ஆடியோ ரிலீசை புறக்கணித்த ஹீரோயின் : இயக்குனர் விளக்கம்

Director Description why hreoin ignore audio release சென்னை: ஆடியோ ரிலீசை ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் புறக்கணித்தாரா என்றதற்கு இயக்குனர் பதில் அளித்தார்.நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கும் படம் 'புத்தகம்'. சத்யா ஹீரோ. ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயின். ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இசை. பட புரமோஷனுக்கு ஹீரோ, ஹீரோயின் வரவேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீசுக்கு படத்தில் நடித்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் பங்கேற்கவில்லை.

இதுபற்றி இயக்குனர் விஜய் ஆதிராஜிடம் கேட்டபோது,'பட புரமோஷனுக்கு வரவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருப்பது நிஜம்தான். முதலில் ஆடியோ கேசட் விழா சத்யம் தியேட்டரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் விஜய்யின் 'துப்பாக்கி' ரிலீசையொட்டி தியேட்டர் கிடைக்கவில்லை. இதனால் வேறு தேதியில் நட்சத்திர ஓட்டலில் விழா நடத்த ஏற்பாடானது. இந்த தேதியில் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் மும்பையில் இந்தி பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக கூறினார். அதற்கு சம்மதித்தேன். அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் அவர் பேசுவதாக இருந்தது. தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அதை செய்ய முடியவில்லை. இப்படம் மேன்ஷனில் தங்கி இருக்கும் 3 இளைஞர்களை பற்றிய கதையாக உருவாகி உள்ளது. டிவி நிருபராக ரகுல் நடிக்கிறார்' என்றார்.ரகுல் ப்ரீத் சிங் கூறும்போது, 'புத்தகம் படத்தில் நல்ல கேரக்டர். இந்தியில் நடித்தாலும் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆசை. ஆடியோ விழாவில் பங்கேற்க முடியாததற்கு இயக்குனரிடம் முன் அனுமதி வாங்கி இருந்தேன்' என்றார்.
 

திஷா பாண்டே படத்துக்கு உல்டா ஷூட்டிங்

Ulta Shooting for thisha pande Film சென்னை: திஷா பாண்டே நடிக்கும் படத்தின், ஒரு பாடல் காட்சி மட்டும் தமிழ் நாட்டில் படமாக்கப்பட்டது.இதேஷ், திஷா பாண்டே நடிக்கும் படம் 'சிக்கி முக்கி'. எழுதி இயக்குகிறார் ஸ்ரீகந்தராஜா. இவர் கூறியதாவது:'என்னவோ பிடிச்சிருக்கு', 'எழுதியது யாரடி' போன்ற படங்களை தயாரித்துள்ளேன். இப்படம் மூலம் இயக்குனராகி உள்ளேன். காதலுடன் சஸ்பென்ஸ் கலந்த கதையாக இது உருவாகிறது. வழக்கமாக கோலிவுட் படங்களுக்கு பெரும்பாலும் தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடக்கும். ஒன்று அல்லது 2 பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடுகளுக்கு செல்வதுண்டு. 'சிக்கி முக்கி' படத்தை பொறுத்தவரை இது உல்டாவாக நடந்துள்ளது. இதன் ஷூட்டிங் பெரும்பகுதி மலேசியாவில் நடந்தது. ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் சென்னையில் படமாக்கப்பட்டது. இதேஷ், திஷா பாண்டே ஜோடியுடன் கஞ்சா கருப்பு, சூரி, நகுலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லியோ.டி ஒளிப்பதிவு. ராம்ஜி வசனம். கவுதம் இசை. செந்தில்குமார் தயாரிப்பு.இவ்வாறு ஸ்ரீகந்தராஜா கூறினார்.
 

1 வருடம் ஓய்வில் இருந்த மனோரமா நடித்தார்

Manorama acted aftetr 1 year rest சென்னை: ஒரு வருடத்துக்கு பிறகு மனோரமா ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். சூர்யா படத்துக்காக அவர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஹரி.1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர் மனோரமா. மூட்டு வலி, தவறி விழுந்ததில் தலையில் ரத்த கட்டு, மூச்சு திணறல் போன்ற நோயால் அவதிப்பட்டார். இதற்காக அறுவை சிகிச்சையும் நடந்தது. இதையடுத்து கடந்த 1 வருடமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடைசியாக அவர் 'பொன்னர் சங்கர்' என்ற படத்தில் நடித்தார். தற்போது  குணம் அடைந்தார்.

இதையடுத்து சூர்யா நடிக்க ஹரி இயக்கும் 'சிங்கம் 2' படத்தில் நடித்தார். அவர் நடித்த காட்சி சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது. இதுபற்றி ஹரி கூறும்போது,'உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே ஆச்சி (மனோரமா) யிடம் சிங்கம் 2 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். முதல்பாகத்தில் ஏற்ற வேடமே ஏற்கிறீர்கள். நிச்சயம் குணம் அடைந்து ஷூட்டிங் வருவீர்கள் என்றேன். அதன்படி அவர் குணம் அடைந்தார். அவர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. குணம் அடைந்தபிறகு முதல் முறையாக எங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அவரை பட யூனிட்டே கரவொலி எழுப்பி வரவேற்றது. வழக்கம்போல் அவர் தனது காட்சிகளை மிக எளிதாக நடித்து முடித்தார். அடுத்த வருடம் படம் ரிலீஸ் ஆகிறது' என்றார்.
 

கிசு கிசு - ஆசைப்படும் இயக்கம் பொறுத்த ஹீரோயின்

Desires director நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

வன்முறை, கவர்ச்சி படங்களை சென்சாருக்கு திரையிடும்போது சில படங்களுக்கு  சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுகிறதாம்... மறுக்கப்படுகிறதாம்... ஆனால் அதேபடம் ரிவைசிங் கமிட்டியிடம் சான்றிதழுக்காக திரையிடும்போது சில 'கட்'களுடன் சான்றிதழ் தரப்படுகிறதாம். இதால தணிக்கை குழுவினருக்கும், ரிவைசிங் கமிட்டிக்கும் இடையே மோதல் உருவாகுதாம். கள்ள கன் படத்துக்கு சமீபத்துல இந்த பிரச்னை வந்துச்சாம். அதேபோல் டோலிவுட்லயும் ஒரு படத்துக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுச்சாம். சென்சார் குழு உறுப்பினர்களின் கருத்து வேறுபாடு உயர் அதிகாரிகளுக்கு மனவருத்தம் தந்திருக்கிறதாம்... இருக்கிறதாம்...

மில்க் இயக்கம் படத்துல நடிச்சவங்களுக்கு மேக்கப் போடச் சொன்னதும் அதிர்ச்சியாயிட்டாங் களாம்... ஆயிட்டாங்களாம்... ஹீரோ, ஹீரோயினுக்கு கருப்பு சாயம் பூசி கலரையே மாத்திட்டாங்களாம். அடுத்து காஸ்ட்யூம் கொடுத்தப்ப டபுள் ஷாக் ஆயிட்டாங்களாம். அதுவும் அழுக்கடைந்த கந்தல் துணிதானாம். இந்த துணிய ஷூட்டிங் முடியறவர துவைக்கக்கூடாதுனு இயக்கம் கண்டிஷன் போட்டாராம். இதுல வாயடைச்சி போன ஹீரோவும், ஹீரோ யினும் அதுபத்தி வெளியில மூச்சுவிடாம தம்கட்டி பொறுத்துகிட்டாங்களாம்... பொறுத்துகிட்டாங்களாம்...

தேவியான ஸ்ரீ இசை இயக்கத்துக்கு மனசுக்குள்ள நடிப்பு ஆச ஒளிஞ்சிட்டிருக்காம்... இருக்காம்... ஸ்டேஜ்ல ஆடிகிட்டே பாட்ற அவரோட டேலன்ட்ட பாத்த சில இயக்கங்க நடிக்கறதுக்காக கூப்பிட்டாங் களாம். நடிக்கறதா இருந்தா மழை ஹீரோயினோடதான் நடிப்பேன்னு இசை இயக்கம் கண்டிஷன்
போட்டிருக்காராம்... இருக்காராம்...
 

நயன்தாராவின் ஜொலிக்கும் அழகின் ரகசியம் என்ன?


Secret Nayanthara S Glowing Skin  
சென்னை: நடிகை நயன்தாரா பார்க்க பளிச்சென்று இருக்க கேரளாவின் ஆயுர்வேத மருத்துவம் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த நயன்தாரா தனது மறுபிரவேசத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகிவிட்டார். பிரபுதேவாவை விட்டுப் பிரிந்த நயனுக்கும், ஆர்யாவுக்கும் காதல் என்று பேச்சு கிளம்பியது. அதை எல்லாம் அவர் கண்டுகொள்வதாகவே இல்லை. பேசுபவர்கள் பேசட்டும் நான் என் வேலையை மட்டும் பார்க்கிறேன் என்று உள்ளார்.

நயன்தாரா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் எப்பவும் மினுமினுப்பாகவே இருக்கிறார். அதற்கு காரணம் சேச்சி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து அழகைக் கூட்டிக் கொள்கிறார். இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் கேரளா சென்று அங்கு 4 நாட்கள் தங்கி அழகை மெருகேற்றிவிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது நயன் ஆர்யாவுடன் ராஜா ராணி, அஜீத் குமாருடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
 

நான் ஏன் கவுண்டமணியை காப்பியடிக்கனும், வடிவேலுவை போட்டியா நினைக்கனும்... சந்தானம்

 

தேவையற்ற லக்கேஜ்களை தலையில் சுமக்கமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

A R Rahman Interview Jaya Tv

நான் à®'ரு கருவிதான். என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்றோ, தேவையற்ற லக்கேஜ்களையோ தலையில் ஏற்றிக்கொள்ளமாட்டேன். வெற்றிக்காக குதிப்பதோ, தோல்விக்காக வருத்தப்படுவதோ இல்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

நேற்று இல்லாத மாற்றம்...

தீபாவளி தினத்தில் ஊரெல்லாம் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த காலை நேரத்தில் ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பட்டாசு கொளுத்தினார்கள். பின்னணிப் பாடகி சின்மயி ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி கண்டார். அவருடன் பணியாற்றிய 5 இயக்குநர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஏ.ஆர் ரஹ்மான் நல்ல மனிதர்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை மிகச் சிறந்த மனிதராக உணர்கிறேன் என்று கூறினார் இயக்குநர் வசந்த். ரிதம் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் வேலை பார்த்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் வசந்த். இந்த பிறவியில் என்னை திறமையானவனாக கடவுள் என்னை படைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று ரஹ்மான் à®'ரு பேட்டியில் கூறியது தனக்கு பிடித்திருந்ததாக வசந்த் கூறினார்.

பக்குவமாக வாழ வேண்டும்

நியூ, அன்பே ஆருயிரே, படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார் எஸ்.ஜே.சூர்யா. வாழ்க்கையை எப்படி பக்குமாக அணுகவேண்டும் என்பதை ஏ.ஆர் ரஹ்மானிடம் கற்றுக் கொண்டதாக கூறினார் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா.

நட்புடன் இணைந்த இசை

காதல்தேசம், காதலர் தினம் படங்களுக்கு இசை அமைத்தவிதம் பற்றி இயக்குநர் கதிர் பகிர்ந்து கொண்டார். இதேபோல் இயக்குநர்கள் பிரவீண், கிருஷ்ணா ஆகியோர் ஏ.ஆர். ரஹ்மான் உடனான நட்பை நேயர்களிடையே பகிர்ந்து கொண்டனர். இதேபோல் பின்னணிப் பாடகி சித்ரா, பாடகர் ஸ்ரீனிவாசன், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் ஏ.ஆர். ரஹ்மானிடன் கேள்விகளை கேட்டனர்.

புதிய பாடகர்களின் அறிமுகம்

பேட்டியின் போது à®"ரு கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், புது பாடகர்களுக்கு நான் வாய்ப்பு குடுத்தேன் என்பதை விட அவர்களிடம் இருந்து நான் என்ன எடுத்துக்கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்று கூறினார். புதிய குரலில் à®'ரு பாடலை கேட்கும் போது அது ரசிகர்களுக்கு பிடிக்கிறது. இதுவே பாடலின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறினார்.

இன்னும் நல்லா இருந்திருக்கலாமோ?

கடிவாளம் கட்டிய குதிரையாகத்தான் என் வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. நான் தந்தையாக, கணவனாக, மகனாக, சகோதரனாக சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன். என்னை விட என் பசங்க நல்லா படிக்கிறாங்க. குழந்தைகளுக்கு நாம் உதாரணமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

லக்கேஜ் வேண்டாமே...

எப்படி இவ்ளோ புகழ் கிடைச்சும் ஆர்பாட்டம் இல்லாம அமைதியா இருக்கீங்க? என்று கேட்டதற்கு, என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று நான் நினைக்கமாட்டேன். இந்த செயல் நடப்பதற்கு நான் à®'ரு கருவியாக இருக்கேன் என்று மட்டுமே நினைப்பேன் என்றார் ரஹ்மான். தேவையற்ற லக்கேஜ்களை நான் சுமப்பதில்லை அதுதான் இந்த அமைதிக்குக் காரணம் என்றார்.

மனிதாபிமானம் முக்கியம்

ஆத்மாவை பின்னால் விட்டுவிட்டு நீ மட்டும் à®"டாதே. ஆத்மாவையும் சேர்த்துக் கொண்டு à®"டவேண்டும். மனிதராக பிறந்த à®'வ்வொருவருக்கும்

மனிதாபிமானம் மிகவும் முக்கியம். நம்மை யாரும் பார்க்கவில்லை. எனவே நாம் எதையும் செய்யலாம் என்று செய்யக்கூடாது.

நாம் செய்யும் à®'வ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். அப்பொழுதுதான் யாரும் தவறு செய்ய நினைக்கமாட்டார்கள் என்ற செய்தியோடு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து நிகழ்ச்சியை இனிமே முடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

தயங்கிய ஹீரோ: தயங்காமல் 'இச்' கொடுத்த ஹன்சிகா

Hansika Surprises Siddharth   

சென்னை: ஜெயப்பிரதாவின் உறவினரான சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சிறிதும் தயக்கமின்றி முத்தக் காட்சியில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளார் ஹன்சிகா.

நடிகை ஜெயப்பிரதா தனது உறவினர் சித்தார்த் என்பவரை வைத்து தமிழில் à®'ரு படத்தை தயாரித்து வருகிறார். விஷால், நயன்தாரா நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் தான் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் ஹிட்டான இஷ்க் படத்தின் ரீமேக் தான் இந்த படம் இதில் சித்தார்த் ஜோடி ஹன்சிகா.

இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கியது. வழக்கமாக பூஜை காட்சியை முதல் காட்சியாக எடுக்கும் ராஜசேகர் இந்த படத்தில் முத்தக் காட்சியை எடுத்துள்ளார். முதல் காட்சியே முத்தக் காட்சி என்று கூறியவுடன் ஹீரோ சித்தார்த் சற்று ஆடிப்போய்விட்டார். எப்படி முத்தம் கொடுப்பது என்று அவர் தயங்கி நின்றபோது சற்றும் தயக்கமின்றி ஹன்சிகா அந்த காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

ஹீரோவே தயங்கும்போது ஹன்சிகா இப்படி தயக்கமில்லாமல் முத்தக் காட்சியில் நடித்ததைப் பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டார்களாம். பார்த்தால் அப்பாவியாக இருக்கும் ஹன்சிகா தைரியசாலி தான்.

 

தேவயாணி என் தேவதை: ராஜகுமாரன்

Devayani Is My Angel Says Rajakumar

தேவயாணியை முதன் முதலாக பார்க்கும் போது தேவதை போல இருந்தது. அதுதான் எனக்கு தேவயாணி மீது காதல் ஏற்பட காரணமாக அமைந்தது என்று அவருடைய கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் கூறினார்.

ஜெயா டிவியில் சுகாசினி நடத்தும் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் நடிகை தேவயாணி பங்கேற்றார். முன்பை விட இன்னும் இளமையாய், அழகாய் பேசும் தேவயாணியை புகழ்ந்தவாரே அவரின் பெர்சனல் பக்கங்களை கேட்டறிந்தார் சுகாசினி.

தேவயாணியை இயக்கிய இயக்குநர்கள் அகத்தியன், விக்ரமன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தேவயாணியின் நடிப்பை, சினிமாத்துறையில் அவரின் அர்பணிப்பு உணர்வை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தேவயாணியின் கணவர் ராஜகுமாரன், தேவயாணி நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய காலம் முதல் அவருக்கு கதை சொல்லி படம் இயக்கியது வரையிலான தகவல்களை தெரிவித்தார்.

வெள்ளை உடையில் தேவதை போல இருந்தால் தேவயாணி, அதனால்தான் நீ வருவாய் என படத்தில் "à®'ரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே" என்று பாடல் வைத்ததாக கூறினார். இருவரின் காதல் யாருக்குமே தெரியாது அந்த அளவிற்கு ரகசியமாக வைத்திருந்தோம் என்றும் கூறினார் ராஜகுமாரன்.

நிகழ்ச்சியில் பேசிய தேவயாணி, தன்னுடைய குழந்தைகள் நன்றாக தமிழ் பேசி எழுதுவதாக கூறினார். அவர்களிடம் இருந்து தான் தமிழ் எழுத கற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தான் சுகாசினியின் தீவிரமான ரசிகை, சிந்து பைரவி தனக்குப் பிடித்த திரைப்படம் என்று என்றும் கூறி நிகழ்ச்சி நடத்துனர் சுகாசினியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தேவயாணி. நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் இணைந்து சின்னச் சின்ன ஆசை பாடலை இணைந்து பாடினர்.

ஆட்டோகிராப் நிகழ்ச்சி புத்தம் புது பொலிவுடன் சீசன் 2 தொடங்கியுள்ளது. வரும் ஞாயிறு முதல் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாய் விருந்தினர் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வரும் வாரம் (நவம்பர் 18) இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தன்னுடைய பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்.

 

'துப்பாக்கி தவறுக்கு பிராயச் சித்தம்... ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் விஜய்' - எஸ்ஏசி அறிவிப்பு!!

Vijay Will Appear As Muslim Next Movie

துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் à®'ரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அறிவித்துள்ளார் அவர் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் இந்த அமைப்புகள் சில தினங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் படலத்தை அரங்கேற்றிவிட்டனர்.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் நேற்று சென்னையில் சந்தித்த இயக்குநர் முருகதாஸ், தாணு, எஸ் ஏ சந்திரசேகரன், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர். காட்சிகளை நீக்கவும் à®'ப்புக் கொண்டனர்.

அடுத்து எஸ்ஏ சந்திரசேகரன் அறிவித்ததுதான் இந்த சரண்டர் படலத்தின் உச்சகட்டம்.

அதை அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், "என் மகன் விஜய் தமிழகத்தின் à®'வ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. சாதி, மத வேறுபாடுகளே அவனுக்கு இல்லை.

இந்தப் படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம். இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் à®'ரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார்," என்றார்.

 

நடிகர் சிவா திருமணம்... முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: நடிகர் ஷிவா திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தனியார் ரேடியோவில் அறிவிப்பாளராக ஆரம்பிதத்து, சென்னை-28 மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷிவா.

தொடர்ந்து சரோஜா, தமிழ்படம், கலகலப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

mirchi shiva marries priya cm greets the couple   
Close
 
இவருக்கும் இறகுப்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கும் கடந்த 5 வருடங்களாக காதல் இருந்து வந்தது. இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதித்ததை தொடர்ந்து ஷிவா-ப்ரியா திருமணம் நிச்சயமானது.

இவர்கள் திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடந்தது. வைதீக முறைப்படி சரியாக 11-05 மணிக்கு ப்ரியா கழுத்தில் ஷிவா தாலி கட்டினார்.

மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியும், பரிசும் அனுப்பியிருந்தார்.

நடிகர் அஜீத்குமார், அவர் மனைவி ஷாலினி இருவரும் குழந்தை அனோஷ்காவுடன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஷாலினியின் தங்கை ஷாமிலி, அவர்களின் தந்தை பாபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் டி.சிவா, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சுந்தர் சி, நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்பட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

 

நடிகையை பச்சைக்குதிரை தாண்டியபோது விவேக்குக்கு சுளுக்கு!

Actor Vijay Injured At Shooting

சென்னை: பத்தாயிரம் கோடி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விவேக் காயமடைந்தார்.

நடிகர் விவேக் ஹீரோவாக நடிக்க முக்தா சீனிவாசனின் மாயா கிரியேஷன்ஸ் படநிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை சீனிவாசன் சுந்தர் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடி என்ற இடத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

à®'ரு பெண்ணை, நடிகர் விவேக் பச்சைக் குதிரை தாண்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், நடிகர் விவேக் தவறி விழுந்தார்.

அதனால் அவரது வலது காலில் தசை சுளுக்கு ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக தனியார் ஆஸ்பத்திரி à®'ன்றில் சிகிச்சைக்கு சேர்த்தனர். படப்படிப்பு ரத்து செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து விவேக் à®"ய்வில் இருக்கிறார். à®"ரிரு நாளில் குணமடைந்தபின் ‘பத்தாயிரம் கோடி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விவாகரத்தானவரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி!

பெங்களூர்: ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான தொழில் அதிபர் அனந்த கவுடாவை மணக்கிறார் பிரபல நடிகை பூஜா காந்தி.

இருவருக்குமான திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள பூஜா காந்தி வீட்டில் நேற்று நடந்தது. வருகிற மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

2003-ம் ஆண்டு அறிமுகமானவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னட படங்களில் நடித்த அவர், தமிழில் கொக்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.

pooja gandhi engaged   
Close
 
'தண்டுபாளையா' படத்தில் சங்கிலி தொடர் கொலையாளிகளில் à®'ருவராக நடித்த அவர், சில காட்சிகளில் அரை நிர்வாண காட்சியில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.

சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் அவருக்கு நாட்டம் உண்டு. ஜனதா தளம்(எஸ்) தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் அழைப்பை ஏற்று பூஜாகாந்தி அரசியலில் குதித்தார்.

குமாரசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சிக்காக பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் பூஜா காந்தி பற்றி தவறான பிரச்சாரம் வெளியாக தொடங்கின. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘சொந்த நலனை கருத்தில் கொண்டு கட்சியை விட்டு விலகி கொள்ளும்படி' பூஜா காந்தியை குமாரசாமி கேட்டு கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சமீப காலமாக பூஜாகாந்தி பங்கேற்காமல் இருந்தார்.

இந்த நிலையில் பூஜா காந்திக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். பைனான்ஸ் தொழில் செய்து வருபவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஆனந்த்கவுடாவுக்கும், பூஜா காந்திக்கும் திருமணம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனந்த் கவுடா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை பண்டரி பாயின் பேத்தியை மணந்தார். பிறகு அவர்களுக்கு விவாகரத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமண நிச்சயதார்த்த விழா பெங்களூர் கத்திரிகுப்பேயில் உள்ள பூஜா காந்தியின் வீட்டில் நேற்று காலை நடந்தது.

பூஜைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சுமார் 10.30 மணி அளவில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரைப்பட உலகை சார்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பூஜாகாந்தியின் பெற்றோர், அவருடைய தங்கை மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து பூஜாகாந்தி-ஆனந்த்கவுடா திருமணம் வருகிற மார்ச் மாதம் நடைபெறுகிறது.

 

துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு

Ar Murugadass Thaanu Sac Apologise

சென்னை: 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர்.

நேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.

முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்.