சிம்புவின் வேட்டை மன்னன் ட்ராப்?

சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட வேட்டை மன்னன் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு ‘வாலு', ‘வேட்டைமன்னன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டிலுமே அவருக்கு ஜோடி ஹன்சிகா. இரண்டு படங்களும் வெளியாகுமா என்றே தெரியாத குழப்ப நிலை நீடித்து வருகிறது.

இதில் வாலு படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தைத் தொட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சிம்புவின் வேட்டை மன்னன் ட்ராப்?

ஆனால் ‘வேட்டை மன்னன்' படம் குறித்து சொல்ல ஒன்றுமே இல்லை. அதாவது இன்னும் ஆரம்பக்கட்டத்தையே தாண்டவில்லை இந்தப் படம்.

புதுமுக இயக்குனர் நெல்சனோ இந்தப் படம்தான் தனக்கு வாழ்க்கையே என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போதும் ஷூட்டிங் தொடங்கவில்லை. தயாரிப்பாளரால்தான் இந்த இழுபறி என சிம்பு தரப்பும், சிம்புவால்தான் இந்த நிலை என தயாரிப்பாளர் தரப்பும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிம்பு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். எனவே, இனியும் வேலைக்காகாது என்பதைப் புரிந்து கொண்ட நெல்சன் தன்னுடைய அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார். இதுகுறித்து வெளிப்படையாக அறிவித்துவிட்டு சிம்பு படத்திலிருந்து கழன்று கொள்ளப் போகிறாராம் அவர்.

 

மேலும் 75 தியேட்டர்களில் பாண்டிய நாடு... மகிழ்ச்சியில் விஷால்!

மேலும் 75 தியேட்டர்களில் பாண்டிய நாடு... மகிழ்ச்சியில் விஷால்!  

தீபாவளிக்கு வெளியான படங்களில் பாராட்டுகளையும், கடந்த இரு தினங்களாக வசூலையும் குவிப்பதில் முதலிடம் வகிக்கிறது பாண்டிய நாடு. கிட்டத்தட்ட 250 அரங்குகளுக்கு மேல் வெளியான இந்தப் படம், கடந்த 4 தினங்களாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

வார நாட்களிலும் கூட 90 சதவீத ரசிகர்கள் வருவதால், இந்தப் படத்துக்கு கூடுதலாக அரங்குகளைத் தர தியேட்டர்காரர்கள் முன்வந்துள்ளனர். இதுவரை 75 அரங்குகள் இந்தப் படத்துக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

அந்த வகையில் இந்த தீபாவளிக்கு அதிக அரங்குகளில் வெளியாகியுள்ள படம் என்ற பெருமையும் பாண்டிய நாட்டுக்கு கிடைத்துள்ளது.

கேரளாவில் பாலக்காட்டில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இங்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து, கேரளா முழுவதும் படத்தை இந்த வாரம் வெளியிட்டுள்ளனர்.

தமிழகம் தவிர, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் பாண்டிய நாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷாலுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

 

3வது முறையாக வெங்கடேஷுடன் நயன்தாரா ரொமான்ஸ்

3வது முறையாக வெங்கடேஷுடன் நயன்தாரா ரொமான்ஸ்

சென்னை: நயன்தாரா தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் 3வது முறையாக ஜோடி சேர்கிறார்.

நயன்தாரா தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

படத்திற்கு ராதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நயன் வெங்கடேஷுடன் சேர்ந்து லக்ஷ்மி மற்றும் துளசி ஆகிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் இவர்கள் மீண்டும் ஜோடி சேர்கின்றனர்.

இந்த படம் காதல் மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு படமாக இருக்குமாம். படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. படத்தில் வெங்கடேஷ், நயன் ஜோடியை வித்தியாசமாக காட்ட உள்ளாராம் இயக்குனர்.

 

'ஹீரோவைத் திருப்திப்படுத்த ஓடாத படத்துக்கு தியேட்டரை ப்ளாக் பண்ணுவதா?' - கேயார் கண்டனம்

'ஹீரோவைத் திருப்திப்படுத்த ஓடாத படத்துக்கு தியேட்டரை ப்ளாக் பண்ணுவதா?' - கேயார் கண்டனம்

சென்னை: ஹீரோவைத் திருப்திப்படுத்த ஓடாத படத்துக்காக தியேட்டரை ப்ளாக் பண்ணி வைப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தெரிவித்தார்.

இன்று காலை நடந்த காதல் சொல்ல ஆசை படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சிகள் வெளியீட்டு விழாவில் பேசிய கேயார், "முன்பெல்லாம் தீபாவளிக்கு 14 படங்கள் வரை வெளியாகின.

இப்போது அந்த நிலை மாறி, மூன்று படங்கள் வெளியாவதே கஷ்டம் என்றாகிவிட்டது. இந்தப் படங்களுக்கே போதிய தியேட்டர் கிடைக்காத நிலை. அதே நேரம் ஒரே படத்துக்கு அதிக அரங்குகள் ஒதுக்கப்படுவதும் நல்லதுதான். வேறு வழியில்லை... பைரசியை ஒழிக்க இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆனால் ஓடாத படத்தை ஓட்ட வைக்க வேண்டும் என்பதற்காக தியேட்டர்களை ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் பல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை. அஞ்சு பேர், பத்து பேரை வைத்துக் கொண்டு படத்தை ஓட்டுகிரார்கள். நடிகரைத் திருப்திப்படுத்த செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர்கள் இதை வெளிப்படுத்த வேண்டும்," என்றார்.

முன்பெல்லாம் ஜேகே ரித்தீஷ், பவர் ஸ்டார் போன்றவர்கள் செய்த இந்த வேலையை இப்போது முன்னணி நடிகர்களே செய்கிறார்கள். இதைத்தான் கேயார் இப்படி குத்திக் காட்டியுள்ளார்.

 

மலையாள தயாரிப்பாளர் வழக்கு - நய்யாண்டி படத்துக்கு இடைக்காலத் தடை!

சென்னை: தனுஷ், நஸ்ரியா ஜோடியாக நடித்து சமீபத்தில் ரிலீசான நய்யாண்டி படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை நீதிமன்றம்.

நய்யாண்டி படம் ரிலீசுக்கு சில வாரங்களுக்கு முன்பிலிருந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது. படத்தின் நாயகி நஸ்ரியா தன் தொப்புளுக்கு டூப் போட்டதாகக் கூறி தையா தக்கா என ஒருவாரம் குதித்து அடங்கினார். அதுவே படத்து எதிர்மறை விளம்பரமாகி, கவிழ்த்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம கழ்த்து, இந்தப் படத்தை எதிர்த்து மலையாள தயாரிப்பாளர் மணி சி.கப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மலையாள தயாரிப்பாளர் வழக்கு - நய்யாண்டி படத்துக்கு இடைக்காலத் தடை!

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் நான் மலையாளத்தில் எடுத்து வெற்றிகரமாக ஓடிய 'மேலப்பரம்பில் ஆன் வீடு' என்ற படத்தின் கதைதான் 'நய்யாண்டி'. என்னிடம் அனுமதி பெறாமல் இந்த படத்தை எடுத்துள்ளனர். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மணி சி.கப்பன் மேலும் கூறும்போது, "நய்யாண்டி' படத்தை யார் பார்த்தாலும் மலையாள படத்தின் தழுவல் என்பதை புரிந்து கொள்வார்கள். என் படத்தில் இருந்து 12 காட்சிகளை அப்படியே காப்பியடித்து படமாக்கி உள்ளனர். வசனமும் அப்படியே உள்ளது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தேன். இந்த நிலையில் தமிழில் எனக்கு தெரியாமல் எடுத்துள்ளனர்," என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நய்யாண்டி' படத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்தப் படம் மலையாளப் படத்தின் தழுவல்தான் என இயக்குநர் சற்குணம் ஏற்கெனவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

 

எதிர்மறை விமர்சனங்கள்... அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு

எதிர்மறை விமர்சனங்கள்... அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு  

இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படம் மிகவும் நீளமாக இருப்பதாகவும், சில காட்சிகள் நகைச்சுவை என்ற பெயரில் இழுவையாக உள்ளதாகவும் கூறப்பட்டதையடுத்து, இப்படத்தின் 25 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடல் காட்சியும், சில வசனங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காட்சிகளை நீக்கிய ‘அழகுராஜா' கடந்த ஞாயிறு மாலை முதல் டிஜிட்டல் வசதிகள் கொண்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் இன்னும் பல திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இந்த காட்சிகளை நீக்கிய புதிய பிரதி திரையிடப்படுகிறது.

 

இரண்டாம் உலகத்துக்கு யு சான்று... நவம்பர் 22-ல் வெளியீடு!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாம் உலகம் படம் வரும் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்று வழங்கியுள்ளனர்.

ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள ‘இரண்டாம் உலகம்' கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்தது. கற்பனை உலகைச் சித்தரிக்கும் வித்தியாசமான படமாக இதனை எடுத்துள்ளார் செல்வராகவன். பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார்.

இரண்டாம் உலகத்துக்கு யு சான்று... நவம்பர் 22-ல் வெளியீடு!  

இந்நிலையில், சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை துறையினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு‘ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், வித்தியாசமான கதைக் களத்துடன் படத்தை எடுத்துள்ள படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர்.

இரண்டாம் உலகத்துக்கு யு சான்று... நவம்பர் 22-ல் வெளியீடு!

செல்வராகவனின் படம் யு சான்று பெறுவது இதுவே முதல்முறை.

தமிழ், தெலுங்கு (வர்ணா) என இரண்டு மொழிகளிலும் வரும் நவ.22-ந் தேதி வெளியிடவுள்ளனர்.

 

ரஜினி படம் வராததால சன்னி லியோன் படத்தை ரிலீஸ் பண்றாங்களாம்...காலக் கொடுமடா சாமீ!

ஒரு சினிமா மேட்டரில் எப்படியாவது ரஜினி பெயரை கோர்த்துவிட்டு பரபரப்பாக்குவது பாலிவுட்டுக்கு கைவந்த கலை.

இந்த முறை சன்னி லியோன் படத்துக்கு ரஜினி பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 12-ம் தேதி கோச்சடையான் வெளியாகாததால், அந்தத் தேதியில் சன்னி லியோன் படம் ரிலீசாகும் என தெரிவித்துள்ளனர்.

ஜிஸ்ம் 3 படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான செக்ஸ் பட நடிகையான சன்னி லியோனுக்கு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் அவர் நடித்து வெளியாகும் இரண்டாவது இந்திப் படம் ஜாக்பாட். கைஸட் கஸ்டாட் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ரஜினி படம் வராததால சன்னி லியோன் படத்தை ரிலீஸ் பண்றாங்களாம்...காலக் கொடுமடா சாமீ!

இந்த நிலையில் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ள மொழிகளில் வரும் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி அன்றைய தினம் இந்தப் படம் வராது என இப்போது தெரிய வந்துள்ளது.

எனவே டிசம்பர் 13-ம் தேதி சன்னி லியோன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

"ரஜினி படம் வந்தால் எல்லோரும் அவர் படத்தைப் பார்க்கத்தான் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் பாலிவுட்டில் அவர் படத்துடன் மோத வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இப்போது அவர் படம் தள்ளிப் போயுள்ளதால் தைரியமாக எங்கள் படத்தை முன்கூட்டியே வெளியிடுகிறோம்," என்று இயக்குநர் கஸ்டாட் தெரிவித்துள்ளார்.

ரஜினி படம் வராததால சன்னி லியோன் படத்தை ரிலீஸ் பண்றாங்களாம்...காலக் கொடுமடா சாமீ!

தன் படம் முன்கூட்டியே, அதுவும் ரஜினி படம் வெளியாகவிருந்த தேதியில் ரிலீசாவது சந்தோஷமாக உள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

காலக் கொடுமடா சாமீ!

 

புகாரைத் திரும்பப் பெறக் கூறி மிரட்டப்பட்டாரா ஸ்வேதா மேனன்...?

கொல்லம்: காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு மீது கொடுத்த பாலியல் சில்மிஷப் புகாரைத் திரும்பப் பெறாவிட்டால் வருமான வரி சோதனை வரும் என்று கூறி மிரட்டல்கள் வந்ததால்தான் நடிகை ஸ்வேதா மேனன் தான் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப்பு. இவருக்கு வயது 73 வயதாகிறது. கொல்லத்தில் நடந்த படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஸ்வேதாவை உரசியும், அடிக்கடி அருகில் போய் நெருக்கமாக நின்றும் இவர் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

ஸ்வேதாவும், தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், பலமுறை தான் தேவையே இல்லாமல் தொடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் குருப்பு மீது போலீஸிலும் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

புகாரைத் திரும்பப் பெறக் கூறி மிரட்டப்பட்டாரா ஸ்வேதா மேனன்...?

ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது புகாரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த ஸ்வேதா அடுத்த நாள் போலீஸில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார்.

இப்படி திடீரென ஸ்வேதா மாறியதற்கு பின்ணியில் ஏதோ நடந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சர்ச்சைக் கிளப்பியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வரான அச்சுதானந்தன் கூறுகையில், ஸ்வேதா மேனன் புகாரை வாபஸ் பெற்ற பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது. அது என்ன என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும், கேரள காங்கிரஸ் கட்சியினர் சுவேதா மேனனை மிரட்டி புகாரை வாபஸ் பெறச் செய்துள்ளனர் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, காங்கிரஸ் தரப்பிலிருந்து, ஸ்வேதா மேனன் சொத்துக்கள் குறித்து வருமான வரி விசாரணை வரும், ரெய்டு வரும் என மிரட்டல்கள் வந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பயந்துதான் எதற்குப் பிரச்சினை என்று தனது புகாரை ஸ்வேதா திரும்பப் பெற்று விட்டதாக பேச்சு அடிபடுகிறது.

இடையில் என்ன நடந்தது என்பதை ஸ்வேதாதான் விளக்க வேண்டும்.

 

ஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயற்சி.. மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்

ஹைதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயன்ற மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓடினான்.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் பேரனும் பிரபல தெலுங்கு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிராக தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா பகுதியில் ஜூனியர் என்.டி.ஆர். படங்களை திரையிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயற்சி.. மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்

இந்த நிலையில் ஹைதராபாத் நகரில் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர் கையில் துப்பாக்கியுடன் புகுந்தான். வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து மெதுவாக நடந்து போனவனை காவலுக்கு நின்ற பாதுகாவலர்கள் பார்த்து விட்டனர். அவனைப் பிடிக்க முயற்சித்த போது துப்பாக்கியுடன் மர்ம மனிதன் ஓடிவிட்டான்.

வெளியே நிறுத்தி வைத்திருந்த நம்பர் பிளேட் இல்லாத வண்டியில் ஏறி அவன் தப்பித்ததாக காவலர்கல் தெரிவித்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் ஜூனியர் என்.டி.ஆர். புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகிறார்கள்.

 

பாண்டிய நாடு - சிறப்பு விமர்சனம்

Rating:
4.0/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷால், பாரதிராஜா, லட்சுமி மேனன், சூரி, லோஹித் அஷ்வா

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: மதி

தயாரிப்பு : விஷால்

இயக்கம் : சுசீந்திரன்

சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில், தன் தவறுகள் என்னவென்பதை உணர்ந்து, அதைத் தானே சரி செய்துகொள்ளும் ஹீரோக்கள் இன்றைக்கு யாருமில்லை. என்னதான் முன்னணி நடிகர் என்றாலும் தன் இமேஜை நம்பிக் கொண்டு கதையில் கோட்டை விடுவதுதான் வழக்கம்.

ஆனால் விஷாலின் அணுகுமுறை மெச்சத்தக்கது.

பாண்டிய நாடு - சிறப்பு விமர்சனம்  

சத்யம் படத்தில் விழுந்தவர், அடுத்தடுத்த தவறுகளிலிருந்து கற்ற பாடங்களை வைத்து தானே சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்து, ஒரு நல்ல இயக்குநருக்கு அடங்கிய நடிகராக நடித்து மீண்டும் வெற்றியை ருசி பார்த்திருக்கிறார். வாழ்த்துகள்!

அப்படி ஒன்றும் புதிய கதை இல்லைதான். மகனைக் கொன்ற ஒரு வில்லனை தந்தையும் சகோதரனும் பழி வாங்கும் கதை. ஆனால் இந்த ஒற்றைவரிக் கதைக்கு சுசீந்திரன் அமைத்திருக்கும் பக்காவான திரைக்கதைதான் உண்மையான ஹீரோ!

விஷாலை விட இந்தப் படத்தில் அதிகம் கவர்பவர் பாரதிராஜா. மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்.. இல்லை.. கல்யாண சுந்தரமாய் வாழ்ந்திருக்கிறார். நாடி நரம்பு ரத்தம் சதையெங்கும் சினிமா ஊறிப்போன அந்த மாபெரும் கலைஞனைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் தளும்பின. தமிழ் ரசிகர்கள் இவருக்காகவே ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்!

பாண்டிய நாடு - சிறப்பு விமர்சனம்

மதுரைதான் கதைக் களம். ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர் பாரதிராஜா. அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அரசின் கனிம வளத்துறையில் பணியாற்றுகிறார். இளைய மகன் விஷால் செல்போன் கடை வைத்திருக்கிறார்.

அரசின் விதிகளை மீறி கிரானைட் வெட்டியெடுக்கும் கும்பலின் நிறுவனத்தை இழுத்து மூடுகிறார் விஷாலின் அண்ணன். பதிலுக்கு அண்ணனை போட்டுத் தள்ளுகிறது வில்லன் கும்பல். மகனைப் பறி கொடுத்த சோகமும் ஆத்திரமும் அப்பா பாரதிராஜாவுக்கு. அண்ணனை இழந்து, அதற்காகப் பழிவாங்கும் சக்தியில்லாத இயலாமையில் தம்பி விஷால். ஆனால் அந்த கும்பலை ஏதாவது செய்தாக வேண்டும்... என்ன செய்கிறார்கள் என்பது தீப் பிடிக்கும் பரபர க்ளைமாக்ஸ்!

பள்ளி கல்லூரி நாட்களில் விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களைப் பார்த்துவிட்டு, அந்த உணர்வு மாறாமலேயே வீடு திரும்பி, நீண்ட நேரம்வரை நண்பர்களுடன் கூட அதே மனநிலையோடு பேசியது நினைவிருக்கிறதா... ரொம்ப நாட்களுக்குப் பிறகு அப்படியொரு உணர்வை இந்தப் படம் தந்தது.

பாண்டிய நாடு - சிறப்பு விமர்சனம்

காரணம் சினிமாத்தனம் அதிகமில்லாத சுசீந்திரனின் திரைக்கதையும் கச்சிதமான இயக்கமும். இந்தக் காட்சிக்கு அடுத்து இதுதான் நடக்கும் என எந்த இடத்திலும் சொல்ல முடியாத அளவுக்கு கவனமெடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.

ஒரு பக்கம் விஷாலின் காதல், இன்னொரு பக்கம் வில்லனின் பின்னணி, அடுத்து அதற்கு இணையாக விஷாலின் குடும்பப் பின்னணி என தனித் தனி ட்ராக்குகளில், ஆனால் சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது திரைக்கதை. இவை அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் சந்திக்கும்போது மனசெல்லாம் பாண்டிய நாட்டில் ஒன்றிவிட்டிருப்பதை உணர முடிகிறது!

அடக்கமான, இயலாமை மிக்க இளைஞனாக வரும் விஷாலை இனி ரொம்பப் பேருக்குப் பிடிக்கும். அத்தனை சிறப்பான நடிப்பு. தன்னை முழுமையாக இயக்குநரிடம் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு பங்கம் நேரவில்லை. லட்சுமி மேனனுடன் அவர் காதல் பண்ணும் காட்சிகள் துள்ளல். ஒரு ஹீரோவாக இதுதான் அவரது மிகச் சிறந்த படம். தயாரிப்பாளர் என்ற முறையிலும்கூட!

லட்சுமி மேனனின் நடிப்பும் அழகும் படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டே போகிறது. கடுப்பேற்றும் அந்த கலாசிபை பாட்டைக் கூட உட்கார்ந்து பார்க்க வைத்துவிடுகிறது லட்சுமியின் அழகும் நளினமும்!

தேவையான இடங்களில் மட்டும் சூரியை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். காமெடியனுக்கு எப்போது எங்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை இந்தப் படம் பார்த்தாவது கத்துங்கப்பா...

பாண்டிய நாடு - சிறப்பு விமர்சனம்

படத்தின் எதிர்மறையான பக்கம் என்று பார்த்தால்... இத்தனை பெரிய முறைகேடுகளுக்கு காரணமான அதிகார மேலிடம் தண்டிக்கப்படாமல் போவதுதான். ஒருவேளை அப்படி காட்சிகள் வைத்திருந்தால், அது தெலுங்குப் பட ரேஞ்சுக்குப் போயிருக்குமோ... அல்லது படத்தையே வெளிவராமல் செய்திருக்குமோ என்னமோ..

இமானின் இசை, மதியின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு பக்க பலம்.

கமர்ஷியல் பார்முலா கதைகளை அதிகபட்ச ரியலிசத்தோடு தருவதில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார் சுசீந்திரன்!

 

பிரபு மகன் விக்ரம் நடிக்கும் புதிய படம் தலப்பாக்கட்டி!

பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்துக்கு தலப்பாக்கட்டி என பிரபல பிரியாணி கடையின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

கும்கி மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. முதல் படம் வெற்றி பெற்றதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர் அவசரப்படாமல் நிதானமாக தனக்கான படங்களைத் தேர்வு செய்து வருகிறார்.

பிரபு மகன் விக்ரம் நடிக்கும் புதிய படம் தலப்பாக்கட்டி!

இப்போது சிகரம் தொடு, இவன் வேற மாதிரி ஆகிய இரு படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, அடுத்து ஒப்புக் கொண்டுள்ள புதிய படத்துக்கு தலப்பாக்கட்டி என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை சத்ய சிவா இயக்குகிறார். கிருஷ்ணா - பிந்து மாதவி நடித்த கழுகு படத்தை இயக்கியவர் இந்த சத்யசிவா. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார்.

சத்ய சிவா ஏற்கெனவே சிகப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்!

பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்!

சென்னை: பிரபல சிரிப்பு நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுய நினைவிழந்து கோமாவில் உள்ள அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் சர்ஜரி' செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.

சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

நேற்று முன்தினம் அவர் திடீரென மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சுய நினைவை இழந்து, 'கோமா' நிலையில் உள்ளார் சிட்டிபாபு.

மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.