கோ எனது சொந்த அனுபவம் : கே.வி.ஆனந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோ எனது சொந்த அனுபவம் : கே.வி.ஆனந்த்
1/22/2011 10:50:50 AM
'கோ' படத்தின் கதை எனது சொந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டது என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறினார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் குமார், ஜெயராமன், ஜெயந்த் தயாரிக்கும் படம் 'கோ'. ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இயக்குனர் பிரியதர்ஷன் வெளியிட, பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின், மற்றும் படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது:
எனது மூன்றாவது படம் 'கோ'. இந்தப் படத்திலும் நல்ல டீம் அமைந்துள்ளது. நான் ஒளிப்பதிவாளராவதற்கு முன் பத்திரிகை புகைப்பட கலைஞராக பணியாற்றினேன். அப்போது எனக்கும், எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சுறுசுறுப்பானவர்கள். அந்த கேரக்டருக்கு ஜீவாதான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். பெண் நிருபர் கேரக்டருக்கு தமிழ் முகமாகவும் இருக்க வேண்டும் கொஞ்சம் ஆங்கில ஸ்டைலும் இருக்க வேண்டும் என்ற வகையில் ஹீரோயின் தேடியபோது கார்த்திகா பொருத்தமானவராக தெரிந்தார். இருவருமே போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 5 பாடல்கள் இடம் பெறுகிறது. ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புடையதாக அமைந்துள்ளது.


Source: Dinakaran
 

அமிதாப்புடன் நடிக்கிறேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமிதாப்புடன் நடிக்கிறேனா?
1/22/2011 10:42:46 AM
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள 'ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இதில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளேன். யதார்த்தமான கதைகளில் நடிக்கும்போதுதான் நம் திறமையை நிரூபிக்க முடியும். அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பூரி ஜெகன்னாத் இயக்கும் 'புட்டா' என்ற படத்தில் அமிதாப்புடன் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அந்தப் படத்துக்கு என்னிடம் கால்ஷீட் கேட்டது உண்மைதான். அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். அமிதாப்புடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். தமிழில், 'வந்தான் வென்றான்' படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறேன். இதில் எனது கேரக்டர் மாடர்னானது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


Source: Dinakaran
 

டுவிட்டரில் உறவாடும் அப்பா-மகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டுவிட்டரில் உறவாடும் அப்பா-மகள்
1/21/2011 2:40:27 PM
நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் என இணையதளம் மூலம் நண்பர்கள், ரசிகர்களுடன் பேசிக்கொள்வது அதிகரித்து வருகிறது. தமிழ் நடிகைகள் பலர் டுவிட்டரில் இணைந்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் கமல் மகள் ஸ்ருதி மிஞ்சிவிட்டார். தன் அப்பா கமலிடம் கூட டுவிட்டரில் தான் பேசிக் கொள்கிறாராம். ஏன் இப்படி என கேட்டதற்கு, ‘அப்பாவை அடிக்கடி சந்திப்பது அரிது. அதனால் டுவிட்டரில் அவருடன் பேசிக்கொள்வேன்’ என்கிறார் கமல் மகள் ஸ்ருதி.


Source: Dinakaran
 

மலையாள படத்தில் ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாள படத்தில் ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!

1/21/2011 2:49:53 PM

'பழஸிராஜா'வில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார் சரத்குமார். இப்போது இன்னொரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் சரத். அதுவும் ஹீரோவாக நடிக்கிறார் சரத். படத்தின் பெயர் 'மெட்ரோ’. இதுபற்றி சரத் கூறுகையில், 'ஏற்கெனவே நேரடி தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். மலையாளத்தில் 'பழஸி ராஜா'வில் நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மலையாளத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கவும் மேலும் நிறைய வாய்ப்பு வருகிறது. பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிப்பேன்'என்றார் சரத். 


Source: Dinakaran