நடிகை பாவனாவின் தந்தை மரணம்

பிரபல நடிகை பாவனாவின் தந்தை பாலச்சந்திரன் (59) திருச்சூரில் இன்று காலமானார்.

மலையாளம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்தில் இப்போதும் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவரது தந்தை பாலச்சந்திரன், புகைப்பட கலைஞராக இருந்தார். கடந்த 21-ந்தேதி இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Bhavana's father passes away

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலச்சந்திரன் இறந்தார். மருத்துவமனையில் அவருடன் பாலச்சந்திரனின் மனைவி புஷ்பா, மகன் ஜெயதேவன் மற்றும் பாவனா ஆகியோர் உடனிருந்தனர்.

பாலச்சந்திரனின் இறுதிச் சடங்கு இன்று மாலை மணிக்கு திருச்சூரில் உள்ள சாந்திக்காட் மயானத்தில் நடக்கிறது.

 

நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கும் மர்ம தொடர்.. குற்றம் நடந்தது என்ன?

ஹீரோ, வில்லன், துண்டு துக்கடா என எந்த வேடமாக இருந்தாலும் தயங்காமல் நாசரைக் கூப்பிடலாம். எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க மறுக்க மாட்டார். அது தன் தொழில் மீது அவர் கொண்டிருக்கும் காதல். திரைத்துறையில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர் நிலைப்பாடு.

இப்போது ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு குற்றம் நடந்தது என்ன என்று பெயரிட்டுள்ளனர்.

Nasser to play key role in Kutram Nadanthathu  Enna

இந்தப் படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் டிவி யில் விஜே வாக இருக்கிறார். மற்றும் ஸ்ரீதேஜா, பாலு, இருவரும் விக்னேஷ் கார்த்திக்குடன் இன்னைந்து நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாசர் நடிக்கிறார்.

நாயகிகளாக பிரியா, ஊர்மிளா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜி.வி.பெருமாள், ரவிபிரசாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். நரேஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் சசிதர். இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படம் குறித்து அவர் கூறுகையில், "தென்றலாக வீசும் காற்று புயலாகவும், அமைதியான நடுக்கடல் சுனாமியாகவும் மாறுவதைப் போல மென்மையான குணாதிசயம் கொண்ட ஒரு பெண் எப்படி அதிபயங்கர குணம் கொண்டவளாக மாறுகிறாள் என்பதுதான் கதை," என்றார்.

 

செவ்வாய் கிரகத்தில் தனித்து விடப்பட்ட மனிதன்... த மார்ஷியன் கதை இது!

செவ்வாய் கிரக பனிப்புயலில் தனித்து விடப்பட்ட மனிதனின் கதையைச் சொல்லும் படமாக உருவாகிறது த மார்ஷியன்.

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய செல்லும் குழுவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் வாட்னி, அங்கு ஏற்படும் ஒருப் பயங்கரமான பனிப் புயலில் இறந்து போனதாக நினைத்து அவரை விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

The Martian on an isolated man in the red planet

ஆனால் அவரோ அந்தப் பனி புயலில் இருந்து தப்பி அந்த கொடூரமான சூழ்நிலையில் தனித்து விடப்படுகிறார். உயிர் வாழ வாய்ப்பு இல்லாத அந்த இடத்தில் இருந்து, தகவல் தொடர்ப்பு சாதனங்கள் செயல் இழந்த சூழலில், அவர் தான் உயிரோடு இருப்பதை பூமிக்கு அறிவிக்க முயற்சிக்கிறார்.

நாசா விஞ்ஞானிகள் அவரைக் காப்பாற்ற முயற்சிக்க, அவருடன் பணிப் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அந்த காப்பாற்றும் முயற்சியை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.

The Martian on an isolated man in the red planet

இந்த சூழ் நிலையில் சர்வதேச நாடுகள் வாட்னி பூமிக்கு திரும்ப வர முயற்சி மேற்கொள்கின்றன.

இந்தக் கதை ஒரு பிரபலமான நாவலை தழுவி படமாக்கப் பட்டுள்ளது. மேட் டமோன், ஜெஸிகா சஸ்டய்ன், கிர்ஸ்டன் விக், கதே மாரா நடித்துள்ள இந்தப் படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கியுள்ளார்.

 

கொரியா, ஜப்பான், ஐரோப்பா பாக்ஸ் ஆபீஸை அதிர வைக்கப் போகும் பாகுபலி

ஹைதராபாத்: பாகுபலி படம் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி வெளியானது. படம் பாக்ஸ் ஆபீஸை அடித்து துவைத்துள்ளது. இந்நிலையில் வெள்ளி விழா கொண்டாடிய பாகுபலி படம் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும் என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

Bahubali will release in Korea, Japan, French, European countries, hints SS Rajamouli

சீனாவில் வரும் நவம்பர் மாதம் 5 ஆயிரம் ஸ்கிரீன்களில் பாகுபலியை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜமவுலி கூறுகையில்,

சீனா, கொரியா, ஜப்பான், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வினியோகஸ்தர்கள் போன் மேல் போன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பாகுபலி சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்படும் என்றார்.

Bahubali will release in Korea, Japan, French, European countries, hints SS Rajamouli

ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுத்து தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆனது பாகுபலி. படம் இந்தியாவில் மட்டும் ரூ.430 கோடியும், வெளிநாடுகளில் ரூ.70 கோடியும் வசூல் செய்துள்ளது.

சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் பாகுபலி ரூ.30 கோடி வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய் - மோகன் ராஜா

சென்னை: "இந்த உலகம் என்னை நம்புவதற்கு முன்பு என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய், அவரின் முதல் வரலாற்றுத் திரைப்படமான புலி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்" என்று நெகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா.

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இயக்குநர் மோகன் ராஜாவின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் புலி திரைப்படத்தை வாழ்த்தியிருக்கிறார் மோகன் ராஜா.

Vijay Believed in me ev even Before the Whole World did - says Mohan Raja

ரீமேக் படங்களை இயக்கி வெற்றிகண்டு வந்த மோகன் ராஜா, முதன்முறையாக ரீமேக் செய்யாமல் நேரடியாக ‘தனி ஒருவன்' படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். இவர் இயக்கிய இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை மோகன் ராஜா தமிழில் ஏழு படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ஆறு படங்களில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். ‘வேலாயுதம்' படத்தில் விஜய் நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படத்தை விஜயின் ரசிகர்கள் பெருமளவில் ஆதரித்திருந்தனர்.

விஜய் நடித்துள்ள ‘புலி' படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இந்நிலையில் பழசை மறக்காத மோகன்ராஜா இப்படம் வெற்றியடைய மனந்திறந்து தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

‘எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் என்னை உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோவான விஜய்யின் ‘புலி' படம் வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று மோகன் ராஜா கூறியுள்ளார்.

 

அஜீத்திற்கு "வேதாளத்தை" விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்

சென்னை: என்னது அஜீத் படத்தோட பேரு வேதாளமா? அந்தளவு ஒண்ணும் மாஸான பேர் இல்லையே என்று அஜீத் ரசிகர்கள் ஒருபக்கம் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்தப் பெயரையும் கூட கடைசி நேரத்தில் வேறு ஒருவரிடமிருந்து வாங்கித்தான் படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கின்றனர். என்று புதியதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய நேர்ந்த தருணத்தில் கூட பெயரை வைக்கத் திணறிக் கொண்டிருந்தனர் வேதாளம் படக்குழுவினர்.

Ajith Movie Title Vedhalam Given by Raghavaa Lawrence?

படத்தின் தலைப்பு "வி" என்னும் ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் அஜீத் உறுதியாக இருந்ததால் வெட்டி விலாஸ், வரம் போன்ற பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

ஆனால் சற்று எதிர்பாராதவிதமாக படத்திற்கு "வேதாளம்" என்று பெயர் வைத்திருக்கின்றனர். சிறுத்தை சிவா உள்ளிட்ட படக்குழுவினர் பல பெயர்களைப் பரிசீலித்துவிட்டு கடைசியில் "வேதாளம்" என்று முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வழக்கம்போல் அந்தப்பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.பதிவு செய்து வைத்திருந்தவர் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படத்தில்தான் அவர் நடிப்பதாக இருந்ததாம். சூரி எனும் புதியவர் படத்தின் கதையை எழுதி இயக்கவிருந்தாராம்.

ஆனால் அதற்குள் வேந்தர் மூவிஸ் நிறுவனம் முந்திக்கொண்டு விட்டது. எனவே வேந்தர்மூவிஸ் நிறுவனத்துக்கு இரண்டுபடங்கள் செய்துவிடலாம் என்று லாரன்ஸ் முடிவுசெய்துவிட்டதால் இந்தப்படத்தைத் தள்ளி வைத்திருந்தார்களாம்.

இந்நிலையில் அஜித் படத்துக்கு இந்தப்பெயர் வேண்டும் என்று கேட்டவுடன் இயக்குநரும், லாரன்ஸும் வேதாளம் பெயரைத் தர ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர் வேதாளத்தை இறுதி செய்து நேற்று ஒருவழியாக பெயரை வெளியிட்டிருக்கின்றனர்.

 

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'காதலும் கடந்து போகும்'

அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சீவி குமார், கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் காதலும் கடந்து போகும்.

Nalan Kumarasamy join hands with Vijay Sethupathy again

சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

 

அரண்மனை 2: லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறும் 103 அடி உயர அம்மன் சிலை!

அரண்மனை படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்தப் படத்தில் சித்தார்த் , த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

103 ft high mega Amman statue for Aranmanai 2

அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய அம்மன் சிலை என்றும், இதைப் போன்ற 103 அடி உயர அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக்குழுவினர் கூறினார். இந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை முயற்சிகளுக்கான புத்தகத்தில் இடம் பெறவுள்ளது குறிப்பிடதக்கது. இந்த பிரம்மாண்டமான அம்மன் சிலையை உருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.

இதுகுறித்து குருராஜ் கூறுகையில், "அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்கு பிரமாண்டமான அம்மன் சிலை ஒன்று தேவை. அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்றுதான் யோசித்தோம். ஆனால் பார்க்கும் போது உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் நிஜ அம்மன் சிலையை 103 அடி உயரத்தில் உருவாக்க முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம். மிகப் பெரிய வேலைப்பாட்டுக்கு பின்பு நானும் என் குழுவும் இந்த சிலையை உருவாக்கி முடித்தோம். இந்த சிலை செய்து முடிக்க நாற்பது நாட்களுக்கு மேல் ஆனது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், ஸ்கேலிடன் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு சிலை நாங்கள் உருவாக்கினோம்.

முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம். இதைப்
போன்ற அம்மன் சிலை எங்கும் பார்க்க முடியாது," என்றார்.

பாடல் காட்சியை இயக்கிய ஷோபி மாஸ்டர் கூறுகையில், "அரண்மனை 2 படத்துக்காக இந்த பிரமாண்ட 103 அடி உயர அம்மன் சிலை முன்பு அம்மன் பாடலை இயக்குவது எனக்கு மிகவும் வியப்பாகவும் புதுமையாகவும் உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு நன்றி. நான் இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். அவற்றில் கோவில் முன்பு, கோவில் திருவிழா போன்ற பாடல்களும் அடங்கும். ஆனால் இப்போதுதான் முதன்முறையாக முழுமையான ஒரு அம்மன் பாடலை இயக்கியுள்ளேன். இயக்குநர் சுந்தர் சி என்னிடம் அம்மன் பாடலுக்கு நடனம் அமைக்க வேண்டும் அதுவும் 103 அடி உயர மிக பிரம்மாண்டமான அம்மன் சிலைக்கு முன்பு பாடலை மிக பெரிய அளவில் படமாக்க வேண்டும் என்றதும் என்னுள் ஆர்வம் தொற்றிகொண்டது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகி இருக்கும் முதல் அம்மன் பாடலை கேட்க நானும் ஆர்வமாக இருந்தேன். பாடலைக் கேட்டவுடன் நான் நிஜமாகவே அசந்துவிட்டேன். சிறப்பாக வந்துள்ளது. இசையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் ர் ஹிப்ஹாப் தமிழா ஆதி," என்றார்.

ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் பேசுகையில், "ஆரண்மனை 2 படத்துக்காக பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 103 அடி உயர அம்மன் சிலையின் முன்பு படப்பிடிப்பு நடத்துவது எனக்கு புதுமையாக உள்ளது," என்றார்.