கிசு கிசு - சீனியர் ஹீரோயின்கள் புது திட்டம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது..
நல்ல காலம் பொறக்குது..

டோலிவுட்டில் டாப்பாக இருந்த இலி நடிகை கோலிவுட், பாலிவுட்னு ரூட் மாறினாரு. இதுக்கிடையில டோலிவுட்ல மத்த ஹீரோயின்கள் கை ஓங்கியது. இப்போ திரும்ப இலி நடிகை டோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறாரு. ஆனா எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லையாம். ரொம்பவே போராடி 2 படங்கள் கிடைச்சிருக்காம்.. கிடைச்சிருக்காம்.. அதுல ஒரு படம் ஹிட்டானா பழைய மவுசு வரலாம்னு சொல்றாங்களாம்.. சொல்றாங்களாம்..

சீனியர் நடிகைங்க இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க பிரியப்படுறாங்களாம்.. பிரியப்படுறாங்களாம்..  ஒரு எழுத்து பட ஜி ஹீரோவோடு ஜோடி சேர மூணுஷாவுக்கு வாய்ப்பு வந்துச்சாம். உடனே ஓ.கே. சொல்லிட்டாராம்.. சொல்லிட்டாராம்.. இந்த மாதிரி இளம் ஹீரோவோடு ஜோடி சேர தூது விட்டாவது சான்ஸ் பிடிக்க சீனியர் ஹீரோயினுங்க முடிவு பண்ணிட்டாங்களாம்.. பண்ணிட்டாங்களாம்.. கோலிவுட்லேருந்து சாண்டல்வுட்ல செட்டிலான ரமேஷரவிந்தான ஹீரோவுக்கு போராட்ட காலமாம்.. காலமாம்.. நீண்ட காலமா எந்த படமும் ரிலீஸாகாத நிலையில புதுபட ரிலீஸுக்கு தயாராகிட்டிருக்காராம். வழக்கமா பட புரமோஷனுக்கு சிட்டியில சுத்திவருவாங்க. இவரு கிராமங்களுக்கு போய் புரமோட் பண்ண முடிவு பண்ணியிருக்காராம். இந்த படம் கைகொடுத்தா சான்டல்வுட். கைவிட்டா கோலிவுட்னு தாவுற திட்டத்துல இருக்காராம்.. இருக்காராம்..


 

கார்த்தி படத்தில் இருந்து வெளியேறினார் மேக்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து வெளியேறினார் மேக்னா. சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, நிகிதா, மேக்னா, சனுஷா என 4 ஹீரோயின்கள் ஜோடி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த மேக்னா திடீரென்று நடிக்க மறுத்து விலகினார்.  இது பற்றி அவர் கூறியது: சுராஜ் இயக்கும் படத்திலிருந்து விலகியது உண்மைதான். இப்படத்தில் எனக்கு தரப்பட்ட வேடம் திருப்தியாக இல்லை. இயக்குனர் எனக்கு நல்ல நண்பர். என் கருத்தை சொல்ல வாய்ப்பு தந்தார். விலக விரும்புவதாக தெரிவித்தபோது அந்த முடிவை ஏற்றுக்கொண்டார். எனது உணர்வை புரிந்துகொண்டார். மற்றொரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்றார். இப்போதைக்கு மலையாள படங்களில் நடிக்கிறேன். தமிழில் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன். சில இயக்குனர்களுடன் பேச்சு நடக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் ஒப்புக்கொள்வேன். இவ்வாறு மேக்னா கூறினார்.


 

வெளியாட்களை வேலைக்கு வைத்தால் படப்பிடிப்புகள் முடங்கும் : பெப்சி எச்சரிக்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளியாட்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தினால் படப்பிடிப்புகள் முடங்கும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) எச்சரித்துள்ளது. தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. 3 ஆண்டுக்கு ஒருமுறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம். இம்முறை அதுபற்றி முடிவு செய்யவில்லை. இதையடுத்து பெப்சி தாங்களாகவே புதிய சம்பளம் நிர்ணயித்து அதன்படி வேலை செய்ய முடிவெடுத்தது. அதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதுபற்றி ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 'பெப்சி தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. வழக்கமாக இரு சங்கமும் பேசி உடன்பாட்டு செய்த பிறகுதான் அது அமலுக்கு வரும். தன்னிச்சையாக நடந்துகொண்டது ஒப்பந்தம் மீறிய செயல். இனி எங்கள் சங்கத்துக்கும், பெப்சிக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்க தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம். இதற்கு உடன்பட்டு வருபவர்களுக்கு எங்கள் குழு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும். இதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் ஒத்துழைப்பு தராதுÕ என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து பெப்சி அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனி நூறு அடி சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் எம்.ஏ.ராமதுரை தலைமை தாங்கினார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியது: புதிய சம்பள ஒப்பந்தத்தை நிர்ணயிக்காமல் தயாரிப்பாளர் சங்கம் காலதாமதம் செய்ததால் பெப்சியே புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்தது. அதை ஏற்று பல தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்கிறோம். இந்நிலையில் வெளியாட்களை வைத்து வேலை செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. வெளியாட்கள் வேலை செய்ய வந்தால் எங்கள் சங்கத்தை சேர்ந்த யாரும் வேலை செய்ய மாட்டார்கள். இதுதவிர பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களில் ஒரு சங்கத்தை ஒதுக்கினால் கூட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா உள்பட எல்லா மாநிலங்களிலும் உள்ள பெப்சி அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், தமிழ் பட ஷூட்டிங்கிற்கு பணியாற்ற அழைத்தால் வேலை செய்யக்கூடாது என்று கூறியுள்ளோம். இந்த நிலை நீடித்தால் படப்பிடிப்புகள் முடங்கும். இவ¢வாறு அவர்கள் கூறினர். திரைப்பட்ட தொழிலாளர்கள்-தயாரிப்பாளர்கள் மோதலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 

காதல் சொதப்பல் கைவந்த கலை : சித்தார்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சிறுவயது முதல் இன்றுவரை கணக்கில்லா காதலிகளிடம் சொதப்பி இருக்கிறேன்' என்றார் சித்தார்த். சித்தார்த், அமலா பால் நடிக்கும் படம் 'காதலில் சொதப்புவது எப்படி?' இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந் தது. அப்போது சித்தார்த் கூறியதாவது:  யூ டியூபில் குறும்படங்களை பார்த்தபோது பாலாஜி மோகன் இயக்கிய படம் என்னை கவர்ந்தது. அவரை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான்தான் நடிப்பேன். வேறு ஹீரோவிடம் இக்கதையை கொண்டு சென்றால் கொன்றுவிடுவேன் என்று உரிமையோடு சொன்னேன். 10 நிமிட படம் 2 மணி நேர கதையாக்க முடியும் என்பது இதில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்கள் காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதுதான் இதன் கதை.

காதலர் தினத்தில் படம் ரிலீஸ். நிஜவாழ்க்கையில் என்னைப்போல் காதலில் சொதப்பியது இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. பள்ளி பருவத்தில் இருந்தே இந்த சொதப்பலை தொடங்கிவிட்டேன். சமீபத்தில்கூட இப்படியொரு சொதப்பல் நடந்தது. ஷூட்டிங்கில் பங்கேற்றதால் கடந்த 4 மாதமாக 'சொதப்பலுக்கு' இடைவெளி விட்டிருக்கிறேன். எவ்வளவு முறை காதலில் சொதப்பினேன் என்பதை விரல்விட்டு எண்ண முடியாது. கணக்கில்லாமல் சொதப்பி இருக்கிறேன். 'தமிழில் அதிகம் நடிப்பதில்லையே?' என்கிறார்கள். தமிழில் யாரும் எனக்கு வாய்ப்பு தருவதில்லை. நான் நன்றாக தமிழ் பேசுவேன். எப்போதும் தெலுங்கு, இந்தியில்தான் பேசிக்கொண்டிருப்பேன். தமிழில் பேசவோ, நடிக்கவோ வாய்ப்பு கிடைத்தால் உடனே ஓடிவந்துவிடுவேன்.  இவ்வாறு சித்தார்த் கூறினார்.  பேட்டியின்போது தயாரிப்பாளர் சசிகாந்த், இயக்குனர் பாலாஜி மோகன் உடனிருந்தனர்.


 

கவுதம் மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோ ஆனார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம்மேனன் படத்தில் வாய்ப்பை தவறவிட்டதால் சிம்பு ஹீரோவானார் என்றார் ஜெய். இதுபற்றி அவர் கூறியதாவது: வளரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பது என் ஆசை. சவாலான கதைகள் வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள், ஹீரோக்கள் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். என்னுடைய ஹிட் படங்கள் பெரும்பாலும் புது இயக்குனர்கள் படங்கள்தான். இனிவரும் படங்களிலும் அதுபோன்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவேன். உதவி இயக்குனர்களின் விருப்பமான ஹீரோவாக நான் இருப்பதில் மகிழ்ச்சி. 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்குனர் கவுதம் மேனன் பார்த்து என்னை பாராட்டினார். இருவரும் விரைவில் இணைந்து படம் செய்வோம் என்றார். அதன்படி அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவா உதவியாளர் இயக்குகிறார். அதேநேரம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதற்காக எனது உடல்கட்டை ஏற்ற ஜிம் செல்கிறேன். இதுவொரு ஆக்ஷன் படம்.

திருநெல்வேலியில் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்தபோது கவுதம் மேனன் என்னை அழைத்தார். நேராக தனது அலுவலகத்துக்கு சென்று தான் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு கூறினார். வெளியூரில் இருந்ததால் செல்லவில்லை. அது 'விண்ணை தாண்டி வருவாயா' படம் என்பது பின்னர்தான் தெரிந்தது. வாய்ப்பை தவறவிட்டதால் அதில் சிம்பு நடித்தார். அஞ்சலியுடன் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நான் அவரை தவிர்க்கவில்லை. தயாரிப்பாளர்களே வதந்திகளுக்கு பயந்து அவரை என் படத்திலிருந்து தவிர்க்கிறார்கள். மேலும் அஞ்சலி பிஸியாக இருக்கிறார். என் படங்களில் நடிக்க அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை.


 

ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார் கமல்ஹாசன். 'விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து ஊழல் பற்றிய கதை எழுதி இயக்கி நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஒரு கதை எழுதினேன். அதை படமாக உருவாக்க அறிவுஜீவித்தனமும், அதிக பணமும் தேவைப்பட்டது. அப்போது அதற்கு நான் தயாராக இல்லை. இப்போது இரண்டும் பொருந்தி வந்திருக்கிறது. இதையடுத்து இக்கதையை இயக்கி நடிக்க தீர்மானித்திருக்கிறேன். இந்தி, தமிழில் ஒரே நேரத்தில் இப்படம் வெளிவருகிறது. இந்தி படத்துக்கு 'அமர் ஹைன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. அதில் நிறைய பணம் விளையாடுகிறது. சாதாரண மனிதன்கூட அரசியல் என்றால் பணம் சம்பாதிக்கும் தொழில் என்றுதான் பார்க்கிறான். இப்படத்தில் அதை பற்றியும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் கூற உள்ளேன்.