திஇந... நீ இதே ரூட்ல போங்க தம்பி! - ஜிவி பிரகாசுக்கு சிம்புவின் அட்வைஸ்

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா (திநஇ) படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் கண்டபடி திட்டுகிறார்கள்.

Trisha Illana Nayantara (A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஏ சான்றிதழுடன் வெளியான இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். ஆனந்த், மனிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் தன் கேரியரையே பாழடித்துவிட்டதாக நாயகிகளில் ஒருவரான ஆனந்தி புலம்பிக் கொண்டிருந்தார்.

Simbu's advice to GV

ஆனால் வசூலில் இதுவரை ரூ 10 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. ஜிவிக்கும் சந்தோஷம்தானாம்.

இந்த நிலையில் படத்தைப் பார்த்த சிம்பு, ஜீவி பிரகாசுக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

Simbu's advice to GV

இன்றைய தலைமுறையினருக்கான துணிச்சலான படம் என்று பாராட்டிய சிம்பு, இதே ரூட்டில் தயங்காம போங்க என அறிவுரையும் சொன்னாராம்.

 

மாமுஜான் ஆகும் பாய்ஜான் சல்மான் கான்: மகிழ்ச்சியில் குடும்பத்தார்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கான் கர்ப்பமாக உள்ளாராம்.

நடிகர் சல்மான் கானின் செல்லத் தங்கையான அர்பிதா கானுக்கும், ஆயுஷ் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் திருவிழா போன்று ஒரு வார காலம் கோலாகலமாக நடைபெற்றது.

Confirmed: Arpita Khan Sharma expecting first baby

திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் அர்பிதா கர்ப்பமாக இருப்பதாக அவரின் தந்தை சலிம் கான் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அர்பிதாவுக்கு குழந்தை பிறக்க உள்ளதாம்.

அர்பிதா என்றால் சல்மான் கானுக்கு உயிர் ஆகும். திருமண நிகழ்ச்சியில் அர்பிதாவை கடுப்பேற்றிய ஆடை வடிவமைப்பாளரை சல்மான் கொலவெறியுடன் தேடியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கும் சல்மான் கான் தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

 

கத்துக்குட்டி... இது ஒரு காமெடி கச்சேரி!

பிரபல பத்திரிகையில் செய்தியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய இரா சரவணன் இயக்குநராக அறிமுகமாகிறார், கத்துக்குட்டி படம் மூலம்.

நரேன் - சூரி நடிப்பில் முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள கத்துக்குட்டி வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகவிருக்கிறது.

சரவணனைச் சந்தித்தோம்...

"நான் தஞ்சாவூர்க்காரன். எங்க மண்ணின் வாழ்க்கையை காமெடி கலாட்டாவாகச் சொல்லியிருக்கேன் கத்துக்குட்டி படத்துல.

எங்க ஊர்ப்பக்கம் நல்லா படிச்சவங்க பெரிய நகரங்கள் இல்லன்னா வெளிநாட்டுக்குப் போயிடுவாங்க. ஓரளவு படிச்சவங்க திருப்பூர் பக்கம் போயிடுவாங்க. ஆனால் சரியா படிக்காத பசங்க மட்டும் எங்கயும் போகாம ஊரே கதின்னு கிடப்பாங்க. திருவிழா, கூட்டம், பண்டிகை எதுன்னாலும் ஊர்ல இவங்கதான் கலக்குவாங்க. இவங்கதான் விவசாயத்தை இன்னும் காப்பாத்திக்கிட்டிருக்கிறவங்க. அந்த மாதிரி கலாட்டா இளைஞர்களின் கதைதான் கத்துக்குட்டி," கொஞ்சம் களவாணி சாயல் தெரியுதே என்றோம்.

உடனே அவர், "அப்படித்தான் தெரியும். ஆனா.. நிச்சயம் களவாணி சாயம் இம்மியளவுக்குக் கூட இல்லாத மாதிரி படத்தை உருவாக்கியிருக்கேன். களவாணி எனக்குப் பிடிச்ச பெஸ்ட் படங்கள்ல ஒண்ணு. ஆனா அதுக்காக அதே பாணில நான் படம் தர மாட்டேன்.

இந்தப் படத்துல காமெடியோட, விவசாயிகளின் வலி, வேதனை என்னன்னும் சொல்லியிருக்கேன்," என்றார்.

Kathukkutty.. a complete comedy movie

படம் பார்த்த சென்சார் குழுவினர் யு சான்று வழங்கியதோடு, தஞ்சை கிராமம் ஒன்றில் வாழ்ந்த மாதிரி இருந்தது என்றார்களாம். அதேபோல தமிழக அரசின் வரிவிலக்குக் குழு, படம் பார்த்த இரண்டாவது நாளே வரிவிலக்கு அளித்துவிட்டார்களாம்.

அருள் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படம் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது.

 

எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்- அஞ்சலி

சென்னை: எனக்கு திருமணம் நடந்து விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள் இது எனது மனதுக்கு மிகவும் கஷ்டத்தை அளிக்கிறது என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

குடும்ப பிரச்சினைகளால் சிலகாலம் நடிப்பை விட்டு விலகியிருந்த அஞ்சலி தற்போது குடும்ப பிரச்சினைகளில் இருந்து மீண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

“I Am Single and not yet  Married - Says Anjali

ஜெயம் ரவியுடன் அஞ்சலி நடித்த சகலகலாவல்லவன் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது ‘மாப்ள சிங்கம், தரமணி, இறைவி' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் மூன்று படங்கள் அஞ்சலியின் கைவசம் உள்ளன. அஞ்சலி பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

ஒரு தொழில் அதிபரை அஞ்சலி காதலிப்பதாகவும் அவருடன் அஞ்சலிக்கு ரகசியத் திருமணம் நடந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.

தற்போது அஞ்சலிக்கு குழந்தை இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இதனைக் கேள்விப்பட்ட அஞ்சலி தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

"என்னைப்பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழு கவனமும் இப்போது சினிமாவில்தான் இருக்கிறது. திரையுலகம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது. இங்கு குனிய குனிய குட்டுவார்கள்.

எதிர்த்து நின்றால் ஓடிப்போய்விடுவார்கள். என்னை சுற்றி அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்கால திட்டங்கள் என் கையில் இல்லை கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்".

என்று அஞ்சலி ஹைதராபாத்தில் அளித்த ஒரு பேட்டியில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

 

கமல் ரசிகர்கள் தாக்குதல்... சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி

கமல் ரசிகர்களால் தாக்குதலுக்குள்ளான நடிகர் சிவகார்த்திகேயனை போனில் அழைத்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்.

நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது, கமல் ஹாஸனை வரவேற்க வந்த சில ரசிகர்கள் தாக்கினர்.

Rajinikanth inquires Sivakarthikeyan

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று கமல் ஹாஸன் கூறியிருந்தார்.

இந்தத் தாக்குதல் உண்மைதான் என்று கூறிய சிவகார்த்திகேயன், அதுகுறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மதுரை போலீசார் இதுகுறித்து புகார் பதிவு செய்ய முனைந்தபோதும், சிவகார்த்திகேயன் புகார் தர மறுத்துவிட்டார்.

"நான் இப்போது நலமாக உள்ளேன். பிரச்சினை ஏதுமில்லை", என்று மட்டும் கூறிவிட்டார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மீதான தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை போனில் அழைத்து நலம் விசாரித்தார். 'என்ன நடந்தது...' என்று கேட்டவர், பின்னர் 'பாதுகாப்பா இருங்க..' என்று கூறினாராம்.

 

ரஜினி ஆட்டோகிராபுடன் வெளியாகும் கிருமி!

தனது முன்னாள் உதவியாளர் ஜெயராமன் முதல் முறையாக தயாரித்துள்ள கிருமி படத்தின் போஸ்டர்களில், ரஜினி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.

இந்த ஆட்டோகிராபுடன்தான் படத்தின் போஸ்டர்களும் டிசைன்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கிருமி படத்துக்கு காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் கதை திரைக்கதை அமைத்துள்ளார். கதிர், ரேஷ்மி மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை அனுசரண் இயக்கியுள்ளார்.

Kirumi posters released with Rajini autograph

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

படத்துக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தன் சார்பில் யாரையாவது அனுப்பி வைத்து வருகிறார் ரஜினி. ஜெயராமனை வீட்டுக்கே அழைத்து வாழ்த்தும் தெரிவித்துவிட்டார்.

இப்போது படத்தின் போஸ்டர்களில் காட் ப்ளஸ் என ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் ரஜினிகாந்த் என ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார். இதையே அனைத்து விளம்பரங்களிலும் பயன்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ரஜினி ஜெயராமன்.

 

ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு ரஜினியை அழைத்து வருவேன்! - கங்கை அமரன்

ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க ரஜினிகாந்தை நான் அழைத்து வருவேன் எனத் தெரிவித்தார் கங்கை அமரன்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடந்தது.

I will invite Rajini to spiritual meetings - Gangai Amaran

இந்த விழாவில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறுகையில், "டாஸ்மாக் மதுக்கடைக்கும், மது அருந்துபவர்களுக்கும் பாதுகாப்பாக நிற்க வேண்டியுள்ளதே என மனம் நொந்த போலீசாருக்கு இப்போது விமோசனம் கிடைத்துவிட்டது. பெற்ற தாயும், தந்தையுமே உலகம் என உணர்த்திய விநாயகருக்கு பாதுகாப்பில் ஈடுபட்டதால், அந்த பாவம் போய் விட்டது.

திராவிடம் பேசுபவர்களின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று சாமியை வழிபடுகிறார்கள். திராவிடத்தை சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும்.

இதுபோன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று என்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறுவார். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அவரையும் அழைத்து வருவேன்," என்றார்.

கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

 

லிங்கா பிரச்சினை தீர்ந்தது: ராக்லைன் வெங்கடேஷுக்கு உதவிய திருப்பூர் சுப்பிரமணியன்!

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தரவேண்டிய தொகையில் ஒரு பகுதியை திருப்பூர் சுப்பிரமணியன் ஏற்றதால் லிங்கா பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 12.5 கோடியை ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் தர சில மாதங்களுக்கு முன் சம்மதித்திருந்தனர்.

அதில் ரஜினிகாந்த் மட்டும் தனது பங்காக ரூ 6.50 கோடியை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கொடுத்து உரிய முறையில் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்.

Tiruppur Subramaniyam's timely help to solve Lingaa issue

அடுத்து ராக்லைன் வெங்கடேஷ் தனது பங்காக ரூ 6 கோடியை பின்னர் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் அவர் பணம் தர தாமதமானது.

இந்த நிலையில் லிங்கா பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டம் சமீபத்தில் கூடியது. இதில் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர் கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், வேந்தர் மூவீஸ் எஸ் மதன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், பிலிம்சேம்பர் நிர்வாகி காட்ரகட்ட பிரசாத், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ 4.75 கோடியைக் கொடுத்தார். மீதிப் பணத்தை தன்னால் தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து மீதிப் பணமான ரூ 1.25 கோடியை தானே தர முன்வந்தார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.

"ரஜினியை வைத்து பல கோடியைச் சம்பாதித்தவன் நான். இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்து முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க விரும்பவில்லை. ரஜினி சாருக்காக அந்த 1.25 கோடி ரூபாயை நானே தருகிறேன்," என்று அவர் அறிவித்தபோது, அரங்கிலிருந்த மொத்தப் பேரும் கைத் தட்டினர். திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு ராக்லைன் வெங்கடேஷை நெகிழ வைத்தது.

இத்தனைக்கும் லிங்கா படத்தின் விநியோக உரிமையை திருப்பூர் சுப்பிரமணியம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்ப் படங்களை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு தடை?

சென்னை: தமிழ்ப் படங்களை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்துவது போன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஈஓ(CEO) அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பின் வருமாறு கூறியிருக்கிறார்.

AGS Entertainment Banned From Producing Tamil Movies?

சமீபத்தில் திரைக்கு வந்த தனி ஒருவன் திரைப்படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அளவுக்கு அதிகமான விளம்பரம் செய்து வெளியிட்டதால், இனிவரும் காலங்களில் தமிழ்ப் படங்களை தயாரிக்க எங்கள் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்" என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்(TFPC) இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்தத் தடை ஒரு நிரந்தரத் தடை அல்ல தற்காலிகமானது தான் என்று கூறுகின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

குனிஞ்சா குட்டுவாங்க.. எதிர்த்தா ஒடிடுவாங்க..! - அஞ்சலி

சினிமாவில் குனிய குனிய குட்டுவாங்க... எதிர்த்து நின்னா ஓடிடுவாங்க என்று தன் அனுபவத்தை விவரித்துள்ளார் நடிகை அஞ்சலி.

பல்வேறு குடும்பப் பிரச்சினைகளைச் சந்தித்தவர் அஞ்சலி. சில ஆண்டுகள் அவரால் சென்னைப் பக்கமே வரமுடியவில்லை.

இப்போதுதான் அனைத்திலிமிருந்து மீண்டு முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Anjali denies her marriage again

ஜெயம் ரவியுடன், ‘சகலகலா வல்லவன்' படத்தில் நடித்தார். தற்போது ‘மாப்ள சிங்கம், தரமணி, இறைவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் மூன்று படங்களில் நடிக்கிறார்.

பிரச்சினைகளிலிருந்து அவர் விடுபட்டாலும், கிசுகிசுக்கள் அவரை விடாமல் துரத்துகின்றன.

அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை கூட இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றன.

இதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள விளக்கத்தில், "வதந்திகள் எனக்குப் புதிதில்லை. எனக்குத் திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழு கவனமும் இப்போது சினிமாவில்தான்.

சினிமாவில் நான் நிறைய கத்துக்கிட்டேன். இங்கு குனிய குனிய குட்டுவார்கள். எதிர்த்து நின்றால் ஓடிப்போய்விடுவார்கள். என்னை சுற்றி அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது," என்றார்.

 

"அனுஷ்கா" வேண்டாம் "சமந்தா" போதும்- மகேஷ்பாபு

சென்னை: தான் நடித்து வரும் புதிய படத்தில் அனுஷ்காவை நிராகரித்து சமந்தாவை ஹீரோயினாக்குமாறு மகேஷ்பாபு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மகேஷ்பாபுவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்ரீமந்துடு' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஸ்ரீமந்துடு வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிரமோற்சவம்' படத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் அதலா பிரமோற்சவம் படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என 3 பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

I Want Samantha not Anushka - says Maheshbabu

மகேஷ்பாபு மற்றும் சமந்தாவுடன் இணைந்து சத்யராஜ், ரேவதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் "பிரமோற்சவம்" திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிப்பதற்கு சமந்தாவை முதலில் அழைத்த போது ‘கால்ஷீட்' ஒத்துவராததால் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். எனவே, அனுஷ்காவை மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதுபற்றி மகேஷ்பாபுவிடம் கேட்டபோது, ‘அனுஷ்கா வேண்டாம்' என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் சமந்தாவிடம் பேசி, கால்ஷீட்டை' அனுசரித்து கொள்ளலாம். நீங்கள் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் சமந்தா நடிக்க சம்மதித்துள்ளார்.

‘ஸ்ரீமந்துடு'வுக்கு முன்பு அனுஷ்காவுடன் மகேஷ்பாபு ஜோடி சேர்ந்து நடித்த ‘ஹலேஜா' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தான் ‘பிரமோற்சவம்' படத்தில் அனுஷ்காவுடன் மகேஷ்பாபு நடிக்க விரும்பவில்லை என்று தெலுங்கு படஉலகினர் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.

இளவரசர் ராணியை வேணாமுன்னு சொல்லியிருக்காரு...

 

துல்கருக்கு ஜோடியாக ஜான்வி நடிக்கவில்லை - ஸ்ரீதேவி

மும்பை: பிரபல இளம்நடிகர் துல்கர் சல்மானுடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடிப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் ஜான்வியின் அம்மாவும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவி இதனை மறுத்துள்ளார். "ஜான்வி மிகவும் சிறிய பெண் மேலும் அவள் இப்பொழுதுதான் கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறாள்.

Sridevi has Denied Rumors

ஜான்வி நடிப்பது பற்றிய விஷயங்களை தற்போது திட்டமிட முடியாது. எனது குடும்பத்தினரோ, நானோ நடிப்புத்துறையை பற்றி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

ஆனால் விதிவசத்தால் நான் நடிகையாக மாறிவிட்டேன். அதுபோல ஜான்வி நடிப்பது பற்றி நானோ எனது குடும்பத்தினரோ சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

ஆனால் எதிர்காலத்தில் அவள் நடிகையாக மாறுவாளா? இல்லையா என்பது தெரியவில்லை, எல்லாம் விதியின் கைகளில் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார் ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி.

அடுத்த வாரத்தில் ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடித்திருக்கும் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீதேவி ராணியாகவும் அவரின் மகளாக ஹன்சிகாவும் நடித்திருக்கின்றனர்.

மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து நடிகை சுருதிஹாசன், சுதீப் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் புலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஸ்ரீதேவி நம்பும் விதி ஜான்வியை நடிகையாக்குமா? பார்க்கலாம்...