டேட்டிங் கலாச்சார விபரீதங்களைச் சொல்லும் “இது சாருவோட டேட்டிங்”!

movie making on dating tamilmovie ithu charuvoda dating
Close
 
மேலை நாடுகளின் மூலம் நம் நாட்டில் எவ்வளவோ சமூக - பொருளாதாரத் தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்றுதான் டேட்டிங் எனப்படுவது. அவர்களது நாடுகளில் வேண்டுமானால் அது இயல்பாக சகஜமாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டு பண்பாட்டுக் கலாச்சார சூழலுக்கு இது முற்றிலும் முரணானதாக பார்க்கப்படுகிறது.

இந்த டேட்டிங் சீர்கேடுகளை மையப்படுத்தி "இது சாருவோட டேட்டிங்" என்கிற படம் உருவாகி வருகிறது. நந்து சினி ஆர்ட்ஸ் சார்பாக இப்படத்தைத் தயாரிப்பதுடன் கதை-திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் திருச்சி ஜி.செல்லத்துரை.

இப்படத்தில் கதாநாயகனாக கேரளாவைச் சேர்ந்த மாடலிங் இளைஞர் கிரிஷ் அறிமுகமாகிறார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருப்பவர். கதாநாயகியாக ஸ்வப்னா அறிமுகமாகிறார். பெங்காலிப் பெண்ணான இவர் குஜாரத் மொழிப்படமொன்றில் நடித்திருக்கிறார்.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி எம் குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாவனா ஸ்ரீ, ரேகா, சசி ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.நாகராஜன். படம் பற்றி இயக்குனர் நாகராஜன் கூறுகையில், "டேட்டிங் நம் நாட்டுக்குத் தேவையில்லாதது மட்டுமல்ல நம் கலாச்சாரத்துக்கு எதிரானது. ஆனால் இன்று படித்து விட்டு ஐடியில் பணிபுரிவர்கள் மத்தியில் இந்த டேட்டிங் ஒரு நோய் போல பரவிவிட்டது.

இந்தப் படத்தில் நாயகனும் நாயகியும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். டேட்டிங்குக்கு விருப்பமில்லாத நாயகியைச் சம்மதிக்க வைத்து வாரக் கடைசி நாளில் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்கிறான் நாயகன்.

அங்கு இருவரும் ஒரு சமூக விரோதக் கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ஒரு நாள் காலையில் தொடங்கி மறு நாள் காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாகும். எனவே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

டேட்டிங் என்பது நம் கலாச்சாரத்தில் இல்லை. எனவே நம் மொழியிலும் அதற்கான வார்த்தை இல்லை. எனவே படத்தின் தலைப்பை டேட்டிங் என்கிற அந்நிய வார்த்தையையே பயன்படுத்த வேண்டியதாயிற்று.

இன்று டேட்டிங் அதிகம் பரவி வருவதால் குற்றம் செய்பவர்களும் அதிகமாகியிருக்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் ஆபத்துகள் என்ன என்பதைச் சொல்லும் இப்படம் இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் எச்சரிக்கைப் பாடமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் எஸ் நாகராஜன்.

சென்னை, பாண்டிச்சேரி, சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது.

எம்.ஜெயமுரசு வின் பாடல்களுக்கு இசையமைக்கிறார் சி. ஜார்ஜ்.

 

சட்டம் ஒரு இருட்டறை... ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்!

Vijay Visits Sattam Oru Iruttarai Shooting

சென்னை: சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷூட்டிங்கில் திடீரென்று வருகை தந்து, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் விஜய்.

எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்தப் படத்தை பல ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.

இந்தப் படத்தை எஸ்தெல் மூவீஸ் என்ற பேனரில் தானே தயாரிக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.

சினேகா பிரிட்டோ இயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்னை தரமணியில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது, திடீரென வந்து நின்று இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் விஜய்.

அவரைப் பார்த்ததும் ஷூட்டிங் ஸ்தம்பித்து நிற்க, "ஏன் எல்லாரும் என்னைப் பார்த்து அப்படியே நிக்கிறீங்க... ஷுட்டிங் நடக்கட்டும்" என்றவர், இயக்குநரை அழைத்து அடுத்த ஷாட் என்ன... எடுங்க என்றார்.

நிமிர்ந்து நில், துணிந்து செல்... என்று ஆரம்பிக்கும் பாடலைப் படமாக்கினார்கள். அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம், மற்றும் நடன அமைப்பைப் பார்த்த விஜய் இயக்குநருக்கும், நடன இயக்குநருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இந்தப் பாடலுக்கு அமைக்கப்பட்ட செட்டைப் பார்த்த விஜய், என்ன இது செட் மாதிரி தெரியலியே என்று கேட்க, அப்படி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி அமைத்துள்ளோம் என இயக்குநர் விளக்கினார்.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக லேசர் ஒளியைப் பயன்படுத்தி இந்த நடனக் காட்சியை எடுக்கிறார்களாம்.

படத்தின் ஹீரோவாக தருண்குமார் நடிக்கிறார். நாயகியாக பிந்து மாதவியும், சிறப்புத் தோற்றத்தில் ரீமா சென்னும் நடிக்கின்றனர்.

 

மீண்டும் மனைவியுடன் இணைகிறார் பிரபுதேவா?

Prabhu Deva Rejoin With His Wife

சென்னை: விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்ட தன் மனைவி ரம்லத்துடன் மீண்டும் இணைய முடிவெடுத்திருக்கிறார் பிரபுதேவா என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா கடந்த வருடம் ஜூலை மாதம் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வீடுகள், சொத்துக்களை எழுதி வைத்து செட்டில் செய்தார். பின்னர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளத் தயாரானார். மும்பையில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.

நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்து மதத்துக்கும் மாறினார். ஆனால் திடீரென அவர்கள் திருமணம் நின்றது. காதலும் முறிந்தது.

பிரபு தேவா நம்பிக்கை துரோகம் செய்ததாக நயன்தாரா குற்றம்சாட்டினார்.

நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்திப் படங்களை இயக்கி வந்தார். ஆனாலும் பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி சென்னைக்கு வந்துவிடுகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் மனைவி ரம்லத்தை சந்தித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. ரம்லத்தையும், குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்து சென்று சில தினங்கள் தன்னோடு வைத்துக் கொண்டு பிறகு சென்னை அனுப்பி வைத்துள்ளார். பழைய கசப்புகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்களாம்.

விவாகரத்துக்குப் பிறகு, பிள்ளைகளை மனைவியுடனே விட்டு வைத்திருந்தார் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

 

இசையமைப்பாளர்கள் 'வாய்'ப்பை நன்றாகத்தான் பயன்படுத்துகிறார்கள் - பார்த்திபன் கிண்டல்

Parthiban Commented On Anirudh Andrea Liplock

சென்னை: இன்றைய இயக்குநர்கள் 'வாய்'ப்பை நன்றாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என மறைமுகமாக இசையமைப்பாளர் அனிருத் - ஆன்ட்ரியா லிப் டு லிப் முத்தத்தை கிண்டலடித்தார் நடிகர் / இயக்குநர் பார்த்திபன்.

சென்னை நந்தம்பாக்கத்தில் விக்ரம் நடித்த ‘தாண்டவம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பார்த்திபன், "‘தாண்டவம்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 25 படங்களுக்கு அவர் இசையமைத்து விட்டார்.

இசையமைப்பாளர்களுக்கு இன்றைய தினம் நிறைய ‘வாய்'ப்புகள் கிடைக்கின்றன. ‘வாய்'க்குள்ளே மைக் வைத்து பாடுகிறார்கள். இன்னும் சிலர் வேறு விஷயங்களுக்கும் வாயை பயன்படுத்துகின்றனர். ‘வாய்'...ப்பை நல்லாவே பயன்படுத்துகின்றனர்," என்றார்.

பார்த்திபன் பேச்சு அரங்கை கலகலக்க வைத்தது. விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த வாய் யாருடையதுன்னு நல்லா தெரியும் என ரசிகர்கள் சவுண்ட் விட்டனர்.

விழாவுக்கு தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வந்திருந்தார். கிட்டத்தட்ட படத்தின் இன்னொரு ஹீரோ அவர். அவர் பேசுகையில், "எனக்கு சென்னை முக்கியமான இடம். இங்குதான் பிறந்தேன். பள்ளி படிப்பையும், காலேஜ் படிப்பையும் முடித்தேன். கட் அடிச்சி பிட் அடிச்சி பாஸ் பண்ணினேன். இங்குதான் இட்லி சாம்பார் சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

விக்ரமுடம், ‘தாண்டவம்' படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்ரம் பெரிய நடிகர், நல்ல மனிதர். துளியும் அவரிடம் பந்தா இல்லை," என்றார்.

விழாவுக்கு ஏராளமான விக்ரம் ரசிகர்கள் வந்திருந்தனர். விக்ரமைப் பார்க்கும்போதெல்லாம் ஏகத்துக்கும் விசிலடித்து உற்சாகம் காட்டினர்.

விழாவில் ‘தாண்டவம்' பாடல் சி.டி.யை இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி வெளியிட இயக்குனர்கள் பி.வாசு, ஏஎல் விஜய், வெற்றிமாறன், ராஜா, கருணாகரன், மிஸ்கின், சிம்புதேவன், காந்திகிருஷ்ணா, புஷ்கர் காயத்ரி, விஜி, எல்ரெட் குமார், சங்கர் தயாள் பெற்றுக்கொண்டனர்.

கார்த்தி, நடிகை எமி, நாசர், பரத், இயக்குநர் பிரியதர்ஷன், எடிட்டர் மோகன், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய்கபூர், கே.இ. ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரபு, யு டி.வி. தனஞ்செயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

என் செல்போனிலிருந்து யாரோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்! - ஆன்ட்ரியாவை கிஸ்ஸடித்த அனிருத் பேட்டி

Anirudh Speaks On His Lip Lock Photo Leak

சென்னை: ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார்.

இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.

நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.

 

கோச்சடையானில் ரஜினியுடன் எனக்கு காட்சிகள் இல்லை - ஷோபனா

No Scenes With Rajini Kochadaiyaan   

கொச்சி: கோச்சடையானில் நான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். ஆனால் ரஜினியுடன் இணைந்து காட்சிகள் இல்லை, என்று நடிகை ஷோபனா கூறினார்.

கொச்சியில் விளம்பர நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஷோபனா, நிருபர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

கோச்சடையானில் ரஜினியுடன் நடித்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஷோபனா, "கோச்சடையானில் நான் ஒரு கெஸ்ட் ரோல்தான் செய்கிறேன். எனக்கு ரஜினியோடு இணைந்த மாதிரி காட்சிகள் இல்லை.." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "என்னைப் பொருத்தவரை ரஜினி சார் முதல், மிக முக்கியமான ஹீரோ. எங்கள் இருவருக்குமான உறவை தளபதியிலிருந்து கோச்சடையான் வரை என்றெல்லாம் ஒப்பிட்டுப் பேச விரும்பவில்லை. அதையெல்லாம் தாண்டியது...", என்றார்.

 

பேஸ்புக் மூலம் கொலையை கண்டுபிடிக்கலாம்!

Zee Tamil Tv Crime Patrol Serial

இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைத்தளங்கள் இளைஞர்களுக்கிடையே அவசியமான தொடர்பு தளங்களாக இருக்கின்றன. இதுவே பல்வேறு குற்றங்களுக்கும், குற்றங்களை துப்புத்துலக்கவும் காரணிகளாக இருக்கின்றன.

காதலிக்காக, நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த கொலை செய்த குற்றவாளியை காட்டிக்கொடுத்து அவனை உலகறியச் செய்தது பேஸ்புக்தான். இதனை ஜீ தமிழின் ‘க்ரைம் பேட்ரல்' நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பினார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகர் அனுப் சோனி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, குற்ற சம்பவங்களையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் புலன் விசாரணைகளையும் திகிலுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.

கொடூர குற்றச் செயல்கள் மற்றும் அதிர வைக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை விவரிக்கும் இந்த க்ரைம் தொடர் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதையும் மீறி ஆங்காங்கே குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு குற்றமும் ஒரு சிக்னலை கொடுக்கும் அதை கண்டறிந்து தடுக்க முயற்சி செய்தால் கொலையையும், குற்றங்களையும் எளிதாக தடுத்து விடலாம் என்பதையே இந்த நிகழ்ச்சி உணர்த்தியது.

இந்தி தொடரை டப்பிங் செய்திருப்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. மற்றபடி அழுகை தொடர்களையும், கத்தல் காட்சிகளையும் பார்த்து சலித்துப்போனவர்களுக்கு இது சுவாரஸ்யமான க்ரைம் தொடர்.

 

பலவித சமையல்: மக்கள் டிவியின் ருசியான நிகழ்ச்சி

Makkal Tv Cookery Show Schedule Tim

சமையலில் விதம் விதமாக செய்து ருசியை கூட்டலாம். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியே பல விதங்களை கொண்டது. அவசர சமையல், பாரம்பரிய சமையல், சுவைப்பயணம், இனிப்புக்காரம், என விதம் விதமான சமையல் நிகழ்ச்சிகள் பிற்பகலில் ஒளிபரப்பாகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகள் கடந்த வாரம் முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

இன்றைக்கு எல்லாமே அவசரமாக விட்டது. பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகவும் மாறிவிட்டது. அத்தகைய ரசிகர்களை கவருவதற்காக எளிதான அதேசமயம் சத்தான சமையலை அவசர சமையல் நிகழ்ச்சியில் செய்து காட்டுகின்றார் சமையல் வல்லுனர் ரமேஷ் கணபதி. சித்ரா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியானது திங்கள் அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

உணவில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்தால் தான் நாம் சமைக்கும் உணவானது சமச்சீரான உணவாகிறது. பண்டைய தமிழர்களின் சிறந்த உணவு வகைகளை நமக்கு எடுத்துக்கூறி சமைத்துக் காட்டுகிறார்கள் சித்த மருத்துவர்கள் கிருபாகரன் மற்றும் செந்தில் கருணாகரன். அனைவரையும் கவர்ந்த பாரம்பரிய சமையல் நிகழ்ச்சி செவ்வாய் தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஆர்த்தி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும் பொருட்களின் மகத்துவத்தையும், அது தீர்க்கும் நோய்கள் பற்றியும் விளக்கிக் கூறுகிறார்.

சமையல் என்றால் ஒரு அறையில் விதவிதமான உணவு வகைகளை செய்து காட்டுவது வழக்கம். ஆனால் இது ஒரு பயணத்தின் இடையே மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி எனலாம். தமிழகத்தை சுற்றி வலம் வரும் இந்த சுவைப்பயணம் புதன் கிழமையன்று அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை சக்கரவர்த்தி தொகுத்து வழங்குகிறார்.

நேயர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் சமையல் திறமையை உலகறியச்செய்யும் நிகழ்ச்சி இனிப்புக் காரம். தெரிந்த புது வகையான இனிப்புக் கார வகைகளை சமைத்து ருசித்து வரும் நிகழ்ச்சி இது. வாரந்தோறும் வெள்ளி அன்று மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

'என்ன பண்றது... பீல்டுல நிக்கணுமே.. அதனால்தான் அரை நிர்வாணம்!' - நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!!

Shriya S Open Statement On Her Half Nude   

சென்னை: போட்டியைச் சமாளிக்கவும், தொடர்ந்து சினிமாவில் நிலைக்கவுமே அரை நிர்வாண போஸ் கொடுக்க வேண்டி வந்தது, என்று நடிகை ஸ்ரேயா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

மேக்சிம் இதழுக்காக நடிகை ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி இருக்கும் இந்த புகைப்படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த போட்டோ ஷூட் என்றும் ஸ்ரேயா கூறியிருந்தார்.

நடிகை ஸ்ரேயாவிடம், 'திடீரென இப்படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கக் காரணம் என்ன' என்று கேட்டபோது, "வேறு வழியில்லை... இன்றைக்கு சினிமாவில் உள்ள போட்டியை எதிர்கொள்ள, தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வேண்டுமானால் இந்த அளவுக்கு இறங்கித்தான் ஆகவேண்டும். தவறில்லை. எனக்குள்ளே இருக்கும் `கிளாமர்' என்ன என்பதை காட்டவே இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன்.

அந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் முறை புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பின்னர் எனக்கு எத்தனையோ படவாய்ப்புகள் வந்தன. பாலிவுட்டில் கூட பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

இந்த இரண்டாவது புகைப்பட ஷூட் எனக்கு மேலும் புதிய படவாய்ப்புகளை கொடுக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனக்கு 30 வயதாகிறது. ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில்தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைவிட நான் சிறியவள் தான். எனவே இன்னும் பல ஆண்டுகள் நடிப்பேன்,'' என்றார்.

 

மானாட மயிலாட 7... மலேசியா மச்சான்களை பார்க்க வரும் நமீதா!

Maanada Mayilada Mm7 Final Live Malesia

மானாட மயிலாட நிகழ்ச்சிக்காக மலேசியா செல்ல இருக்கிறார் நமீதா. மலேசியா மச்சான்களை பார்க்க வர்றேன் எல்லோரும் ரெடியா இருங்க என்று இங்கிருந்தே பறக்கும் முத்தத்தின் மூலம் தூது அனுப்பி வருகிறார்.

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் இரவு ஒளிபரப்பாகும் மானாட மயிலாட சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிகள் மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் பங்கேற்றுக்கும் நடனபோட்டியாளர்கள் தவிர சின்னத்திரை நடனக்கலைஞர்களும் நடனமாட உள்ளனர். பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வெளிநாடுவாழ் தமிழ் ரசிகர்களின் வரவேற்பினை அடுத்து முதல் முறையாக துபாயில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது "மானாட மயிலாட'' நிகழ்ச்சியின் பாகம் 7-ன் இறுதிப் போட்டி, செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு விலை மதிப்பற்ற பல பரிசுகள் காத்திருக்கின்றன. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுடன், நிகழ்ச்சியின் இயக்குனர் கலா மாஸ்டர், நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.

 

சேட்டையில் மதன் கார்க்கியின் 100 வது பாடல்

Madhan Karky Writes His 100th Song

சென்னை: இளம் கவிஞரான மதன் கார்க்கி 100 வது பாடலை எழுதுகிறார், சேட்டை படத்தில்.

கவிஞர் வைரமுத்துவின் மகன்தான் மதன் கார்க்கி. 2009ம் ஆண்டு வெளியான 'கண்டேன் காதலை' திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ஓடோடி போறேன் என்ற பாடல்தான் இவர் முதலில் எழுதியது.

அதனைத்தொடர்ந்து எந்திரனில் இவர் எழுதிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சூப்பர் டூப்பர் ஹிட் ஆன பாடல்கள் அவை. குறிப்பாக இரும்பிலே ஒரு இருதயம்.. பாட்டு.

தொடர்ந்து கோ, நான் ஈ உள்ளிட்ட படங்களில் வெற்றிப் பாடல்களை தந்துள்ள கார்க்கி இன்று வேகமாக வளரும் கவிஞர்களில் முதன்மையாக உள்ளார்.

இப்போது சேட்டை திரைப்படத்தில் தன்னுடைய 100வது பாடலை எழுதியுள்ளார்.

முகமூடி, துப்பாக்கி, மாற்றான், நிமிர்ந்து நில், ஐ என இவர் பாடல் எழுதிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

 

கொடுத்த வாக்கை காப்பாத்திட்டார் தல - விஷ்ணுவர்தனின் மகிழ்ச்சி

Ajith Keeps His Promise Vishnuvardhan

ஒரு பதினைந்து நாட்களுக்கு முன் தன்னைச் சந்தித்த இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தாராம் அஜீத்.

'அடுத்த பதினைந்து நாட்களுக்குள் வேறு ஒரு அஜீத்தை பார்க்கப் போகிறீர்கள்... என் உடம்பை அப்படி மாற்றிக் காட்டுகிறேன்', என்று அஜீத் கூறியிருந்தாராம்.

சொன்னதுபோலவே, அபார மாற்றம். ஏகப்பட்ட கிலோ எடையைக் குறைத்து, படு ஸ்லிம்மாக அஜீத் இப்போது காட்சி தர, விஷ்ணுவுக்கு தன் ஸ்க்ரிப்டுக்கேற்ற தோற்றம் வந்துவிட்டது என பாராட்டினாராம்.

இதுகுறித்து விஸ்ணுவர்தன் கூறுகையில், "அஜீத் மாதிரி அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகர்கள் அரிது. சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் கழித்தும் அவர் காட்டும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் ஜிம்மில் இருந்து, பயிற்சிகள் செய்து இந்த சாதனையைச் செய்திருக்கிறார் அஜீத். என்னிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிவிட்டார்," என்றார்.

ஜிம்மில் அஜீத் இருக்கும் படங்களை ஷூட் செய்து வெளியிட்டவர் விஷ்ணுவர்தன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.