அன்னா ஹஸாரே ஆதரவு எதிரொலி- அரசு சீரியலிலிருந்து ஓம்பூரி நீக்கம்


சமூக சேவகர் அன்னா ஹஸாரேவுடன் தொடர்பு வைத்திருப்பதால், நடிகர் ஓம்பூரியை, அரசு சீரியலிலிருந்து நீக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் பிரபலமான பாரத் ஏக் கோஜ் போன்றதொரு நெடும் தொடரை, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கவுள்ளது. உள்ளாட்சி தத்துவம், அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கும் தொடர் இது. இதில் நடிக்க ஓம்பூரியைத் தேர்வு செய்திருந்தனர். ஆனால் தற்போது அவரை திடீரென நீக்கி விட்டனர்.

அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக ஓம்பூரி செயல்படுவதால் இந்த நீக்கமாம். அன்னா ஹஸாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது மத்திய அரசையும், எம்.பிக்களையும் கடுமையாக தாக்கிப் பேசினார். எம்.பிக்களை கேலி செய்து அவர் விமர்சித்ததால் அவருக்கு நாடாளுமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில்தான் அரசு டிவி சீரியலிலிருந்து ஓம்பூரியை நீக்கியுள்ளனர்.
 

லக்ஷ்மி ராய் ஒரு புழுகுணி, அல்பம்: த்ரிஷா ஆவேசத் தாக்குதல்


மங்காத்தாவில் அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.

மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.

மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.
 

உலக வர்த்தக மையம் எரிவதை பள்ளி மாடியிலிருந்து பார்த்து அதிர்ந்தேன்- லேடி காகா


நான் பிறந்து வளர்ந்த நியூயார்க் தான் என் கணவன் என்று பிரபல பாப் பாடகி லேடி காகா தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை தனது பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பிரபலங்கள் தங்கள் அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு பிரபல பாப் பாடகியான லேடி காகாவும் தன்னால் மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காகா கூறியதாவது,

உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை நான் என் பள்ளிக்கூட மாடியில் இருந்து பார்த்தேன். அந்த பயங்கரக் காட்சியை எனது நண்பர்களின் கையை இருக்கிப் பிடித்துக் கொண்டு பார்த்தேன்.

நான் பிறந்து வளர்ந்த நியூயார்க் நகரம் தான் என் கணவன். நான் மணம் முடிக்காத கணவன். மேரி தி நைட் என்பது என் கணவன் நியூயார்க் பற்றி பாடப்பட்டது என்றார்.

லேடி காகாவின் பல ஆல்பம்களில் நியூயார்க் பற்றி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் படமா?: நைசாக நழுவும் வித்யா பாலன்!


நடிகை வித்யா பாலனை தமி்ழில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கேட்டால் சாரி பிஸி என்று பிடி கொடுக்காமல் பேசுகிறாராம்.

பாலிவுட்டில் நடிப்பில் பெயர் எடுத்தவர் வித்யா பாலன். தமிழில் ஸ்ரீகாந்த், த்ரிஷா நடித்த மனசெல்லாம் படத்தில் முதலில் வித்யா பாலனைத் தான் ஒப்பந்தம் செய்தனர். அவர் சில நாட்கள் படப்பிடிப்புக்கும் வந்திருக்கிறார். பின்னர் அவருக்கு நடிக்க வரவில்லை என்று கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.

நடிக்கவே தெரியவில்லை என்று ஒதுக்கப்பட்ட வித்யா பாலன் தன் நடிப்புத் திறமையை பாலிவுட்டில் காட்டினார். பாலிவுட்டும் அவரை நல்லபடியாக வரவேற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. மணி ரத்னத்தின் குரு படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்போது வித்யாவின் பெயர் அதிக அளவில் உச்சரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த சூட்டோடு சூடாக, வித்யாவை மீண்டும் தமிழுக்குக் கூட்டி வரும் முயற்சிகளில் சிலர்இறங்கியுள்ளனராம்.

தமிழ் இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகியுள்ளனர். அதற்கு வித்யா ஸாரி நான் இந்தியில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

‘பழைய’ காயம் இன்னும் ஆறவில்லை போலும்…!

 

என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள்- மணிவண்ணன் உருக்கம்


சென்னை: இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம், என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மணிவண்ணன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சிக்காரர்களும் சீமானும் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து விட்டதாகக் கூறி சிலர் கிண்டலடிக்கிறார்கள்.

மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.

ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார் போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்… இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?

முந்தைய தினம் சட்டமன்றத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கூறிவிட்டாலும், தமிழ் மக்களின் உணர்வை மதித்த அம்மா, இரவெல்லாம் தூங்காமல், சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அடுத்த நாளே தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாரே… அந்த மனசு யாருக்கு வரும்? கருணாநிதியாக இருந்தால், தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருந்து மூவரின் உயிரையும் போக வைத்திருப்பார்.

ஜெயலலிதாவின் இந்தத் தாயுள்ளம், பெரும் கருணைக்கு நாம் காலமெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி கேட்பதையெல்லாம், எதற்காக போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கையை எல்லாம் அந்த அம்மா நிறைவேற்றித் தருகிறார். இதற்கு நன்றி செலுத்தாமல் விட்டால் காலம் மன்னிக்காது.

திருக்குறளை சரியாகப் படித்திருந்தால் திமுகவினருக்கு செய்நன்றியின் அர்த்தம் விளங்கும். அவர்கள் கடலில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததோடு சரி. அவர் சொன்னதை மறந்துவிட்டார்கள்.

இன்று தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முழுமையாக நம்புவது நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும்தான்.

தான் இறந்த பிறகு தன் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கச் சொன்னார் பேரறிவாளன். முருகனும் சாந்தனும் தங்கள் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு எழுதி வைத்துவிட்டனர்.

நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும். சீமானைப் போன்றவர்களால் இந்தத் தமிழினம் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு இறந்து போக வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்,” என்றார்.

மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றுவிட்டனர். கீழே கூடியிருந்தவர்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கி நின்றனர்.

 

செப். 30க்குள் உறுப்பினர்களானால்தான் நடிக்க முடியும்-புதுமுக நடிகர், நடிகைகளுக்கு நடிகர் சங்கம் நிபந


புதுமுக நடிகர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ராதாரவி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில் முக்கியமானது - புதுமுக நடிகர், நடிகைகள் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமலேயே திரைப்படங்களி்ல் நடித்து வருகின்றனர். இந்தப் போக்கு நீண்ட காலமாகவே தொடர்கிறது. இதையடுத்து செப்டம்பர் 30ம் தேதி வரை அவர்களுக்கு அவகாசம் தரப்படுகிறது.

இந்தக் கால கட்டத்திற்குள் புதுமுக நடிகர் நடிகைகள், சங்க உறுப்பினராகி விட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்ப் படங்களில் நடிக்க அவர்களுக்கு ஒத்துழைப்பு தரப்பட மாட்டாது என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல, பெப்சி அமைப்புடன் நிலவி வரும் பூசல் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் போடப்பட்டது.

நடிகர் சங்கத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில்தான் கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஆனால் அங்கு கட்டுமானப் பணிகள் நடப்பதால் இன்றைய கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்தது.

முன்னணி நடிகர், நடிகையர் வரவில்லை

நடிகர் சங்க கூட்டங்களுக்குப் பொதுவாக நடிகர் நடிகைகள் அதிக அளவில் வருவதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை. வலியக்கக் கூப்பிட்டாலும் கூட வர மாட்டார்கள். சாதாரண கூட்டமாக இருந்தாலும் சரி, மிக முக்கியமான கூட்டமாக இருந்தாலும் சரி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ, விஜயகாந்த்தோ, மற்றவர்களோ வரவே மாட்டார்கள். அந்த அளவுக்கு சங்கம் மீது அவர்களுக்கு 'ஒட்டுதல்' அதிகம்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, திமுக ஆட்சியின்போது பத்திரிக்கையாளர்களை சரமாரியாக திட்டுவதற்காகவே கூட்டப்பட்ட கூட்டத்தில் மட்டும் ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர். விவேக்கும், சத்யராஜும் மகா அசிங்கமாக அப்போது பேசியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கூட்டத்திலும் கூட கமல்ஹாசன் போன்ற சிலர் கலந்து கொள்ளவில்லை.

இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் நிலைமை மகா மோசமாக இருந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களான விஜய்யைக் காணோம், அஜீத்தைக் காணோம், சூர்யாவைக் காணோம், 'ஜட்டி' புகழ் விவேக்கைக் காணோம், சத்யராஜைக் காணோம். வேறு எந்த முன்னணி நடிகரையும் காணோம். அதேபோல முன்னணி நடிகைகள் யாரும் வரவில்லை. 'ரிடையர்ட்' நாயகிகளான குயிலி,சத்யப் பிரியா போன்ற சிலரைத்தான் காண முடிந்தது. பெரும்பாலும் கூட்டத்தில் நாடக, துணை நடிகர்களே அதிகம் காணப்பட்டனர்.
 

படம் மட்டும் வந்துச்சு... போலி சாமியாராக நடிக்கும் ஷகிலாவுக்கு போனில் மிரட்டல்!


சென்னை: ஆசாமி என்ற படத்தில் போலி சாமியாராக நடிக்கும் ஷகிலாவுக்கு மர்ம நபர்கள் போனில் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

ஆசாமி என்ற படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா போலி சாமியாராக நடிக்கிறார். போலி சாமியார்கள் பிடியில் இருந்து பொது மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் கதை. அதி்ல் கவர்ச்சி நடிகை ஷகிலா, சந்தான பாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோர் போலி சாமியார்களாக நடிக்கின்றனர்.

இந்த 5 பேரும் சேர்ந்து ஒரு ஆசிரமத்திற்குள் அரசியல் வாதியால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 100 கோடி பணத்தை அபேஸ் பண்ணுவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை இயக்குகிறார் ஆண்டாள் ரமேஷ்.

ஷகிலா போலி சாமியாராக நடிப்பது தெரிந்து யாரோ சிலர் அவருக்கு போனில் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஷகிலா கூறியதாவது,

கடந்த 4 நாட்களாக என் வீட்டு போன் மேல் போன் வருகிறது. எடுத்துப் பேசினால் யாரோ அசிங்கமாகப் பேசுவதோடு என்னை மிரட்டுகின்றனர். ஒருவன் என்னைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு போலி சாமியாராகவா நடிக்கிறாய், நடித்துவிட்டு வெளியே வந்துவிடுவாயா? படம் மட்டும் ரிலீஸானால் நீ வெளியே நடமாட முடியாது என்கிறான்.

நான் ஒரு நடிகை. எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். அந்த வேடத்தில் நடிக்கக்கூடாது, இந்த வேடத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்ல நீ யார்? தில் இருந்தால் நேரில் வா பார்க்கலாம் என்றவுடன் போனை வைத்துவிட்டான்.

இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவள் நான் இல்லை என்றார்.
 

டிசம்பரில் 'டோணி' ரிலீஸ்!


பிரகாஷ் ராஜின் இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் உருவாகி வரும் டோணி திரைப்படம் டிசம்பரில் திரையிடப்படும் என்று பிரகாஷ் ராஜ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம் இது. தமிழ் மற்றும் தெலுங்கில்இதை உருவாக்குகிறார் பிரகாஷ் ராஜ். இவர்தான் படத்தின் நாயகனும் கூட. முக்தா கோட்சே நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறதாம். விரைவில் சென்னைக்கு ஷிப்ட் ஆகவுள்ளனர். அதன் பின்னர் டிசம்பரில் படம் திரைக்கு வருமாம்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. இந்தப் படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்த இசைஞானி, படத்தின் பாடல்களை லைவ் ரெக்கார்டிங் முறையில் பதிவு செய்துள்ளாராம். இது தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் சாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது மிக மிக அரிதான ஒரு விஷயம். அதை இளையராஜா செய்துள்ளார்.

படம் பிரமாதமாகவும், சுவாரஸ்யமாகவும், நல்ல ஒரு செய்தியுடனும் கூடியதாக இருக்கும். இளையராஜாவின் இசை எங்களுக்கே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, ரசிகர்களுக்கு அது பெரும் விருந்தாக அமையும் என்று பிரகாஷ் ராஜ் சந்தோஷமாக கூறினார்.

சீக்கிரம் வாங்க டோணி...!
 

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் சதாபிஷேக விழா


சென்னை: 1000 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதிய ஆரூர்தாசின் சதாபிஷேகம் நேற்று சென்னையில் நடந்தது.

1000 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவரது சதாபிஷேக விழா மைலாப்பூர் நியூ உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவுக்கு தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். அவர் ஆருர்தாஸுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார். சதாபிஷேக விழாவுக்கு எம்.ஜி.ஆர்.கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலை வகித்தார். ஏவி.எம்.சரவணன், கவிஞர் வாலி, சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் ஆகியோர் ஆரூர்தாஸை வாழ்த்தி பேசினார்கள்.

இந்த விழாவில் ஆருர்தாஸும், அவரது மனைவி லூர்து மேரியும் மாலை மாற்றிக் கொண்டனர். நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு பொன்னாடை போர்த்தினர்.

இந்த விழாவில் பேசிய ஆர். எம். வீரப்பன் கூறியதாவது,

திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியவர்களுக்கு ஒரு சமயத்தில் வசனம் எழுதிய பெருமை ஆரூர்தாஸுக்கு உண்டு. அவர்களுக்கு வசனம் எழுதுவது அவ்வளவு எளிதன்று.

வளர்ந்து வரும் இளம் நடிகர், நடிகைகள் ஆருர்தாஸை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும். எளிமையாக வாழும் ஆரூர்தாஸை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். மேலும் இவ்வுலகில் வாழ்ந்து மக்களுக்கும், சமுதாயத்திற்கும் வழிகாட்ட வேண்டும் என்றார்.

விழாவில் பாடகர் எம்.எஸ்.விசுவநாதன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நடிகை எம்.என். ராஜம், நடிகர் நாசர் உள்ளிட்ட பல திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.
 

திருமணம் எப்போது? பிரபுதேவா அறிக்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருமணம் எப்போது? பிரபுதேவா அறிக்கை

9/10/2011 11:15:48 AM

சென்னை, : சரியான நேரம் வரும்போது திருமண தேதியை அறிவிப்பேன் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.
நயன்தாராவுடனான காதல் மற்றும் திருமணம் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்த பிரபுதேவா, இப்போது முதல் முறையாக தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

எப்போது திருமணம் என்பது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் விவாதிப்பதில்லை. ஆனால், என்னை பற்றியும் என் திருமணம் பற்றியும் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். சில நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் நயன்தாராவுடனான எனது திருமண தேதி, இடம் பற்றியெல்லாம் எழுதியுள்ளனர். 

அதில் உண்மை இல்லை. சரியான நேரம் வரும்போது எங்கள் திருமண தேதியை இந்த உலகத்துக்கு அறிவிப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் காதலுக்காக, முன்னணி நடிகையாக இருக்கும்போதே நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார். இருவீட்டு பெற்றோர்களின் வாழ்த்துகளுடன் எங்கள் திருமணம் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். இருந்தாலும், 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' மாதிரியான சிறந்த கதைகள் கொண்ட படங்கள் வந்தால் எங்கள் திருமணம் வரை, நயன்தாரா நடிக்க தயாராக உள்ளார். இவ்வாறு பிரபுதேவா கூறியுள்ளார்.



 

சாலை விபத்துகள் சம்பவம் அல்ல சாபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சாலை விபத்துகள் சம்பவம் அல்ல சாபம்

9/10/2011 11:24:06 AM

சென்னை, : பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம், 'எங்கேயும் எப்போதும்'. அவரது உதவியாளர் சரவணன் இயக்கி உள்ளார். ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி, அனன்யா நடித்துள்ளனர். வரும் 16&ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது:

இன்றைக்கு மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை சாலை விபத்துகள். பொறுமையின்மையால், கவனக்குறைவால் நடப்பது நமக்கோ, நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ நடக்காத வரை அதை சம்பவமாக பார்க்கிறோம். ஆனால் அது பாதிக்கப்படுபவர்களுக்கு பெரிய சாபம். ஒரு விபத்தின் சாவு அந்த குடும்பத்தின் 50 வருட வாழ்க்கையை பாதிக்கிறது. 

எனது நணபன் இயக்குனர் திருப்பதிசாமி விபத்தில் இறந்தபோது இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இந்தப் படத்தில் இரு அழகான காதல் இருக்கிறது. அந்த காதலுக்கு வில்லன் விபத்துதான். மக்களிடையே விபத்து பற்றியும், சாலை பயணம் பற்றியும் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும். நல்ல மெசேஜை கமர்சியல் சினிமாவுக்கான அம்சங்களோடு யதார்த்தமாக சரவணன் சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது படத்தின் இயக்குனர் சரவணன், இசை அமைப்பாளர் சத்யா, ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி உடன் இருந்தனர்.



 

கும்கிக்காக 5 ஏக்கரில் சாமந்திப்பூ தோட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கும்கிக்காக 5 ஏக்கரில் சாமந்திப்பூ தோட்டம்

9/10/2011 11:26:05 AM

சென்னை, : இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படம், 'கும்கி'. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமி மேனன் ஹீரோயின். பிரபு சாலமன் எழுதி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் இப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடந்து வருகிறது. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இது, இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. காட்டுக்குள் இருக்கும் யானைகள் ஏன் ஊர்களுக்குள் வருகிறது என்பது பற்றிய கதையை கொண்டது இந்தப் படம். இதன் ஷூட்டிங்கிற்காக, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் தேனி அருகே 5 ஏக்கரில் சாமந்திப் பூ பயிரிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிக்காக, இவ்வாறு பூக்கள் வளர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது வளர்ந்ததும் இங்கு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.




 

நடிகை காந்திமதி மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை காந்திமதி மரணம்

9/10/2011 11:12:00 AM

சென்னை, : பழம்பெரும் நடிகை காந்திமதி நேற்று காலமானார். அவருக்கு வயது 65. மானாமதுரையை சேர்ந்தவர் காந்திமதி. பள்ளி பருவத்திலேயே நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பிறகு சென்னை வந்த காந்திமதி, 'சேவா ஸ்டேஜ்' என்ற நாடக குழுவில் நடித்துவந்தார். 1965&ம் ஆண்டு 'இரவும் பகலும்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

பிறகு ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர், '16 வயதினிலே' படத்தின் 'குருவம்மா' கேரக்டரால் பிரபலமானார். சுருளிராஜனுடன் நடித்த 'மாந்தோப்பு கிளியே' மூலம் காமெடி நடிகையானார். காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த 3 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மரணம் அடைந்தார். 

அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏவி.எம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த காந்திமதி தனது உறவினர் மகன்கள் பாலசுப்ரமணியன், தீனதயாளன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 

தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளை பெற்றுள்ள காந்திமதிக்கு தமிழ்நாட்டின் பிற பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. 2004ம் ஆண்டு 'ஒருமுறை சொல்லிவிடு' என்ற படத்துக்காக சிறந்த காமெடி நடிகை விருதையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கம் இரங்கல்: நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காந்திமதியின் மறைவு தமிழ் திரையுலகுக்கு, ரசிகர்களுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு நடிகர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.



 

மனைவியை அடித்த கன்னட நடிகர் தர்ஷன் கைது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மனைவியை அடித்த கன்னட நடிகர் தர்ஷன் கைது

9/10/2011 11:29:51 AM

பெங்களூர், : கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்குள் பிரச்னை எழுந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். கடந்தவாரம் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வீட்டைவிட்டு விஜயலட்சுமி வெளியேறினார். 

பெங்களூர் பாபுஜிநகரிலுள்ள வித்யா என்பவர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக காரில் அழைத்துவந்த தர்ஷன், அவரை பலமாக தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் துப்பாக்கியை காட்டியும் தர்ஷன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து விஜயநகர் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி நேற்று காலை புகார் செய்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அவரை  சேர்த்துவிட்டு தர்ஷனை போலீசார் கைது செய்தனர். 

இச்செய்தி காட்டுத்தீ போல் ரசிகர்களிடம் பரவியது. விஜயநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ரசிகர்கள் அவரை விடுவிக்குமாறு கோஷமிட்டனர். பஸ், கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.



 

ஒரு ஹிட் கொடுத்தால் 1 கோடி கேட்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரு ஹிட் கொடுத்தால் 1 கோடி கேட்கிறார்கள்

9/10/2011 11:36:33 AM

சென்னை, : சூப்பர் டீம் சினிமாஸ் தயாரித்துள்ள படம், 'நந்தா நந்திதா'. ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ் நடிக்கிறார்கள். எமில் இசை. ராம் ஷிவா இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை வெளியிட்டு, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் பேசியதாவது: 

அன்றைக்கிருந்த தயாரிப்பாளர்களும் சரி, கலைஞர்களும் சரி பணத்தை பெரிதாக நினைக்காமல் திறமையை பெரிதாக நினைத்தார்கள். வெற்றி பெற்றதும் சம்பளத்தை உயர்த்தவில்லை. 'அன்னக்கிளி'யில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியபோது அவருக்கு நான் கொடுத்த சம்பளம் மூவாயிரத்து ஒன்று. 100 வெள்ளி விழா படங்களை கொடுத்த பிறகே, அவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். 

இன்றைக்கு ஒரு ஹீரோவோ, இயக்குனரோ முதல் படத்தில் அறிமுகமாகி, அந்தப் படம் 4 வாரம் ஓடி, கொஞ்சம் பெயர் வந்து விட்டால் அடுத்த படத்துக்கு ஸி70, ஸி 80 லட்சம் வரை கேட்கிறார்கள். இப்போது திறமையால் யாரும் போட்டிப்போட முன்வருவதில்லை. பணத்தால் போட்டிப்போட நினைக்கிறார்கள். இந்த நிலை மாறினால்தான் சினிமா உலகம் வாழும். இவ்வாறு பேசினார்.

இயக்குனர் ஜனநாதன் பேசும்போது, ''சினிமா தொழிலாளர்கள் தங்கள் கஷ்டத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள், தங்கள் கஷ்டத்தை சொல்கிறார்கள். யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தவிக்கிறோம். அதே நேரத்தில் ஜெர்மன்காரன் கேமரா தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறான். பிலிம் கம்பெனி பிலிம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவை விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் படைப்பாளிகள், தொழிலாளர்கள் உலகம் மட்டும் தவிக்கிறது. 

இந்த நிலையில் அனுபவம் வாய்ந்தவர்கள், வழிகாட்டியாக இருந்து இதற்கு தீர்வு காண வேண்டும்'' என்றார். விழாவில் நாசர், தயாரிப்பாளர் கேயார், முருகன், மன்னன், எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜீ.பூபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



 

ஆறாயிரம் மாடுகளுக்கு மத்தியில் மை ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆறாயிரம் மாடுகளுக்கு மத்தியில் மை ஷூட்டிங்

9/10/2011 11:32:00 AM

சென்னை, : பத்மாலயா சினி விஷன்ஸ் சார்பில் வி.வி.சூர்யநாராயண ராஜு தயாரிக்கும் படம், 'மை'. விஷ்ணுப்பிரியன், ஸ்வேதா பாசு, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் சே.ரா.கோபாலன், நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது ஓட்டு போடும்போது கைவிரலில் வைக்கப்படும் மை. படத்தின் ஹீரோ விஷ்ணுப்பிரியன், காதலி ஸ்வேதாவின் அட்வைஸ் படி அரசியலில் பெரிய பதவியை பிடிக்கிறார். 

பிறகு அவர் பகுதியை எப்படி மாற்றுகிறார் என்பது கதை. வேலூரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பொய்கையில் வாரந்தோறும் நடக்கும் பிரமாண்டமான மாட்டுச்சந்தையில், ஆறாயிரம் மாடுகளுக்கு மத்தியில் விஷ்ணுப்பிரியன் நடித்த முக்கிய காட்சிகளை படமாக்கினோம். இது பரபரப்பான காட்சியாக இருக்கும். வேலூர் கோட்டையில் சிறப்பு அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். சாமியார்கள் தேவைப்பட்ட காட்சிக்காக, ஆற்காடு அருகே வள்ளிமலைக்கு சென்று, முருகன் கோயிலில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சாமியார்களை வேலூருக்கு வரவழைத்து படமாக்கியுள்ளோம். இவ்வாறு கோபாலன் கூறினார்.



 

நான் தமிழன்டா பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நான் தமிழன்டா பாடல் வெளியீடு

9/10/2011 11:21:31 AM

சென்னை, : வெரிகுட் மூவீஸ், அர்ச்சனா மூவீஸ் சார்பில் ஸ்டெல்லா, மூர்த்தி, நேசமானவன்  தயாரிக்கும் படம், 'நான் தமிழன்டா'. புதுமுகங்கள் ஜெயகாந்த், சம்பத்ராஜ், நாதன், ஸ்ரீமஞ்சு நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சிவகுமார். இசை, ஈசா. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி நேசமானவன் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியிட்டனர். படம்பற்றி நேசமானவன் கூறும்போது, 'காவல்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் உள்ளூர் சகோதரர்கள். புது இன்ஸ்பெக்டர் வருகிறார். சகோதரர்கள் அவரை வளைக்க திட்டமிடுகின்றனர். இதில் யாருக்கு வெற்றி என்பது கதை' என்றார்.