சென்னை: அரசியல் கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை மீண்டும் படங்களில் மும்முரமாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
உயரமான இயக்குனரை திருமணம் செய்த நடிகை பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து பிரச்சார பீரங்கியானார். கட்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டார். இந்நிலையில் தான் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக நினைத்த அவர் அந்த கட்சியில் இருந்து விலகினார்.
இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்த அவர் தற்போது கட்சி பணிகள் இல்லாமல் உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவும், அத்துடன் சேர்ந்து சின்னத்திரையிலும் முழுமூச்சில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளாராம்.
நடிகை அந்த கட்சியில் இருந்து விலகியதும் அவர் தன் பெயரைப் போன்றே பூ உள்ள கட்சியில் சேரப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தான் எந்த கட்சியிலும் சேருவதாக இல்லை என்று நடிகை தெரிவித்தார்.
இதையடுத்து அவர் அந்த தேசிய கட்சியில் சேரப்போவதாக எழுந்த பேச்சு அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.