தயாரிப்பாளர் மீது திவ்யா தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தயாரிப்பாளர் மீது திவ்யா தாக்கு

7/4/2011 3:04:57 PM

தயாரிப்பாளர், இயக்குனரிடம் அடிக்கடி மோதல் போக்கை கடைப்பிடித்து பரபரப்பை ஏற்படுத்தும் நடிகையாகி விட்டார் திவ்யா. சமீபத்தில் கன்னட தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின்போது 'இனி கன்னட படங்களில் நடிக்க மாட்டேன்Õ என அறிவித்தார். சீனியர் நடிகர் அம்பரீஷ் தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். இதையடுத்து தனது முடிவை மாற்றிக்கொண்டார் திவ்யா.
தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னையின்போது திவ்யாவுக்கு பக்கபலமாக நின்றவர் மற்றொரு பட அதிபர் முனிரத்னா. 'டைரக்டர்Õ என்ற பெயரில் தான் தயாரிக்கும் படத்தில் திவ்யா நடிக்கப்போவதாக கூறினார். அந்த செய்தியை பார்த்த திவ்யா கோபம் அடைந்துள்ளார். Ô'முனிரத்னா தயாரிக்கும் படத்தில் நடிப்பதுபற்றி என்னிடம் யாரும் பேசாதபோது நான் நடிப்பதாக எப்படி கூறலாம்ÕÕ என்றார்.
தயாரிப்பாளர் முனிரத்னாதான் இப்படி தகவல் தந்ததாக தெரிந்ததும் உடனே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திவ்யா, 'Ôஎன்னிடம் கதை சொல்லவில்லை, கால்ஷீட் வாங்கவில்லை. அப்படியிருக்கும்போது உங்கள் படத்தில் நான்  நடிப்பதாக எப்படி கூறலாம்ÕÕ என்று கோபமாக கேட்டுவிட்டு இணைப்பை துண்டித்தாராம். இதை கேட்டு அரண்ட தயாரிப்பாளர், 'Ôதிவ்யாவுடனான நட்பால் கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டேன். விரைவில் திவ்யாவை சந்தித்து என் படத்தில் நடிக்க கால்ஷீட் பெறுவேன்ÕÕ என்று நிலைமையை சமாளித்தார்.

 

இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலி ராமன் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலி ராமன் திருமணம்

7/4/2011 3:01:43 PM

இயக்குனர் செல்வராகவன்  கீதாஞ்சலி ராமன் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. செல்வராகவனுக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ராமன் மகள் கீதாஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் திருமணம் 03.07.2011 அன்று காலை கிண்டியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் நடந்தது. இது காதல் திருமணமாகும். திருமண சடங்குகள் காலை 8.50 மணிக்கு தொடங்கியது. 9.15 மணிக்கு வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத கீதாஞ்சலிக்கு செல்வராகவன் தாலி கட்டினார். அப்போது கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.
 
பட அதிபர் ஏ.வி.எம். சரவணன், தொழில் அதிபர், எம்.ஏ.எம். ராமசாமி, டைரக்டர் மணிரத்னம், சுகாசினி, தயாரிப்பாளர்கள் ராம்குமார், சத்யஜோதி தியாகராஜன், நடிகர் சின்னி ஜெயந்த், அரவிந்தசாமி, டைரக்டர் அழகம்பெருமாள், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், போலீஸ் அதிகாரிகள் லத்திகா சரண், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை செல்வராகவனின் தந்தை டைரக்டர் கஸ்தூரி ராஜா, நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர்.

 

சமீரா ரெட்டி காயம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமீரா ரெட்டி காயம்!

7/4/2011 2:59:05 PM

இந்திப் படத்துக்காக ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது காயமடைந்தேன் என்றார் சமீரா ரெட்டி. அவர் மேலும் கூறியதாவது; இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் 'தேஜ்' படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக, சில ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். பைக் ஓட்டும் காட்சியில் நடித்தபோது தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தேன். இதே போல கடும் குளிரில் தண்ணீருக்கடியில் செல்வது போல் காட்சி. இதில் நடித்தபோது உடல் உறைந்துவிட்டதுபோல உணர்ந்தேன். எனது பெற்றோர்கள் இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்கள். ஒரு நாள் இந்திப்படத்துக்காக நடித்துக்கொண்டிருக்கிறேன். மறுநாள் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தில் 'வேட்டை'க்காக வேறொரு காட்சியில் நடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் இப்படி ஆச்சரியங்களை தந்துகொண்டிருப்பது சுகமாக இருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் விஷாலுடன் நடிக்கும் படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. 'நடுநிசி நாய்கள்' படத்தில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இந்தப் படத்தில், கவுதம் வாசுதேவ் மேனனுக்காகவே நடித்தேன். அதில் நடித்ததில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை.

 

உணர்ச்சி வசப்பட்டால் உளறி விடுகிறேன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உணர்ச்சி வசப்பட்டால் உளறி விடுகிறேன்!

7/4/2011 2:57:11 PM

எஸ்.எம்.எஸ் டாக்கீஸ் சார்பில் ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் படம், 'பதினெட்டான்குடி'. பிருத்வி, ஸ்ரீநிஷா நடிக்கிறார்கள், என்.சுந்தரேசன் இயக்குகிறார். சரவணன்கணேஷ் இசை அமைத்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடலை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: இனிமேல் மேடை ஏறி மைக் பிடித்து பேசக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படம் என்பதால் எனது விரதத்தை உடைத்து பேசுகிறேன். இயற்கையில் நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். உணர்ச்சிவசப்படுபவன்தான் கலைஞன். மேடையில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் எதையாவது உளறிக் கொட்டிவிடுகிறேன். அது பிரச்னையாகி விடுகிறது. இன்றைய இளம் இயக்குனர்கள் மீது எனக்கு கோபம் இருந்தது. அது இப்போது மறைந்து விட்டது. அவர்கள் என்னை அப்பா என்கிறார்கள். அப்பா பிள்ளைகளுக்குள் சண்டை வருவது சகஜம்தானே.

6 முறை தேசிய விருது வாங்கினேன். அவை எங்கே இருக்கிறது என்று தெரியாது. தூக்கி போட்டுவிட்டேன். பத்மஸ்ரீ விருதை கூட மறுத்தேன். எந்த வெற்றியையும், விருதையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. கலைஞனுக்கு கிடைக்கும் வெற்றி முள்கிரீடம் போன்றது. அதை தலையில் அணிந்து கொண்டால் முள் குத்தி வண்டு நுழைந்து, கலைஞன் அழிந்து விடுவான். ஏறிய வேகத்தில் அதை இறக்கி வைப்பவன்தான் வெற்றி பெறுவான். இன்றைய சில இளம் இயக்குனர்கள் ஒரு படத்தின் வெற்றியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தோற்றம், நடை, உடை, பாவனை, பந்தா அனைத்திலும் மாறிவிடுகிறார்கள். ஸ்ரீதர், நாகேஷ் இவர்கள் செய்யாத சாதனையா?, கருப்பு வெள்ளை காலத்தில் சாதித்தவர்கள் யாரும் தங்களை சாதனையாளனாக கடைசி வரை நினைக்கவில்லை.
நான் இடுப்பில் தூக்கி வளர்த்த பிள்ளையின் மகன்தான் இந்தப் படத்தின் ஹீரோ. காலங்கள் மாறிவிட்டது. ஆனாலும் நான் இன்னும் ஈரத்தோடு இருக்கிறேன். இளைஞர்களோடு இருக்கிறேன். அவர்கள் என்னோடு இருக்கிறார்கள். இந்த இருப்பை நிலைநாட்டிக்கொள்ள நானும் அவர்களோடு போட்டிப்போட தயாராகி விட்டேன்.

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையோடு, களத்தோடு வருகிறேன். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், மண்வாசனை, முதல் மரியாதை எப்படி இதுவரை ஈரத்தோடு இருக்கிறதோ, அதேபோல இன்னும் 20 வருடம் ஈரத்தோடு இருக்கும் படைப்போடு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஜெயம் ரவி, சாந்தனு, சிங்கப்புலி, பாடலாசிரியர் சினேகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். முன்னதாக பாண்டியராஜன் வரவேற்றார். முடிவில் பிருத்வி நன்றி கூறினார்.

 

விஜய் டிவி - பிலிம்பேர் விருதுகள்... சிம்பு பாய்ச்சல்!


சமீபத்தில் வழங்கப்பட்ட விஜய் டிவி மற்றும் பிலிம்பேர் விருதுகள் குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார் நடிகர் சிம்பு.

விஜய் டிவி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஜய் விருதுகள் விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

சிறந்த நடிகர்களாக விக்ரம், சூர்யா போன்றவர்களைத் தேர்வு செய்து விருது கொடுத்தனர் (ரஜினியை மக்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் மற்றும் சிறந்த வில்லன் நடிகராக மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்தனர்).

அதேபோல பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன் நடந்தது. இந்த விழாவிலும் சிறந்த நடிகராக விக்ரம், நடிகையாக அஞ்சலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வேறு பிரிவுகளில் பல கலைஞர்களும் விருது பெற்றிருந்தனர்.

ஆனால் இந்த விழாக்களில் விருதுகள் தனிநபர் தேர்வாக மட்டுமே அமைந்துவிட்டது என்பதைக் குறிப்பிடும் வகையில் சிம்பு தனது பேஸ்புக்கில்,”விஜய் டிவி – பிலிம்பேர் விருதுகளா அல்லது மகேந்திரன் – தங்கதுரை விருதுகளா என்றே தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகேந்திரன் விஜய் டிவி பொறுப்பாளர், தங்கதுரை பிலிம்பேர் (தெற்கு) பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நட்சத்திரங்களின் மேலாளராகவும் இருப்பவர் தங்கதுரை.

சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு விஜய் மற்றும் பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

எமி ஜாக்ஸன் அறிமுகமாகும் மலையாள 'ஸ்பானிஷ் மசாலா'!


‘மதராசபட்டண’த்தில் ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்ட லண்டன் அழகி எமி ஜாக்சன், முதல் முறையாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

திலீப் நாயகனாக நடிக்க, லால் ஜோஸ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஸ்பானிஷ் மசாலா என பெயரிட்டுள்ளனர். இன்னொரு ஹீரோவாக குஞ்சக்கோ போபன் நடிக்கிறார்.

ஸ்பானிஷ் பெண்ணாக நடிக்க பொருத்தமான நடிகையை கடந்த சில மாதங்களாகத் தேடி வந்த லால் ஜோஸ், எமியைப் பார்த்ததும் முடிவு செய்து ஒப்பந்தமும் போட்டுவிட்டார்.

ஆனால் ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை ஏற்பதா மறுப்பதா என்று புரியவில்லையாம் எமிக்கு. காரணம் தமிழில் பெரிய படத்தில் நடித்து, நல்ல பெயர் இருக்கும் போது, மலையாளத்துக்குப் போனால் மார்க்கெட் மதிப்பு இறங்கிவிடுமே என பயந்திருக்கிறார். ஆனால் பெரிய சம்பளம் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ள வைத்துள்ளார்கள்.

எமி ஜாக்ஸன் இப்போது இந்தியில் கவும்தம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா வேடத்தில் நடித்து வருகிறார்.

 

கமல் படத்திற்காக மோதும் சல்மான் கான், அக்ஷய் குமார்


கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நகைச்சுவை கலந்த கலாட்டா படமான மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சல்மான் கானும், அக்ஷய் குமாரும் கடும் போட்டியில் குதித்துள்ளனராம்.

1990-களில் வெளிவந்த சூப்பர் ஹிட் நகைச்சுவை படம் கமல் ஹாசனின் மைக்கேல் மதன காம ராஜன். இந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இயக்குனர்கள் ஃபாரா கானும், பிரியதர்ஷனும் போட்டி போடுகின்றனர்.

ஒரே பிரசவத்தில் பிறந்து, நான்கு இடங்களுக்கு மாறிப் போய் விடும் 4 ஆண் குழந்தைகளின் கதை தான் மைக்கேல், மதன, காம ராஜன். இதில் கமல் ஹாசன் 4 வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். குஷ்பு, ரூபிணி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஊர்வசியுடன் சேர்ந்து கமல்ஹாசன் அடித்த காமடி லூட்டி அனைவரையும் ஈர்த்தது.

இளையராஜாவின் அட்டகாசமான இசையும் சேர்ந்து படத்தை மெகா ஹிட்டாக்கியிருந்தது. படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதி, தயாரிக்கவும் செய்திருந்தார். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து எடுக்க ஃபாரா கானும், அக்ஷய் குமாரை வைத்து எடுக்க பிரியதர்ஷனும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மைக்கேல் மதன காமராஜனாகப் போவது யார் சல்லுவா, அக்கியா?

 

கரு பழனியப்பன்.காம்!


இன்றைய இயக்குநர்களில் அதிக தேடல், அதைவிட அதிகமாகவே ‘பேச’க் கூடியவர் கரு பழனியப்பன்.

பெரும்பாலும் அந்தப் பேச்சு முழுக்க இழந்து போன நம் கலாச்சார அடையாளங்கள், போலித்தனங்களை தோலுரிக்கும் ஒரு ஆதங்கமாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

மேடைகளில் கிடைக்கும் மைக் வாய்ப்புகளில் கூட போலி புகழாரம் சூட்டாமல், எதார்த்தமாக பேசுபவர்களில் கரு பழனியப்பனும் ஒருவர்.

இணையதளங்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்த கலைஞரான அவர், தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள புதிய தனிநபர் இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

http://www.karupalaniappan.com என்ற இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் கரு பழனியப்பன்:

‘ஒவ்வொரு எழுத்தாளரும் இயக்குநராக விரும்புகிறார்; ஒவ்வொரு தயாரிப்பாளரும் எழுத்தாளராக விரும்புகிறார்; ஒவ்வொரு நடிகரும் தயாரிப்பாளராக விரும்புகிறார்… யாரும் திருப்தியடையவதில்லை’, என்ற காட்ப்ரைட் ரெய்ன்ஹாட்-ன் வாசகத்தை வைத்திருக்கிறார்.

கரு பழனியப்பன் கடைசியாக இயக்கிய படம் மந்திரப் புன்னகை. இந்தப் படத்தில் இவரே நாயகனாகவும் அறிமுகமாகியிருந்தார். நிதிப் பிரச்சினை காரணமாக அடுத்த படம் தாமதமாவதாகவும், விரைவில் சரியாகி, புதிய படம் தொடங்கிவிடும் என்றும் இந்த இணையதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தளம் மூலம் இனி தொடர்ந்து தனது படங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார் கரு பழனியப்பன்.

 

இளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி!


எனக்கு மிகவும் பொருத்தமானவர் இளவரசர் ஹாரி என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை ரோசி ஹட்டிங்டன் ஒயிட்லி.

24 வயதாகும் ரோசி, தற்போது தி மெக்கானிக் படத்தில் நடித்த ஜேசன் ஸ்டாதமுடன் படு பிசியான காதலில் ஈடுபட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனதை ஹாரி கவர்ந்துள்ளார் என்பதை ஹாரியிடமே தெரிவித்துள்ளார் ரோசி என்று கான்டாக்ட்மியூசிக் இணையதளம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஹாரியின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். இதுதொடர்பாக தொடர்ந்து எழுதி வருகிறேன், பேசி வருகிறேன். நான் அவர் மீது எவ்வளவு பாசம், நேசம் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் உணர்வார் என அறிகிறேன். அவர் மிகவும் அழகு, ஹேன்ட்சம் என்று ஜொள்ளு வடிக்கிறார் ரோசி.

ரோசி டிரான்ஸ்பார்மர்ஸ்-டார்க் ஆப் தி மூன் படத்தில் நடித்து ஹாலிவுட்டில் அறிமுகமானவர் என்பது நினைவிருக்கலாம். அந்தப் படத்தில் முதலில் மேகான் பாக்ஸ்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் அஏவரை நீக்கி விட்டு ஒயிட்லியை நடிக்க வைத்தனர்.

இவர் டிரான்ஸ்பார்மர்ஸ் படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த ஹீரோவான ஷியா லபியாஃபின் கவர்ச்சியால் தான் ஈர்க்கப்படுவதாகவும், தனது செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த சிரமமாக இருப்பதாகவும், மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பு நாட்களை கடத்தியதாகவும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தலை 'லைட்'டா சுற்றுவது போலிருக்கிறதா? அதாங்க ஹாலிவுட்..!
 

பில்லா 2... புதிய இளைஞனாய் தயாராகும் அஜீத்!


சின்ன சோர்வு, இடைவெளியிலிருந்து முழுசாக மீண்டு விட்டார் அஜீத். அசல் ரிலீசுக்குப் பிறகு, மங்காத்தாவைத் தொடங்க பல மாதங்கள் தயக்கம் காட்டி வந்த அவர், இப்போது மங்காத்தா முடியும் முன்னரே, மளமளவென பில்லா -2க்கான வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமலை இயக்கிய சக்ரி இயக்கும் பில்லா 2, இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் புதிய முயற்சிதான். பொதுவாக ஒரு படத்தை எடுத்ததும், அதற்கு தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்பார்கள்.

இந்தப் படம் அப்படியல்ல. பில்லாவுக்கு முந்தைய கதைதான் இந்த பில்லா 2. டானாக பில்லா மாறக் காரணம், அதன் பின்னணியில் இருந்த துரோகம், ஒரு துறுதுறு காதல் என சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத திரைக்கதையாம்.

மீண்டும் உடல் எடை குறைப்பு, டான்ஸில் தீவிர பயிற்சி என அஜீத் ஆளே மாறப் போகிறாராம் இந்தப் படத்துக்கு.

இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியிருக்கிறது. அஜீத்துக்கு ஜோடி பிரபல நடிகைகளில் யாருமில்லை... ஒரு புத்தம் புதிய முகமாம்!
 

ராணா கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை! - கே எஸ் ரவிக்குமார்


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ராணா படத்தின் கதையில் எந்த சிறு மாற்றமும் செய்யவில்லை. அதை ரஜினியும் விரும்பவில்லை, என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது பூரண குணமடைந்து அங்கேயே ஓய்வெடுத்து வருகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இது குறித்து அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:

ராணா படத்தின் கதை 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரசனைப் பற்றியது. ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் எல்லாம் இருக்கும். பெரிய போர்க்கள யுத்த காட்சி விஸ்தாரமான அரண்மனை, தர்பார் மண்டபம் போன்றவைகளும் இருக்கும்.

இதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். ஒரு வேடம் காமெடி கேரக்டராக உருவாக்கப்பட்டு உள்ளது.

படத்தில் நான்கு முதல் ஐந்து நாயகிகள் இருப்பார்கள். அதில் தீபிகா முக்கிய நாயகியாக இருப்பார். ரஜினி உடல் நிலையை கருத்தில் கொண்டு 'ராணா' கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அப்படி மாற்றுவதை ரஜினியும் விரும்பவில்லை.

இன்னொன்று இந்த கதையே ரஜினியுடையதுதான். முழு திரைக்கதையும் அவருக்கு தெரியும். படப்பிடிப்பு துவங்கியதும் ரஜினியால் எந்த அளவுக்கு சிரமம் எடுத்து நடிக்க முடியும் என்று பார்த்து அதன்படி முடிவு செய்வேன்.

தேவைப்பட்டால் டாக்டர்களிடமும் ஆலோசனை செய்வேன். உதாரணத்துக்கு குதிரை மீது ரஜினி பறப்பது போன்ற காட்சி வந்தால் அந்த இடத்தில் அவருக்கு பதில் வேறு யாரையாவது பயன்படுத்துவேன்.

படையப்பாவை ஐந்தே மாதங்களில் முடித்தேன். ஆனால் ராணாவில் அப்படி செய்ய முடியாது.

எந்திரனில் பஞ்ச் வசனங்கள் கிடையாது. அவை ரொம்ப பழைய டெக்னிக். இந்தப் படத்தில் ஒவ்வொரு வசனமும் பவர்புல்லாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.
 

எஸ்வி சேகர் மகன் நடித்த பட ஆடியோ சிடி... வெளியிட்டார் மத்திய அமைச்சர் வாசன்!


எஸ்வி சேகர் மகன் அஸ்வின் நடித்த புதிய படம் நினைவில் நின்றவள் படத்தின் இசையை இன்று வெளியிட்டார் மத்திய அமைச்சர் ஜிகே வாசன்.

எஸ்.வி.சேகர் மகன் அஷ்வின் சேகர் - கீர்த்தி சாவ்லா, காயத்ரி நடித்துள்ள படம் நினைவில் நின்றவள்.

இந்தப் படத்தின் க்ரியேட்டிவ் ஹெட்டாக எஸ்வி சேகர் பணி்யாற்றியுள்ளார். ஜிவி அகஸ்திய பாரதி இயக்கியுள்ளார்.

டி இமான் இசையமைத்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜிகே வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, அவற்றை பத்திரிகையாளர் 'பாக்கெட் நாவல்' ஜி. அசோகன் பெற்றுக்கொண்டார்.

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
 

பிக் பாஸ் சீசன் 5-ல் மரியா சூசைராஜ் இல்லை: கலர்ஸ் சேனல் அறிவிப்பு


மும்பை: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 5-வது சீசனில் மரியா சூசைராஜை எடுக்கும் எண்ணமே இல்லை என்று அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனல் தெரிவித்துள்ளது.

பிக் பாஸ் ஷோவின் 4 சீசன்களையும் ஒளிபரப்பிய கலர்ஸ் தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

நீரஜ் குரோவர் கொலை வழக்கில் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த கன்னட நடிகை மரியா சூசைராஜை பிக் பாஸ் 5-வது சீசனில் எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை. இதற்காக நாங்கள் மரியாவை அணுகவும் இல்லை, அணுகவும் மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது படத்தில் மரியாவை கதாநாயகியாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டியுள்ளார். இது குறித்து கேட்க மரியாவையோ அல்லது அவரது வழக்கறிஞர் ஷரிப் ஷேக்கையோ அணுக முடியவில்லை.

கடந்த சனிக்கிழமை தனக்கும், இந்த கொலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மரியா தெரிவித்திருந்தார்.

இந்த கொலை குறித்து மரியா கூறியதாவது,

நான் குற்றமற்றவள் என்று எனக்குத் தெரியும், எனது கடவுளுக்கும் தெரியும். ஒரு குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்பது என்னால் உணர முடிகிறது. இது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. நான் நீரஜ் குடும்பத்தார் பற்றியோ அல்லது நீரஜ் பற்றியோ எதுவும் தெரிவிக்க வரும்பவில்லை என்றார்.

டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை கொலை செய்ததற்காக மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டுகள் மற்றும் அவரது காதலர் முன்னாள் கடற்படை அதிகாரி எமிலி ஜெரோமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 

போதையில் தள்ளாடினேனா? - மறுக்கும் ஸ்ரேயா


சென்னையில் நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் குடித்துவிட்டு தள்ளாடி விழப் போனதாக தன்னைப் பற்றி வந்துள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

கடந்த மூன்று வாரங்களில் அவரைப் பற்றி வரும் மூன்றாவது மோசமான செய்தி இது.

நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடியதாகக் கூறப்படுகிறது.

விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் ஸ்ரேயா நடக்க முடியாமல் கீழே விழப்போன போது தோழிகள்தான், அவரைப் பிடித்து அழைத்துப் போய் காரில் உட்கார வைத்தார்களாம்.

இந்த செய்தியைப் படித்ததும் கொதித்துப் போன ஸ்ரேயா, "நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் கிசுகிசுக்கள் பரவி இருப்பது வேதனை அளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஓட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை.

மதுவும் அருந்தவுமில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர் நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அப்போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்," என்று கூறியுள்ளார்.
 

அப்துல் கலாமின் பாதுகாவலராக செயல்பட்ட மரியா காதலர் ஜெரோம்!


பெங்களூர்:  நீரஜ் குரோவர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெரோம் மேத்யூ முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் எமிலி ஜெரோம் மேத்யூவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது. தற்போது ஜெரோம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவரிடம் இருந்து வீரப் பதக்கம் வாங்கியவர் ஜெரோம். இது தவிர அப்துல் கலாம் கொச்சிக்கு சென்றபோது அங்கிருந்த 500 கடற்படை அதிகாரிகளில் இருந்து அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜெரோமும் ஒருவர்.

ஜெரோம் ஒரு கொலைகாரன் என்பது தெரிய வந்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெரோமின் நெருங்கிய பள்ளி நண்பர் ஒருவர் கூறுகையில்,

எனக்கு தெரிந்தவர்களிலேயே ஜெரோம் தான் சிறந்த லட்சியவாதி. 8-ம் வகுப்பு படிகையிலேயே ராணுவத்தில் சேரப்போவதாக கூறுவார். பின்னர் மாநில அளவில் ஸ்கேடிங் மற்றும் நீச்சல் போட்டி வீரர் ஆனார் என்றார்.

பிற நண்பர்கள் கூறியதாவது,

அவருக்கு எப்பொழுதுமே மரியா சூசைராஜ் மீது அக்கறை உண்டு. எங்கள் நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி மரியாவைப் பார்க்க மும்பை சென்றார். இது ஒன்றும் திட்டமிட்ட கொலையல்ல. ஜெரோமிற்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. மரியாவை கையும், களவுமாகப் பிடித்ததால் ஆத்திரத்தில் நீரஜ்ஜை தாக்கியுள்ளார், அவரும் இறந்துவிட்டார் என்றார்.

மரியாவும், ஜெரோமும் ஒரே பள்ளி, கல்லூரிக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரு தேவாலயத்தின் உறுப்பினர்களாக இருப்பதால் தான் அவர்களுக்கு உறவு ஏற்பட்டது. மரியா ஜெரோமை விட 2 வயது மூத்தவர். அவர்கள் கல்லூரியில் படிக்கையில் டேட்டிங் செய்யவில்லை. மரியா பையன்களை கவர்வதில் வல்லவர். அவரை கொலைகாரியாக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்றார் மரியாவின் நண்பர்.

ஜெரோமிற்கு குறிப்பிட்ட குணாதிசயம் கொண்ட பெண்கள் தான் பிடிக்கும். அவர் மரியாவுடன் பழக ஆரம்பித்தது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது என்றார் இன்னொரு நண்பர்.
 

கார்த்தி - ரஞ்சனி திருமணம் : நடிகர், நடிகைகள் வாழ்த்து!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி - ரஞ்சனி திருமணம் : நடிகர், நடிகைகள் வாழ்த்து!

7/4/2011 10:40:44 AM

கார்த்தி-ரஞ்சனி திருமணம் கோவையில் கோலாகலமாக நேற்று நடந்தது. நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் நேரில் வாழ்த்தினர். சிவகுமார்- லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. ஈரோடு மாவட்டம் பாசூர் அடுத்த குமாரசாமி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சின்னுசாமி - ஜோதிமீனாட்சி மகள் ரஞ்சனி ஆகியோர் திருமணம், கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று காலை நடந்தது. கொடிசியா அரங்கம் மற்றும் திருமண மேடை வண்ண, வண்ண பூக்களாலும், மின்விளக்குகளாலும் ஜொலித்தது. ஆர்ட் டைரக்டர் சந்திரசேகர் பிரமாண்ட அரங்கம் அமைத்திருந்தார்.

மணமேடையில் நேற்று காலை 5.45 மணி முதல் சடங்குகள் நடந்தன. பெற்றோருக்கு கார்த்தி பாதபூஜை செய்தார். மணமகன் கார்த்தி பட்டுவேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார். மணமகள் ரஞ்சனி தங்க நிறத்தில் பட்டுப்புடவை மற்றும் வைர நகைகள் அணிந்திருந்தார். பேரூர் பழ.குமரலிங்கம் முற்றிலும் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். சரியாக 6.35 மணிக்கு, சிவகுமார்-லட்சுமி தம்பதியினர் மங்கல நாண் எடுத்து கொடுக்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் கார்த்தி தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் பெற்றோர் காலிலும், நடிகர் சூர்யா-ஜோதிகா காலிலும் விழுந்து ஆசி பெற்றனர்.

மாலை மாற்றும் நிகழ்ச்சியில், கார்த்தி முதலில் ரஞ்சனிக்கு மாலை அணிவித்தார். ரஞ்சனி மாலை அணிவிக்க முயன்றபோது கார்த்தி தலையை பின்வாங்கினார். மூன்று முறை கார்த்தி இதேபோல் காமெடி செய்ய, ரஞ்சனி ஜம்ப் செய்து மாலை அணிவித்தார். இதனால் அரங்கம் கலகலப்பானது. திருமணம் முடிந்ததும், மேடையிலேயே திருமண பதிவு புத்தகத்தில் கார்த்தியும், ரஞ்சனியும் கையெழுத்திட்டனர். இதற்காக பிரத்யேகமாக பதிவுத்துறை அலுவலர்கள் ஆவணங்களை கொண்டு வந்திருந்தனர்.

மணமக்களை இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, ஆர்.வி. உதயகுமார், பாலா, நடிகர்கள் பிரபு, ராஜேஷ், நிழல்கள் ரவி, பாண்டியராஜன், சரவணன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், நடிகைகள் ராதிகா, ஜீவிதா, நக்மா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் தொழிலதிபர்கள் கிருஷ்ணராஜ் வாணவராயர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், சங்கர் வாணவராயர், வனிதா மோகன், டாக்டர் நல்லா பழனிசாமி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர். இதைத்தொடர்ந்து அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. கொடிசியா அரங்கம் நிரம்பி வழிந்தது. காலை 10 மணி வரை மேடையில் இருந்து மணமக்கள் வாழ்த்துக்களை பெற்றனர். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருமணத்துக்கு வந்தவர்களை இருவீட்டாரின் குடும்பத்தினரும் வாசலில் நின்று வரவேற்றனர். மதியம் 12 மணிக்கு கார்த்தி ரசிகர்களுக்காக பிரத்யேக விருந்து அளிக்கப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

கார்த்தி - ரஞ்சனி திருமணம் : நடிகர், நடிகைகள் வாழ்த்து!




 

கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ளார் பியங்கா தேசாய்.


அர்ஜூன் நடிக்கும் காட்டுப்புலி படத்தில் அவருக்கு ஜோடி போட்டு நடிக்கும் பியங்கா தேசாய், கவர்ச்சிப் புலியாக மாறி ரசிகர்களை மிரட்டப் போகிறாராம்.

அர்ஜூன் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் நடித்து வரும் படம் காட்டுப்புலி. டினுவர்மா இப்படத்தை இயக்குகிறார். அட்டகாசமான அதிரடி சண்டைப் படமாக இது அமையும் என்று கூறும் அர்ஜூன் தரப்பு, படத்தில் பிரமிக்கத்தக்க வகையில் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

அர்ஜூனின் காதலியாக இப்படத்தில் வருகிறார் பியங்கா தேசாய். இவர் கன்னட நடிகையாவார். பளிச்சென இருக்கும் பியங்கா இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்திற்கு வந்த நேரமோ என்னவோ, நிமிடங்கள் என்ற இன்னொரு படத்திலும் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் டாக்டராக வருகிறார் பியங்கா.

நடிப்போடு, கவர்ச்சியிலும் ரசிகர்களை சிலிர்க்க வைக்கவுள்ளாராம் பியங்கா. இவர் போதாதென்று ஷாயாலி பகத்தும் படத்தில் இருக்கிறார். இவருக்கும் படத்தில் கவர்ச்சிப் பஞ்சமில்லாத வகையில் ரோல் வைத்துள்ளனர். இவர் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக, நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் நடித்தவராவார்.

காட்டுப்புலி சண்டைப் புலியாக மட்டுமல்லாமல் கவர்ச்சிப் புலியாகவும் சேர்ந்து உருவாகி வருவதால் ரசிகர்களுக்கு 'டபுள் டிலைட்' கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.