விஸ்வரூபத்திற்கு தடைவிதித்தது நியாயமல்ல: ஆமீர் கான்

Aamir Khan Disapproves Ban On Vishwaroopam

மும்பை: விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது நியாயம் அன்று என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கையை புண்புடுத்தும் வகையில் காட்சி இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் படத்திற்கு தடை விதித்தது. இதற்கிடையே விஸ்வரூபத்திற்கு தடை விதித்ததை கண்டித்தும், கமலுக்கு ஆதரவு தெரிவித்தும் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் விஸ்வரூபம் மீதான தடை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சென்சார் போர்டு பட்ததைப் பார்த்து அதை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்த பிறகு விஸ்வரூபத்திற்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும். இது ஜனநாயக நாடு. விஸ்வரூபத்திற்கு தடை விதித்திருப்பது நியாயம் இல்லை என்றார்.

 

படத்தை விற்றுவிட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை!- தமிழக அரசு இன்னொரு அதிரடி வாதம்!

Kamal Hasn T Any Rights Sue Against Govt

சென்னை: விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே விற்றுவிட்ட கமல் ஹாஸனுக்கு, அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இல்லை என்று தமிழக அரசு அதிரடி வாதத்தை நீதிமன்றத்தில் வைத்துள்ளது.

இந்தப் படம் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாகக் கூறி தமிழக அரசிடம் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுபட்டு குரல் கொடுக்க, படத்துக்கு 2 வார காலம் தடை விதித்ததது தமிழக அரசு. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களும் கடிதம் கொடுத்துள்ளனர் அரசுக்கு.

இவற்றை எதிர்த்து இரு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார் கமல். இந்த வழக்குகளின் விசாரணை மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. இடையில் படத்தையும் நீதிபதிகள் குழு பார்த்து முடித்தது.

இந்தப் படத்துக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது...? ஏன் விலக்கக் கூடாது? என்று அரசுத் தரப்பும் கமல் தரப்பும் தீவிரமாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாதம் செய்து வருகின்றன.

இதில் அரசுத் தரப்பு வைத்துள்ள ஒரு வாதம் மிக முக்கியாமானது. "விஸ்வரூபம் என்ற product-ஐ கமல்ஹாஸன் வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் எந்த உரிமையும் இப்போது அவரிடம் இல்லை. எனவே இந்தப் படத்தின் தடைக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை கமல்ஹாஸனுக்கு இல்லை.

மேலும் இந்தப் படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்தத் தடையை விதித்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

 

புலிகள் நடமாடும் அடர்ந்த காட்டில் தங்கிய சூர்யா... விசாரணைக்கு உத்தரவு!

Surya S Controversial Stay Dense Forest   

புலிகள் நடமாடும் தேனி - கூடலூர் மலைப் பகுதியில் சூர்யா கலந்து கொண்ட சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்தது. இது இப்போது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது இதன் படப்பிடிப்பு. மாற்றான் சரியாகப் போகாத வருத்தத்தில் உள்ள ரசிகர்களை, சூர்யாவின் முறுக்கேற்றும் ஸ்டில்கள் உற்சாகம் கொள்ள வைத்துள்ளன.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேக்கடியில் நடந்தது. அன்று இரவு பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார்.

இந்த இடத்துக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதியில் இருந்து படகு மூலம் சென்று 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை அப்பகுதியில் தங்க வைப்பதற்கு கேரள வனத்துறையினர் இரவு 8 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த வருடம் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் இரவு 8 மணிக்கு மேல் தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்ற இடத்துக்கு சென்றார். இதற்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் இப்போது நடிகர் சூர்யாவை 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கேரள வனத்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர்.

புலிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் நடமாடும் ஆபத்தான பகுதிக்கு சூர்யாவை அழைத்துப் போய் தங்க வைத்தது இப்போது விசாரணை வரை போய்விட்டதாம்.

 

ஆதி பகவன் யாருக்கும் எதிரானதல்ல- தயாரிப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ

No Religious Scenes Aadhibhagavan Says Producer

சென்னை: ஆதிபகவன் படம் யாருக்கும் எதிரானதல்ல. இந்தப் படம் பிப்ரவரியில் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் ஜெ அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆதிபகவன்‘. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என சந்தேகிப்பதாகவும் எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் அன்பழகன் கூறுகையில், "ஆதிபகவன்  ஒரு நேர்மையான பொழுதுபோக்குப் படம். மதக் காட்சிகள் எதுவும் இதில் இல்லை.

‘ஆதி பகவன்' என்பது கதையில் வரும் இரு கேரக்டர்கள் பெயர். திருக்குறளில் இடம் பெற்ற ‘ஆதிபகவன்' வார்த்தையையே படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த படம்.

இப்படத்தை முடக்க பார்க்கிறார்கள். காரணமே இல்லாமல் எதிர்க்கின்றனர். சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எதிர்ப்பு கிளப்புகின்றனர். யார் யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் ரசிக்கும் விதத்தில் படம் உருவாகியுள்ளது," என்றார்.

கமல் கூட ஆரம்பத்தில் இப்படித்தான் சொன்னார்!!

 

உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்!

Murder Threat Mallika Sherawat

மும்பை: ராஜஸ்தானில் கொல்லப்பட்ட நர்ஸ் பன்வாரி தேவி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிக்கும் நடிகை மல்லிகா ஷெராவத்தின் தம்பிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. நர்ஸான இவர் அரசியல்வாதியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் விளைவாக பின்னர் உயிரை இழந்தார். இவரது கொலைச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பன்வாரி தேவி கதையை பாலிவுட்டில் படமாக்குகின்றனர். பன்வாரி தேவி வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறாராம். ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மல்லிகா இந்த வேடத்தில் நடிக்கக் கூடாது என்று சிலர், தொலைபேசி மூலம் மல்லிகாவின் தம்பியைப் பிடித்து மிரட்டினராம்.

இதுகுறித்து மல்லிகா கூறுகையில், எங்களுக்கு மிரட்டல் வந்தது உண்மைதான். சிலர் எனது சகோதரரிடம் போன் மூலம் உனது சகோதரியிடம் சொல்லி இந்தி விவகாரத்தில் இருந்து விலகிட சொல் என கூறி உள்ளனர். என்னை யாரும் இதுவரை நேரடியாக மிரட்டவில்லை.

ஒவ்வொரு நடிகரும் நடிகையும் அரசியலுக்கு பலியாகிறார்கள். ஒவ்வொரு நாளும் அரசியல் செய்தாக வேண்டும். இந்தியாவில் வாழ்வதற்கு கண்டிப்பாக அரசியல் செய்ய வேண்டும். நான் நல்ல அரசியல்வாதியாகவும் கெட்ட அரசியல்வாதியாகவும் நடித்து இருக்கிறேன் என்றார் மல்லிகா.

 

யுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு!

Viswaroopam Piracy Cyber Crime Police Ban Youtube

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று காலை திடீரென யுட்யூப் வீடியோ தளத்தில் வெளியானது.

அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த வீடியோ இடம்பெற்ற கணக்கு முடக்கப்பட்டது.

விஸ்வரூபம் படம் சில வெளிநாடுகளில் வெளியான இரண்டாம் நாள் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, படம் வெளியான இரண்டாவது வாரமே ஒரிஜினல் டிவிடிகளே வந்துவிடும் நிலை உள்ளது.

இந்த சூழலில் தமிழகம் - புதுவையில் முழு தடையும், மற்ற மாநிலங்களில் பகுதி தடையும் விதிக்கப்பட்டுள்ள விஸ்வரூபத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து திருட்டு டிவிடிகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையில் மிக சுலபத்தில் ரூ 25-க்கே டிவிடிக்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், விஸ்வரூபம் முழுப் படத்தையும் சிலர் இன்று யுட்யூப் தளத்தில் பதிவேற்றிவிட்டனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

யூ டியூபில் விஸ்வரூபத்தை வெளியிட்டது யார் எனவும், அதை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் எனவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

நஷ்டம்தான்... ஆனாலும் அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்!

Viswaroopam Tops Us Box Office

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.

முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.

இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

 

ஓடிப் போய்டுவோம்... பெற்றோரை மிரட்டிய கரீனா-சைப் (இது திருமணத்திற்கு முன்)

Kareena Kapoor Saif Ali Khan Threatened

மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவோம் என்று திருமணத்திற்கு முன்பு அவர்களின் பெற்றோரை மிரட்டியுள்ளனர்.

பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து கரீனா பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நானும், சைபும் எங்கள் பிரைவசியை விரும்புகிறவர்கள். திருமணத்தன்று நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எந்த டிசைனர் உடை அணிகிறோம், யார் யாரை எல்லாம் அழைக்கிறோம் என்பதை அறிய மக்கள் ஆர்வாக இருந்தனர். திருமணம் முடிந்த பிறகு வீட்டு மாடியில் வந்து நின்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றோம்.

எங்கள் திருமணத்தை மீடியாக்கள் முன்பு நடத்தி சர்க்கஸ் ஆக்கினால் நாங்கள் இருவரும் ஓடிப் போய் லண்டனில் திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோரை மிரட்டினோம் என்றார்.

சைபும், கரீனாவும் நீண்டடடட காலமாக காதலர்களாக இருந்து இப்போது திருமணம் அப்போது திருமணம் என்று கூறி ஒரு வழியாக மணந்ததால் தான் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

 

விஸ்வரூபம்: ஹைகோர்ட்டில் இன்று தீர்ப்பு- அரசுடன் சமரசம் பேச கமலுக்கு அட்வைஸ்

Judgement Day Viswaroopam Today

சென்னை: விஸ்வரூபம் படம் மீதான தடை நீங்குமா நீங்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தீர்ப்பை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டும், தேச ஒற்றுமை கருதியும், பெரும் பொருட் செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதாலும், பிரச்சினை குறித்து அரசுடன் பேசுமாறும் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. புதுவையிலும் தடை செய்யப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

சர்ச்சைக்குரியவிஸ்வரூபம் படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் பிரசாத் லேபில் பார்வையிட்டனர். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றே தீர்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தீர்ப்பை நாளை வரை ஒத்திவைத்து நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.

நீதிபதி தனது உத்தரவின்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்துக் கூறுகையில், நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். கமல் ஹாசன் சுமுக முடிவுக்கு பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முன்வர வேண்டும். அரசுத் தரப்புடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி தீர்ப்பை நாளைக்கு (இன்றைக்கு) ஒத்திவைத்தார்.

இதையடுத்து அரசுத் தரப்பு அதிகாரிகளை கமல்ஹாசன் தனது வக்கீல்கள் புடைசூழ சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

விஸ்வரூபம் திருட்டு விசிடி விற்றால் குண்டர் சட்டம்... பிரவுசிங் சென்டர்களில் சோதனை!

Police Warns Viswaroopam Video Piracy

சென்னை: தமிழகத்தில் இன்னும் வெளியாகாத கமல் ஹாஸனின் விஸ்வரூபம் பட திருட்டு டிவிடி மற்றும் படப் பதிவுகளை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வார காலம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இத் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து கமல் ரசிகர்கள் சிலர் பக்கத்து மாநிலங்களுக்குப் போய் படம் பார்க்கின்றனர்.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து திருட்டு டிவிடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக தமிழகத்துக்குள் விஸ்வரூபம் திரைப்படம் பொதுமக்களிடத்தில் பரவி விடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

அதன்படி, தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில், டிஐஜி ஜான் நிக்கல்சன் மேற்பார்வையில், எஸ்.பி.விஜயகுமாரி தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகையா அடங்கிய திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கணினி மையங்கள், பேருந்து நிலையங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள், ஆம்னி பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாரேனும் இது தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

முல்லா உமர் தமிழகத்தில் வசித்ததற்கு கமல் ஆதாரம் தர வேண்டும்! - மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு

New Case On Kamal Madurai Court

மதுரை: தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எழிலரசு. இவர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் தமிழக போலீசாரிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே முஸ்லிம் சமுதாயம் குறித்து தவறாக விமரிசனம் செய்திருப்பதாக கூறி இந்த படத்திற்கு தமிழ கத்தில் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தை திரைப்பட தணிக்கை குழுவினர் பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது.

திரைப்பட தணிக்கைத் துறை சான்றளித்த பிறகு ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை நாட்டில் கருத்துக்களை வெளியிடும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது.

இதேபோலத்தான் சமீபத்தில் திரைக்கு வந்த துப்பாக்கி படத்திற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் வெளியான ஒரு குறும்படத்திற்கு எதிராகவும் இங்கு போராட்டம் நடத்தினார்கள். இது சுய விளம்பரங்களுக்காக செய்யும் போராட்டம்போல தோன்றுகிறது.

எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் தலீபான் இயக்கத்தின் தளபதி முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்," என்று கோரியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

 

நமீதாவின் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிக்கு மின் திருட்டு?

Power Stolen Namitha S Real Estate Function

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டுமனை விற்பனைக்காக நமீதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மங்கலம்பேட்டை- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் ரியல் ஏஜன்சி நிறுவனத்தில் மனை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு தங்கக்காசு வழங்கும் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மங்கலம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் நடிகை நமீதா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை திருடி நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம், உளுந்தூர் பேட்டை மின்சாரத்துறை செயற்பொறியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு எங்களுக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்தபோது மின்திருட்டு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கான ஆதாரமும் இல்லை. ஆதாரம் கிடைத்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

கமலும் இஸ்லாமிய அமைப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்வதுதான் நல்லது- சீமான்

Kamal Has Talk With Islamic Organisations Seeman

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் கமலும் இஸ்லாமிய அமைப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.
அவர் பேசுகையில், "ஈழத்தில் இன உறவுகள் கொலைகளை தடுக்க முடியவில்லை. அதற்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினவு தினம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.

தமிழர் இனத்துக்கு உரிமை எதுவும் இல்லை. வழக்காடும் உரிமை, அரசியல் உரிமை, மொழி உரிமை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தமிழகத்தில் மட்டும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கவில்லை என்கிறார்.

ஆனால் வேறு இடத்தில் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப்படி பயிற்சி கொடுத்ததால் 554 மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊழலற்ற, உண்மையான மக்களாட்சி நமக்கு தேவை. இளைஞர்கள்தான் அதை பொறுப்பேற்று செய்யவேண்டும். ஆங்கிலத்துக்கு அடிமையாக இருக்கிறோம். மொழி, சாதி, அரசியல் கடவுள் என அனைத்திற்கும் அடிமையாக உள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்," என்றார்.

அவரிடம் விஸ்வரூபம் குறித்து கேட்கப்பட்டது. தமிழக அரசின் தடையை கமல் ஏற்று, காட்சிகளை மாற்ற வேண்டும் என நீங்கள் கருத்து கூறியதாக செய்தி வந்துள்ளதே என்று கேட்ட போது, "நான் அப்படிச் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்ற முக்கிய விஷயங்களை முன்னிறுத்தி தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு இது.

கமலஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தை பார்க்காமல் எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. இஸ்லாமியர்களும், கமல்ஹாசனும் இதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் அப்போதும் சொன்னேன்," என்றார்.

 

விஸ்வரூபத்தை தடை செய்யக் கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

Now Muslims Seek Ban On Viswaroopam Andhra Too

ஹைதராபாத்: விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் விஸ்வரூபத்துக்கு தடை அமலில் இருந்தாலும், பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கேரளா, கர்நாடகத்தில் இந்தப் படத்தை வெளியிட தடை ஏதுமில்லை. ஆனால் கர்நாடகத்தில் இரண்டு ஷோக்களுக்குப் பிறகு இந்தப் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆந்திராவில் ஒரு ஷோ ஓடியது. அடுத்த இரு தினங்களில் மீண்டும் திரையிடப்பட்டதாகக் கூறினர். ஆனால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

கேரளத்திலும் இதே நிலைதான். அங்கு 83 அரங்குகளில் திரையிடப்பட்டது இந்தப் படம். இப்போது பாதிக்கும் மேற்பட்ட அரங்குகளில் நிறுத்தப்பட்டுவிட்டது.

அங்கு திரைப்படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதும் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதுமாக கண்ணாமூச்சு நடந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில்ஆந்திராவில் இந்தப் படத்தை தடை செய்துவிட வேண்டும் என்று கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் முகமது ஹாஜி என்பவர். இவர் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பெரிய வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வழக்கு மனுவில், "கமல் எடுத்துள்ள விஸ்வரூபம் படம் இஸ்லாமியரின் நம்பிக்கைகள், உணர்வுகளை நேரடியாகத் தாக்குகிறது. இந்தப் படத்தை முற்றாக தடை செய்து மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

 

விஸ்வரூபம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசு பரபரப்புப் புகார்

Tn Govt Blasts Censor Board Certifying Viswarooopam

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.

இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.

நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார்.

அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.

பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2.30 மணிக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

பின்னர் கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார்.

மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும்.

இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.

பெருமளவில் போலீஸ் குவிப்பு

இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர்.

 

கர்நாடகத்தில் விஸ்வரூபம் இன்று மீண்டும் ரிலீஸ்!

Vishwaroopam Releases Karnataka

பெங்களூர்: பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து கர்நாடகத்தில் இன்று மீண்டும் விஸ்வரூபம் ரிலீஸானது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் உள்ளிட்ட சில இடங்களில் கடந்த 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் மறுத்ததையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பெங்களூரில் 17 தியேட்டர்கள் உள்பட மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் இன்று விஸ்வரூபம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. மதியக் காட்சி முதல் இந்தப் படம் பெங்களூரில் 17 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

இந்த 17 தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டதாக படத்தின் கர்நாடக மாநில வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் தலைவர்கள் குழு பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜியை சந்தித்து படத்தில் 'அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல' என்ற வரியைச் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த வரியை பட தலைப்பு போடுகையில் சேர்க்க முடிவு செய்தேன்.

கடந்த 27ம் தேதி படத்தைப் பார்த்த கமிஷ்னர் மிர்ஜி, அதில் ஆட்சேபமிக்கும் வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்தார் என்றார்.

 

ஐட்டம் ஆட்டத்துக்கு நான் வரமாட்டேன் - ஷாரூக்கானுக்கு நோ சொன்ன நயன்தாரா

Nayanthara Refuses Appear Item Number

ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடமாட்டேன் என்று நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்க ‘சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படம் தயாராகிறது. இதில் சென்னை இளைஞராக தமிழ் பேசி நடிக்கிறார் ஷாரூக்கான்.

தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர்.

மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரெயிலில் வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை. தமிழ் நடிகர், நடிகைகள் பலர் இதில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நயன்தாராவை ஆட வைக்க படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி விரும்பினார். இதற்காக நயன்தாராவை நேரில் சந்தித்து பேசினார்.

இந்தப் பாடலுக்கு ஆட பெரிய தொகையை சம்பளமாகத் தர முன்வந்தார். ஆனால் இந்திப் படங்களில் இப்போதைக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ள நயன், இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

"ஒற்றைப் பாடலுக்கு ஆடும் அளவுக்கு நான் ப்ரீயாக இல்லை. 6 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் இந்திப் படங்கள் வேண்டாம் என முன்பே முடிவு செய்துவிட்டேன். எனவே இந்தப் பாடலுக்கு ஆடும் நிலையில் இல்லை," என்று அவர் கூறிவிட்டாராம்.

 

விஸ்வரூபத்தில் 14 காட்சிகளை நீக்கிய பிறகே சான்றிதழ் கொடுத்தோம்- சென்சார் போர்டு விளக்கம்

Censor Board S Explanation On Viswaroopam

சென்னை: விஸ்வரூரபம் படத்தின் காட்சி அமைப்புகளுக்கான ஆதார அடிப்படையில்தான் சான்றிதழ் கொடுத்தோம். படத்தில் 14 காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே சான்று அளிக்கப்பட்டது என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விஸ்வரூபம் தடை நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது மத்திய தணிக்கை வாரியமும் தனது தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், மொத்தம் 14 காட்சிகளை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டோம். அதன்படி நீக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய 1.8 நிமிட நேர காட்சி ஒன்றும் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

காட்சி அமைப்புகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில்தான் படத்திற்கான சான்றிதழை அளித்தோம். முற்றிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டே சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

காட்சிகளை மாற்றுவது குறித்து கமல் மட்டுமே முடிவு செய்ய முடியும்: அண்ணன் சந்திரஹாசன்

Only Kamal Can Decide About Editing Some

சென்னை: விஸ்வரூபத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை எடிட் செய்வது படத்தின் இயக்குனர் கமல் கையில் தான் உள்ளது என்று அவரது அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு நேற்று வருவதாக இருந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்ததுடன் இந்த விவகாரம் குறித்து கமல் தமிழக அரசுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியது.

இந்நிலையில் இது குறித்து கமலின் அண்ணனும், படத்தின் இணை தயாரிப்பாளருமான சந்திர ஹாசன் கூறுகையில்,

இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும். ஒரு வேளை தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முதலில் தியேட்டர்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். படத்தை ரிலீஸ் செய்ய ஏதுவாக அதில் உள்ள சில காட்சிகளை எடிட் செய்வது குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது. அது படத்தின் இயக்குனரான கமலின் கையில் உள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் படத்தை எடுக்கவில்லை. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரையுலகினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

கமலுடன் பேச தமிழக அரசு தயாராக இல்லை?!

Is Kamal Approaches Tn Govt

சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தடை நீக்கமா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவிருக்கிறது.

அதற்கு முன், அரசு மூலமாக இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி சுமுகமான முடிவுக்கு கமல் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவிட்டு, தீர்ப்பை ஜனவரி 29-ம் தேதி (இன்று)க்கு ஒத்தி வைத்தது.

ஆனால் கமல், நேற்று வரை இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச தயாராக இருப்பதாக அறிவித்தாரே தவிர, அரசை அணுகப் போவதாகக் கூறவே இல்லை. அதே போல அரசும் கூட அவருடன் பேச விரும்பாத சூழலே உள்ளது.

ஆனால் இன்று அவர் அரசை அணுகி, விஸ்வரூபத்தை சுமூகமாக வெளியிடும் சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன.

இதுகுறித்து கமல் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "காட்சிகளை வெட்டிவிட்டு இந்தப் படத்தை வெளியிடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. மேலும் அரசை அணுகும் திட்டம் எதுவும் கமலிடம் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த நடவடிக்கை என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார்," என்றனர்.

இதற்கிடையில் அரசும் இந்த விஷயத்தை சாதாரணமாக விட்டுவிடவோ, முடிவிலிருந்து பின்வாங்கவோ தயாராக இல்லை என்று தெரிகிறது. துப்பாக்கியில் காட்சிகளை வெட்டியது போல இந்தப் படத்திலும் வெட்டிவிட்டுப் போவதுதானே ... ஏன் தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறார் கமல்? என்றுதான் திருப்பிக் கேட்டுள்ளார்கள் அரசுத் தரப்பில் பேசியவர்கள்.

இதற்கிடையில் இன்றைய நீதிமன்ற விசாரணையில் கமலுக்கு முற்றிலும் எதிரான நிலையை எடுத்துள்ளது தமிழக அரசு. இந்தப் படம் வெளி வருவதற்காக ஏக முறைகேடுகளைச் செய்துள்ளார் கமல் என்று நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளதால், கமலுக்கு உச்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பிறகு வெகு விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள். பார்க்கலாம்!

 

அலெக்ஸ் பாண்டியனையும் தடை பண்ணனுமாம்!!

Bjp Seeks Ban On Alex Pandian

நடிகர் கார்த்தி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி தியேட்டர்களை விட்டு ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளவர்கள் பாஜகவினர்.

சுராஜ் இயக்க, கார்த்தி - அனுஷ்கா நடித்துள்ள இந்தப் படத்தில் சாமியார்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதால் இதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.கவினர் செஞ்சி தாசில்தாரை சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.

இதே மனுவை தமிழக முதல்வர் மற்றும் விழுப்புரம் கலெக்டருக்கும் அனுப்பியுள்ளனர். படம் ஏற்கெனவே வெளியாகிவிட்டாலும், தவறான காட்சி இடம்பெற்ற படம் தியேட்டர்களில் ஓடக்கூடாது என்பதால்தான் இந்த போராட்டம் என அவர்கள் கூறினர்.

 

அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந்துக்களிடமிருந்து...!

Ameer S Aadhi Bhagavan Trouble Now   

சென்னை: அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.

அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.

‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் நீக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

 

கணவனைத் தேடி அலையும் கர்ப்பிணியாக நயன்தாரா!!

Nayanthara Kahani Telugu Remake   

கஹானி படத்தில் நடிப்பேன், நடிக்க மாட்டேன், நடிப்பது குறித்து ஆலோசிப்பேன், தெரியாது என்றெல்லாம் தினசரி ஒரு அறிவிப்பை வெளியிட்டு வந்த நயன்தாரா, கடைசியில் அந்தப் படத்தி்ல நடிக்கிறார். அதுவும் கர்ப்பிணி வேடத்தில்.

பிரபு தேவா விவகாரத்துக்குப் பின் நயன்தாரா தொடங்கியுள்ள மூன்றாவது இன்னிங்ஸில் அதிரடி வேடங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி, பிகினி, லிப் டு லிப் என எந்த வேடத்துக்கும் மறுப்பே சொல்லாமல் தயாரிப்பாளர்களை குளிர்வித்து வரும் நயன்தாரா, இப்போது கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் அவர் நடிக்க மறுத்திருந்தார். ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

தமன்னா, அனுஷ்கா என வேறு நடிகைகள் பெயரும் அடிபட்டது. ஆனால் திடீரென நயன்தாரா நடிக்க சம்மதித்துவிட்டார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில், "ஒரு கர்ப்பிணி மனைவி தனது கணவனை தேடி அலைவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.

 

பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்த கௌரவம்: ஸ்ரீதேவி பெருமிதம்

Sridevi Feels Honoured Humbled Padma Shri Award   

மும்பை: பத்மஸ்ரீ விருது தனக்கு கிடைத்த கௌரவம் என்று நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

மும்பையில் செட்டிலான தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பத்ஸ்ரீ விருது எனக்கு கிடைத்த கௌரவம். எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வரும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கடந்த 1967ம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் பிரபலமான அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் குழந்தை நட்சத்திரமாக சென்ற பாலிவுட்டில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார்.

பின்னர் பாலிவுட் இயக்குனர் போனி கபூரை மணந்து ஜான்வி, குஷி ஆகிய 2 குழந்தைகளுக்கு தாயானார். திருமணம், குழந்தை என்ற ஆன பிறகு பெரிய திரையைவிட்டு ஒதுங்கி இருந்த அவர் 15 ஆண்டுகள் கழித்து இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தின் மூலம் அண்மையில் தான் ரீ என்ட்ரி ஆனார். இந்நிலையில் தான் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

 

இன்று ஸ்ருதி ஹாசனுக்கு பர்த் டே, நாளை விஸ்வரூபம் ஜட்ஜ்மென்ட் டே

Shruti Hassan Turns 27 Today

சென்னை: கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் இன்று தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அப்பா வழியில் நடிக்க வந்த ஸ்ருதி தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். பெரும்பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் மீதான தடை விலகுமா என்று நாளை தெரிந்துவிடும்.

கேரளாவில் மட்டும் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

துப்பாக்கி படத்துக்கு 'ஏ' சான்று தர பரிசீலியுங்கள் - சென்சார் போர்டுக்கு ஹைகோர்ட் பரிந்துரை

Hc Recommends A Certificate Thuppakki   

சென்னை: துப்பாக்கியில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டாலும், அந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் தருவது குறித்து சென்சார் போர்டு பரிசீலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறின.

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அரசு உத்தவிட்டது. சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் ஓடிக்கொண்டுள்ளது.

ஆனாலும், இந்தப் படத்துக்கு ஏ சான்று கொடுக்க வேண்டும் என இந்திய தேசிய முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அப்துல்ரகீம் உயர் நீதிமன்றத்தி்ல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய மேலும் சில காட்சிகளை கைப்பற்றும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அந்த படத்துக்கு 'யூ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அது தவறு. அந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர், துப்பாக்கி படத்தை சமீபத்தில் நேரில் பார்த்தனர். இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவி்த்திருந்தனர்.

அதில் துப்பாக்கி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை தமிழக அரசு நீக்கியுள்ளது. இருப்பினும் இந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுப்பது குறித்து மார்ச் மாதம் இறுதிக்குள் மத்திய தணிக்கை குழு பரிசீலனை செய்ய வேண்டும், என்று நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

 

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு! 'நீயா? நானா?'வில் வேதனை!

Vijay Tv Neeya Naana Discussion About Tn Cheating

எத்தனை முறை ஏமாந்தாலும் புத்தியின்றி மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டே இருப்பது சிலரது வழக்கம். ஒரு முறை ஏமாந்துவிட்டு பின்னர் சுதாரித்துக் கொள்வது சிலரது பழக்கம். ஏமாறுபவர்களைப் பற்றியும் ஏமாற்றுபவர்களைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதினாலும், எத்தனை திரைப்படங்களை எடுத்தாலும் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் கையில் உள்ள பணத்தை மோசடி நிறுவனங்களிடம் கொடுத்து ஏமாறுவதுதான் இன்றைய தமிழர்களின் நிலையாகிவிட்டது.

இதுபோன்று ஏமாந்து போனவர்களை வைத்து விஜய் டிவியில் ஞாயிறு இரவு நீயா? நானா? நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய ஏமாந்து போனவர்கள் எல்லோருமே ஏதோ ‘ஜஸ்ட் லைக் தட்' என்பது போல பேசினார்கள்.

அதை விட கொடுமை ஏமாந்து போனவர்கள் அதை விவரிக்கும் போது எதிர் அணியினர் சிரித்ததுதான். ரூம் போட்டு யோசிப்பார்கள். ஆனால் ரூம் போட்டு ஏமாந்த கதையை விவரித்தார் ஒரு நபர். அதைக் கேட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் விழுந்து விழுந்து சிரித்தார்.

ஆயிரக்கணக்கில் ஏமாந்து போனவர்கள் கூட சுதாரித்து விட்டனர். ஆனால் லட்சக்கணக்கில் ஏமாந்தவர்கள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருந்திருக்கின்றனர். இதை விட கொடுமை ஒருவர் தொடர்ந்து பத்து வருடங்களாக ஏமாந்து வந்திருக்கிறார் என்பதுதான்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை அநியாயமான இழந்திருக்கின்றனர். இதை விட முக்கியமான விசயம் பணத்தை இழந்தவர்கள் எல்லோருமே நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். பேரசையின் காரணமாகவே பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர் என்று ஒரு சாரார் பேசினர்.

சரியான வழிகாட்டுதல் இல்லை. மோசடி செய்தவர்களை தண்டிக்கவோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ தமிழக அரசு தவறிவிட்டது இதன் காரணமாகவே மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட நூறு கோடி மோசடிகள் இன்றைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

கேரளாவில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடிக்குப் பின்னர் அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுவிட்டன. அதனால் மக்கள் ஏமாறவில்லை. தமிழ்நாட்டில் அதுபோல் சட்டங்கள் எதுவும் இல்லை என்றார் நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினரான மூத்த வழக்கறிஞர் காந்தி, ஏமாறுபவர்கள் எல்லோரும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுவும் ஒரு ரேஸ் போலத்தான் என்று கூறி அதிர்ச்சியளித்தார்.

அதே சமயம் நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினரான நிதி ஆலோசகர் புகழேந்தி, மக்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி என்றும் வேறு எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகின்றனர். மெடிக்ளெய்ம், இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் கூட அதிக அளவில் மக்களை ஏமாற்றுகின்றன என்றார்.

கள்ளத்தனமாக பணம் சம்பாதித்தவர்கள் முதலீடு செய்து ஏமாந்து போவது பெரிய விசயமாக தெரியாது. ஆனால் நடுத்தர குடும்பத்தில் வசிப்பவர்கள், ஏழைகள், ஓய்வூதிய காலத்தில் கிடைத்த பணத்தையும் முதலீடு செய்துவிட்டு ஏமாந்து போனவர்களின் நிலைதான் சிரமம்.

எத்தனை முறை ஏமாந்தாலும் நான் ஏமாந்து கொண்டேதான் இருப்பேன் என்று ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பர இடைவேளை விடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியவர்களை விட விளம்பரம்தான் அதிகம் இருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிக விளம்பரம் கிடைத்தால் பேசுபவர்களின் கருத்தை ஒளிபரப்பிவிட்டு இரண்டு வாரங்களுக்கு ஒரு நிகழ்ச்சி என்று போடலாமே. அதை விட்டுவிட்டு வெறும் விளம்பரமாக போட்டு விஜய் டிவியும் நேயர்களை ஏமாற்றிவிட்டது என்றே கூறலாம்.

 

ரஜினியுடன் அமரிக்க மேரிலான்ட் துணைச் செயலர் சந்திப்பு - அரசு விருந்தினராக வருமாறு அழைப்பு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.

மேலும் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் திரு மார்ட்டின் ஓமாலி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் ரஜினி.

rajini visit us soon
கவர்னர் மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துறையில் பல சாதனைகளைச் செய்து, அளவிலா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த பிறந்த நாள் வாழ்த்தின் மூலம் நீங்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும், எல்லா வளமும் பெற்று, உலகெலாம் பரவியிருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் என்று எங்களின் மேரிலாண்ட் மாகாண அரசாங்க வாழ்த்துச் சான்றின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்த்துச் சான்றை ரஜினியிடம் டாக்டர் ராஜன் வழங்கினார்.

மேரிலாண்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற ரஜினி, நிச்சயம் அமெரிக்காவுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினியிடம் பல கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டார் டாக்டர் ராஜன்.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கு நிகராக சூப்பர் ஸ்டாரின் படங்கள் எப்படி அமெரிக்கா மற்றும் உலக மக்களால் பாராட்டப்படுகின்றன, ரசிக்கப்படுகின்றன என்பதை டாக்டர் ராஜன் விளக்கியபோது, மகிழ்ச்சி தெரிவித்தார் ரஜினி.

22 வயது இளைஞர் ரஜினி...

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் தரமான வாழ்க்கை என்பது 40-க்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது - இது அமெரிக்காவில் பிரபல பழமொழி. அப்படிப் பார்க்கும் போது நீங்கள் 62 வயதைத் தொட்டிருந்தாலும், நீங்கள் 22 வயது இளைஞர்தான்... என டாக்டர் ராஜன் கூறியபோது, மனம் விட்டுச் சிரித்தார் ரஜினி.

இந்தியர்களுக்கு அமெரிக்காவில் எத்தகைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை விரிவாக டாக்டர் ராஜன் விளக்கியதை கவனத்துடன் கேட்டுக் கொண்டார் ரஜினி

அமெரிக்க வாழ் தமிழர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் டாக்டர் ராஜனிடம் ரஜினி விசாரித்தார். அமெரிக்க அரசியலில் இத்தனை உயரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் - தமிழர் அதுவும் நம்ம புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜன்தான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

ரஜினிடம் டாக்டர் ராஜன் பேசும்போது, "தமிழர்களின் பெருமை நீங்கள்.. உங்கள் ப்ளட்ஸ்டோன் படத்தை அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். ஹாலிவுட்டிலேயே கோலோச்சும் அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தும், அவற்றை ஏற்காமல் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழையும் தமிழர் நலன் காக்கவும் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, பிற நாட்டினரும் கூட மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் படங்களைப் பார்க்கின்றனர்," என்றார்.

மேரிலான்ட் அரசின் அழைப்பு மற்றும் வாழ்த்துக்கு டாக்டர் ராஜனிடம் நன்றி தெரிவித்த ரஜினி சந்திப்பு முடிந்ததும் டாக்டர் ராஜனை அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்பு குறித்து டாக்டர் ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் அன்பும் உபசரிப்பும் என்னை வரவேற்ற விதமும் நெகிழ வைத்துவிட்டன. அவர் பெரும் கலைஞர் மட்டுமல்ல, மாபெரும் மனிதர். எளிமையின் சிகரம். உன்னதமானர். அவரைப் போன்ற பண்பாளரைச் சந்தித்தது மிகுந்த நிறைவாக உள்ளது. தமிழர்களின் பெருமை நமது சூப்பர் ஸ்டார் என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். அவரை அமெரிக்க அரசு விருந்தினராக வரவேற்பதை நானும் எங்கள் அரசும் கவுரவமாகக் கருதுகிறோம். அமெரிக்கா அவருக்கு மிகப் பெரிய மரியாதையைச் செய்யக் காத்திருக்கிறது," என்றார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சார்லி, டாக்டர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.