கலகலப்பு - சினிமா விமர்சனம்

Kalakalappu Movie Review
-எஸ். ஷங்கர்

நடிகர்கள்: விமல், அஞ்சலி, சிவா, ஓவியா, சந்தானம், ஜான் விஜய்
ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார்
இசை: விஜய் எபினேசர்
மக்கள் தொடர்பு: ஜான்ஸன்
தயாரிப்பு: யுடிவி & அவ்னி சினிமேக்ஸ்
எழுத்து - இயக்கம்: சுந்தர் சி

சுந்தர் சி கேம்பிலிருந்து இன்னொரு காமெடி கலாட்டா. லாஜிக், எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனால் விழுந்து விழுந்து சிரிக்க இன்னும் ஒரு பொழுதுபோக்குப் படம் இந்த கலகலப்பு!

சுந்தர் சிக்கு இது 25 படம். வழக்கம்போல கதை என்ற ஒன்று பிரதானமாக இல்லாவிட்டாலும், கேட்ட அல்லது பார்த்த மாத்திரத்தில் சட்டென்று சிரிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம் உண்டு (ஆனால் சுந்தர் சிக்கே உரிய ஷார்ப் ஒன் லைனர்ஸ் மிஸ்ஸிங்.. அதுவும் சந்தானம் இருந்தும்!).

கும்பகோணத்தில் மூன்று தலைமுறையாக கொடிகட்டிப் பறந்த மசாலா கபே என்ற ஓட்டல், இந்தத் தலைமுறையின் கைக்கு வந்ததும் நொடித்துப் போகிறது. அதைத் தூக்கி நிறுத்தி பழைய பெருமையை மீட்கும் முயற்சியில் அப்பாவி நேர்மையாளர் விமல். துணைக்கு சமையல்கார தாத்தா விஎஸ் ராகவனும், அவர் பேத்தி ஓவியாவும். அவ்வப்போது விமலுக்கு அஞ்சுவட்டிக்கு கடன் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இளவரசு.

அந்த ஊருக்கு புதிதாக வரும் சுகாதார ஆய்வாளர் அஞ்சலியைப் பார்த்த உடன் லவ்வாகிறார் விமல். இருவரும் முதலில் மோதிக்கொண்டாலும், தமிழ் சினிமா வழக்கப்படி காரணமே இல்லாமல் காதலர்களாகிவிடுகின்றனர்.

அப்போதுதான் ஜெயிலிலிருந்து ரிலீஸாகி வருகிறார் சிவா. விமலின் உடன் பிறந்த தம்பி. வெறும் பில்டப் ஆசாமி. சிரிப்புத் திருடன். வந்தவுடன் ஓவியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர் கொடுக்கும் ஐடியாபடி மசாலா கபேயில் பழைய கிராமத்து உணவுகளை அறிமுகப்படுத்தி ஒரே பாடலில் ஓஹோவாக்கிவிடுகிறார்கள்.

மசாலா கபேயை அபகரிக்க ஊரின் முக்கிய வர்த்தகர் திட்டமிடுகிறார். அவருக்கு துணை போகிறார் அந்த ஊர் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய்.

இந்த நேரத்தில்தான், அஞ்சலிக்கு முறைமாமனுடன் ஊரில் திருமணம் நிச்சயமாகிறது. வந்து தன்னை 'தூக்கிச் செல்லுமாறு' விமலை அழைக்கிறார் அஞ்சலி. மசாலா கபேயை தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு, காதலியைத் தூக்கிவர கிராமத்துக்குப் போகிறார்.

அங்கே தமாஷ் வில்லன்கள் சந்தானம் & மனோபாலா கோஷ்டியிடம் சிக்கி, சில கிச்சு கிச்சு மூட்டல்களுக்குப் பிறகு காதலியை அடையும் நேரத்தில், அஞ்சலியின் தாத்தா மண்டையைப் போட, காதல் டமாலாகிறது.

ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் விமலுக்கு இன்னொரு அதிர்ச்சி. சீட்டாட்டத்தில் ஹோட்டலை வைத்து சூதாடி தோற்றுவிட்டு, காதலி ஒவியாவையும் இழந்து பாரில் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார் தம்பி.

எப்படி மசாலா கபேயை மீட்கிறார்கள் சகோதர்கள் என்பது மீதிக் கதை. இடையில் சுப்பு தலைமையில் இன்னொரு சிரிப்பு வில்லன் கோஷ்டி, ரூ 10 கோடி வைரத்தை ஒரு செல்போனில் வைத்துத் தொலைத்துவிட்டு தேடுகிறது தேடுகிறது தேடிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கதையின் க்ளைமாக்ஸும் மசாலா கபேவுக்கே வருகிறது.

ஒரு நீண்ட தமாஷ் பைட்டுக்குப் பிறகு சர்வம் சுபம்!

முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சி வரை எங்கு தேடினாலும் கிடைக்காத ஒரு சமாச்சாரம் லாஜிக். எதுக்கு அதையெல்லாம் தேடிக்கிட்டு... வந்தோமா சிரிச்சோமான்னு போங்க சார் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார் இயக்குநர் சுந்தர்.

சிவா பேசும் வசனங்கள் இன்னும் கூட ஷார்ப்பாக, காதில் விழுந்ததும் உதடுகளை விரிய வைக்கும் விதமான ஒன்லைனர்களாக இருந்திருக்கலாம்.

காதலி கேட்கும் பொருள்களை வாங்க பர்தா போட்டுக் கொண்டு சிவா திருடுவது சரியான காமெடி என்றால், அந்த நேரம் பார்த்து கடையில் ஒரு ஹேண்ட் பேக் வாங்க வந்து, பணமில்லாமல் தவிக்கும் விமல், அந்தப் பையையும் சேர்த்து திருடிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வது.. வயிற்றைப் பதம் பார்க்கிறது.

க்ளைமாக்ஸில் அந்த போலீஸ்காரருக்கு மண்டையில் அடி விழ, அப்படியே அவர் மண்டையில் தங்கப்பதகம் சௌத்ரி, மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனெல்லாம் வந்துபோவது 'செம' கலகலப்பு!

அந்த நாய் கேரக்டர் படத்திலேயே டாப் (காவலனில் வடிவேலு செய்ததுதான் என்றாலும்).

விமல்தான் படத்தின் ஹீரோ. ஆனால் ஹீரோயிஸம் காட்டாமல், அப்பாவி முதுகுபிடிப்பு கேஸாக வந்து மனதில் நிற்கிறார். அவர் தம்பியாக வரும் சிவாவும் ஓகே.

நாயகிகளில் அஞ்சலிக்குதான் நடிக்க, கவர்ச்சி காட்ட ஏக வாய்ப்பு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறங்கி வந்து கவர்ச்சி காட்டி கதிகலங்க வைக்கிறார். அவர் குரலைக் கேட்கும்போது வயிற்றைக் கலக்குகிறது!

ஓவியாவும் கிடைத்த கேப்பிலெல்லாம் குளிக்கிறார் அல்லது குத்தாட்டம் போடுகிறார் அல்லது பாவாடை சட்டையோடு வந்து ஒரு வழி பண்ணுகிறார்!

இடைவேளைக்குப் பிறகுதான் சந்தானம் வருகிறார். வாயைத் திறந்தால் வண்டி வண்டியாக ஜோக்குகளைக் கொட்டும் அவருக்கு மொக்கையான வசனங்கள். இருந்தாலும் அவரது பாடி லாங்வேஜ், பார்த்தவுடன் சிரிக்க வைக்கிறது.

போலீசுக்கு பயந்து தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு விதவித கெட்டப்புகளில் வரும் இளவரசு, வைரங்களைத் துரத்தி க்ளைமாக்ஸில் தர்ம அடிவாங்கும் சுப்பு, வைரங்களை லவட்டிக் கொண்டு போக நினைத்து, முன்னாள் மந்திரி வீட்டு பாத்ரூம் சுவர் ஓட்டைக்குள் மாட்டிக் கொள்ளும் ஜான் விஜய், அந்த நாய்... என அத்தனை பாத்திரங்களையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்!

குறைகள் நிறைய இருக்கின்றன. ரூ 10 கோடி வைரத்தை யாராவது செல்போன் கவரில் வைத்து, அத்தனை அலட்சியமாக ஒரு 'பேக்'கிடம் கொடுத்தனுப்புவார்களா? அந்த செல்போன் ஒவ்வொருவர் கையாக மாற, அவர்களும் நம்பரை மாற்றாமல் அப்படியேவா உபயோகிப்பார்கள்? அத்தனை பெரிய ஹோட்டலை வைத்து யாராவது சீட்டாடுவார்களா? அண்ணன் தம்பி இருவருக்கும் சொந்தமான ஹோட்டலை தம்பி மட்டுமே கையெழுத்துப் போட்டு பதிவு செய்வது சாத்தியமா?

இப்படிப்பட்ட கேள்விகளை மறந்துவிட்டால் படத்தை ரசிக்கலாம்!

யுகே செந்தில்குமாரின் கேமரா காவிரியை ரொம்ப அழகாகப் படம்பிடித்திருக்கிறது. பார்த்ததுமே எப்போது காவிரிக்கும் போகலாம் என ஏங்க வைக்கிறது அந்த குளுமை!

விஜய் எபினேசரின் இசையில் உன்னைப் பற்றி உன்னிடமே, இவளுக இம்சை.. கேட்கலாம் ரகம். பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தியேட்டருக்கு வந்தவர்களை 2.30 மணி நேரம் சிரிக்க வைப்பது மட்டும்தான் ஒரே நோக்கம் என வேலை பார்த்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. அந்த வகையில் அவர் இலக்கு தப்பவில்லை. தியேட்டரே கலகலக்கிறது, சிரிப்பொலியால்!
 

சென்னையில் புதிய 5 டி தியேட்டர்!

3 டி எல்லாம் பழைய டெக்னிக். இப்போ 5 டிதான் லேட்டஸ்ட் என்ற அறிவிப்போடு, மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர் மல்டிப்ளெக்ஸ்காரர்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் புதிதாக ஒரு 5டி சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது.

5டி அனிமேஷன், கிராபிக்ஸ் திரைப்படங்கள் மட்டுமே இதில் திரையிடப்படும். அதிகபட்சம் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் தயாரான திரைப் படங்கள் இங்கு திரையிடப்படும்.

32 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கில் தினமும் 30 காட்சிகள் திரையிடப்படும். டிக்கெட் கட்டணம் ரூ.150. இந்த தியேட்டரின் இருக்கைகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் சுழலும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

பெல்ட் அணிந்து கொண்டுதான் படத்தை பார்க்க முடியும். திரையில் என்ன காட்சிகள் வருகிறதோ அதற்கேற்ப தியேட்டர் சூழ்நிலை மாறும். உதாரணமாக மழை பெய்தால் படம் பார்ப்பவர்கள் இடி மின்னல், காற்று மழையை உணர முடியும். நெருப்பு, புகை தொடர்பான காட்சிகள் வந்தால் தியேட்டரில் வெப்பத்தையும் புகையையும் உணரலாம்.

இதற்காக வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு ரூ.1.5 கோடி செலவில் இந்த தியேட்டரை உருவாக்கி உள்ளனர். வெளிநாடுகளில் பிரபலமான இந்த பிக்ஸ் 5டி தியேட்டர் சென்னையில் துவங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

இந்த தியேட்டரை நடிகர் அருண்விஜய், நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த தியேட்டரை அமைத்துள்ள ரவிசங்கர் தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் இத் தியேட்டரை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அபிராமி மெகாமாலில் ஒரு 4 டி அரங்கம் உள்ளது. தேவி காம்ப்ளக்ஸிலும் ஒரு 5 டி அரங்கம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு - ஹாங்காங் பயணமானார் ரஜினி!!

Rajini Fly Off Hong Kong Kochadaiyaan Shoot
கோச்சடையான் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்க இன்று காலை விமானத்தில் புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டன் பைன்வுட் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கப்பட்டன. ஒரு டூயட் பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் கலந்த புதிய வகை நடனத்தை ஆடினர்.

இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு. இந்த முறை ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்தப் படப்பிடிப்புக்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். கதாநாயகி தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா படப்பிடிப்பை நடத்துகிறார்.
 

தொலைக்காட்சி தொடர்கள்... கண்ணீரில் மூழ்கடிக்கும் அம்மாக்கள்!

Chinnathirai Mother Sentiment Round Up
சினிமாவில் அம்மா சென்டிமென்ட் இல்லாவிட்டால் படமே ஓடாது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே மாற்ற முடியாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து பின்னர் அந்த காதாநாயகர்களுக்கே அம்மாவாக நடித்தவர்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழகான அம்மா, அழுது அழுது ஆர்பாட்டம் பண்ணும் அம்மா, வில்லத்தனமான அம்மா என பலவித அம்மாக்கள் இன்றைக்கு தொலைக்காட்சி தொடர்களில் கோலோச்சி வருகின்றனர். அவர்களைப் பற்றி அன்னையர் தின ஸ்பெசலாக ஒரு ரவுண்ட் அப்.

அழுகை வடிவுக்கரசி

அம்மா என்றால் பிள்ளைகளை நினைத்து அழுதபடியேதான் இருப்பார் என்பதாக உள்ளார் வடிவுக்கரசி. இவர் சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெரும்பாலான தொடர்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் வரும் திருமதி செல்வம் நெடுந்தொடரில் அழுது பிழியும் அம்மாவாக வரும் வடிவுக்கரசி தனது மூன்று மகள்களின் வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டே இருக்கிறார். அதே சமயம் தனது மகளின் வாழ்க்கைக்கு குறுக்கே வரும் பெண் என்று தெரிந்த உடன் ஆக்ரோசமாக பெருக்குமாறினால் வெளுத்து வாங்குகிறார்.

அதே வடிவுக்கரசிதான் அமைதியாக எதையும் பொறுமையாக கையாளும் அம்மாவாக உதிரிப்பூக்கள் தொடரில் நடித்திருக்கிறார். ஒரு நல்ல விசயம் இதில் அவ்வளவாக அழுவதில்லை. அதற்கு பதிலாக தொடரில் மூன்று குழந்தைகளின் அப்பாவாக நடித்துள்ள சேத்தன் அழுகிறார்.

திருமதி செல்வம் பாக்கியம்

அதே தொடரில் பாக்கியமாக வரும் இன்னொரு அம்மா தனது மகன், மகளுக்கு மட்டும் சுயநலமாக நடந்து கொண்டு வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். அவரேதான் தியாகம் தொடரில் மூன்று பெண்குழந்தைகளுக்கு பாசக்கார அம்மாவாக, பெண்ணின் திருமணத்தை எண்ணி அழும் அம்மாவாக நடித்திருக்கிறார்.

முத்தாரம் சத்ய பிரியா

நடிகை சத்யப்பிரியா கோலங்கள் தொடரில் தேவயானியின் அம்மாவாக நடித்தவர். எப்பொழுது பார்த்தாலும் அதில் அவருக்கு அழுகைக்கு பஞ்சம் இருக்காது. அதே சத்யப்பிரியா முத்தாரம் தொடரில் தேவயானியின் மாமியாராக வருகிறார். முதலில் பிடிக்காத மருமகளாக இருந்த தேவயானி இப்பொழுது சத்யப்பிரியாவின் பாசக்கார மருமகளாக மாறியிருக்கிறார்.

நளினி நடிக்கும் தொடர்கள்

சுதா சந்திரன்

சன், கலைஞர், ஜெயா என சுதாசந்திரன் தொடர்களில் நடித்தாலும் தென்றல் தொடரில் வில்லத்தனமான அம்மாவாக நடித்து வருகிறார் சுதா சந்திரன். இந்த கதாபாத்திரம் அவருக்கு புதிது. ஏனெனில் பொண்டாட்டி தேவை என்ற காமெடி சீரியலில் அம்மாவாக நடித்த அனுபவம் மட்டுமே இருந்தது. இப்பொழுது வில்லத்தனம் செய்யும் அம்மாவாக வருகிறார். போகப்போகத்தான் தெரியும் அவரது ஆற்றல்.

கஸ்தூரி லதா

நீண்ட நெடுங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் கஸ்தூரி தொடரில் அப்பாவி அம்மாவாக வரும் லதா பாவம் அடிக்கடி காணாமல் போய்விடுகிறார். அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியான கதாபாத்திரம் அவருக்கு இந்த தொடரில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

செல்லமே ராதிகா

செல்லமே சீரியலில் வரும் ராதிகா காணமல் போன தனது குழந்தையை பற்றி நினைக்கும் போது மட்டும் அவ்வப்போது கண் கலங்குகிறார். இதில் பாசமான அம்மா என்பதை விட பாசக்கார தங்கையாகவே அண்ணன் ராதாரவிக்காக அவர் அதிகம் அழுகிறார்.

ஆண்பாவம் மீரா

நான்கு ஆண் பிள்ளைகளின் பாசக்கார அம்மாவாக நடித்துள்ள மீரா மருமகளை பிடிக்காத மாமியாராகவும் வெளுத்து வாங்குகிறார். இந்த தொடர்களில் வரும் அம்மாக்களைப் பார்த்தால் அம்மா என்றாலே ஒன்று அழுபவராக இருக்க வேண்டும். இல்லையெனில் மருமகளுக்கு பிடிக்காத மாமியாராக இருக்கவேண்டும் அல்லது சுயநலமியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இனிமேலாவது புதிதாக சீரியல் இயக்கும் இயக்குநர்கள் அம்மாக்களின் அழுகையை நிறுத்துவார்களா?

 

சினேகா - பிரசன்னா விருந்து - நடிகர் நடிகைகள் பங்கேற்கிறார்கள்!

Sneha Prasanna Give Special Party Co Stars
சினிமாவில் உள்ள தங்களின் சக நடிகர் நடிகைகளுக்கு திருமண விருந்து தருகிறார்கள் நேற்று திருமணமான நடிகை சினேகாவும் - நடிகர் பிரசன்னாவும்.

வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. நடிகர், நடிகைகள், உறவினர்கள் நேரில் வாழ்த்தினர்.

சினேகாவுக்கு பிரசன்னா நாயுடு முறைப்படியும், பிராமணர் முறைப்படியும் இரண்டு தடவை தாலி கட்டினார். வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினமே நடந்துவிட்டாலும், நடிகர், நடிகைகளுக்காக பிரத்யேகமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமண வரவேற்பு கிண்டியில் உள்ள புதிய நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு உயர்தர விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

திருமணத்துக்கு வராத நட்சத்திரங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். ரஜினி - கமல் இருவரும் ஊரில் இல்லாததால் அவர்கள் பங்கேற்கமாட்டார்கள்.

தேனிலவுக்காக சினேகாவும், பிரசன்னாவும் ஓரிரு தினங்களில் வெளிநாடு புறப்படுகின்றனர். எந்த நாட்டுக்கு போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.

தேனிலவுக்கு சென்று திரும்பியதும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதா இல்லையா என்று தெரிவிக்கிறாராம் சினேகா.
 

மங்காத்தாவை தாண்டிட்டோம் - உதயநிதி உற்சாகம்

Okok Crosses Mangatha   
மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார் ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி.

இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பார்த்தவர்கள் எண்ணிக்கை மங்காத்தாவைத் தாண்டி விட்டதாம். இதுதான் அவரது உற்சாகத்துக்குக் காரணம்.

உலகம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். கிராமப் பகுதிகளில் மட்டும் 5வது வாரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருக்கிறது. காரணம், கலகலப்பு வெளியாகியிருப்பதுதான்.

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருக்கும் உதயநிதி, " ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தவர்கள் எண்ணிக்கை 'மங்காத்தா' படத்தினை தாண்டி, 'ஏழாம் அறிவு' படத்தினை நெருங்கி கொண்டிருக்கிறது.

படத்தில் எத்தனை பேர் காமெடி செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை.. எத்தனை பேர் பார்த்தார்கள், எவ்வளவு வசூல் ஆனது என்பதே முக்கியம், " என்று கமெண்ட் அடித்துள்ளார்.
 

ஸ்ரீதேவியிடம் பாராட்டு பெற்ற மகேஸ்வரி

Actress Sri Devi Appreciated Maheshwari Act
சின்னத்திரையில் மை நேம் இஸ் மங்கம்மா தொடர் மூலம் களம் இறங்கியுள்ளார் நடிகை மகேஸ்வரி. இந்த தொடரில் அவரது அப்பாவித்தனமான நடிப்பை பார்த்து ஸ்ரீதேவியே பாராட்டினாராம்.

பாரதிராஜாவின் கருத்தம்மா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மகேஸ்வரி. இவர் நடிகை ஸ்ரீ தேவியின் சித்தி மகள். உல்லாசம்', , "நேசம்' போன்ற படங்களில் நாயகியாக நடித்த மகேஸ்வரிக்கு சினிமா செட் ஆகவில்லை. சில காலம் கலைச்சேவைக்கு லீவு விட்டிருந்த அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கிவுள்ள "மை நேம் இஸ் மங்கம்மா' என்ற தொடரின் நாயகியாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த தொடரின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த மகேஸ்வரியின் அக்கா நடிகை ஸ்ரீதேவி, மகேஸ்வரியின் அப்பாவித் தனமான நகைச்சுவை நடிப்பை ரசித்துப் பார்த்து பாராட்டினாராம். அக்காவின் பாராட்டால் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறாராம் மகேஸ்வரி.

சின்னத்திரையிலாவது சூப்பரா ஒரு இடத்தை பிடிச்சிருங்க!
 

விஜய் பட விவகாரம் சந்திரசேகரன் தலையீட்டால் இயக்குனருக்கு சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தயாரிப்பாளர் தலையீட்டால் புதுமுக இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் நடிப¢பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய படம் 'சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தை சந்திரசேகரின் உறவினர் தயாரிக்க, அவரது மகள் சினேகா இயக்குவதாக இருந்தது. பின்னர் நடிகர் விஜய் தயாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. விக்ரம் பிரபு, பியா, ரீமா சென் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வந¢தபோது, இப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினாராம். இதனால் இயக்குனர் சினேகாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மாற்றங்களை செய்தார்.

ஏற்கனவே தேர்வான நடிகர், நடிகைகளிடம் இப்படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையில் கதை, காட்சியில் திடீர் மாற்றம் செய்துள்ளது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள நட்சத்திரங்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சந்திரசேகரன் கூறும் மாற்றங்கள் ரீமேக் ஆகவுள்ள படத்துக்கு பிளஸ்ஸாக இருக்குமா அல்லது இப்போதுள்ள கதையை கெடுத்துவிடுமா என்ற சந்தேகம் பட குழுவினர் மத்தியில் எழுந்துளளது. கோலிவுட்டில் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் குதித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கும் ஸ்கிரிப்ட் மாற்றத்தால் பலன் இருக்கமா என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகும் சந்திரசேகரன், இந்த காட்சியை இது போல் படமாக்க வேண்டும் என உத்தரவிடுகிறாராம். இயக்குனரின் வேலையில் அவர் தலையீடுவதால் இயக்குனர் சினேகா வருத்தத்தில் இருக்கிறாராம்.


 

பாலிவுட்டில் தமன்னாவுக்கு திடீர் எதிர்ப்பு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பாலிவுட்டில் தமன்னா நுழைவதை தடுக்க அவரது வாய்ப்பை தட்டிபறிக்கும் வேலை தொடங்கி இருக்கிறது. தமிழ் படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. திடீரென்று கோலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் படங்களில் நடிப்பது பற்றி கேட்டபோது நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறி வந்தார். 1983ம் ஆண்டு ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த 'ஹிம்மத்வாலா என்ற இந்தி படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ஸ்ரீதேவி ஏற்று நடித்த வேடத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

சாஜித் கான் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக தமன்னா ஒப்பந்தம் ஆன பிறகு அவருக்கு எதிராக சிலர் பிரச்னை கிளப்பி வருகிறார்களாம். ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திருத்துக்கு தமன்னா பொருத்தமாக இருக்க மாட்டார். கேத்ரினா கைப், தீபிகா படுகோன் இவர்களில் ஒருவர்தான் இதற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தனக்கு எதிராக இப்படியொரு பிரச்னையை எழுவதை அறிந்து தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் மூலம்தான் ஸ்ரீதேவி பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்துக்கு போனார். அதே வேடத்தில் மற்றொரு தென்னிந்திய நடிகையை நடிக்க வைத்தால் அது தற்போது முன்னணி இடத்தில் இருக்கும் பாலிவுட் நடிகைகளை பாதிக்கும் என்பதால் இப்படியொரு எதிர்ப்பு பிரசாரம் செய்யப்படுவதாக திரையுலக பிரமுகர்கள் கருதுகின்றனர்.


 

ஹரிப்பிரியாவின் மாமா பையன் அருவாளோட இருக்கானாம்!

விஜய் டிவியின் கனாக்காணும் காலங்கள், ஜீ டிவியின் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் சீரியல்களில் கலக்கும் நாயகி ஹரிப்பிரியா, சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் மாணவி. நடனம் என்றால் அவ்வளவு இஷ்டமாம் அவருக்கு. முறைப்படி பரதம் கற்றுக்கொண்டு வருவதாக கூறும் அவருக்கு சீரியலில் மட்டுமே காதல் அனுபவம் உண்டாம். காதலித்த அனுபவம் இல்லாததால் சீரியலில் காதலிப்பது சிரமமாக இருக்கிறதாம் ( பார்த்தா அப்படி தெரியலையே)

யாராவது காதலிப்பதாக கூறினால் ஊரில் மாமா பையன் அருவாளோட சுத்திக்கிட்டு இருக்கான் என்று கூறி தப்பி விடுவாராம். சமீபத்தில் வந்த லவ் புரொபோஸ்ல இருந்து காமெடியான நிகழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டார். ஒரு பையன் சின்சியரா லவ் பண்றதா சொன்னான். நான் இல்லேன்னா செத்துருவேன்னு சொன்னார்.

நானும் தாராளமா செத்துப்போன்னு சொன்னேன். ஆனா அடுத்தநாள் என் ப்ரெண்ட் கிட்ட லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருக்கான் என்று கூறிவிட்டு கண் சிமிட்டி சிரித்தார் ஹரிப்பிரியா.
 

அம்மா ஆனார் சின்னத்திரை சுஜிதா!

Chinnathirai Sujitha Second Round Cinema
பாக்கியராஜ் படத்தில் சின்ன வயதில் அறிமுகமானவர் சுஜிதா. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிய அவர் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்னர் சீரியல்களில் கவனம் செலுத்தினார். சன், கலைஞர், உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சேனல்களின் நெடுந்தொடர்களில் நடித்த அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரபட இயக்குநர் தனுசுடன் திருமணம் நடக்கவே சீரியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.

தற்போது மீண்டும் நெடுந்தொடர்களில் கவனம் செலுத்தி வரும் சுஜிதா சன் தொலைக்காட்சியில் வரும் மருதாணி சீரியலில் மீனாட்சியாக வெளுத்து வாங்குகிறார்.

தற்போது சினிமாவில் இரண்டாவது ரவுண்டு தாண்டவம் படத்தில் விக்ரமின் தங்கையாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கணவரின் அன்பு, பாசமழையில் நனைந்து கொண்டிருக்கிறாராம். இதை சுஜிதாவே பகிர்ந்து கொண்டுள்ளார். கூடுதலாக ஒரு போனஸ் தகவல் சுஜிதா இப்போ அம்மா ஆகிவிட்டாராம்!
 

தமிழ்நாடு பவுண்டேஷன் நட்சத்திரப் போட்டியில் நடுவராக 'போட்டுத் தாக்கு..’ ரோஷிணி!

Singer Roshini Tobe The Jury Tnf Idol
ஹூஸ்டன்: தமிழ்நாடு அறக்கட்டளையின் 37 வது தேசிய மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நடத்தப்படும் ’டி.என்.எஃப் ஐடல்’ நட்சத்திரப் போட்டிக்கு நடுவராக பிரபல பின்ணணி பாடகி ரோஷிணி பங்கேற்கிறார்.

ஜீனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் இந்த நட்சத்திரப் பாட்டுப்போட்டி நடைபெறுகிறது. டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன், சான் அன்டோனியோ, டல்லாஸ் மற்றும் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றுள்ளார்கள். அந்தந்த ஊர்களில் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளே விறுவிறுப்பாக, படுசுவாராஸ்யமாக இருந்ததால், இறுதிப் போட்டியைக் காண அதிக ஆர்வத்துடன் நண்பர்களும், உறவினர்களும் ஹூஸ்டன் நோக்கி பயணப்பட்டுள்ளனர்.

இளையராஜாவுடன் ‘நம்ம காட்டுலே மழை பெய்யுது’ என்று பாடினாலும், தீராத விளையாட்டுப் பிள்ளையில் ‘என் ஜன்னல் வந்த காற்றே’ என்று தென்றலாக தவழ்ந்தாலும் , யாராடி நீ மோகினி க்காக ‘ஓ பேபி’ யாக மாறினாலும், உச்சத்தை தொட்ட ‘கருப்பான கையாலே என்னை புடிச்சான்’ பாடலை விட ரோஷிணியின் அடையாளமாக மாறிப்போனது ’நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணனின் குத்தாட்ட பாடலான ‘போட்டுத் தாக்கு’ தான்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, தேவிஸ்ரீ பிரசாத், வித்யாசாகர் என பிரபல இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடியுள்ள ரோஷிணி, 37 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை பாடி கின்னஸிலும் இடம் பிடித்துள்ளார்.

37வது தமிழ் நாடு அறக்கட்டளை தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களின் பரிசு விவரம், மே 25ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள ஹூஸ்டனில் நடைபெறும் தமிழ்நாடு அறக்கட்டளை தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்படும்.

ஹூஸ்டன் மீனாட்சி கோவில் திருமண மண்டபத்தில், சனிக்கிழமை(இன்று) மாலை 2.30 மணி அளவில் நடைபெறும் இந்த டி.என்.எஃப் நட்சத்திரப்போட்டியை காண அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.என்.எஃப் ஐடல் போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜ் தியாகாரஜன் தலைமையில் கோபிநாத், ஜொனதன் ஜனார்தனம், கார்த்திகா மகாதேவ் மற்றும் பல தன்னார்வ தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு http://tnfconvention.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
 

மக்கள் தொலைக்காட்சியின் விளையாடு வாகை சூடு!

New Game Show Makkal Tv
கேம் ஷோக்கள் சீஸன் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த போட்டியில் மக்கள் தொலைக்காட்சியும் குதித்துவிட்டது.

மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு பிற்பகல் 1 மணிக்கு ஒளி பரப்பாகும் புதிய நிகழ்ச்சி விளையாடு வாகை சூடு.

மாநிலமே வெயிலிலும் வேர்வையிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போட்டியும் 1 நிமிட நேரத்துக்குள் முடிந்துவிடும். இந்த ஒரு நிமிடத்துக்குள் செய்து முடித்தால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவெளிகளில் வரும் பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளையும் தருகிறார்கள்.

சித்ரா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
 

வாய் பேச முடியாதவராக யஷிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'வாடா போடா நண்பர்கள்', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படங்களில் நடித்தவர், யஷிகா. அவர் கூறியதாவது: 'மொழி' படத்தில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்தார். கன்னடத்தில் யோகராஜ் பட் இயக்கும் 'டிராமா' படத்தில், நான் ஏற்றுள்ள வேடம் அதுபோன்று இருக்கும். இந்த கேரக்டருக்காக எந்த பயிற்சியாளரையும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்தது இல்லை. 'மொழி'யில் ஜோதிகா நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறேன். ஆனால், அவரது நடிப்பை காப்பியடிக்கவில்லை. 'டிராமா' காமெடி படம் என்பதால், எனது கேரக்டரும் ஜாலியாக இருக்கும். இதையடுத்து, 'ஜெய் பஜ்ரங் பளி' படத்தில் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.


 

நவீன கேமராவில் பாகன் ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஸ்வாஸ் ஹி லாட், புருஷோத்தம் தயாரிக்கும் படம், 'பாகன்'. ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் ஜோடி. லக்ஷ்மன் ஒளிப்பதிவு. அஸ்லம் இயக்குகிறார். இந்த படத்துக்காக, நவீன கேமராவை வரவழைத்து ஷூட்டிங் நடந்துள்ளது. இது பற்றி அஸ்லம் கூறியதாவது: இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை புதிய முறையில் படமாக்க நினைத்தோம். அதனால் சோனி எஃப் 65 என்ற கேமராவை வரவழைத்து ஷூட்டிங் நடத்தினோம். வழக்கமான கேமராவை விட இந்த கேமரா நவீன டெக்னிக்குகளை கொண்டது. ஒரு செகண்டுக்கு 120 பிரேம்கள் எடுக்கும் தன்மை கொண்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த கேமராவை சண்டைக்காட்சிக்கு நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். அதிக ரெசல்யூஷன் கொண்ட கேமரா என்பதால் காட்சிகள் துல்லியமாகத் தெரியும். இந்த கேமரா கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அஸ்லம் கூறினார்.


 

8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் : கண்டசாலா மகன் சாதனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி பழம்பெரும் பாடகர் கண்டசாலா மகன் ரத்னகுமார் சாதனை நிகழ்த்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் தந்தை கண்டசாலா பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர். நான் 'காஞ்சி காமாட்சி' என்ற படம் மூலம் டப்பிங் கலைஞரானேன். இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் 1076 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளேன். 'ராமாயணம்' தொடரில் ராமனுக்கும், 'ஸ்ரீகிருஷ்ணா' தொடரில் கிருஷ்ணனுக்கும் வருட கணக்கில் டப்பிங் பேசியது மறக்க முடியாத அனுபவம். பல விருதுகளை பெற்றிருந்தாலும் டப்பிங் கலையில் சாதனை படைக்க ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற மே 4-ம் தேதி காலை 10 மணி முதல் தொடர்ந்து 8 மணிநேரம் டப்பிங் பேசினேன். இந்த சாதனை இந்திய, ஆசிய, தமிழ்நாடு மற்றும் உலக அமேஸிங் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ரத்னகுமார் கூறினார்.




 

தமிழ், இந்தியில் பனி துளி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கணேஷ் வெங்கட்ராம், ஷோபனா, கல்பனா பண்டிட் நடிக்கும் படம், 'பனி துளி'. எழுதி, இயக்கியுள்ளார் நட்டிகுமார். படம் பற்றி நிருபர்களிடம் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது: இந்தப் படம் ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ளது. முழு படமும் வெளிநாட்டில் படமானது. சாப்ட்வேர் என்ஜினீயராக வருகிறேன். சென்னையில் இருந்து வெளிநாடு செல்கிறேன். அங்கு ஏற்படும் காதல், அதில் வரும் பிரச்னைகள் என்னையும், என் வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது என்பது கதை. அடுத்த காட்சி இதுவாக இருக்கும் என்று யூகிக்க முடியாத விதத்தில் நட்டிகுமார் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளார்.

இந்தப்படம் என்னை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தாலும், தமிழுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். 'பனி துளி' தமிழில் ரிலீசாகும் நாளில் இந்தியிலும் ரிலீசாகிறது. இவ்வாறு கணேஷ் வெங்கட்ராம் கூறினார். இயக்குனர் நட்டிகுமார் கூறும்போது, ''தனுஷ் நடித்த '3' படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பேசப்பட்ட ஐதராபாத் நட்டிகுமார் வேறு, நான் வேறு. 'பனி துளி' ஷூட்டிங் முடிந்து விட்டது. அடுத்த மாதம் ரிலீசாகிறது'' என்றார்.


 

திடீர் வெள்ளம் தப்பினார் ஹீரோயின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிகரம் பிலிம் பேக்டரி சார்பில் கே.ஆர்.எஸ்.கே.ஜெயகுமார் கதை எழுதி தயாரிக்கும் படம், 'மவுனமான நேரம்'. ரிஷிகுமார், கிரிஷ், ஜெ.பிரகாஷ், டெய்சி ஷா, மீத்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் மோகன்ராஜ் கூறியதாவது: சாப்ட்வேர் என்ஜினீயர்கள் சிலர் அடர்ந்த காடுகளுக்கு ஜாலியாக செல்லும்போது சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. திகில் படங்களுக்கான இலக்கணங்களை உடைக்கும் விதமாக இதை உருவாக்கியுள்ளோம். திகில் படம் என்றால், இருட்டை மையமாக வைத்தே கதை சொல்வார்கள். இதில் 99 சதவீதம் பகலிலேயே கதை நடக்கும். மறையூர் அருவியில் டெய்சி ஷா நடித்த காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். திடீரென்று எந்த அறிவிப்பும் இல்லாமல் அணையில் தண்ணீரை திறந்துவிட்டனர். சில நிமிடங்களில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாங்கள் சிதறி ஓடினோம். டெய்சி ஷா மட்டும் தண்ணீரில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். படப்பிடிப்புக் குழுவினர் அவரை மீட்டனர். படப்பிடிப்புக் கருவிகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாப்பான இடத்துக்கு வந்தோம்.


 

ஓட ஓட காதல் குறையலே

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ரீராகவேந்திரா பிலிம் சர்க்யூட் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கும் படம், 'ஓட ஓட காதல் குறையலே'. புதுமுகங்கள் ஸ்ரீகாந்த், அகான்ஷா, மற்றும் நாசர், இளவரசு உட்பட பலர் நடிக்கின்றனர். இசை, தேவா. பாடல்கள், பிறைசூடன். புகழ்மணி, ஜெயதீர்த்தா இணைந்து எழுதி, இயக்குகின்றனர். அவர்கள் கூறும்போது, 'தன் காதலி அசாமில் இருப்பதை அறியும் ஹீரோ, அங்கு செல்கிறார். காதலியைப் பார்த்தாரா? அவர்கள் காதல் வென்றதா என்பது கதை. விரைவில் ரிலீசாகிறது' என்றனர்.


 

சின்னத்திரையில் திவ்யபத்மினி

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
'புலிவேஷம்', 'அய்யன்', 'விளையாடவா' படங்களில் நடித்தவர் திவ்ய பத்மினி. இப்போது 'பிள்ளைநிலா' என்ற டி.வி தொடரில் நடிக்கிறார். சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் பற்றி சரிகம இண்டியா நிறுவன தென்மண்டல பொதுமேலாளர் பி.ஆர்.விஜயலட்சுமி கூறும்போது, ''இத்தொடர் குழந்தையை மையப்படுத்தியது. ஒரே குழந்தைக்கு இரு தாய் உரிமை கோருகிறார்கள். அதனால் என்ன நடக்கிறது என்பது கதை. திவ்யபத்மினியுடன் ஷமிதா, ராகவ் நடிக்கிறார்கள். ராஜஸ்ரீ, என்.ராய் கதை, திரைக்கதை. கிரியேட்டிவ் இயக்குனர்கள் ஆர்.செல்வபாண்டியன், பிரின்ஸ். ஒளிப்பதிவு பாலா. பால்ராஜ் இசை. நந்தகுமார் இயக்குகிறார்'' என்றார்.


 

யாருடனும் ஈகோ இல்லை : சாந்தனு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யாருடனும் ஈகோ இல்லை என்று சாந்தனு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது 'அமளி துமளி' படத்தில் நடித்து வருகிறேன். நான், நகுல், சுவாதி ஆகியோருக்கு இடையேயான பிரச்னைதான் படம். கதையை விட மூவரின் கேரக்டர்கள்தான் பேசப்படுவதாக இருக்கும். சிறப்பான கேரக்டர் இது. இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. யாருடனும் ஈகோவும் இல்லை. இனி சினிமா பார்க்க வருபவர்கள் மல்டி ஸ்டார் படத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் யாருடனும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.


 

லொள்ளு தாதா என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மன்சூரலிகான், ஷில்பா, பிரவீன், அஞ்சனா நடிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. வியாசன் இயக்குகிறார். படம் பற்றி நிருபர்களிடம் மன்சூரலிகான் கூறியதாவது: வங்கிகள் ஆதாரம் இல்லாமல் யாருக்கும் கடன் கொடுப்பது இல்லை. படத்தில் லொள்ளு தாதாவாக வரும் நான், எந்த ஆதாரமும் கேட்காமல், வியாபாரம் செய்ய கடன் கொடுக்கிறேன். என்னிடம் கடன் வாங்கியவர்கள் ஒழுங்காக கட்டினார்களா, இல்லையா என்பதை காமெடியாகச் சொல்கிறேன். 'வட்டி வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதையும் வலியுறுத்துகிறேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.




 

பீட்சா இளைஞனின் காதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.விஜயகுமார் தயாரிக்கும் படம் 'பீட்சா'. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயண் இசை. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: நான் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்தாலும் சினிமா மீதான காதலால் இந்தத் துறைக்கு வந்தேன். பெங்களூரில் இயக்கம் கற்றேன். பல குறும்படங்களை இயக்கினேன். இப்போது இந்தப் படத்தை இயக்குகிறேன். பீட்சா சப்ளை செய்யும் ஹீரோவுக்கும், கல்லூரியில் படிக்கும் ஹீரோயினுக்கும் காதல். கவிதையாக துவங்கும் இந்த காதலுக்குள், திகில், மர்மம் நுழைந்து ரொமான்டிக் த்ரில்லராக மாறும். இதில் பீட்சாவின் பங்கும் இருக்கும். அது என்ன என்பதை சுவையாகச் சொல்கிறோம். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.