தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்தது. தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இதனையடுத்து பாலா, படத்தை தீபாவளிக்கு முன்பே வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். இந்நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா, லண்டன் நகாலி அக். 9ந் தேதி நடக்கயிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் விசா கிடைக்காததால், சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர் (அ) மலேசியாவில் "பரதேசி"
தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்தது. தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இதனையடுத்து பாலா, படத்தை தீபாவளிக்கு முன்பே வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். இந்நிலையில், படத்தின் பாடல் வெளியீட்டு விழா, லண்டன் நகாலி அக். 9ந் தேதி நடக்கயிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் விசா கிடைக்காததால், சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழில் விஜய், இந்தியில் சல்மான்
'நான் ஈ' படம் தமிழில் வசூலை அள்ளியது. தன்னை கொன்றவனை அடுத்தப்பிறவியில் 'ஈ' யாகி பழிவாங்கும் சிம்பிள் கதைதான். ஆனால், அதை எந்த வித 'ஈ'யடிச்சான் காப்பியும் இல்லாமல் சொன்ன விதத்தில் பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ராஜமவுலி. வலிமையான திரைக்கதை இருந்தால் எதையும் ரசனையாகச் சொல்ல முடியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் ராஜமவுலிக்கு முதலில் ரெட்கார்பெட் வரவேற்பு தான் அளிக்க வேண்டும். இந்த படம் தெலுங்கிலும் செம ஹிட்டாகியது. நான் ஈ படத்தில் வரும் 'ஈ டா' பாடலில் ஈ, விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்', 'திருமலை' டான்ஸ் ஸ்டப்களை ஆடுவது போல் படமாக்ககப்பட்டிருக்கும். இதனையடுத்து, இந்தியில் சல்மான் கானின் முந்தைய படங்களின் டான்ஸ் ஸ்டப்களை ஈ ஆடுவது போல் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் ராஜமவுலி.
அடுத்து பெரிய ஹீரோ படம்..
முகமூடி படத்திற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின், ஒரு ரோமன்டிக் ஆக்ஷன் கதையை தயார் செய்திருப்பதாக கோலிவுட்ட பக்கம் பேசப்பட்டு வருகிறது. அந்த படத்தில் கோலிவுட்டிலுள்ள ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் மிஷ்கின். ஆனால் இதுபற்றி எந்த ஒரு தகவலும் அளிக்காத மிஷ்கின், அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது அடுத்த படத்தில் பெரிய ஹீரோ நடிக்க போகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பும் வரும் எனக் கூறப்படுகிறது. 'முகமூடி' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளைய தளபதி விஜய் வந்திருந்தார்.. ஒரு வேல விஜய்-க்கு அந்த கதையை மிஷ்கின் கூறியிருப்பாரோ...
இப்ப சன்னிக்கும் கூட 'சைட்' வந்திருச்சு...!
போர்ன் ஸ்டாராக இருந்து நடிகையாக மாறிவிட்ட சன்னி லியோன் தனது ரசிகர்களுக்காவே இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், உடனே போய் www.allaboutsunny.com என்ற இணையதளத்தை செக் பண்ணுங்க என்று கூறியுள்ளார் சன்னி.
அதில் தன்னுடைய அரை நிர்வாண, முக்கால் நிர்வாண, முக்கால் அரைக்கால் நிர்வாண கோல படங்களைப் போட்டு வைத்துள்ளார் சன்னி. மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் போட்டு வைத்துள்ளார். வெறும் படம் மட்டுமல்லாமல் தன்னைப் பற்றிய வீடியோக்களையும் கூட இணைத்துள்ளார் சன்னி.
ஏற்கனவே பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும் தங்களது இணையதளம் மற்றும் டிவிட்ரில் காமாந்திர போஸ்களுடன் கூடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சூடு கிளப்பி வருகின்றனர். இந்த வரிசையில் சன்னியும் சேருவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
என்ன ரசிக மக்கா, இனி உங்களுக்கு சந்தோஷம்தானே...!
புதுப்பொலிவுடன் லக்கா கிக்கா: மாடர்னாக மாறிய ரோஜா
திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கிங்காங், சினேகா, தவக்களை, பரிமளா ஆகிய திரைப்பட நடிகர்கள் பங்கேற்றனர். இதுநாள் வரை திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த இந்த நடிகர், நடிகைகள் ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்தினர்
ரோஜா கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசத்தலாக கூறி அனைவரையும் வியக்கவைத்தனர் இந்த நடிகர்கள். பெண் பங்கேற்பாளர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற இறுதி சுற்றில் விளையாடிய தவக்களையும், கிங்காங்கும் கடும் போட்டியை சந்தித்தனர்.
இறுதியில் லக்கா, கிக்கா நிகழ்ச்சியில் 18 ஆயிரம் ரூபாய் பரிசினை வெற்றி ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச்சென்றார் கிங்காங். தவக்களை 9ஆயிரத்து 500 ரூபாய் பரிசினை வென்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா!
ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே வாக பணியை தொடங்கிய செந்தில், மதுரை சீரியல் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் களம் இறங்கினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்து வரும் இந்த சீரியல் ஹீரோ சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் கண் பேசும் வார்த்தைகள்.
இந்தப் படத்தை ஸ்ரீபாலாஜி சினி கிரியேஷன்ஸ் மற்றும் கான்சப்ட் பவுண்டேஷன் சார்பில் ஆர்.சரவணன் தயாரித்து வருகிறார். இவருக்கு நாயகியாக ‘வாகை சூடவா' நாயகி இனியா நடிக்கிறார். கிராமத்து குயிலாக வலம் வந்த இனியா இதில் மாடர்னாக நடித்திருக்கிறராம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. அடுத்தகட்டமாக கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூரில் நடைபெற இருக்கிறதாம்.
இப்படத்தினை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பாலாஜி இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் உறவினர் ஆவார். எஸ்.பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர். ‘உயிர்' படத்தை தயாரித்திருக்கிறார்.
சிவாஜி, காஞ்சனா, நான்காம் பிறை... 3 டிக்கு வந்த திடீர் மவுசு!
இதில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இணையக்கூடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
கலந்து பேசித்தான் கல்யாணத்தை ரத்து செய்தோம் - சுஜிபாலா
உண்மை என்ற படத்தில் நடித்த போது அந்தப் பட இயக்குநர் ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
ஆனால் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். திருமணம் முறிந்துவிட்டது.
இதுகுறித்து மீடியாக்காரர்களை தானே அழைத்து விளக்கம் சொல்லி வருகிறார்கள் சுஜிபாலாவும் ரவிக்குமாரும். நேற்று முழுக்க ரவிக்குமார் முறை போலிருக்கிறது. இன்று சுஜிபாலா தன் பக்க விளக்கத்தை கூறினார்.
அவர் கூறுகையில், "நானும் ரவிக்குமாரும் காதலித்தோம், நிச்சயமும் செய்து கொண்டோம். ஆனால் சின்னச்சின்ன விஷயங்களில் கூட எங்களால் ஒத்துப் போக முடியவில்லை. இப்போதே இப்படி என்றால், எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ என்ற யோசனையும் பயமும்தான் இந்த திருமணம் நிற்கக் காரணம்.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, தொழில் வேறு. இதே ரவிக்குமார் இனி படம் எடுத்தாலும் நடிப்பேன். இந்தப் படத்தில் கூட சில காட்சிகள் பாக்கி உள்ளன. நடித்துக் கொடுக்கத்தான் போகிறேன்.
இனி திருமணம் பற்றி யோசிக்கக் கூட விரும்பவில்லை," என்றார்.
திருமணம் ரத்தானது ஏன்?
டைரக்டர் ரவிக்குமாருடன் திருமணம் ரத்து ஆனது ஏன்? என்று நடிகை சுஜிபாலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 'அய்யா வழி', 'கிச்சா வயது 16', 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஜிபாலா. தற்போது 'உண்மை' என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தில் தனது பெற்றோருடன் வசிக்கிறார்.
இவருக்கும், 'உண்மை' படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமாருக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதி சுஜிபாலா, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றதாகவும், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சுஜிபாலாவுக்கு விருப்பம் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சுஜிபாலா, ''நான் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பொய்யானது. காய்ச்சல் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால் மயங்கி விட்டேன். எனக்கும், ரவிக்குமாருக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும்'' என்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் நிருபர்களை சந்தித்த ரவிக்குமார், 'சுஜிபாலாவுடனான பிரச்சினையால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக' கூறினார். இது தொடர்பாக நடிகை சுஜிபாலா கூறியதாவது: எங்கள் இருவருக்கும் இடையே சின்ன, சின்ன பிரச்சினைகள் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் பரஸ்பரமாக பேசி பிரிய முடிவு செய்தோம். அதன்படி எங்கள் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதால், தற்போது திருமணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை.
ஊர்மிளாவுடன் ராம் கோபால் தொடர்பு?
ஊர்மிளாவுடன் இயக்குனர் ராம் கோபால் வர்மா தொடர்பு வைத்திருந்ததை தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார் அவரது முன்னாள் மனைவி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் முன்னாள் மனைவி ரத்னா. இவர் 'ஓட்கா வித் வர்மா என்ற தலைப்பில் புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் ராம் கோபால் வர்மாவை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதுவரை வர்மாவை பற்றி வெளிவராத பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தங்கள் விவாகரத்துக்கு பின்னணியாக இருந்த சம்பவம் பற்றியும் தெளிவு படுத்தி இருக்கிறார். இதில் அவரது மகள் பற்றியும் 'டெவில்ஸ் டாட்டர் என்ற தலைப்பில் கருத்து கூறி இருக்கிறார். இந்த தலைப்பு இந்த அத்தியாயத்துக்கு பொருந்தும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்மிளாவுடன் வர்மாவுக்கு இருந்த நெருக்கமான உறவை அம்பலப்படுத்தி இருப்பதுடன் மற்றொரு பிரபல நடிகையுடன் இருந்த உறவையும் வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறார். சிலர் வர்மாவை விரும்புவார்கள். சிலர் வெறுப்பார்கள். ஆனாலும் யாரும் அவரை தவிர்க்க முடியாது என்றும் ரத்னா குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஷா போஸ்லே மகள் தற்கொலை
பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா போஸ்லே இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரபல இந்தி பாடகி ஆஷா போஸ்லே. இந்தி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை. சினிமா பாடல்கள் மட்டுமின்றி கஜல், பஜன், பாப் பாடல்களும் பாடியுள்ளார். உலகம் முழுவதும் சுற்றி இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவரது மகள் வர்ஷா போஸ்லே (56) மும்பையில் தங்கியிருந்தார். எழுத்தாளரான இவர் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளும் எழுதி வந்தார். அம்மா போல, வர்ஷாவும் இந்தி, மராத்தி படங்களில் பாடி வந்தார்.
இந்நிலையில், இவர் திடீரென இன்று வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். வர்ஷா தற்கொலை செய்ததை உறுதிசெய்தனர். மராத்தி விருது நிகழ்ச்சிக்காக ஆஷா போஸ்லே தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். மகள் தற்கொலை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றவர். வர்ஷா போஸ்லே தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலா படத்தில் நடிக்க ஆசை
'சுந்தர பாண்டியன்' பட்ததில் அறிமுகம் ஆகியுள்ள ஹீரோயின் லட்சுமி மேனன், 'பாலா படத்தில் நடிக்க ஆசை' என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'சுந்தரபாண்டியன்' படம் ஹிட்டாகியுள்ளது. முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தியுள்ள லட்சுமி மேனன், 'இயக்குனர் பாலா படத்தில் நடிக்க வேண்டும், அப்படி அவர் படத்தில் நடித்தால் நடிப்பு திறன் அதிகமாகும்' என்று கூறினார். அதுமட்டுமின்றி 'கும்கி' படம் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என லட்சுமி மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?
மந்த்ராலயம்: மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவுமில்லை.
ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளிலும் அக்கறை காட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு பெருமழை, வெள்ளத்தில் இந்தக் கோயில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.
இப்போது கோயிலில் பயணிகள் தங்க புதிய கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ 10 கோடியை நன்கொடையாக ரஜினி தந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நன்கொடை மூலம் சர்வக்ஞ மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் தொடர்பு கொண்டபோது, தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ரஜினியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறோம், என்று மட்டும் தெரிவித்தனர்.
காக்ரோச்சைக் காப்பியடித்தேனா? - செம கடுப்பில் ராஜமவுலி
நான் ஈ படம் படம் தமிழில் பெற்ற வரவேற்பும், வசூலும் அதைத் தொடர்ந்து ராஜமவுலிக்கு இங்கு கிடைத்துள்ள மவுசும், அப்படியே டமாலென சரியும் அளவுக்கு ஒரு மேட்டர்...
நான் ஈயை அவர் சுட்டது காக்ரோச் என்ற குறும்படத்திலிருந்து என் தகவல் வெளியானதிலிருந்து உலகமகா கடுப்பில் இருக்கிறார் மனிதர்.
இந்த காக்ரோச் வெளியானது கடந்த 2010 மார்ச் மாதத்தில். ஒரு ரஷ்ய இயக்குநர் உருவாக்கிய படம் இது. இதைத்தான் அப்படியே தழுவி எடுத்து நான் ஈ-யாக்கி விட்டாராம் ராஜமவுலி.
நான் ஈயில் வருவதைப் போலவே, ஹீரோ ஒரு பெண்ணைக் காதலித்து திருமணத்துக்கு முன்பே விபத்தில் இறந்துவிடுகிறா். உடனே கரப்பான் பூச்சியாக மறுபிறவி எடுத்து, காதலிக்காக ஏங்குவது காக்ரோச்சின் கதை.
இந்தக் கதையில் ஒரு வில்லனைப் புகுத்தியிருப்பது மட்டுமே ராஜமவுலியின் சாதனை என மீடியாவில் செய்தி பறக்க, ராஜமவுலி ஏக அப்செட்.
ஆனால் இவற்றையெல்லாம் மறுத்துள்ள ராஜமவுலி, தான் காக்ரோச் படத்தைப் பார்க்கவே இல்லை என்றும், வில்லனால் பழிவாங்கப்படும் ஒருவன் நாயாகப் பிறந்து பழிவாங்கும் ஒரு அனிமேஷனை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படத்தை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
சரி விடுங்கப்பா... அவனவன் போஸ்டரையே காப்பியடிக்கிறான்... இதுல யாரை நொந்து என்ன பிரயோசனம்!
கணவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ராதிகா: பயந்து விழித்த குழந்தை
இரவு நேரத்தில் தொலைக்காட்சியை பார்க்கவே இப்பொழுது பயமாகத்தான் இருக்கிறது. கணவனை கொலை செய்ய துடிக்கும் மனைவி. குழந்தையை மீட்க கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் மனைவி என குடும்ப உறவுகளை கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளாகவே சீரியலில் ஒளிபரப்பாகின்றன.
ராதிகாவின் செல்லமே சீரியல் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தில் அதை பார்த்துவிட்டு படுத்தால் ரத்தக் கொதிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை என்கின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.
சினிமாவில் நடித்து பின்னர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்த ராதிகா ‘சித்தி' தொடங்கி செல்லமே வரை கடந்த 12 ஆண்டுகளாக சீரியல் தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே என அனைத்து சீரியல்களும் ராதிகாவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டவைதான். இவை தவிர ராதிகாவின் ராடான் நிறுவனம், இளவரசி, சிவசங்கரி உள்ளிட்ட தொடர்களையும் தயாரித்து வருகிறது. இதுவும் பிரபல தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில்தான் ஒளிபரப்பாகிறது.
ராதிகா நடிக்கும் தொடர்கள் மட்டுமல்லாது தயாரிக்கும் தொடர்களிலும் கூட இரண்டு மனைவிகளின் கதையாக இருக்கிறது என்பதுதான் அனைவரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுவும் தற்போது ஆயிரமாவது எபிசோடினை நெருங்கிவரும் செல்லமே தொடர்தான் உலகத்தில் உள்ள தமிழ் மக்களை எல்லாம் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் என்னவோ குடும்ப ஒற்றுமை குறித்தும், அண்ணன் - தங்கை பாசம் பற்றியும் பேசினாலும் போகப் போக ராதிகாவின் கணவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதில் வந்து நிற்கிறது. முதலில் வில்லி இருந்த இந்த தொடரில் இப்பொழுது மனைவிக்கு எதிராக கணவனே வில்லத்தனம் செய்கிறார்.
திங்கட்கிழமையன்று ஒளிபரப்பான எபிசோடில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது. நீண்ட நாட்களுக்கு பிறந்த குழந்தையை யார் வைத்துக்கொள்வது என்பதில்தான் இப்பொழுது கணவன் மனைவிக்கு இடையே போட்டி. இதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் வேறு இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் முதல்மனைவிக்கு பிறந்த குழந்தையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகாவின் வீட்டிற்கு வந்த கணவன் குழந்தை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான்.
"இந்த குழந்தை எனக்குத்தான் பொறந்துச்சான்னு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும்" என்று வசனம் பேசியதுதான் உலகமகா கொடுமை. அதைக் கேட்டு கொதித்துப் போன ராதிகா கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார்.
இதைப் பார்த்து கணவன் மட்டுமல்ல அவரது தங்கையும், இரண்டாவது மனைவியும், ஏன் அந்த குழந்தையும் கூட அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர். உடனே ஓடிவந்த இரண்டாவது மனைவி விஜயலட்சுமி ராதிகாவின் காலில் விழுந்து கதறி அழுகிறார். எனக்காக இல்ல என் வயிற்றில் அவரோ குழந்தை இருக்கு அது அப்பா இல்லாம வளரக்கூடாது என்று கேட்கவே பரிதாபப்பட்டு கத்தியை கீழே போடுகிறார் ராதிகா.
இரவு நேரத்தில் இதைப்பார்த்த நமக்குத்தான் ரத்தக் கொதிப்பு அதிகமாகி தூக்கமாத்திரையை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கொடுமையை பார்ப்பதற்கு பேசாமல் கரண்டு போயிருக்கலாம் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் அடித்த கமெண்ட்தான் அந்த நேரத்தில் சிரிப்பை வரவழைத்து ஆறுதல் ஏற்படுத்தியது.
ஒரு எபிசோடு பார்த்த நமக்கே இப்படி என்றால் 750 மேற்பட்ட எபிசோடுகளை பார்த்த இல்லத்தரசிகளின் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ராதிகா இனியாவது இருதார கதையை தொடாமல் இருப்பாரா? அதற்கு தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் தடை விதிப்பார்களா? அந்த ‘சன்'னுக்குத்தான் வெளிச்சம்.
'கிரிக்கெட்' படத்தில் நடிக்கிறேனா... இயக்குநர் மிஷ்கின் விளக்கம்
முகமூடி படத்தையடுத்து கிரிக்கெட் என்ற படத்தை இயக்குவதோடு, அதில் ஹீரோவாகவும் நடிப்பதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.
தனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் முகமூடி.
அடுத்து புதிய படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் மிஷ்கின். விறுவிறுப்பான ஆக்ஷனம் காதலும் கூடிய திரைக்கதையை இந்தப் படத்துக்காக உருவாக்கியுள்ளார்.
இதற்கிடையில்தான், கிரிக்கெட் என்ற படத்தை அவர் இயக்கி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இன்று இயக்குநர் மிஷ்கின் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை. அது வேறு படம். நான் அடுத்து இயக்கும் படத்தில் பிரபலமான ஹீரோ ஒருவரைத்தான் நடிக்க வைக்க பேச்சுகள் நடந்து வருகின்றன. படம் குறித்த மற்ற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
'என் பெயர் குமாரசாமி' - தாணு, ராதாரவி பாராட்டு!
என் பெயர் குமாரசாமி படத்தைப் பார்த்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் ராதாரவி பாராட்டு தெரிவித்தனர்.
பானுப்ரியா நடிக்க, ரதன் சந்திரசேகர் இயக்கியிருக்கும் படம் 'என் பெயர் குமாரசாமி'.
அண்மையில் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த கலைப்புலி தாணுவும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குநரை மனம் திறந்து பாராட்டியுள்ளனர். "பாலாவுக்கு ஒரு சேதுவைப் போல உங்களுக்கு என் பெயர் குமாரசாமி திருப்புமுனை படமாக அமையும்" என்று இயக்குநரின் தோளில் தட்டிப் பாராட்டியிருக்கிறார் தாணு.
"கிளைமாக்ஸ் காட்சியில் தமிழ்நாட்டையே கலங்க வைத்து விடுவீர்கள்" என்று இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
இது குறித்துக் கேட்டபோது, " நிச்சயம் பேசப்படுகிற படமாகவும், பெரும் வெற்றிப் படமாகவும் "என் பெயர் குமாரசாமி' அமையும் என்பதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளது" என்று கூறும் இயக்குனர் ரதன் சந்திரசேகர், தான் பெறப் போகும் வெற்றியில் எடிட்டர் வி.டி.விஜயனுக்கும், இசையமைப்பாளர் வீ.தஷிக்கும் பெரிய பங்கிருக்கும் என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.
இந்தப் படத்தில் புதுமுகம் ராம், மேற்கு வங்க நடிகை தேஸ்தா இராவதி, யுவா, மோனிகா பிலிப் ஆகிய இரண்டு ஜோடியுடன் பானுப்பிரியா, ராதாரவி, பப்லு பிருத்விராஜ், யோகி தேவராஜ், நாராயணன் தீபக் ஆகியோரும் நடித்துள்ளனர். மலையாளத்தில் காமெடியில் கலக்கும் பைஷூ, இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.....
நடிகர-இயக்குநர் ஆர் பார்த்திபன் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
விஜய் டிவியின் ‘தர்மயுத்தம்’ நேரம் மாற்றம்
விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தர்மயுத்தம்' நெடுந்தொடர் திங்கட்கிழமை முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
திரைப்பட நடிகர்கள் அப்பாஸ், கார்த்திக்குமார், அனுஜா ஐயர், நடித்துள்ள தர்மயுத்தம் தொடர் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது.
இரவு 10மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு நேயர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து அதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் இரவு 10மணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு தர்மயுத்தம் தொடரின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நாதஸ்வரத்திற்கு போட்டி
சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு கார்த்திகைப் பெண்கள் தொடர் ஒளிபரப்பாகிறது. இது தர்மயுத்தம் தொடருக்கு போட்டியாக அமைந்திருந்தது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நாதஸ்வரம் தொடர் ஒளிபரப்பாகிறது. இதுவும் திரு புரெடெக்சன் திருமுருகன் இயக்கி நடித்துள்ள தொடர்தான். இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ள ஒரு தொடர் என்பதால் இனி தர்மயுத்தம், நாதஸ்வரம் தொடர்களிடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
நக்சலைட்டாக நினைத்தேன்... - சொல்கிறார் ஏஆர் முருகதாஸ்
திருச்சி: படிக்கும் காலத்தில் நக்சலைட்டாகிவிடலாமா என்று நினைத்தேன் என்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.
திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி விழாவில் அவர் பங்கேற்றுப் பேசுகையில், "இந்தக் கல்லூரியில்தான் நான் படித்தேன். 3 ஆண்டு படிப்பில் 30 ஆண்டு அனுபவங்களைப் பெற்றேன்.
இந்தக் கல்லூரியில் படிக்கும்போதுதான் தவறுகளைத் தட்டிக் கேட்கும் மனநிலை எனக்கு வந்தது. ஒரு கட்டத்தில் ஒரு நக்சலைட்டாக மாறிவிடலாமா என்றுகூட நான் நினைத்ததுண்டு. இல்லாவிட்டால் போராடும் அரசியல்வாதியாக மாறியிருப்பேன். அந்த அளவு மனசுக்குள் தீவிர போராளியாக இருந்தேன்.
2-வது உலகப் போரை நிறுத்தியது அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன்.
எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்தது அதனால்தான்.
எனது ‘ரமணா' படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். சம்பளம் மட்டுமே லட்சியமல்ல," என்றார்.
'நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ' - மணிவண்ணன் இயக்கும் 50வது படம்!!
தனது 50 வது படத்தை இயக்கத் தயாராகிறார் மணிவண்ணன்.
சத்யராஜ் , மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் அந்தப் படத்துக்கு ''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ'' என தலைப்பிட்டுள்ளார்.
1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அமைதிப்படையின் இரண்டாம் பாகம்தான் இந்தப் படம்.
பழைய அமைதிப்படையை போன்றே அதே நூறு சதவீத லொள்லோடும், ஜொள்லோடும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவை மணிவண்ணனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய டி சங்கர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க,சண்டைப் பயிற்சியை சுப்ரீம் சுந்தர் மேற்கொள்ள ஒரே ஷெட்யூலில் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க உள்ளனர்.
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், கே சுரேஷ் இணைந்து தயாரிக்க பரபரவென தயாராகிறது ''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ''.
சித்தார்த்துடன் கைகோர்க்கும் வசந்தபாலன்!
அரவான் தோல்வியிலிருந்து மெல்ல மீண்டு கொண்டிருக்கும் வசந்த பாலன் அடுத்து சித்தார்த்துடன் கைகோர்க்கிறார்.
இருவரும் இணையும் படத்துக்கு காவியத் தலைவன் என்று பெயர் சூட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'அரவான்' படம் வசந்தபாலன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
இந்த நிலையில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் வசந்த பாலன். காதலில் சொதப்புவது எப்படி என்ற பட்த்தை தயாரித்த சசிகாந்த் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
சித்தார்த்துக்கு ஏற்கனவே தெலுங்கில் நல்ல பிஸினஸ் இருப்பதால் இந்தப் படத்தை தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறார் சசிகாந்த்.
படத்துக்கு 'காவியதலைவன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹீரோயின் உள்ளிட்ட விஷயங்களை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
துப்பாக்கி, நீர்ப்பறவை உள்பட நான்கு படங்களின் இசை நாளை வெளியீடு!
விஜய்யின் துப்பாக்கி, சீனு ராமசாமியின் நீர்ப்பறவை உள்ளிட்ட நான்கு படங்களின் இசை வெளியீடு நாளை நடக்கவிருக்கிறது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி. இந்தப் படத்தின் பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்த நிலையில் நாளை காலை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் இசை வெளியிடப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசை தந்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் நீர்ப்பறவை படத்தின் இசையும் நாளைதான் வெளியாகிறது. ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
தமன் இசையமைத்துள்ள, சிம்பு - வரலட்சுமி நடிப்பில் ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருந்த போடா போடி படத்தின் இசையும் நாளை பிற்பகலில் வெளியாகிறது.
நாளை இசை வெளியீடு நடக்கும் இன்னுமொரு படம் விஜயநகரம். சத்யம் திரையரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
குரு கல்யாணின் 'கேர்ள் ஐ லவ் யூ' மியூசிக் வீடியோ யூ டியூப் இணையதளத்தில் வெளியீடு
பிரபல இசையமைப்பாளரான குரு கல்யாணின் 'கேர்ள் ஐ லவ் யூ' என்ற மியூசிக் வீடியோ, யூ டியூப் இணையதளத்தில் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது.
'மாத்தியோசி' திரைப்படத்தின் இசையமைப்பாளர் குரு கல்யாண், தனது இரண்டாவது மியூசிக் வீடியோவை யூ டியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 'கேர்ள் ஐ லவ் யூ' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில், ஒரு கனவு தேவதையை வர்ணிக்கும் வகையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான படப்பிடிப்பு உள்நாட்டிலும், லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ, இளம் வயதினர் இடையே பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாடல்களை எழுதியவர் சுந்தர் சுரேஷ். இந்த மியூசிக் வீடியோவில் லண்டனை சேர்ந்த லீனா தபோனி என்பவர், அமெரிக்கா கனவு தேவதையாக நடித்துள்ளார்.
முன்னதாக குரு கல்யாணின் முதல் மியூசிக் வீடியோ கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 'கிரேஸி லவ் சாங்' என்று பெயரிடப்பட்ட அந்த மியூசிக் வீடியோ, யூ டியூப் இணையதளத்தில் 40 ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்களின் விருப்பத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
'கேர்ள் ஐ லவ் யூ' வீடியோவை யூ டியூப் இணையதளத்தில் காண, http://www.youtube.com/watch?v=vBh9xbfExMA Facebook, twitter, youtube: gurukalyanmusic"
ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை: ஷாருக்கான்
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறியுள்ளார்.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தோன்றி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னமும் அந்த கதாபாத்திரம் மீதான ஆர்வமும், கவர்ச்சியும் சற்றுகூட குறையவில்லை. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்த நடிகர்கள் உலகப்புகழ் பெற்றுவிடுகின்றனர்.
இதனால் தானும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் சல்மான்கான். 46 வயதான சல்மான்கான் ஏற்கனவே டான், ரா.ஒன் போன்ற திரைப்படங்களில் நடித்து சூப்பர் நடிகர் என்று பெயரெடுத்துள்ளார்.
நான் ஜேம்ஸ்பாண்டின் தீவிர ரசிகன். ஆனால் அவரைப்போல துப்பாக்கிகளோடும், பெண்களோடும் ஸ்மூத்தாக விளையாட முடியாது என்று குறும்புடன் டிவிட்டியுள்ளார் ஷாருக்கான்.