திருவனந்தபுரம்: எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள மம்முட்டி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகின.
மம்முட்டி இடது சாரி கட்சிகள் மீது அபிமானம் கொண்டவர் என்பதால், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் போட்டியிடக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தி மலையாள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசியல் பிரமுகர்களிடையேயும் பரபரப்பைக் கிளப்பியது.
இது குறித்து மம்முட்டியிடம் கேட்டபோது, "இந்த அரசியல் செய்திக்கும் எனக்கும் ம் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை எனும்போது, இபப்டியெல்லாம் செய்திகள் வெளியிடுவது தேவைதானா... இது போன்ற தவறான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.