்களால் பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க முடிவதில்லையே.. ஏன்? டெல்லி பத்திரிகை ஒன்றின் இந்தக் கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில்தான் லடாய்க்குக் காரணம்.

இந்தியில் ராவண், டேவிட் என இரண்டு படங்களில் நடித்தார் விக்ரம். இரண்டும் அவுட். அதனால்தான் இந்தக் கேள்வி.

இதற்கு பதிலளித்த விக்ரம், "தென்னிந்தியாவில் எனக்கென்று பெரிய பெயர் இருக்கிறது. நல்ல சம்பளம். ஆனால் இங்கு முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவே இருக்கிற பெயரை விட்டுவிட்டு வரமுடியாது. ஹீரோயின்கள் கதை வேறு. அவர்களுக்கு நல்ல பப்ளிசிட்டி கொடுத்து, சரியான இடத்தில் சேர்த்து விடுகிறார்கள்," என்றவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. தேவையில்லாமல் ராணாவை வம்புக்கிழுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "இப்போ தெலுங்கு நடிகர் ராணாவைப் பாருங்க... தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் உடனே இந்திக்கு வந்துவிட்டார். இதனால் அவர் தெலுங்கில் தன் இடத்தை இழந்துவிட்டார். அவரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

என் நிலைமை அப்படியில்லை. நான் ரூ 145 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் படம் நடிக்கிறேன். அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு வர முடியாது. எனக்கு தென்னிந்திய படங்கள்தான் முக்கியம்," என்றார்.

ராணா காட்டம்

விக்ரமின் இந்தப் பேட்டி ராணாவை கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராணா, "டியர் மிஸ்டர் விக்ரம்... பத்திரிகைப் பேட்டிகளில் ஓரிரு இடங்களில் நீங்கள் என்னைப் பற்றி கமெண்ட் அடித்திருக்கிறீர்கள். இது தேவையற்றது. உங்கள் கேரியரில் மட்டுமே நீங்கள் அக்கறை காட்டினால் நல்லது. நான் நடிக்க வந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகின்றன. நீங்கள் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீப காலங்களில் மட்டுமே 10 பெரும் தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளீர்கள். எனவே உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். என் வேலையை நான் பார்க்கிறேன். இதனால் நான் உங்களை வெறுத்துவிடவில்லை. இப்போதும் உங்களின் சில படங்களுக்கு நான் தீவிர ரசிகன்," என்று திருப்பியடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் டி ராமாநாயுடுவின் பேரன்தான் இந்த ராணா.

சரீ.. ராணா மீது ஏன் விக்ரமுக்கு இத்தனை காட்டம்... த்ரிஷாவைக் கேட்டா தெரியுமோ!!!

 

மிஷ்கினின் முதல் சொந்தப் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!

Mysskin S First Home Production Oonyum Aattukkuttiyum

தன் லோன் வுல்ஃப் நிறுவனம் சார்பாக, தான் தயாரித்து இயக்கும் முதல் படத்துக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனத் தலைப்பிட்டுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

லோன் வுல்ஃப் என்ற பெயரில் மிஷ்கின் ஆரம்பித்திருக்கும் ஓநாய் நிறுவனம்... ஸாரி... தயாரிப்பு நிறுவனம் பற்றி சற்று முன் எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள்.

இந்த நிறுவனத்தின் சார்பில் தான் தயாரித்து இயக்கும் முதல் படத்துக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்று தலைப்பு வைத்திருக்கிறார் மிஷ்கின்.

இதற்கான டிசைனில் ஒரு ஒநாயும் அதன் நிழலில் ஒரு ஆட்டுக்குடியும் இடம்பெற்றுள்ளன.

படத்தின் ஹீரோ ஹீரோயின் உள்ளிட்ட மற்ற டெக்னீஷியன்கள் விவரம் எதுவும் வெளியிடவில்லை. இந்தப் படத்துக்காக நடிகர் ஸ்ரீகாந்த், வழக்கு எண் 18/9-ல் நடித்த ஹீரோ ஸ்ரீ உள்பட பலரையும் வரவழைத்து பேசி வருகிறார் மிஷ்கின்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்போது, மற்ற விவரங்களை அறிவிப்பதாகக் கூறியுள்ள மிஷ்கின், இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்கிறார்.

நல்லது!

 

இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம் - இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆவேசம்

Director Pugalenthi Thangaraj Blast Lankan Govt

சென்னை: ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும், கேட்போம் என்று மூத்த பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை...

ஈழ மண்ணில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக, வருகிற மார்ச் மாதம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கிறது இலங்கை.

சென்ற ஆண்டு இலங்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டித்துள்ள நிலையில், உலக அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில், குறுக்குவழிகளில் இலங்கையைக் காப்பாற்றும் எந்த முயற்சியிலும் இறங்கக்கூடாதென்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம். ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைக்க உள்ள தீர்மானத்தை நீர்த்துப் போகவைக்கும் வேலையிலும் இறங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இக்கட்டான நிலையிலும், இந்தியா தன்னைக் காப்பாற்றிவிடும் என்று இலங்கை நம்புகிறது. அந்த நம்பிக்கையால்தான், சுதந்திர - சர்வதேச விசாரணை தேவையில்லை என்று அடம்பிடிப்பதுடன், இனப்படுகொலைக்கு இணையான அனைத்து அடக்குமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தாய்த் தமிழகத்திலிருந்து, இலங்கையின் இனவெறிப்போக்குக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் அனைத்து அமைப்புகளையும்,தமிழக படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் சார்பில் பாராட்டுகிறோம். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து, எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் குரலை எதிரொலிக்கவே, நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்ச் சமூகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் படைப்பாளிகள் - கலைஞர்களுக்குக் கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர்ந்து, ஈழத்து உறவுகளுக்காக ஒருமித்த குரலில் பேசுகிறோம்.

தமிழ் ஈழ உறவுகளால் பெரிதும் போற்றப்பட்ட தமிழீழ கலை பண்பாட்டுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர் - உணர்ச்சிப் பாவலர் - புதுவை ரத்தினதுரை முதலானோரும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் தளபதிகளும் 2009 மார்ச் மாதம் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தனர். அவர்கள் சித்திரவதைக் கொடுமைகளுக்குத் தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின. சரணடைந்து 4 ஆண்டுகள் ஆனபிறகும், அவர்களது இருப்பு குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை இல்லை. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்கிற அச்சம் அதிகரித்து வருகிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்கிற விவரத்தை இலங்கை அரசு உடனடியாக வெளியிடவேண்டும்.

ஈழத்தமிழரின் தாயகப் பகுதிகளான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டது. போர் முடிந்துவிட்டதாக இலங்கை அறிவித்தபிறகும், அங்கிருந்து ராணுவம் வெளியேறவில்லை. தமிழர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், 6 தமிழருக்கு ஒரு சிங்களச் சிப்பாய் என்கிற அளவுக்கு ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

அளவுக்கதிகமான ராணுவ நடமாட்டத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை அச்சத்துடனேயே நகர்கிற நிலை. வடகிழக்கில் ராணுவக் குவிப்பு கூடாது என்று தமிழ்ச் சமூகம் மட்டுமின்றி சர்வதேசமும் கோருகிறது. இலங்கையோ, ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதாகச் சொல்லிக்கொண்டு, அதிகரித்துவருகிறது.

வடக்கில், புதிய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது இதை உறுதி செய்கிறது. வடக்கிலுள்ள மக்கள் ராணுவத்தினர் இருப்பதை விரும்புகின்றனர் - என்று ராணுவ அதிகாரிகள் கூறுவதிலிருந்து இலங்கையின் இரட்டை வேடம் அம்பலமாகியிருக்கிறது. தமிழரின் தாயகப் பகுதிகளான வடக்கு - கிழக்கிலிருந்து சிங்கள ராணுவம் மேலதிகத் தாமதமின்றி முற்றிலுமாகத் திரும்பப்பெறப்படவேண்டும். அதன்மூலம் தாயகப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ வழிவிடவேண்டும்.

விமானக் குண்டுவீச்சு முதலான கொடுமையான தாக்குதல்களால் தமிழர்களை விரட்டி அடித்த பிறகு, தமிழரின் தாய் மண்ணில் அவர்களுக்குச் சொந்தமான காணிகளை - நிலங்களை - ராணுவத்தினர் கையகப்படுத்தும் போக்கு தொடர்கிறது. அதனால் முள்வேலி முகாம்களிலிருந்து ஊர் திரும்பிய மக்கள், இருப்பதற்கும் விதைப்பதற்கும் கூட நிலமற்று நடுத்தெருவில் நிற்கிற நிலை. இதன்மூலம் அவர்களது வாழ்வாதாரம் முற்றுமுதலாகப் பறிக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக மீள் குடியேற்றம் நடைபெறவில்லை. இதுபோதாதென்று, தமிழரின் தாய்மண்ணிலேயே அவர்களைச் சிறுபான்மையினராக ஆக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழரின் மொழி அடையாளத்தை அழிக்கும் நோக்கில், தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களத்தில் மாற்றப்பட்டு வருகின்றன. தமிழரின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுகின்றன.

தமிழ்மக்களின் தனிப்பட்ட சொந்தக் காணிகள் அரசால் பறிமுதல் செய்யப்படுவதையும், தமிழரின் கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் கட்டாய சிங்கள - பௌத்த மயமாக்கலையும் கண்டிக்கிறோம். இந்த இழிவான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடும்படி வலியுறுத்துகிறோம்.

தமிழரின் தாயகப் பகுதிகளில், தமிழ்ச் சகோதரிகள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, முன்னாள் பெண் போராளிகள் என்று ராணுவத்தால் கருதப்படுவோர் கொடும் வன்முறைக்கு ஆளாகிவருகின்றனர். 'கற்பழிப்பை ஒரு ஆயுதமாகவே இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது' என்று கிரனெடாவின் கிமாலிபிலிப் முதலான பெண்ணியவாதிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் பிரிட்டனிலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பெண்அகதிகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் கொடுமை சர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. பெண் இனத்துக்கு எதிரான இலங்கை இனவெறி ராணுவத்தின் இந்த ஈவிரக்கமற்ற அரக்கத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

மாவீரர் தின நிகழ்ச்சியை அமைதியாக நடத்திய யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதும், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததும், ஆயுதப் போராட்டத்துக்கு மாணவர்களைத் தூண்டிய முந்தைய அரசுகளின் பாதையிலேயே ராஜபட்சே அரசு செல்வதைக் காட்டுகிறது. சட்டவிரோதக் கைதுகள், தடுப்புக் காவலில் உள்ளோர் மீதான சித்ரவதை போன்ற இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை இலங்கை இனவாத அரசு இனியாவது கைவிடவேண்டும்.

யாழ்.தினக்குரல், உதயன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளையும், உண்மையை எழுதும் ஆங்கிலப் பத்திரிகைகளையும் இலங்கை அரசு குறுக்குவழிகளில் மிரட்டி வருகிறது. பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையின் தமிழின அழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்தி வரும் ஸ்ரீதரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் மீது பொய்க் குற்றங்களைச் சுமத்தி அச்சுறுத்தி வருகிறது இலங்கை. ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

2009ல் இலங்கையில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை. நடந்த இனப்படுகொலை தொடர்பான சுதந்திரமான பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவை - என்கிற உலக நாடுகளின் கோரிக்கையை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அப்படியொரு நடுநிலையான விசாரணையைத் தவிர்ப்பதற்காகத்தான், கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் என்கிற பெயரில் தன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை தானே விசாரித்துக் கொள்வதாகப் போக்குக் காட்டி, 4 ஆண்டுகள் இழுத்தடித்திருக்கிறது இலங்கை.

நல்லிணக்க ஆணையத்தின் விசாரணை ஒரு மோசடி என்பதை இந்த வாரம் வெளியாகியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. உள்நாட்டு அதிகாரிகளின் விசாரணை தெளிவாகவோ நடுநிலையாகவோ நம்பகமானதாகவோ இல்லை - என்று குற்றஞ்சாட்டுகிறது அது. 'அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் - என்று வாக்குறுதி அளித்த இலங்கை, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை' என்கிறது அது. சுதந்திரமான ஊடகங்கள் மீதான தாக்குதல் தொடர்வதையும், சட்டத்துக்குப் புறம்பாக கைதிகள் கொல்லப்படுவதையும் அது கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

நடுநிலையான சர்வதேச விசாரணை தான் தேவை - என்று வலியுறுத்துகிறது அந்த அறிக்கை. அதையே, தமிழகப் படைப்பாளிகளும் கலைஞர்களும் வலியுறுத்துகிறோம். இலங்கையின் கோரமுகத்தை துணிவுடன் அம்பலப்படுத்தும் மனித உரிமைகள் ஆணையாளரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

இனப்படுகொலையைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தடுக்கத் தவறினார்களா, அல்லது தெரிந்தே உதவினார்களா என்கிற கேள்வி வலுவடைந்து வருகிறது. இனப்படுகொலையில் ஐ.நா.வுக்கும் பங்கிருக்கிறது - என்கிற இந்தக் குற்றச்சாட்டு சர்வதேசத்தின் மனசாட்சியையும் தட்டி எழுப்பி இருக்கிறது. தவறிழைத்த ஐ.நா.வின் உயர் பதவிகளில் இருப்போர் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால்தான் இதுபற்றிய உண்மை வெளியாகும்.

இலங்கையில் தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழவேண்டும், அதே சமயம் அதிகாரப் பகிர்வு எதையும் தமிழர் எதிர்பார்க்கக் கூடாது என்று போதிக்கிறது இலங்கை. கொல்லப்பட்டோர் வாழ முடியுமா கொலைகாரருடன் - என்று திருப்பிக் கேட்கிறது தமிழ்ச் சமூகம்.

உலக நாடுகளின் மேற்பார்வையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களிடமும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ்ச் சொந்தங்களிடையேயும் 'தனித் தமிழ் ஈழம்' தொடர்பான ஒரு பொது வாக்கெடுப்பு காலத்தின் தேவை ஆகிறது. அதற்கான முயற்சிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படவேண்டும்.

இனவெறி இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஜெனிவா மாநாட்டில் அமெரிக்காவும் அதை வலியுறுத்தப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆணவப் போக்குடனேயே நடந்துகொள்ளும் இலங்கையை வழிக்குக் கொண்டுவர, பொருளாதாரத் தடை விதிப்பது அவசியம் என்று கருதுகிறோம். உலக நாடுகளுக்கு வழிகாட்டும் விதத்தில், இலங்கைக்கு இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க தமிழக அரசு முழுமூச்சோடு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார் தங்கராஜ்.

 

தன்னிடம் பேசுபவர்களை 'அண்ணா' என்று அழைக்கும் அமலா பால்

Amala Paul Calls Everyone Anna

சென்னை: நடிகை அமலா பால் தன்னிடம் பேசுபவர்களை அண்ணா என்று அழைக்கிறாராம்.

ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் மற்றும் விஜயுடன் தலைவா ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இது தவிர அவர் தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்பும் அவர் ஹைதராபாத்தில் வீடு தேடி வருகிறாராம்.

அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து அவர்கள் பிரிந்துவிட்ட கதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சரி பிற இடங்களிலும் சரி தன்னிடம் வந்து பேசுபவர்களை அண்ணா என்று அழைக்க ஆரம்பித்துள்ளாராம். அண்ணா என்று கூறினால் பாதுகாப்பு என்று நினைக்கிறார் போன்று.

அமலா பால் அழகாக இருக்கிறாரே கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வருவோம் என்று சென்றால் அவர் உங்களையும் அண்ணா என்று தான் அழைப்பார்.

 

நரியோ.. ஓநாயோ.. மேல விழுந்து பிடுங்காம போனா சரிதான்!!

Mysskin S Production House Lone Wolf

தலைப்பைப் பார்த்து ஏதோ நாம் திட்டுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தன்னைத் தானே மிஷ்கின் வர்ணித்துக் கொண்டது இப்படித்தான். அதுமட்டுமல்ல... தான் புதிதாகத் தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இந்தப் பெயரைத்தான் சூட்டியுள்ளார்.

முகமூடி படத்துக்குப் பிறகு தான் இயக்கும் படத்துக்காக எந்தத் தயாரிப்பாளரையும் தேடிப் போகாத மிஷ்கின், தானே அதைத் தயாரிக்க முடிவு செய்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். நிறுவனத்தின் பெயர் லோன் வுல்ஃப்... அதாவது தனியான ஓநாய்!

ஏன் இந்தப் பெயர்...?

"அது என்னமோ... என்னை மிகவும் கவர்ந்த மிருகம் ஓநாய். அதன் குணங்கள் வித்தியாசமானவை. சுவாரஸ்யமானவை. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாக திரியும், கூட்டமாகவே வேட்டையாடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் சில ஓநாய்கள் மட்டும் எந்த கூட்டத்துடனும் சேராமல் தன்னந்தனியே கம்பீரமாக வாழும். அவற்றைத்தான் 'லோன் வுல்ஃப்' என்று சொல்வார்கள். அதன் குணமும், வாழ்க்கை முறையும் எனக்குப் பிடிக்கும் என்பதால் அந்தப் பெயரை என் நிறுவனத்துக்கு வைத்துள்ளேன்.

எனது அடுத்த படத்தை என் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். நல்ல தரமான படங்கள் என் நிறுவனத்தில் இருந்து வரும். திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்," என்றார்.

நரியோ ஓநாயோ.. மேலே விழுந்து பிடுங்காமல் நல்லவிதமாய்க் கடந்து போனாலே போதுமப்பா!!

 

ஹீரோயினைத் துரத்திய இளைஞர்கள்... கைகலப்பு, போலீஸ் கேஸ்.. நள்ளிரவில் பரபரப்பு!

Youths Molested Heroine Near Vgp   

சென்னை: கண்டனம் படத்தின் ஹீரோயின் நடிகை ஜீட்டா மரியாவை சில இளைஞர்கள் நள்ளிரவில் துரத்தினர். நடிகை பயந்துபோய் ஹோட்டல் அறைக்குள் நுழைய, இளைஞர்கள் அறையை முற்றுகையிட்டனர். இதனால் ஹோட்டல் சிப்பந்தியுடன் கைகலப்பு ஏற்பட்டு, போலீஸார் தலையிட்டு வழக்குப் பதிவு செய்தனர்.

கண்டனம் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மூன்று ஹீரோயின்களில் ஒருவர் ஜீட்டா மரியா.

நேற்று கவர்ச்சியாக உடையணிந்து சில காட்சிகளில் நடித்தார். பின்னர் அதே உடையுடன் தான் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு வெளியே நின்றிருந்தார்.

அந்த ரிசார்ட்டில் நடந்த மதுவிருந்துக்கு வந்திருந்த சில இளைஞர்கள் ஜீட்டா மரியாவைப் பார்த்து, ஆபாசமாக கிண்டலடித்தார்களாம். அவரை நெருங்கி வந்து சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

உடனே ஜீட்டா மரியா அங்கிருந்து ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாராம். ஆனால் நடிகையைப் பார்த்த வெறியிலிருந்த இளைஞர்கள், அந்த அறையை முற்றுகையிட்டனர். ஜீட்டா வெளியில் வந்து தங்களுடன் ஜாலியாக இருந்தால்தான் போவோம் என்று சத்தம் போட்டார்களாம்.

இதனால் பயந்து போன ஜீட்டா, தான் நடிக்கும் படத்தின் ஹீரோக்களில் ஒருவரான விஷாலை உதவிக்கு அழைத்துள்ளார். பக்கத்து அறை ஒன்றிலிருந்து அந்த ஹீரோ, ஹோட்டல் சிப்பந்தியை அழைத்துக் கொண்டு ஹீரோயின் அறைக்கு வந்துள்ளார். நடிகை கதவைத் திறந்ததும் ஹீரோவை முந்திக் கொண்டு இளைஞர்கள் பாய, அதைத் தடுக்க சிப்பந்தி முயல, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ஈஞ்சம்பாக்கம் போலீசார், இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

 

ஷாலோம் ஸ்டுடியோஸிலிருந்து வெளியேறினார் பிரபு சாலமன்... 'இனி டைரக்ஷன் மட்டுமே!!'

Prabhu Solomon Parts Ways With Production House

இயக்கம், படத் தயாரிப்பு என இரட்டைக் குதிரைச் சவாரி இனி வேண்டாம்... படங்களை இயக்குவதோடு நிறுத்திக் கொள்ளப் போகிறேன் என்று அறிவித்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன்.

சொன்னதோடு நிற்காமல், இதுவரை தான் பங்கு வகித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திலிருந்து விலகிவந்துவிட்டார். இனி தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்றும், ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்வார் என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தன் நண்பர் ஜான் மேக்ஸுடன் இணைந்து தொடங்கினார் பிரபு சாலமன்.

அந்த நிறுவனம் மூலம்தான் மைனாவை இயக்கினார். அடுத்து சாட்டை படத்தை இயக்கினார். இப்போது தயாரிப்பு வேண்டாம்... இயக்கம் மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வந்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபு சாலமன் கூறுகையில், "ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கஷ்டமாக உள்ளது. அதனால்தான் ஷாலோம் ஸ்டுடியோவிலிருந்து விலகிவிட்டேன். இனி ஜான் மேக்ஸ் மட்டுமே அந்த நிறுவனத்தில் இருப்பார். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடவிருக்கிறேன்," என்றார்.