சினிமா கஷ்டமான தொழிலாகிவிட்டது..!- முக்தா சீனிவாசன்

சென்னை: முன்பு நல்ல தொழிலாக இருந்த சினிமா இப்போது சூதாட்டமாகிவிட்டது, என்று மூத்த இயக்குநர் - தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறினார்.

புதுமுகங்கள் சித்து-சஞ்சிதா படுகோனே நடிக்கும் ‘மன்னிப்பாயா' படத்தின் தொடக்க விழா, சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.

விழா அழைப்பிதழை அப்படியே மேடையில் மெகா பேனராக்கியிருந்தனர். அதில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற சாதனை நாயகர்கள், நாயகிகள் படங்கள் இடம்பெற்றிருந்தன. நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.

cinema becomes bad game says mukta srinivasan
விழாவில், தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி சீனிவாசன் பேசுகையில், "நான், சினிமாவுக்கு வந்து 65 வருடங்கள் ஆகின்றன. 1947-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் உதவியாளராக சேர்ந்து, கிளாப் போர்டு அடிக்க தொடங்கினேன். தொடர்ந்து 10 வருடங்கள் கிளாப் போர்டுதான் அடித்துக் கொண்டிருந்தேன். 1957- ம் வருடம், ‘முதலாளி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனேன். அதன் பிறகு தயாரிப்பாளராக, இயக்குநராக பல படங்களை கொடுத்தேன்.

சினிமா, இப்போது சூதாட்டம் ஆகிவிட்டது. அந்தக்கால சினிமா இப்போது இல்லை. அப்போது சினிமாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. நல்ல தொழிலாக இருந்தது. இப்போது சினிமா கஷ்டமான தொழிலாகி விட்டது. இந்த சூழ்நிலையில், புதிதாக படம் தயாரிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

இந்தப் படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ‘பட்டியல்' சேகர், படத்தின் கதாநாயகன் சித்து, கதாநாயகி சஞ்சிதா படுகோனே, ஒளிப்பதிவாளர் ஜி.செல்வகுமார், இசையமைப்பாளர் ஏ.ஜி.மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

 

கிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருக்கமான ஸ்ருதிஹாஸன்?

மும்பை இசைக் கலைஞர், பின்னர் நடிகர் சித்தார்த், சில மாதங்களுக்கு முன் வரை நடிகர் தனுஷ் என பலருடன் நெருக்கமாக இணைத்துப் பேசப்பட்ட ஸ்ருதிஹாஸன், இப்போது கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் மகா நெருக்கமாக உள்ளதாக செய்திகள் கிளம்பியுள்ளன.

சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக ஆடிவரும் முக்கிய வீரர். ஸ்ருதிஹாஸனும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.

shruthi hassan affair with suresh raina
சென்னை அணி ஆடும் ஆட்டங்களின் போது பார்வையாளராக தவறாமல் பங்கேற்று கைத்தட்டி, ரசிகர்களைப் பார்த்து விசில் போடு என்றெல்லாம் உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ருதிஹாஸன்.

இந்த ஆண்டு விளையாட்டைப் பார்க்க வந்த ஸ்ருதியும் ரெய்னாவும் நண்பர்களாகப் பழக ஆரம்பித்து, இப்போது நட்சத்திர ஹோட்டல்களில் ரகசிய பார்ட்டி கொடுத்துக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிவிட்டார்களாம்.

சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 52 பந்தில் 99 ரன்கள் விளாசினார் அல்லவா... இந்த போட்டியைப் பார்க்க வந்த ஸ்ருதி, பின்னர் இரவில் ரெய்னாவுடன் விருந்து சாப்பிட்டாராம்.

 

எனக்கு இன்ஸ்பிரேஷனே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!- வித்யுத் ஜம்வால்

Rajinikanth Is My Inspiration Says Vidyut Jamwal

அஜீத்தின் பில்லா 2 பட வில்லனாக தமிழில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இவர்தான் பின்னர் விஜய் நடித்த துப்பாக்கியிலும் வில்லனாக வந்தார்.

ஒரு தேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் இவர். சந்தர்ப்ப வசமாக இந்தியில் தன் வாழ்க்கையை வில்லனாகத் தொடங்கினார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் இவருக்கு ஏக மவுசு.

அலட்டிக் கொள்ளாத வில்லத்தனம் காட்டுவதுதான் இவர் பாணி.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 'நீங்கள் யாருடன் நடிக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறீர்கள்?" என்ற கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என்று கூறினார்.

மற்றொரு கேள்வி, "இந்திய சினிமாவில் உங்களைக் கவர்ந்த நடிகர் அல்லது நடிகை?" என்ற கேள்விக்கு, "சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். காரணம், எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, தனக்கென ஒரு வழியை உருவாக்கி, அதை உறுதியுடன் நடைபோட்டு இந்த நாட்டின் இணையற்ற சாதனையாளராக மாறியுள்ள அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்," என்று கூறியுள்ளார்.

 

இந்த காதல் வதந்திகளை கொஞ்சம் நிறுத்துங்களேன் - சமந்தா

Samantha Denied Reports On Her Proposed   

எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. இந்த காதல் வதந்திகளைக் கொஞ்சம் நிறுத்துங்களேன், என்று கேட்டுக் கொண்டார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு மீடியாவில் கடந்த சில மாதங்களாக பிரதானமாக பேசப்படுவது சமந்தா - சித்தார்த் காதல் பற்றித்தான். இருவரும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் உள்ளார்களாம்.

இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஜோடியாக சென்று சமீபத்தில் வழிபட்டனர். ராகு-கேது பூஜை செய்தனர். பெற்றோர் காலில் விழுந்து ஆசியும் பெற்றனர்.

ஆனாலும் காதலை ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த அவரிடம், சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டதற்கு, "இதெல்லாம் வீண் வதந்தி.இப்போதைக்கு காதலுமில்லை, திருமணமும் இல்லை. எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இந்த வதந்திகளை நிறுத்தும்படி வேண்டுகிறேன். தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். இந்த நேரத்தில் இதுபோன்ற கேள்விகளைக் கூட நான் விரும்பவில்லை," என்றார்.

 

கேன்ஸ் விழாவுக்கு ரஜினி போகவில்லை! - வேறு தேதியில் கோச்சடையான் ட்ரைலர்!

Rajini Is Not Going Cannes

சென்னை: கேன்ஸ் பட விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்வார், அங்கு வைத்து கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவார் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அங்கு ரஜினி செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வேறு ஒரு தேதியில் படத்தின் ட்ரைலரை வெளியிடவிருப்பதாக இயக்குநர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் புதிய பரீட்சார்த்த முயற்சியாகவும், இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்ற பெருமைக்குரியதாகவும் பார்க்கப்படும் கோச்சடையானுக்காக உலகம் முழுக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

திரையுலகின் முதல் நிலை கலைஞர்கள் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக உருவாகிவரும் கோச்சடையானின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன.

படத்தின் ட்ரைலரை முதல்கட்டமாக வெளியிட்டுவிட்டு, இசை வெளியீட்டை ஜப்பானில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ட்ரைலரை கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியே நேரில் கலந்து கொண்டு வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் தெரிவித்திருந்தார்.

கேன்ஸ் விழா நேற்று தொடங்கிய நிலையில், விழாவுக்கு அவர் இதுவரை புறப்பட்டுச் செல்லவில்லை. ட்ரைலர் வெளியீடும் அங்கு நடக்கவில்லை என்று தெரிகிறது.

இதுகுறித்து கோச்சடையான் குழுவினரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, ரஜினி சார் கேன்ஸ் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் படத்தின் ட்ரைலர் வேறொரு தேதியில் வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

சந்தானத்தின் ஏஞ்சலினா ஜூலி ஹன்சிகா

See Who S Santhanam S Angelina Jolie

சென்னை: ஹன்சிகாவை ஊரெல்லாம் சின்ன குஷ்பு என்று அழைக்க அவர் சந்தானத்துக்கு மட்டும் ஏஞ்சலினா ஜூலியாம்.

ஹன்சிகாவை கோலிவுட்டில் சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். ஹன்சிகா நடிக்கும் பெரும்பாலான படங்களில் சந்தானமும் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் சந்தானம் ஹன்சிகாவை கலாய்ப்பாராம். சேட்டை படப்பிடிப்பின்போது அவர் ஆர்யாவுன் சேர்ந்து கொண்டு ஹன்சிகாவை செமையாக கலாய்த்துள்ளார். என்னடா இது இப்படி கலாய்க்கிறார்கள் என்று ஹன்சிகா நொந்துவிட்டாராம்.

இந்நிலையில் சுதந்தர் சி. படமான தீயா வேலை செய்யணும் குமாரு படபிடிப்பில் சந்தானத்தை பார்த்து ஹன்சிகாவே ஆச்சரியப்பட்டுள்ளார். காரணம் மனிதர் ஹன்சிகாவை கலாய்க்கவில்லையாம் மாறாக புகழ்ந்துள்ளார். ஊரெல்லாம் ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்று அழைக்கிறது. அப்படி இருக்கையில் அவர் என்னவென்றால் ஹன்சிகா தன் பார்வைக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போன்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சந்தானம் முதலில் ஒரு நல்ல கண் டாக்டரைப் பாருங்க.

 

'முனி 3': 6 கெட்-அப்களில் ராகவா லாரன்ஸ்!

Raghava Lawrence Wear 6 Faces

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் முனி 3 படத்தில் 6 கெட்அப்களில் தோன்றப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முனி 1 படத்தில் பயந்த சுபாவம் கொண்ட பாத்திரத்தில் நடித்தார் லாரன்ஸ். இதில் முனியாக ராஜ்கிரண் நடித்து கிலியூட்டினார்.

இதைத் தொடர்ந்து ‘காஞ்சனா' என்ற படத்தை எடுத்த லாரன்ஸ் அதனை முனி பார்ட் 2 என்று விளம்பரப்படுத்தினார். இதில் காஞ்சனா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். காஞ்சனாவும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பின்னர் முனி 3 என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்து அதற்காக வேலையை தொடங்கிய லாரன்ஸ் முழு வீச்சில் படத்தை முடித்து விட்டாரம்.

இந்த படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். இசை அனிருத். முனி 3 படத்தில் 6 கெட்அப்களில் நடித்து அசத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ (அமைதிப்படை- 2)- விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ். ஷங்கர்

நடிகர்கள்: சத்யராஜ், மணிவண்ணன், சீமான், கோமல் சர்மா, வர்ஷா, மிருதுளா, அன்ஷிபா, ரகுவண்ணன்

ஒளிப்பதிவு: டி சங்கர்

இசை: ஜேம்ஸ் வசந்தன்

பிஆர்ஓ: ஜான்

தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்

எழுத்து- இயக்கம்: மணிவண்ணன்

இந்த நாடும் அரசியலும் நாட்டு மக்களும் நாளாக நாளாக எத்தனை மோசமான கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எள்ளலாகச் சொல்ல மணிவண்ணனைத் தவிர வேறு இயக்குநர்கள் இருக்கிறார்களா... சந்தேகம்தான்!

19 ஆண்டுகளுக்கு முன் அன்றைய அரசியலை அடித்துத் துவைத்து தொங்கவிட்டார் அமைதிப்படை மூலம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் இன்றைய அரசியலைக் கையிலெடுத்துள்ளார்.

nagaraja cholan ma mla review   
வாரிசு அரசியல், கூட்டணி பேரங்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, சட்டசபையில் நாக்கை மடக்கி மிரட்டுவது, அரசியலை முழு வியாபாரமாக மாற்றும் ஆட்சியாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நசுக்கப்படுவது, இயற்கை வளங்களை ஏகபோகமாக கொள்ளையடிப்பது என இன்றை நடப்புகளைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன்.

தேங்காய்ப் பொறுக்கி அமாவாசையாக இருந்து, எம்எல்ஏவாக உயர்ந்து, துணை முதல்வராக அதிகாரத்தைப் பிடிக்கும் நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ (சத்யராஜ்), வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதிவாசிகள் குடியிருக்கும் ஒரு பெரிய காட்டையே விற்க முயற்சிக்கிறார். அதற்கு தடையாக வரும் அத்தனை அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுகிறார். சொந்த மருமகளே எதிராகக் கிளம்ப அவரையும் தீர்த்துக் கட்டத் துணிகிறார்.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மொத்தப் பேரையும் விலைக்கு வாங்கி, முதல்வரை மிரட்டி, அந்த நாற்காலியையும் பிடித்துவிடுகிறார். முதல்வர் நாகராஜசோழனுக்கு எதிராகவும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாகவும் சீமான் தலைமையில் போராட்டம் வெடிக்கிறது. ஆனால் அதனை நசுக்குகிறது நாகராஜசோழன் அரசு. வேறு வழியின்றி போராட்டத்தை மவுனிக்கச் செய்துவிட்டு தலைமறைவாகிறது சீமான் குழு.

நாகராஜ சோழனை கைது செய்ய தீவிர முயற்சி எடுக்கிறது சிபிஐ. உடனே மாநிலம் முழுக்க கலவரமும் வன்முறையும் வெடிக்கிறது. நாகராஜ சோழன் கைதாகிறாரா? அவரது கேடு கெட்ட அரசியல் முடிவுக்கு வருகிறதா என்பது க்ளைமாக்ஸ்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லோருமே இதன் முதல் பாகத்தை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அது தேவையற்றது. காரணம் இரண்டுமே கிட்டத்தட்ட வேறு வேறு படங்கள் மாதிரிதான்.

இன்றைக்கு உள்ள அரசியல் சூழல் மற்றும் சமூக அவலங்களை வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால், இந்த அளவு துணிவாக அத்தனை அரசியல் தலைவர்களையும் விமர்சிக்கும் துணிவு எந்த இயக்குநருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதைப் பார்த்து மக்கள் திருந்திவிடுவார்கள் என்றும் மணிவண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், 'நாட்டு நடப்பு இதானப்பா... இன்றைய அரசியல் திருட்டுத்தனங்களைத் தெரிஞ்சிக்கங்க.. நீங்க சிரிச்சிட்டுப் போனாலும் சரி, சிந்திக்காம போனாலும் சரி...,' என்ற தொனிதான் படம் முழுக்க தெரிகிறது!

படத்தின் ஹீரோ என்று பார்த்தாலும், அது மணிவண்ணன்தான். சத்யராஜை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்கிறார். வசனங்களை அவர் பிரயோகிக்கும் விதம், சூழல், காட்சி எல்லாமே... மணிவண்ணன் என்ற நல்ல எழுத்தாளரை முன்நிறுத்துகிறது.

ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கிறது.

சாம்பிளுக்கு சில:

சத்யராஜ்: என்ன மணியா... எழவெடுத்த தேர்தல் வருது... ஜெயிச்சி தொலைக்கணும்... என்ன பண்ணலாம்?

மணிவண்ணன்: மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு இலவச ஜெனரேட்டர் திட்டம்..!

**
எதிர்கட்சித்தலைவர்: என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்..

சத்யராஜ்: அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில நாக்கை மடிச்சி 'ஏய்' ன்னு சவுண்டு குடுக்கற!

**

சீமான்: மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும்.... மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாறதான் இருக்கும்
ஜெகன்: அப்போ பாறதான் மிஞ்சுமா
சீமான்: அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன்: அப்போ, வெறும் தரதான் மிஞ்சுமா
சீமான்: அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறானுங்களே
**
சத்யராஜ்: அப்பனும் மகனும் சேர்ந்து கட்சி ஆரம்பிச்சது அந்தக் காலம்... புருசனும் பொண்டாட்டியும் கட்சி ஆரம்பிப்பது இந்தக் காலம்...
**
சத்யராஜ்: என்ன மணியா... யாரு இவ...

மணி: அட நம்ம பொள்ளாச்சி சரசுங்ணா... நாங்க கும்கின்னு கூப்புடுவோம்...

சத்யராஜ்: அதென்னய்யா கும்கி...

மணி: அது.. இந்த பெரிய யானைங்க, பழகாத முரட்டு யானைங்களை பழக்கி அனுப்பி வைக்கும்ல... அதானுங்ணா...
**
சத்யராஜுக்கு இரு வேடங்கள். அதில் அரசியல்வாதி நாகராஜசோழன் பின்னி எடுக்கிறார். நியாயமாக இந்த கேரக்டர் மீது கோபம் வரவேண்டும். ஆனால் சத்யராஜ் - மணிவண்ணன் லொள்ளு அந்தக் கேரக்டரை ரசிக்க வைத்துவிடுகிறது.

சிபிஐ அதிகாரியாகவும் சத்யராஜையே போட்டிருக்கின்றனர். அவ்வளவு நடிகர் பஞ்சமா... அல்லது பட்ஜெட்டா என்ற கேள்வி எழாமலில்லை.

மணிவண்ணனும் சத்யராஜுமே பிரதானமாய் நிற்பதால் மற்ற நடிகர்கள் பெரிதாக எடுபடவில்லை. அவர்கள் பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.. அவ்வளவுதான்.

மலைவாழ் மக்களின் மண்ணுரிமையைக் காக்கும் தலைவனாக வருகிறார் சீமான். மக்களை போராடத் தயார்ப்படுத்தும் அவரது பேச்சுகளும், குறிப்பாக போரை மவுனிக்க அவர் சொல்லும் காரணங்களும் ஈழத்து சூழலை நினைவூட்டியது.

ரகுவண்ணன் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார். அமைதிப்படை மூன்றாம் பாகத்துக்கு ரகுவண்ணனைத் தயார்படுத்துவது காட்சியை அமைத்திருக்கிறார் மணிவண்ணன்.

படத்தின் முக்கிய ப்ளஸ் டி சங்கரின் ஒளிப்பதிவு. அரசியல் பரபரப்பையும் வனாந்திரத்தில் நடக்கும் போரையும் அவர் கேமரா அத்தனை அர்த்தங்களுடன் பதிவு செய்துள்ளது.

படத்தின் முக்கிய குறை ஜேம்ஸ் வசந்தனின் இசை. அதை மன்னிப்பதற்கில்லை. இந்த மாதிரி படத்துக்கு என்ன மாதிரி இசை அமைக்க வேண்டும் என்பதை அவர் அமைதிப்படை முதல் பாகத்தைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அந்த முதல் பாகத்திலிருந்து ஒரு காட்சியை க்ளைமாக்ஸ் முடிந்ததும் இந்தப் படத்தில் சேர்ந்திருப்பார் மணிவண்ணன். அதில் ஒலிக்கும் இசைக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள்தான் ஜேம்ஸ் வசந்தன்களுக்கான உண்மையான விமர்சனம்!

நாகராஜசோழன் நிரந்தரமாக சிறைக்குப் போனதை மணிவண்ணன் கொண்டாடும் விதமிருக்கே... அதுதான் 'அக்மார்க் மணிவண்ணன்' குறும்பு!

அரசியல் எள்ளலை அர்த்தத்துடன் ரசிக்க நாகராஜசோழன் எம்ஏ,எம்எல்ஏ பாருங்க!

 

ஸ்ரீகாந்த் - சந்தானம் -சுனைனா நடிக்கும் நம்பியார்!

கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் - சந்தானம் - சுனைனா நடிக்க கணேஷா இயக்கம் புதிய படத்திற்கு 'நம்பியார்' என்று பெயரிட்டுள்ளனர்.

நண்பன், பாகன் என ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது 'ஓம் சாந்தி ஓம்'. இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் வேளையில் அடுத்த படமாக தொடங்க இருக்கிறது நம்பியார். அறிவியல் களம் சார்ந்த முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப் படம் என்றே குறிப்பிடுகிறார்.

தலைப்பு மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே... பிரச்சனையை உருவாக்கிவிடக்கூடாது என்பதால், நம்பியாரின் மகன் மோகன் நம்பியாரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

srikanth santhanam join nambiyar

"நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்ததோடு தனது வாழ்த்தையும் ஸ்ரீகாந்துக்கு தெரிவித்துள்ளார் மோகன்.

எங்கள் படக்குழுவோ அவருக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் உண்மையிலேயே நன்றிக்கடன் பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் கணேஷா. பிரபல இயக்குனர் ராஜ மௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்தவர்தான் இந்த கணேஷா. படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயன்ஸ் ஃபிக்ஷன் படம்.

அமரர் எம்ஜிஆர் அவர்களின் மிக ராசியான வில்லன் நம்பியார். முதலில் நம்பியாரை புக் பண்ணிவிட்டீர்களா என்றுதான் கேட்பாராம் மக்கள் திலகம். இந்த படத்தின் கதைக்கும் நம்பியார் என்ற தலைப்புக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கும் என்கிறார் இயக்குநர்.

நம்பியார் படத்துக்கு இன்னொரு பலம் சந்தானம். கதையைக் கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் அதிகபட்ச தேதிகளை ஒட்டுமொத்தமாக வழங்கியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ சந்தானம் எனலாம்.

சுனைனா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தக் கதையை முதலில் விஜய் ஆன்டனியிடம் சொல்லியிருக்கிறார்கள். சொந்தப் படத் தயாரிப்பு, நடிப்பு மற்றும் பெரிய படங்களுக்கு இசை என பிஸியாக இருப்பதாக மறுத்துவிட்டாராம் அவர்.

பின்னர் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டவர், தானே இசையமைக்கிறேன் என முன்வந்திருக்கிறார். இப்போது கம்போசிங்கில் பிஸியாகியிருக்கிறார். ஜெயப்பிரகாஷ், சுப்பு, ஜான் விஜய், தேவ தர்ஷினி, ஸ்ரீரஞ்சனி முக்கிய நடிகர்களும் படத்தில் உள்ளனர்.