நகை டிசைனிங், ஆடை வடிவமைப்பு... புதிய தொழிலில் குதித்தார் நடிகை சந்தோஷி!

சின்னத் திரை நடிகை சந்தோஷிக்கு நகை டிசைனிங், ஆடை வடிவமைப்பில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

அந்தக் கனவை இப்போது நனவாக்கிக் கொண்டுள்ளார். இதற்கென பிரத்தியேகமாக ஷோரூம் திறந்துள்ளார்.

Actress Santhoshi becomes designer

கடைக்குப் பெயர் ப்ளஷ் (Plush).

சென்னையில் மற்ற எந்த இடத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் பிளஸ்ஸில் இருக்கிறது என்கிறார் சந்தோஷி. மணப்பெண்களுக்கான திருமண உடை, கவரிங் ஆபரணங்கள் ஆகியவற்றை இங்கே ஒரே இடத்தில் வாடகைக்கு பெறமுடியும் என்கிறார்.

சந்தோஷியிடம் பேசினோம்...

"நான் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருக்கிறேன். ஆனால் சினிமா ஒன்று மட்டுமே என் கனவு இல்லை.. இன்னும் பல பெரிய கனவுகள் எனக்கு இருக்கின்றன. மீடியாவில் நான் இருப்பதால் எனக்கு மேக்கப்பிற்கான அழகு சாதனங்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.

Actress Santhoshi becomes designer

நான் மற்ற அழகு நிலையங்களில் இருந்து என்னுடைய ‘ப்ளஷ்'சை பாரம்பரியத்துடன் வடிவமைத்திருள்ளேன்.. இந்த ஸ்டுடியோவை முழுமையாகக் கவனித்தால் இதற்கென ஒரு தனி அடையாளம் இருக்கும்.

வடிவமைக்கப்பட்ட சேலைகள், விழாக்களுக்கான ஆடைகள், சல்வார், குர்த்தி, டி சர்ட் என அனைத்தும் இங்கே கிடைக்கும்.

Actress Santhoshi becomes designer

அதுமட்டுமல்ல.. நாங்கள் ஆடைகளையும், ப்ளவ்ஸ்களையும் கூட வடிவமைத்து தருகிறோம்," என்றார்.

சென்னை ஆழ்வார்திருநகரில் அமைந்துள்ள இந்த ப்ளஷ்-சை நடிகைகள் ராதிகா மற்றும் சங்கீதா திறந்து வைத்தனர்.

 

ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனுக்கு வேலாயுதம் தோல்வியும் முக்கிய காரணமாம்!

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கடன் பிரச்சினைக்கு ஐ படம் மட்டுமே காரணம் இல்லையாம். அதற்கு முன் அவர் தயாரித்து தோல்வியடைந்த வேலாயுதம் உள்ளிட்ட படங்களும்தான் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தமிழ் சினிமாக்காரர்களை அதிர வைத்த சம்பவம் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சொத்துகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எடுத்துக்கொண்டதுதான்.

அவருடைய தயாரிப்பில் அண்மையில் வெளியான ஐ படத்தில்கூட அவருக்கு லாபம் என்று கூறப்பட்ட நிலையில், எப்படி இவ்வளவு சிக்கலில் மாட்டினார் என்று கேட்டுக் கொண்டனர்.

How Aascar Ravi caught in the financial crunch?

அவருடைய சறுக்கல் ஒருநாளில் நடத்தல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே நடந்திருக்கிறது என்கிறார்கள்.

அவருடைய தயாரிப்பில் உருவான அந்நியன், தசாவதாரம் போன்ற பெரிய படங்கள் வெற்றி என்றாலும், மற்ற படங்களில் அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் எற்பட்டுள்ளது.

தசாவதாரம் படத்தைத் தொடர்ந்து வெளியான வாரணம் ஆயிரம், ஆனந்த தாண்டவம், வேலாயுதம், மரியான், வல்லினம், திருமணம் எனும் நிக்கா ஆகிய எல்லாப் படங்களுமே தோல்வியடைந்தன என்கிறார்கள்.

குறிப்பாக விஜய்யின் வேலாயுதம் தனுஷின் மரியான் ஆகிய படங்களில் அவருக்குப் பெரிய அடி என்கிறார்கள். அந்தப்படங்களுக்காக வாங்கிய கடன் மற்றும் வட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து அவருக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஜெயம்ரவி நடித்த பூலோகம், கமலின் விஸ்வரூபம்2 ஆகிய படங்களிலும் கிட்டத்தட்ட ரூ 80 கோடிகள் வரை முடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்கிறார்கள்.

 

தொடர்ந்து படங்கள் நடிக்கும் முடிவில் ரஜினி... லிங்குசாமியும் தீவிர முயற்சி!

தொடர்ந்து நடுத்தர பட்ஜெட் படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதன் விளைவாக, தங்களுக்கும் கால்ஷீட் வேண்டும் என ரஜினியிடம் பல நிறுவனங்கள் அணுகி வருகின்றன.

தயாரிப்பாளரும் இயக்குநருமான லிங்குசாமியும் ரஜினியின் கால்ஷீட்டைப் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

லிங்காவுக்குப் பிறகு, சில மாதங்கள் அமைதி காத்த ரஜினி, அடுத்தடுத்து புதுப் படங்கள் பண்ணும் முடிவுக்கு வந்துள்ளார்.

Lingusamy also trying to get Rajini dates

இப்போதைக்கு மூன்று படங்களில் ரஜினி நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

அவை ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படம். இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகப் போகிறது.

அடுத்த இரு படங்களில் ஒன்றை ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், மற்றொன்றை அய்ங்கரன் நிறுவனத்துக்கும் பண்ணப் போவதாகக் கூறப்படுகிறார்கள்.

இந்த நிலையில் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இயக்குநர் லிங்குசாமியும் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுள்ளாராம். ரஜினியுடன் நல்ல தொடர்பில் இருப்பவர் லிங்குசாமி. தன்னை தீவிர ரஜினி ரசிகராக வெளிப்படுத்திக் கொள்பவர்.

அஞ்சான் படத் தோல்வி, உத்தம வில்லன் படத்தில் அவருக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழப்பு, நெருக்கடிகள் போன்றவற்றைத் தெரிந்து கொண்ட ரஜினியும் லிங்குசாமிக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

 

ஏக்தாவின் நிர்வாண கன்டிஷன்: நைசாக நழுவிய நடிகை கங்கனா

மும்பை: பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது படங்களில் நடிக்க விரும்புவர்கள் நிர்வாணமாக நடிக்க மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது பற்றி நடிகை கங்கனாவிடம் கேட்டதற்கு நைசாக நழுவிவிட்டார்.

பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகையில் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது கதையில் நிர்வாணமாகவும், படுக்கையறைக் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்று இருந்தால் மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளார்.

Watch: Kangana's shocking reaction to nudity clause by Ekta

இதற்கு ஒப்புக் கொள்பவர்கள் மட்டுமே இனி ஏக்தாவின் படங்களில் நடிக்க முடியும். அந்த நிர்வாண நிபந்தனையை ஏற்று கைரா தத் என்பவர் ஏக்தா தயாரித்து வரும் XXX என்ற படுகவர்ச்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து ஏக்தாவின் தயாரிப்பில் நடித்துள்ள கங்கனா ரனாவத்திடம் கேட்டதற்கு, அவர் கூறுகையில்,

நான் அந்த இடத்தில் இல்லை. இந்நிலையில் அடுத்தவரின் நிபந்தனை பற்றி கருத்து தெரிவிப்பது சரி அல்ல. நீங்கள் சொல்வது பற்றி எனக்கு எதுவும் புரியவில்லை என்றார்.

 

"பவானி ஆண்ட்டி"க்கு நேத்து பர்த்டே.. உங்களுக்குத் தெரியுமா கணபதி?

சென்னை: சில நேரங்களில் சில விஷயங்கள் நமது மனதில் பளிச்சென பதிந்து போய் விடும். அவ்வளவு சீக்கிரம் அதை மறக்க முடியாது. அப்படி ஒரு விஷயம்தான் பவானி ஆண்ட்டி...!

இந்த ஆண்ட்டியை சில நாட்களுக்கு முன்பு வரை யாருக்குமே தெரியாது.. ஆனால் இப்போது பவானி ஆண்ட்டி என்றால் பச்சைப் புள்ளை கூட பளிச்சென சிரிக்கும். அதுக்காகவே மணிக்கு ஒரு கை கொடுக்கலாம்...!

ஓ காதல் கண்மணியின் ஹீரோயின் வேண்டுமானால் நித்யா மேனனாக இருக்கலாம்.. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்களின் மனம் கவர்ந்த மாறிப் போனவர் இந்த பவானி ஆண்ட்டிதான்.

Leela Samson celebrated her birth day

லீலா சாம்சன்.. இவர்தான் ஓ காதல் கண்மணியில் பவானி ஆண்ட்டி என்ற கேரக்டரில் அவ்வளவு இயல்பாக அழகாக, எதார்த்தமாக நடித்தவர். அவர் பேசிய வசனங்கள் மணிரத்தினம் பாணி வசனம் என்றாலும் கூட அதைக் கூட அழகுபடுத்தி நேர்த்தியாக்கியவர் இந்த நடனப் பாவை.

லீலா சாம்சனுக்கு நேற்று பிறந்த நாள். பரதநாட்டியக் கலைஞர், நடன மாஸ்டர், எழுத்தாளர், ஒரு முறை சென்சார் போர்டு தலைவர் என பன்முகம் கொண்டவர் லீலா.

1951ம் ஆண்டு பிறந்த லீலா மேல்மட்ட மக்கள் மத்தியில்தான் பிரபலமாக இருந்தார். இன்று எல்லோருக்கும் தெரிந்த முகமாக மாறியுள்ளார். கலாஷேத்திரா தலைவர், சங்கீத நாடக அகாடமி தலைவர், சென்சார் போர்டு தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்து விட்டார். ஆனால் எல்லா இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பாரா அல்லது மணி ரத்தினம் போன்றவர்களின் படங்களில் மட்டும் நடிப்பாரா என்பதுதான் தெரியவில்லை.

சரி.. ஆண்டிக்கு வயசு என்ன தெரியுமா... ஜஸ்ட் 64தான்.

எப்படியோ.. எல்லார் மனதையும் நனைய வைத்த இந்த அன்புக்குரிய ஆண்ட்டிக்கு மறக்காமல் பிலேட்டட் பர்த்டே வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.

 

என்னது.. த்ரிஷா கல்யாணம் நின்னதுக்கு தனுஷ் காரணமா?

த்ரிஷாவின் திருமணம் நின்று போனதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று ஒரு
தகவல் இன்று இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துள்ளது.

த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.

ஆனால் திருமணத் தேதி அறிவிக்காமல் வைத்திருந்தனர். ஆனால் தொடர்ச்சியாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். புதிதாக கமல், சிம்பு படங்களிலும் நாயகியாக ஒப்பந்தமானார்.

Is Dhanush the reason for the cancellation of Trisha marriage

அதே நேரம் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் விலகினார்.

ஒரு கட்டத்தில் த்ரிஷா - வருண் மணியன் திருமணமே ரத்தாகிறது என செய்தி வெளியானது. பின்னர் அதுவே அதிகாரப்பூர்வமானது. த்ரிஷாவின் அம்மாவும், பிடிக்காத கல்யாணத்தை எதற்கு செய்ய வேண்டும் என்று கூறி, திருமணப் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

இப்போது, த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.

அதில் ஒரு திடுக்கிடும் புதிய தகவலாக, தனுஷால்தான் இந்தத் திருமணம் நின்றதாக சிலர் பரபரப்பு கிளப்பி உள்ளனர்.

திருமண நிச்சயதார்த்தத்துக்கு தனுஷ் வந்ததால், வருண் மணியன் கோபமடைந்ததாகவும், அதைக் கண்டு கொள்ளாத த்ரிஷா, தனுஷுடன் நட்பு பாராட்டியது பிடிக்காமல் சண்டை போட்டதாகவும் சொல்கிறார்கள்.

இந்த முதல் ஊடலே, தொடர்ந்து இருவருக்குள்ளும் பல்வேறு விஷயங்களில் கருத்து மோதலை ஏற்படுத்தி, கடைசியில் நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இத்தனைக்கும் தனுஷும் த்ரிஷாவும் எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லா கிளப்பிவிடறாங்கப்பா!

 

ஐ படம் வெற்றியா தோல்வியா... பதிலே சொல்லாத ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

ஐ படம் பெரும் வெற்றி.. அதுக்கும் மேலே என்றெல்லாம் விளம்பரங்கள் வெளியிட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன், இப்போது படம் வெற்றியா தோல்வியா என்ற கேள்விக்கு பதிலே சொல்லாமல் மழுப்பியுள்ளார்.

பேட்டியொன்றில், ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம், 'நீங்க சொல்லுங்க... 'ஐ' படம் வெற்றியா... தோல்வியா?' என்று கேட்டுள்ளனர்.

Aascar Ravi indirectly accept the failure of I movie

அதற்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் அளித்த பதில் இது:

''உண்மையைச் சொல்லணும்னா... ரஜினி, ஷங்கர் காம்பினேஷனுக்கு என்ன வசூலாகுமோ, அந்த அளவுக்கு 150 கோடி காஸ்ட் பண்ணியிருக்கு அந்தப் படம். 'மெரசலாயிட்டேன்...' பாட்டு கிராபிக்ஸுக்கு மட்டுமே மூணு கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்கோம். அந்தப் பாட்டை எத்தனை தடவை பார்த்தாலும் சந்தோஷமா இருக்கா... இல்லையா? அதுதான் முக்கியம்.

இன்னொரு உண்மையும் சொல்றேன்... 'ஐ' படத்துக்காக மட்டும் கடந்த ரெண்டு வருஷத்துல 40 கோடி ரூபாய் வட்டி கட்டியிருக்கேன். சினிமா என்கிற அற்புதமான தொழிலுக்காக நான் அதுவும் செய்வேன்... 'அதுக்கு மேல'யும் செய்வேன்!

ஏன்னா, உலகத்துல தொழில் செய்ற யாருமே கடன் வாங்காமல் முன்னேற முடியாது.''

கேட்ட கேள்விக்கு கடைசி வரை பதிலே வரலியா ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

 

இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!

இது ஒன்றும் படத்தின் கதை குறித்த அறிவிப்பல்ல... ஒரு புதிய படத்தின் தலைப்பு.

கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சரண் சக்கரவர்த்தி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அகன்ஷா மோகன் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

Ithirayil Varum Sambavangal Anaithum Karpaniye

நிழல்கள் ரவி, ஒய்ஜி மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ்மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ், அருள்ஜோதி, ராஜேந்திரன், சிங்கம்புலி, ஜெயமணி, சபரிநாதன், காளையன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மரியா ஜெரால்ட் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பதி, கவுதம் சேதுராம் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார்கள் விஜய் பிரகாஷ் - சாக்ரடீஸ். இயக்குபவர் விஜய் பரமசிவம். இவர் ஒரு குறும்பட இயக்குனர்.

Ithirayil Varum Sambavangal Anaithum Karpaniye

படம் பற்றி இயக்குனர் விஜய் பரமசிவமிடம் கேட்டோம்...

"இது முழுக்க முழுக்க காமெடி படம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுட்டகதை, மாதிரியான பிளாக் காமெடி படம் இது. மிகப்பெரிய ஜமீன்தார் சண்முகசுந்தரம் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார். அதை கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.

Ithirayil Varum Sambavangal Anaithum Karpaniye

அது அத்தனையும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கையாளப்படும் பிளாக் காமெடி யுக்தி வரும் காலங்களில் நிறைய படங்களில் பயன்படுத்தப்படலாம்," என்றார் இயக்குனர் விஜய்பரமசிவம்.

 

அடுத்த பதினைந்து நாளும் அஜீத்தோடு... 'தங்கச்சி' லட்சுமி உற்சாகம்!

அஜித் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் அஜீத்தோடு நடிக்கவிருப்பது அவருக்குத் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் மட்டும்தான்.

நாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாஸன் நாளை படக்குழுவுடன் சேர்ந்து கொள்கிறார். இந்த முதல் கட்டப் படப்பிடிப்பு பதினைந்து நாட்களுக்கு நடக்குமாம்.

Lakshmi Menon - Ajith shooting starts

இந்தப் பதினைந்து நாட்களும் அஜித் - லட்சுமி மேனன் - ஸ்ருதி ஹாஸன் தொடர்பான காட்சிகள்தான் எடுக்கப்பட உள்ளது.

அஜீத்தோடு பதினைந்து நாட்கள் இருக்கப் போகும் குஷியில் உள்ளார் லட்சுமிமேனன்.

படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

 

இளையராஜாவிடம் பாராட்டுப் பெற்ற இசையமைப்பாளர் சத்யா

இளையராஜாவிடம் ஒரு சக இசையமைப்பாளர் பாராட்டுப் பெறுவது சாதாரண விஷயமா? அந்த அரிய பெருமை இசையமைப்பாளர் சத்யாவுக்குக் கிடைத்துள்ளது.

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்தவர்தான் சத்யா. ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியக்களுக்கு இசையமைத்து வந்தார்.

Ilaiyaraaja appreaciates music director Sathya

‘எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலை பொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இப்போது ‘அசுரகுலம்', ‘மானே தேனே பேயே', ‘கிட்ணா' மற்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அசுரகுலம் படத்தில் "பொல்லாத பொம்பள" என்ற பாடலை நடிகர் தம்பி ராமைய்யாவை பாட வைத்திருக்கிறார்.

இதுவரை மெம்மையான பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த சத்யா ‘காஞ்சனா - 2' படத்தில் இடம்பெற்று ஹிட்டான ‘சில்லாட்ட பில்லாட்ட' பாடல் மூலம் தனக்கு குத்து பாடல்களுக்கும் இசை அமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்த இளையராஜா, கார்த்திக் ராஜா இருவரும் படத்தின் ரீரெக்கார்டிங் ரொம்ம நல்லா இருக்கு என்று பாராட்டினார்கள். இசைஞானி இளையராஜா பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் இன்னும் சிறப்பாக இசையமைக்க ஊக்கமாகவும் இருந்தது என்கிறார் சத்யா.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்க உள்ளார்.

 

புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்... சிருஷ்டிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பாடகர் கிரிஷ்!

பிரபல பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ், அடுத்து நாயகனாக களத்தில் குதித்துள்ளார்.

‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' படத்தில் அவர் சிருஷ்டி டாங்கேக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

Puriyatha Aanandham Puthithaga Aarambam

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரைஹைனா சேகர் இசையமைக்கிறார். செந்தில்மாறன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி தம்பி செய்யது இப்ராஹீம் இயக்குகிறார். இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும் அதில் சில விஷயங்களைச் சொல்லத் தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.

Puriyatha Aanandham Puthithaga Aarambam

இந்த படத்திற்கான காட்சிகள் 23 நாட்கள் மழையிலேயே எடுக்கப்பட்டன. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான்.

படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார்.

 

சௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை... மூன்றாவது முறையாக தாத்தாவானார் ரஜினி!

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

Soundarya blessed with male child

சௌந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் சினிமா தயாரிப்பு, டைரக்ஷன் என பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த சௌந்தர்யா, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு வந்தார்.

இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, சௌந்தர்யா திரையுலகில் எவ்வளவு வேண்டுமானாலும் சாதிக்கட்டும். ஆனால் அதற்கு முன் குழந்தைகள் பெற்றுக் கொள்ளட்டும் என்று மேடையிலேயே தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தாய்மைப் பேறு அடைந்தார் சௌந்தர்யா. நேற்று இரவு அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது.

இதன் மூலம் இரண்டு பெண் வாரிகளைக் கொண்ட ரஜினிக்கு மூன்றாவது பேரன் பிறந்துள்ளார். தகவலறிந்து ரஜினி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளார்.

 

அஜீத்தின் புதுப் படம் 'சென்டிமென்டாக' இன்று தொடங்குகிறது!

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம் அவருக்கு ராசியான வியாழக்கிழமையான இன்று தொடங்கியது.

என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் 56-வது படம் இது. சிவா ஏற்கெனவே அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார்.

Ajith's new movie shoot begins today

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் வளசரவாக்கத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா கோயிலில் நடந்தது. அடுத்து படப்பிடிப்பு இன்று பின்னி மில்லில் தொடங்கியது.

அஜித் தன் படங்களை சென்டிமென்டாக வியாழக்கிழமை தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

படத்தின் பூஜை, படப்பிடிப்பு தொடங்கும் நாள் மற்றும் படம் வெளியாகும் நாள் என அனைத்தும் வியாழக்கிழமையில்தான் அவர் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.