நாகார்ஜூனாவைப் பார்த்ததும் மயங்கிவிழுந்தேன் - அமலா


செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.

தமிழை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமலா பால், சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ப்ள்ஸ்டூ முடித்ததுமே நடிக்க வந்துவிட்டேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் என்னை எஞ்ஜினீயருக்கு படிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தி என் ஆசைப்படி நடிக்கை அனுமதித்தார். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.

நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போய் படித்து வருகிறேன்.

தெலுங்கில் நாகார்ஜுனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது," என்றார்.
 

'தலைவாசல் விஜய்'க்கு கேரளா தந்த கவுரவம்!


திறமையான நடிகர் எனப் பெயரெடுத்திருந்தாலும், தனக்கான வாய்ப்புகள் அமையவில்லையே என்ற ஏக்கம் தலைவாசல் விஜய்க்கு.

அவரது இந்த ஏக்கத்தைப் போக்கியுள்ளது மலையாளத் திரையுலகம்.

'யுகபுருஷன்' என்ற படத்தில் ஸ்ரீநாராயண குரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'தலைவாசல்' விஜய்க்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த தலைவாசல் விஜய், இதுகுறித்து கூறுகையில், "ஒரு கலைஞனுக்குப் பெரிய கௌரவமே பாராட்டுதான். அது ஸ்ரீநாராயண குரு பாத்திரத்தில் நடித்ததற்காகக் கிடைத்துள்ளது. பெரிய சம்பளம் பெற்றால் கூட கிடைக்காத மகிழ்ச்சியை நான் உணர்கிறேன்.

ஸ்ரீநாராயண குருவை கேரளாவின் பெரியார் என்று சொல்லலாம். ஜாதி- மத ஏற்றதாழ்வுகளுக்கு எதிராகப் போராடிய போராளி அவர்.

ஒருமுறை காந்தி குருவைச் சந்தித்தபோது, 'குருவே! நீங்கள் அமர்ந்திருக்கிற இந்த மாந்தோப்பில் எத்தனையோ மாமரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மர இலையும் வெளிர் பச்சை, அடர் பச்சை என்று மாற்றங்களோடு உள்ளதே? சமுதாயத்திலும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும்?' என்று கேட்டாராம்.

அதற்கு குரு, 'நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் எல்லா மரத்தின் இலைகளையும் பிழிந்து சுவைத்தால் சுவை ஒன்றாகத்தான் இருக்கும்' என்றாராம். அதோடு மகாத்மா விவாதத்தை நிறுத்திக் கொண்டாராம்.

அப்படிப்பட்ட ஒரு புரட்சிகரமான குருவின் கதாபாத்திரத்துக்கு என்னை சிபாரிசு செய்தவர்கள் மம்முட்டியும் மோகன்லாலும் என்று தெரிந்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ் கலைஞர்களையும் டெக்னீஷியன்களையும் மலையாளப் படஉலகினர் ரொம்பவும் மதிக்கிறார்கள். ஸ்ரீநாராயண குரு அருளால் இப்போது பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் பட வாய்ப்புகள் வந்துள்ளன!'' என்கிறார் சந்தோஷத்துடன்.
 

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு செல்லப் பெயர் 'பேட்டி பி'!


மும்பை: ஐஸ்வர்யா ராய் பச்சனின் பெண் குழந்தைக்கு பேட்டி பி (Beti B) என்று செல்லப் பெயர் வைத்துள்ளனர்.

அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சன் மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் சில தினங்களுக்கு முன் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இந்தக் குழந்தைக்கு செல்லமாக பேட்டி பி என்று அமிதாப் மற்றும் குடும்பத்தினர் பெயர் சூட்டி கொஞ்சுகின்றனர். மகளுக்கு பொருத்தமான பெயரைத் தேடி வருவதாகவும், அதுவரை பேட்டி பி என்றே அழைக்கப் போவதாகவும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெயரை அவர்களின் குடும்ப நண்பர் சஹானா கோஸ்வாமி சூட்டினாராம். குழந்தையின் தாத்தா அமிதாப்பை திரையுலகமே பிக் பி என்று அழைத்துவருவதால், பேத்திக்கு பேட்டி பி என்று சூட்டிவிட்டார்களாம்.
 

ஐஸ்வர்யாவுக்கு சிசேரியன் நடக்கவில்லை... சுகப்பிரசவம்தான் - அமிதாப்


ஐஸ்வர்யாராய்க்கு ஆபரேஷன் நடக்கவில்லை சுகப்பிரசவம்தான் நடந்தது என்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய்க்கு கடந்த புதன்கிழமை மும்பை ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆபரேஷன் வேண்டாம் என மறுத்து சுகப்பிரசவமாக குழந்தையை பெற்றுக்கொண்டார். அவரது இந்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

இரண்டு நாட்களில் ஐஸ்வர்யாராயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்து அமிதாப் தனது ப்ளாகில், "சிசேரியன் நடந்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தவறானது. ஐஸ்வர்யா ராய்க்கு ஆபரேஷன் நடைபெறவில்லை. வலி நிவாரணி மருந்து ஊசி எதுவும் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் உதவி இல்லாமலும் சுகப் பிரசவத்தில்தான் குழந்தை பிறந்தது.

ஐஸ்வர்யா ராய் விருப்பப்படியே பிரசவம் நடந்தது. அவரது இந்த மன உறுதியை பிரசவம் பார்த்த மருத்துவர்களே பாராட்டியுள்ளனர்," என்று எழுதியுள்ளார்.

மேலும் குழந்தையுடன் அதிக நேரம் இருக்க தான் ஆசைப்பட்டாலும், அவள் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் என்றும் தாத்தா அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் வீடு திரும்பியதும் குழந்தைக்கு பிரமாண்ட முறையில் பெயர் சூட்டு விழா நடக்கிறது.

இதற்கிடையே, குழந்தையைப் பார்க்க அமர்சிங் போன்ற அமிதாப்பின் குடும்ப நண்பர்கள், திரையுலகப் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
 

எல்லாமே எங்கம்மாதான்! - த்ரிஷா


நான் சினிமா நடிகை ஆனதற்கும், இந்த நிலைக்கு வந்திருப்பதற்கும் என் அம்மாதான் காரணம் என்கிறார் நடிகை த்ரிஷா.

கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று கூறப்பட்ட நேரத்தில், மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா.

அதுவரை மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக இருந்த அவர் அம்மா உமாவும், இப்போது அதில் கொஞ்சம் நிதானம் காட்ட ஆரம்பித்துள்ளார். மார்க்கெட் இருக்கும்போதே சேர்த்து வைத்தால்தானே ஆச்சு!

தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என த்ரிஷா மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன் அம்மாதான் தன் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் நபர் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார்.

நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன். அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் இந்தியா என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.

முதல் படமான 'லேசா லேசா' படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன். ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி," என்றார்.
 

இஷ்டப்படி வாழட்டும் - ஸ்ருதியின் அம்மா சரிகா


என் மகள்கள் தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும். அதில் நான் ஒருபோதும் தலையிட மாட்டேன், என்றார் நடிகையும் கமல்ஹாஸனின் முன்னாள் மனைவியுமான சரிகா.

சித்தார்த்-ஸ்ருதி இணைந்து நடித்த ஒ மை பிரண்ட்” தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தாய் சரிகாவுடன் வந்திருந்தார் ஸ்ருதி ஹாஸன்.

சரிகா தற்போது மும்பையில் வசிக்கிறார். அவருடன் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாஸனும் இருக்கிறார். ஸ்ருதி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்வது மற்றும் அவரது எதிர்காலம் குறித்து சரிகா கூறுகையில், "சினிமாவை தவிர வெளி உலகம் தெரியாதவள் நான். சிறு வயதில் இருந்தே நடிப்பு, நடிப்பு என்றுதான் இருந்தேன். படப்பிடிப்பு அரங்குகள்தான் எனக்கு வகுப்பறை. அங்கு என் சீனியர் நடிகர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

இப்போது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு, படிப்பு என வேறு திறமைகளிலும் பளிச்சிடுகின்றனர். இவர்களைப்போல் சிறு வயதில் எனக்கு வாய்ப்பு அமையவில்லை.

இப்போது நிலைமைகள் மாறிவிட்டது. ஸ்ருதி சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்ஷராவுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருந்து படம் இயக்க வேண்டும் என்பது அவள் ஆசை.

ஸ்ருதியும் அக்ஷராவும் வாழ்க்கையில் சுயமாக முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யலாம். எல்லா பெற்றோர்களுமே குழந்தைகளை சுதந்திரமாக விடவேண்டும். அவர்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சொந்தமாக முடிவுகள் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

ஸ்ருதியும் அக்ஷராவும் சில விஷயங்களில் முடிவுகள் எடுக்கும் முன் என்னிடம் கலந்து பேசுவது உண்டு. ஆலோசனையும் கேட்பார்கள். ஆனால் நான் அவர்களை நிர்ப்பந்திப்பது கிடையாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிடவும் மாட்டேன்," என்றார்.

கமல் குறித்த கேள்விகளைத் தவிர்த்துவிட்டார் சரிகா.

மிக நெருக்கமாக இருந்த ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்தும் இப்போது பிரிந்துவிட்ட நிலையில் அவர்கள் நடித்த படம் வெளியாகியுள்ளது. காதலனைப் பிரிந்துள்ள ஸ்ருதி, இப்போது துணைக்கு தன் அம்மாவை அழைத்து வந்துள்ளதாக்க கூறப்படுகிறது.
 

தணிக்கை குழு அனுமதி மறுப்பு: 'மகான் கணக்கு' ஆனது 'காந்திகணக்கு'!


காந்தி கணக்கு என்ற தலைப்புக்கு சென்சார் அனுமதி மறுத்துவிட்டது. எனவே இந்தத் தலைப்பு மகான் கணக்கு என்று மாற்றிவிட்டனர் இயக்குநரும் தயாரிப்பாளரும்.

'பூஜா பிலிம் இன்டர்நேஷனல்' எனும் படநிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ரமணா கதாநாயகனாகவும், ரீச்சா சின்ஹா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சரவண சுப்பையா, ஸ்ரீநாத், தேவதர்ஷினி என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார். கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சம்பத் ஆறுமுகம்.( இயக்குனர் சசியின் உதவியாளர்). ஜி.பி.எஸ்.தயாரித்துள்ளார்.

படம் திரையிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

இது பற்றி இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறுகையில், "காந்தி கணக்கு' படப் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யும் போது படத்தின் கதையையும்,தலைப்பிற்கான விளக்கத்தையும் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்ட பிறகுதான் அனுமதி அளித்தார்கள்.

தற்போது பட வேலைகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. தணிக்கைக்கு அனுப்பியபோது தலைப்பை மாற்றிவிட்டு வந்தால்தான் படமே பார்ப்போம் என தணிக்கை குழு அதிகாரிகள் சொன்னார்கள். முதலில் படத்தை பாருங்கள். பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று தலைப்பு வைத்ததற்கான விளக்கத்தையும் சொன்னோம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அத்துடன் முதலில் படத்தோட தலைப்புக்கே சென்சார்தான் அதை மாற்றி விடுங்கள் என விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

'நேர்மையற்ற எந்த ஒரு வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும்' இதுதான் காந்தியோட கணக்கு.இதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகம் முழுவதும் காந்தியோட கணக்கு அகிம்சை கணக்கு என்பது தெரியும். தமிழ் நாட்டில் மட்டும் 'காந்தி கணக்கு' என்றால் வராத கணக்கு என்று தப்பான அர்த்தம் கற்பித்துள்ளனர்.

சுதந்திரத்திற்காக போராடினார் காந்தி. 'காந்தி கணக்கு' என்கிற வார்த்தைக்கு இருக்கிற தப்பான அர்த்தத்தை மாற்றுவதற்குக் கூட எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை தந்தாலும் படம் திரைக்கு வர தாமதமாக கூடாது என்ற எண்ணத்திலும், தலைப்பு மாறினாலும் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையிலும் தலைப்பை மாற்ற சம்மதித்தோம்.

நம்ம நாட்டுல எவ்வளவோ மகான்கள் வாழ்ந்திருக்காங்க. வாழ்ந்திட்டு இருக்காங்க. காந்தியும் ஒரு மகான் தான். அதனால் தான் 'காந்தி கணக்கு 'படப் பெயரை மகான் கணக்கு என்று மாற்றியுள்ளோம்.

படத்தைப் பார்த்த பிறகு அதே தணிக்கை குழு அதிகாரிகள், ''எந்தவித ஆபாச,வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான படம் இது. நீங்க பண்ற படங்கள் எல்லாம் இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள படமாக அமையுட்டும்ன்னு வாழ்த்துறோம்." என மனம் திறந்து பாராட்டினார்கள். 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். 'மகான் கணக்கு' விரைவில் திரைக்கு வரும்," என்றார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த 'நான் காந்தி அல்ல' என்ற படமும் இதே மாதிரி சிக்கலைச் சந்தித்தது. அந்தத் தலைப்பை மாற்றுமாறு சென்சார் கூறியதால், பின்னர் 'நான் மகான் அல்ல' என்று பெயர் மாறி வெளியானது நினைவிருக்கலாம்.