அன்புக் கணவரின் இயக்கத்தில் .. மீண்டும் அமலா பால்!

சென்னை: தன் கணவரும் இயக்குனருமான விஜயின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை அமலா பால்.

நீண்ட வருடங்கள் கழித்து தமிழுக்குத் திரும்பும் இயக்குனர் பிரபுதேவா தமிழ் படங்களை இயக்கி தானே தயாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார். அதன் முதற்கட்டமாக ஒரு படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

Amala paul and Director Vijay to join again

தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமான நடிகை அமலா பால் மைனா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டவர். தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்தபோது இயக்குனர் விஜயுடன் காதல் அரும்பி கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது.

திருமணத்திற்குப் பின் தாய்மொழியான மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருகிறார். பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் எடுக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூற அதற்கு விஜயும் ஒத்துக் கொள்ள, இப்போது கணவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அமலா பால்.

டைரக்டர்ஸ கல்யாணம் பண்ணிக்கிற ஹீரோயின்களுக்கு திரும்ப நடிக்க வரதுல பிரச்சினை இல்ல போல...!

 

ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி முருகன் பாட்டு..மதுரையில்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் ரஜினி முருகன் திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் மதுரையில் நடத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம், இசை அமைப்பாளர் இமான் மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நான்கு பேரும் இணைந்துள்ள ரஜினி முருகன் படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Rajini murugan audio launch date now confirmed

படத்தைப் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 7 ம் தேதி இசை வெளியிடப்படும், ரம்ஜான் தினத்தன்று படம் வெளியாகும் என்று டிவிட்டி இருந்தார்.சொன்னது போலவே இப்போது இசை வெளியீட்டை மதுரையில் நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஜினி முருகன்னு பேரு வச்சிருக்கிறதப் பாத்தா ஒருவேளை அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ...!

 

ஆகஸ்டில் உறும வரும் விஜயின் "புலி"

சென்னை: நடிகர் விஜய் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வந்த புலி படம் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில தினங்களில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படப்பிடிப்புக் குழு வெளியிட உள்ளனர்.

பாடல்களை காட்சிபடுத்துவதற்காக கம்போடியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு சென்ற படக்குழு வெற்றிகரமாக அனைத்தையும் முடித்து விட்டது. தற்போது படத்தின் பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மட்டுமே பாக்கி இதற்காக இயக்குனர் சிம்புதேவன் இரவு பகலாக உழைத்து வருகிறார்.

சுருதி ஹாசன், ஹன்ஷிகா ஆகிய இரு ஹீரோயின்களுடன் சுதீப் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் வருவதாகவும் அதில் ஒரு வேடம் குள்ள மனிதன் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆக்சன் கலந்த பேண்டசி படமான புலி விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல டிரீட் தான்.

விஜய் அண்ணா புலி'யக் கண்ணுல சீக்கிரமா காட்டுங்ணா....!

 

3 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா

ஹைதராபாத்: தெலுங்கு உலகின் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அடம் பிடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

மிக நீண்ட நாட்கள் கழித்து நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்க அவரது அன்பு மகன் ராம் சரண் தேஜா படத்தை தயாரிக்கிறார்.

Nayanthara demands rs 3 crores?

சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவரது ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை அணுக 3 கோடி தந்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதிர்ந்து போன படக்குழு தற்போது பயந்து பின்வாங்கி அந்த பணத்தில் இரண்டு பெரிய ஹீரோயின்களை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

எல்லாரும் உதயநிதி ஆகிட முடியுமா என்ன?

 

"10 எண்றதுக்குள்ள" வருமா, வராதா? – சொல்லுங்க பாஸ்!

சென்னை: 10 எண்றதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்க விக்ரம் நடித்து வருகிறார்.

தயாரிப்பு முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ.

படம் அவர்கள் சொன்ன தேதியில் முடியாமல் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது.

Vikram’s 10 enrathukkulla film on problem

இந்த நிலையில், விஜய் மில்டனுக்கும் விக்ரமுக்குமிடையே தகராறு என்று வதந்தி கிளம்பியுள்ளது. இது குறித்து படக்குழுவிடம் கேட்டால் இது என்ன கலாட்டா என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

ஏனென்றால், அப்படி எந்த சம்பவமும் படப்பிடிப்பில் நடைபெறவில்லையாம். மேலும் படப்பிடிப்பும் எல்லாம் சுமூகமாகப் போய்கொண்டிருக்கிறதாம்.

டப்பிங் முடிந்துவிட்டது. இனி நான்குநாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி, அதுவும் முடிந்தால் பின்னணி இசை சேர்ப்புதான் என்று நேர்மறை தகவல்களாக சொல்கிறார்கள்.

அப்படியானால் சண்டை என்ன ஆச்சு என்று கேட்டால் அதெல்லாம் சும்மா கிளப்பிவிட்டது என்கிறார்கள் திரை வட்டாரத்தில்.

எருமை மாடு எங்க போச்சுன்னு கேட்டாளாம் ஒருத்தி.. அதுக்கு இன்னொருத்தி சொன்னாளாம் என் தலையில போச்சுன்னு.. அந்தக் கதையாவுல்ல இருக்கு!

 

நாயகன் "தலைவா" மாதிரி "பாட்ஷா" அஜீத்தா???

சென்னை: நாயகன் உள்ளிட்ட படங்களை எடுத்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்து தலைவா உருவானது போல பாட்ஷா படத்தை எடுத்து அஜீத்தை வைத்து அடுத்த படத்தை எடுக்க வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

விஜய் நடித்த தலைவா படத்தைப் பார்த் பலரும் அடேட நாயகன் சாயல் நிறையத் தெரியுதே என்று பகிரங்கமாகவே சொன்னார்கள். நாயகன் படத்தின் பல காட்சிகள் அந்த அளவுக்கு தலைவா படத்துக்கு "இன்ஸ்பிரேஷன்" ஆக இருந்தது.

இந்த நிலையில் அஜீத் நடிக்கும் 56வது படத்தின் கதை பாட்ஷா கதை என்று சொல்கிறார்கள் இப்போது. அதாவது பாட்ஷா படத்தின் ரீமேக் இது என்கிறார்கள்.

Is Ajith's 56th movie is the remake of Batsha?

தற்போது அஜீத், வீரம் பட இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்ருதி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. படத்தின் கதை குறித்து ஆளாளுக்கு சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதுவும் ஒரு டான் கதைதான், குறிப்பாக பாட்ஷா படம் போன்ற கதை என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ பாட்ஷா படத்தைத்தான் ரீமேக் செய்கிறார்கள் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

உண்மை என்ன என்பது தெரியவில்லை.. ஒரு வேளை நாயகன் படத்தின் இன்ஸ்பிரேஷனில் தலைவா உருவானது போல, பாட்ஷா இன்ஸ்பிரேஷனில் இந்த அஜீத் படம் உருவாகிறதா என்றும் தெரியவில்லை!

 

முதலில் அக்கா ஸ்ருதி.. அடுத்து தங்கச்சி அக்ஷராவா...?

சென்னை: விஷால் நடிக்க உருவாகப் போகும் சண்டைக் கோழி 2ம் பாகத்தில் நாயகியாக அக்ஷரா ஹாசன் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

விஷாலுக்கு ஹிட் கொடுத்த படம் சண்டைக்கோழி. 2005ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷாலின் சண்டைக் காட்சிகள் பேசப்பட்டது போல அவருக்கு நிகராக நாயகி மீரா ஜாஸ்மினின் அசத்தல் நடிப்பும் பேசப்பட்டது. அவரது குறும்புத்தனம் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்தது. லிங்குச்சாமிதான் இயக்குநர்.

Akshara Haasan may pair with Vishal

தற்போது லிங்குச்சாமிக்கும், விஷாலுக்கும் இறங்குமுகமாக உள்ளது. அவர்களது படங்கள் முன்பு போல ஓடுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் சண்டைக் கோழியை கையில் எடுக்கிறார்கள் இருவரும். அதன் 2ம் பாகத்தைத் தயாரிக்கும் வேலை தொடங்கியுள்ளதாம்.

விஷாலுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராவை நாயகியாக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் பேசி வருகிறார்களாம்.

அக்ஷரா ஹாசன் இந்தியில் தற்போது பிசியாக உள்ளார். அவர் தமிழுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே விஷால், அக்ஷ்ராவின் அக்கா ஸ்ருதி ஹாசனுடன் பூஜை படத்தில் இணைந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அப்புறம் இன்னொரு முக்கிய சமாச்சாரம்... முதல் பாகத்தில் கலக்கிய மீரா ஜாஸ்மினும் படத்தில் இருக்கிறாராம்.. நாயகியாக அல்ல.. முக்கிய கேரக்டரில் வருகிறாராம்.!

அப்ப ராஜ்கிரண்...?

 

இதோ இன்னும் ஒரு பேய்ப் படம்.. பார்த்துப் பயந்து போங்க!

சென்னை: சாட்டை, கீரிப் புள்ள படங்களில் நடித்த யுவன், மற்றும் பசங்க கோலிசோடா படங்களில் நடித்த ஸ்ரீராம் இருவரும் நடித்து வெளிவந்திருக்கும் கமர் கட்டு ஒரு பேய்படம்.

பேய் வேற யாருமில்ல இந்த ரெண்டு பேரும்தான்.

இயக்குனர் ராம்.ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கற இந்தப் படம் ரொம்ப நாளா இதோ அதோன்னு சொல்லி ஒரு வழியா ரிலீஸ் ஆகிடுச்சி.

Kamarkattu movie review

சேத்தன் அங்காடித்தெரு சிந்து, தளபதி தினேஷ், பக்கோடா பாண்டி இவங்களோட சேர்ந்து நாயகியா நடிச்சிருக்காங்க ரஷ்ரா ராஜ், மனிஷா ஜித்.

யுவனும்,ஸ்ரீராமும் நல்லாப் படிக்கிற பசங்க அதாவது மாநிலத்திலேயே மொதல் மார்க் வாங்கற அளவுக்கு. தங்களோட காதலிங்க ரஷ்ரா, மனிஷா நிறைய மார்க் வாங்கணும் அப்படின்னு இவங்க ரெண்டு பெரும் ரெண்டு எக்ஸாம எழுதாம தியாகம் பண்றாங்க..

இவங்க காதலிங்க ரெண்டு பேரும் காலேஜ் போனவுடனே காதலன மாத்திடறாங்க..காரணம் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றது பணக்கார பசங்கள.. இது எப்படி இருக்கு

தங்களோட காதலிங்க மாறினத தாங்க முடியாத ரெண்டு பேரும் அவங்க அம்மாகிட்ட போய் சொல்ல அவங்க அம்மா பொண்ணுங்களோட லவர்ஸ்கிட்ட சொல்லி ரெண்டு பேரையும் போட்டு தள்ளிடறாங்க.

செத்துப் போன ரெண்டு பேரும் சிவனோட மகிமையால ஆவிங்களா மாறி தங்களைத் தீர்த்துக் கட்டுனவனங்கள விட்டுட்டு மத்தவங்கள எல்லாம் பழி வாங்குறாங்க..என்ன லாஜிக் இது.

நெறைய இடத்துல எடிட் பண்ணவங்க கத்திரி போட மறந்துட்டாங்க போல..முடியல. படத்த எடுத்த இயக்குனர் நல்லா தான் யோசிச்சு எடுத்திருக்காரு ஆனா படம் பாக்க முடியல பாஸ்!

சார் ப்ளீஸ் கொஞ்சம் கேட்ட திறந்து விட்டா நாங்க அப்படியே சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போயிருவோம்....இது தியேட்டருக்கு தெரியாமல் வந்து விட்ட ரசிகர்களின் ஓபன் வாய்ஸ்!

 

சூப்பர் கேன்ஸ்.. ஜொலித்த ஐஸ்...!

மும்பை: கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அணிந்திருந்த உடைகளால் அங்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஒரு சேரக் கவர்ந்து விட்டார்.

ஆமாம் உலகளவில் ஆஸ்காருக்கு அடுத்து மிகவும் பிரபலமானது கேன்ஸ் திரைப்பட விழா. எத்தனையோ பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டாலும் அழகு, உடை என இரு விசயத்திலும் ஐஸ்வர்யாவை மிஞ்ச ஆள் இல்லை என்பது மீண்டும் உண்மையாகி விட்டது.

Cannes 2015: Aishwarya Rai Bachchan is simply fabulous in Ralph & Russo couture

முதல் நாள் ரெட் கார்பெட்டில் பச்சை நிற உடையணிந்து வந்த ஐஸ்,இரண்டாம் நாள் வெள்ளை நிறத்தில் கவுன் போன்ற உடையணிந்து ரெட் கார்பெட்டில் நடந்து வர அனைத்து கேமிராக்களும் அவரை நோக்கியே மின்னின.

எத்தனை வயசானாலும் ஏன் குழந்தை பெற்ற பின்னும் அவரின் அழகு துளி கூட குறையவில்லையே என அவரைப் பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் பிரம்மித்து நின்றது உண்மையே.

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்களை விட்டு போகலையே..!

 

சல்மானுடன் மோதும் ஜான் ஆப்ரகாம்!

மும்பை: பிரிக்க முடியாதது சல்மானையும் பிரச்சினைகளையும் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு தினசரி சல்மானைப் பற்றிய பிரச்சினைகள் செய்திகளாக வெளி வருகின்றன.

புதிது புதிதாக கிளம்பும் பிரச்சினைகளை எப்படித்தான் சமாளிக்கிறாரோ கடவுளுக்கே வெளிச்சம். சரி சரி விஷயத்துக்கு வரலாம். ரம்ஜான் அன்று சல்மான் நடித்த பஜ்ரங்கி திரைப்படம் ஜான் ஆபிரகாமின் வெல்கம் பேக் படத்துடன் மோதுகிறது.

Welcome back clashes with Bajrangi

நானா படேகர், சுருதி ஹாசன், அனில் கபூர் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெல்கம் பேக் படம் உருவாக்கி இருக்கிறது. பஜ்ரங்கி படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து இருக்கிறார்.

இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் இருவரும் படங்களின் மூலம் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடித்துக் கொள்வது இருவருக்கும் புதிதல்ல. ஏற்கனவே ஒரு பட டைட்டிலுக்காக மோதிக் கொண்டவர்கள் தானே இருவரும்.

நமக்கு என்ன பிரச்சினை ரம்ஜான் வந்தால் தெரிந்து விடப் போகிறது...!