தொழிலதிபரை மணக்கிறார் அனன்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் சசிகுமார் ஜோடியாக, 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்துள்ளார். 'இரவும் பகலும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் உள்ள அனன்யாவின் வீட்டில், பிப்ரவரி 2ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. நடிகை அனன்யா கூறும்போது, 'பெற்றோர் பார்த்த மணமகனைத்தான் திருமணம் செய்ய தீர்மானித்திருந்தேன். ஆஞ்சநேயன் குடும்பத்தினர் கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் பார்க்க வந்தனர். எங்கள் குடும்பத்துக்கு அவர்களைப் பிடித்திருந்தது. எனவே திருமணத்துக்கு சம்மதித்தோம். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதா, வேண்டாமா என்பதை ஆஞ்சநேயன் முடிவு செய்வார்'' என்றார்.


 

மூன்று வேடங்களில் நடிக்கும் விஷால்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனராக இருந்த சுந்தர்.சி சிறிது காலம் இயக்குனர் பணி ஒதுககிவிட்டு ஹீரோவாக களமிறங்கினார். இதனையடுத்து மீண்டும் தன் இயக்குனர் பணியை தொடர விரும்புகிறாராம் சுந்தர்.சி. தற்போது விமல், சிவா, சந்தானம் நடிக்கும் 'மசாலா கஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர். இந்த படம் முடிந்த பிறகு விஷாலை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தில் விஷாலுக்கு மூன்று வேடங்களாம். இதுதான் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்.


 

இன்று பெப்சி பொதுக்குழு கூட்டம் : மீண்டும் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்குமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பெப்சிக்கும் எங்கள் சங்கத்துக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம்Õ என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து பெப்சி சங்கம் சார்பில் அவரச பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இன்று எடுக்கப்படும் முடிவை பொறுத்தே மீண்டும் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்குமா என்பது தெரிய வரும். முன்னதாக, இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று ஒரு நாள் முழுவதும், தமிழ் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று நடந்தது. 300க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மூன்று நாட்களுக்கு முன் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சார்ந்த சங்கங்கள், தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து, பத்திரிகைகள் வாயிலாக அறிவித்து விட்டார்கள். வழக்கமாக, தயாரிப்பாளர்கள் சங்கமும் தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்துபேசி அனைத்துப் பிரிவுகளுக்கான கையொப்பம் ஆனபிறகுதான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது.

அதை மீறி அவர்கள் தன்னிச்சையாக ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயலாகும். ஆகவே, இனி எங்கள் சங்கத்துக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம். இதற்கு உடன்பட்டு தொழில் செய்ய வரும் தொழிலாளர்களுக்கு எங்கள் சங்கம், குழு அமைத்து அவர்களது ஊதியத்தை நிர்ணயம் செய்து அதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்து கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும். அதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு எங்கள் சங்கம் எந்த ஒத்துழைப்பும் அளிக்காது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'நண்பன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்துக்கு பிறகு, சிறிது காலம் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ள ஷங்கர், கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தர ஒப்புக்கொண்டுள்ளார். படத்திற்கு யார் ஹீரோ என்பது குறித்து எந்த ஒரு தகவலையும், தயாரிப்பு நிறுவனமோ (அ) ஷங்கரோ சொல்லவில்லை. தற்போது இந்த தகவல் கசிய தொடங்கியுள்ளது. ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர், இசையமைப்பாளர், ஹீரோயின் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.