வெளியான 4 மணி நேரத்தில் பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்!

Billa 2 Pirated Dvd Out

அஜீத் குமார் நடித்த பில்லா படத்தின் திருட்டு டிவிடி, அந்தப் படம் வெளியான நான்கு மணி நேரங்களில் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது!

அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், புருனா நடித்துள்ள படம் பில்லா 2, இன்று உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் இன்று காலை சென்னையில் வெளியானது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.

இதனால், படத்தின் திருட்டு டிவிடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல, இந்தியாவில் படம் ரிலீசான நான்கு மணி நேரங்களுக்குள் சுடச் சுட பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

இணையதளங்கள் சிலவற்றிலும் இந்தப் படம் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

திருட்டு டிவிடி வெளியாகியிருப்பது பில்லா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

கதாநாயகன் அஜீத் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில், படத்தின் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் செலவழித்த தங்களுக்கு, திருட்டு டிவிடி விவகாரம் பெரும் சிக்கலைத் தந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

நாளை அல்லது அதற்கடுத்த நாள் அநேகமாக போலீசாரை சந்திக்கவிருக்கிறார்கள், திருட்டு டிவிடிக்கு எதிராக மனு கொடுக்க!

 

ரஜினி, கமலிடம் தேதி கேட்கும் பிரபுசாலமன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனிடம் தேதி கேட்டியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். படத்தில் நடிக்க அல்ல, தான் இயக்கி உள்ள 'கும்கி' பட பாடல் கேசட்டை ரிலீஸ் செய்ய. பாடல் வெளியீடு அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் கலந்த கொள்ள ஆசைப்படுகிறார் இயக்குனர் பிரபு சாலமன். இதற்காக இருவரிடமும் ஒரு நாளை கேட்டியிருக்கிறார். இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தான், கும்கி படத்தின் ஹீரோ. உலக நாயகனும், சூப்பர் ஸ்டாரும் இளைய திலகம் பிரபுவின் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால் பாடல் வெளியீட்டு விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.


 

அமிதாப்பச்சனுடன் பிரபு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
சமீபத்தில் விளம்பர படமொன்றில் அமிதாப்பச்சனுடன், பிரபு சேர்ந்து நடித்தார். அமிதாப்புடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது இப்போது நனவாகி இருக்கிறது என்று நெகிழ்கிறார் பிரபு.


 

சூர்யாவுடன் காஜல் லிப் கிஸ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கோ' படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் 'மாற்றான் படத்தை இயக்கியுள்ளார் கே.வி.ஆனந்த். 1854ம் ஆண்டில் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்களின் நிஜ கதையில் சூர்யா நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மாற்றான் படத்தில் சூர்யாவுடன் உதட்டோடு உதடு முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால்.


 

பிரியா ஆனந்துக்கு பிரியதர்ஷன் கண்டிஷன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்கும் பிரியா ஆனந்துக்கு கண்டிஷன் போட்டார் இயக்குனர். நூற்றியெண்பது படத்தில் நடித்தவர் பிரியா ஆனந்த். இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான 'நாடோடிகள்' இந்தியில் உருவாகிறது. இப்படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். தமிழில் சசிகுமார் நடித்த வேடத்தை பாலிவுட் ஹீரோ ஜாக்கி பாகானி நடிக்கிறார். அனன்யா நடித்த வேடத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். சாஜித்,வாஜித் இசை அமைக்கின்றனர். இப்படத்துக்கு தற்காலிகமாக 'ரன்கிரிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக  சில வாரங்களுக்கு முன்பு பிரியா ஆனந்த் ஒப்பந்தம் ஆனார். அப்போது அவருக்கு பிரியதர்ஷன் படத்தின் கதை பற்றியும், படத்தை பற்றியும் யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். இதே நிபந்தனையை படத்தில் பங்கேற்கும் மற்றவர்களுக்கும் இயக்குனர் விதித்திருக்கிறார். இதுபற்றி பிரியா ஆனந்த் தரப்பில் கூறும்போது,நாடோடிகள் கதையை இந்தியில் இயக்குகிறார். ஒரு சில மாற்றங்கள் செய்தாலும் அதில் படத்தின் கரு எந்தவகையிலும் சிதையாமல் அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. அடுத்த மாதம் இறுதிவரை ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் பிரியா என்றனர்.


 

தமிழில் நடிக்காதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்பு, தனுஷ் படங்களுக்கு பிறகு தமிழில் நடிக்காதது ஏன்?' என்பதற்கு பதில் அளித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். இதுபற்றி அவர் கூறியதாவது: மயக்கம் என்ன, ஒஸ்தி படம் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது அதை ஏற்க முடியாத சூழலில் இருந்தேன். இதை புரிந்துகொண்ட வெங்கட்பிரபு வேறு படத்தில் இணைந்து பணியாற்றலாம் என்றார். இதற்கிடையில் வேறு மொழிகளில் பிஸியாகி விட்டதால் தமிழ் படங்களை ஏற்க முடியாமல் போனது. சமீபத்தில்  'பிரியாணி' என்ற படத்தில் நடிக்க கேட்டார் வெங்கட்பிரபு. அந்த வாய்ப்பை இழக்க இஷ்டமில்லை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். வழக்கமாக வெங்கட்பிரபு படம் என்றால் நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்படத்தில் ஹீரோயின் வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இளம் நடிகர்கள் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கார்த்தி முதலிடத்தில் இருக்கிறார். அவருடன் 'பிரியாணி' படத்தில் இணைவது சந்தோஷம். அதேபோல் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்படத்துக்காக என் உடல் எடையை குறைத்திருக்கிறேன்.


 

கிசு கிசு - ரிச் ஹீரோயின் பிஸி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

கவுதம இயக்கம் தயாரிக்கற தனியார் போஸ்ட் படத்துல சு.புரம் ஜெ ஹீரோ நடிக்கறாராம்... நடிக்கறாராம்... முதல்ல ஒரு ஹீரோயின தேர்வு செஞ்சி வேணாம்னு நீக்கிட்டாங்களாம். படத்த டபுள் மொழில தயாரிக்க பிளான் பண்ணதால ரிச்சான ஹீரோயின்கிட்ட பேசனாங்களாம். அவர் ஓ.கே. சொல்லி போட்டோ ஷூட் நடத்தனாங்களாம். மறுபடியும் இயக்கம் தரப்புலயிருந்து பேசாததால வேற படங்கள்ல ரிச் ஹீரோயின் பிஸியாயிட்டு நோ கால்ஷீட்னு கைவிரிச்சிட்டாராம். இப்ப ரெண்டு மொழிக்கும் தெரிஞ்ச இன்னொரு ஹீரோயின தேட்றாங்களாம்... தேட்றாங் களாம்...

ஆனந்தமான இயக்கத்தோட மாற்று படத்துல எல்லாருமே டபுள் டபுள்ளா வேல பாக்க வேண்டி இருக்காம்... இருக்காம்... கதைக் களம்  அப்படி அமைஞ்சதால  ஒப்புகிட்டவங்க சரின்னு வேலை பாத்தாலும் எடிட்டிங் பண்ற ஆண்ட் ஹனி டெக்னிஷியன் கடுமையா உழைக்க வேண்டி இருக்காம். 'இந்த உழைப்புக்கு நீங்க  டபுள் சம்பளம் கொடுக்கணும்'னு இயக்கத்துக்கிட்ட சொல்றாராம். இவர பாத்து டபுள் வேல செய்ய மத்தவங்களும் டபுள் பேமென்ட் கேக்கறதுபத்தி யோசிக்கறாங்களாம்... யோசிக்கறாங்களாம்...

ரே. குண்டா  படத்த தயாரிச்சவரு ஒரு பங்ஷன்ல பேசறப்ப, 'பெரிய ஹீரோங்க நடிச்ச பல படங்களுக்கு தியேட்டர்ல ஈ ஓட்டிகிட்டிருக்காங்க. ஆனா ஈய வச்சி எடுத்த படத்துக்கு ஜனங்க வர்றாங்கன்னு பேசனாராம்... பேசனாராம்... அவரோட பேச்சு கேக்கறது சுவாரஸ்யமா இருந்தாலும் சில ஹீரோக்களுக்கு கோபம் வந்திருக்காம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு ஈ ஓட்றாங்கன்னு இவர் எப்படி சொல்லாம். அப்படி எந்த ஹீரோ படத்துக்கு ஈ ஒட்றாங்கன்னு சொல்லற தைரியம் இருக்கான்னு கேக்கறாங்களாம்... கேக்கறாங்களாம்...


 

கேப்டன் டிவியில் ரமேஷ்கண்ணா வழங்கும் 'மக்கள் முழக்கம்'!

Captain Tv S Makkal Muzhakkam

நடிகர்கள் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது புதிய விசயமில்லை. ஜெயா டிவியில் விசு மக்கள் அரங்கம் நடத்துகிறார். சன்டிவியில் டி. ராஜேந்தர் அரட்டை அரங்கத்தில் களம் இறங்கியுள்ளார். அந்த வரிசையில் இப்போது நடிகரும், இயக்குநருமான ரமேஷ்கண்ணா கேப்டன் டிவியில் மக்கள் முழக்கம் நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்திக்க வருகிறார்.

அன்றாடம் சமுதாயத்தில் மக்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையமாக வைத்து நடைபெறும் விவாத நிகழ்ச்சி இது. தமிழ் நாட்டில் பல ஊர்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஊர்களிலும் அப்பகுதி மக்கள் இவ்விவாத நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பேச்சாளர்களுக்கு நிதி உதவியும் அவர்களுக்கு தேவையான கல்வி உதவியும் வழங்குவது சிறப்பு அம்சம். கேப்டன் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு மக்கள் முழக்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சன், ஜெயா, ராஜ் டிவிக்கு போட்டியாக வரும் 'கேப்டனின் முழக்கம்' மக்களை சென்றடையுமா? என்பதை எதிர்வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம்.

 

‘மானாட மயிலாட’ மனதிற்கு உற்சாகம் தருகிறது – நமீதா

" ‘மச்சான் சூப்பர் மச்சான்' டான்ஸ்ல கலக்கிட்டே'' என்று கூறி பறக்கும் முத்தத்தை கொடுத்து பங்கேற்பாளரை உற்சாகப்படுத்துவார் மானாட மயிலாட ஜட்ஜ் நமீதா. இது போன்ற பாராட்டினை பெறவேண்டும் என்பதற்காகவே நடனப்போட்டியில் பங்கேற்பவர்கள் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்கவைத்திருக்கும் நமீதா மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனது சின்னத்திரை பயணம் குறித்து அவர் சொல்வதை படியுங்களேன்.

‘மானாட மயி​லாட' ஒரு வெற்றிகர​மான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன்.இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்க​ளுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்​கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.

சினிமாவை தவிர இன்று எனக்கு கிடைத்தி​ருக்​கும் ரசிகர் பட்டாளத்​தில் பெரும்பாலானவர்கள் சின்னத்​திரை மூலம் கிடைத்தவர்கள்​தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரு​கிற சாதன​மாக இன்று சின்னத்​திரை இருக்கிறது. ரசிகர்க​ளின் இடத்​திற்கே சென்று, அவர்க​ளைச் சந்​திப்பது என்பது சின்னத்​திரை மூலம்​தான் முடி​யும்.

வட இந்​திய நடிகர்கள்​தான் இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் கலந்து​கொண்டு போட்டியாளர்களை​யும்,ரசிகர்களை​யும் உற்சாகப்ப​டுத்து​வார்கள்.

தென்​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக "மானாட மயி​லாட' மூலம் கிடைக்கிறது. தற்​போது என்​னைத் தொடர்ந்து இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் குஷ்பு, பூஜா,ரம்பா, ஆகி ​யோர்க​ளும் கலந்து​கொண்டு வருகி​றார்கள். சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைக​ளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது.

என்னை நம்பி எடுக்கப்படு​கிற படங்க​ளுக்கு ரசிகர்க​ளின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அத​னால் என்​னு​டைய ரசிகர்கள் எதை விரும்பு​வார்கள்?என்று யோசித்து,அதற்​கேற்ற​வாறு கதைக​ளைத் தேர்ந்தெ​டுக்கி​றேன். தயா​ரிப்பாளர்க​ளும் இந்த விஷயத்​தைப் புரிந்து வைத்தி​ருப்ப​தால்​தான் எனக்​கேற்ற கதைக​ளைத் தேர்வு செய்து​கொண்டு வந்து என்னை அணுகுகி​றார்கள். எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் எனக்கு அமைந்​தால் தொடர்ந்து நடிப்​பேன்.ஏனெ​னில்,என்னை வைத்து படமெ​டுக்​கும் தயா​ரிப்பாளர்கள் என்​னால் நஷ்டமடையக்கூ​டாது! என்று பரந்த மனதோடு கூறி ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார் நமீதா.

 

டீக்கடைக்காரர் மீது பொய் புகார் கூறியுள்ளார் ஷோபனா.. பஞ்சர் கடைக்காரர் பரபரப்பு பேட்டி!

Actress Shobana Is Telling Lies Says Cycle Shop Owner

சென்னை: நடிகை ஷோபனா வீட்டு அருகே டீ, டிபன் கடை நடத்தி வந்த பெண் ஒரு அப்பாவி. கடந்த 35 வருடமாக இங்கு அவர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஷோபனாவின் வீட்டில் அவர் தண்ணீர் பிடித்ததால் கோபமடைந்து பொய்யான புகாரைக் கூறி கடையைக் காலி செய்து விட்டார் என்று கூறியுள்ளார் ஷோபனா வீட்டு அருகே பஞ்சர் கடை வைத்திருக்கும் ஜோதி என்பவர்.

நடிகை ஷோபனாவால் பெரும் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவரை அபகரித்துக் கொண்டதாக அந்த நபரின் மனைவி ஷோபனா மீது பரபரப்புப் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரரை அகற்ற கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போய் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஷோபனா. அவரது புகாரை ஏற்ற போலீஸாரும் உடனே நடவடிக்கை எடுத்து டீக்கடையை ராவோடு ராவாக தூக்கி விட்டனர்.

ஆனால் ஷோபனா பொய் பேசுவதாக அவரது வீட்டுக்கு அருகே பஞ்சர் கடை நடத்தி வரும் ஒருவர் கூறியுள்ளார். அவருக்கு ரோட்டில் யார் நடந்து போனாலும் கூட பிடிக்காது என்றும் அவர் கூறுகிறார்.

இதுகுறித்து பஞ்சர் கடை நடத்தி வரும் ஜோதி கூறுகையில்,

ஷோபனா வீடு அருகே நடமாடும் டீக்கடை நடத்தியது நெல்லையைச் சேர்ந்த பெண். இவர் சுமார் 35 வருடங்களாக அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். காலையில் டிபன், மதியம் சாப்பாடு ஆகியவையும் விற்பார். பங்களாக்கள் நிறைந்த அந்த பகுதியில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளர்கள் இந்த கடையில்தான் சாப்பிடுவது வழக்கம்.

ஷோபனா வீட்டிற்கு வரும் பெண்களை கேலி செய்ததாக எந்த சம்பவமும் நடக்கவில்லை. தினமும் ஷோபனா வீட்டு காவலாளி ஷோபனாவுக்கு தெரியாமல் டிபன் கடை நடத்திய பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து வந்தார். நேற்று தண்ணீர் பிடித்தபோது ஷோபனா பார்த்து விட்டார். உடனே அந்த பெண்ணையும், காவலாளியையும் திட்டியுள்ளார்.

உடனே டிபன் கடை நடத்தி வந்த பெண்மணி ஷோபனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இந்த பிரச்சினைக்காகவே தவறான தகவல் கொடுத்து கடையை காலி செய்ய வைத்துள்ளனர்.

நானும் இந்த பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக பஞ்சர் கடை நடத்துகிறேன். இந்த பகுதியில் ஒரு நாளும் எந்த பிரச்சினையும் வராது. சுமார் 2 வருடங்களுக்கு முன்புதான் ஷோபனா இந்த வீட்டில் வந்து குடியேறினார். அவர் வந்தது முதலே பிரச்சினைதான். அவர் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ரோட்டில் யாரையும் கண்டால் அவருக்கு பிடிக்காது.

சைக்கிளுக்கு யாராவது காற்று அடைத்தால் அவருக்கு பிடிக்காது. உடனே தனது செல்வாக்கை பயன்படுத்தி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி போலீசை வரவழைத்து விடுவார்.

என்னைப் பற்றியும் 3 முறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரும் நேரில் வந்து என்னை சத்தம் போட்டார்கள். பின்னர் உண்மையையும், எனது நிலையையும் அறிந்து சென்று விட்டார்கள். எங்களுக்கு இது வாடிக்கையாகி விட்டது என்றார் பரிதாபமாக.

இவர் கூறுவது உண்மையாக இருந்தால் நடிகை ஷோபனா மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

 

'செம படம்யா'.. அஜீத்தின் 2வது பில்லாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!

Box Office Craze Ajith S Billa 2 Opened To Packed House

அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள பில்லா 2 படத்துக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. படம் பிரமாதமாக இருப்பதாக படத்தை ஓபனிங் ஷோவிலேயே பார்த்து விட்ட ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளா இன்று பில்லா 2 படம் ரசிகர்கள் கண் முன் விரிந்தது. படம் தொடக்கம் முதல் முடிவு வரை கிளாஸாக இருப்பதாக ரசிகர்கள் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர்.

முதல் பில்லாவை விட இந்தப் படம் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதாக ரசிகர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே பில்லா 2வின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தயாராகி வந்தனர். இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500 தியேட்டர்களுக்கும் மேலாக திரையிடப்பட்டது பில்லா 2. தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இது திரையிடப்பட்டுள்ளது.

தெலுங்கிலும் இப்படம் டேவிட் பில்லா என்ற பெயரில் டப் ஆகியுள்ளது. படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கே சென்னையில் தொடங்கி விட்டது. அஜீத் ரசிகர்கள் முதல் நாள் ஷோவுக்கு ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்து விட்டு இன்று காலையிலேயே தங்களது தலைவரின் படத்தை தரிக்க குவிந்து விட்டனர். திரையிட்ட இடமெல்லாம் அஜீத்தின் ரசிகர்கள் கூட்டம் திருவிழாக் கூட்டமாக இருந்தது.

படம் சூப்பர், மெகா ஹிட் என்பதே ரசிகர்களின் இறுதி தீர்ப்பு... இன்னும் சில நிமிடங்களில் விமர்சனம் வருகிறது. காத்திருங்கள்...

 

பில்லா 2 - ஸ்பெஷல் விமர்சனம்

Billa 2 Review 2

-எஸ் ஷங்கர்

என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம்.

மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது.

படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள்.

படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது!

கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார்.

அகதி முகாமில் அஜீத்துக்கு தொடர்ந்து தொல்லை தருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். நாயகனில் வரும் போலீஸ்காரர் ரேஞ்சுக்கு அவர் இம்சை தொடர்கிறது. ஒரு வைரக் கடத்தலில் அஜீத்தை சிக்க வைத்து போட்டுத் தள்ளப் பார்க்கிறார். ஆனால் சுதாரித்துக் கொள்ளும் அஜீத்தும் அவர் நண்பரும் போலீஸ்காரர்களை போட்டுத் தள்ளிவிட்டு, வைரத்தை உரிய நபரிடம் (இளவரசு) ஒப்படைக்க, இவர்களின் தொழில் நேர்மையைப் பாராட்டி தொடர்ந்து வேலை தருகிறார்.

ஆனால் அடுத்த கட்டத்துக்குப் போக முயலும் அஜீத், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத பிஸினஸ் என்று போகிறார். மும்பை தாதா சுதன்ஷாவுடன் சேருகிறார். அடுத்த சீனிலேயே மும்பையிலிருந்து ஜார்ஜியாவுக்கு பயணமாகிறார்... (கடத்தல் பிஸினஸை (?) அடுத்த லெவலுக்கு கொண்டு போறாங்களாம்!)

அங்கே அட்டகாசமான வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் முதலில் நட்பாகி பின்னர் விரோதியாகிறார். விரோதிகள் அனைவரும் இவரை போட்டுத் தள்ள முயல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை டப் டப்பென்னு சுட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் ஒரு இந்திக்கார எதிரி தானே முன்வந்து என்னை சுட்டுக் கொல்லு என்கிறார், நல்ல தமிழில்! இனி சுட எதிரிகளே இல்லை என ரசிகர்களே முடிவு கட்டிக் கொண்டு எழ தயாராகும்போது, நல்ல வேளை படமும் முடிந்து போகிறது!

இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை.

அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம்.

பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது!

இரண்டு காட்சிகளை உருப்படியாக எடுத்திருக்கிறார்கள். ஒன்று மராட்டிய முதல்வரும் அஜீத்தும் பேசிக் கொள்ளும் இடம்.

அடுத்து, அந்த பாட்டில் ஃபைட்!

அஜீத் நடந்து வந்தாலே போதும்... தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா....னமாக வசனம் சொன்னால் போதும்... சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற உட்டாலக்கிடி கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கப்பா. கோட் சூட், ஏறி மிதிக்க பிகினி பெண்கள் என்த பந்தா இல்லாமல் குடிசையில் கூட ஒரு கொடிய டான் குடியிருப்பான். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்!

ஆனால், அந்த ஹெலிகாப்டர் சேஸிங் சான்ஸே இல்லை. அஜீத்துக்கு மகா தைரியம்!

பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம். எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்துவிட்டு இடைவேளையில் செத்துப் போகிறார். அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா அப்துல்லா பரவாயில்லை. க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் வத்தலாக வந்து கடைசியில் சாகிறார்.

அஜீத்துடன் நண்பராக வரும் நடிகர் அம்சமாக நடித்திருக்கிறார். அதேபோல சுதன்ஷு, வித்யூத் ஜம்வால் இரண்டு வில்லன்களுமே பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சுதன்ஷுவின் பாடி லாங்குவேஜ், நடிப்பு அனைத்துமே அபாரம்!

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஜார்ஜியா காட்சிகள் கண்களுக்கு வேறு உலகைக் காட்டுகின்றன.

மகா நிதானமாக நகரும் காட்சிகளை வேகப்படுத்த யுவனும் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார். அந்த பின்னணி தீம் மியூசிக் உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை.

எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கள்.

அடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த 'கோட்'டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!

 

அஜீத்ஃபேன்ஸ் சார்பில் பில்லா 2 சிறப்புக் காட்சி - திரையுலகினர் திரண்டனர்!

Ajithfans Special Show Billa 2

அஜீத் ரசிகர்களுக்காக இயக்கும் அஜீத் பேன்ஸ் இணையதளம் சார்பில் பில்லா 2 சிறப்புக் காட்சி இன்று காலை ஃபேம் நேஷனல் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் திரண்டு வந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.

மங்காத்தாவுக்குப் பிறகு அஜீத் நடித்துள்ள படம் பில்லா 2. பார்வதி ஓமணக்குட்டன், புருனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால், சுதன்ஷு நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 அரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

அஜீத் ரசிகர்களுக்காகவே இயங்கும் இணைய தளமான அஜீத்ஃபேன்ஸ்.காம் சார்பில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி இன்று விருகம்பாக்கம் ஃபேம் மல்டிப்ளெக்ஸில் திரையிடப்பட்டது.

இந்தக் காட்சிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் திரண்டு வந்தனர். அஜீத்தின் அடுத்த படத் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம், இயக்குநர்கள் சற்குணம், மனோஜ்குமார், கேஎஸ் அதியமான், மவுனகுரு புகழ் சாந்தகுமார், திரு, ஜவஹர், ஜீவன், எங்கேயும் எப்போதும் சரவணன், நடிகர்கள் பாண்டு, உமா ரியாஸ், ரியாஸ் கான், மெரினா பாண்டிராஜ், இயக்குநர் விஜயபத்மா, பிடிச்சிருக்கு அசோக், கனகதாரா பிலிம்ஸ் ரமேஷ்குமார், சுந்தரி பிலிம்ஸ் முருகன் உள்பட பலரும் வந்திருந்தனர்.

அஜீத்பேன்ஸ் சார்பில் எஸ் பிரவீண்குமார், மக்கள் தொடர்பாளர் ஏ ஜான் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

 

திரண்டு வந்த ரசிகர் பட்டாளம்.. புதிய சாதனை படைத்த அஜீத்!

Fans Ajith Celebrate Their Thala

இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் மற்ற நடிகர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அஜீத் கொடுத்து வைத்தவர்தான்.

ரசிகர் மன்றமே தேவையில்லை என்று ஒரே ஸ்டேட்மென்ட்டில் கலைத்துப் போட்டு போய்க் கொண்டே இருந்தவர்தான் அஜீத். ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் சளைத்து விடுவோமா என்று அஜீத்தின் பின்னால் ராணுவம் போல அணிவகுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

தமிழ் நடிகர்கள் யாருமே இதுவரை இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. எனக்கு மன்றமே தேவையில்லை என்று தைரியமாகவும், தீர்க்கமாகவும் சொல்லி ஒரு நல்ல நாளாகப் பார்த்து மன்றத்தைக் கலைத்தவர் அஜீத். அதைப் பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட்டனர். இனி எங்கே அஜீத் பின்னால் ரசிகர்கள் நிற்கப் போகிறார்கள். அதிருப்தி அடைந்து கலைந்து போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தனர்.

ஆனால் மங்காத்தா படத்தின் ரிலீஸின்போது திரண்ட அஜீத் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தனர். மன்றம் வேண்டாம் என்று அஜீத் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய அளவில் மங்காத்தாவை கொண்டாடினர் அஜீத் ரசிகர்கள்.

இப்போது பில்லா 2 பட ரிலீஸின்போதும் அஜீத் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள். திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். அஜீத் கட் அவுட்டுக்கு பூஜை செய்வது, பாலாபிஷேகம் செய்வது என வழக்கம் போல கலக்கிய அவர்கள் மேலும் ஒரு படி போய் மிகப் பெரிய அளவில் செலவு செய்து பூமாலையும் போட்டுள்ளனர் அஜீத் கட் அவுட்டுக்கு.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு படையெடுத்து வந்திருந்த அஜீத் ரசிகர்கள் ஆல்பட் தியேட்டரில் மிகப் பெரிய ராட்சத பூமாலையை போட்டு அனைவரையும் வியக்க வைத்தனர். இந்த பூ வேலைப்பாட்டுக்கான செலவு ரூ ஒன்றரை லட்சமாம். இதைக் கேட்டவுடன் பலருக்கும் மயக்கம்தான் வந்தது. இவ்வளவு பெரிய செலவு செய்து அஜீத்தை கொண்டாடும் ரசிகர்களா என்று வியந்து விட்டனர்.

 

பிபாஷா நீ ஒரு தோத்தாங்குளி... நக்கலடிக்கும் பூனம் பாண்டே!

http://tamil.oneindia.in/img/2012/07/13-poonam-pandey-bipasha-basu-.jpg
அடுத்தடுத்து அரைகுறையாக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை தொழிலாக வைத்திருக்கும் பூனம் பாண்டே இப்போது பிபாஷா பாசுவை வம்புகிழுத்து நக்கலடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு பிபாஷா அளித்த பேட்டியில் இன்றைய ஆண்கள் தோற்றுப்போனவர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக பேசியுள்ளார் பூனம் பாண்டே. டிவிட்டர் மூலம் இந்த விளாசலை விட்டுள்ளார் பூனம்.

இதுகுறித்து அவர் எழுதுகையில், பிபாஷ தனது வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களையே தேர்ந்தெடுத்ததால்தான் அவர்களும் தோற்றுப் போனார்கள், இவரும் தோற்றுப் போனார். அதற்காக அத்தனை ஆண்களும் தோல்வியாளர்கள் என்று அர்த்தம் கிடையாது.

ஆண்கள் அனைவருமே தோல்வியாளர்கள் என்று ஒருவர் கூறினால், அவர் உண்மையான ஆண்மகனை இன்னும் சந்திக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

ஒருவேளை இன்றைய ஆண்கள் அனைவருமே தோல்வியாளர்கள் என்று பிபாஷா கூறினால், பிறகு அவர் அசிங்கம் பிடிச்ச, பழைய பணக்காரர்களுடனா போய் வாழப் போகிறார்...

திரையுலகில் 10 வருடங்களுக்கும் மேலாக நடித்த ஒருவர், இப்போது வந்து ஆண்களைப் பார்த்து தோத்தாங்குளிகள் என்று கூறினால், உண்மையிலையே தோத்தாங்குளி யார் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... இப்படிப் போகிறது பூனம் பாண்டேவின் பேச்சு.

ஓ.கே. புதுச் சண்டைக்குப் பூஜை போட்டாச்சு.. கொஞ்ச நாளைக்கு பூனத்திற்கு பொழப்பு நன்றாகப் போகும்...!
 

பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுக்கப் போகும் ஷெர்லின் சோப்ரா... முதல் இந்தியப் பெண்!

http://tamil.oneindia.in/img/2012/07/13-sherlyn-chopra5-300.jpg
நடிகை ஷெர்லின் சோப்ராவுக்குப் புதுப் பெருமை கிடைத்துள்ளது.அதாவது பிளேபாய் பத்திரிக்கைக்காக அவர் போஸ் கொடுக்கப் போகிறார். பிளேபாய் இதழில் இடம் பெறும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கப் போகிறது.

பிளேபாய்க்கு போஸ் கொடுப்பதற்காக ஷெர்லின் சோப்ரா, தற்போது லாஸ் ஏஞ்சலெஸ் வந்துள்ளார். பிளேபாய் நிறுவன அதிபர் ஹியூக் ஹெப்னரின் பங்களாவில்தான் தங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து போஸ் கொடுத்தும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வாரத்தில் ஷெர்லினை விதம் விதமாக போட்டோ எடுக்கப் போகின்றனராம்.

இதுகுறித்து ட்விட்டரில் ஹெப்னல் கூறுகையில், இன்று நடந்த டோமினோ விளையாட்டில் ஆஷ்லே ஹாப்ஸ் வென்றார். நான், கிறிஸ்டல், திரிஷா (நம்ம் திரிஷா இல்லை), செல்சியா, இந்தியாவிலிருந்து வந்துள்ள ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். ரொம்ப வேடிக்கையான இரவு இது என்று குதூகலமாக கூறியுள்ளார் ஹெப்னர்.

இதேபோல ஷெர்லின் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உலகிலேயே மிகவும் அன்பான நபர் ஹெப்னர்தான் என்று கூறியுள்ளார். மேலும் பிளேபாய்க்காக போஸ் கொடுக்கும் முதல் இந்தியப் பெண் என்பதில் பெருமைப்படுவதாகவும் புளகாங்கிதப்பட்டுள்ளார்.

எப்படி போஸ் கொடுக்கப் போகிறாரோ ஷெர்லின்...!
 

வக்கீலுக்குப் படிக்கும் மக்கள் டிவி ஆர்த்தி

http://tamil.oneindia.in/img/2012/07/13-aarthi-2-4.jpg
அரசியல்வாதிகள்தான் வக்கீலுக்கு படிக்கவேண்டும் என்பதில்லை. இப்போது தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் வக்கீலுக்கு படித்து நீதிமன்றத்தில் பிராக்டீஸ் செய்து வருகின்றனர்.

சன் டிவியில் செய்திவாசிப்பாளராக உள்ள மகாலட்சுமி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பிராக்டீஸ் செய்து வருகிறார். அதே வரிசையில் அடுத்த அழகான வக்கீல் ஒருவர் தயாராகிவருகிறார். அவர் வேறுயாருமல்ல மக்கள் தொலைக்காட்சியில் சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர்த்தி. ஏற்கனவே எம்.ஏ., பிஸினஸ் எக்கனாமிக்ஸ் படித்த ஆர்த்தி இப்போது கூடுதலாக சட்டமும் படித்து வருகிறார்.

அம்பேத்கார் சட்டக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஆர்த்தி, ஏழை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதைப்போல ஏழை எளியவர்களுக்கு நீதி பெற்றுத்தர சட்டப்புத்தகத்தை கையில் இனி மக்கள் தொலைக்காட்சியில் கனம் கோர்ட்டார் அவர்களே என்று நிகழ்ச்சி நடத்தினாலும் ஆச்சரிப்படத் தேவையில்லை.
 

நடனப்பள்ளி மாணவிகளிடம் இளைஞர்கள் சில்மிஷம் - ஷோபனா போலீசில் புகார்

Shobhana Lodges Complaint Against Roadside Romeos

சென்னை: தன்னிடம் நடனம் கற்க வரும் மாணவிகளிடம், ரோமியோக்கள் ஈவ்டீசிங் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை ஷோபனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

'தளபதி, 'எனக்குள் ஒருவன்', 'இது நம்ம ஆளு' போன்ற பிரபல தமிழ்ப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஷோபனா (வயது 42). மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி இவரது அத்தை. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீமன் சீனிவாசா ரோட்டில் வசிக்கிறார்.

நேற்று நடிகை ஷோபனா தனது நடனப்பள்ளி மாணவி ஒருவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.

ஷோபனாவிடம், என்ன புகார் மனு கொடுத்தீர்கள் என்று, நிருபர்கள் கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல், ஷோபனா கண்கலங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், "நான் எனது வீட்டில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். 200 மாணவிகள் என்னிடம் நடனம் கற்று வருகிறார்கள்.

ஆனால் எனது நடனப் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு பெரும் தொல்லை கொடுக்கும் வகையில், எனது வீடு அருகில் இருக்கும் நடமாடும் டீக்கடைக்கு, டீ சாப்பிட வரும் இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.

இதைக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது வீட்டுக்குள் அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். எனது மாணவி ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள்.

பிரச்சினைக்குரிய அந்த டீக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

 

காதலனுக்குப் (முன்னாள்?) போட்டியாக களமிறங்கும் நயன்தாரா!

Nayan Direct Movie

நடிகை என்ற எல்லையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்கும் பயணிக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது நயன்தாரா.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் புதிய படத்தில், நடிகையாக மட்டுமல்ல... உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம்.

அதிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறாராம்.

படப்பிடிப்புகளில் கிளாப் போர்டு அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறாராம் நயன்தாரா.

இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயரும் இடம்பெறப் போகிறதாம். விரைவில் புதுப்படமொன்றை இயக்கும் திட்டம் உள்ளதாகவும் நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு இயக்குநர் ஆகும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. தாடிக்குப் போட்டியாக இருக்குமோ!

 

பில்லா 2 ரிலீஸ்... சென்னையில் மட்டும் 50 அரங்குகள்!

Ajith Billa 2 Releasing 50 Screens In City    | பில்லா 2 பிரஸ் மீட்  

சென்னையில் மட்டும் இன்று 50 அரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது பில்லா 2.

ரஜினியின் சிவாஜி- தி பாஸ்க்குப் பிறகு, படத்தை வெளியிடும் முறையே மாறிப் போய்விட்டது. தமிழ் சினிமா வியாபாரத்தில் பல வகையிலும் முன்னோடியாக பார்க்கப்படும் இந்தப் படம்தான், அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் போக்கையும் ஆரம்பித்து வைத்தது.

2007-ல் சிவாஜி - தி பாஸ் படத்தை 19 அரங்குகளில் வெளியிட்டனர் 2007-ல். படத்துக்குத் தரப்பட்ட பெரும் விலையை, நான்கைந்து வாரங்களிலேயே எடுத்ததோடு, நல்ல லாபத்தையும் சம்பாதித்தனர்.

அதற்குப் பிறகு பலரும் தங்கள் படங்களை அதிக அரங்குகளில் வெளியிட்டு, குறைந்த நாட்களில் போட்ட பணத்தை எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

அதன் பிறகு 2010-ல் வந்த சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 44 அரங்குகளில் வெளியாகி புதிய சரித்திரம் படைத்தது.

இப்போது, அஜீத் நடிப்பில் வெளியாகும் பில்லா 2 படத்தை 50 அரங்குகளில் வெளியிட்டுள்ளனர் சென்னை நகரில் மட்டும். சர்வதேச அளவில் 2500 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

பல தியேட்டர்களில் ரஜினி - அஜீத் படங்கடன் பில்லா 2 பேனர்களை வைத்துள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

 

சுதந்திரமா இருக்கணும்: 'தங்கம்' தொடர் வர்ஷா

Thangam Serial Is My Favorite Varsha

தங்கம் தொடரில் வடிவும், இளவஞ்சியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. வடிவாக வரும் வர்ஷா ஹைதராபாத்தை சேர்ந்தவராம். இஸ்லாம் சமுதாயத்தை சேர்ந்த வர்ஷாவிற்கு பொட்டு வைத்துக்கொள்வது, பூவைப்பது என்றால் மிகவும் இஷ்டம் என்கிறார். தன்னுடைய சின்னத்திரை சீரியல் வாழ்க்கைப் பற்றி அவர் சொல்வதை படியுங்களேன்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத்தில்தான். இங்கே சென்னையில் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கிறேன். சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும். அதற்காகவே டி.வி. பார்ப்பேன். எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும் அதற்காகவே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன்.

காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட முதல் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

தங்கம் தொடரில் கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.

நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.

நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டால் நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது நடன நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.

என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.