கவர்ச்சி நடிப்பை தமிழிலும் தொடர்வேன் - தமன்னா

தமிழில் கவர்ச்சி என்றால் கொஞ்சம் முகத்தைச் சுழித்துக் கொண்டும், தெலுங்கு - இந்திக்கு தாராளமயம் என்றும் ஓரவஞ்சனை செய்து வந்த தமன்னா, இப்போது தன் போக்கை மாற்றிக் கொண்டாராம்.

தமிழிலும் இனி கவர்ச்சி நடிப்பைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. சூர்யா, விஜய் என முன்னணி ஹீரோக்கள் அவருடன் ஜோடி போட விரும்பினர்.

ஆனால் சுறா, சிறுத்தைக்குப் பிறகு அவர் திடீரென்று காணாமல் போனார்.

கவர்ச்சி நடிப்பை தமிழிலும் தொடர்வேன் - தமன்னா  

தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள அவர், வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தி, தெலுங்கில் படுகவர்ச்சியாக நடிப்பது போல, தமிழிலும் கவரச்சி வேடங்களுக்கு தயார் என அறிவித்துள்ளார் தமன்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என ஒருபோதும் கூறவில்லை. தமிழில் எனக்கு வந்ததெல்லாம் குடும்பப் பாங்கான வேடங்கள்தான்.

கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் என் அழகை, கவர்ச்சியை ரசிக்க விரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை," என்றார்.

 

புல்லுக்கட்டு முத்தம்மா பட நாயகி பிரபல மலையாள நடிகர் மீது கமிஷனரிடம் புகார்!

சென்னை: சமீபத்தில் வெளியான புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படத்தின் நாயகியாக நடித்த மினு குரியன் பிரபல மலையாள நடிகர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளார்.

நடிகை மினு குரியன், சென்னை நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் வசிக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம், நேரில் நேரில் கொடுத்த புகார் மனு:

எனது கார் டிரைவர் என்னை ஏமாற்றி, ரூ.6 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டார். தற்போது அந்த கார் டிரைவர், பிரபல மலையாள நடிகர் ஒருவரிடம் வேலைபார்க்கிறார்.

புல்லுக்கட்டு முத்தம்மா பட நாயகி பிரபல மலையாள நடிகர் மீது கமிஷனரிடம் புகார்!

பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, அந்த நடிகர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உடனடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்பேடு போலீசாரும், உடனடி விசாரணையை தொடங்கி விட்டனர்.

மினு குரியன் பேட்டி:

மனு கொடுத்து விட்டு வெளியில் வந்த நடிகை மினு குரியன், நிருபர்களிடம் கூறுகையில், "நான் மலையாளத்தில் 16 படங்களிலும், தமிழில் 4 படங்களிலும் நடித்துள்ளேன். என்னிடம் கார் டிரைவராக இருந்த எனது ஊர்க்காரர் இப்போது, பிரபல மலையாள நடிகரிடம் வேலைபார்க்கிறார். நான் அவருக்கு ரூ.6 லட்சம் பணம் கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

அவருக்கு ஆதரவாக, என்னுடன் மலையாள படத்தில் நடித்துள்ள, பிரபல நடிகர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார். என்னை விபசார வழக்கில் மாட்டி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை கடத்திச்சென்று விடுவோம் என்றும் பயமுறுத்துகிறார்கள்.

ரூ.6 லட்சத்தை திருப்பி தர முடியாது என்றும் சொல்கிறார்கள்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், எனது புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்," என்றார்.

 

த்ரிஷாவின் கோபத்தைக் கிளப்பிய விக்ரம்!

"த்ரிஷாவா... இல்ல, இந்தப் படத்துக்கு வேணாம்... இன்னும் நாளானாலும் ஹன்சிகாவுக்காக காத்திருக்கிறேன்" - விக்ரமின் இந்த ஸ்டேட்மென்ட்டைக் கேட்டு கடும் கோபத்தில் உள்ளாராம் த்ரிஷா.

ஒரு நேரத்தில் விக்ரமின் ஆஸ்தான நாயகி எனும் அளவுக்கு தொடர்ந்து படங்கள் செய்தனர். சாமி, பீமா படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். தனிப்பட்ட முறையிலும் இருவரும் நெருக்கமாக இருந்தனர்.

இப்போது த்ரிஷாவுக்கு கிட்டத்தட்ட புதிய பட வாய்ப்புகளே இல்லாத நிலை. தெலுங்கில் புதிய படங்களில் அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.

த்ரிஷாவின் கோபத்தைக் கிளப்பிய விக்ரம்!

இந்த நிலையில் முன்பு தனக்கு நெருக்கமாக இருந்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அடுத்து தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிதரிஷாஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷா வேண்டாம் என விக்ரம் கூறிவிட்டாராம்.

இந்த படம் மூலம் தமிழ்பட உலகில் மேலும் வலுவாக காலூன்றலாம் என்றும் நம்பி இருந்த த்ரிஷாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாகிவட்டதாம்.

விக்ரமுடன் நான் இருந்த இருப்பென்ன.. எங்கள் நட்பென்ன... அத்தனையையும் மறந்து ஹன்சிகா வேண்டும் எனக் கேட்கிறாரே.. இதுதான் நட்புக்கு அழகா என போனில் பொரிந்து தள்ளிவிட்டாராம் த்ரிஷா.

போதாக்குறைக்கு த்ரிஷாவின் அம்மாவும் விக்ரமை போனில் பிடித்து பொரிந்து தள்ளினாராம்.

 

‘மகாபாரதம்’ அனிமேஷன் படம்: திரௌபதிக்கு குரல் கொடுக்கும் வித்யாபாலன்

மும்பை: நடிகை வித்யாபாலன் அனிமேஷனில் தயாராகும் மகாபாரதத்தில் திரௌபதி கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசிகிறாராம்.

மகாபாரதக் கதையை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் பிரமாண்டமாக அனிமேஷன் படமாக தயாரித்து வருகிறார் ஜெயந்திலால் கடா.

தமிழ்ப்பெண்ணான வித்யாபாலன் ஹிந்தி படங்களில் நடித்ததின் மூலம் வெற்றி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரது குரல் திரௌபதி குரலுக்கு சரியாக பொருந்தும் என எண்ணிய படக்குழுவினர் இது குறித்து வித்யாபாலனிடம் தெரிவிக்க, அவரும் ஓகே சொல்லி விட்டாராம்.

‘மகாபாரதம்’ அனிமேஷன் படம்: திரௌபதிக்கு குரல் கொடுக்கும் வித்யாபாலன்

இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்திலால் கடா கூறுகையில், ‘வித்யாபாலனின் குரலை விட வேறு குரல் எதுவும் திரௌபதி குரலுக்கு மிகச் சரியாக பொருந்தி வரும் என நாங்கள் எண்ணவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அனிமேஷன் மகாபாரதப் படத்தில், பீஷ்மருக்கு அமிதாப்பும், பீமனுக்கு சன்னி தியோலும், அர்ஜூனன் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவகனும், கர்ணனுக்கு அனில் கபூரும், யதீஷ்டருக்கு மனோஜ் பாஜ்பாயும் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளிக்கு இப்படம் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

அஜீத்தின் ஆரம்பம்... பேட்ச் ஒர்க்கும் முடிந்தது... அக்டோபர் 31-ல் ரிலீஸ்!

அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்தின் பேட்ச் ஒர்க் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பூசணிக்காய் உடைத்து, படம் முழுமையடைந்ததை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

அடுத்து இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்புவது மட்டுமே பாக்கி.

ஏஎம் ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆரம்பம். படத்தின் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் ஆரம்பம்... பேட்ச் ஒர்க்கும் முடிந்தது... அக்டோபர் 31-ல் ரிலீஸ்!

மங்காத்தா ஸ்டைலில் தலைக்கு வெள்ளையடிக்காமல், நரைத்த தாடியுடன் நடித்துள்ளார் அஜீத்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முன்பே முடிந்துவிட்டாலும், சில பேட்ச் ஒர்க் பாக்கியிருந்தது.

அதற்கான காட்சிகளை மீண்டும் மும்பை சென்று படமாக்கினார் விஷ்ணுவர்தன்.

இப்போது படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து, பூசணிக்காயும் உடைக்கப்பட்டுவிட்டது.

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசைப் பணியில் மும்முரமாக உள்ளார். அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் முதல் பிரதி தயாராகிவிடும் என்றும், அக்டோபர் 21-ம் தேதி படத்தை சென்சாருக்கு அனுப்பிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் 31 அல்லது நவம்பர் 1-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்றுமுதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா - 16 படங்கள் திரையிடல்!

இன்றுமுதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா - 16 படங்கள் திரையிடல்!

சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று சென்னையில் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 4-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் மொத்தம் 16 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

அமெரிக்கா, ஆஸ்ட்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லாட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் இந்நிகழ்ச்சியில் திரையிடப்படுகின்றன.

குறும்படங்கள், ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன.

தினமும் பகல் 12 மணிக்கும் மதியம் 3 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 3 காட்சிகளாக படங்கள் திரையிடப்படுகின்றன. 16 படங்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் திரையிடப்படுகின்றன.

இந்த16 படங்களில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

செவன்த் சேனல் கம்யூனிகேஷனும் தமிழ் திரைப்பட அகடமியும் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

சர்வதேச திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி சோவியத் கலாசார மையத்தில் இன்று நடந்தது. மாணிக்கம் நாராயணன் தலைமை தாங்கினார். இயக்குநர் வெற்றி மாறன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

 

இந்த நடிகைக்கு புரணி பேசுவது அவ்ளோ பிடிக்குமாம்!

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு பிற நடிகர், நடிகைகள் பற்றி புரணி பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவரது நாத்தனாரும், நடிகையுமான சோஹா அலி கான் தெரிவித்துள்ளார்.

இந்த நடிகைக்கு புரணி பேசுவது அவ்ளோ பிடிக்குமாம்!

இது குறித்து சோஹா கூறுகையில்,

கரீனா பெரிய நடிகையாக இருந்தாலும் தலைக்கனம் இல்லாதவர். எனக்கு கரீனா மீது மிகவும் மரியாதை உள்ளது. நானும் கரீனாவும் சேர்ந்தால் பிறரைப் பற்றி, படிப்பிடிப்புக்கு வெளியே நடப்பது பற்றி நிறைய புரணி பேசுவோம். நாங்கள் எப்பொழுதுமே புரணி பேசுவோம். ஆனால் என்ன பேசுவோம் என்பதை கூற மாட்டேன் என்றார்.

கரீனா கபூர் சைஃப் அலி கானை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அனிருத் இசை உங்களுக்குப் பறக்கும் உணர்வைத் தரும் - செல்வராகவன்

அனிருத் இசை உங்களுக்குப் பறக்கும் உணர்வைத் தரும் - செல்வராகவன்

இரண்டாம் உலகம் படத்துக்கு அனிருத் அமைக்கும் இசை உங்களுக்குப் பறக்கும் உணர்வைத் தரும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

தீபாவளி ஸ்பெஷலாக வரும் இரண்டாம் உலகம் படத்துக்கு முதலில் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்தார். செல்வராகவனுடன் அவர் இணைந்த முதல் படம் இது.

ஆடியோ ரிலீஸ் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், திடீரென்று படத்தின் இசையமைப்புப் பணிகளிலிருந்து கழன்று கொண்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இதையொட்டி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதில் இருந்து திடீரென பின்வாங்கி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

தற்போது ஹாரிஸுக்கு பதில் அனிருத் பின்னணி இசையை கவனிக்கிறார்.

இப்படத்தின் பின்னணி இசையை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் வைத்து அமைக்க, இயக்குனர் செல்வராகவனும் அனிருத்தும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு பேன்டஸி உலகில் நடக்கும் கதை என்பதால், வித்தியாசமாக பின்னணி இசை தரும் முயற்சியில் உள்ளாராம் அனிருத்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "இனிய நண்பர்களுக்கு புடாபெஸ்டில் அனிருத்தை கொண்டு இரண்டாம் உலகம் பின்னணி இசை அமைப்பில் ஈடுபட்டு உள்ளேன். இந்தப் படத்தின் ஒ்வ்வொரு காட்சியிலும் அவரது இசை ரசிகர்களைப் பறக்க வைப்பது போல இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

 

பிரபுதேவா ஒரு ரவுடி, மசாலா கிங்: ஷாஹித் கபூர்

பிரபுதேவா ஒரு ரவுடி, மசாலா கிங்: ஷாஹித் கபூர்

மும்பை: இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா ஒரு ரவுடி, மசாலா கிங் என்று பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் மசாலா படங்கள் எடுப்பதில் வல்லவராக உள்ளார் பிரபுதேவா. அங்கு பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் எல்லாம் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஷாஹித் கபூர் பிரபுதேவா இயக்கியுள்ள ஆர்...ராஜ்குமார் படத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து ஷாஹித் கூறுகையில்,

நான் பிரபுதேவாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த கௌரவம். அவர் ஒரு ரவுடி மற்றும் மசாலா கிங். நான் பிரபுதேவா கூறியதை தான் செய்தேன். படத்தில் அதிகம் ஆக்ஷன் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நல்ல அனுபவமாக இருந்தது.

நான் சிறந்த டான்சர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடியபோது தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் என்றார்.

ஆர்...ராஜ்குமார் படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார்.

 

பெண் டிரைவர்களின் டாக்சிகளில் மட்டுமே பயணிக்கும் ஆமீர் கான்

பெண் டிரைவர்களின் டாக்சிகளில் மட்டுமே பயணிக்கும் ஆமீர் கான்

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் எப்பொழுது டெல்லி சென்றாலும் அங்கு பெண்கள் ஓட்டும் டாக்சிகளில் தான் பயணம் செய்வாராம்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சத்யமேவ ஜெயதே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துகிறரார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் டெல்லியில் டாக்சி ஓட்டும் பெண் டிரைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் டாக்சி ஓட்டி தான் தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆமீர் கான் எப்பொழுது டெல்லி சென்றாலும் அந்த பெண்களின் டாக்சியில் தான் பயணம் செய்கிறாராம்.

மேலும் கடந்த ஆண்டு வெளியான தனது படமான தலாஷின் விளம்பர நிகழ்ச்சிக்காக டெல்லி சென்ற ஆமீர் தன் சக நடிகையான ராணி முகர்ஜியையும் அந்த டாக்சியில் பயணம் செய்ய வைத்துள்ளார்.

 

ஹாலிவுட்காரங்க என் கதையைச் சுட்டுட்டாங்க - ஒரு உதவி இயக்குநரின் அடேங்கப்பா கம்ப்ளெயின்ட்!

பொதுவாக எந்த தமிழ் சினிமாவைப் பார்த்தாலும் அது ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி அல்லது கொரிய-ஈரானிய-ஸ்பானிஷ் படங்களின் சுட்ட காப்பி என்று துவைத்து தொங்கப் போடுவது சமீபத்திய ட்ரெண்ட்.

ஆனால் முதல் முறையாக, தன் கதையை காப்பியடித்து ஒரு மெகா பட்ஜெட் ஹாலிவுட் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு தமிழ் சினிமா உதவி இயக்குநர் புகார் கூறியுள்ளார்.

ஹாலிவுட்காரங்க என் கதையைச் சுட்டுட்டாங்க - ஒரு உதவி இயக்குநரின் அடேங்கப்பா கம்ப்ளெயின்ட்!

அது மட்டுமல்ல, இது தொடர்பாக காப்புரிமைச் சங்கம், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என சட்ட ரீதியான போருக்கும் அவர் தயாராகி வருகிறார்.

அவர் பெயர் பரஞ்சோதி. தேவகோட்டையைச் சேர்ந்த 35 வயது உதவி இயக்குநர். தெனாவட்டு என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், சில குறும்படங்களையும் எடுத்துள்ளார்.

இவர் தன் கதையைக் காப்பியடித்து எடுத்ததாகக் குற்றம்சாட்டும் ஹாலிவுட் படம் கிரேவிட்டி. 80 மில்லியன் டாலர் செலவில் படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் விரைவில் வெளியாகப் போகிறது.

2007-ல் இந்தக் கதையை ஆஸ்திரேலியாவில் ஹாலிவுட் படங்களை விநியோகிக்கும் பீட்டர் ஆல்வின் என்பவரிடம் சென்னையில் வைத்துச் சொன்னாராம். இதற்கு இங்குள்ள ஒரு நண்பர் உதவி செய்தாராம்.

பரஞ்சோதி சொன்ன கதை ரொம்பப் பிடித்துப் போனதால், முழு ஸ்கிரிப்டையும் கொடுக்குமாறு கேட்டாராம் பீட்டர் ஆல்வின். அவரிடம் முழு ஸ்ரிப்டையும் கொடுக்கும்போதே, எச்சரிக்கையாக இந்திய காப்புரிமை அமைப்பிடமும், மேற்கு அமெரிக்காவின் ரைட்டர்ஸ் கில்டிலும் பதிவு செய்துள்ளார் பரஞ்சோதி.

ஹாலிவுட்காரங்க என் கதையைச் சுட்டுட்டாங்க - ஒரு உதவி இயக்குநரின் அடேங்கப்பா கம்ப்ளெயின்ட்!

இப்போது கிரேவிட்டி படத்தின் கதையும் தன் கதையும் ஒரே மாதிரியானவை என்பது தெரிய வந்ததும் தன் நண்பர் மூலம் பீட்டர் ஆல்வினைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் நண்பர் இவரது போனை எடுக்காமல் தவிர்த்தாராம். பேஸ்புக்கிலும் இவரை ப்ளாக் செய்து விட்டாராம்.

பீட்டர் ஆல்வின் இவரது தொடர்பு எல்லைக்கு உள்ளேயே வரவில்லையாம். எனவேதான் நீதிமன்றக் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார் பரஞ்சோதி.

சரி.. என்னதான் கதை?

60000 உயரத்தில் பறக்கும் ஒரு செயற்கைக் கோளுக்கு உதவ வரும் ஒரு போயிங் 777 விமானம் சிக்கலுக்குள்ளாகிறது. அதை மையப்படுத்தி பரஞ்சோதி ஸ்க்ரிப்ட் செய்துள்ளார்.

கிரேவிட்டி கதையில், போயிங் விமானமில்லை... மாறாக அது செயற்கைக் கோள் என மாற்றப்பட்டுள்ளதாம். மற்றபடி சீன் பை சீன் அது என் கதைதான் என்கிறார் பரஞ்சோதி.