சென்னை: விஜய் படத்தைத் தயாரிப்பதன் மூலம் இப்போது பெரும் பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டுள்ள ராஜபக்சேவின் நட்பு நிறுவனமான லைக்கா மொபைல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே தனது பணத்தைப் பாய்ச்சியுள்ளது.
இதனை அந்த நிறுவனமே நேற்றைய பிரஸ் மீட்டில் அம்பலப்படுத்திவிட்டதுதான் சுவாரஸ்யம்.
தமிழ், தமிழன், தமிழ் உணர்வுக்கெல்லாம் நாங்கதான் அக்மார்க் அத்தாரிட்டிகள் என்ற ரேஞ்சுக்கு முஷ்டியை மடக்கும் கூட்டத்தைச் சேர்ந்த சேரனும் கரு பழனியப்பனும்தான் லைக்காமொபைல்காரர்களிடம் முன்பே பணம் வாங்கியவர்கள்.
அந்தப் படம் பிரிவோம் சந்திப்போம். அன்றைக்கு உண்மையான பெயரைச் சொல்லாமல் ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் படமெடுத்துள்ளனர் இந்த லைக்கா மொபைல்காரர்கள். தயாரிப்பாளர் பெயரைப் பார்த்தால் அ சுபாஸ்கரண் என்றுள்ளது.
இவர் யார், இவரது பின்னணி என்ன என்றெல்லாம் தெரியாமல் சேரனும் கரு பழனியப்பனும் படமெடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.
ஆக தமிழ் சினிமாவில் இனம், தமிழ் உணர்வு என்று பேசுபவர்கள் சிறுபான்மையாகத்தான் உள்ளனர். பெரும்பாலானோர் எல்லா நேரங்களிலும் சிறப்பாக நடிக்கின்றனர் என்பதுதான் உண்மை!