அப்பாவி முரடனாகும் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : விடியல் ராஜூ தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம், 'வேட்டையாடு'. உதயதாரா, ஹரி, மான்ஸ் உட்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கே.எஸ்.விஜயபாலன் கூறியதாவது:
ஒரு அப்பாவி, முரட்டு மைனராக மாறியது எப்படி என்பது கதை. மலைப்பிரதேசத்தில் ஒரு பாறையில் நின்று, விடியல் ராஜூவுடன் உதயதாரா நடித்த காட்சியைப் படமாக்கினேன். அருகிலுள்ள பாறையில், அதை உடைக்க வெடி வைத்தனர். யாருக்கும் சொல்லாமல் வெடியை வெடிக்கச் செய்ததால், யூனிட்டில் இருந்தவர்கள் பதறினார்கள். உடைந்து சிதறிய கற்கள் கீழே விழுவதற்கு முன், உதயதாராவை அழைத்துக்கொண்டு தப்பினோம். கொஞ்சம் தாமதித்திருந்தால் கற்கள் யூனிட் ஆட்கள் மீது விழுந்து காயம் ஏற்பட்டிருக்கும்.


 

மலையாளத்தில் தொடர்ந்து நடிக்க சசிகுமார் முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிருத்விராஜ், சசிகுமார், பியா, அனன்யா உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், 'மாஸ்டர்ஸ்'. ஜானி ஆண்டனி இயக்கியுள்ளார். வெள்ளிக்கிழமை ரிலீசான இந்தப் படம் அங்கு ஹிட்டாகியுள்ளது. இதில் நடித்தது பற்றி சசிகுமாரிடம் கேட்டபோது கூறியதாவது:
எனது 'சுப்ரமணியபுரம்', 'நாடோடிகள்' படங்கள் கேரளாவில் நூறு நாட்கள் ஓடியவை. இதையடுத்துதான் என்னை அங்கு நடிக்க கேட்டார்கள். நல்ல கதை என்றதால் 'மாஸ்டர்ஸ்' படத்தில் நடித்தேன். இதில் பிருத்விராஜும் நானும் கல்லூரி நண்பர்கள். அவர் போலீஸ் அதிகாரி ஆகிறார். நான் செய்தியாளர் ஆகிறேன். அவரது இன்வெஸ்டிகேஷனுக்கு நான் எப்படி உதவுகிறேன் என்பது கதை. இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்க்க முடிவு செய்து திருவனந்தபுரம் தியேட்டரில் பார்த்தேன். படம் முடிந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்டு ரசிகர்கள் பாராட்டிப் பேசினார்கள். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே நிறைய மலையாள வாய்ப்புகள் வந்தது. ஆனால், தமிழில் படங்கள் இருப்பதால் உடனே ஒப்புக்கொள்ளவில்லை. இங்கு நடிக்கும் படங்களை முடித்துவிட்டு தொடர்ந்து மலையாளத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.


 

பச்சை என்கிற காத்து அரசியல் கதையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : 'அ' திரை நிறுவனம் தயாரித்துள்ள படம், 'பச்சை என்கிற காத்து'. வாசகர் ஹீரோ, தேவதை ஹீரோயின். அப்புக்குட்டி, துருவன், பரத்குமார், மருதை, சத்யபாமா, துளசி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு. ஹரிபாபு இசை அமைத்திருக்கிறார். படத்தை எழுதி இயக்கியுள்ள கீரா கூறியதாவது:
மணப்பாறை அருகே வாழ்ந்து இறந்துபோன 27&வயது இளைஞனின் உண்மை கதை இது. ஒரே இரவில் தொடங்கி ஒரே இரவில் முடிகிறது. தனக்கு எது பிடிக்கிறதோ, அதை மட்டுமே சரியென்று எண்ணி வாழும் ஒருவன், அவன் தேர்ந்தெடுத்த அரசியலாலும், காதலியாலும் எப்படி சீரழிகிறான் என்பதை சொல்கிறோம். இது அரசியல்வாதியாக ஆசைப்பட்ட ஒருவனின் கதை. ஆனால் அரசியல் கதை அல்ல.
பச்சை ராம்குமார் என்ற அந்த இளைஞன் வாழ்ந்த, பழகிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் கதை சொல்லுவது போல இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரவர் கோணத்தில், பிளாஷ்பேக் ஆக காட்சிகள் விரியும். படத்தை ஸ்ரீராம் மூவிமேக்கர்ஸ் சார்பாக முத்துக்கிருஷ்ணன் வெளியிடுகிறார். வரும் 13ம் தேதி வெளிவருகிறது.




 

என் காதல் புகைப்படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : மோட்டிவேசன் மூவிஸ் சார்பில் நாமக்கல் பி.வருண்குமார் தயாரிக்கும் படம், 'என் காதல் புகைப்படம்'. புதுமுகங்கள் மோகன், கண்மணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆர்.மணிகண்டன். இசை, கனிதீவன். படத்தை இயக்கும் சாலமன் பிரபு கூறுகையில், "கேமராவை உயிராக நினைக்கும் ஹீரோ, காட்டுவாசிகளைப் படமெடுக்க, செல்கிறார். அங்கு ஹீரோயினை சந்திக்கும் அவர், கண்ணிவெடியில் சிக்குகிறார். அதிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பது கதை. நடனம், பாடல், சண்டை, காமெடி இல்லாமல் உருவாகியுள்ள இப்படம், இந்த மாதம் ரிலீசாகிறது" என்றார்.


 

விஞ்ஞான மனிதனின் காதல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : குறிஞ்சி பிலிம்ஸ் தயாரிக்கும் படம், 'உனது விழியில்'. எழுதி இயக்கி, விஞ்ஞான மனிதன் வேடத்தில் நடிக்கும் ராஜசிம்மா கூறியதாவது: எனது மூளையில் ஆபரேஷன் செய்து, சில கட்டளைகளுடன் சிறு 'சிப்'பை வைக்கிறார் சீன விஞ்ஞானி ஒருவர். பிறகு ஹீரோயின் ஆயிஷாவை திருமணம் செய்கிறேன். ஹீரோ சரண் ஆயிஷாவை காதலிப்பதை அறிகிறேன். சந்தேகப்பட்டு ஆயிஷாவை கொல்கிறேன். அப்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பது கதை. ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது.




 

வளையல் விற்பவராக சுஜா வாருனி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தில் வளையல் விற்கும் பெண்ணாக நடிக்கிறார் சுஜா வாருனி.
நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கில் தயாரித்து நடிக்கும் படம், 'மறந்தேன் மன்னித்தேன்'. தெலுங்கில் இதற்கு 'குண்டல்லோ கோதாவரி' என்று பெயர் வைத்துள்ளனர். ஆதி ஹீரோ. மேலும் டாப்ஸி, சந்தீப், சுஜா நடிக்கின்றனர். படம் பற்றி சுஜா வாருனி கூறியதாவது:
இது எண்பதுகளில் நடக்கும் கதை. நான் கிராமங்களில் வளையல் விற்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். பெயரை சுஜா வாருனி என்று மாற்றியதற்கு பிறகு அதிக வாய்ப்புகள் வருகிறது. தமிழில், 'அமளி துமளி', 'தப்புத்தாளங்கள்', 'காதல் தீவு' உட்பட சில படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.


 

அடுத்த ஆண்டில் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தமிழில், 'குறும்பு', 'போராளி' படங்களில் நடித்துள்ள அல்லரி நரேஷ், அடுத்த ஆண்டில் திருமணம் செய்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:  'குறும்பு' ரிலீசுக்கு பிறகு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஏற்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு 'போராளி'யில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது ஷாம், ராஜுசுந்தரத்துடன் சேர்ந்து 'ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்' படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் 'ஆக்ஷன்' என்ற பெயரில் உருவாகிறது. எனக்கு ஜோடி, நீலம். திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்க சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும்.


 

பிரபுதேவாவை பிரிந்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிரபுதேவாவை பிரிந்தது ஏன் என்பதற்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எனது உறவு மட்டுமல்ல வேறு எந்த உறவு அல்லது திருமணத்தை எடுத்துக்கொண்டாலும் பிரிவு என்பது நடந்திருக்கிறது. வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகளும் பிரச்னைகளும் வரத்தான் செய்யும். அதை சரியாக கையாள வேண்டும். எல்லை மீறிவிட்டால் கையாள்வது கடினம். மக்கள், சூழ்நிலைகள், செயல்பாடுகள் என எல்லாமே மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம்தான் என்னை பிரியச் செய்தது. அதற்கு மேலும் செல்ல விரும்பவில்லை. அது என் சொந்த விஷயம்.

எனது விவகாரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என நினைக்கிறேன். என்னை பற்றி என்னவெல்லாமோ சொல்லும்போதும் எழுதும்போதும் கண்ணியமாக அமைதிகாத்து வந்தேன். இன்று நிலைமை மாறிவிட்டது. உறவு முறிந்து விட்டது. அதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். நான் அவருடன் பழகிய போது, நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால், இதற்கு மதிப்பில்லை எனும்போது, உறவை முறித்துக் கொள்வதை தவிர, வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும்?  

பிரபுவுடன் நட்பாக இருந்தவரை எங்கள் உறவு உறுதியாகவே இருந்தது. சில நேரம் மீடியா செய்திகள் எங்களை பாதித்திருக்கிறது. எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது மிகவும் பர்சனல் விஷயம். அதை விவரிக்க முடியாது. மூன்றரை வருட உறவில் நான் நிறைய மாறி இருக்கிறேன். மற்றவர்களுக்காக மாறிக்கொள்வது என்பது எல்லோருடைய வாழ்விலும் நடப்பதுதான். இப்போது தனிமைவாசியாகி விட்டேன். அதுபற்றி எதுவும் கூற முடியாது.

நடந்த சம்பவங்களிலிருந்து நான் முழுமையாக மீள இன்னும் அவகாசம் தேவை. காதல் தோல்வி பற்றி கருத்து கேட்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. நான் சினிமாவைவிட்டு விலக நினைத்தது தவிர்க்க முடியாத தருணம். காதலுக்காக நான் எதையும் செய்வேன். என் கையில் குத்தப்பட்ட பிரபுதேவா பெயரை இப்போதைக்கு நீக்கும் எண்ணம் இல்லை.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.




 

வீரன் முத்து ராக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கிருப்பாத்தி மூவிஸ் சார்பில் கே.சண்முகம் தயாரிக்கும் படம், 'வீரன் முத்து ராக்கு'. 'கொண்டான் கொடுத்தான்' கதிர், லியாஸ்ரீ, சண்முகராஜன், நரேன், சேரன்ராஜ், நமோ நாராயணன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, எஸ்.பாஸ்கர். இசை, எஸ்.வி.கோபாலகிருஷ்ணா. பாடல்கள்: முத்துலிங்கம், பழனிபாரதி, கலைக்குமார், மோகன்ராஜ். ராஜசேகரன் இயக்குகிறார். மதுரை வீரன்&பொம்மி, வெள்ளையத்தேவன்&வெள்ளையம்மா காதலைப் போல், வீரன் முத்து தன் காதலி ராக்குவுக்காக, எப்படி காதலையும், வீரத்தையும் முன்னிலைப்படுத்தினான் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.


 

கிராபிக்ஸ் படத்தில் நடிப்பது சவால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பி.வி.பி சினிமா சார்பில் பரம் வி.பொட்லூரி தயாரிக்கும் படம், 'நான் ஈ'. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். நானி, சமந்தா, சந்தானம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.கே.செந்தில்குமார். இசை, மரகதமணி. பாடல்கள், மதன் கார்க்கி. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

பாடலை வெளியிட்டு சூர்யா பேசியதாவது:எல்லா ஆக்ஷன் ஹீரோக்களும் ராஜமவுலி இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள். 'மகதீரா'வின் மேக்கிங்கைப் பார்த்து அசந்து விட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஆய்வு மேற்கொள்வது ராஜமவுலியின் பாணி. அதனால்தான் வித்தியாசமான கதையையும், தொழில்நுட்பங்களையும் அவரது படங்களில் பார்க்க முடிகிறது. 'நான் ஈ', அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கான படம் என்பதில் சந்தேகம் இல்லை. ஈக்களில் எத்தனை வகை உள்ளன? அவற்றின் குணாதிசயங்கள் என்ன என்பது உட்பட ஏராளமான விஷயங்களை இப்படத்தில் வைத்திருக்கிறார். இதில் ஈ ஹீரோவாக நடித்திருக்கிறது. இதுபோல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கார்த்தி, பார்த்திபன், பாலா, லிங்குசாமி, சமுத்திரக்கனி, ஜெயேந்திரா, யுடிவி தனஞ்செ யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

கிளாமர் வேறு மாடர்ன் கேரக்டர் வேறு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கிளாமராக நடிப்பதற்கும் மாடர்னாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று மித்ரா குரியன் கூறினார்.
தமிழில், 'காவலன்' படத்தில் அசின் பிரண்டாக நடித்தவர் மலையாள நடிகை மித்ரா.

அவர் கூறியதாவது:
இப்போது 'நந்தனம்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறேன். இதில் சிவாஜி தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது ரொமான்டிக் கதையாக இருந்தாலும் என்னைச் சுற்றிதான் படம் நகரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் நடித்துள்ள இரண்டு படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழ், மலையாளத்தில் பிசியாக இருப்பதால் தெலுங்கு பட வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை. எத்தனை படத்தில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. நல்ல கேரக்டரில் நடிக்க நினைக்கிறேன். கிளாமராக நடிப்பீர்களா என்கிறார்கள். மாடர்ன் கேரக்டருக்கும் கிளாமருக்கும் வித்தியாசம் இருக்கிறது. மாடர்ன் கேரக்டரில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், எனது உடல்வாகுக்கு கிளாமர் சரியாக வருமா என்று தெரியாது.