விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்க அஜீத்துக்கும் நிர்பந்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்க அஜீத்துக்கும் நிர்பந்தம்

12/24/2010 2:27:55 PM

அரசியலில் குதிக்க  நடிகர் விஜய் ஆர்வம் காட்டுவதை தொடர்ந்து அஜீத்தையும் அரசியலில் களமிறக்கி விட அவரது ரசிகர்கள் மூலமாக நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக, நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டில் டெல்லி சென்ற விஜய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்ததை தொடர்ந்து அவர் காங்கிரசில் சேரப் போவதாக செய்தி பரவியது. பின்னர் அதுபற்றி தகவல் எதுவும் இல்லை.

கடந்த மாதத்தில், சென்னை வடபழனியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தனது ரசிகர்களை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர். தனிக்கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் சேர்வதா என்பது பற்றியும், ரசிகர் பலத்தை காட்டுவதற்காக பொங்கலுக்கு பிறகு திருச்சியில் மாநாடு நடத்துவது பற்றியும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது மகன் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சார வேலைகளை தொடங்கி விட்டார். ரகசிய சந்திப்புகள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். பரபரப்பான இச்சூழலில், அரசியலில் குதிக்குமாறு அஜீத்குமாரையும் அவரது ரசிகர்கள் நிர்பந்திக்கத் தொடங்கி உள்ளனர். ஆங்காங்கே ரகசிய கூட்டம் நடத்திய ரசிகர்கள் தங்களது விருப்பத்தை அவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். பல்வேறு மன்றங்களை சேர்ந்தவர்கள் அஜீத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து இதுபற்றி கூறினர்.

இது மன்றத்தினரிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் அஜீத்குமார் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அஜீத் கூறியிருப்பதாவது: எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற கணிப்பிற்கு மாறாக தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையை மீறி சுய விளம்பரத்துக்காக சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நான் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.

எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன். இனிமேல் மேற்கண்ட செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கெடுதல், பொது மக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால் என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு அஜீத் கூறியுள்ளார். அஜீத்தின் இந்த திடீர் எச்சரிக்கை, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபற்றி அஜீத் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் இன்று கூறியது: இரண்டு, மூன்று மாதங்களாகவே ரசிகர்கள் சிலர் அஜீத் பெயர், நன்மதிப்பை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.

'விஜய் அரசியலுக்கு வருகிறார்; நம்ம 'தல' எப்போது அரசியலுக்கு வருகிறார்.. யாருடன் கூட்டணி பேசப் போகிறார்?' என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நச்சரிக்கின்றனர். அஜீத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கும் ஒருபடி மேலே சென்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள மன்றங்களுக்கு போன் செய்து, 'ஞாயிற்றுகிழமை அங்கே கூட்டம் நடக்கிறது.

அஜீத் வருகிறார். ஏற்பாடுகளை செய்யுங்கள்..' என்று புரளி கிளப்பி குழப்பம் ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்கள் அவரது மனதை புண்படுத்தி இருக்கிறது. அதை தவிர்ப்பதற்காகவும், மக்களுக்கு எந்த இடையூறும் ரசிகர்களால் ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இப்படியொரு அறிக்கையை அஜீத் வெளியிட வேண்டியதாகி விட்டது.

சென்னை, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள ரசிகர் மன்றத்தினர் இன்று காலை அவசர கூட்டம் போட்டு அஜீத்தின் கட்டளைப்படி நடப்பதாகவும், அவரது விருப்பத்துக்கு மாறாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இவ்வாறு நிர்வாகி கூறினார்.


Source: Dinakaran
 

முருகதாஸ் படத்திலிருந்து விமல்,அமலா பால் திடீர் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முருகதாஸ் படத்திலிருந்து விமல், அமலா பால் திடீர் நீக்கம்

12/24/2010 4:04:32 PM

ஹாலிவுட் பட நிறுவனம் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் 2 புதிய படங்களை தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தை அவரிடம் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த சரவணன் இயக்குகிறார். இதற்கு இன்னும் பெயரிடவில்லை. இப்படத்தில் விமல், ஜெய் என இரு ஹீரோக்களும், அமலா பால், அஞ்சலியும் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், இதில் நடிக்க விமல், அதிகமாக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயின் அமலா பால் குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் ஒதுக்கி தர முடியவில்லையாம். இதையடுத்து இருவரும் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். விமலுக்கு பதிலாக ஷரவனந்த், அமலா பாலுக்கு பதிலாக 'நாடோடிகள்Õ அனன்யா நடிக்கின்றனர்.

இது பற்றி அனன்யா கூறும்போது, 'சரவணன் இயக்கும் படத்தில் ஷரவனந்த் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்கள் வந்தாலும் நல்ல சப்ஜெக்ட் இருந்தால்தான் ஒப்புக்கொள்கிறேன். இந்த ஆண்டு மலையாளத்தில் 4 படம் நடித்தேன். 2011ல் தமிழ், மலையாளத்தில் தலா 2 படம், இந்தியில் ஒரு படம் நடிக்கிறேன். தெலுங்கு படங்களிலிருந்தும் வாய்ப்பு வருகிறது. கால்ஷீட் இல்லாததால் ஒப்புக்கொள்ளவில்லைÕ என்றார்.


Source: Dinakaran
 

நான்கு படங்கள் இருந்தும் மேக்னாவிற்கு ஏமாற்றம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நான்கு படங்கள் இருந்தும் மேக்னாவிற்கு ஏமாற்றம்!

12/24/2010 4:06:05 PM

'காதல் சொல்ல வந்தேன்Õ படத்தில் அறிமுகமான ஹீரோயின் மேக்னா சுந்தர் கையில் நான்கு படங்கள் உள்ளன. ஆனால் பெரிய இயக்குனர்கள் அல்லது பெரிய ஹீரோக்கள் படம் வரும் என எண்ணிய மேக்னாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது ஷக்தி ஹீரோவாக நடிக்கும் 'கள்ளச்சிரிப்பழகாÕ, மற்றும் புது முக இயக்குனர்கள் இயக்கும் 'உயர்திரு 420Õ, Ôநந்தா நந்த¤தாÕ உள்பட 4 படங்களில் நடிக்கிறார்.


Source: Dinakaran
 

தூக்கத்தில் நடக்கும் நோய் மீண்டு வந்த சமீரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தூக்கத்தில் நடக்கும் நோய் மீண்டு வந்த சமீரா

12/24/2010 4:07:56 PM

தூக்கத்தில் நடக்கும் நோயால் அவதிபட்டு வந்த சமீரா ரெட்டி, போராடி மீண்டதாகக் குறிப்பிட்டார். தமிழில், 'வாரணம் ஆயிரம்', 'அசல்' படங்களில் நடித்துள்ளவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. தனக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் பற்றி சமீரா கூறுகையில் ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு இப்போது குணமாகிவிட்டேன். இந்தப் பிரச்னை எனக்கு 6 வயதிலிருந்தே இருந்தது. 20 வருடத்துக்குப் பிறகு, இப்போது மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


Source: Dinakaran
 

கிசு கிசு -எடை குறைக்கணும் நடிகைக்கு கண்டிஷன்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

எடை குறைக்கணும் நடிகைக்கு கண்டிஷன்

12/24/2010 4:25:08 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

ஜெனி நடிகை நடிச்ச தெலுங்கு படத்துக்கு, திடீர்னு எக்ஸ்ட்ரா காட்சிகள் படமாக்க நிர்பந்தம் ஏற்பட்டிருக்காம்… ஏற்பட்டிருக்காம்… இதனால நடிகைகிட்ட தயாரிப்பு கூடுதல் கால்ஷீட் கேட்டாராம்… கேட்டாராம்… 'நிச்சயமா நடிச்சி தர்றேன். ஆனா ஒரு நாளைக்கு இவ்வளவு பேமென்ட்டு'ன்னு கறாரா சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்… அவர் சொன்ன தொகையை கேட்டதும் தயாரிப்பு அதிர்ச்சி அடைஞ்சிட்டாராம்… அடைஞ்சிட்டாராம்… வேற வழியில்லாம கேட்டதை கொடுத்த தயாரிப்பு, சக நட்புங்ககிட்ட நடிகையோட வசூலை சொல்லி புலம்புறாராம்… புலம்புறாராம்..

புது நடிகருங்க நடிச்ச 'தாÕ படம் சமீபத்துல ரிலீசாச்சு. படத்தை பார்த்த வீடியோ சங்கத்துக்காரங்க சில காட்சிகளை நீக்கணும்னு போராட்டத்துல குதிச்சாங்களாம்… குதிச்சாங்களாம்… பயந்துபோன தயாரிப்பு படத்தை நிறுத்திட்டாராம். அந்த காட்சிகளை வெட்டச் சொல்லிட்டாராம். புதுசா வேற காட்சிகளை சேர்த்து, அடுத்த மாசம் ரிலீஸ் பண்றாங்களாம்…
பண்றாங்களாம்…

படங்கள் இல்லாததால சொந்த ஊர்ல அப்பாவுடைய பிசினஸுக்கு உதவியா இருக்கிறாராம் நமீ நடிகை. அதே நேரம், மலையாள தேசத்துல நடிக்கவும் முயற்சி பண்றாராம்… பண்றாராம்… ஆனா எடை குறைச்சிட்டு வந்தாத்தான் சான்ஸ் தருவோம்னு டைரக்டருங்க சொல்லிட்டாங்களாம்… சொல்லிட்டாங்களாம்…


Source: Dinakaran