அந்தக் கார் போனா என்ன வேற கார் வாங்குவோம்ல- நஸ்ரியா

திருவனந்தபுரம்: கடந்த வாரம் கணவர் வாங்கிக் கொடுத்த காரை எடுத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்ற நஸ்ரியா, திரும்பி வரும் போது அவரது காரை சக மனிதர் ஒருவரின் கார் லேசாக உரசிவிட்டது. இந்த உரசலில் லேசாக நஸ்ரியாவின் காரின் பெய்ண்ட் உதிர்ந்து விட்டது.

அவ்வளவு தான் வந்ததே கோபம் நஸ்ரியாவுக்கு. நடுரோடேன்றும் பார்க்காமல் காரிலிருந்து இறங்கி நஸ்ரியா போட்ட சண்டையில் அந்த மனிதர் ஆடிப் போக, கடைசியில் போலீஸ் வந்து சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் நஸ்ரியாவை.

Nazriya Nazim Bought New Benz Car

இந்த சண்டையை ரசித்த ரசிகர்கள் அதனை இணையதளங்களில் ஷேர் செய்ய, நஸ்ரியாவின் சண்டையால் வைரலானது இணையம். என்னதான் லேசாக பெய்ண்ட் மட்டுமே உதிர்ந்தாலும் நஸ்ரியா சமாதானமாக வில்லையாம், நஸ்ரியாவை மீண்டும் இயல்புக்கு மாற்றுவதற்காக கணவர் பகத் பாசில் அந்தக் காரை விற்றுவிட்டு தற்போது ஒரு புதிய பென்ஸ் காரை வாங்கிக் கொடுத்திருக்கிராறாம்.

1 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தக் காரை விற்றுவிட்டு நஸ்ரியா தற்போது வாங்கியிருக்கும் புதிய காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 30 லட்சம்.

 

7 வது முறையாக இணையும் சைப் அலிகான்- கரீனா கபூர்

மும்பை: பாலிவுட்டின் ஹாட் ஜோடியான சைப் அலிகான்- கரீனா கபூர் ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

2012 ம் ஆண்டில் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்ட கரீனா தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Saif Ali Khan and Kareena Kapoor To Sign Their 7th Film Together

இந்நிலையில் சைப் அலிகானின் அடுத்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் கரீனா. இவர்கள் இருவரும் இணையும் 7 வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா தற்போது சல்மானுடன் பஜ்ரங்கி பைஜான், ஷாஹித் கபூருடன் உட்டா பஞ்சாப், அர்ஜுன் கபூர் ஜோடியாக ஒரு படம் இதைத்தவிர ராஜ்குமார் குப்தாவின் படம் என மொத்தம் நான்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சைப் அலிகான் தற்போது நடித்து வரும் ரங்கூன் படத்தை ஏறக்குறைய முடித்து விட்டார். எனவே சைப் அலிகான் தனது அடுத்த படத்தில் மனைவியான கரீனா கபூருடன் டூயட் பாடவிருக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் படத்தை இயக்கவிருப்பவர் இந்தியின் பிரபல இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானி.

 

கேரவனுக்குள் "செல்பி"... கிளிக்கிய நயன்- விக்னேஷ்!

சென்னை: காதல் இல்லை இல்லவே இல்லை என்று என்னதான் தொடர்ந்து மறுத்து வந்தாலும் வெளிவருகின்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால், கல்யாணம் முடிந்தது என்ற தகவல் உண்மைதானோ என்று நினைக்க வைக்கிறது.

கோடம்பாக்கத்தின் தற்போதைய அதிகபட்ச கவனத்தை பெற்றிருக்கிறார்கள் நயனும்- சிவனும் என்ன புரியலையா நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தான் அந்த ஜோடி. நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போதே இருவரும் காதலிக்கிறார்கள், ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று வெளிவந்த செய்திகளை தொடர்ந்து காட்டமாக மறுத்து வந்தார் நயன்தாரா.

Nayanthara- vignesh sivan  Selfie

ஆனால் படப்பிடிப்பின் கடைசி நாளில் இருவரும் இணைந்து நெருக்கமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தனர். இந்தப் புகைப்படம் அனைவரும் பார்க்கப்படும் வகையில் சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்யப்பட்டு இணையத்தில் வைரல் ஆகும் அளவுக்கு ஷேர் செய்யப்பட்டது.

தற்பொழுது வெளியான புகைப்படங்களைப் பார்த்தால், இருவரும் காதலிக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் இருவரும் கேரவனுக்குள் நெருக்கமாக நின்று செல்பி எடுத்துள்ளனர். தற்போது இணையத்தை வைரல் ஆக்கிக் கொண்டிருக்கின்றன இந்தப் புகைப்படங்கள்.

 

"தல 56" ஆடியோ ரைட்ஸ்... கோடிகளைக் கொட்டி வாங்கியது சோனி நிறுவனம்!

சென்னை: மீண்டும் ஒருமுறை அஜித்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது இந்த நிகழ்ச்சி. தல 56 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

படப்பிடிப்பில் இருக்கும்போதே படத்தின் ஆடியோ ரைட்ஸை பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளது சோனி நிறுவனம். சோனியின் இந்த செயல் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஏற்கனவே அஜித்தின் பில்லா-2, ஆரம்பம் மற்றும் என்னை அறிந்தால் படத்தின் பாடல்களை வாங்கிய சோனி நிறுவனம் தற்போது நான்காவது முறையாக அஜித்தின் தல 56 படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளது.

முன்னர் அஜித்தின் பில்லா 2 மற்றும் ஆரம்பம் படங்களுக்கு யுவன் இசையமைத்து இருந்தார், என்னை அறிந்தால் படத்தின் பாடல்கள் ஹாரிஸ் இசையமைப்பில் வெளிவந்தன. இந்தப் படத்தில் முதன்முறையாக அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் மற்றும் அஜித் இந்தப் படத்தில் முதல்முறையாக இணைகிறார்கள், அதனால் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பும் படம் தீபாவளி வெளியீடாக வருவதும் தான் சோனி இவ்வளவு விலைகொடுத்து இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கக் காரணமாம்.

 

யூ சான்றிதழுடன் வெளிவரும் ருத்ரம்மா தேவி

ஹைதராபாத்: அனுஷ்காவின் நடிப்பில் ஜூன் 26 ம் தேதி திரைக்கு வர இருக்கும் ருத்ரம்மா தேவி படம் சென்சாரில் ஒரு கட் கூட விழாமல் யூ சர்டிபிகேட் வாங்கியுள்ளது. தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர் தயாரித்து இயக்கியிருக்கும் ருத்ரம்மாதேவி திரைப்படத்தில் ராணியாக நடிகை அனுஷ்கா நடித்திருக்கிறார்.

Anushka’s Rudramadevi Get U certificate

அனுஷ்காவுடன் நடிகைகள் நித்யாமேனன் , கேதரின் தெரசா, பிரகாஷ்ராஜ்,ராணா மற்றும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகிய நட்சத்திரங்கள் நடித்து வெளிவர இருக்கும் ருத்ரம்மா தேவி படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது.

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் ஸ்டிரியோகிராஃபிக் 3டி திரைப்படம் இதுவே. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு இசை இளையராஜா மற்றும் கலைதோட்டாதரணி தமிழில் ருத்ரம்மா தேவியை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.ருத்ரம்மா தேவியின் டிரைலர் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது, ரசிகர்கள் ஆர்வத்துடன் டிரைலரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

 

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கட்டுப்படவேண்டும், இல்லாவிட்டால்..! - டி.சிவா எச்சரிக்கை

விளம்பரக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்படவேண்டும் என்று தாக்க தாக்க படவிழாவில் டி.சிவா பேசினார்.

விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் 'தாக்க தாக்க'. ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தைக் கலைப்புலி இண்டர்நேஷனல் உலகெங்கும் வெளியிடுகிறது.

T Siva warns Producers to oblige council rules

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர் செல்வராகவன் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, "விக்ராந்தை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவரது திறமைக்கு போகவேண்டிய தூரம் அடைய வேண்டிய வெற்றிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. இப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் வெளியிடுகிறார். அவர் தயாரித்த 'காக்க காக்க' படத்தைப் போல இந்த தாக்க தாக்கவும் பெரிய வெற்றி பெறும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் அனைவரும் பயன்பெறும் வகையில் விளம்பரச் செலவுகளில் சில மாற்றங்கள் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் சிலர் அதை மதிக்காமல் இருக்கிறார்கள். இது சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் கொண்டு வரப்பட்டுள்ளது.. தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். இன்று 'காக்கா முட்டை' பத்து கோடி வசூல் செய்துள்ளது. அளவுக்கதிமாக விளம்பரம் செய்தா இந்த வெற்றி கிடைத்தது? படத்தில் விஷயம் இருந்தால் வெற்றி பெறும்.

ஆனால் இதை மீறி சில தயாரிப்பாளர்கள் நடக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால் ரொம்ப நாளாக அன்பாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. விளம்பரக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்படவேண்டும். இல்லாவிட்டால் கட்டுப்படுத்த வேண்டி இருக்கும். 'தாக்க தாக்க படத்தின் மூலம் இந்த சகோதரர்கள் சஞ்சீவ், விக்ராந்த் இருவரும் வெற்றிபெற வேண்டும்,'' என்றார்.

கலைப்புலி தாணு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, "நேரமே கிடைக்காத என் சூழலிலும் ஒரு நாள் இரவில் 'தாக்க தாக்க' படத்தைப் பார்த்தேன். இதை ஒரு கமர்ஷியல் கவிதையாக எடுத்து இருக்கிறார்கள். இயக்குநருக்கு நல்ல இயக்குநராகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன. அதற்கு கட்டியம் கூறுகிற மாதிரி இப்படம் இருக்கும். எதிர் காலத்தில் இவர் எங்கள் நிறுவனத்தில் படம் இயக்குவார்.

விக்ராந்த்திடம் வைரம் பாய்ந்த திறமை இருக்கிறது அது அவரது முகத்தில் தெரிகிறது. அவருக்கு ஒரு நல்ல வருங்காலம் வரும். விக்ராந்தின் நண்பர்கள் விஷால், ஆர்யா, விஷ்ணு மூவரும் இந்தப் படத்தில் நடித்து உதவியிருப்பது எதிர்கால சினிமாவை செழிக்க வழிவகுக்கும்," என்றார்.

செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் பேசும் போது, " கலைப்புலி தாணு அவர்கள் வெளியிடுகிறார் என்கிற போதே இது ஒரு பிராமிஸிங் படம், நம்பிக்கைக்குரிய படம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்," என்றார்.

இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், பி.எல்.தேனப்பன்.நடிகர்கள் அதர்வா, விக்ராந்த், அருள்தாஸ், 'டிரம்ஸ்' சிவமணி, தயாரிப்பாளர் தாரா அருள்ராஜ் ஆகியோரும் பேசினார்கள். இறுதியாக இயக்குநர் சஞ்சீவ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

ஜுராசிக் வேர்ல்ட்... உலகெங்கும் கலக்கல் வசூல்!

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்கள் என்றாலே ஒரு பிரமாண்டம் படங்களின் காட்சிகளில் இருக்கும், காட்சிகளில் மட்டுமல்ல வசூலிலும் பிரமாண்டத்தைக் குவிக்கும் திறமை ஹாலிவுட் படங்களுக்கே உள்ள ஒரு பொதுவான அம்சம்.

நேற்று வெளியாகியுள்ள ஜூராசிக் வேர்ல்ட் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. சுமார் 150 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியான இரண்டு தினங்களுக்குள்ளேயே வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா...117 மில்லியன் டாலர்கள். இதே வேகத்தில் சென்றால் மொத்தப் படத்தின் பட்ஜெட்டையும் இன்னும் இரண்டு தினங்களுக்குள் தாண்டி விடும்.

“Jurassic world “2 days collection 117 million dollars

பேய் ஓட்டம், பிசாசு ஓட்டமாக ஓடி வரும் இந்தப் படத்தின் வசூலைப் பார்த்து இன்னும் ஏகப்பட்ட டைனோசர்களை தப்பிக்க விடுவார்கள் போல. படத்தின் கதை, பூங்காவில் இருந்து மனிதனுக்கு எதிரான டைனோசர் தப்பித்து விட, அதனை வழக்கம் போல நம்ம ஹாலிவுட் ஆசாமிகள் எப்படி அடக்குகிறார்கள் என்பதுதான்.

 

இனிமே இப்படித்தான் இன்று ரிலீஸ்.. சந்தானத்துக்கு குவியும் வாழ்த்து!

சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படம் இன்று உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப் பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் இனிமே இப்படித்தான்.

Santhanam's Inimey Ippadithaan released today

இந்தப் படம் இன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 235-க்கும் அதிகமான அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.

சந்தானத்தைப் பொறுத்தவரை, அவர் நாயகனாக நடித்த படங்களில் அதிக அரங்குகளில் வெளியாகும் படம் இதுதான்.

எனவே சக நடிகர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் உதயநிதி, ஆர்யா, விவேக், இயக்குநர் ராஜேஷ் எம், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சந்தானத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் உதயநிதி, "ஆல் தி பெஸ்ட் முதலாளி" என சந்தானத்தை வாழ்த்த, பதிலுக்கு "நன்றி முதலாளி" என கூறியுள்ளார் சந்தானம்.

அதேபோல ஆர்யாவின் வாழ்த்துக்கு 'நண்பேன்டா' என பதிலளித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சந்தானம், "உங்கள் வாழ்த்து விசேஷமானது சார்.. மிகப் பெரியது" என்று கூறியுள்ளார்.

 

இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா? -நடிகர் சிவகுமார்

16 வயதில் குக்கிராமத்து இளைஞன், பட்டணம் பிரவேசம்.

1958 ஜூன் முதல் 1964 வரை கல்விக் கடன் தந்து வாழ்க்கையில் கரையேற்றிவிட்ட மாமனிதர், பொள்ளாச்சியில் சென்ட்ரல் லாட்ஜ் என்ற அசைவ உணவு விடுதி நடத்தி வந்த என் ஒன்றுவிட்ட மாமா ஆறுமுகக் கவுண்டர்.

Sivakumar remembers his college days in FB

மாதம் ரூ.85-க்கு மணியார்டர் வரும். தபால்காரருக்கு 1 ரூபாய் அன்பளிப்பு. மவுண்ட் ரோடு புகாரியில் அரைபிளேட் பிரியாணி 14 அணா (88 பைசா). டபுள் ஆம்லட் 50 பைசா. மனமும் வயிறும் நிறைந்த பிறகு மீதி ரூ. 82.50/-க்கு பட்ஜெட் போடுவேன்.

காலை சிற்றுண்டி எழும்பூர் பாந்தியன் கபேயில் ரூ.15/- முன்பணம் கட்டி சாப்பிட்ட ஒரே நபர் நான்தான். பூபதி கபே பகல் உணவு 30 கூபன் ரூ.14

இரவு உணவு மவுண்ட் ரோடு கீதா கபே மாதம் ரூ.14. விருந்தாளி வந்தால் ஒரு கூபன் காலி. மறுநாள் இரவு நீர்தான் ஆகாரம். வீட்டு வாடகை ரூ.15.

ஓவிய உபகரணங்கள் ரூ.15. மாதம் 4 சினிமா பார்க்க ரூ 3.50 பைசா. 84 பைசா டிக்கட் இன்று கிடைக்காவிட்டால் நாளை அரை மணி முன்னால் போய் க்யூவில்.

துவைத்த துணிகளுக்கு இஸ்திரி போட மாதம் ரூ.5. சலூன் செலவு 75 பைசா.. திருப்பதி சென்று, 7 நாள் கோயில் வாசலில், கும்பலோடு படுத்துறங்கி, குழாய் நீரை கை பம்ப்பில் அடித்து குளித்து, நேரு கபே தண்ணிச் சாம்பாரில் இட்லியை அமுக்கிச் சாப்பிட்டு ஏழுமலையான் கோயிலைச் சுற்றிய இயற்கை எழிலை ஓவியமாகத் தீட்ட பஸ் கட்டணமும் சேர்த்து ரூ.35.

இப்படி தர்மச் சத்திரங்கள், குறைந்த வாடகை ரூ. 1.50 முதல் அதிகபட்சம் ரூ.4 ஓட்டலுக்குக் கொடுத்து திருச்சி, தஞ்சை, மதுரை, கன்யாகுமரி, குற்றாலம், பாண்டி- இப்படி விடுமுறை நாட்களில் ஓவியங்கள் தீட்டச் செல்வேன்.

மகாபலிபுரம் சைக்கிளில். ஊர் கணக்குப் பிள்ளை வீட்டு வெளித்திண்ணையில் படுத்து, தெருக் குழாயில் குளித்து, மாமல்லபுரம் கபேயில் சிற்றுண்டி முடித்து 5 ரத ஓவியம், கடற்கரை கோவில்,புது லைட்ஹவுஸ் என வரைந்து முடித்து, அடைமழையில் நனைந்தவாறு 30 கி.மீ. சைக்கிள் சவாரி செய்து திருக்கழுக்குன்றம் சென்று, ஓவியங்கள் தீட்டிக் கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு 30 கி.மீ, சென்னை அங்கிருந்து 42 கி.மீ.

வண்டலூர் லேலண்ட் கம்பெனி, ஆயுத பூஜைக்கு கடலை, பொரி, சில்லு தேங்காய் கொடுத்ததை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொரித்தவாறு பயணித்த நாட்களை, இறைவா இன்னொரு முறை தரமாட்டாயா?

- நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து...

 

அட அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா.. விஜய் - அமலா முதலாவது திருமண நாள் இன்று!

இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் இப்போதுதான் திருமணம் நடந்த மாதிரி இருக்கிறது. ஆனால் அதற்குள் ஒரு ஆண்டு முடிந்து... இதோ இன்று முதல் திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் காதலித்த விஜய் -அமலா இருவருக்கும் கடந்த ஜூன் 12-ம் தேதி திருமணம் நடந்தது.

Director Vijay - Amala celebrates 1st wedding anniversary

திருமணத்துக்குப் பிறகு சைவம் படத்தை இயக்கி, தயாரித்து வெளியிட்டார் விஜய். அந்தப் படம் ஓரளவு நன்றாகவே ஓடியது. தேசிய விருது கூட வென்றது. இப்போது இது என்ன மாயம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அமலா பாலும் திருமணத்துக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி பெற்ற வெற்றி, அவரை தொடர்ந்து படங்களில் நடிக்கத் தூண்டியது. இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக ஹைக்கூ படத்தில் நடித்துள்ளார்.

இன்று தங்களின் முதல் திருமண நாளை கேரளாவில் உள்ள குமரகத்தில் தனி படகு வீட்டில் நண்பர்கள் - உறவினர்களுடன் கொண்டாடுகின்றனர் விஜய்யும் அமலாவும்!

 

பாகுபலி சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் 4 மாதங்களானது! - இயக்குநர் ராஜமௌலி

ஹைதராபாத்: ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே உலக அளவில் கவனம் ஈர்க்க முடியுமா? ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே அது சாத்தியம் தென்னிந்தியப் படங்களால் அதெல்லாம் முடியாது என்ற வழக்கத்தை பாகுபலி மூலம் உடைத்துள்ளார் ராஜமவுலி.

கமர்ஷியலின் சினிமாதான் இவர்களுக்குத் தெரியும் என்று தெலுங்கு சினிமா மீது விழுந்த முத்திரையை மாற்றி, இந்த சரித்திரப் படம் மூலம் வேறொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.

Baahubali’s War Scene's More Than 4 Months Shooting – S.S.Rajamouli

பாகுபலியின் எத்தனை பிரமாண்டமானது தெரியுமா? இதோ, இயக்குநர் ராஜமவுலியின் வார்த்தைகளில்...

"படிக்கும் போதே வரலாற்று கதைகளின் மேல் ஆசை அதிகம், ஆனால் இயக்குனரான உடனேயே சரித்திரக் கதைகளை எடுக்க முடியாது என்பதற்காக இத்தனை வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. இப்பொழுது பாகுபலியின் மூலம் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை படம் பிடிப்பதற்கு 4 மாதங்களை செலவிட்டுள்ளோம். 2000 பாடிபில்டர்களை வைத்து படம் பிடித்தது மறக்க முடியாத அனுபவம், படத்தின் ஹீரோ பிரபாஸ்தான் என்றாலும் அவருக்கு சரிசமமான வில்லனாக ராணாவுக்கும் படத்தில் முக்கியப் பங்குள்ளது."

 

ஜெயம் ரவியைக் காப்பாற்றுமா ரோமியோ ஜூலியட்?

நாயகனாக நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகி விட்டன, இதுவரை ஜெயம் ரவி நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே. அப்பா எடிட்டர், அண்ணன் இயக்குநர் என மொத்தக் குடும்பமுமே சினிமா பின்னணியில் இருந்தாலும் சமீப காலமாக தடுமாறி வருகிறார் ரவி.

Romeo Juliet Movie Released Today

கடைசியாக போன வருடம் நடித்து வெளிவந்த நிமிர்ந்து நில் படத்திற்குப் பின் இந்த வருடத்தின் பாதியில் இன்று வெளியாகி இருக்கிறது ரோமியோ ஜூலியட். தமிழின் முன்னணி நடிகையான ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படம், காதலை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டிருக்கிறது.

Romeo Juliet Movie Released Today

பழமையை விட்டு விலகாத ஒரு இளைஞனுக்கும், நவ நாகரிக பெண்ணுக்கும் இடையிலான காதலைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஏகப்பட்ட பிரச்சினைகளைக் கடந்து இன்று ஒருவழியாக வெளியாகி விட்டது.

Romeo Juliet Movie Released Today

துவண்டு கிடக்கும் ரவியின் மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்தும் என நம்பும் விதமாக சமூக வலைதளங்களில் படத்திற்கு நல்ல கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர் படத்தைப் பார்த்த ரசிகர்கள்...பார்க்கலாம்.

 

திருமணமான நடிகருடன் காதலில் கசிந்துருகும் ‘கௌரவமான’ நடிகை!

சென்னை: பிரபல இயக்குநரின் ‘கௌரவமான' படத்தில் அறிமுகமான நடிகை இவர். இந்தியில் இருந்து வந்த இவர், ஏற்கனவே விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தான்.

தமிழில் தொடர்ந்து சொல்லிக் கொள்ளும் படியான படங்கள் அமையாததால், அவர் மீண்டும் இந்திக்கே சென்றார். தற்போது அங்கு சில படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.

Bollywood : Actress loves co-star

இந்நிலையில், புதிய படமொன்றில் தன்னுடன் நடிக்கும் நடிகருடன் காதலில் விழுந்து விட்டாராம் இந்த இரண்டெழுத்து நாயகி. இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுகிறார்களாம், படப்பிடிப்பு முடிந்ததும் ஒன்றாகவே கிளம்பிச் செல்கிறார்களாம்.

இப்படம் தவிர தனது காதல் நாயகனுடன் மேலும் இரண்டு படத்தில் நடிக்க இருக்கிறாராம் இந்த நடிகை. எனவே, நிச்சயமாக இரண்டு பேருக்கும் இடையில் காதல் பூ மலர்ந்து விட்டது என படக்குழுவினர் உறுதி படக் கூறுகின்றனர்

ஆனால், நடிகை தற்போது சுற்றிச் சுற்றி வரும் அந்த நடிகர் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுடிதார், பட்டுப் புடவை வாங்கணுமா?... "ஐந்து சுந்தரி"யைக் கேளுங்க!

மலையாள நடிகை காவ்யா காவ்யா மாதவன் தனது சகோதரருடன் இணைந்து ஆன்லைனில் பிசினஸ் ஆரம்பித்துள்ளார். பட்டுப்புடவை, சுடிதார் என பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்வதற்காக லக்‌ஷய்.காம் என்ற இணையதள நிறுவனத்தையும் அவர் தொடங்கியுள்ளார்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன், 2013 ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியான "ஐந்து சுந்தரிகள்' படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. திருமணம் விவகாரத்து என சில காலம் ஒதுங்கியிருந்தார்.

Kavya Madhavan’s New Online Clothing Store Laksyah

இந்த நிலையில் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். கேரளாவில் பெண்களே இயக்கும் கால் டாக்ஸிகள் மிகவும் பிரபலம். இதை அடிப்படையாக வைத்து "ஷி டாக்ஸி' என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியிருக்கிறது. இதில் நடித்துள்ளார் காவ்யா மாதவன். இந்தப்படம் சுமாராகவே போனது.

ஆன்லைன் வர்த்தகம்

இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் இறங்கியுள்ளார். லக்‌ஷய்.காம் என்ற இணையதள நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.

ஆடைகள் விற்பனை

இதன் மூலம் பட்டுச் சேலைகள், சுரிதார்கள் உள்ளிட்ட பெண்களுக்கான உடைகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளார். இதன் தலைமை அலுவலகம் கொச்சியில் செயல்படும்.

சென்னை, பெங்களூருவில்

‘எனது சகோதரன் மிதுன் மாதவனுடன் இணைந்து ஆடை விற்பனை தொழிலில் இறங்கியுள்ளேன் என்று கூறியுள்ள காவ்யா மாதவன், சென்னை, பெங்களூருவிலும் கிளைகள் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.

சினிமாவிலும் பிஸி

காவ்யா மாதவன் தற்போது, "ஆகாஷ்வாணி' என்ற படத்திலும், ஜீத்து ஜோஸப்பின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார், தனது திரையுலக மறு பிரவேசமும் வெற்றிகரமாகவே அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் காவ்யா மாதவன்.

 

இளமைத் துடிப்போடு கலகலக்க வைக்கும் "ஜில் ஜங் ஜக்"!

சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் கேம்ஷோவிற்கு டிவிகளில் தனி வரவேற்பு உள்ளது. வேந்தர் டிவியும் இதே பாணியில் 'ஜில் ஜங் ஜக்' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

இளைஞர்களைக் கவரும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி திரை நட்சத்திரங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் தங்கள் அதிக திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கபப்ட்டுள்ளது.

Jil Jang Juck program on Vendhar TV

நிஷா, சித்ரா என இரண்டு அழகான தொகுப்பாளினிகள் தொகுத்து வழங்க, இரண்டு பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி கலகலப்பாக போகிறது

இது ஒரு கேம் ஷோ. பிரம்மாண்டமான அரங்கம்... அழகான தொகுப்பாளினிகள் நிஷா, சித்ராவின் வளவளா பேச்சு என போகிறது ஜில் ஜங் ஜக்... இது மூன்றும் மூன்று ரவுண்ட்.

Jil Jang Juck program on Vendhar TV

ஜில் ரவுண்டில் திரையில் காட்டப்படும் படக்காட்சியில் பெண் பாத்திரத்திற்கு ஆண் குரல் கொடுக்க வேண்டும்.

ஜங் சுற்றில் ஆண் பெண் வேடம் போடுவது, ஜக் சுற்றில் உண்மையான தொழிலாளி ஒருவரை அரங்கிற்கு அழைத்து அவருடைய வேலையை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலத்தை செய்யச் சொல்வது, என பலதரப்பட்ட நேயர்களையும் கவரும் விதத்தில், கலகலப்பு மற்றும் விறுவிறுப்போடு படு ஜாலியாக தயாரிக்கப்பட்டுள்ளது ஜில் ஜங் ஜக்.

நிஷாவும், சித்ராவும் இளமைத் துடிப்போடு தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கவலைகளை மறந்து அனைவரும் ரசிக்கும்படியான நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.

 

இதுல புகுந்து அதுக்குப் போக ஆசைப்படும் வாசமான நடிகை!

வம்பு நடிகரின் படத்தில் பணக்கார பெண்ணாக நடித்து ஒரு சிங்கிள் டீ குடிக்க 40 ஆயிரம் ரூபாய் செலவு வைத்தவர் மணக்கும் நடிகை. ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏன் சும்மா இருக்கணும் தங்கை கதபாத்திரத்திலாவது நடிக்கலாம் என்று காத்திருந்தார். ஆனால் யாரும் கூப்பிடுவதாக தெரியவில்லை. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம். கிடைத்தது என்னவோ டிவி சீரியல் வாய்ப்புதான்.

தமிழ் டிவி சீரியல் வாய்ப்பு இல்லை, இந்தி டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே மறுக்காமல் ஒப்புக்கொண்டாராம். காரணம் டிவி சீரியலில் நுழைந்த கையோடு பாலிவுட் வாய்ப்பை பிடிக்கலாம் என்பதுதான் மணக்கும் நடிகையின் திட்டமாம்.

எல்லாரும் சின்னமீனை போட்டு பெரியமீனை பிடிப்பார்கள். ஆனால் மணக்கும் நடிகையோ சின்னத்திரைக்குள் புகுந்து பெரிய திரையில் நுழைய திட்டம் போட்டுள்ளார். மணக்கும் நடிகை பாலிவுட்டில் வாசம் வீசுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

ஃபெட்னாவுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்பாராஜ்!

சான் ஓசே(யு.எஸ்): குறும்படங்கள் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான இளைய தலைமுறை வெற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை (ஃபெட்னா)யின் குறும்பட விழாவில் வெற்றி பெறும் படங்களை தனது Benchflix நிறுவனம் மூலம் வெளியிட உள்ளார்.

ஆண்டு தோறும் அமெரிக்காவில் தமிழ் விழாவை நடத்தி வரும் ஃபெட்னா கடந்த ஆண்டு முதல் குறும்படப் போட்டியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் சான் ஓசே நகரில் நடைபெறும் தமிழ் விழாவையொட்டி நடைபெறும் குறும்படப் போட்டியில் கார்த்திக் சுப்பராஜ் நடுவராக இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்ய உள்ளார்.

Karthik Subbaraj join hands with Fetna

யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், குறும்படங்கள் மூலமாகவே வாய்ப்புகளைப் பெற்று ‘பிட்சா' படத்தின் மூலம் இயக்குநரானர். ஜிகர்தண்டாவின் வெற்றி கார்த்திக் சுப்பராஜை முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உயர்த்தியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரிடம் கதை கேட்கும் அளவுக்கு புகழ் பெற்றார். திரைப்பட இயக்குநராக வெற்றி பெற்ற போதும் தான் கடந்து வந்த குறும்படப் பாதையை மறக்காமல், ஆறு குறும்படங்களை இணைத்து தியேட்டரில் வெளியிட்டு புதிய முயற்சியையும் செய்தார். அந்தப் படங்கள் பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் புதிய முயற்சிக்காக பாராட்டுகள் பெற்றார்.

தனது Benchflix நிறுவனம் மூலம் இந்த முயற்சிகளை தொடரப் போவதாகவும் தெரிவித்தார். இந் நிலையில் ஃபெட்னா விழாவில் இடம்பெறும் குறும்படங்களை தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ளார். வெற்றி பெரும் படங்களை Benchflix நிறுவனம் மூலம் வெளியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் நிறுவனம் முலம் பெரிய திரையிலும் வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், ஃபெட்னா குறும்படப் போட்டியில் வெற்றிப் பெறப்போகும் படங்கள் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

 

'டார்லிங்' ஜிவி பிரகாஷுக்கு இன்று பிறந்த நாள்!

சென்னை: தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு இன்று 27 வது பிறந்த தினம்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

G.V.Prakash Turns 27

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் என்பது பலரும் அறிந்ததுதான். 2006 ம் ஆண்டில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜி.வி.பிரகாஷ் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

இசையமைப்பாளர் தவிர்த்து பாடகர், தயாரிப்பாளர் என்று வளர்ந்து தற்போது நடிகராகவும் மாறிவிட்டார்.

ஜென்டில்மேன் படத்தின் மூலம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஜென்டில்மேன் படத்தின் மூலம் ஒரு பாடகராக திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் ஜிவி.

இசையமைப்பாளராக மாற்றிய வெயில்

தரமான படங்கள் தரும் இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் முதன்முதலில் இசையமைப்பாளராக மாறினார்.

குறுகிய காலங்களில் 50 படங்கள்

சினிமாவிற்கு வந்து இந்தப் 10 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களை முடித்து விட்டார்.

பின்னணிப் பாடகராக

பின்னணிப் பாடகராக இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடி இருக்கிறார்.

தயாரிப்பாளர்

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையில் காலடி பதித்தவர்.

இளம் நடிகராக

பென்சில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் பென்சில் படத்திற்கு முன்பு இவரின் நடிப்பில் டார்லிங் படம் வெளிவந்து வெற்றிப் படமாகிவிட்டது.

சைந்தவி வாழ்க்கைத் துணைவி

சிறு வயதில் இருந்து ஜி.வி.பிரகாஷின் தோழி மற்றும் தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகியான சைந்தவியை பல ஆண்டுகளாகக் காதலித்து கடந்த 2013 ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

6 முறை பிலிம்பேர் விருதையும், சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகளை இரண்டு முறையும் ( ஆடுகளம், நீர்ப்பறவை) பெற்றுள்ளார். இதைத் தவிர ஏராளமான தொலைக்காட்சி மற்றும் மிர்ச்சி தென்னிந்திய விருதுகளையும் பெற்றுள்ளார் ஜிவி பிரகாஷ்.