கொலவெறியால் உச்சத்திற்கு சென்ற அனிருத்!

Kolaveri Hitmaker Plate Is Packed
ஒய் திஸ் கொலவெறி டி பாடலால் இளம் இசையமைப்பாளர் அனிருத் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

தனுஷ்-ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் எவ்வளவு பிரபலமானது என்பது நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. நண்டு, சுண்டு முதல் அனைவரும் முணுமுணுக்கிறார்கள்.

அந்த பாடலை தனுஷ் பாடியிருந்தாலும் அதற்கு இசையமைத்தவர் புதுமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். '3' தான் அவருக்கு முதல் படம் என்றாலும் தனது இசையால் அனைவரையும் கவர்ந்துவிட்டார். யாரு இந்த பையன் அனிருத் என்று அனைவரும் கேட்கும்படி செய்துவிட்டார்.

3 பட இசை ஹிட்டானதையடுத்து தற்போது அனிருத்துக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. கோலிவுட், பாலிவுட், டோலிவுட்டில் இருந்து அவரை அழைக்கிறார்களாம். தற்போது அவர் கையில் 2 பாலிவுட் படங்கள் உள்பட 4 படங்கள் உள்ளது என்றால் கொலவெறியின் தாக்கத்தைப் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அனிருத் லதா ரஜினிகாந்தின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் காட்டில் மழை தான்...!
 

பிரபு மகனுக்காக தன் 'பாலிஸியை' தளர்த்திய சூப்பர் ஸ்டார்!

Rajini Wishes Prabhu Son   
தனிப்பட்ட முறையில் எந்த நடிகரையும் ப்ரமோட் செய்வது ரஜினிக்குப் பிடிக்காத விஷயம். தன் மகள், மருமகன் என யாரையும் அவர் பெரிதாக உயர்த்திப் பேசியதில்லை, பொது மேடைகளில் அல்லது மீடியாவில்.

அவரவர் திறமை, அணுகுமுறை, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம்தான் அவர்கள் கேரியரை தீர்மானிக்கும் என்பது அவர் கருத்து.

முதல் முறையாக தனது இந்த நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டுள்ளார். அதுவும் சம்பந்தப்பட்ட நடிகரின் நடிப்புத் திறனைப் பார்த்து!

அந்த நடிகர் வேறு யாருமல்ல, நடிகர் திலம் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாக விக்ரம் பிரபு. இவரது கும்கி படத்தின் சில காட்சிகள் ரஜினிக்கு காட்டப்பட்டதாம்.

கேரளாவில் ' கோச்சடையான்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினி, கடந்த வாரத்தில் ஒரு நாள் காலை, ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து விக்ரம் பிரபுவைப் பாராட்டி ஒரு வீடியோ பேட்டி கொடுத்தார்.

சிவாஜியின் பேரன் என்ற கூடுதல் தகுதி வேறு விக்ரமுக்கு இருப்பதால், ரொம்பவே பாராட்டிப் பேசினாராம் ரஜினி!
 

சைக்கோவிலிருந்து தமாஷுக்கு தாவி்ய தனுஷ்... சற்குணத்துடன் இணைகிறார்!

Dhanush Join With Sargunam   
தொடர்ந்து சைக்கோ பாத்திரங்களில் நடித்து வந்ததால், தனுஷ் இமேஜ் கொஞ்சம் ஆட்டங்கண்டுதான் போய்விட்டது. அவரது பேட்டிகளும் கிட்டத்தட்ட அதே ரேஞ்சுக்கு இருக்கவே, நெஜமாலுமே பார்ட்டி இப்படித்தானா என கமெண்டுகள் குவியத் தொடங்கின.

விளைவு... இன்னும் கொஞ்ச நாளைக்கு சீரியஸ் படமே வேணாம்பா... நல்ல சிரிக்கச் சிரிக்க ஒரு கதை வேணும் என்று கேட்டுக் கொண்டிருந்தாராம் இயக்குநர்களிடம்.

அப்போதுதான் களவாணி, வாகை சூட வா புகழ் சற்குணத்தின் ஒரு ஸ்க்ரிப்டைக் கேட்டிருக்கிறார்.

கதையும், அதை சற்குணம் சொன்ன விதமும் களவாணிக்கு நிகராக இருக்கவே, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் தனுஷ்.

இந்தப் படத்தை தயாரிப்பவர், தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தை எடுத்த கதிரேசன். இப்போதைக்கு வெற்றி மாறன் படம், சற்குணம் படம், பரத் பாலா படம், அடுத்து ஒரு இந்திப் படம்... இதுதான் தனுஷின் லைன் அப்!
 

சோனாக்ஷி வேண்டாமே: ஷாஹித், ரன்பீர் கபூர்

Ranbir Kapoor Shahid Kapoor Believe
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுடன் ஜோடி சேர ரன்பீர் மற்றும் ஷாஹித் கபூர் தயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா சல்மானின் தபாங் படம் மூலம் பிரபலமானவர். முதல் படத்தில் 40களில் இருக்கும் சல்மானோடு நடித்தார். அடுத்ததாகவும் சல்மானுடன் ஒரு படம், 40 களில் இருக்கும் அக்ஷய் குமாருடன் 3 படங்களில் நடிக்கவிருக்கிறார். இப்படி அவர் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிலும் வயது அதிகமுள்ளவர்கள் ஹீரோக்களாக உள்ளனர்.

தன்னை விட வயதில் மூத்த ஹீரோக்களுடன் நடிப்பது வசதியாக உள்ளது என்று சோனாக்ஷி எந்த நேரம் சொன்னாரோ தெரியவில்லை இளம் ஹீரோக்களான ரன்பீர் கபூர் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் சோனாக்ஷி தங்களுடன் நடித்தால் வயது அதிகமானவர் போன்று தெரிவார் அதனால் எங்கள் படங்களில் அவர் வேண்டாமே என்று கூறுவதாக பேச்சு அடிபடுகிறது.

ஷாஹித் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பது சோனாக்ஷிக்கு தெரிந்ததால் தான் வேட்டை ரீமேக்கில் ஷாஹிதுக்கு ஜோடியாக நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. லூத்தேரா என்ற படத்தில் மட்டும் தான் அவர் இளம் ஹீரோவான ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார்.

விட்டுத்தள்ளுங்க சோனாக்ஷி. வித்யா பாலன் ஷாஹித்துடன் கிஸ்மத் கனக்ஷனில் நடித்தபோது இப்படித் தான் கூறினார்கள். இப்பொழுது பாலிவுட்டில் இருக்கும் அனைத்து ஹீரோக்களும் வித்யாவுடன் நடிக்க ஆசைப்படுகிறார்களல்லவா.
 

விஜய் அசத்தல் ஆட்டம் ... பாராட்டிய அக்ஷய் குமார்!

Akshay Kumar Praises Vijay Dance   
தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கும் மாஸூக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், டான்ஸுக்கு இளையதளபதி விஜய்தான்.

அதிலும் அவரது சமீபத்திய படங்களைப் பார்த்தவர்களுக்கு, விஜய்யின் நடனத் திறமையும், அதை அவர் எத்தனை லாவகமாகக் கையாள்கிறார் என்பதும் புரிந்திருக்கும்.

சக நடிகர்கள் அனைவருமே, நடனத்தில் விஜய்யை மிஞ்ச முடியாது என்பார்கள் மேடைகளில்.

இத்தனை நாளும் தமிழ் நடிகர்கள்தான் விஜயின் நடனத்துக்கு ரசிகர்களாக இருந்தனர். இப்போது இந்தி முன்னணி நடிகர்களும் விஜய் நடனத்தை பாராட்டித் தள்ளிவிட்டனர்.

பிரபு தேவா இயக்கும் பாலிவுட் படமான ரவுடி ரத்தோரில் (தமிழில் வந்த சிறுத்தையின் ரீமேக்) ஒரு பாடலுக்கு ஹீரோ அக்ஷய் குமார், இயக்குநர் பிரபு தேவாவுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் விஜய்.

நடன இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை, இன்னும் மேம்படுத்தி அழகாக ஆடிய விஜய்யை ஆச்சரியமாகப் பார்த்தாராம் அக்ஷய் குமாரும், உடனிருந்த சக நடிகர்களும்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது!
 

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் - வழக்கு எண் 18/9 உள்பட 3 படங்கள் ரிலீஸ்

Friday New Releases   
இந்த வெள்ளிக்கிழமை 3 தமிழ்ப் படங்களும் சில டப்பிங் படங்களும் தமிழகத்தில் வெளியாகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக தமிழ் சினிமாவில் ஒரே படம்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. அது ஒரு கல் ஒரு கண்ணாடி. அதற்கு சவாலாக இதுவரை எந்தப் படமும் வரவில்லை.

ஆனால் இந்த வாரம் அந்தக் குறை நீங்கிவிடும் என்று தெரிகிறது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள வழக்கு எண் 18/9 பட்ஜெட்டில் மிகச் சிறிய படம் என்றாலும், அதன் தரமும் படைப்பு நேர்த்தியும் தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகும் மற்றும் இரு படங்கள் காந்தம் மற்றும் பரமகுரு. இவற்றுடன் ஜக்கம்மா மற்றும் க்ளிக் 3 படங்கள் தமிழில் டப்பாகி வெளியிடப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான ஆங்கிலப் படம் ஹ்யூகோ 3 டியில் வெளியாகியுள்ளது. ஜன்னத் என்ற இந்திப் படமும், மோகன்லால் நடித்த மலையாளப் படம் கிராண்ட் மாஸ்டரும் இன்று வெளியாகியுள்ளன.

இதில் ஆச்சர்யம், கன்னடப் படமான அன்னா பாண்ட் சென்னையில் வெளியாகி உள்ளதுதான். நான்கு அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
 

டுவிட்டரில் 1 லட்சத்தைத் தாண்டிய டாப்ஸி

Tapsee Pannu Crosses One Lakh Mark   
நடிகை டாப்ஸிக்கு டுவிட்டரில் 1 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்வோர் உள்ளனராம்.

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷின் ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. ஆடுகளத்தை தொடர்ந்து அவர் நடித்த வந்தான் வென்றான் ஓடவில்லை. அதன் பிறகு அவர் டோலிவுட்டுக்கு சென்றார். அங்கு படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். தனக்கு ஆந்திராவில் நல்ல மார்க்கெட் இருப்பதை உணர்ந்த அவர் அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளார்.

விளைவு தற்போது அவர் கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளன. இது தவிர்த்து தமிழில் மறந்தேன் மன்னித்தேன் மற்றும் இந்தியில் ஒரு படத்திலும் நடிக்கிறார். டுவிட்டரி்ல் உள்ள டாப்ஸியின் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால் டோலிவுட் ராணி நடிகை இலியானாவுக்கு 1,28,000க்கும் அதிகமான பின்தொடர்வோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த டாப்ஸியின் டுவீட்,

டுவிட்டரில் எனக்கு 1 லட்சத்தி்ற்கும் அதிகமான பாலோயர்கள் இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இதனால் நான் படு குஷியாக உள்ளேன். எனது பாலோயர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பலரால் விரும்பப்படுவது பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
 

'சீன்' படத்தில் நானா? கன்னட பத்திரிக்கை மீது பூஜா வழக்கு!

Pooja Sues Kannada Magazine   
நடிகை பூஜா 'சீன்' படத்தில் நடித்துள்ளார் என்று செய்தி வெளியிட்ட கன்னட பத்திரிக்கை மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பூஜா கடைசியாக தமிழில் நடித்தது நான் கடவுள். அதன் பிறகு சொந்த ஊரான இலங்கைக்குப் போய் விட்டார். பூஜாவுக்கும் சர்ச்சைகளுக்கும் அவ்வளவு ராசி. வெகு நாட்களாக காணாமல் போயிருந்த பூஜா தற்போது இயக்குனர் பாலாவின் படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் பூஜா சீன் படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வலம் வருகிறது என்று கன்னட பத்திரிக்கை ஒன்று 2 முறை செய்தி வெளியிட்டது. இதைப் படித்துப் பார்த்த அவர் ஆடிப்போ்ய்விட்டார்.

அடப்பாவிகளா, இத்தனை நாள் அவருடன் காதல், இவருடன் காதல் என்று எழுதிய காலம் போய் சீன் படத்தில் நடித்திருக்கிறேன் என்று எழுதி அசிங்கப்படுத்திவிட்டார்களே என்று கொத்தித்துவிட்டார். உடனே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்ற அவர் நான் சீன் படத்தில் நடித்தேன் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்களே, அதற்கு ஏதாவது ஆதாராம் உள்ளதா என்று படபடத்துள்ளார்.

ஆனால் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஒரு காலக்கெடுவை விதித்து அதற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். ஆனால் அந்த பத்திரிக்கை மன்னிப்பு கேட்காததையடுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

மீகா என்டர்டெயின்மென்ட்- தயாநிதி அழகிரியின் இன்னும் ஒரு தயாரிப்பு நிறுவனம்!

Dayanidhi Launches New Production Company
தயாநிதி அழகிரி ஏற்கெனவே க்ளவுட் நைன் எனும் நிறுவனத்தின் பெயரில் தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறார்.

இப்போது எதிரி எண் 3 என்ற படத்தை க்ளவுட் நைன் பேனரில் எடுத்து வருகிறார்.

இப்போது புதிதாக மீகா என்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் தயாநிதி.

இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். முதல் முயற்சியாக மீகா என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி மாறனின் சொந்தப் பட நிறுவனம் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து புதிய படத்தை தயாரிக்கின்றன.

வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மணிகண்டன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

கதை திரைக்கதையை வெற்றிமாறன் எழுத, சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுகுறித்து தயாநிதி அழகிரி தனது ட்விட்டரில், "புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் நோக்கம், பொழுதுபோக்கு மற்றும் மீடியா தொடர்பை இன்னும் விரிவாக்குவதுதான்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 

எனக்கு மட்டும் ஏன் இப்படி? ஜோசியம் பார்த்த அனன்யா

It Is Bad Time Ananya
தனக்கு மட்டும் ஏன் நல்லதே நடக்க மாட்டேன் என்கிறது என்று நினைத்த நடிகை அனன்யா ஜோதிடரை அழைத்து பிரசன்னம் பார்த்துள்ளார்.

அனன்யாவுக்கு நேரம் சரியில்லை போன்று. முதலில் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்த கையோடு அனன்யாவுக்கு அடி மேல் அடி விழுகிறது. நிச்சயம் முடிந்த பிறகு ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற உண்மை தெரிய வந்தது. உண்மையைத் தெரிந்து கொண்டவுடன் அனன்யாவின் பெற்றோர் நேராக காவல் நிலையம் சென்று ஆஞ்சநேயன் மீது புகார் கொடுத்தனர்.

அதன் பிறகு ஆஞ்சநேயன் திருமணம் ஆனவர் என்றாலும் பரவாயில்லை நான் அவரைத் தான் கல்யாணம் செய்வேன் என்று அனன்யா அடம்பிடித்ததாகவும், அவரை பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மலையாளப் படமான நாடோடி மன்னன் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த அன்னயா கீழே விழுந்ததில் கை பிசகியது. தற்போது அவர் பிளாஸ்திரியுடன் ஷூட்டிங்கிற்கு செல்கிறாராம்.

இப்படி அடுத்தடுத்து அடி விழுகிறதே என்று நினைத்த அவர் ஜோதிடரை அழைத்து பிரசன்னம் பார்த்துள்ளாராம். ஜோதிடர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை.
 

விபசார வழக்கில் கைதா? நடிகை சனா கான் அதிர்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'விபசார வழக்கில் சனாகான் கைதானதாக நேற்று செய்தி வெளியானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சனா கான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறினார். 'சிலம்பாட்டம்', 'பயணம்', 'தம்பிக்கு இந்த ஊரு' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சனாகான். நேற்று முன்தினம் பெங்களூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பெண்கள் உள்பட 8 பேரை விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த சனா என்று துணை நடிகையும் கைதானார். தமிழ் படங்களில் நடித்துள்ள சனா கான் பெயரும் இவரது பெயரும் ஒன்றுபோல் இருந்ததால் விபசார வழக்கில் சனாகான் கைதானதாக படங்களுடன் பத்திரிகைகளிலும் சில வெப் சைட்களிலும் செய்தி வெளியானது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் சனாகான். போலீசார் பெங்களூரில் சோதனை நடத்தியபோது தான் மும்பையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

'சனா கான் கைதானாரா?' என்று சித்தபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சங்கரிடம் கேட்டபோது,''சனா என்ற துணை நடிகைதான் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரே சாயலில் பெயர் இருந்ததால் நடிகை சனா கான் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். விபசார வழக்கில் கைதானவர் கோலிவுட், டோலிவுட் நடிகை சனா கான் அல்ல'' என்றார். இதுகுறித்து சனா கான் மேனேஜர் சீனிவாஸ் கூறும்போது,''சனாகான் பற்றிய செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதை வெளியிட்ட மீடியா, பத்திரிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.


 

கிசு கிசு - பிரசார நடிகை மொட்டை நடிகர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

'கோ' பிய நடிகை புது பாலிசி வகுத்திருக்காராம்... இருக்காராம்... இயக்கங்க யார் தன்னோட அடுத்த படத்துல வாய்ப்பு தர்றதா வாக்கு தர்றாங்களோ அவங்களோட இப்பத்திய படத்தின் புரமோஷன்ல கலந்துக்குவேன்னு 'ஆபர்' கொடுத்திருக்காராம். இத ஆன்ருவான இயக்கம் பயன்படுத்தி இருக்காராம். தான் இயக்கற அடுத்த படத்துல சான்ஸ் தர்றேன்னு வாக்கு கொடுத்ததையடுத்து அவரோட தற்போதைய படம் பத்தி தன்னோட மைக்ரோ பிளாக்கில் நடிகை பிரசாரம் செய்ய தொடங்கிட்டாராம்... தொடங்கிட்டாராம்...

ஸ்டன்ட் கோழி நடிகரோட  சமரமான படம் பைனான்ஸ் பிரச்னையால ஷூட்டிங் டிலே ஆகுதுன்னு இண்டஸ்ரில பேசறாங்களாம்... பேசறாங்களாம்... இத கேட்டு  நடிகரு உர்ராயிட்டாராம். வேண்டும்னே யாரோ இப்படி வதந்தி பரப்பறாங்க . ஷூட்டிங் தள்ளிபோனதுக்கு காரணம் பைனான்ஸ் பிரச்னை இல்ல. இண்டஸ்ரில நடந்த ஸ்டிரைக்தான் காரணம்னு விளக்கம்
தர்றாராம்... தர்றாராம்...

கோலிவுட், டோலிவுட் ரெண்டுலயும் பிரேக் கிடைக்காம ஜெயமான ஆகாய நடிகர் தவிப்புல இருக்காராம்... இருக்காராம்... கோலிவுட்ல சமீபத்துல ரிலீஸான தன்னோட ரெண்டு படமும் கைகொடுக்கலயாம். இந்த வருஷத்துல தனக்கு ஹிட் படம் அமையணும்னு ஏழுமலைக்கு வேண்டி இருக்காராம். அதுக்காக அட்வான்ஸா மொட்டை போட்டிருக்காராம். வேண்டுதல் நிறைவேறுனா மறுபடியும் மொட்டை போடுவாராம்... போடுவாராம்...


 

இந்திய சினிமாவுக்கு வயது 100!

Indian Cinema Reaches 100 Years Milestone
இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது சினிமா. பொழுதுபோக்கு, வர்த்தகம், அரசியல், தேசப்பற்று என அனைத்துக்குமே சினிமா வேண்டும் இங்கு!

சினிமாவைக் கண்டுபிடித்த பெருமை வேண்டுமானால் வெளிநாட்டவர்களுக்கு சேரலாம். ஆனால் சினிமாவை வாழ வைப்பதில் முக்கிய பங்கு இந்தியர்களுக்குதான்.

சினிமா டிக்கெட்டுகளின் விற்பனை, மற்றும் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில், இந்திய சினிமாத்துறைதான் உலகிலேயே மிகப்பெரியது. ஆசியா-பசிபிக் பகுதியில் சினிமா பார்ப்பவர்களில் 73 சதவீதம் இந்தியர்களே.

இந்தியாவுக்கு 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி சினிமா அறிமுகமானது.

லூமியர் பிரதர்ஸ் சினிமாட்டோகிரபி என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டு, சினிமா பயணத்தைத் தொடங்கியது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.

1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

இவற்றிற்குப் பிறகுதான் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா கடந்த மே 3, 1913-ம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இந்திய சினிமாத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே. அதனால்தான் அவர் பெயரில் சினிமாவுக்கான மிக உயர்ந்த விருது வழங்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் காட்சி அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.30 வரை திரையிடப்பட்டிருக்கிறது. அப்போதே இப்படத்தை தினசரி 4 காட்சிகள் ஓட்டியிருக்கிறார்கள்.

இன்றைய முழுநீளப்படங்களின் முன்னோடிப் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியாகி இன்றோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த சரித்திர நிகழ்வை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன.
 

ஏ.எம். ரத்னம் கட்டிய சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்தில் அஜீத்

Ajith Kumar Am Ratnam Saibaba Temple   
'தல' அஜீத் குமார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கட்டியிருக்கும் சாய்பாபா கோவிலின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

பிரபல சினிமா தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காமகோடி நகரில் ஸ்ரீவிஸ்வரூப ஷீரடி சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி முடித்துள்ளார். ஆகம விதிகளின்படி அமைந்துள்ள இந்த கோவிலில் 9 அடி உயர விஸ்வரூப சாய்பாபா படமும், அனுகுயாவின் கதையை எடுத்துரைக்கும் தத்தோத்திரா படமும் உள்ளது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகத்தையையொட்டி ஷீரடியில் இருந்து வந்திருந்த சிறப்பு அர்ச்சகர்கள் தாங்கள் கொண்டு வந்த ஷீரடி நீரால் சிறப்பு பூஜைகள் செய்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் கலந்துகொள்ள வந்த நடிகர் அஜீத் குமாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சாய்பாபாவை பயபக்தியுடன் கும்பிட்டார்.

இந்த கும்பாபிஷேகத்தில் விஷ்ணு வர்த்தன், மனோஜ் குமார், தயாரிப்பாளர்கள் சஞ்சய் வாத்வா, டி.என்.எஸ்., கதாசிரியர் சுபா, சுரேஷ் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அண்மையில் தான் நடிகர் அர்ஜுன் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஜூலிக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை கண்டாலே பிடிக்கலையாம்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு அவரது நீண்டகால பாய்பிரண்ட் நடிகர் பிராட் பிட் போட்ட ரூ.1.28 கோடி மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரம் பிடிக்கவில்லையாம்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் (48), நடிகை ஏஞ்சலினா ஜூலியும் (36) கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேயே குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி ஒரு பெண் குழந்தை, இரட்டைக் குழந்தைகள் என்று 3 குழந்தைகளை பெற்றுள்ளனர். இது போக, மேலும் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலி மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். அதுவும் இரட்டைக் குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

இப்படி குழந்தைகள் வதவெதன்று அதிகரித்துக் கொண்டு போன நிலையில், அட என்னங்கப்பா நீங்க பேசாம கல்யாணத்தைப் பண்ணிக்குங்க என்று பிராடையும், ஜூலியையும் அவர்களது குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து தான் அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த மோதிரத்தை பிராட் பிட்டே டிசைன் செய்துள்ளார். எமரால்ட், வைரம் பதித்த அந்த மோதிரத்தின் விலை ரூ. 1,28,25,725 ஆகும். ஆனால் அவ்வளவு பணம் செலவழித்தது வீணாகிப் போய்விட்டதே. ஏஞ்சலினா ஜூலிக்கு நிச்சதார்த்த மோதிரத்தை கண்டாலே பிடிக்கவில்லையாம்.

ஜூலிக்கு எமரால்டு தான் பிடிக்கும். ஆனால் பிட்டோ வைர மோதிரத்தை போட்டுள்ளார். இது தான் அவர் ஜூலியைப் புரிந்து கொண்ட லட்சணம் என்று அவர்களுக்கு நெருங்கிய ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதானே, புகையைப் போட்டு பொங்க விடத்தான் சுற்றிலும் ஆட்கள் இருப்பார்களே...!
 

ஐஸ்வர்யா உண்டானாலும் நியூஸு, குண்டானாலும் நியூஸு ...!

Why Is Aishwarya S Weight Such An Issue   
பிரசவத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் ரொம்ப குண்டாகிவிட்டார் என்பது தான் தற்போது மீடியாக்களில் விவாதிக்கப்படும் ஹாட் டாப்பிக்.

உலக அழகிப் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட், பெங்காலி மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் அழகுக்கு மட்டுமல்ல நடிப்பிற்கும் பெயர் போனவர். அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பிறகும் மார்க்கெட் அடியாகாமல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார்.

சொல்லப்போனால் திருமணத்திற்குப் பிறகு தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்ற இந்தி படத்தில் ஒப்பந்தமான அவர் கர்ப்பமானதால் அதில் இருந்து விலகினார். அவர் பிள்ளையைப் பெற்றெடுப்பதற்குள் மக்களும், மீடியாவும் தான் படாதபாடு பட்டுவிட்டார்கள். அவருக்கு கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அதன் பெயர் என்னவென்றே தெரியவில்லை. பிரசவத்திற்குப் பிறகு நடிக்காமல், பொது நிகழச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருக்கும் ஐஸ் குண்டாகிவிட்டாராம். இப்போது அது தான் மீடியாக்களில் வலம் வரும் ஹாட் டாப்பிக். கடந்த வாரம் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு கணவர் அபிஷேக்குடன் சென்ற அவரை யாரோ ஒரு போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதில் அவர் குண்டாக வயதானவர் போல் காணப்பட்டுள்ளார். எத்தனையோ நடிகைகள் குழந்தை பெற்ற பிறகு உடனே வெயிட்டைக் குறைத்துள்ளார்கள். அப்படி இருக்கையில் பிரசவம் முடிந்து இத்தனை மாதமாகியும் ஐஸ் ஏன் வெயிட்டைக் குறைக்கவில்லை என்று ஆளாளுக்கு விமர்சித்து வருகிறார்கள்.

மீண்டும் சிக்கென்ற ஐஸை பார்க்கவே முடியாதா என்று பலரும் முணுமுணுக்கின்றனர்.
 

அடுத்த வருஷம் திரிஷாவுக்கு 30 வயது... இன்று 29வது பிறந்த நாள்

Trisha Turns 29 Today   
நடிகை த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் மூலம் 'மூத்த' நடிகைகள் வரிசையில் திரிஷாவும் இணைகிறார்.

மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற த்ரிஷா பிரஷாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் வந்து சென்றார். அதன் பிறகு பிரியதர்ஷனின் லேசா லேசா படம் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கோலிவுட் தவிர்த்து அவர் தெலுங்கு படங்களிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அண்மையில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்த தம்மு சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

தமிழில் நண்பர் விஷாலுடன் சமர், அடுத்து ஜெயம் ரவியுடன் பூலோகம் மற்றும் என்றென்றும் புன்னகை என்று அவர் பிசியாகவே உள்ளார். சொல்ல மறந்துட்டோம் பிரியதர்ஷனின் கட்டா மீட்டா படம் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஓடி, ஓடி உழைக்கும் த்ரிஷா இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா. அதுவும் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதே பொலிவுடன் இருக்கும் த்ரிஷா பிறந்தநாளுக்கு பார்ட்டி இல்லாமலா? எல்லாம் இருக்காம்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா!
 

கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி!

கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.

இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.

இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.

கோச்சடையான் படம் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகிறது.
 

தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!

59th Natioanl Award Winners Meet Dr Abdul Kalam 153403
டெல்லி: டெல்லியில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியிடம் தேசிய விருது பெற்ற கையோடு, முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் நிஜ ஹீரோவுமான டாக்டர் அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் தமிழகத்தைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள்.

இந்த ஆண்டு தேசிய விருது பெற்றவர்களில் தமிழ் சினிமா கலைஞர்கள்தான் அதிகம்.

டெல்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியிடம் விருது பெற்ற இயக்குநர்கள் சுசீந்திரன், சற்குணம், குமாரராஜா, நடிகர் அப்புக்குட்டி, எடிட்டர் ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர், விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தங்கள் படங்கள் குறித்து அப்துல் கலாமுக்கு அவர்கள் எடுத்துக் கூறினர். விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களுடனும் நீண்ட நேரம் உரையாடிய அப்துல் கலாம், படைப்புகள் மக்களுக்குப் பயனுள்ளதாகவும், இளைஞர்களை உத்வேகப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாழ்த்தினார்.

பின்னர் அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார் கலாம்.
 

2014-ல் இந்திய சினிமா மதிப்பு 5 பில்லியன் டாலர்களைத் தொடும்! - அமெரிக்க நிறுவனம் கணிப்பு

Partnership With Hollywood Boost Indian Film Industry 153406
சென்னை: இந்திய சினிமாவின் மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும் என இந்தியாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் எர்னஸ்ட் அண்ட் யங் தெரிவித்துள்ளது.

இந்திய சினிமாவின் தற்போதைய வர்த்தக மதிப்பு 3.2 பில்லியன் டாலர் ஆகும்.

எர்னஸ்ட் அண்ட் யங்க் நிறுவனம் உலக அளவில் வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்திய சினிமா குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் ஹாலிவுட்டுடன் சேர்ந்து இயங்கினால் இந்திய சினிமா துறை மேலும் விரைவாகவும் பெரிய அளவிலும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், தற்போது இந்திய சினிமா துறையின் வளர்ச்சி 14 .1 சதவீதமாக இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சினிமா தற்போது பொழுதுபோக்கு, விஷுவல் எபெக்ட், பயணம், மற்றும் சுற்றுலா, மற்றும் சினிமா கல்வி என பல துறைகளாக பரிணமிக்கிறது. இவ்வாறு வளர்ந்து வரும் சினிமா துறை ஹாலிவுட்டுடன் இணைந்தால் இதன் வளர்ச்சி மேலும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமா துறை தற்போது சீனா, ஜப்பான், ரஷ்யா, மற்றும் பிரேசில் ஆகிய நாட்டு சினிமாத் துறையோடு போட்டி போட்டு வருவதாகவும், மேலும் 2010 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் ஹாலிவுட் சினிமாக்கள் இந்தியாவில் படப்பிடிப்பு 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

59வது தேசிய திரைப்பட விருது விழா : சிறந்த தமிழ் படம் வாகை சூடவா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'அழகர்சாமியின் குதிரை' படத்துக்கு தங்க தாமரை தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை வித்யா பாலன் பெற்றார். டெல்லியில் 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி விருதுகளை வழங்கினார். தமிழில் சிறந்த ஜனரஞ்சக படமாக தேர்வான 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்கு தங்க தாமரை விருது, மற்றும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த அப்பு குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றார். வெள்ளி தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

விமல், இனியா நடித்த 'வாகை சூடவா' சிறந்த தமிழ் படத்துக்கான விருது பெற்றது. உமேஷ் குல்கர்னி இயக்கிய மராட்டிய படம் 'தியோல்', 'பியாரி' ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை பகிர்ந்து  கொண்டன. இந்த படங்களுக்கு தங்க தாமரையும், இரண்டரை லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. சில்க் ஸ்மிதா கதையான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' இந்தி படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை விருதும், 'தியோல்' படத்தில் நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றனர்.

பஞ்சாப் மொழி பட இயக்குனர் குர்விந்தர் சிங் (படம் ஆன்கே கியோரி டாடான்) சிறந்த இயக்குனர், 'ஆரண்யா காண்டம்' பட இயக்குனர் குமாரராஜா தியாகராஜா சிறந்த புதுமுக இயக்குனர், சிறந்த எடிட்டர் கே.எல்.பிரவீன் (ஆரண்யா காண்டம்) விருதுகளை பெற்றனர். மேலும் சிறந்த ஸ்பெஷல் எபக்ட்டுக்காக ஷாருக்கான் நடித்த 'ரா ஒன்'  உள்ளிட்ட படங்கள் விருது பெற்றன.


 

டெல்லியில் நடந்த விழாவில் விருது பெற்ற சுசீந்திரன், அப்புக்குட்டி!

Hamid Ansari Gives Away The National Film Awards
டெல்லி: 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இந்த விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அப்புக்குட்டி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றனர்.

வங்காள நடிகர் சவுமித்ர சட்டர்ஜிக்கு, வாழ் நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே' விருது இந்த விழாவில் வழங்கப்பட்டசு.

அழகர்சாமியின் குதிரை' தமிழ் சினிமாவுக்கு சிறந்த ஜனரஞ்சகமான படத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்துக்கு தங்கத்தாமரையும், ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த அப்பு குட்டி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார். அவருக்கு வெள்ளி தாமரையும், ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருது வாகை சூடவா' படத்துக்கு வழங்கப்பட்டது. அதன் தயாரிப்பாளர் முருகானந்தம் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றார்.

உமேஷ் குல்கர்னி டைரக்ட் செய்த மராத்தி படம் 'தியோல்', பியாரி' ஆகிய சினிமா படங்கள் சிறந்த படங்களுக்கான தேசிய விருதை பகிர்ந்து கொண்டன. இந்த படங்களுக்கு தங்கத் தாமரையும், ரூ.2.5 லட்சம் பரிசும் வழங்கினார்.

வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

இந்தி நடிகை வித்யா பாலன், தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து இருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அமீது அன்சாரி வழங்கினார்.

கத்தரிப்பூ நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்த அவருடன் அவரது பெற்றோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

சிறந்த கதாநாயகன் கிரிஷ் குல்கர்னி

'தியோல்' படத்தில் கதாநாயகனாக நடித்த கிரிஷ் குல்கர்னி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அவருக்கு வெள்ளித் தாமரையும், ரூ.50 ஆயிரமும் அமீது அன்சாரி வழங்கினார்.

பஞ்சாபி மொழியில் வெளியான 'ஆன்கே கியோரி டா டான்' சினிமாவை இயக்கிய டைரக்டர் குர்விந்தர் சிங்குக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், தங்கத் தாமரையும், ரூ.2.5 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த படம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பரப்புக்கான விருதையும், பஞ்சாபி மொழியிலான சிறந்த படமாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

எஸ்.நல்லமுத்து இயக்கிய 'டைகர் டைனாஸ்டி' செய்திப் படம் சிறந்த சுற்றுச் சூழல் விருது மற்றும் செய்தி படங்களுக்கான சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளை பெற்றன. நல்ல முத்துவுக்கு 2 வெள்ளித் தாமரைகளையும், விருதுகளையும், ரொக்கப் பரிசுகளையும் அமீது அன்சாரி வழங்கினார்.

குமாரராஜா தியாகராஜன் இயக்கிய ஆரண்யகாண்டம்' சினிமாவுக்கு, சிறந்த புதுமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டது. குமாரராஜ தியாகராஜன் தங்கத் தாமரையும், ரூ.1.5 லட்சமும் பரிசு பெற்றார்.

இந்த படத்தை எடிட் செய்த கே.எல்.பிரவீன் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றார்.
 

நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?

Hollywood Producer Barrie Osborne Watches Viswaroopam   
கமல்ஹாசனின் விஸ்வரூபம் அவரை எங்கெங்கோ கொண்டு சென்று விடும் போலத் தெரிகிறது. காரணம், அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரான பேரி ஆஸ்போர்ன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் குறித்து அறிந்து அவரது படத்தை பார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளாராம். கமல்ஹாசனும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்ட அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விஸ்வரூபம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கனவே காட்டுத் தீ போல பரவி வருகிறது. இப்படம் குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை இந்த டிரெய்லரும், அதில் கமலின் தோற்றமும், விஸ்வரூபம் என்ற பெயரின் எழுத்துக்களும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கமல் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. கமல்ஹாசனின் நடிப்பையும், விஸ்வரூபம் படம் வந்துள்ள விதம் குறித்தும் அறிந்த ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன், உடனடியாக அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம். தனது விருப்பத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக்கேல் வாட்மோரிடம் தெரிவித்துள்ளார். மைக்கேல் வாட்மோர்தான், கமல்ஹாசனின் பல படங்களுக்கு மேக்கப் ஆலோசகர் என்பது நினைவிருக்கலாம்.

வாட்மோர், இந்தத் தகவலை கமலுக்குத் தெரிவிக்க கமலும் இசைவு தெரிவித்தாராம். இதையடுத்து தற்போது அமெரிக்கா சென்றுள்ள கமல், அங்கு பேரி ஆஸ்போர்னுக்குப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளையும் சப் டைட்டிலுடன் ஆஸ்போர்னுக்குப் போட்டு காண்பிக்கிறார்களாம்.

பேரி ஆஸ்போர்ன் ஹாலிவுட்டின் பிரபல முகங்களில் ஒருவர். ஆக்டோபஸ்ஸி, அபோகாலிப்ஸ் நவ், மேட்ரிக்ஸ், லார்ட் ஆப் ரிங்ஸ், பேஸ் ஆப் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆஸ்போர்ன்.

விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்தே வாட்மோர் மூலம் படத்தைப் பார்க்கும் விருப்பத்தை அவர் வெளியிட்டாராம். ஒருவேளை கமல்ஹாசனின் நடிப்பு அவரைக் கவர்ந்து விட்டால் நிச்சயம் கமல்ஹாசனை வைத்து நேரடியாக ஒரு ஆங்கிலப் படத்தை அவர் தயாரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

அப்படி ஒரு வேளை கமல்ஹாசன் நடிப்பில் ஒரு ஹாலிவுட் படம் உருவானால் அல் பசினோ மாதிரியான வித்தியாசமான நாயகன் வரிசையில், நம்ம ஊர் கமலை ஹாலிவுட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்...

பார்க்கலாம், பேரி என்ன செய்யப் போகிறார் என்று...!