ஓவர் வேலை ... ஐரோப்பாவில் ரெஸ்ட் எடுக்கும் அசின்

Asin Heads A European Vacation   

மும்பை: அசின் ஓய்வெடுக்க தனது பெற்றோருடன் ஐரோப்பா சென்றுள்ளாராம்.

தென்னிந்திய திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்ட அசின் ஹவுஸ்ஃபுல் 2 மற்றும் போல் பச்சன் ஆகிய வெற்றிப்படங்களில் ஓடி, ஓடி உழைத்து களைத்துவி்ட்டார். இது தவிர புதுப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளதால் அவருக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை. இதனால் வேலை என்று பார்த்தால் அது எப்பொழுதுமே இருந்துகொண்டே தான் இருக்கும் நாம் தான் ஒரு குட்டி பிரேக் எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

உடனே தனது பெற்றோர்களை அழைத்துக் கொண்டு ஐரோப்பாவில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

இது குறித்து அசினுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

முதலில் போல் பச்சன் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். பின்னர் ஹவுஸ்ஃபுல் 2 விளம்பர நிகழ்ச்சிகள், போல் பச்சன் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு சென்றார். அதன் பிறகு கிலாடி 786 படத்தில் நடிக்கத் துவங்கினார். இப்படி ஓய்வே இல்லாமல் உழைப்பதால் அவர் ஒரு பிரேக் எடுத்துள்ளார். ஐரோப்பாவில் இருந்து திரும்பி வந்ததும் கிலாடி 786 படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றார்.

 

யார் என்ன சொன்னாலும் சரி அய்யரை விடமாட்டேன்: ஜனனி அடம்

Janani Doesn T Want Drop Iyer   

சென்னை: யார் என்ன சொன்னாலும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்கப்போவதில்லை என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார்.

நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது.

ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலீஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார்.

"இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன்," என்றார்.

இந்த விமர்சனங்கள் எல்லாம் ஜனனிக்கு தெரியாமலா இருக்கும். அதற்கு அவர் கூறுகையில், யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி என் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்க மாட்டேன் என்று தில்லாகக் கூறியுள்ளார்.

இதற்கு யார், யார் என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லையே...

 

எப்புடி இருந்த நயன் இப்படி ஆயிட்டாரே

What Happened Nayanthara   

சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் கலகலவென்று பேசும் நயன்தாரா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறாராம்.

நயன்தாரா முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நடிகர், நடிகைகள் முதல் லைட் பாய் வரை அனைவருடனும் தான் ஒரு ஹீரோயின் அதுவும் முன்னணி ஹீரோயின் என்ற கர்வமே இல்லாமல் கலகலப்பாக பேசுவார். ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததையடுத்து இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளார் நயன்.

காதலுக்கு முன்பு செட்டில் கலகலப்பாக இருந்த நயன் தற்போது யாருடனும் பேசாமல் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக உள்ளாராம். இதைப் பார்ப்பவர்கள் அய்யோ பாவம் நயன்தாராவை இந்த காதல் பிரிவு படுத்தும் பாட்டைப் பார்க்கவே பாவமாக உள்ளது என்கிறார்களாம். அவர் தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார்.

அவர் மீண்டும் தமிழ், தெலுங்கு என்று பிசியானாலும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து அவர் முழுவதுமாக மீளாதது போன்றே தெரிகிறது. விரைவில் பழைய கலகலப்பான நயனைப் பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.

 

அஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா?

Anushka Pair Up With Ajith His 53rd Movie

சென்னை: அஜீத் குமாரின் 53வது படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஜிம்முக்கு சென்று கடும் உடற்பயிற்சி செய்து உடலை கும்மென்று ஆக்கியுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும்.

விஜய வாஹினி தயாரிக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அஜீத் குமார் தனது சொந்த பட நிறுவனத்தை துவங்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சாகக் கிடக்கிறது. உண்மை என்ன என்பது அஜீத் சொன்னால் மட்டுமே தெரியும்.

 

கமலிடம் பாராட்டு பெற்ற வவ்வால் பசங்க இசையமைப்பாளர் ஜெரோம் புஷ்பராஜ்

Kamal Appreciates Vavwal Pasanga Mu

சென்னை: வவ்வால் பசங்க பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல் அப்பட இயக்குனரை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஸ்ரீராஜி மூவிஸ் சார்பில் ஏ.கே.ஆர்.தயாரிக்கும் படம் வவ்வால் பசங்க. இதில் புதுமுகங்களாகிய ராகுல், உத்ரா உன்னி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். சபரி, கம்பீரம் போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். படத்திற்கு இசை ஜெரோம் புஷ்பராஜ்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அதில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டார். தற்போதுள்ள டிரெண்டுக்கேற்ப ஜெரோம் அருமையாக இசையமைத்துள்ளார் என்று கமல் பாராட்டியுள்ளார். கமல் ஹாசனும், ரஜினிரகாந்தும் தங்களை பாராட்ட மாட்டார்களா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஜெரோமுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

ஜெரோம் ஏற்கனவே தொடக்கம் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அப்படத்தில் அவரது திறமை பேசப்படவில்லை. தற்போது அவர் செங்காடு, மலர் மேல்நிலைப் பள்ளி மற்றும் தப்பு தாலங்கள் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

வாழ்த்துக்கள் ஜெரோம்...

 

காலையில் எழுந்ததும் முகம் கழுவாதீங்க.. சல்மாவின் அட்வைஸ்!

Salma Never Washes Face Morning Look Young

லண்டன்: நான் காலையில் எழுந்ததுமே எனது முகத்தைக் கழுவ மாட்டேன். அப்படியே விட்டுவிடுவேன். இதுதான் எனது முகம் இந்த வயதிலும் பொலிவுடன் திகழக் காரணம் என்று ஹாலிவுட் நடிகை சல்மா ஹேயக் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் இன்று வரை ஹாட் நாயகிகள் பட்டியலில் நீடித்து வருவபர் சல்மா. வயது 46 ஆனாலும் இன்னும் ஜொலிக்கிறார். இவரது இளமைக்கும், வயதுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது.

இந்த நிலையில் தனது அழகு ரகசியத்தை கிசுகிசுத்துள்ளார் சல்மா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவ மாட்டேன். அப்படியே விட்டு விடுவேன். இதுதான் எனது முகம் பொலிவுடன் பளிச்சென, தோல் சுருக்கமின்றி விளங்க முக்கியக் காரணம்.

மேலும் எனது தோல் பாதுகாப்புக்காக நான் சிறப்பாக எதையும் செய்வதில்லை. ஆரோக்கியமாக சாப்பிடுகிறேன். இதுதான் எனது சருமம் இயல்பான நிலையில் இருக்க இன்னொரு முக்கியக் காரணம்.

என்னைப் போன்ற முதுமையை நெருங்கும் பெண்களுக்கும் சரி, இளம் பெண்களுக்கும் சரி நான் சொல்ல விரும்பும் அட்வைஸ், இயற்கையாக இருங்கள், இயற்கையாகவே உங்களது சருமத்தைப் பாதுகாத்து பராமரித்து வாருங்கள். அதுவே போதுமானது என்று கூறுகிறார் சல்மா.