ஆனால் சுறாவின் தோல்வி, அம்மணியின் கோலிவுட் நாற்காலிக்கு பலத்த ஆட்டத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
நிலைமை இப்படி இருக்க, இவரோ சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டார் என்றம், இதில் எழுந்த பிரச்சினை காரணமாகத்தான், அதனால்தான் லிங்குசாமியின் புதிய படத்தில் கூட நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
என்ன சொல்கிறார் தமன்னா…?
“நான் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறுவதில் உண்மையில்லை. எனக்கு பணம் முக்கியமல்ல. அதை விட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற் கிறது. கதை, இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல விஷயங்களைப் பார்த்துதான் நான் படங்களை ஒப்புக் கொள்கிறேன்.
நிறைய சம்பளம் இருக்கா என்று பார்ப்பதில்லை. நல்ல கதை இருக்கா என்றுதான் பார்க்கிறேன்.
லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடிக் காததற்கு சில காரணங்கள் உள்ளன. இயக்குனர் லிங்குசாமியை நான் மதிக்கிறேன். அவரது பையா படத்தில் நான்தான் ஹீரோயின்.
ஆனால் அவர் கேட்ட தேதிகள் என்னிடம் இல்லை. தெலுங்கில் இரண்டு படங்களிலும், தனுஷ் ஜோடியாக ஹரி இயக்கும் படத்திலும் விரைவில் நடிக்க உள்ளேன். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடி யாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளேன். இவ்வளவு பிசி யாக இருக்கும் நான் எப்படி வேட்டை படத்தில் நடிக்க முடியும்…”, என்கிறார்.