அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. படத்திற்கு ஹீரோவாக 'சிம்பு' நடிக்கிறார். இந்த படம் காமெடிக்கு முக்கியத்துவம் இருப்பதால், படத்தில் சந்தானம் நடிக்க உடனே கொண்டது படக்குழு. ஏற்கனவே சந்தானம்-சிம்பு கூட்டணி, 'வெற்றி கூட்டணி' என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
""3''-க்கு பயப்படும் மற்ற பட தயாரிப்பாளர்கள்?
'கொலவெறி' என்ற பாடல் உலகத்தையே அசத்தியது. இதனையடுத்து '3' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு காரணம், பிரதமரையே விருந்துக்கு அழைக்க வைத்த பாட்டு இடம்பெறும் படம் என்தபால். அதுமட்டுமின்றி '3' படத்தின் ரிலீஸ் தேதிக்காக சில படங்கள் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், கொலவெறி பாடலால் படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் மற்ற பட தயாரிப்பாளர்கள் சிலர், '3' படத்திற்காக, தங்கள் பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கின்றனர் என்று கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
கார்த்தி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?
கார்த்தி படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பதற்கு பதில் கூறினார் லட்சுமிராய். தாம் தூம், இரும்புகோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா என அடுத்தடுத்து தமிழில் நடித்துவந்த லட்சுமிராய்க்கு இப்போது சொல்லும்படி தமிழில் படம் இல்லை. மலையாளத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: நடிக்க கேட்டு வந்த எல்லா படங்களையும் முன்பு ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அந்த பாணியை மாற்றிக்கொண்டேன். வரும் எல்லா படங்களிலும் கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. நல்ல வேடம் என்றால் மட்டுமே தேர்வு செய்து ஒப்புக்கொள்கிறேன். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என் கேரக்டரை கேட்டபோது பிடிக்கவில்லை. அதில் நடிப்பதைவிட சும்மா இருப்பதே மேல் என்று நடிக்க மறுத்துவிட்டேன். இப்போதைக்கு கடினமான பாதையை கடந்துகொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஜீவா படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. இப்போதைக்கு மலையாளத்தில் 3 படம், கன்னடத்தில் 2 படம், தெலுங்கில் ஒரு படம் என 6 படங்களில் நடித்து வருகிறேன். நான் கடவுளையும், கடின உழைப்பையும் நம்புகிறேன். எந்த வேடத்தை ஏற்றுக்கொண்டாலும் அதை ஒரு தேர்வுபோல எண்ணி நடிக்கிறேன். எது வந்தாலும தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. நல்ல படத்துக்காக காத்திருக்க தயாராகிவிட்டேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.
மலையாளத்தில் டபுள் மீனிங் படங்களுக்கு எதிர்ப்பு
மலையாளத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மலையாள படங்கள் என்றாலே கவர்ச்சி படங்கள் என்ற நிலை மாறி நல்ல கதை அம்சமுள்ள படங்கள் வரத் தொடங்கின. தற்போது அந்த நிலை மீண்டும் மாறிவருவதாக மலையாள படவுலகினர் கூறுகின்றனர். சமீபகாலமாக வரும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறது. கணவனை ஏமாற்றும் பெண்கள், காதலனை ஏமாற்றும் கதைகள், பெண்களை கவர்ச்சியாக சித்தரிக்கும் படங்கள் அடுத்தடுத்து வருகிறது. இதுபோன்ற படங்களுக்கு புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கைதட்டலும், வரவேற்பும் கிடைப்பதால் அந்த பாணியை தொடர்ந்து பயன்டுத்துகின்றனர். குடும்ப பாங்கான கதைகள் என்று கூறப்படும் படங்களில் கூட இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெறுகிறது. இந்தநிலை மாற வேண்டும். ஒரு சாரார் இதுபோன்ற படங்களை விரும்பினாலும் பெரும்பாலானவர்கள் இதை வரவேற்கவில்லை. எனவே நல்ல கதை அம்சமுள்ள படங்களில் டபுள் மீனிங் வசனங்கள், ஆபாசத்தை தூண்டும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நைஜீரியாவில் சிங்கம் 2
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் 'பில்லா 2'. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து 'பில்லா 2' உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தென்ஆப்ரிக்கா, நைஜீரியாவில் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் ஹரி.
ரஜினிக்கு கதை சொன்ன பட குழு
தலைவாசல் படத்தை இயக்கியவர் செல்வா. இவர் தற்போது 'நாங்க என்ற படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் 25 படம். சந்தானபாரதி, பாடகர் மனோ ஆகியோரின் வாரிசுகளுடன் வெவ்வேறு துறையினரின் வாரிசுகள் 10 பேர் இதில் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இது பற்றி செல்வா கூறியது: பட குழுவினருடன் சென்று ரஜினியை பார்த்தேன். படத்தின் கதையை கேட்டார். முழு கதையும் சொன்னேன். அதை கேட்டபிறகு படத்தின் கரு பிடித்திருப்பதாக கூறியதுடன் கதைக்களம் 1980யை பின்னணியாக கொண்டிருப்பதால் கதை அம்சம் உள்ள கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். நிறைய புதுமுகங்கள் திரையுலகுக்கு வரவேண்டும் என்றும் ரஜினி விருப்பம் தெரிவித்தார். அதேபோல் பட குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ÔÔஒரே படத்தில் இவ்வளவு பேர் அதுவும் வாரிசுகள் அறிமுகமாகியுள்ளது பெரிய விஷயம்ÕÕ என்று கமல் பாராட்டினார். ரஜினி - கமல் சந்திப்புக்கு மனோ, சந்தானபாரதி ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்து பட குழுவினர் அனைவரும் ரோடு ஷோ நடத்த உள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் மார்ச் 2ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. பாலமுருகன் ஒளிப்பதிவு. பாலபாரதி இசை.
பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால்
டோலிவுட்டில் ஏற்கனவே கலக்கிய காஜல் அகர்வால், தற்போது கோலிவுட் மற்றும் பாலிவுட்டை கலக்க தயாராக உள்ளாராம். தற்போது கோலிவுட் படங்களில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். தமிழில் விஜய், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் நடித்து வரும் காஜல் அகர்வால், புதிய இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.
"கடல்" படத்தில் நான் வில்லன் இல்லை
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்கும் படம் 'கடல்'. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவுதமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதனையடுத்து வில்லன் நடிகராக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கிறார் என தகவல் வெளியாகின. ஆனால், 'தான் வில்லனாக நடிக்கவில்லை' என்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் கூறியுள்ளார். 'மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மை தான், ஆனால் வில்லனாக நடிக்க அவர் என்னை அழைக்கவில்லை' என்று அர்ஜூன் கூறியுள்ளார்.
"பில்லா 2" படத்தில் நயன்தாரா?
அஜித்தின் அடுத்த அதிரடியான 'பில்லா 2' தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 'பில்லா 2' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 'பில்லா 2' படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச எண்ணியுள்ளாராம் இயக்குனர் சக்ரி.
தடையை மீறி நடிக்க வருகிறார் பூஜா
தனது அப்பா விதித்த தடையை மீறி மீண்டும் நடிக்க வருகிறார் பூஜா. 'நான் கடவுள்' உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பூஜா. திடீரென்று தமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவருகிறார். இதுபற்றி பூஜா கூறியதாவது: கடந்த வாரம் இயக்குனர் பாலாவை சந்தித்தேன். 'எரியும் தணல்' படத்தில் நடிக்க கேட்டார். திரையுலகில் என் குரு பாலாதான். நான் கடவுள் படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கவில்லை. நான் கடவுள் படத்தில் பார்வை இழந்த பெண்ணாக நடித்திருந்தேன். இந்த வேடத்தை பார்த்த எனது தந்தை 'திரையுலகில் நீ சாதித்துவிட்டாய். இனிமேல் நடிக்க வேண்டாம்' என்று கூறிவிட்டார். அவரது வார்த்தையை மீற முடியவில்லை. ஆனால், இயக்குனர் பாலா என்னை மீண்டும் நடிக்க கேட்டபோது மறுக்க முடியவில்லை.
மனிஷா கொய்ராலா வாழ்க்கை படமாகிறது
சிலுக்கை தொடர்ந்து மனிஷா கொய்ராலா கதை படமாகிறது. இதற்கு மனிஷா அனுமதி அளிக்கமாட்டார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற படம் உருவானது. இதற்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட ஹீரோயின்களை மையமாக வைத்து கதைகள் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் 'ஹீரோயின்' என்ற பெயரில் படம் உருவாக்கப்படுகிறது. மனிஷா கொய்ராலா வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்று டாப் அந்தஸ்த்துக்கு சென்றார். தமிழிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது வாழ்க்கை இனிக்கவில்லை. 'என் கணவரை விவாகரத்து செய்யப்போகிறேன்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த மனிஷா திடீரென்று அதை திரும்ப பெற்றார். சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் அவர் குடித்துவிட்டு போதை அதிகமாகி தள்ளாடும் சூழலுக்கு சென்றுவிடுகிறார். இதனால் அவரது நடவடிக்கையை பாலிவுட் பத்திரிகைகள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் மதுர் பண்டர்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்குகிறார். கரீனா கபூர் ஹீரோயின். இப்படம் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குனர் மறுத்திருக்கிறார். 'நடிகையின் வாழ்க்கை பற்றிய கதையைத்தான் எடுக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த நடிகையின் வாழ்க்கையையும் சித்தரிக்கவில்லை' என்றார். மனிஷாவின் கதையை படமாக்கினால் அதை அவர் அனுமதிக்க மாட்டார் என்று மனிஷா தரப்பில் கூறப்படுகிறது.
இந்தியில் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்று டாப் அந்தஸ்த்துக்கு சென்றார். தமிழிலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது வாழ்க்கை இனிக்கவில்லை. 'என் கணவரை விவாகரத்து செய்யப்போகிறேன்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த மனிஷா திடீரென்று அதை திரும்ப பெற்றார். சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் அவர் குடித்துவிட்டு போதை அதிகமாகி தள்ளாடும் சூழலுக்கு சென்றுவிடுகிறார். இதனால் அவரது நடவடிக்கையை பாலிவுட் பத்திரிகைகள் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இயக்குனர் மதுர் பண்டர்கர் 'ஹீரோயின்' என்ற படத்தை இயக்குகிறார். கரீனா கபூர் ஹீரோயின். இப்படம் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குனர் மறுத்திருக்கிறார். 'நடிகையின் வாழ்க்கை பற்றிய கதையைத்தான் எடுக்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த நடிகையின் வாழ்க்கையையும் சித்தரிக்கவில்லை' என்றார். மனிஷாவின் கதையை படமாக்கினால் அதை அவர் அனுமதிக்க மாட்டார் என்று மனிஷா தரப்பில் கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியல
ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியாதது வருத்தமாக இருக்கிறது என்றார் சமந்தா. மணிரத்னம் இயக்கும் 'கடல்', கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படங்களில் நடிக்கும் சமந்தா கூறியதாவது: 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'மாஸ்கோவின் காவேரி' படங்களில் நடித்தேன். இதையடுத்து மணிரத்னம் படத்திலும், மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்கிறேன். தமிழில் 2 படங்களில் நடித்திருந்தாலும் என்னை ரசிகர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. என் நண்பர்களுடன் வெளி இடங்களுக்கு செல்லும்போது என்னை ரசிகர்கள் சூழ்ந்துகொள்வதில்லை. ஆட்டோகிராப் கூட கேட்பதில்லை. இது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் பெரிய நடிகையாக உயர்வேன் என்ற எண்ணம் இருக்கிறது. மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியும் பயமும் இருந்தது. ஒப்பந்தம் ஆனது முதல் எப்போது அவரது ஷூட்டிங்கில் பங்கேற்போம் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். தற்போது திரையுலக ஸ்டிரைக்கால் ஷூட்டிங் நடக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 3 மொழிகளில் உருவாகும் இதில் நடிப்பது சவாலாக இருந்தது. இவ்வாறு சமந்தா கூறினார்.
கோச்சடையான் படத்தில் நாகேஷ்
வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது. 'கோச்சடையான்' பட பணிக்காக ஹாங்காங் சென்றிருக்கும் ரஜினியின் இளையமகளும், இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் கூறும்போது, "கோச்சடையான் பணிக்காக பட குழுவினருடன் ஹாங்காங்கில் இருக்கிறேன். பணிகள் சிறப்பாக நடக்கிறது. மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ஷூட்டிங் நடக்கிறது" என்று கூறி உள்ளார். இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தில் மறைந்த நாகேஷ் நடிப்பதுபோல், அவரது காட்சிகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட உள்ளன.