அஜீத் மொட்டை போட்டுக் கொண்டது ஏன் தெரியுமா?

சென்னை: வீரம் படத்தின் வெற்றிக்காகவே இந்த மொட்டை என அஜீத் தெரிவித்துள்ளார்.

நரைத்த தலை, தாடியுடன் படங்களில் நடித்து வந்த அஜீத், திடீரென இன்று மொட்டையடித்து போஸ் கொடுத்தார்.

அஜீத் மொட்டை போட்டுக் கொண்டது ஏன் தெரியுமா?

வீரம் படத்துக்குப் பிறகு கவுதம் மேனனின் புதுப்படம் தொடங்க நான்கு மாதங்கள் இடைவெளி இருப்பதால் அவர் மொட்டை போட்டுக் கொண்டு, வெளிநாடு செல்லப்போவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் தனது வீரம் படம் பெரும் வெற்றியைப் பெறவேண்டும் என்பதற்காகவே மொட்டை போட்டதாக தெரிவித்துள்ளார்.

மொட்டை போட்டுக் கொண்டு திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசித்த அஜீத், தன் படத்துக்காக வேண்டிக் கொண்டாராம். அவருடன் படத்தின் இயக்குநர் சிவாவும் மொட்டை போட்டுக் கொண்டார்.

வேண்டுதலுக்கு வேண்டுதலுமாச்சு... விளம்பரத்துக்கு விளம்பரமுமாச்சு!

 

உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கு?- இளையராஜா கேள்வியும் கமல் பதிலும்!

சென்னை: உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கிறது... இணைக்க நீங்க என்ன முயற்சி பண்றீங்க, என இளையராஜா கேட்ட கேள்விக்கு கமல் விளக்கமாக பதிலளித்தார்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவைத் துவக்கி வைத்த கமல் ஹாஸனிடம் தமிழ்த் திரையுலகத்தின் ஜாம்பாவான்கள் பங்கேற்ற இந்த விழாவில் இளையராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், சூர்யா உட்பட பலர் எழுதி அனுப்பியிருந்த கேள்விகள் கேட்கப்பட்டன.

உலக சினிமாவிலிருந்து தமிழ் சினிமா ஏன் விலகியிருக்கு?- இளையராஜா கேள்வியும் கமல் பதிலும்!

அனைத்துக் கேள்விகளுக்கும் தனது பாணியில் பதில் சொன்ன கமலிடம் இளையராஜா கேட்ட கேள்வி:

"உலக சினிமாவிலிருந்து தமிழ்சினிமா விலகியிருக்கு... உடம்பிலிருந்து கண்ணு தனித்து போயிருக்குமா? உலக சினிமாவுடன் தமிழ் சினிமா ஏன் ஒட்டல? ஒட்டுறதுக்கு நீங்க என்ன பண்றீங்க?"

இந்த கேள்விக்கு கமல் அளித்த பதில்: "கொஞ்சம் தமிழ் சினிமாவுக்கு ஒன்ற கண்ணு. அதை விட்ருங்க. இந்த பக்கம் பாக்குறா மாதிரி இருக்கும் ஆனா அந்த பக்கம் பாத்துகிட்டிருக்கும். அதை கேலி பண்ண கூடாது. கண்ணாடி போட்டா சரியாகிடும். நான் தனியா ஒன்னும் செய்ய முடியாது. எல்லாரும் எல்லா சினிமாவும் பாக்கணும். அதுக்கு தான் இந்த வாய்ப்பு (சர்வதேச திரைப்பட விழா).

உலக சினிமாவைப் பார்க்கும் ஒரு சாதகமாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் பங்குகொள்ளும் தகுதியை இனிமேல் தான் தமிழ்சினிமா அடையவேண்டும்.

ஓரிருவரை வைத்துக்கொண்டு எத்தனை நாள் மார்தட்டிக்கொள்ளமுடியும். மொத்தமாக பார்க்கும்போது மோசமில்லை என்ற நிலை உருவாகவேண்டும். மக்களுக்குப் பிடிக்காது என்று பணப்பை வைத்திருப்பவர்கள் தயங்குவார்கள். ஆனால் இயக்கம், கேமரா என சினிமா தெரிந்தவர்கள் வரும்போது தமிழ்சினிமா மேலோங்கி நிற்கும்," என்றார்.

 

சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சனாகான்!

சல்மான்கான் படத்துக்காக சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் நடிகை சனா கான்.

சிலம்பாட்டத்தில் அறிமுகமான சனாகான், இப்போது தனது முழு கவனத்தையும் பாலிவுட்டில் செலுத்தி வருகிறார்.

நடிகர் சல்மான்கானுடன் 'ஜெய் ஹோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளியானால் தனக்கு இந்தியில் பெரிய திருப்புமுனை கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சனாகான்!

இதனால் இந்தப் படம் வெளியாவதற்குமுன் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் தேதிகள் அளிக்க அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யா-இயக்குனர் லிங்குசாமி கூட்டணியில் உருவாக இருக்கும் புதுப் படம் ஒன்றின் பாடல் காட்சிக்காக சனாகானை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து சனாகான் கூறும்போது, "சல்மானுடன் நான் நடிக்கும் படம் விரைவில் வெளியாக உள்ளது. அது எனக்கு ஒரு பெரிய படமாக அமையும். இந்தப் படம் வெளியாகும் நேரத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் புதிய படங்களுக்கு நேரம் ஒதுக்குவதென்பது கஷ்டமாக இருக்கக்கூடும்.

சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது நிஜம்தான். ஆனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை மீண்டும் பெறுவேன்," என்றார்.

 

ராகவேந்திரா ராஜ்குமாருக்கு சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை!

ராகவேந்திரா ராஜ்குமாருக்கு சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை!

பெங்களூர்: உடற்பயிற்சியின்போது மயங்கி விழுந்ததில், தலையில் பலத்த அடிப்பட்டுள்ள நடிகர் ராகவேந்திரா ராஜ்குமாருக்கு சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள்.

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார். இவரது வீடு பெங்களூர் சதாசிவ நகரில் உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 15ந்தேதி தனது வீட்டுக்கு அருகே உள்ள உடற்பயிற்சி மையத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ராகவேந்திரா ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக ஓரிரு நாட்களில் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். இன்று அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவிருக்கிறார்.

இதற்கிடையே, ராகவேந்திரா ராஜ்குமாரின் உடல் நிலை குறித்து சிலர் தவறான வதந்தி பரப்புவதாகவும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.

 

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்

சென்னை: படம் இயக்க தான் கொடுத்த ரூ 1.5 கோடி பணத்தை வெங்கட் பிரபு தராமல் இழுத்தடிக்கிறார். எனவே அவரிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுத் தருமாறு இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சோனா.

சோனாவும் வெங்கட் பிரபுவும் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் எஸ்பிபி சரண் விவகாரத்தில் மோதிக் கொண்டனர்.

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்

ஆனால் பின்னர் சமரசமாகிவிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இயக்குநர்கள் சங்கத்தில் நடிகை சோனா புகார் ஒன்றைக் கூறியுள்ளார். அதில், "வெங்கட்பிரபு ‘கோவா' படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவரை அணுகி எனக்கொரு படம் இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்தார்.

‘கோவா' படம் ரிலீசானதும் நான் தயாரிக்கும் படத்தை டைரக்டு செய்ய முடிவானது. இதற்காக அவருக்கு ரூ. 1.5 கோடி பணம் கொடுத்தேன். ஆனால் உறுதி அளித்தபடி என் படத்தை அவர் இயக்கவில்லை.

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்

வேறு படம் எடுக்க போய் விட்டார். அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட போது தரவில்லை. பல ஆண்டுகளாக பணத்தைக் கேட்டு வருகிறேன். இதுவரையிலும் அவர் தரவில்லை. வெங்கட் பிரபு தற்போது ‘பிரியாணி' படத்தை இயக்கி உள்ளார். அந்த படம் ரிலீசுக்கு முன் எனக்கு தர வேண்டிய பணத்தை வாங்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்!

சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்!

கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ரூபாய் நோட்டை எடுத்து ரஜினியிடம் கொடுத்துள்ளார். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாராம்.

பின்னர் ரஜினி தனது காரை நோக்கி செல்லும்போது தான் அந்த பெண்ணுக்கு தான் பிச்சை போட்டவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெரிய வந்துள்ளது. உடனே ஓடி வந்து ரஜினியிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த பெண். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இளம் பெண் கூறி தான் ரஜினிக்கு ஒரு பெண் பிச்சை போட்டது தெரிய வந்துள்ளது.

நான் மட்டும் ரஜினி இடத்தில் இருந்திருந்தால் பிச்சை போட்ட அந்த பெண்ணை திட்டிவிட்டிருப்பேன். ஆனால் அவரோ அமைதியாக பணத்தை வாங்கிக் கொண்டார் என்றார் அந்த இளம் பெண்.

இந்த நிகழ்ச்சியை ரஜினியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் பதிவு செய்துள்ளனர்.

 

இந்த நடிகைக்கு ரூம் தேடியே முட்டி எல்லாம் தேயுதே: தயாரிப்பாளர்கள்

சென்னை: விரல் வித்தை நடிகரின் காதலியான புஸுபுஸு நடிகைக்கு ஹோட்டலில் அறையை புக் செய்வதற்குள் தயாரிப்பாளர்களுக்கு மூச்சு வாங்குகிறதாம்.

புஸுபுஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். இடையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துவிட்டனர்.

நடிகை முன்பெல்லாம் தனது டாக்டர் அம்மாவுடன் படப்பிடிப்புக்கு வருவார். ஆனால் தற்போது தனியாக வந்து போகிறாராம். இனி அம்மாவுக்கு செலவு செய்ய வேண்டியது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் அந்த பெருமூச்சு நிலைக்கவில்லையே.

நடிகை தான் தங்கும் ஹோட்டல் அறையின் எண்களை கூட்டினால் 9 என்று வரும் அறையில் தான் தங்குவேன் என்று அடம் பிடிக்கிறாராம். இதனால் கூட்டு எண் 9 வரும் அறைகளையே தயாரிப்பாளர்கள் தேடிப்பிடிக்கிறார்களாம். அந்த 9 கூட்டுத் தொகை வரும் அறை கிடைப்பதில் பெரும்பாடாக உள்ளதாம். அப்படியே கிடைத்தாலும் அது சூட்டாகவோ, இருவர் தங்கும் அறையாகவோ உள்ளதாம்.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு பில் எகிறிவிடுகிறதாம். அம்மா வரவில்லை செலவு குறையும் என்று நினைத்தால் பட்ஜெட்டை எகிற வைக்க எப்படி எல்லாம் வழி கண்டுபிடிக்கிறார் நடிகை என்று தயாரிப்பாளர்கள் அலுத்துக் கொள்கிறார்களாம்.

 

இளம் நட்சத்திரங்கள் நடிக்கும் ஒலிச்சித்திரம்: இலஞ்சி குமரன்கோவிலில் பூஜை

குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் "ஒலிசித்திரம்" புதிய தமிழ் படத்தின் தொடக்க விழா, பூஜை நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன், நாயகி, தொழில் நுட்பக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

தமிழ் சினிமா என்றாலே நெல்லை மாவட்டம் கண்டிப்பாக இடம் பெருவது வழக்கம்.

தென்காசி,செங்கோட்டை ,குற்றாலம் ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளை மையம் வைத்து ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

"ஒலிசித்திரம்" எனும் படத்தின் படப் பிடிப்பு அகஸ்திய முனிவரால் வணங்கப்பெற்ற திருவிலஞ்சி குமாரன்கோவிலில் வைத்து சிறப்பு பூஜையோடு படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது.

இளம் நட்சத்திரங்கள் நடிக்கும் ஒலிச்சித்திரம்: இலஞ்சி குமரன்கோவிலில் பூஜை

ஒலிச்சித்திரம்

இப்படத்தினை ஹனி-ஹோனி நிறுவனங்களின் சார்பில் வெங்கடேஷ் -மகேஷ் தயாரிக்கின்றனர்.சிங்காரவேலன்,கிழக்குவாசல்,இதயம்,குரோதம்-2 ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி தமிழகஅரசிடம் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வாங்கிய ஒளிப்பதிவாளர்.ஏ.கே.அப்துல்ரஹ்மான் இந்தப் படத்தை முதன் முதலாக இயக்குகிறார்.

பாலாஜி - காமனாசிங்

கத்தியை தீட்டாதே படத்தில் நடித்த ஆதவாராம்,விளையாடவா படத்தில் நடித்த பாலாஜி, கதாநயகர்களாகநடிக்கின்றனர். பல்வேறு தெலுங்கு படத்தில் நடித்த காமனாசிங்..கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நண்பர்கள் கொடுத்த வாய்ப்பு

இந்த படம் குறித்து பேசிய இயக்குநர், அப்துல் ரகுமான் .என் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து எனது நண்பர்கள் இந்த வாய்ப்பை கொடுத்துள்ளனர்.அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றும் விதம் இந்தப்படம் அமையும். தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக இந்தப் படம் அமையும் என்றார். அப்போது தொழிலதிபர் இலஞ்சி டி.ஆர்.சினிமா பாலு.ஆகியோர் உடனிருந்தனர். படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது.பாடலுக்கு "சிந்து நதிப் பூ",சேரன் பாண்டியன்,படங்களுக்கு இசைஅமைத்த சவுந்தர்யன் இசை அமைக்கிறார்.ஒளிப்பதிவு வெற்றி,எடிட்டிங்.அணில் மல்னாட்.

பாலச்சந்தர்

நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் முதன் முதலில் இயக்குனர் இமயம் பாலசந்தரின் அச்சமில்லை ....அச்சமில்லை,தண்ணீர்..தண்ணீர்...திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

இளம் நட்சத்திரங்கள் நடிக்கும் ஒலிச்சித்திரம்: இலஞ்சி குமரன்கோவிலில் பூஜை

பாரதிராஜா - ரஜினிகாந்த்

இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் புதுநெல்லு புது நாத்து படம் நெல்லை மாவட்டத்தில் பாடமாக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுகாளை,கழுகு,கமலின் புன்னகை மன்னன்,சூர்யாவின் வேல்,மற்றும் ஜெயம்,தனுசின் குட்டி படமும் நெல்லை மாவட்ட கிராமங்களில் எடுக்கப்பட்டவைதான்.

முதல்வன் - அந்நியன்

சங்கரின் முதல்வன்,அந்நியன் ஆகிய படங்களில் பாடல்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. அவை வெற்றியும் பெற்றுள்ளன.

நெல்லை சென்டிமென்ட்

தற்போது ஏராளமான திரைப்படங்கள் இந்த பகுதியை மையம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிலப் படங்களின் படப் பிடிப்பு இங்கு நடந்து வருகிறது. அந்தளவுக்கு நெல்லை மாவட்டத்து சென்டிமென்ட் தமிழ் சினிமாவை தலைநிமிர்த்தியுள்ளது.

 

சென்னையில் பாலச்சந்தரை சந்தித்த ஆமீர்கான்!

சென்னை: சென்னை திரைப்பட விழாவுக்கு வந்த பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இயக்குநர் பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்தார்.

சென்னையில் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை, கமல்ஹாஸனுடன் இணைந்து துவக்கி வைக்க வந்திருந்தார் நடிகர் ஆமீர்கான். நேற்றைய துவக்க விழாவுக்குப் பிறகு, இயக்குநர் கே பாலச்சந்தரை சந்திக்க விரும்பினார் ஆமீர்.

சென்னையில் பாலச்சந்தரை சந்தித்த ஆமீர்கான்!

இன்றுகாலை இயக்குநர் பாலச்சந்தரை அவரது மயிலாப்பூர் இல்லத்தில் சந்தித்தார் அமீர்கான்.

ஆமீர் கானை வரவேற்று உபசரித்த பாலச்சந்தர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆமீர் கானின் படங்கள் மற்றும் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

சென்னையில் பாலச்சந்தரை சந்தித்த ஆமீர்கான்!

பாலச்சந்தர் போன்ற சாதனையாளர்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆமீர்கான் தெரிவித்தார்.

 

இந்தாங்கய்யா என் வீட்டை வித்துக்கோங்க: பத்திரத்தை கொடுத்த இயக்குனர்

சென்னை: எப்பொழுதும் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் அந்த 4 எழுத்து இயக்குனர் தான் ஆசைப்பட்டு வாங்கிய வீட்டை படத்தின் நஷ்டத்தை சரிகட்ட கொடுத்துவிட்டாராம்.

கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் அந்த 4 எழுத்து இயக்குனர் இதுவரை மொத்தம் 6 படங்கள் இயக்கியுள்ளார். அண்மையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த விலங்கு பெயர்கள் கொண்ட படம் பலரால் பாராட்டப்பட்டது.

பாராட்டைக் கேட்டு உச்சி குளிர்ந்த இயக்குனர் படம் கல்லா கட்டாததால் அதை வாங்கிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் கவலை அடைந்தார். இதையடுத்து அந்த நிறுவனம் நஷ்டத்தை சரிகட்டுமாறு இயக்குனருக்கு உடைசல் கொடுத்துள்ளது. மேலும் அவரின் மனம் வருந்தும் வகையில் திட்டியிருக்கிறார்கள்.

இப்படி மானங்கெட்டு திட்டு வாங்குவதை விட நஷ்டத்தை சரி கட்டுவோம் என்று நினைத்த இயக்குனர் தனது சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டின் பத்திரத்தை அவர்களிடம் கொடுத்து வீட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

 

'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல்

நானும் ரஜினியும் இணைந்து நடிக்கும் படத்தை யாராவது ஒரு வசதியான தயாரிப்பாளர் எடுத்தால் நடிக்க தயார். நான் இலவசமாக நடிக்கவும் தயார், ரஜினி எப்படியென்று தெரியவில்லை, என்று கமல் கூறினார்.

11-வது சர்வதேச படவிழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகிய இருவரும் நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

விழாவையொட்டி நடிகைகள் ஷோபனா, சொர்ணமால்யா ஆகிய இருவரின் நாட்டிய நிகழ்ச்சிகளும், பின்னணி பாடகர் கார்த்திக்கின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றன.

விழாவில் கமல்ஹாசனிடம் நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், டைரக்டர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சில கேள்விகளை கேட்டு இருந்தார்கள். அந்த கேள்விகளை மேடையில் ஒருவர் படிக்க, அவற்றுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல்

அந்த கேள்வி பதில்கள்:

கேள்வி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் ஆகிய படங்களை ‘ரீமேக்' செய்வதாக இருந்தால், எந்த படத்தில் நடிக்க விரும்புவீர்கள்?

பதில்: என்ன வேடம் என்று கேட்கவில்லையே...

கேள்வி: ஜாக்சன் துரை?

பதில்: ஜாக்சன் துரையாக நடிக்கலாம். ஏனென்றால், ‘தசாவதாரம்' படத்தில் ஏற்கனவே ‘ப்லெட்சர்' ஆக நடித்திருக்கிறேன். ‘கப்பலோட்டிய தமிழன்' படத்தில், சுப்பிரமணிய சிவாவாக நடிக்க ஆசை. ஏனென்றால் அந்த வேடத்தில் எங்க சண்முகம் அண்ணாச்சி நடிச்சிருந்தார்.

'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல்

கேள்வி: இந்திய சினிமா நூற்றாண்டின் பரிசாக ரஜினிகாந்தும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா?

பதில்: உங்களுக்கு பரிசு... எங்களுக்கு? முதலில் இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்கிற அளவுக்கு வசதியான தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை.

கேள்வி: கிருஷ்-3, விஸ்வரூபம்-2 மாதிரி சச்சின்-2, கமல்ஹாசன்-2 வர முடியுமா?

பதில்: அடுத்த தலைமுறை நிச்சயமாக வரும். எங்களை விட திறமையானவர்கள் நிச்சயமாக வருவார்கள்.

கேள்வி: தணிக்கை குழுவில் தகுதியானவர்கள் இருக்கிறார்களா?

பதில்: தணிக்கை குழுவில் சினிமாவை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் ஆட்கள் அங்கே இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். முழுமையாக சினிமாவை தெரிந்தவர்கள் இருந்தால், தணிக்கை குழு இன்னும் நன்றாக இருக்கும்!''