'சிட்டி'யைக் கலக்க வரும் 'பிக் பாஸ்' பூஜா மிஸ்ரா!

Pooja Mishra Bigg Boss 5 Fame Make Her Bollywood Debut

மும்பை: தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் புதிதாக பூஜா மிஸ்ராவும் இணைந்துள்ளார். இவர் பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சூட்டைக் கிளப்பியவர். இப்போது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்திலும் பட்டையைக் கிளப்ப கிளம்பியுள்ளார்.

சதீஷ் ரெட்டி தயாரிப்பில், ஹரூன் ரஷீ்த் இயக்கத்தில் உருவாகும் படம்தான் இந்த சிட்டி.இந்தப் படத்தில் ஏற்கனவே வீணா மாலிக் படு ஹாட்டாக நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் புதிதாக பூஜா மிஸ்ராவையும் சேர்த்துள்ளனர். இருவருமே பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலக்கியவர்கள்தான் என்பதால் இந்தப் படத்திற்கு ஹீட் மேலும் கூடியுள்ளது.

பஜா மிஸ்ரா இந்தித் திரையுலகுக்குப் புதியவர் இல்லை. ஏற்கனவே 2006ம் ஆண்டு வெளியான மேரா தில் லெகே தேக்கோ படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியவர்தான்.

இந்த நிலையில் தற்போது வீணாவுடன் இணைந்து தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் கலக்கப் போகிறார்.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்தான் பூஜா. ஒரு கட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சையாகி வீட்டை விட்டும் வெளியேற்றப்பட்டவர்.

சிட்டி படத்தில் நடிப்பது குறித்து பூஜா கூறுகையில், என்னால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய டிஆர்பி ரேட்டிங் கிடைத்தது. இப்போது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்துக்கும் என்னால் கிராக்கி கூடப் போகிறது. எனவே இந்தப் படத்தின் பிக் பாஸ் நான்தான் என்று மார் தட்டிக் கூறுகிறார்.

இவரை எப்படி வீணா சமாளிக்கப் போகிறாரோ...!

 

'நீதானே என் பொன்வசந்தம் என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்!' - சமந்தா பேட்டி

Samantha Speaks On Neethane En Povasantham   

சென்னையில் அடித்த மழையில் நனைந்த காஷ்மீர் ஆப்பிளைப் போல ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் சமந்தா. ஜில்லென்று மாறிய க்ளைமேட்டுக்கு இதமான லுக்கில் இருந்த இந்த சென்னை ப்யூட்டியை பார்த்ததும்,

'அப்பாடா.... வானிலை புகழ் ரமணன் கொடுத்த எச்சரிக்கையைத் தாண்டி மழையில் நீந்தி வந்தது வீண் போகவில்லை' என்று மனதுக்குள் தோன்றியது. மழை நான் _ ஸ்டாப்பாக வெளுத்துக் கட்ட, வேறுவழியே இல்லாமல் ஒரு 'குட்டி' ப்ரேக் கொடுத்தார் கெளதம் வாசுதேவ் மேனன்.

கிடைத்த அந்த சந்தர்ப்பத்தில் சமந்தாவுடன் கேஷீவலாக சாட்டை ஆரம்பித்தோம். சமந்தாவின் இதழ்களைவிட கண்கள் அதிகம் துறுதுறுவென பேசுகின்றன.

கெளதம் வாசுதேவ் மேனனோட சேர்ந்து ரெண்டாவது படமாக இப்ப ‘நீதானே என் பொன்வசந்தம்' படத்துல நடிக்கிறீங்க. அதனால பயமில்லாம அந்தப் படத்தை பத்தி கொஞ்சம் ஓபனாக சொல்லுங்க?

‘விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்கு பிறகு நான் ரொமான்டிக் படங்களாக நடிச்சாலும், ‘நீதானே என் பொன்வசந்தம்' படம் மாதிரி ஒரு ப்ரிலியண்ட் படம் இனிமேல் கிடைக்குமான்னு தெரியாது. அப்படியொரு யதார்த்தமான காதல் படம். உண்மையைச் சொல்லணும்னா ‘விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெஸ்ஸியைவிட ‘நீதானே என் பொன்வசந்தம்' நித்யா ரொம்பவே ஸ்ட்ராங்க். மனசுக்கு நெருக்கமான ஒரு அருமையான கேரக்டர். மனசை பட்டாம்பூச்சி மாதிரி படப்படக்க வைக்கிற எமோஷன், ஃப்லீங்க்ஸை கேட்டு வாங்கியிருக்குற நித்யா கேரக்டரை நீங்க அவ்வளவு சுலபமா மறந்துட முடியாது. அந்தவகையில நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும்.

‘நீதானே என் பொனவசந்தம்' படத்துல என்னோட வாழ்க்கையில நாலு வெவ்வேறு ஸ்டேஜ்கள்ல நடக்கிற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் ஹைலைட்டாக இருக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட வாழ்க்கையில நடந்த விஷயங்களையும், அனுபவங்களையும் ப்ளாஷ்பேக்குல யோசிக்க வைக்கும். தமிழ்ல என்னோட முதல் ரெண்டுப் படங்கள் எதிர்பார்த்தளவுக்கு போகல. ஆனால் அதையும் தாண்டி என்னோட ரீ-எண்ட்ரிக்கு ‘நீதான் என் பொன்வசந்தம்' படம் பெரிய சப்போர்ட்டாக இருக்கும்."

கேமராவை இறக்கி வைச்சிட்டு, முகமூடியை கழட்டிட்டு வந்திருக்கிற ஜீவாவோட காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகியிருக்கா?

"செம கேஷூவலான ஜோடியாக இருக்கும். பொதுவாகவே கெளதம்மேனன் சாரோட படங்கள்ல ஹீரோ - ஹீரோயினுக்கு இடையே ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி' அழகாக இருக்கும். 'மின்னலே' மேடி - ரீமாசென், ‘காக்க காக்க' சூர்யா - ஜோதிகா, ‘வாரணம் ஆயிரம்' சூர்யா - சமீரா ரெட்டி, ‘விண்ணைத் தாண்டி வருவாயா' சிம்பு - த்ரிஷா ஜோடிகளுக்கு இடையே இருக்கிற ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி தமிழ் சினிமாவுல மறக்கவே முடியாத விஷயங்கள். அந்த லிஸ்ட்ல 'நீதானே என் பொன்வசந்தம்' ஜீவா - சமந்தா ஜோடி ஆத்மார்த்தமான ஜோடியாக இருக்கும். முட்டாத மோதல், அலட்டாத காதல்னு இன்னிக்குள்ள ஜெனரேஷனை எங்களுக்குள்ளே பார்க்கமுடியும்."

'தி க்ரேட்' இளையராஜாவோட மியூஸிக்கலில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?

"சான்ஸே இல்ல பாஸ். ஒவ்வொரு பாட்டும் ‘ஹார்ட் வார்மிங்' ட்யூன்ஸ். மேஸ்ட்ரோவோட மியூஸிக்கல், ஜி.வி.எம்மின் விஷூவல் ரெண்டும் ரைட் மிக்ஸ்ல கலக்கும்போது, இன்னிக்குள்ள யூத்துக்கு அது செம ட்ரீட். கம்ப்யூட்டர், சிந்ததைஸர்னு இருக்குற லேட்டஸ்ட் மியூஸிக் ட்ரெண்ட்டுக்கு மத்தியில நம்மளோட ஆழ் மனசை டச் பண்றமாதிரி மியூஸிக் பண்றது மேஸ்ட்ரோவுக்கு கை வந்த கலை. எல்லா பாட்டும் டச்சிங் ட்யூனோடு இருக்குன்னு எக்கச்சக்க போன் கால்ஸ். பாடல்களை ஷூட் பண்ணிப்ப என்னையுமறியாமல் ஸ்கிரிப்டோட ஃபீல்லில் ரொம்ப ஜெல் ஆகிட்டேன். காரணம் மேஸ்ட்ரோவோட ட்யூன்ஸ்தான்."

அப்படீன்னா இப்போ நீங்க முணுமுணுக்குற பாடல் எது?

"தூக்கத்துல எழுப்பிக் கேட்டால் கூட ‘சற்று முன்' பாடலை அப்படியே ஒரு எழுத்துக்கூட மாறாமல் பாடுவேன். செம சாங். தமிழ் சினிமாவுல ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிற ஒரு பக்காவான களைமாக்ஸ் பாடல்."

ஹீரோக்களை பத்தி சொன்னால் டென்ஷன் ஆவாங்க. அதனால ஹீரோயின்களை மட்டும் எடுத்துக்குவோம்.

அது எப்படீங்க ஜி.வி.எம் படங்கள்ல வர்ற எல்லா ஹீரோயின்களும் செம க்யூட்டாக இருக்கிறீங்க. நீங்களும் இப்போ முன்பைவிட செம க்யூட்டாக இருக்கீங்களே. அந்த 'க்யூட் ப்யூட்டி ஃபார்மூலா' என்ன?

"ரொம்ப சிம்பிள்! ஜி.வி.எம்.மோட ரசனைதான். கேரக்டருக்காக எந்த ஆர்டிஸ்ட்டையும் ப்ரஷர் பண்ண மாட்டார். அந்த ஆர்டிஸ்ட்டுக்குள்ளே இருக்குற, அவங்களோட உண்மையான பர்ஸனாலிட்டியை முடிஞ்சவரைக்கும் வெளிக் கொண்டுவர முயற்சி பண்ணுவார்.

மேக்கப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். நீங்க அப்படியே வெளிப்படும்போது உங்க பர்ஸனாலிட்டிக்கு கிடைக்கிற 'க்யூட்னெஸ்' வேற எதிலயும் கிடைக்காது. இதுக்கெல்லாம் செட்டாகிற மாதிரி கேரக்டர்களையும் ப்யூட்டிஃபுல்லாக க்ரியேட் பண்றது கெளதம்மேனன் சாரோட பழக்கம். அவரோட க்ரியேட்டிவிட்டியோடு, ரைட்டிங் ஸ்டைலும் சேருகிற பாயிண்ட்டில் அந்த கேரக்டரை பார்க்கும் போதும், அது பேசும் போதும் நமக்கே ஒரு ஈர்ப்பு வந்துடும். என்னைக் கேட்டால் கெளதம்மேனன் சாரை ‘க்யூட் க்ரியேட்டர்'னு சொல்வேன்."

கடைசியா ஒரு ஜாலியான கேள்வி. ஷூட்டிங் ஸ்பாட்டுல நீங்க அரண்டுப் போன அனுபவம் எதுவும் இருக்கா?

"மிரண்டுப் போன அனுபவம் இருக்கு. 'நீதானே என் பொன்வசந்தம்' ஷூட்டிங் ஸ்பாட்டுல கெளதம் சார் ஒவ்வொரு சீன்னையும், அதுக்கான டயலாக்குகளையும் விளக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். இன்னிக்கு இருக்குற யூத்தோட பல்ஸை அப்படியே காட்டுற மாதிரி சீன்களும், அவங்க யூஸ் பண்ற வார்த்தைகளும், ஸ்டைலும் அப்படியே இருக்கும். எப்படி இவரால இவ்வளவு நெருக்கமாக யூத்தோட ட்ராவல் பண்ண முடியுது? எப்படி இந்த விஷயங்களையெல்லாம தெரிஞ்சு வைச்சிருக்கார்னு பல நாள் யோசிச்சு இருக்கேன். சில நேரங்கள்ல டயலாக் பேசி நடிக்கும்போது, நாம நடிக்குறோம் என்ற ஃபிலீங்கே இருக்காது.

ஆக்‌ஷன் கட்னு சொல்லும்போதுதான் நமக்கே புரியும். மக்களை, அவங்களோட ஃப்லீங்க்ஸை பக்காவாக புரிஞ்சுக்கிட்டதாலதான் இவரோட லவ் ஸ்டோரி எல்லாமும் யதார்த்தமாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கு. மொத்த்ததுல கெளதம்மேனன் சாருக்கு நான் வைச்சிருக்கிற பேரு ‘யூத் என்சைக்ளோபீடியா'. இந்த பேட்டியைப் படிக்கும்போதுதான் கெளதம் சாருக்கே நான் வைச்சிருக்கிற பட்டப்பெயர் தெரியும். ஸோ அவர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்டால் நீங்கதான் பொறுப்பு." என்று சைலண்ட்டாக ‘எஸ்கேப்' ஆனார்.

'என்னாச்சு...?' என்று நாம் திரும்பிப் பார்த்தால், கெளதம் நம் பக்கம் வந்துக் கொண்டிருந்தார். மழை தூறலாய் மாற, நாமும் ‘எஸ்' ஆனோம்.

 

சின்மயி புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்- எழுத்தாளர் கண்டனம்

Writer Condemn Chinmayi Wrong Complaint

சென்னை: பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி:

பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ரசிகர்களுக்கும், நல்லிதயங்களுக்கும் நன்றி.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன்.

ட்விட்டர் என்பது இணையப் பொதுவெளியின் ஒரு அங்கம். 'என் டைம்லைனில் நீ ஏன் வருகிறாய்?' என்று யாரையும் நாம் கேட்பதே படு அபத்தம். நமக்குப் பிடிக்காதவர்களை ‘அன்ஃபாலோ' அல்லது ‘ப்ளாக்' செய்துகொள்ள அதில் வசதிகள் உள்ளன. நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. நான் அவருடைய குடும்பத்தாரால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருத்த வேதனை அளிக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை ‘சின்னாத்தா' என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் என் அட்லாண்டா நண்பர் ஒருவரை ட்விட்டரில் ‘ஜின்னாத்தா' என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்குக் காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் ‘கலக்கல் கபாலி' படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும்(!), அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் என்னவெல்லாமோ சொல்லி என்னை மிரட்டிய கடிதம் மிக நீண்டது.

"நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த 'கலக்கல் கபாலி' கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள்" என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன். தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.

சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை. பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால் நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தெரிவித்துள்ளார்.

 

மீண்டும் முழு வீச்சில் தமிழ் சினிமாவில் நடிப்பேன் - பயமுறுத்தும் மீனா

Meena Wants Comeback

தமிழ் சினிமாவில் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போவதாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை மீனா.

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து, பின் கிட்டத்தட்ட ரிடயர் ஆகும் தறுவாயில் திருமணம் செய்து, குழந்தை பெற்றவர் மீனா.

மகள் பிறந்து 21 மாதம் ஆகிவிட்டதால், மீண்டும் மேக்கப் போடும் ஆசை வந்துவிட்டது மீனாவுக்கு.

வாய்ப்பு வேண்டி, தனக்கு முன்பு நெருக்கமாக இருந்த பலருக்கும் தூதுவிட்டு வருகிறாராம்.

தெரிந்த நிருபர்களை அழைத்து பேட்டிகள் கொடுத்தும் வருகிறார். அப்படி கொடுத்த ஒரு பேட்டியில், "நடிப்பு என்பது எனக்கு பிடித்த விஷயம். அதை விட்டு என்னால் போக முடியாது. எனவே மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். சினிமா, டி.வி. என்றெல்லாம் பேதம் பார்க்காமல் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்," என்றார்.

 

'பவர்கட்' படமெடுத்த பஞ்சாப் நடிகர் ஜஸ்பால் பட்டி மரணம்

Jaspal Bhatti Dies Road Crash

ஜலந்தர்: பஞ்சாபி காமெடி நடிகர் ஜஸ்பால் பட்டி சாலை விபத்தில் இன்று காலை இறந்தார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து பதிண்டாவுக்கு இன்று அதிகாலை காரில் ஜஸ்பால் பட்டி சென்று கொண்டிருந்தார். 3 மணியளவில் அவர் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நகோடர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் அவரது மகன் ஜஸ்ராஜ், நடிகை சுரிலி கௌதம் உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனது புதிய படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜஸ்பால் பட்டி காரில்சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

காரை ஜஸ்ராஜ்தான் ஓட்டியுள்ளார். ஜஸ்பால் பட்டியின் இறுதிச் சடங்குகள்இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது. அவருக்கு மனைவி சவிதா, மகன் ஜஸ்ராஜ், மகள் உள்ளனர். அவர் தயாரித்து இயக்கிய பவர் கட் படம் விரைவில் வெளியாக இருந்தது.

ஏராளமான ஹிந்திப் படங்கள், பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார் ஜஸ்பால். அதுமட்டுமல்லாமல் டி.வி.களில் ஏராளமான காமெடி ஷோக்களையும், மேடைகளில் காமெடி நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தியுள்ளார்.

 

ஆரம்பிச்சாச்சு ஜேம்ஸ்பாண்ட் ஃபீவர்: ஸ்கைஃபால் பற்றித்தான் ஒரே பேச்சு!

An Oscar Bond Or Does The Sky Have

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என்றாலே சுவாரஸ்யமான விசயங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆடைகுறைந்த தேவதைகளும், முத்தக்காட்சிகளும் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் குறைவில்லாது இருக்கும். விரைவில் வெளியாக உள்ள ஸ்கைபால் படத்தில் இதுவரை இருந்ததை விட சூப்பர்காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறதாம். இதை சொன்னது வேறு யாருமல்ல படத்தில் நடித்த டேனியல்க்ரேக்தான்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களால் நஷ்டம் என்று சில சமயம் பேச்சு எழுந்ததுண்டு. ஆனால் இனி அப்படி இருக்காது. கடந்த சில மாதங்களாகவே ஜேம்ஸ்பாண்ட் பற்றிய பேச்சுதான் மீடியாக்களில் உலாவருகிறது. ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் தோன்றி 50 ஆண்டுகள் ஆவதால் இப்போது எங்குப் பார்த்தாலும் பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்தான். இதனால் ஸ்கைஃபால் படத்திற்கு சூப்பர் விளம்பரம்தான்.

‘ஸ்கைஃபால்' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த அக்டோபர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைக் காண இதற்கு முன் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள், நடிகையர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘ஸ்கைஃபால்' திரைப்படம் பற்றி ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கும் டேனியல் க்ரேக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டேனியல், பாண்ட் படங்களிலேயே ஸ்கைஃபால் கிளாஸ் படமாக இருக்கும் என்று தெ‌ரிவித்துள்ளார். படத்தில் நடித்திருக்கிறார், இப்படிதான் பேசுவார் என்று சாதாரணமாக விடமுடியாது. காரணம் ஸ்கைஃபாலை இயக்கியிருப்பது சேம் மென்டிஸ்.

சேம் மென்டிஸ் இயக்கிய முதல் படமான ‘அமெ‌ரிக்கன் பியூட்டி' ஐந்து ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. அடுத்து ‘ரோடு டூ பெர்டிஷன்', ஜார் கெட்.. என அவர் இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட். இதேபோல் ‘ஸ்கைஃபால்' படத்தையும் வழக்கமான பாண்ட் படங்களைப் போல் இல்லாமல் ஸ்டைலிஷாகவும், அதேநேரம் ஆக்சன் அளவுக்கு பாண்டின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுத்திருக்கிறாராம்.

ஸ்கைபால் திரைப்படம் நவ.2 இந்தியாவில் வெளியாகிறது. அதேசமயம் அமெ‌ரிக்காவில் நவம்பர் 9ஆம் தேதிதான் வெளியாகிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்குமா? அல்லது தரையில் வீழுமா என்று இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என்கின்றனர் திரைவிமர்ச்சகர்கள்.

 

குரோர்பதியில் குத்தாட்டம் போட்ட ஷாருக், கத்ரீனா கைப்

Kat Srk Danced Gangam Style Kbc

அமிதாப்பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், கத்ரீனா கைப் ஆகியோர் பங்கேற்று தங்களின் அடுத்த படத்தைப் பற்றி முக்கிய அம்சங்களை ரசிகர்களுக்கு எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில் ஷாருக்கானும், கத்ரீனாகைப்பும் பாடி ஆடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பிரபல நடிகர், நடிகைகள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ, கேம் ஷோவில் பங்கேற்பது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி கூடுவதோடு தங்களின் படத்தையும் புரமோட் செய்யலாம். இதனால் டூஇன்ஒன் லாபம் கிடைக்கும்.

சமீபத்தில் மறைந்த பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் கடைசிப் படமான ‘ஜப் தக் ஹை ஜான்' திரைப்படத்தில் ஷாருக், கத்ரீனா இணைந்து நடித்துள்ளனர். இது விரைவில் வெளியாக உள்ளது. இதனை புரமோட் செய்யும் வகையில் குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கங்னம் ஸ்டைல் பாடல் யூடிபில் பிரபலம். கோடிக்கணக்கில் ஹிட் அடித்துள்ள இந்த பாடலை கேட்பவர்களையும், நடனத்தை பார்ப்பவர்களையும் குத்தாட்டம் போடவைக்கும். அவர்கள் இருவரும் கங்னம் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அவர்களுடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடமாடி அசத்தினார். மூவரும் கருப்பு நிற உடை அணிந்து ஆட்டம் போட்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த எபிசோட் சோனி டிவியில் நவம்பர் 4ம் தேதி ஒளிபரப்பாகும்

குரோர்பதி நிகழ்ச்சியில் கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கரன்ஜோகர், ஸ்ரீதேவி ஆகியோர் பங்கேற்று தங்களின் படங்களை புரமோட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்யா, மாதவன் ரெண்டு ஹீரோவும் பிடிக்கும்: நடிகை ரேவதி

Jaya Tv Special Show Theninthiya Thirai Devathaigal

தென்னிந்திய திரை தேவதைகள் நிகழ்ச்சியில் ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா உள்ளிட்ட நூற்றுக்கான திரைப்பட நடிகைகள் பங்கேற்று தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடிகர்கள் ஆர்யாவும், மாதவனும் இந்த தேவதைகள் ஒவ்வொருவரையும் அழகாய் வரவேற்று அவர்களின் அனுபவங்களை கேட்டது சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.

ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் எல்லோரும் சினிமாவில் மூழ்கியிருக்க ஜெயாடிவியில் தென்னிந்திய திரை தேவதைகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பெயருக்கு ஏற்றார்போல திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்திருந்த இந்த நிகழ்ச்சியை நடிகர்கள் ஆர்யா, மாதவன் தொகுத்து வழங்கினர்.

ரேவதி, சுகாசினி, பானுப்பிரியா, ராதா, உள்ளிட்ட 1980,1990களில் நடித்த நூற்றுக்கணக்கான திரைநட்சத்திரங்களுடன் தற்போதைய நடிகைகளும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

இயக்குநர் கே.பாலசந்தர் நடிகை ரேவதிக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். பின்னர் வழக்கம் போல மாதவன், ஆர்யாவின் கேள்விக்கணை தொடங்கியது. இப்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஹீரோயினாக நடித்தால் யாரை ஹீரோவாக தேர்வு செய்வீர்கள் என்று இருவரும் கேட்டனர்.

அதற்கு சிரித்த ரேவதி, இந்தப்பக்கம் மாதவன், இந்தப்பக்கம் ஆர்யா என்று கூறி இருவரையும் ஹீரோவாகத் தேர்ந்தெடுப்பேன் என்று கூறி கலகலப்பூட்டினார். பானுப்பிரியாவைப் பற்றிய நினைவுகளை ரேவதி மேடையில் பகிர்ந்து கொண்டபோது கீழே அமர்ந்திருந்த பானுப்பிரியாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இதேபோல் மேடையேறிய ராதவையும் சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டனர் ஆர்யாவும் மாதவனும். எந்த ஹீரோ உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேட்டபோது சற்றும் யோசிக்காத ராதா, தனக்கு கார்த்திக்கின் மகன் கவுதம்தான் பிடித்த ஹீரோ என்று கூறி ஒரே போடாக போட்டார்.

நூற்றுக்கணக்கான திரைப்பட நாயகிகளை ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. திரைதேவதைகள் பங்கேற்ற நிகழ்ச்சியை ஆர்யாவும்,மாதவனும் கலகலப்பாக தொகுத்து வழங்கியது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்திருந்தது.

 

ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து டிரஸ்ஸை ஆட்டையைப் போட்ட லின்ட்சே லோஹன்!

Lindsay Lohan Accused Taking Clothes From Scary Movie

லாஸ் ஏஞ்சலெஸ்: ஸ்கேரி மூவி 5 என்ற படத்தில் நடித்து வரும் லின்ட்சே லோஹன், படப்பிடிப்புக்காக கொடுக்கப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்புள்ள உடைகளை அப்படியே லவட்டிக் கொண்டு போய் விட்டாராம்.

இந்த உடைகளைப் போட்டுத்தான் அவர் அப்படத்தில் நடித்து வந்தார். அவற்றை ஒரு ஷெல்ப்பில் போட்டு வைத்திருந்தனர். ஆனால் அந்த உடைகளை அப்படியே எடுத்துக் கொண்டு போய் விட்டாராம் லோஹன்.

கடந்த மாதம் இந்தக் கூத்து நடந்ததாம். அழகான டாப்ஸ்கள் மற்றும் ஸ்கர்ட்களை லோஹன் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. லோஹனின் இந்த டிரஸ் திருட்டுதான் ஸ்டுடியோ முழுக்கப் பேச்சாக இருந்ததாம்.

இதுகுறித்து ஸ்டுடியோக்காரர் ஒருவர் கூறுகையில், ஹோட்டலுக்குப் போகும் அங்கு குளிக்க சோப்பு கொடுப்பார்கள். ஆனால் அதை பயன்படுத்தி விட்டு அங்கேயே போட்டு விட்டு வந்து விட வேண்டும். அதைத் தூக்கிக் கொண்டு வர நினைக்கக் கூடாது. அதேபோலத்தான் செட் பிராப்பர்ட்டியும். அதை பயன்படுத்தி விட்டு கொடுத்து விட வேண்டும். ஆனால் லோஹன் அப்படி நினைக்கவில்லை என்றார் கிண்டலாக.

ஆனால் லோஹன் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று அவரது மேலாளர் விளக்கியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நகைக் கடை ஒன்றில் நெக்லஸ் ஒன்றை லோஹன் திருடி கையும் களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.