எங்கும் ஓகே ஓகே ஜூரம்... சத்தமில்லாமல் இன்று 3 படங்கள் ரிலீஸ்!


Mattuthavani Movie
தமிழக தியேட்டர்களில் ஒரே சிரிப்பு சத்தம்.... கேன்டீன்களில் கலகலப்பு... பார்க்கிங் பாய்ஸ் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு கோடைத் திருவிழாவாக மாறிவிட்டது உதயநிதி - சந்தானம் நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெளியீடு.

இன்று முதல் அமெரிக்காவிலும் படம் வெளியாகிறது. வேண்டுமென்றேதான் அமெரிக்க ரிலீசை தள்ளிப் போட்டாராம் உதயநிதி.

முதலில் இங்கு படம் வெளியாகி நல்ல டாக் உருவான பிறகு வெளியிட்டால், உலத நாடுகளில் வசூல் அள்ளும் என்ற வர்த்த ஐடியாதான் அது. நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

இப்படியொரு சூழலில் இந்த வாரமும் 4 படங்கள் வெளியாகின்றன. பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போய் பார்க்க வேண்டிய படங்கள்.

மாட்டுத்தாவணி, மை, அடுத்தது, ஊலலல்லா... ஆகியவைதான் அந்த மூன்று படங்கள்.

இவற்றில் மாட்டுத்தாவணி, ஒரு காலத்தில் ஹிட் இயக்குநராக இருந்த பவித்திரன் இயக்கியது. விமல் நடித்துள்ளார். தக்காளி சீனிவாசன் இயக்கியுள்ள படம் அடுத்தது.

ஏஎம் ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்துள்ள படம் ஊலலல்லா.

வேலூரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் மை. அரசியல்தான் மையக்கரு. சே ரா கோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.
 

தமிழகத்தை விரைவில் தாக்க வருகிறது பக்ரி 'புயல்'!


Nargis Fakhri
பாகிஸ்தான்- அமெரிக்கக் கூட்டுத் தயாரிப்பான நர்கீஸ் பக்ரி, விரைவில் கோலிவுட்டுக்கு 'குட்மார்னிங்' சொல்ல வருகிறார்.

புதுப் புது முகங்களாகப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் கோலிவுட்டினர். பழைய முகங்களைக் கழித்து விட்டு புதுப் புது நடிகைகளாக தேடி வருகின்றனர். கதையைத் தேடுகிறார்களோ இல்லையோ, நல்ல கலர்புல் நாயகிகளாக தேடிப் பிடிப்பதில் மெனக்கெடுகிறார்கள், போட்டோ ஆல்பத்தோடு ரூம் போட்டு குரூப் குரூப்பாக அலசி ஆராய்ந்து செலக்ட் செய்கிறார்கள் - நாயகிகளை.

அப்படியாப்பட்ட ஒரு ஆய்வில்தான் 'யு ஆர் செலக்டட்' என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரராகியுள்ளார் நர்கீஸ் பக்ரி. இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. பாகிஸ்தானிய-அமெரிக்கக் கூட்டுத் தயாரிப்புதான் இந்த 'பிரளய' பக்ரி. தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ள பக்ரி, அங்கு ராக்ஸ்டார் படத்தில் களேபரம் செய்தவர். அடுத்து இவர் வரப் போவது கோலிவுட்டுக்காம்.

மேலும் 2வது இந்திப் படத்திலும் புக் ஆகி விட்டாராம் பக்ரி. அப்படத்தில் அக்ஷய் குமாருடன் ஜோடி போடும் அவர் செம கிளர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.

சமீபத்தில் சென்னைக்கும் வந்து விட்டுப் போனார் பக்ரி. நடிப்புக்கோஸ்ரம்தான் சென்னைக்கு வந்தீங்களா என்று அவரிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. இது வேறு விஷயத்திற்காக. நான் தமிழ் சினிமாவுக்கு வரப் போவது உண்மைதான். அதுகுறித்த மேல் விவரங்களை இப்போதே சொல்ல முடியாது. பேசியிருக்கிறேன். ஹீரோ யார் என்பது குறித்தும் நான் சொல்ல முடியாது. நிச்சயம் அது முன்னணி ஹீரோதான் என்று அழகாக சிரித்தபடி சொன்னார்.

மாடல் அழகியாக இருந்து நடிகையாக புரமோட் ஆனவர் பக்ரி. சரி மெட்ராஸ் பத்தி என்ன சொல்றீங்க என்று பக்ரியிடம் கேட்டால், அட ரொம்ப சுத்தமான ஊரா இருக்குங்க. அழகா இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு தென்னிந்திய சாப்பாடு வகைகளை ஒரு கை பார்க்க தயாராகி வருகிறேன் என்றார் குதூகலித்தபடி.

பக்ரியை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பின்னே, வந்தவுடன் வணக்கம் என்ற ஒரு வார்த்தையை கற்றுக் கொண்டு விட்டு கலக்கி விட்டாரே, அதற்காகத்தான். அடுத்து வாடா, போடா, மச்ச்சான்ஸ் போன்ற இலக்கியங்களையும் கூட பக்ரி கற்றுத் தேறுவார் என்று நம்பலாம்.

பக்ரியுடன் சேரப் போகும் அந்த பக்கிரிச்சாமி யார் என்பதுதான் தெரியலே...
 

முதல்ல ராம் கோபால் வர்மா போனது சன்னி லியோனிடம்தானாம்!


ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட் படத்தில் தகிடுமுகிடான குத்துப் பாட்டுக்கு கும்மாளம் போடப் போவது நதாலியா கெளர் என்பது பழைய செய்தி. ஆனால் அந்தப் பாட்டுக்கு கிக் டான்ஸ் ஆட அவர் முதலில் அணுகியது சன்னி லியோன் என்பது புதிய செய்தி.

ராம் கோபால் வர்மா இயக்க சஞ்சய் தத் நடிக்க உருவாகும் படம் டிபார்ட்மென்ட். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு அதிரடியான குத்துப் பாட்டுக்கு நதாலியா ஆடுகிறார். ஆனால் முதலில் இந்தப் பாட்டுக்காக ராம் கோபால் வர்மா, சன்னி லியோனைத்தான் அணுகினார்.

சன்னி லியோனைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக ஆபாசப் படப் பிரியர்களுக்கு சன்னியை நன்றாகவே தெரியும். கனடாவைச் சேர்ந்தவரான இவர் ஆபாசப் பட நடிகையாவார்.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சன்னியை விட்டு விட்டு இந்திய- பிரேசில் கூட்டுத் தயாரிப்பான நதாலியா கெளருக்குத் தாவி விட்டார் ராமு. ஏன் இந்தத் தாவல் என்பது குறித்துத் தெரியவில்லை. இதுகுறித்து ராமுவிடம் கேட்டால், அப்படியா, நான் சன்னியைப் பற்றி யோசிக்கவே இல்லையே. நீங்க தப்பா கேக்குறீங்கன்னு நினைக்கிறேன் என்று 'கஜினி' போல பேசுகிறார் ராமு.

சமீப காலத்தில் ராம் கோபால் வர்மா தயாரித்த, இயக்கிய படங்களிலேயே பெரிய மசாலாப் படமாக டிபார்ட்மென்ட் உருவாகிறது. எனவே 'அஞ்சரைப் பெட்டியில்' உள்ள அத்தனை மசாலா ஐட்டங்களையும் எடுத்து ஒன்றாகப் போட்டுக் கலக்கி மகா பிரமாண்டமான மசாலாப் படமாக இதை பார்த்துப் பார்த்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை சன்னி லியோனைச் சேர்த்தால், 'நெடி' ஜாஸ்தியாகிப் போய் விடுமோ என்ற அச்சத்தில் அவரை கைவிட்டாரா என்பது தெரியவில்லை.

ராமு எதைச் செய்தாலும் அதில் வித்தியாசம் வைப்பது வழக்கம். நதாலியா விஷயத்தில் என்ன வித்தியாசம் கண்டாரோ தெரியவில்லை. ஆடட்டும், பார்க்கலாம்.
 

அரசியலுக்கு வருவது காலத்தின் கையில் உள்ளது - ஆரம்பித்தார் உதயநிதி


Udhayanidhi Stalin
நான் அரசியலுக்கு வருவதும் வராததும் காலத்தின் கையில் உள்ளது என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற ஒரே படத்தில் நடிகராக புகழின் உச்சிக்குப் போய்விட்டார் உதயநிதி.

இவரும் படத்தின் இயக்குனர் ராஜேஷும் கோவையில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்களை சந்தித்து பேசினர்.

படம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்ட அவர்கள், பின்னர் நிருபர்களைச் சந்தித்தனர்.

"சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. அது இப்போது நிறைவேறிவிட்டது. எனக்கு இது முதல் படம். இயக்குனருக்கு இது மூன்றாவது படம். இந்தப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை.

எங்கள் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக பார்க்க தியேட்டருக்கு வந்து செல்கின்றனர். ஒரு படம் வரி விலக்கு பெற வேண்டுமானால் அதற்கு மூன்று விஷயங்கள் மட்டும் தேவை. அந்தப்படம் ஆபாசமில்லாத படமாக இருக்க வேண்டும். பிறமொழி கலந்த படமாக இருக்க கூடாது, தமிழ் பெயரில் தலைப்பு இருக்க வேண்டும்.

அனைவரும் பார்க்கும் படம் என்ற சான்றிதழ் வேண்டும். இந்த அம்சங்கள் இருந்தால் அந்த படத்திற்கு வரிவிலக்கு அளிக்கலாம் என்ற சட்டம் உள்ளது. எனது படத்தில் இந்த அம்சங்கள் எல்லாம் இருந்தும் வரிவிலக்கு அளிக்க மறுக்கிறார்கள். இதற்காக உச்சநீதிமன்றம் வரை கூட சென்று நான் படத்திற்கு வரிவிலக்கு பெறுவேன்.

படத்திற்கு ஒரு துளி ஆபாசம் இல்லை என்று கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக கோவை மக்களிடம் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.

படம் தமிழ்நாடு மட்டுமின்றி, வடமாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு காமெடி ரொம்பவும் பிடிக்கும். அதனால்தான் என்னுடைய முதல் படத்தை காமெடி படமாக தேர்வு செய்தேன்.

நான் முதலில் நடிப்பதாக இருந்த படம் யுத்தம் செய். ஆனால் அது சீரியஸ் கேரக்டர் படம் என்பதால் இந்தப்படத்தை தேர்வு செய்தேன். என்னுடைய படத்தை தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மனைவி எல்லோரும் பார்த்தார்கள்.

தாத்தா கதை வசனத்தில்...

என் தாத்தா (கருணாநிதி) நான் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டினார். அவரது கதை, வசனத்தில் நடிக்க அனைவரும் ஆசைப்படுவார்கள். நானும் தாத்தா கதை, வசனத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். என் மனைவி படத்தை பார்த்துவிட்டு சில சீன்களை குறிப்பிட்டு பாராட்டினார். அத எனக்கு சந்தோசமாக இருந்தது.

என் கதைகளை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளேன். அவர்கள் கதையை கேட்டு எனக்கு பொருத்தமாக இருந்தால் தேர்வு செய்வார்கள். அதில் நான் நடிப்பேன். மற்றபடி யாருடைய குறுக்கீடும் அதில் இருக்காது. கேரளாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி இன்று ரிலீசாகியுள்ளது," என்றார்.

அரசியல் எப்போது...

அவரிடம் நீங்கள் உங்கள் தாத்தா, அப்பா வழியில் அரசியலில் குதிப்பீர்களா? என்று கேட்டபோது, "5 வருடங்களுக்கு முன் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டீர்கள். இன்று நடித்துள்ளேன். அது போல் 5 வருடங்கள் கழித்து அரசியலில் குதிப்பேனா என்று தெரியாது. அதை காலம் தான் முடிவு செய்யும்," என்றார்.
 

போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி பட ஷூட்டிங் : கேரள அமைச்சர் ஏற்பாடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கேரளாவில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது. அதில் பங்கேற்றுள்ள ரஜினிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான்'. சவுந்தர்யா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் 10 நாட்களுக்கு மேல் நடந்தது. ரஜினிகாந்த் லண்டன் சென்று ஷூட்டிங்கில் பங்கேற்றார். சரத்குமார், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. சில நாட்கள் ரஜினியும் மற்ற நட்சத்திரங்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் சென்னை திரும்பினார் ரஜினி. மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகளை லண்டனில் படமாக்கி வந்தார் சவுந்தர்யா.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டிடுயோ வளாகத்தில் படமாக்க திட்டமிடப்பட்டது. திருவனந்தபுரம், கோவலம் சாலையில் திருவல்லம் என்ற இடத்தில் இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. அங்கு ஷூட்டிங் தொடங்கியது. இந்த ஸ்டுடியோ கேரள மாநில திரைப்பட வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஒலிப்பதிவு பொறியாளர் மாநில விருது வென்றிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என் கருண் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளதால் பிரத்யேகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாநில அமைச்சரும் மற்றும் நடிகருமான கே.பி.கணேஷ்குமார் ரஜினியின் தீவிர ரசிகர். கோச்சடையான் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே முன்னின்று செய்துகொடுத்துள்ளார்.


 

ஓவராக ஆட்டம் போட மாட்டேன் : ஹன்சிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
என்னுடைய நிலை எனக்கு தெரியும். ஓவராக ஆட்டம் போடுவது பிடிக்காது என்கிறார் ஹன்சிகா மோத்வானி.

இதுபற்றி அவர் கூறியதாவது: 'டெல்லி பெல்லி' இந்தி படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நான் நடிக்கிறேன். கண்ணன் இயக்குகிறார். இந்தியில் இப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதில் இடம் பெற்ற வசனங்கள் அவ்வளவு கடுமையாக இருந்தது. அதுபோல் வசனங்கள் பேசி நடிப்பீர்களா என்கிறார்கள். சினிமாவில் என் நிலை எனக்கு தெரியும். ஓவராக பேசுவது, ஓவராக ஆட்டம் போடுவது எனக்கு பிடிக்காது.

இந்தியில் கடுமையான வசனங்கள் இருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி அந்த வசனங்களை இயக்குனர் மாற்றி இருக்கிறார். அதை கேட்ட பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தியில் இம்ரான்கான் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் ஆர்யா ஏற்றிருக்கிறார்.

தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறேன். 'கண்டிரீகா' என்ற ஹிட் படத்தை கொடுத்த டீமுடன் மீண்டும் இதில் இணைகிறேன். இவ்வாறு ஹன்சிகா மோத்வானி கூறினார்.


 

கேரளாவின் சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் விறுவிறு படப்பிடிப்பில் கோச்சடையான்!


Kochadayan Movie
ரஜினியின் கோச்சடையான் இப்போது மையம் கொண்டுள்ள இடம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டுடியோ.

சென்னையில் இல்லாத வசதியா இந்த ஸ்டுடியோவில் என்ற கேள்வி எழுகிறதல்லவா... உண்மைதான். ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு நிகரான வசதிகள், பாதுகாப்பு, யாரும் அத்தனை சுலபத்தில் புக முடியாத அளவு பிரைவசி உள்ள இடம் இது.

கோவளம் சாலையில் திருவல்லவம் மலைப்பகுதியில் அழகிய லொகேஷனில் அமைந்துள்ளது சித்ராஞ்சலி. மத்திய மாநில அரசுகளின் பல விருதுகளை இந்த ஸ்டுடியோ வென்றுள்ளது. கேரள அரசே நடத்துகிறது. ஆனால் தமிழ் சினிமாக்காரரர்களுக்கே பெரிதாக தெரியாத இடம் இது.

ரஜினி இங்கு படப்பிடிப்பு நடத்த விரும்பியது தெரிந்ததும் கேரள அமைச்சரும் ரஜினி ரசிகருமான கே பி கணேஷ் குமார், படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்நின்று செய்துள்ளார். மீடியா ஆட்கள் யாருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியில்லை.

இந்த ஸ்டுடியோவுக்குள் தீபிகா - ரஜினி காட்சிகள் படமாக்கம் இன்றுடன் முடிந்துவிடும். அடுத்து சில காட்சிகளை கேரளாவின் அழகிய லொகேஷன்களில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் சௌந்தர்யா. நடிகர் ஆதியும் இந்த ஷெட்யூலில் பங்கேற்கிறார்.

பாடல் காட்சிகள் உள்ளிட்ட பகுதிகள் அடுத்தகட்டமாக படமாக்கப்படும் என்று தெரிகிறது. ஜூலை இறுதியில் பாடல்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

ரஜினியிடம் கேட்கவில்லை... நஷ்ட ஈடு தர தனுஷ், ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டனர் - நட்டி குமார்


Dhanush and Aishwarya
3 படத்தின் தெலுங்கு விநியோகத்தில் ஏற்பட்ட பெரிய நட்டத்தை ஈடுகட்டுமாறு நான் ரஜினியிடன் கேட்கவில்லை. ஆனால் அவர் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும் இந்த நட்டத்தை ஈடுகட்டித் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்றார் நட்டி குமார்.

தனுஷ், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த ‘3’ படத்தின் தெலுங்கு உரிமையை பெரிய தொகைக்கு வாங்கி வெளியிட்டார் நட்டி குமார் என்பவர்.

ஆனால் தெலுங்கில் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்துவிட்டது. இந்த நட்டத்தை ரஜினி ஈடுகட்டுவார் என நட்டி குமார் கூறியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, அது பரபரப்பைக் கிளப்பியது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரஜினி அறிக்கை விட வேண்டி வந்தது. மேலும் தனுஷும், ரஜினிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விட்டார்.

இந்த நிலையில் நட்டி குமார் மீண்டும் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "ஆந்திராவில் 3 படத்தை வாங்கி நான் வெளியிட்டேன். படம் தோல்வி அடைந்ததால் 80 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்பேன் என்று நான் கூறவில்லை. ரஜினி உதவுவார் என எதிர்ப்பார்ப்பதாகத்தான் கூறினேன்.

ரஜினி இந்த படத்தின் விநியோகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். சினிமாவில் நஷ்டம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். ஆனால் 3 படத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

இந்த படத்தை 6.5 கோடி செலவில் தயாரித்தனர். கொலவெறி பாடலை வைத்து ரூ.50 கோடிக்கு விற்றுவிட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தனுஷும், ஐஸ்வர்யாவும் உங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுகிறோம். எவ்வளவு தொகை வசூலானது என்று விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளனர். அவர்கள் இப்படி ஆறுதலாக சொன்னது சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. கொடுப்பதைக் கொடுக்கட்டும்," என்றார்.
 

ஃபேண்டா குடிச்சா தமன்னாவை சந்திக்கலாம்!


ஃபேண்டா கூல்டிரிங்க்ஸ் குடித்தால் நடிகை தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொக கோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்கப்படும் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தமன்னாவை சந்தி்ககும் வாய்ப்பு கிடைக்கும்.

ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்துகொள்கிறார். அவர் தனது ரசிகர்களை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார். தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம்.

என்ன ஃபேண்டா வாங்கியாச்சா?
 

ஷாரூக்கானுக்கு நிகழ்ந்ததைப் போல அமெரிக்காவில் எனக்கும்தான் நடந்தது - கமல்


Kamal Hassan
அமெரிக்காவில் ஷாரூக்கானுக்கு நடந்ததைப் போன்ற அனுபவம் எனக்கும்தான் ஏற்பட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை. அந்த பிரச்சினையை நான் ரசிக்கிறேன். சொல்லப்போனால் என் பெயரையே Qamal Hassan என்று மாற்றப் போகிறேன், என்கிறார் உலக நாயகன் கமல்!

இந்தி நடிகர் ஷாருக்கானை அமெரிக்கர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் அல்லவா. இதுபற்றி கமலிடம் கருத்து கேட்டபோது, "ஷாரூக்கானை மட்டுமா... என்னையும் கூடத்தான் சந்தேகமா பார்க்கிறார்கள் அமெரிக்கர்கள். அங்கு இது சகஜம்தான். இதுக்காக ஏன் டென்ஷனாகனும்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "எனது பெயரை உச்சரிக்கும்போது முஸ்லிம் பெயர்போல் தோன்றும். எனது தந்தை பெயர் வைக்கும் போதே இதுபோன்ற சந்தேகங்கள் வரும் என்று தெரிந்துதான் வைத்தார்.

அடிக்கடி என்னிடம் உனது பெயரை பற்றி யாரேனும் விசாரித்தார்களா? முஸ்லிம் என்று நினைத்தார்களா? என்று கேட்பார் அப்பா.

நான் அமெரிக்கா போகும்போதெல்லாம், எனது பெயரும் அமெரிக்கர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுக்கு விமான நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் எனக்கும் ஏற்பட்டது. கனடா விமான நிலையத்தில் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். அரை மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்டார்கள். இப்படியெல்லாம் குழப்பம் வரும் என்று தெரிந்தே எனக்கு இப்பெயரை என் தந்தை வைத்துள்ளார்.

எனது சகோதரர்களுக்கு சந்திரஹாசன், சாருஹாசன் என பெயர் வைத்து விட்டு எனக்கு மட்டும் குறும்புத்தனமாக இந்த பெயரை சூட்டியுள்ளார். எனது பெயரை இதுபோல் சந்தேகமாக பார்த்து குழம்புவதை ஒருவிதத்தில் நான் ரசிக்கிறேன். சந்தோஷமாகவும் இருக்கிறது.

என் பெயரே கியூ என்ற ஆங்கில எழுத்தை முதலில் வரும் வகையில் மாற்றப்போகிறேன். அப்படி பெயர் வைப்பதன் மூலம் பிரச்சினைகள் வரவேண்டும். அவற்றை கண்டு நான் ரசிக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தினால் அங்குள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதனால்தான் ஷாருக்கானை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். அது இயல்புதானே. இன்னொன்று அதுபற்றி ஷாருக்கானே கவலைப்படவில்லை. அதற்குள் ஆயிரம் கருத்துகள்.

இதுபோன்ற விஷயங்களுக்கு இந்தியாவிலிருந்து அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தான் மாணவர்கள் நமது நாட்டில் எளிதாக ரூம் எடுத்து தங்கிவிட முடியுமா? இதை யாரும் யோசிக்கிறீர்களா... இதற்கு தீர்வு என்ன என்றாவது யோசிக்கிறோமா... அதனால் நம்மிடம் உள்ள மூடத்தனத்தை முதலில் அகற்றப் பார்க்க வேண்டும்," என்றார்.

இப்போதான் உங்கள் பட்டப்பெயர் பொருத்தமாக உள்ளது கமல் சார்!
 

பூலோகத்தில் ஜெயம் ரவியின் காதலி நயன்தாரா?


ஜெயம் ரவியின் அடுத்த படமான பூலோகத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுமுக இயக்குனரின் பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டார்களாம். கதையைக் கேட்ட அவர் எனக்கு ஸ்டோரி ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த படத்தில் நயனை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் துவங்குகிறது. இதில் நயன் தான் ஹீரோயினா என்பது விரைவில் தெரிய வரும்.

அடடா அத்தனை இயக்குனர்களும் நயன் திரும்ப நடிக்க வரமாட்டாரா என்று காத்திருந்தார்கள் போலும். நயன் ரிட்டர்ன் ஆனவுடனேயே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்களே.

எதுவாக இருந்தால் என்ன, நயன் காட்டில் வாய்ப்பு மழை 'சோ'வென்று பெய்கிறது...
 

மதில்மேல் பூனை... படப்பிடிப்பில் யானை... நாயகி அலறல்!


Mathil mel poonai Movie
பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் தங்கை விபா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'மதில் மேல் பூனை'.

படத்தை இயக்குபவர் பரணி ஜெயபால். செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

படம் குறித்து பரணி ஜெயபால் கூறுகையில், "படிக்கும் வயதில் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பதைத்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம்.

படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும்.

இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். காமெடிக்கு தம்பி ராமையா.

இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குறிப்பாக கேரள காடுகளில் இந்தப் படத்தை ஷூட் செய்த அனுபவம் மறக்கமுடியாதது.

ஒரு முறை நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது யானைக் கூட்டம் வந்துவிட்டது. நாங்கள் காமிரா உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மரக்கூட்டத்தின் பின்னாள் ஒளிந்து கொண்டோம். கதாநாயகி விபா பயத்தில் அலறிவிட்டார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றார்.

நல்ல வேளை.. யானைகள் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபடி இருந்துவிட்டு, நகர்ந்துவிட்டன. நாங்கள் தப்பித்துவிட்டோம்," என்றார்.

ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் நாயகி விபா கூறுகையில், "நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல 'ஆட்டா' என்ற படம் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம்.

எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. 'நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு'ன்னு அண்ணன் சொன்னார்.

இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது," என்றார்.