பெங்களூர்: சூப்பர் ரஜினிகாந்த் இன்று பெங்களூரில் உள்ளது தான் பரபரப்பாக பேசப்படுகிறது.
லிங்கா படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று பெங்களூரில் உள்ளார். லிங்கா படப்பிடிப்புக்காக அல்ல கன்னட பட வேலையாக வந்துள்ளார். அரு, ஐஸ்வர்யா நாக் நடித்துள்ள கன்னட படமான முட்டு மனசே படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பெங்களூரில் நடைபெறுகிறது.
விழாவில் கலந்து கொண்டு இசையை வெளியிடப் போவதே ரஜினி தான். படத்தின் ஹீரோ ரஜினியின் தீவிர ரசிகராம். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றதுடன், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
இதே பெங்களூரில் தனது இளம் வயதில் கண்டக்டராக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லிங்கா படத்தில் வரும் அறிமுக பாடலை படமாக்க படக்குழு ஹாங்காங் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.