'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், 'நீதானே என் பொன்வசந்தம்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ஜீவா, சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். தெலுங்கில் ராம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஜீவா, ரகு என்ற என்ஜினீயரிங் மாணவராக நடிக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பொதுவாக காதல் படம் என்றால் இளையராஜா பாடல்படு சூப்பாராக இருக்கும். அதுவும் கௌதம் மேனன், இளையராஜா கூட்டணி என்றால் நிச்சயம் பாட்டு சூப்பராக இருக்கும். இந்நிலையில் படத்தின் பாட்டுக்கு இப்போது இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து படத்தின் பாடல்களை இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார். ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் மேனனும் உடன் சென்றுள்ளார்.