யார் சிறந்த நடிகை? அனுஷ்காவா... தீக்ஷாவா? - விக்ரம் சொன்ன பதில்!


தெய்வத் திருமகளில் அனுஷ்காவோடு நடிச்சீங்க... ராஜபாட்டையில் தீக்ஷா சேத்துடன் நடிக்கிறீங்கள்... இவங்க ரெண்டு பேர்ல யார் டாப்?

எடுத்த எடுப்பில் இப்படியொரு கேள்வியை நிருபர்கள் கேட்க கொஞ்சம் ஆடித்தான் போனார் விக்ரம், ராஜபாட்டை பத்திரிகையாளர் சந்திப்பில்.

ஆனாலும் அவரது பதிலில் அநியாயத்துக்கு யதார்த்தம் வழிந்தது.

"நிச்சயமா அனுஷ்காதான் பெஸ்ட். காரணம், அனுஷ்காவோட நடிப்புத் திறமை நிரூபிக்கப்பட்ட ஒன்று. தீக்ஷா இப்போதான் நடிக்க வந்திருக்காங்க. அழகில் அனுஷ்காவுக்கு இணையா தீபிகா இருக்கலாம். ஆனால் நடிப்பில் அனுஷ்காதான் டாப்.

வேணும்னா இன்னும் சில படங்கள் தீக்ஷாவோட நடிச்ச பிறகு அவங்க நடிப்புத் திறமை பத்தி சொல்றேன்," என்று விக்ரம் கூற, கைதட்டி அதை ஏற்றுக்கொண்டார் பக்கத்திலமர்ந்திருந்த தீக்ஷா சேத்.

ராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறுகையில், "ஒரு பக்கம் பிதாமகன், தெய்வத் திருமகள் மாதிரி படங்களில் நடிச்சாலும், தில், துள், சாமி மாதிரி முழு கமர்ஷியல் படத்தில் நடிக்கணும்னு எனக்கு நிறைய ஆசை.

ஆனால் அது வெறும் கமர்ஷியல் மசாலாவா இல்லாமல் நல்ல கதையோடும் இருந்தால்தான் மக்களிடம் மரியாதையான வரவேற்பிருக்கும். அந்த மாதிரி ஒரு கதைக்காக காத்திருந்த போதுதான் சுசீந்திரன் வந்து இந்த கதையை சொன்னார்.

அவருடைய முந்தைய படங்களையெல்லாம் பார்த்தவர்கள் இந்த படத்தை பார்த்தால் இது சுசீந்திரன் படம்தானா என்பதை நம்பவே மாட்டார்கள். அவருக்குள் அப்படியொரு கமர்ஷியல் டைரக்டர் இருக்கிறார்," என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, "அஞ்சு பாட்டு, நாலு பைட்னு படத்தின் பெரும்பகுதியை டான்ஸ் மாஸ்டரும், பைட் மாஸ்டரும் பிரிச்சிக்கிட்டாங்க. நான் அவங்க வேலையை மேற்பார்வை பார்த்தேன் என்பதுதான் சரி. ஆனால் இந்தப் படம் வெறும் கமர்ஷியல் எல்லைக் கோட்டை தாண்டி, பேச வைக்கும்," என்றார்.

பிவிபி சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.

இந்தப் படத்தில் பணியாற்றிய இனிய அனுபவம் காரணமாக, மீண்டும் சுசீந்திரனுக்கே கால்ஷீட் தந்துள்ளார் விக்ரம்!
 

பூர்ணாவின் நூதன கலெக்ஷன்!


நடிகை பூர்ணா, நயன்தாரா, நடிகர் நெப்போலியனுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன தெரியுமா? வித்தியாசமான ஆல்பம் தயாரிப்பதில் இந்த மூவருக்கும் இடையே ஒற்றுமை உள்ளது.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். நடிகர் நந்தாவுடன் வேலூர் மாவட்டம், பார்த்திபனுடன் வித்தகன் என்று ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் இப்போது இவரை அதிகம் காண முடிவதில்லை. அதேசமயம் தெலுங்குப் பக்கம் இப்போது தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் பூர்ணா. அதன் விளைவாக கையில் ஒரு படம் வந்திருக்கிறதாம். தெலுங்கில் கவர்ச்சிதான் பிரதானம் என்பதால் அதற்கும் பூர்ணா பூரண சம்மதத்துடன் காத்திருக்கிறாராம்.

சரி பூர்ணாவுக்கும், நயன்தாரா, நெப்போலியனுக்கும் உள்ள ஒற்றுமைக்கு வருவோம். பூர்ணா தன்னைப் பற்றி நல்லபடியாக வரும் செய்திகளை, அதில் உள்ள போட்டோகளை வெட்டி எடுத்து தனி ஆல்பம் தயாரி்தது வருகிறார்.

தன்னைப் பாராட்டி, ஆரோக்கியமான முறையில் விமர்சித்து வரும் செய்திகள், அதனுடன் இணைந்த புகைப்படங்கள் என எந்தப் பத்திரிக்கையில் வந்தாலும் விட மாட்டாராம். உடனே கட் அன்ட் பேஸ்ட்தான்.

நடிகர் நெப்போலியன், நடிகை நயன்தாராவிடமும் இப்படிப்பட்ட ஆல்பம் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்த நியூஸையும் பூர்ணா கட் பண்ணி ஒட்டிடுவார்னு நம்புவோம்...
 

ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!


இளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் தோஸ்த். பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் தல வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதே போல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.

அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவு பாராட்டுகின்றனர்.

மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத் குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப் போய் விடுகிறாராம்.

பாசக்கார புள்ளைகளப்பா...!
 

அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் காயம்: விரல் எலும்பு முறிவு


போல் பச்சன் படத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இம்முறை இடது கை மோதிர விரலில் உள்ள எழும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் நடித்து வரும் 'போல் பச்சன்' . கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் வலது கண்ணுக்கு அருகில் 6 தையல் போடப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை இடது கை மோதிர விரலில் உள்ள எழும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் கிரிக்கெட் ஆடினர். அப்போது பந்து அபிஷேக்கின் முகத்திற்கு நேராக வந்தது. முகத்தில் அடிபடாமல் இருக்க கையை வைத்து முகத்தை மறைத்தார். வேகமாக வந்த பந்து அபிஷேக்கின் விரலை பதம்பார்த்துவிட்டது.

இது குறித்து அபிஷேக் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

ஆமாம். நீங்கள் கேட்ட செய்தி உண்மை தான். என் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. என் அப்பாவுக்கு விலா எழும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதல்லவா. அது தான் அவருக்கு கம்பெனி கொடுக்க எனது விரல் எழும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தன் அடிபட்ட விரலின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
 

ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!


இளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் தோஸ்த். பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் தல வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதே போல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.

அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவு பாராட்டுகின்றனர்.

மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத் குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப் போய் விடுகிறாராம்.

பாசக்கார புள்ளைகளப்பா...!
 

அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் காயம்: விரல் எலும்பு முறிவு


போல் பச்சன் படத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இம்முறை இடது கை மோதிர விரலில் உள்ள எழும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் நடித்து வரும் 'போல் பச்சன்' . கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் வலது கண்ணுக்கு அருகில் 6 தையல் போடப்பட்டது. தற்போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை இடது கை மோதிர விரலில் உள்ள எழும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் கிரிக்கெட் ஆடினர். அப்போது பந்து அபிஷேக்கின் முகத்திற்கு நேராக வந்தது. முகத்தில் அடிபடாமல் இருக்க கையை வைத்து முகத்தை மறைத்தார். வேகமாக வந்த பந்து அபிஷேக்கின் விரலை பதம்பார்த்துவிட்டது.

இது குறித்து அபிஷேக் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,

ஆமாம். நீங்கள் கேட்ட செய்தி உண்மை தான். என் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. என் அப்பாவுக்கு விலா எழும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதல்லவா. அது தான் அவருக்கு கம்பெனி கொடுக்க எனது விரல் எழும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தன் அடிபட்ட விரலின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
 

கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ் விருது!


ரிட்ஸ் இதழின் சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களுக்கு 'ஐகான் 2011' விருது வழங்கப்பட்டது.

சென்னையிலிருந்து வெளிவரும் ரிட்ஸ் ஆங்கிலப் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான திரைத்துறை சாதனையாளர்களில், சிறந்த இயக்குநருக்கான விருது மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் படங்களின் இயக்குநர் ஏஎல் விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை ரிட்ஸ் சார்பில் டேவிட் தெய்வ சகாயம் வழங்கினார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய் பேசுகையில், "மதராசப் பட்டினம் படத்துக்காக தேசிய விருது கிடைக்கவில்லையே என்று பலரும் என்னிடம் வருத்தப்பட்டனர். எனக்கு அந்த வருத்தமில்லை. இயக்குநர் பாலச்சந்தர் வாயால் சிறந்த படம் என்ற பாராட்டை அந்தப் படம் பெற்றுவிட்டது. அவர் இருக்கும் இந்த மேடையில் நான் கவுரவிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த இன்னுமொரு சிறப்பு," என்றார்.

அடுத்து நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருதினை இயக்குநர் அமீர் வழங்கினார்.

'எவர்கீன் ஐகான்' விருது இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து பின்னர் இயக்குநர்களான வசந்த், சரண், தாமிரா, நடிகை சுஹாசினி ஆகியோர் இந்த விருதினை அவருக்கு வழங்கினர்.

விழாவுக்கு வந்த விருந்தினர்களை மக்கள் தொடர்பாளர் நிகில் வரவேற்றார்.
 

2 மணி நேரம் நிருபர்களைக் காக்க வைத்த பாரிஸ் ஹில்டன்!


மும்பை: நடிகை பாரிஸ் ஹில்டனுக்காக மும்பை நிருபர்கள் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து கடுப்பானார்கள். கடைசி நேரத்தில் அவர் வேறு உடை மாற்ற விரும்பியதே இந்த தாமதத்துக்குக் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.

பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். ஆடம்பர கைப்பைகள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனங்களை பிரபலப்படுத்துவதற்காக அவர் வந்திருந்தார்.

இதனையொட்டி, மும்பை ஜேடபிள்யூ மாரியட் ஹோட்டல் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாலை 3 மணிக்கு பிரஸ் மீட் என்று அறிவித்திருந்ததால் முன்கூட்டியே ஏராளமான நிருபர்கள் குவிந்துவிட்டனர்.

ஆனால் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகத்தான் வந்தார் பாரிஸ் ஹில்டன். பொறுமையிழந்த நிருபர்கள் சத்தம் போட ஆரம்பிக்க, அவர்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் ஏற்பாட்டாளர்கள்.

ஒருவழியாக மாலை 5 மணி்க்கு மேல் வந்தார் ஹில்டன். பிரஸ்மீட்டுக்கு முதலில் ஒரு உடையமணிந்து கிளம்பிய ஹில்டன், பாதி வழியில் வந்ததும், அதைவிட சிறப்பாக வேறொரு உடையை அணிய விரும்பினாராம்.

எனவே மீண்டும் தனக்குப் பிடித்த வெகு கவர்ச்சியான உடையை அணிந்து வந்தார். தாமதத்துக்கு ஒரு சாரி சொன்ன பாரிஸ் ஹில்டன், எடுத்த எடுப்பில் இந்தியா மற்றும் இந்தியப் பெண்களின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்டு, கேள்விக் கணைகளோடு காத்திருந்த நிருபர்களை கூல் பண்ணிவிட்டார்!

அதென்ன பாரிஸ் ஹில்டன்... நீங்கள் பிரெஞ்சுக்காரரா என்று ஒரு நிருபர் அதிமுக்கிய கேள்வி ஒன்றை கேட்க, ஹில்டன் சிரித்தபடி, "பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை.

எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா," என்றார்.

இந்தியர்களின் கோபத்தைச் சமாளிக்கும் கலை பாரிஸ் ஹில்டன் போன்றவர்களுக்கு நன்றாகவே கைவருகிறது!
 

'ரா ஒன்னை விட ராணாதான் இப்போ முக்கியம்!'


ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ரஜினி ஒரு காட்சியில் நடிப்பார் என்ற செய்தி காட்டுத் தீ போல பரவி வருகிறது கடந்த சில தினங்களாக.

இந்த செய்தியை ஷாரூக்கான் தரப்பே கூறுவதால், முன்னணிப் பத்திரிகைகள் அனைத்தும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரஜினி ரா ஒன்னில் நடிப்பார் என்பது உறுதியான தகவல் இல்லை என ரஜினி தரப்பில் கூறத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய, பெயர் வெளியிட விரும்பாத, ரஜினிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "ரஜினியின் வாழ்காகை வரலாற்றை கதையாக எடுக்கப் போவதாக பாலிவுட்டில் செய்தி பரப்பப்பட்ட மாதிரிதான் இந்த ரா ஒன் மேட்டரும்.

ரஜினி இப்போது முழுமையாக குணமடைந்து, தனது ராணா பட வேலைகளுக்காக தன்னை தயார்ப்படுத்தி வருகிறார். படத்தில் நடிப்பதற்கான சிறு ஒத்திகைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

ஆனால் அவர் ரா ஒன்னில் நடிப்பது சாத்தியமற்றது. ரா ஒன்னை விட ராணாதான் இப்போது முக்கியம்," என்றார்.

ரா ஒன் தீபாவளிக்கு வெளியாகிறது. இதில் ரஜினி குறிப்பிட்ட அந்த காட்சியில் நடிக்காவிட்டால், அவரைப் போல ஒருவருக்கு மேக்கப் போட்டு நடிக்க வைத்து காட்சியை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

எப்படியோ... பிஸினஸ் முக்கியமாச்சே!
 

சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த சோனா!


தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்த சோனா, அந்தப் பிரச்சினையில் தன்னை சமரசம் செய்ய வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையை வீடியோவில் பதிவு செய்து போலீசில் கொடுத்துள்ளார்.

அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தின் வெற்றிக்காக தி.நகரில் உள்ள நடிகர் வைபவின் வீட்டில் மது விருந்து நடை பெற்றது. இதில் நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி, வைபவ், பின்னணி பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த மது விருந்தின் போது, எஸ்.பி.பி. சரண், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் நடிகை சோனா பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசில் புகார் அளித்த அவர், 2 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் முறையிட்டார். எஸ்.பி.பி. சரண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரத்தையும் கமிஷனர் திரிபாதியிடம் சோனா ஒப்படைத்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் நடிகை சோனா, பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்றார். எஸ்.பி.பி. சரணுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்ஸ் பெக்டர் அழகுவிடம் அவர் ஒப்படைத்தார். வீடியோ ஆதாரம் தொடர்பாக சுமார் 30 நிமிடத்துக்குமேல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எங்கு வைத்து அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரத்தை சோனா போலீசாரிடம் விளக்கி கூறினார்.

சோனா கொடுத்த வீடியோ ஆதாரத்தை போலீசார் போட்டு பார்த்தனர். அதில் சோனாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்த வீடியோ ஆதாரத்தால்இயக்குநர் வெங்கட் பிரபு சோனாவிடம், சரணை மன்னித்து சமரசடமாக போகும்படி கூறுவது போன்ற காட்சிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தை நடைபெற்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் கேமராவை பொறுத்தி இந்த காட்சிகளை சோனா பதிவு செய்துள்ளார். இதனை அவர் போலீசிலும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து எஸ்.பி.பி. சரண், வெங்கட் பிரபு ஆகியோரிடமும் விசாரிக்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.
 

சோனா ஆர்ப்பாட்ட அறிவிப்பு எதிரொலி: எஸ்பி பாலசுப்பிரமணியன் வீட்டுமுன் போலீஸ் குவிப்பு


சென்னை:நடிகை சோனா மற்றும் அவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதால், அதிகபட்ச போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோனா வற்புறுத்தி வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயங்கி வருகிறார். ஆனால் தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலம் சமரச பேச்சு நடத்தி வருகிறார்.

இவருக்காக அவரது அப்பா எஸ்பி பாலசுப்ரமணியமே சோனாவிடம் தூது போனதும் நடந்தது.

சரண் மன்னிப்பு கேட்காததால், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் சோனா ஒப்படைத்துள்ளார்.

இதற்கிடையில் சோனாவுக்கு ஆதரவாக பெண்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதிக்கின்றனர். எஸ்.பி.பி. சரண் வீட்டில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மகளிர் அமைப்புகள் அறிவித்தன.

எஸ்.பி.பி. சரண் வீடு மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கு பெண்கள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சரண் வீட்டின் முன்னால் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.

பெண்கள் அமைப்பினர் முற்றுகை போராட்டத்துக்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. அனுமதிக்கு இப்போதுதான் மனு கொடுத்துள்ளதாகவும், போராட்டத்தை இரண்டொரு நாட்களுக்கு தள்ளி வைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளர். இந்தப் போராட்டம் பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு ஒரு சரியான பாடமாக இருக்கும் வகையில் நடத்தப்படும் என்று பெண்கள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

டைம்ஸ் இதழின் புகழ் பெற்ற 25 சிறந்த விளையாட்டுப் பட வரிசையில் லகான்


டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகப் புகழ் பெற்ற 25 சிறந்த விளையாட்டுப் படங்களின் வரிசையில் இந்தியாவின் லகானும் இடம் பெற்றுள்ளது. ஆமிர்கானின் நடிப்பில் உருவான இப்படம், கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொண்டு சிறந்த வெளிநாட்டுப் பட வரிசையில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி படைத்து சாதனை படைத்ததாகும்.

உலகப் புகழ் பெற்ற விளயாட்டை மையமாகக் கொண்ட 25 படங்களை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் லகானுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. 2001ல் வெளியான படம் லகான். ஆமிர்கான் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஆசுதோஷ் கோவரிகர் இயக்கியிருந்தார். இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் கதை நடப்பது போல படமாக்கியிருந்தனர்.

வெள்ளைக்காரர்களுக்கும், ஒரு சாதாரண கிராமத்து இளைஞர்களுக்கும் இடையிலான போட்டியே இப்படத்தின் கதைக்களமாகும்.

இந்தப் படம் குறித்து வெகுவாக புகழாரம் சூட்டியுள்ளது டைம்ஸ். படத்தின் கதையைப் பாராட்டியுள்ள டைம்ஸ், படத்தின் இசையமைப்பாளரா ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் விசேஷமான பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இந்தப் படப் பட்டியலில் 1998ல் வெளியான தி பிக் லெபோவ்ஸ்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாடி அன்ட் சோல், பிரேக்கிங் அவே, புல் டுர்ஹாம், கேடிஷேக் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.