வாய்ப்பு கொடுங்க... 'லிப் டு லிப்' தரவும் ரெடி! - ப்ரியா ஆனந்த் தரும் ஆஃபர்!

ப்ரியா ஆனந்த் நடிப்பில் கடந்த வாரங்களில் இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஒன்று அரிமா நம்பி. அடுத்து இரும்புக் குதிரை.

இரண்டாவது படத்தின் நிலைமை என்னவென்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அரிமா நம்பி நல்ல வெற்றியைப் பெற்றது. இது போதாதா...

வாய்ப்பு கொடுங்க... 'லிப் டு லிப்' தரவும் ரெடி! - ப்ரியா ஆனந்த் தரும் ஆஃபர்!

இனி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என முனைப்பு காட்ட ஆரம்பித்துள்ளார்.

அடுத்து ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' , ‘வை ராஜா வை' என ப்ரியா ஆனந்த்துக்கு நம்பிக்கை தரும் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில், அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு 'அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் ஷங்கரை அணுகியுள்ளார்.

ஆனந்த் ஷங்கர் அடுத்து விக்ரமை இயக்கப் போகிறாராம். இந்தக் கதைக்கு அதிக கிளாமராக நடிக்கக் கூடிய ஹீரோயின் தேவை என்பதைக் கேள்விப்பட்டு, தானே அவரை அணுகி வாய்ப்புக் கேட்டுள்ளார் ப்ரியா. தேவைப்பட்டால் வாயோடு வாய் வைத்து முத்தக் காட்சிகளிலும் நடிக்கத் தயார் என ஆஃபரை கொஞ்சம் தாராளமாகவே கொடுத்துவிட்டு பதிலுக்குக் காத்திருக்கிறாராம்!

வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்!

 

ஏ.ஆர். ரஹ்மானின் லேட்டஸ்ட் ஆல்பம் 'ரவ்னக்': யாருக்கு டெடிகேட் செய்தார் தெரியுமா?

மும்பை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ரவ்னக் ஆல்பத்தை வெளியிட்டு அதை பெண்கள் முன்னேற்றத்திற்காக அர்பணித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரவ்னக் என்ற ஆல்பத்தை கடந்த 29ம் தேதி மும்பையில் வெளியிட்டார். இந்த ஆல்பத்தை அவர் பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வோக் எம்பவர் என்ற திட்டத்திற்கு அர்பணித்துள்ளார்.

இந்த ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அவற்றை லதா மங்கேஷ்கர், சித்ரா, ஸ்ரேயா கோஷல், மோஹித் சவ்ஹான், ஸ்வேதா பண்டிட் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் லேட்டஸ்ட் ஆல்பம் 'ரவ்னக்': யாருக்கு டெடிகேட் செய்தார் தெரியுமா?

லாட்லி என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியவர் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகும். லாட்லியை லதா, ரஹ்மானுடன் சேர்ந்து பாடியுள்ளார்.

ஷங்கர் பிரமாண்டமாக எடுத்துள்ள ஐ படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்! - இளையராஜாவிடம் சொன்ன கே விஸ்வநாத்

கே விஸ்வநாத்... தென்னிந்திய திரையுலகின் சாதனை இயக்குநர். இவரும் இளையராஜாவும் இணைந்த படங்கள் இசைக் காவியங்கள்.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல படங்களைச் சொல்லலாம்.

சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) படத்தின் இசைச் சேர்ப்பு வேலைகளின்போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்துள்ளார் இளையராஜா.

உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்! - இளையராஜாவிடம் சொன்ன கே விஸ்வநாத்

அவர் கூறுகையில், "ஸ்வாதி முத்யம் அதாவது சிப்பிக்குள் முத்து படத்தின் போது ஒரு காட்சியை எடுத்து வந்து பின்னனி இசைக்காக கொடுத்திருந்தார் விஸ்வநாத்.

அந்த காட்சி மாடியிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் இறங்கிவருவது் போன்றும் அதை ராதிகா பர்ப்பது போன்றும் காட்சி. இதற்கு பின்னனி இசை வரவேண்டும் என்று அவர் சொல்ல, நான் இல்லை இந்த இடத்தில் இசை வராது என்று நான் இசையமைக்காமல் அந்த இடத்தை சைலண்டாக விட்டு வைத்தேன்.

அங்கே மியூசிக் போடணும் என்றார் விஸ்வநாத். காரணம் கேட்டேன். அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கிறது. அதைக் காட்ட வேண்டும் என்றார்.

'படமே இங்குதான் ஆரம்பிக்கிறது... ரசிகர்களுக்கு அது எப்படி தெரியும்.. கதை எழுதிய உங்களுக்குதான் தெரியும். ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே,' என்றேன்.

நான் சொன்னதில் இருந்த நியாயத்தைபப் புரிந்து கொண்டு விஸ்வநாத், 'இது எப்படி எனக்குத் தெரியாமல் போனது.. இனி படம் முடியும் வரைக்கும் நான் உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்," என்று ரெக்கார்டிங் தியேட்டர் பக்கமே வராமல் இருந்தார்."

ராஜா இப்படிச் சொல்லி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மத்தியில் கரகோசம்!

 

இருக்கிற பிரச்சனையில் ஜெய்க்கு இளைய தளபதி ஆகணுமாம்!

சென்னை: நடிகர் ஜெய்க்கு இளைய தளபதி ஆக வேண்டுமாம்.

விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் வந்தவர் ஜெய். அவரை அனைவரையும் கண்டுகொள்ள வைத்த படம் சுப்ரமணியபுரம். நடிகை அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. இதனால் அஞ்சலி மாயமானபோது ஜெய் கலங்கிப் போய்விட்டார். எங்கே போலீசார் நம்மை பிடித்துவிடுவார்களோ என்று தான் அஞ்சினார்.

இருக்கிற பிரச்சனையில் ஜெய்க்கு இளைய தளபதி ஆகணுமாம்!

அதன் பிறகு நஸ்ரியாவும், ஜெய்யும் காதலிப்பதாக கூறப்பட்டது. நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு கேரளாவில் இருக்கிறார். ஜெய் வசம் தற்போது 5 படங்கள் உள்ளன. இப்படி அடிக்கடி காதல் விவகாரத்தில் சிக்கும் ஜெய்க்கு விஜய்யின் இளைய தளபதி பட்டத்தை பெறும் ஆசை வந்துள்ளது.

ஏற்கனவே விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றும் அவரால் இன்னும் பட்டத்தை அதிகாரப்பூர்வமாக பெற முடியவில்லை. அவருக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் அளிக்க மதுரையில் நடக்கவிருந்த விழா தள்ளிப் போனது.

இந்நிலையில் விஜய்யின் பட்டத்தை பெற ஜெய் துடிக்கிறாரே.

 

விபச்சார வழக்கு: மேலும் 6 மாதம் காப்பகத்தில் தங்க ஸ்வேதா பாசுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை ஸ்வேதா பாசு மேலும் ஆறு மாதங்கள் வரை காப்பகத்திலேயே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹைதராபாத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி நடிகை ஸ்வேதா பாசுவை கைது செய்தனர் ஆந்திர போலீசார். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவி இயக்குனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

விபச்சார வழக்கு: மேலும் 6 மாதம் காப்பகத்தில் தங்க ஸ்வேதா பாசுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறினார் ஸ்வேதா பாசு. அவரை ஹைதராபாதில் உள்ள ஒரு மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகையின் தாயார் எர்ரமஞ்சில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'தனது மகள் மேஜர் என்பதால் அவர் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருப்பதா? அல்லது வீட்டுக்கு திரும்புவதா? என முடிவெடுக்கும் உரிமை அவருக்குத்தான் உள்ளது. அவரை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல். எனவே அவரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு, அந்த நடிகைக்கு இன்னும் 6 மாதங்களுக்கு ஆலோசனையும், மறுவாழ்வும் தேவைப்படுகிறது. எனவே அவர் மேலும் 6 மாதங்களுக்கு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபற்றி நடிகையின் தாயார் சார்பில் ஆஜரான வக்கீல் பிரதீப்குமார் கூறும்போது, ‘‘இந்த உத்தரவை எதிர்த்து செசன்சு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அந்த மனு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்," என்றார்.

 

வற்புறுத்தல் அல்ல... அம்மா மீதான அன்பும், நம்பிக்கையுமே உண்ணாவிரதத்துக்கு காரணம் - சரத்குமார்

திரையுலகம் நேற்று உண்ணாவிரதமிருந்ததற்கு காரணம் யாருடைய வற்புறுத்தலுமில்லை. அம்மா மீதான அன்பும் நம்பிக்கையும்தான் என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

ஆளும் தரப்பில் நிர்பந்தம், மிரட்டல் காரணமாகத்தான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நேற்று திரையுலகம் உண்ணாவிரதம் நடத்தியதாக ஒரு தரப்பு செய்தி பரப்பியது.

வற்புறுத்தல் அல்ல... அம்மா மீதான அன்பும், நம்பிக்கையுமே உண்ணாவிரதத்துக்கு காரணம் - சரத்குமார்

இதுகுறித்து உண்ணாவிரதத்துக்கு தலைமை வகித்த சரத்குமாரிடம் கேட்டபோது, 'எங்களை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. மிரட்டவும் இல்லை.

நாங்கள் அனைவரும் அம்மாவின் மீதான் அன்பு மற்றும் நம்பிக்கையை உணர்த்தும் வகையில் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டோம். அம்மா இந்த திரைத்துறைக்கு அளித்த ஆதரவு ஏராளம். அவருக்கு இந்த நேரத்தில் நாங்கள் தரும் ஆதரவு இது," என்றார்.

இந்த உண்ணாவிரதத்தை போராட்டம் என்று சிலர் சொல்வது தவறு. இது உணர்வுகளைக் காட்டும் ஒரு நிகழ்வு மட்டுமே என்பதை, உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் தெரிவித்தார்.

 

யு சான்று பெற்றது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தணிக்கைக் குழுவில் யு சான்று பெற்றுள்ளது.

கண்ணன் இயக்கத்தில், ப்ரியா ஆனந்த், விமல், சூரி நடித்துள்ள படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. நடிகை விசாகா ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.

யு சான்று பெற்றது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை காந்தி பிறந்த நாளையொட்டி வெளியாகவிருக்கிறது. நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர், தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவில் அனைத்து தரப்பும் பார்க்கக் கூடிய படம் எனும் வகையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எந்த காட்சியையும் தணிக்கைக் குழு ஆட்சேபிக்கவில்லை.

200-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.

 

சமந்தா கூட நடிக்கணும்... தலக்கோணம் நாயகனின் தலையாய ஆசை!

சிக்கி முக்கி, சமீபத்தில் வெளியான தலக்கோணம் போன்ற படங்களில் நடித்த ஜித்தேஷ் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஏரோநாட்டிகல் எஞ்ஜினியரிங் முடித்திருக்கிறார். ஆனால் ஆசை சினிமாவின் மீதுதான்.

எனவே நடிக்க வந்து இரு படங்களையும் முடித்துவிட்டார்.

சமந்தா கூட நடிக்கணும்... தலக்கோணம் நாயகனின் தலையாய ஆசை!

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "ஏரோனேட்டிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருந்தும், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் மாஸ்டர் ஸ்ரீதரிடம் முறையாக நான்கு ஆண்டுகள் நடனம் கற்றேன். ‘சுட்டி டிவி'யில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித்தருவது, நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினேன்.

பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஒருமுறை எனது மேடை நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்த ‘சிக்கி முக்கி' படத்தின் தயாரிப்பாளர், என்னை நாயகனாக அப்படத்தில் அறிமுகம் செய்தார்.

இது மட்டுமல்லாமல், சில குறும்படங்களிலும் நடித்துள்ளேன். ‘கலைஞர் டிவி'யின் ‘நாளைய இயக்குனரி'ல் வெளிவந்த ‘சத்ய பிரமாணம்' என்ற குறும்படத்தில் நடித்தேன். இதன் இயக்குனர் ‘விழா' படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன். ‘சத்ய பிரமாணம்' குறும்படமும் விரைவில் முழுநீள படமாக வெளிவர இருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற குறும்படங்கள், விளம்பரங்களிலும் நடித்துள்ளேன்.

பெரிய படங்களில் நடித்தால்தான் இன்டஸ்ட்ரியில் பெரிதாக வெளியில் தெரிய முடியும். "சிக்கி முக்கி', ‘தலக்கோணம்' படங்களுக்குப் பிறகு வேறு எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. எனக்கு, பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும்; சமந்தா போன்ற முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையாக உள்ளது," என்றார்.

ஆசைதானே.. படலாம்.. தப்பேயில்ல!

 

கன்னியும் காளையும் செம காதல் படத்துக்கு இடைக்காலத் தடை!

"கன்னியும் காளையும் செம காதல்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சிங்கம் பட நிறுவனத்தைச் சேர்ந்த ககன் போத்ரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.வடிவுடையான் "கன்னியும் காளையும் செம காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளார்.

கன்னியும் காளையும் செம காதல் படத்துக்கு இடைக்காலத் தடை!

இதில், நடிகர் கரண் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான நெகட்டிவ் உரிமை, தொலைக்காட்சி உரிமை போன்ற அனைத்தையும் நான் வாங்கியுள்ளேன். இதற்காக ஒப்பந்தப்படி ரூ. 40 லட்சம் வழங்கியுள்ளேன்.

இந்த நிலையில், இந்தப் படத்தை வேறொருவர் மூலம் வெளியிட தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எனவே, இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்," என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 17-ஆம் தேதி வரை படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 

விஜய்யின் தூக்கத்தை விழுந்து விழுந்து கெடுக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல அவரது ரசிகர்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய ரசிகர்களால் நடிகர் விஜய் பெரும் அப்செட்டுக்குள்ளானார்.

இந்த நிலையில் விஜய்யின் படத்தைப் போட்டு மேலும் ஒரு பரபரப்புப் போஸ்டரை ஒட்டி அவரை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர்.

சொத்துக் குவிப்புவழக்கில் ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவுக்கு நன்றி தெரிவித்து புதிய போஸ்டர் விஜய் படத்துடன் வெளியாகியுள்ளது.

விஜய்யின் தூக்கத்தை விழுந்து விழுந்து கெடுக்கும் ரசிகர்கள்!

அந்தப் போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகம்...

நன்றி நன்றி நன்றி

தமிழகத்தில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கித் தந்த பிரதமர் மோடி அவர்களுக்கும், நீதிபதி குன்ஹா அவர்களுக்கும்

எங்கள் இயக்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம்

இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று அதில் போட்டுள்ளனர்.

விஜய் நிம்மதியைக் கெடுக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கே....!

பாவம்யா அவரு.. விட்டுடுங்க!

 

நான் கோடீஸ்வரியாக்கும், நடித்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை: இளம்நடிகை

சென்னை: நான் எல்லாம் கோடீஸ்வரி என்று கூறி படப்பிடிப்பில் புதுமுக நடிகை பண்ணும் பந்தா தாங்க முடியவில்லையாம்.

இடுப்பழகியின் தங்கையின் பெயரை வைத்திருக்கும் நடிகை தீராத விளையாட்டுப் பிள்ளை பெயர் கொண்ட நடிகரின் படம் மூலம் கோலிவுட் வந்தார். மச்சான்ஸ் நடிகையின் மாநிலத்தவரான அவர் தமிழில் இதுவரை 2 படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன், படப்பிடிப்பில் சொகுசு கேரவன் தான் வேண்டும், நான் சொன்னது தான் சம்பளம் என்று அம்மணி கண்டிஷன் மேல் கண்டிஷன் போடுகிறாராம். இப்ப தான் நடிக்க வந்துள்ளீர்கள் அதற்குள் இத்தனை கண்டிஷனா என்று கேட்டால், நான் எல்லாம் கோடீஸ்வரி. இப்படி நடித்து தான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை, ஏதோ பொழுதுபோக்கிற்காக தான் நடிக்கிறேன் என்கிறாராம்.

அம்மணியின் இந்த கமெண்ட்டை நிச்சயம் பலர் மனதில் வைத்து செயல்படுவார்கள் என்று கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது. முன்னதாக நாட்டாமையின் மகளும் எனக்கு நடித்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக தலைநகர் பெங்களூர், பரப்பன அக்ரஹாராவில் தலைமைச் செயலகம்: ராம் கோபால் வர்மா குசும்பு

சென்னை: தமிழகத்தின் தலைநகர் பெங்களூர் என்று சர்ச்சை மன்னன் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மறுபெயர் சர்ச்சை மன்னன். எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது இடக்குமுடக்காக கூறுவது, ட்வீட் செய்வதுமாக உள்ளார். அவர் வாயைத் திறந்து பேசினாலும் சரி, படம் எடுத்தாலும் சரி சர்ச்சையை கிளப்பிவிடுவார் என்று கூறும் அளவுக்கு உள்ளார்.

தமிழக தலைநகர் பெங்களூர், தலைமைச் செயலகம் பரப்பன அக்ரஹாரா: ராம் கோபால் வர்மா குசும்பு

இப்படி வழிய சர்ச்சையை கிளப்புபவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பு பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காமலா இருப்பார். இதோ அவர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பு பற்றி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தற்போது தமிழகத்தின் தலைநகரமாக பெங்களூரும், தலைமைச் செயலகமாக பரப்பன அக்ரஹாராவும் மாறியிருப்பது எனக்கு பிடித்துள்ளது... இந்தியா முழுவதும் ஒன்று என்பதற்கு இதுவே ஆதாரம் என்று தெரிவித்துள்ளார்.

 

நம்பர் நடிகையை புகழ்ந்து தள்ளும் இயக்குனர்: எரிச்சலில் உயர்ந்த நடிகை

சென்னை: தல படத்தின் இயக்குனர் நம்பர் நடிகையை புகழ்ந்து தள்ளுவது உயர்ந்த நடிகையை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.

தல நடிகர் மேனன் இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தில் உயர்ந்த நாயகி, நம்பர் நடிகை என்று 2 ஹீரோயின்கள். அதில் நம்பர் நடிகை ஏற்கனவே மேனன் இயக்குனரின் படத்தில் நடித்து அது ஹிட்டாகியுள்ளது.

ஆனால் உயர்ந்த நடிகை இந்த இயக்குனரின் படத்தில் முதல்முதலாக நடிக்கிறார். படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தாலும் டூயட் எல்லாம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சும்மா இல்லாமல் நம்பர் நடிகையை படப்பிடிப்பில் புகழ்ந்து தள்ளுகிறாராம். இதை கேட்டு உயர்ந்த நடிகை எரிச்சல் அடைந்துள்ளாராம்.

அவர் படத்தில் நடிக்க உயர்ந்த நடிகை ஒப்புக் கொண்டதற்கு பெரிய நடிகர் நடிக்கிறார் என்பது தான் காரணம் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. அம்மணி இந்த படம் தவிர ஸ்டைல் நடிகரின் படம் மற்றும் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

படத்தில் நம்பர் நடிகை ஹீரோவின் மனைவியாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடிக்கிறார்.

 

மெட்ராஸை மிஸ் பண்ணிட்டேனே, மிஸ் பண்ணிட்டேனே: புலம்பும் ஜீவா

சென்னை: தன்னை தேடி வந்த மெட்ராஸ் பட வாய்ப்பை நழுவவிட்டதை நினைத்து ஜீவா புலம்புகிறாராம்.

ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படம் நன்றாக ஓடுகிறது. நீண்ட நாள் கழித்து கார்த்திக்கு ஒரு ஹிட் கிடைத்துள்ளது என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். படம் நன்றாகப் போவதால் கார்த்தி மகிழ்ச்சியில் உள்ளார். அதே சமயம் மெட்ராஸ் படத்தை நினைத்து ஒரு நடிகர் கவலையில் உள்ளார். அவர் தான் ஜீவா.

மெட்ராஸை மிஸ் பண்ணிட்டேனே, மிஸ் பண்ணிட்டேனே: புலம்பும் ஜீவா

இயக்குனர் ரஞ்சித் முதலில் ஜீவாவை சந்தித்து தான் மெட்ராஸ் கதையை கூறி நடிக்குமாறு கேட்டுள்ளார். கதையை கேட்ட ஜீவா படத்தில் இரண்டாவது ஹீரோவுக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது எனக்கு இருக்காது போன்று என்று கூறி நடிக்க மறுத்துள்ளார்.

அதன் பிறகே ரஞ்சித் நேராக கார்த்தியிடம் சென்று கதையை கூற அவர் ஓ.கே. சொல்லியிருக்கிறார். சில கதைகளை கேட்கும்போது பெரிதாக தெரியாது ஆனால் படமாக்கப்பட்டு ரிலீஸான பிறகு ஹிட்டாகும். சில கதைகள் கேட்கும்போது ஆஹா, ஓஹோ என்று இருக்கும் ஆனால் வெளியான பிறகு ஓடாமல் போகலாம்.

நடிகர்கள் இப்படி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து அது ஹிட்டானது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

 

உண்ணாவிரதம்.. கமல், விஜய் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுவா இருக்குமோ...?

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நடந்த திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதி முக்கியமான கலைஞர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவில்லை. மற்ற முக்கியஸ்தர்களான கமல்ஹாசன், விஜய் ஆகியோரும் வரவில்லை. இருவரது படங்களுமே கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மிகப் பெரிய நெருக்கடிகளைச் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.

உண்ணாவிரதம்.. கமல், விஜய் கலந்து கொள்ளாததற்கு காரணம் இதுவா இருக்குமோ...?

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மிகப் பெரிய சவாலைச் சந்தித்தது. அந்தப் படத்திற்கு ஜெயலலிதா அரசு அதிரடியாக தடையும் விதித்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று அறிவித்து மேலும் பரபரப்பைக் கூட்டினார்.

இந்தப் பட விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் தரும் நிலையும் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் ஒரு வழியாக தீர்ந்து படமும் வெளியாகி நல்ல வசூலையும் பார்த்தது.

அடுத்தது விஜய். இவரது தலைவா படத்தின் சில காட்சிகள், படத்தின் தலைப்புக்குக் கீழே வைக்கப்பட்ட பன்ச் லைன் ஆகியவை ஜெயலலிதா அரசை கடுமையான கோபத்துக்குள்ளாக்கியது. டைம் டூ லீட் என்று போடப்பட்ட வாசகத்தால் படத்தை வெளியிட முடியாத நிலைக்குக் கொண்டு போய் விட்டது அதிமுக அரசு.

விஜய்யும், படத் தயாரிப்பாளரும் வீடியோ செய்தி மூலம் கெஞ்சும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர். உச்சகட்டமாக தனது தந்தையுடன் கொடநாடு எஸ்டேட்டுக்கே ஓடினார் விஜய். ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் பன்ச்லைனை தூக்கி விட்டு படத்தை வெளியிட சம்மதித்த பிறகே படத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது. படம் பெயிலியர்!.

ஜெயலலிதாவுக்குத் தீர்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பலர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியதாக செய்திகள் வந்து விஜய் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவான இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதேபோல அஜீத் உள்ளிட்ட பெரிய நடிகர்களும், இயக்குநர் ஷங்கர் போன்ற பெரியவர்களும் உண்ணாவிரதத்திற்கு வருவார்களா என்பதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்தது. ஆனால் யாருமே வரவில்லை.

 

பி.வாசுவின் மருமகளிடம் தகாத முறையில் பேசி சீண்டிய வாலிபர் கைது

சென்னை: இயக்குநர் பி.வாசுவின் மருமகளான, நடிகர் சக்தியின் மனைவியிடம் தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜாகிர் உசேன். 27 வயதான இவர் திரைப்படத்துறையில் உள்ளவர். வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் சக்தியின் மனைவியிடம் சில்மிஷம் செய்தததற்காக தற்போது கைதாகியுள்ளார்.

பி.வாசுவின் மருமகளிடம் தகாத முறையில் பேசி சீண்டிய வாலிபர் கைது

இயக்குநர் பி.வாசுவின் மகனான சக்தி, பல படங்களில் நடித்துள்ளார். தனது குடும்பத்துடன் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வருகிறார்.

சக்தியின் மனைவி வெளியில் போகும்போதெல்லாம் இந்த ஜாகிர் உசேன் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸாரும் ஜாகிர் உசேனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தனது வேலையைக் காட்டியுள்ளார் ஜாகிர் உசேன். இதையடுத்து சக்தியின் மனைவி அபிராமபுரம் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது குழந்தையை ஆழ்வார் பேட்டையில் உள்ள பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்ற போது, ஜாகிர் உசேன் பின்னால் தொடர்ந்து வந்து, தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜாகிர் உசேனை மீண்டும் கைது செய்தனர். இந்த சம்பவம் திரைத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதாவை சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள் - நடிகை பபிதா கொந்தளிப்பு

சென்னை: சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட முன்னாள் கவர்ச்சி நடிகையும், மறைந்த ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா கண்ணீர் விட்டு அழுதபடி கோபமாக பேட்டி கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் பாடிகார்டாக இருந்தவர் ஜஸ்டின். ஸ்டண்ட் நடிகரான இவர் பல படங்களில் எம்ஜிஆருடன் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஜஸ்டினின் மகள்தான் பபிதா. இவர் அதிரடியான கவர்ச்சியான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்.

இப்போது அதிமுகவில் மேடைப் பேச்சாளராக இருக்கிறார். உண்ணாவிரதப் பகுதியில் ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது (தேம்பியபடி பேசினார்). அம்மா இரும்புப் பெண்மணி. அப்படிப்பட்ட இரும்புப் பெண்மணியை சிறையில் போட்டு அடைத்து சித்திரவதை செய்கிறார்கள்.

ஜெயலலிதாவை சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள் - நடிகை பபிதா கொந்தளிப்பு

இதைப் பார்த்து தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.

புரட்சித் தலைவி அம்மா, சிங்க நடை போட்டு சிகரத்தை எட்டி மீண்டும் வலம் வருவார்கள். நிச்சயம் மீண்டும் வருவார். பாரதப் பிரதமராக உயர்ந்து காட்டுவார். அவருக்காக உயிரையும் கொடுக்க பலர் காத்துக் கொண்டுள்ளனர். அப்படி உயிரைக் கொடுக்க முன்வருபவர்களில் யார் முதலாவதாக இருப்பார் என்றால் அது நானாகத்தான் இருப்பேன் என்றார் பபிதா.

 

தர்மதேவதைக்கு அநீதியா.. மனோபாலா ஆவேசம்

சென்னை: இது தர்மதேவதைக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நடிகரும், இயக்குநருமான மனோபாலா கூறியுள்ளார்.

ஜெயலலிதா கைதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று திரையுலகின் உண்ணாவிரதம் நடந்தது. இதில் திரையுலகின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தர்மதேவதைக்கு அநீதியா.. மனோபாலா ஆவேசம்

இதில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குநருமான மனோபாலா கூறுகையில், தர்மதேவதைக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. இதைப் பார்த்து அனைவரும் கொதித்துப் போயுள்ளோம்.

அம்மா மீண்டும் முதல்வராக வருவார், மீண்டும் பொறுப்பேற்பார். இதை விட வேறு பெரிய உயரத்திற்கு போகப் போகிறார் பாரதப் பிரதமராக உயர்வார். இந்த நாட்டையே முன்னேற்றிச் செல்வார். இன்று பிற்பகலுக்குள் ஒரு நல்ல முடிவை நாங்கள் பெங்களூரிலிருந்து எதிர்பார்க்கிறோம்.

இந்த வேதனையை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றார் மனோபாலா. ஆனால் பிற்பகலில் ஜெயலலிதாவுக்கு இன்று ஜாமீன் இல்லை என்ற முடிவே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜெயலலிதாவுக்காக நடந்த உண்ணாவிரதம்: முன்னணி நடிகர் நடிகைகள் ஆப்சென்ட்!

சின்னத் திரை, பெரிய திரையைச் சேர்ந்த பலரும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்றாலும், முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் யாருமே பிற்பகல் வரை இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

ரஜினி, அஜீத் ஹைதராபாதிலும், கமல் உடல்நலமின்றி ஓய்விலும், விஜய் மும்பையிலும் உள்ளதால் அவர்களால் பங்கேற்க முடியவில்லையாம்.

ஜெயலலிதாவுக்காக நடந்த உண்ணாவிரதம்: முன்னணி நடிகர் நடிகைகள் ஆப்சென்ட்!

பிற்பகல் வரை இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்:

தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, கலைப்புலி தாணு, கேடி குஞ்சுமோன், இயக்குநர் சிராஜ், நடிகர் தியாகு, ராமராஜன், டி அருள்பதி, கே ஆர் செல்வராஜ், குண்டு கல்யாணம், விக்ரமன், காஜா மொய்தீன், ஜேகே ரித்தீஷ், வேல் முருகன், சுரேஷ் காமாட்சி, ஆர் கே செல்வமணி, மனோபாலா, தேவா, சச்சு, சங்கர் கணேஷ், கே பாக்யராஜ், இப்ராகிம் ராவுத்தர்

நளினி, கவிதாபாரதி, ஏ எல் அழகப்பன், ராகராஜன் ராஜா, சித்ரா லட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்டன்ட் தவசி, அதியமான், கலைப்புலி சேகரன், ஆர்வி உதயகுமார், பி வாசு, ஸ்ரீகாந்த், சரத்குமார், வெண்ணி்ற ஆடை நிர்மலா, செந்தில், ஆர் கே சண்முகம், கேயார், மன்சூர் அலிகான், எஸ் ஏ சந்திரசேகரன், கலைப்புலி சேகரன், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம்

ஜெயலலிதாவுக்காக நடந்த உண்ணாவிரதம்: முன்னணி நடிகர் நடிகைகள் ஆப்சென்ட்!

ரமேஷ் கன்னா, பிரவீன் காந்த், எஸ் ஜே சூர்யா, பெப்சி விஜயன், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், சிங்க முத்து, சவிதா, அனு மோகன், அபிராமி ராமநாதன், விவேக், மயில்சாமி, சிஆர் சரஸ்வதி, ஆர்த்தி, சத்யராஜ், சத்யஜோதி தியாகராஜன், பிரபு, விக்ரம் பிரபு

சிபிராஜ், ரவிமரியா, பாத்திமா பாபு, ஜாகுவார் தங்கம், நரேன், சினேகன், முக்தா சீனிவாசன், கே முரளிதரன், சவுந்தர்ராஜன், கல்யாண், சக்தி, லியாகத் அலிகான், சேரன், தரணி, குட்டி பத்மினி

ரவி கொட்டாரக்கரா, புஷ்பா கந்தசாமி, புனேஸ்வரி, சிங்கம்புலி, விபி கலைராஜன் எம்எல்ஏ, தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜன், இயக்குநர் லிங்குசாமி.

 

சீக்கிரமா வாங்கம்மா.. நீங்க வந்துருவீங்கம்மா.. நளினி அழுகை!

சென்னை: ஜெயலலிதாவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அத்தனை பேரும் அழுது கொண்டிருக்கிறோம். அம்மா, சீக்கிரமாக வாங்கம்மா, நீங்க வந்துருவீங்கம்மா என்று நடிகை நளினி அழுதபடி கூறினார்.

நடிகை நளினி, சென்னையில் இன்று நடந்த திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

சீக்கிரமா வாங்கம்மா.. நீங்க வந்துருவீங்கம்மா.. நளினி அழுகை!

உண்ணாவிரதத்திற்கு இடையே அவர் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழக மக்கள் அத்தனை பேரும் அனாதைகளாகி நிற்கிறோம். அத்தனை வீடுகளிலும் தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

அனாதைகளாகி விட்டதைப் போல நாங்கள் உணர்கிறோம். அத்தனை பேரும் அம்மாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அம்மா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.

அம்மா, நீங்க தனியா இல்லைம்மா. நாங்க இருக்கிறோம், எல்லோரும் இருக்கிறோம். உங்களுக்காக வேண்டிக் கொண்டே இருக்கிறோம். சீக்கிரமா வாங்கம்மா, நீங்க வந்துருவீங்கம்மா.. வாங்கம்மா என்று அழுதபடி கூறினார்.

 

உண்ணாவிரதத்தில் சூர்யா, விக்ரம், கார்த்தி, சூரி, இயக்குநர் பாலா

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில், முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காத குறையைத் தீர்த்து வைத்தனர் சூர்யா, விக்ரம், கார்த்தி போன்றவர்கள்.

விஜய், அஜீத் போன்றவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவருமே இன்று உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.

உண்ணாவிரதத்தில் சூர்யா, விக்ரம், கார்த்தி, சூரி, இயக்குநர் பாலா

மூத்த கலைஞர்கள், அதிமுக அனுதாபிகள், சின்னத்திரைக் கலைஞர்கள் மட்டுமே திரண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலை நிறைத்தனர்.

மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கலைஞர்கள் என்று யாருமில்லையே என பேச ஆரம்பித்துவிட்டனர் நடிகர் நடிகைகளைப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் வந்திருந்த மக்கள்.

இந்த நிலையில், உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மதியத்துக்கு மேல் வந்தனர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம், சூரி ஆகியோர். அவர்களைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவும் வந்தார்.

முன்னணி நடிகைகள் ஒருவர் கூட இதுவரை வரவில்லை. வருவார்கள் என்றும் நம்பிக்கையில்லை. கடைசி நேரத்தில் மேலும் சில முன்னணி நடிகர்கள் ஆஜராகக் கூடும்.

 

தமன்னா நடித்த ஆகடு தோல்வி: விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி

தமன்னா, மகேஷ்பாபு நடித்த ஆகடு படம் வசூலில் தோல்வியைத் தழுவியதாகக் கூறி அந்தப் படத்தின் விநியோகஸ்தர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

‘ஆகடு' படம் சமீபத்தில்தான் ரிலீசானது. பிற மொழிகளில் இதனை ரீமேக் செய்ய போட்டி போட்டனர்.

தமன்னா நடித்த ஆகடு தோல்வி: விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி

இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் குவித்ததாகவும் கூறி வந்தனர். ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பு இதனை மறுத்துள்ளது.

படம் தோல்வி அடைந்ததாகவும், பெரிய வசூல் என போலியாகக் கணக்கு காட்டுகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெல்லூர் பகுதியில் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான தொகையே வசூலானதாம். இதனால் அந்த பகுதி விநியோகஸ்தர் அதிர்ச்சி அடைந்ததாகவும், தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தால் அவருக்கு மட்டும் ரூ 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

 

தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா, முடியாது சார்.. தேவா

சென்னை: தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா.. முடியாது சார். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கான தண்டனையும். அவர் மீண்டு வருவார், சாதனை படைப்பார். பிரதமர் அளவுக்கு உயர்வார்.. இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இடையில் செய்தியாளரிடம் பேசுகையில், வஞ்சக சூழ்ச்சி காரணமாக அம்மாவை கைது செய்து உள்ளே வைத்துள்ளனர். தர்ம தேவதைக்கே அநீதியா.. என்ன சார் இது. இது அநியாயம் சார்.

தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா, முடியாது சார்.. தேவா

அவரது வளர்ச்சி சூழ்ச்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை சார். அவரை ஜெயிக்க முடியவில்லை. தாண்டிப் போக முடியவில்லை. வெறுப்பும், வயிற்றெரிச்சலும்தான் இதற்குக் காரணம்.

அவர் தர்மதேவதை. தெய்வத்தை எப்படி மனிதன் தண்டிக்க முடியாதோ அதேபோலத்தான் ஜெயலலிதா அவர்களையும் தண்டிக்க முடியாது.

இதையெல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் அவர் முதல்வராக வருவார். இவ்வளவு பேருடைய பிரேயரும் அவரை வெளியில் கொண்டு வந்தே தீரும். அவர் சாதித்துத்தான் ஆவார். பிரதமர் ஆவார். இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று கூறினார் தேவா.

 

கடைசிவரை வரவே இல்லை ரஜினி, கமல், விஜய், அஜீத்... முன்னணி நடிகைகளும் ஆப்சென்ட்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை ஜெயலலிதாவை ஆதரித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கடைசி வரை முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை.

முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படும் ஒருவர் கூட சேப்பாக்கம் உண்ணாவிரதப் பந்தல் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

கடைசிவரை வரவே இல்லை ரஜினி, கமல், விஜய், அஜீத்... முன்னணி நடிகைகளும் ஆப்சென்ட்!

தமிழ் திரையுலகின் அத்தனை சங்கங்களும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்றன. பங்கேற்ற திரையுலக பிரபலங்கள்:

தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா, கலைப்புலி தாணு, கேடி குஞ்சுமோன், இயக்குநர் சிராஜ், நடிகர் தியாகு, ராமராஜன், டி அருள்பதி, கே ஆர் செல்வராஜ், குண்டு கல்யாணம், விக்ரமன், காஜா மொய்தீன், ஜேகே ரித்தீஷ், வேல் முருகன், சுரேஷ் காமாட்சி, ஆர் கே செல்வமணி, மனோபாலா, தேவா, சச்சு, சங்கர் கணேஷ், கே பாக்யராஜ், இப்ராகிம் ராவுத்தர்

நளினி, கவிதாபாரதி, ஏ எல் அழகப்பன், ராகராஜன் ராஜா, சித்ரா லட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்டன்ட் தவசி, அதியமான், கலைப்புலி சேகரன், ஆர்வி உதயகுமார், பி வாசு, ஸ்ரீகாந்த், சரத்குமார், வெண்ணி்ற ஆடை நிர்மலா, செந்தில், ஆர் கே சண்முகம், கேயார், மன்சூர் அலிகான், எஸ் ஏ சந்திரசேகரன், கலைப்புலி சேகரன், நிழல்கள் ரவி, அஜய் ரத்னம்

ரமேஷ் கன்னா, பிரவீன் காந்த், எஸ் ஜே சூர்யா, பெப்சி விஜயன், வையாபுரி, எம்எஸ் பாஸ்கர், சிங்க முத்து, சவிதா, அனு மோகன், அபிராமி ராமநாதன், விவேக், மயில்சாமி, சிஆர் சரஸ்வதி, ஆர்த்தி, சத்யராஜ், சத்யஜோதி தியாகராஜன், பிரபு, விக்ரம் பிரபு

சிபிராஜ், ரவிமரியா, பாத்திமா பாபு, ஜாகுவார் தங்கம், நரேன், சினேகன், முக்தா சீனிவாசன், கே முரளிதரன், சவுந்தர்ராஜன், கல்யாண், சக்தி, லியாகத் அலிகான், சேரன், தரணி, குட்டி பத்மினி

ரவி கொட்டாரக்கரா, புஷ்பா கந்தசாமி, புனேஸ்வரி, சிங்கம்புலி, விபி கலைராஜன் எம்எல்ஏ, தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜன், இயக்குநர் லிங்குசாமி.

முன்னணி கலைஞர்கள் என்று பார்த்தால், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, இயக்குநர் பாலா என சிலர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களில் சிவகார்த்திகேயன் மட்டும் பிற்பகலில் வந்து மாலை வரை அமர்ந்திருந்தார். மற்றவர்கள் பத்துப் பதினைந்து நிமிடம் இருந்துவிட்டு கிளம்பினர்.

ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்களில் யாராவது வரக்கூடும். கமல் உள்ளூரிலேயே இருப்பதால் அவராவது வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் மாலை 5 மணி வரை யாரும் வரவில்லை.

வந்திருந்த நடிகைகளில் ஒருவர் கூட இப்போது ஃபீல்டில் இல்லை. அல்லது வயதானவர்கள். இப்போது பிரபலமாக, முன்னணியில் உள்ள ஒருவர் கூட இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் உண்ணாவிரதத்துக்கு தலைமையே நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார்தான்!

 

அம்மா மகா சக்தி... தெய்வத்தை மனிதனால் தண்டிக்க முடியுமா.. உண்ணாவிரத உணர்ச்சிவசம்!

இன்று திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் பலர் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினர்.

மவுன உண்ணாவிரதம் என்று கூறித்தான் இதனை திரையுலகினர் ஆரம்பித்தனர். ஆனால் ஜெயா டிவிக்காரர்கள் விடவில்லை. ஒவ்வொரு நடிகர் நடிகை வரும்போதும், ஓடிப் போய் அவர்கள் முன் மைக்கை நீட்டி, அம்மா தமிழகத்துக்கு செய்த நன்மைகளில் ஆரம்பித்து, இப்போது தண்டனைக்குள்ளானது வரை நீட்டி முழக்கிவிட்டு மைக்கை நீட்டுவார் ஜெயா டிவி செய்தியாளர்.

அம்மா மகா சக்தி... தெய்வத்தை மனிதனால் தண்டிக்க முடியுமா..  உண்ணாவிரத உணர்ச்சிவசம்!  

நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த அளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டுப் போனார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், இந்தத் தீர்ப்பு சதி என்றும் உள்நோக்கம் கொண்டதென்றும் கூறினர்.

வெண்ணிற ஆடை நிர்மலா பேசும்போது, புரட்சித் தலைவி அம்மா இந்த மாநிலத்தின் மகா சக்தி.. இன்னும் புத்துணர்வோடு எழுச்சி பெற்று வருவார் என்றார்.

நடிகர் தேவா பேசும்போது, 'தெய்வத்தை மனிதனால தண்டிக்க முடியுமா... முடியாது சார், முடியாது.. எங்க அம்மா தெய்வம்..' என்று கண்கலங்கினார்.

நடிகை குயிலி பேசும்போது, 'இந்தியாவின் மாபெரும் தலைவர் அம்மா.. அவர் சர்வதேச மக்களையே காப்பாற்றக் கூடிய சக்தி படைத்தைவர்.. அவரைக் கைது செய்யலாமா?' என்றார்.

நடிகரை செந்தில் பேசுகையில், 'எங்க அம்மா.. எங்க அம்மாவை கைது செய்தது மாபெரும் தவறு செய்துவிட்டார்கள்...' என்று கூறி அழுதார்.

மயில்சாமி, சங்கர் கணேஷ், மனோபாலா, சச்சு போன்றவர்கள் கண்கலங்க உணர்ச்சி மயமாக ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தனர்.

 

பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் நடிகர் எஸ்எஸ்ஆர்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்காக இன்று திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பழரசம் கொடுத்து முடித்து வைத்தார் பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரே இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதில் திரையுலகின் அனைத்து சங்கங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து டி சிவா, கேயார், நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், ராதாரவி, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் போன்றவர்கள் வந்திருந்தனர்.

பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் நடிகர் எஸ்எஸ்ஆர்

சரத்குமார் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேடையில் யாரும் பேசவில்லை. அவர்களிடம் ஜெயா டிவி பைட்ஸ் எடுத்து நேரடியாக ஒளிபரப்பியது.

நகைச்சுவை நடிகர்கள், முன்னாள் நடிகர்கள், அதிமுக ஆதரவு கலைஞர்களே பெருமளவு இதில் பங்கேற்றனர். லைம்லைட்டில் உள்ளவர்கள் என்று பார்த்தால் சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி, விஜய் சேதுபதி, விவேக் போன்ற சிலர் மட்டும்தான் பங்கேற்றனர்.

முன்னணி நடிகைகள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.

மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் நிறைவடைந்தது. இதில் காலையிலிருந்து மாலை வரை பங்கேற்றவர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் பழம்பெரும் நடிகரும் முன்னாள் எம்பியுமான எஸ்எஸ் ராஜேந்திரன்.

 

'அம்மா'வுக்காக கொஞ்ச நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்த சூர்யா, விக்ரம், விமல், கார்த்தி

சென்னை: ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து திரை உலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வந்த இளம் நடிகர்கள் சிலர் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட திரை உலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசினர். சிலர் அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து குமுறினர், சிலர் கதறி அழுதனர்.

'அம்மா'வுக்காக கொஞ்ச நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருந்த சூர்யா, விக்ரம், விமல், கார்த்தி

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ரஜினி, கமல் ஹாஸன், அஜீத், விஜய் ஆகியோர் வரவில்லை. சூர்யா உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பந்தலுக்கு வந்த 15 நிமிடத்தில் அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

அதேபோல விக்ரம், விமல், கார்த்தி போன்ற நடிகர்களும் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.