கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா

Praneetha Pair Up With Suriya After   

சூர்யாவை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் துப்பறியும் ஆனந்தன் படத்தின் கதாநாயகி பிரணீதா என்று தெரிய வந்துள்ளது.

கௌதம் மேனன் சூர்யாவை வைத்து துப்புறியும் ஆனந்தன் என்ற ஆக்ஷன் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் சூர்யா 40களில் உள்ள கெட்டப்பில் ரொமான்ட்டிக் டிடெடக்டிவாக வருகிறார். அவருக்கு ஜோடியாக சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த பிரணீதா தான் நடிக்கவிருக்கிறாராம்.

விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் யோஹான் முடிந்த பிறகு துப்பறியும் ஆனந்தன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படம் வரும் 2013ம் ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

சகுனி படத்தை அடுத்து நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று பிரணீதா கன்டிஷன் போட்டதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது. அவர் கன்டிஷன் போட்ட மாதிரி பெரிய ஹீரோவான சூர்யாவுடன் தான் ஜோடி சேர்ந்துள்ளார்.

பிரணீதாவுக்கு வாழ்வு தான்...

 

மோகன் பாபு மகனுடன் ஒன்றாக வசிக்கிறேனா? - டாப்ஸி மறுப்பு

Tapsee Denies Affair With Manoj   

தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜுடன் தனக்கு காதல், இருவரும் ஒன்றாக வசிக்கிறார்கள் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை டாப்ஸி.

ஆடுகளம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, இப்போது அஜீத் படத்தில் நடித்து வருகிறார்.

டாப்ஸிக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் மஞ்சு மனோஜ் குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் தாலி கட்டாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் வருகிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து வரும் செய்திகள் பற்றி கோபமடைந்துள்ள டாப்ஸி கூறுகையில், "மனோஜையும் என்னையும் இணைத்து அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றன. இதை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை. மஞ்சு மனோஜ் அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். நான் மாதாபூரில் உள்ள எனது வீட்டில் வகிக்கிறேன்.

ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகள் நண்பர்களாக இருக்கின்றனர். ஆண், பெண் டாக்டர்களும் நண்பர்களாக உள்ளனர். நாங்கள் ஏன் இருக்கக் கூடாது?" என்றார்.

 

காதல் காட்சி... ஒட்டக சேஸிங்... காலை உடைத்துக் கொண்ட கதாநாயகி!

Thulli Vilayadu Heroine Deepthy Bro

வின்சென்ட் செல்வா இயக்கிவரும் துள்ளி விளையாடு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தீப்தி, ராஜஸ்தானில் ஒரு காதல் காட்சி படமாக்கப்பட்டபோது காலை உடைத்துக் கொண்டார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

ப்ரியமுடன் படம் மூலம் விஜய்க்கே பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா. தொடர்ந்து யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார்.

படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.

ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் - வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்தது. கொளுத்தும் வெயில், தார் பாலைவன சூறைக்காற்றில் பறக்கும் மணல், ஒட்டகத்தில் ஹீரோயின் சவாரி போவதுபோன்ற பின்னணியில் ஒரு காதல் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் வின்சென்ட் செல்வா.

இந்தக் காதல் காட்சியின்போது ஒட்டகம் திடீரென வேகம் பிடிக்க, கதாநாயகி தீப்தி திக்கித் திணறிவிட்டாராம். பயத்தில் அலறியபடி அவர் கீழே விழுந்து கதறினராம்.

இதுகுறித்து இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடமே கேட்டோம்:

"நான் ஏற்கெனவே விஜய் நடித்த ப்ரியமுடன் படத்தின் பெரும் பகுதியை ராஜஸ்தானில் எடுத்திருக்கிறேன். இந்த முறை துள்ளி விளையாடு படத்துக்காக ராஜஸ்தான் சென்றோம். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகங்கள் அப்படியொரு வேகத்தில் செல்கின்றன. ஒரு காரின் வேகத்தையும் மிஞ்சும் அளவுக்கு வேகமானவை ஒட்டகங்கள்.

கதாநாயகி தீப்தி நடித்தது ஒரு காதல் காட்சி. அந்தக் காட்சியில் கதாநாயகி ஒட்டகத்தில் வருவது போல எடுக்க நினைத்தோம். ஆனால் ஒட்டகத்தின் வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட்டுவிட்டார். வலது காலில் பலத்த அடி. காலில் லேசான எலும்பு முறிவு வேறு. அவர் சரியான பிறகு, அந்தக் காட்சியை வேறு மாதிரி எடுத்தோம்," என்றார்.

 

வளைத்துப் போடுவதில் வாரிசு நடிகை திறமையே அலாதி!

பெரிய இடத்து விவகாரம்தான். ஆந்திரா பக்கம் அவரை வளைத்தார், இவருடன் குடித்தனம் நடத்துகிறார் என்று பெரிதாக கிசுகிசுக்கப்பட்ட வாரிசு நடிகை அவர்.

தமிழில் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. ஆனாலும் புளியங்கொம்பை வளைத்துவிட்டார் இங்கு. மனைவியுடன் சந்தோஷமாக இருப்பது போல போக்குக் காட்டிக் கொண்டிருந்த நடிகரும் வாரிசு நடிகையும் பிசினாக ஒட்டிக் கொண்டனர்.

இல்லையில்லை... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என இருவருமே மறுத்து வந்தாலும், இனி இங்கிருந்தால் சரிப்படாது... மும்பைப் பக்கம் போய்விடலாம் என ஜாகையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

தான் நடிக்கும் இந்திப் படத்தை சாக்காக வைத்து நடிகர் மும்பையில் தனி ப்ளாட் பார்த்து, அதில் வாரிசை குடியமர்த்திவிட்டார்.

இந்த விவரங்களை அனைத்தும் மும்பையிலிருக்கும் தன் குடும்ப நண்பர்கள் மூலம் அப்டுடேட்டாக தெரிந்தும், குடும்ப கவுரவம் கருதி அமைதியாக இருக்கிறாராம் மனைவி!

ஏற்கெனவே 'சீதை'யிடம் கிறங்கிக் கிடந்தபோது மாமனாரிடம் வாங்கியதைக் கூட நடிகர் மறந்துவிட்டாரே.. அண்டர் கிரவுண்ட் ட்ரீட்மெண்ட் எப்பவோ என கிசுகிசுக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!!

 

மீன் கொத்தி இசை வெளியீட்டு விழா - இயக்குநர், இசையமைப்பாளர் ஆப்சென்ட்!

Director Musician Boycott Audio Release Of Meenkothi    | மீன்கொத்தி  

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மீன் கொத்தி இசை வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்துவிட்டார் இயக்குநர் சஞ்சய் ராம். அவருடன் சேர்ந்து இசையமைப்பாளரும் வராமல் இருந்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் இயக்குநரும் இசையமைப்பாளரும் இல்லாமல் நடந்த இசை வெளியீட்டு விழா அநேகமாக மீன்கொத்தியாகத்தான் இருக்கும்.

அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில், சித்திரைப்பூக்கள், தர்மபத்தினி போன்ற படங்களை தயாரித்தவர், அழகன் தமிழ்மணி. இவர், 'மீன் கொத்தி' என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

'தூத்துக்குடி' உள்ளிட்ட படங்களை இயக்கிய செய்த சஞ்சய்ராம் இயக்கியுள்ளார். தினா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை தியாகராயநகர் கிளப்பில் நடந்தது.

விழாவில், இயக்குநர் சஞ்சய்ராம் கலந்து கொள்ளவில்லை. தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் விழாவை புறக்கணித்ததாக கூறப்பட்டது.

படத்தின் இசையமைப்பாளர் தினாவும் விழாவுக்கு வரவில்லை. "நிகழ்ச்சிக்கு வரமுடியாத தகவலை ஏற்கனவே தயாரிப்பாளருக்கு தெரிவித்து விட்டேன்'' என்று தெரிவித்துள்ளார் தினா.

விழாவுக்கு கவிஞர் பிறைசூடன் தலைமை தாங்கினார். போலீஸ் ஐ.ஜி. ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் சிவசக்தி பாண்டியன், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், யார் கண்ணன், இளவேனில், தி.நகர் கிளப் செயலாளர் அசோக் ஆகியோர் விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.

 

இன்னொரு ரவுண்டு வருவேன்– 'காமெடி டைம்' அர்ச்சனா

Next Round Come On Small Screen Comedy Time Archana

சன் டிவியின் இரவு நேரத்தில் காமெடி டைம் நிகழ்ச்சியைப் பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது என்றால் அது அர்ச்சனாவின் கலகலப்பான பேச்சிற்காகத்தான். இளமை புதுமையில் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தவர். திருமணமானவுடன் சின்னத்திரைக்கு பை சொல்லிவிட்டு குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அர்ச்சனா? என்று தேடியதில் தொலைபேசியில் சிக்கினார். அவரிடம் ஒரு மினி பேட்டி.

இளமை புதுமை, காமெடி டைம் என்று கலக்கலாக போய்க் கொண்டிருந்த நீங்கள் திடீரென சின்னத்திரைக்கு பை சொல்லிவிட்டீர்களே?

சன் தொலைக்காட்சியில் நாங்கள் வேலை பார்த்த போது ‘இளமை புதுமை', ‘காமெடி டைம்' பண்ணின காலம் எங்களுக்கு பொற்காலம். ஜாலியா போய்ட்டு இருந்தது. திருமண வாழ்க்கையும் இப்போ சந்தோசமா போயிட்டு இருக்கு. கணவர் வினீத் கொச்சின், கொல்கத்தான்னு வேலை பார்த்துட்டு இப்பதான் சென்னையில செட்டில் ஆகியிருக்கோம். ‘உத்சவ்' ங்கிற பேர்ல ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்திட்டு இருக்கேன். குட்டிப்பொண்ணு சாரா யு.கே.ஜி படிக்கிறா.

ரோபோ ஷங்கர், டிரம்ஸ் பிளேயர் விஷால் எல்லாம் எங்களோட நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கிட்டவங்கதான். அவங்க எல்லோரும் இன்னைக்கு பிரபலமானவங்களா வந்திட்டு இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு. குழந்தை இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணா வளர்ந்த பிறகு மறுபடியும் சேனல்ல இன்னொரு ரவுண்டு வரனும்னு ஆசை இருக்கு பார்க்கலாம் என்று கூறி மகிழ்ச்சியோடு விடை பெற்றார்.

 

கார் வாங்கும் ஆசை நிறைவேறியது: நடிகை ரதி

Shanthi Nilayam Rathi Purchase Ne

புதிதாக ‘ஹூண்டாய் வெர்னா ஃப்ளூடிக்' காரை வாங்கியிருப்பதால் சந்தோசத்தில் இருக்கிறார் ரதி. அவரது நீண்ட நாள் ஆசை இதன் மூலம் நிறைவேறியிருக்கிறதாம்.

சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரதி அதன் பிறகு பல படங்களில் நடித்தார். சத்யராஜுடனும் கூட ஒரு படத்தில் நடித்தார். அப்படத்தில் சத்யராஜுடன் சேர்ந்து திருடா திருடியில் வந்த சூப்பர் ஹிட் பாடலான மன்மதா ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாட்டமும் போட்டுக்கலக்கினார்.

ஆனால் போகப் போக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன. இதனால் சொந்த ஊரான பெங்களூருக்கேத் திரும்பிப் போனார்.

இந்த நிலையி்ல தற்போது டிவி பக்கம் திரும்பியுள்ளார். தற்போது ஜெயா டிவியில் பாலசந்தர் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடரில் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிக்கும்போதே கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது என்று கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ரதி. புதிதாக வாங்கியுள்ள ‘ஹூண்டாய் வெர்னா ஃப்ளூடிக்' கார் தனக்கு பிடித்த மெட்டாலிக் க்ரே கலரில் அமைந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரதி.

 

டாம் குரூஸ் - கேதி விவாகரத்துக்கு காரணமான 'சைன்டாலஜி'!

Tom Cruise Katie Holmes Split The Full Story

தன் மூன்றாவது மனைவிக்கு அமைதியாக செட்டில்மென்ட் செய்யும் முடிவில் இருந்த டாம் குரூஸ், அதை மீறி விஷயம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.

ஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் சைன்டாலஜி எனப்படும் மத அமைப்புதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவருக்கு ஏற்கெனவே 1987-ம் ஆண்டு மிமி ரோஜர் என்பவரைத் திருமணம் செய்து 1990-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

1990-ம் ஆண்டு நடிகை நிகோல் கிட்மேனை மணந்தார். இருவரும் 2001-ல் விவாகரத்து பெற்றனர்.

மூன்றாவதாக கேதி ஹோம்ஸை 2006-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு சூரி என்ற 6 வயது மகள் இருக்கிறாள். டாம்குருசுக்கு முன்னாள் மனைவி நிகோல் கிட்மேன் மூலம் பிறந்த 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்குமிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சைன்டாலஜி

டாம் க்ரூஸ் தனக்கும் கேதிக்கும் பிறந்த சூரி என்ற 5 வயதுப் பெண்ணை சைன்டாலஜி சர்ச்சுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தாராம். இந்த மதக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர் டாம் க்ரூஸ். தாய் தந்தை மற்றும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சர்ச்சில் வசிப்பதை சைன்டாலஜி வற்புறுத்துகிறது (கன்யாஸ்த்ரீ வாழ்க்கை மாதிரி).

மகளை இதிலிருந்து காக்கவே கேதி விவாகரத்து முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். 'பணம் கேதிக்கு பெரிதல்ல.. மகள் வாழ்க்கை முக்கியம். எனவே இந்த முடிவுக்கு அவர் வந்தார்," என கேதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மனைவியின் மனப்போக்கு அறிந்து, டைகர் வுட்ஸ் மாதிரி க்ரூஸும்பெரும் தொகையைக் கொடுத்து வெளியில் தெரியாமல் செட்டில்மென்ட் தர முடிவு செய்திருந்தார் (160 மில்லியன் டாலர் சொத்துக்காரர் க்ரூஸ்).

ஆனால் கேதியோ விவாகரத்து கேட்டு நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனைவியின் இந்த முடிவால் டாம் குரூஸ் மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கேதி - குரூஸ் தங்கள் காதலை ஈபிள் டவருக்குக் கீழே வெளிப்படுத்தினர். இதனை பாரிசில் பிரஸ் மீட் வைத்து இருவரும் அறிவித்தனர். இருவரின் திருமணமும் இத்தாலியில் மிகுந்த ஆடம்பரமாக ஒரு சொகுசு கப்பலில் நடந்தது நினைவிருக்கலாம்.

சைன்டாலஜி சர்ச் - ஒரு குறிப்பு

கோடீஸ்வரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பு சயின்டாலஜி சர்ச். சீ ஆர்கனைசேஷன் என்ற பெயரும் உண்டு. பெரும் பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை இங்கே விட்டு விடுவார்கள்.

குழந்தைகளை அனைத்து நவீன பயிற்சிகளையும் அளித்து வளர்ப்பார்கள். ஐந்து வயது முதலே இங்கு சேர்க்கலாம். ராணுவம் போன்ற கட்டுப்பாடான சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் கெட்ட பழக்கம் இல்லாமல் வளர்வார்கள்.

பல்வேறு மதங்களில் இருந்தும் நல்ல விஷயங்களைக் கொண்ட சிறப்பான மதம்தான் சயின்டாலஜி என்கிறது இந்த அமைப்பின் வெப்சைட். அதிநவீன விஞ்ஞான, தொழில்நுட்ப உதவியுடன் குழந்தைகளை வளர்த்து, பல்வேறு பயிற்சிகளை அளிப்பார்கள். ரான் ஹப்பர்டு என்பவர்தான் இந்த மதத்தை உருவாக்கினார். அமெரிக்காவை சேர்ந்த இவர் சயின்ஸ் பிக்ஷன் எழுத்தாளர்.