குடும்பத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் ரிலாக்ஸ் செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்

Ar Rahman Family Holidaying Los Angeles
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தாரோடு லாஸ் ஏஞ்சல்ஸில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், மணிரத்னத்தின் கடல் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். எப்பொழுது பார்த்தாலும் பிசியாக இருக்கும் அவர் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நினைத்தார். இதையடுத்து அவர் ஒரு குட்டி பிரேக் எடுத்து தனது குடும்பத்தாருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.

ஓய்வெடுக்க அங்கு சென்றார். ஆனால் தான் ஒப்பந்தம் ஆகியுள்ள ஹாலிவுட் படமான மங்கீஸ் ஆப் பாலிவுட் பட வேலைகளையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். அங்குள்ள யூனிவர்சல் ஸ்டுடியோஸுக்கு தனது குழந்தைகளை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்துள்ளார். அப்போது ரஹ்மானைப் பார்த்த வெளிநாட்டவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கினர் என்று கூறப்படுகிறது.

இந்திய பிரபலகங்கள் வெளிநாடுகளில் ஓய்வு எடுக்கச் செல்வதே அங்கு தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று தான். ஆனால் ரஹ்மானோ உலக அரங்கில் பிரபலமான இசையமைப்பாளர். அவரை எப்படி வெளிநாட்டவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்.
Close
 
 

இந்திய சினிமாவுக்கு வயது 100!

Indian Cinema Reaches 100 Years Milestone
இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது சினிமா. பொழுதுபோக்கு, வர்த்தகம், அரசியல், தேசப்பற்று என அனைத்துக்குமே சினிமா வேண்டும் இங்கு!

சினிமாவைக் கண்டுபிடித்த பெருமை வேண்டுமானால் வெளிநாட்டவர்களுக்கு சேரலாம். ஆனால் சினிமாவை வாழ வைப்பதில் முக்கிய பங்கு இந்தியர்களுக்குதான்.

சினிமா டிக்கெட்டுகளின் விற்பனை, மற்றும் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில், இந்திய சினிமாத்துறைதான் உலகிலேயே மிகப்பெரியது. ஆசியா-பசிபிக் பகுதியில் சினிமா பார்ப்பவர்களில் 73 சதவீதம் இந்தியர்களே.

இந்தியாவுக்கு 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி சினிமா அறிமுகமானது.

லூமியர் பிரதர்ஸ் சினிமாட்டோகிரபி என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டு, சினிமா பயணத்தைத் தொடங்கியது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது.

1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

இவற்றிற்குப் பிறகுதான் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா கடந்த மே 3, 1913-ம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இந்திய சினிமாத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே. அதனால்தான் அவர் பெயரில் சினிமாவுக்கான மிக உயர்ந்த விருது வழங்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் காட்சி அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.30 வரை திரையிடப்பட்டிருக்கிறது. அப்போதே இப்படத்தை தினசரி 4 காட்சிகள் ஓட்டியிருக்கிறார்கள்.

இன்றைய முழுநீளப்படங்களின் முன்னோடிப் படமான 'ராஜா ஹரிச்சந்திரா' வெளியாகி இன்றோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த சரித்திர நிகழ்வை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன.
Close
 
 

தியாகராஜ பாகவதர், கவுண்டமணி, நான்: சந்தானத்தின் கனவு

Santhanam S Dream Role
ஆசையில்லா மனிதன் கிடையாது. ஆனால் நடிகர் சந்தானத்திற்கு ஒரு வித்தியாசமான ஆசை உள்ளது.

சந்தானம் தான் இன்றைய தேதியில் படுபிசியாக இருக்கும் காமெடி நடிகர். ஓ.கே. ஓ.கே. படத்திற்கு பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டு ரிலீஸான படங்களில் கிட்டதட்ட முக்கால் வாசி படங்களில் சந்தானம் தான் காமெடியன். அதுவும் இயக்குனர் ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் ஆகிவிட்டார். இவரை படத்தில் எடுத்தாலே அது ஹிட் என்று ராஜேஷ் நினைக்கிறார்.

இத்தனை படங்களில் நடித்துள்ள சந்தானத்திற்கு ஒரு கனவு கதாபாத்திரம் உள்ளதாம். அது குறித்து அவர் கூறுகையில்,

ஒரு படத்திலாவது நான் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை. அதுவும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். 30களைச் சேர்ந்த தியாகராஜ பாகவதர் மாதிரி ஒரு ரோல், 80களில் கலக்கிய கவுண்டமணி மாதிரி ஒரு ரோல் மற்றும் தற்போதைய தலைமுறை பிரதிநிதியாக நான் நடிக்க வேண்டும் என்றார்.

உங்கள் ஆசை பற்றி அறிந்து கொள்ளும் ஏதாவது ஒரு இயக்குனர் உங்களின் கனவு கதாபாத்திரத்தை வழங்குவார் என்று நம்புங்கள்.
Close
 
 

அஜீத் 41வது பிறந்த நாள் - மன்றங்கள் இல்லாவிட்டாலும் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Ajith Turns 41 Today Aid0136   | பில்லா 2  
உலகம் சர்வதேச தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்க, அஜீத்தின் ரசிகர்கள் தங்கள் 'தல'யின் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இன்று அஜீத்துக்கு 41 வயது பிறக்கிறது. அவர் நடிக்க வந்த 21 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் அவர் பேசப்படுகிறார். அவரது லேட்டஸ்ட் படம் பில்லா 2 ரூ 40 கோடிக்கு விற்பனையாகிறது.

அஜீத் இந்த நிலைக்கு வர பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தமிழில் அமராவதியில் அவர் அறிமுகமானார் (அவரது முதல் படம் தெலுங்கில்தான் வந்தது. பெயப் பிரேம புஸ்தகம்).

இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் ரூ 5 லட்சம் சம்பளம் வாங்கவே ஆண்டுக்கணக்கில் ஆனது. பல படங்களில் அவர் நடிப்பார். ஆனால் ஒழுங்கான சம்பளம் கூட அவருக்குத் தரப்பட்டதில்லை.

இயல்பில் கோபக்காரராக, உணர்ச்சிவசப்படுபவராக அவர் இருந்தாலும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தனது முறைக்காக அவர் காத்திருந்தார். அஜீத்துக்கும் ஒரு ரசிகர்கள் வட்டம் உண்டு, அவர் ஒரு Saleable Hero தான் என்பதை காதல் கோட்டை மெய்ப்பித்தது. அதன் பிறகும் தோல்விகள் தொடர்ந்தன.

காதல் கோட்டையில் ஒரு புதிய அஜீத்தாக வெளிவந்தார். தொடர்ந்து அமர்க்களம் அமோகமாக ஓடி, அவருக்கு திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனையைத் தந்தது.

ஷாலினியை மனைவியாக கைப்பிடித்த பிறகு, வந்த முதல் படம் முகவரி சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதற்கடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வந்தது. அதுவும் பெரிய ஹிட் படமானது.

ஆஞ்சநேயா, ஜனா போன்ற படங்கள் வெளியான காலகட்டம்தான் அஜீத்தின் வாழ்க்கையில் மோசமான தருணங்கள் எனலாம். அன்றைக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தேவையற்ற வாதத்தை மீடியா ஆரம்பித்துவைக்க, ஏன் நான் வரக்கூடாதா அந்த இடத்துக்கு என கேட்டபடி வந்தார் அஜீத். தொடர்ந்து ஓயாத பரபரப்பு, சர்ச்சை, அஜீத்தின் பேட்டிகள்... அதன் பிறகு கொஞ்சநாள் அமைதி.

அதற்கடுத்து சில தோல்விகள் வந்தாலும் அஜீத் படங்களுக்கென ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கவே செய்தது. பரமசிவன் வெளியானது. அதில் அஜீத்தின் வெளித் தோற்றம் மட்டுமல்ல, அவர் மனதளவிலும் ஏக மாற்றங்கள்.

அதிகம் பேசுவதை அடியோடு குறைத்துக் கொண்டார். அப்போதுதான் பில்லா படத்துக்கு பூஜை போட்டார்கள். அந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி பெரிய திருப்புமுனையைத் தந்ததோ, அது போன்ற திருப்பு முனையை அஜீத்துக்கும் தந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு அஜீத்தின் கேரியர்கிராப் அடியோடு மாறிப் போனது. ரஜினியின் அத்யந்த சீடராகவே மாறிவிட்ட அஜீத், படங்களை ஒப்புக் கொள்ளும் விதம், புரமோட் பண்ணும் விதம், பேசும் முறை என அனைத்திலுமே புதிய பாணியைக் கடைப்பிடிக்கிறார்.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி, கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது, ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டதாக அறிவித்தார் அஜீத். அப்படி அறிவித்த பிறகே மங்காத்தா படத்தை வெளியிட்டார். என்ன ஆச்சர்யம்... கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் மங்காத்தாதான்.

மன்றங்களைக் கலைத்தாலும் ரசிகர்கள் மனதில் தான் நிலைத்திருப்பதைப் புரிந்து கொண்ட அஜீத், உண்மையான ரசிகர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.

இந்த ஆண்டு அவருக்கு 41வது பிறந்த நாள். மன்றங்களில் இல்லாவிட்டாலும், மக்களுக்கு நல்லது செய்யும் நிகழ்ச்சிகளை சத்தமின்றி செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

"தாராளமாக நல்லது செய்யுங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை பாதிக்குமாறு செய்ய வேண்டாம். நஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு பொதுச் சேவை செய்ய வேண்டாம். யாருக்கும் தீங்கு செய்யாமல், முடிந்த உதவியை மட்டும் செய்யுங்கள். நீங்களும் நல்லா இருப்பீங்க, மத்தவங்களும் நல்லாருப்பாங்க".
-இதுதான் அஜீத்தின் பிறந்த நாள் செய்தி.

அது!
Close
 
 

நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!

நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
prasanna ties holy knot sneha    | ஸ்னேகா-பிரசன்னா நிச்சயதார்த்தம்   | திருமண வரவேற்பு  
Close
 
நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.
  Read: In English
முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை

ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

ஸ்னேகா-பிரசன்னா திருமண படங்கள்

ஸ்னேகா-பிரசன்னா நிச்சயதார்த்த படங்கள்

திருமண வரவேற்பு படங்கள்
Posted by: Shankar
 

'த ஆர்டிஸ்ட்', 'ஹூகோ' படங்களுக்கு தலா 5 ஆஸ்கர் விருதுகள்: சிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப்

Michel Hazanavicius Wins Best Direcor Oscar Aid0090
லாஸ் ஏஞ்சலஸ்: 84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.

'அயர்ன் லேடி' படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.

இதற்கு முன் க்ராமர் Vs கிராமர் (1979), சோபிஸ் சாய்ஸ் (1982) ஆகிய படங்களுக்கும் இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊமைப் படமான 'த ஆர்டிஸ்ட்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைப் படமான இந்தப் படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது.

ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் 'ஏ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
Close
 
 

வாகை சூட வா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டத்துக்கு 5 விருதுகள்!

Azhagarsamyin Kuthirai Vaagai Sooda Vaa Win Award Aid0136
தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு 5 விருதுகள் கிடைத்துள்ளன. அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளன.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருது வாகை சூட வாவுக்கு கிடைத்துள்ளது. சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியாகி நல்ல பாராட்டுக்களைப் பெற்ற படம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த பட்ட பாடுகளை அருமையாகப் படமாக்கியிருந்தார் சற்குணம்.

சிறந்த பொழுதுபோக்குப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த மறக்க முடியாத படம். எளிமையான கதை, எண்பதுகளின் பின்னணி, இசைஞானி இளையராஜாவின் நெஞ்சைத் தொட்ட இசை என ஏகப்பட்ட சிறப்புகள் படத்துக்கு உண்டு. வணிக ரீதியாகவும் ஓரளவு நன்றாகவே போனது. ஆனால் விமர்சகர்களிடம் பாராட்டுகள் குவிந்தன இந்தப் படத்துக்கு.
இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவந்த அப்புக்குட்டி கிட்டத்தட்ட ஹீரோவாகவே நடித்த படம் அழகர்சாமியின் குதிரைதான்.

ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிடைத்துள்ளது. பிரவீண் - ஸ்ரீகாந்த் இந்த விருதினைப் பெறுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குநருக்கான விருதினை வென்றுள்ளார்.
Close
 
 

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் - வழக்கு எண் 18/9 உள்பட 3 படங்கள் ரிலீஸ்

Friday New Releases   
இந்த வெள்ளிக்கிழமை 3 தமிழ்ப் படங்களும் சில டப்பிங் படங்களும் தமிழகத்தில் வெளியாகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக தமிழ் சினிமாவில் ஒரே படம்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. அது ஒரு கல் ஒரு கண்ணாடி. அதற்கு சவாலாக இதுவரை எந்தப் படமும் வரவில்லை.

ஆனால் இந்த வாரம் அந்தக் குறை நீங்கிவிடும் என்று தெரிகிறது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள வழக்கு எண் 18/9 பட்ஜெட்டில் மிகச் சிறிய படம் என்றாலும், அதன் தரமும் படைப்பு நேர்த்தியும் தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகும் மற்றும் இரு படங்கள் காந்தம் மற்றும் பரமகுரு. இவற்றுடன் ஜக்கம்மா மற்றும் க்ளிக் 3 படங்கள் தமிழில் டப்பாகி வெளியிடப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கான ஆங்கிலப் படம் ஹ்யூகோ 3 டியில் வெளியாகியுள்ளது. ஜன்னத் என்ற இந்திப் படமும், மோகன்லால் நடித்த மலையாளப் படம் கிராண்ட் மாஸ்டரும் இன்று வெளியாகியுள்ளன.

இதில் ஆச்சர்யம், கன்னடப் படமான அன்னா பாண்ட் சென்னையில் வெளியாகி உள்ளதுதான். நான்கு அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
Close
 
 

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் ஜூன் 29-ல் ரிலீஸ்?

Kamal Release Vishwaroopam On June 29
ஜூன் மாதம் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியாகக்கூடும் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இப்போது விஸ்வரூபத்தின் ரிலீஸ் தேதியே வெளியாகிவிட்டது.

இந்தப் படத்தை ஜூன் 29-ம்தேதி வெளியிட கமல்ஹாஸன் திட்டமிட்டிருப்பதாகவும், புரமோஷன் பணிகளை அடுத்த வாரத்திலிருந்து அவர் தொடங்கக் கூடும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், பிவிபி சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இல்லாத முதல் பிரதி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது.
இப்போது இறுதிக்கட்டப் பணிகளை முடிக்கும் தறுவாயில் உள்ள கமல், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அங்கேயே பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஓஸ்போர்னேவுக்கு படத்தை போட்டுக் காட்டிவிட்டு சென்னை வரும் கமல், உடனடியாக புரமோஷனை ஆரம்பிக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் பாடல்களையும் வெளியிட உள்ளாராம்.

விஸ்வரூபத்தை எழுதி இயக்கியிருப்பவரும் கமல்ஹாஸன்தான். வைரமுத்துவுடன் இணைந்து படத்துக்கு பாடல்களையும் எழுதியுள்ளார்.
Close
 
 

மே 11-ல் நடிகை சினேகா - பிரசன்னா திருமணம்

Sneha Prasanna Marriage On May 11 Aid0136  
சென்னை: நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில், மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும்.

இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். இந்தக் காதல் குறித்து இருவரும் மவுனம் காத்தனர் ஆரம்பத்தில். ஆனால் பின்னர் கவுரவமாக ஒப்புக் கொண்டனர்.

2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, "எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள்'' என்று கூறினார்.

அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை. பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை. பின்னர் பத்திரிகைப் பேட்டிகளில் ஆமாம் திருமணம் உண்மைதான் என்று சினேகா கூறினார்.

கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக பத்திரிகைகளுக்கு 'போஸ்' கொடுத்து காதலை உறுதிப் படுத்தி, பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள்.

இந்த நிலையில், சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்து சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் தேதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன.
"திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று ஏற்கெனவே பிரசன்னா கூறியிருந்தார்.

எனவே சினேகாவுக்கு நடிப்பை நிறுத்தும் ஐடியா இல்லையாம். புதிதாக மேலும் படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.
Close
 
 

நடிக்க வந்தபோது எனக்கு ஆடவும் தெரியாது சண்டை போடவும் தெரியாது- சூர்யா

Surya Launches Okok Audio Aid0136  
சினிமாவில் மிகக் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்தேன். நான் நடிக்க வந்த போது எனக்கு சண்டை போடவும் தெரியாது, நடனமாடவும் தெரியாது, என்றார் நடிகர் சூர்யா.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடியோ மற்றும் புதிய ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர்.

விழாவில் சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. 'நேருக்கு நேர்' படத்தில் நடித்த போது எனக்குக் கூடத்தான் ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.
எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால்தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள், " என்றார்.

விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, உதய நிதி ஸ்டாலின், சந்தானம், நாயகி ஹன்சிகா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
Close
 
 

ரஜினியே கேட்டும் கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?

Avm Refuses Buy Rajini Kochadaiyaan Aid0136   | கோச்சடையான்  
மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். நடிப்பதிலும் அந்தப் படத்தின் தொழில் நுட்பம் குறித்த விஷயங்களிலும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு, ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவில்லையாம்.

அது, இந்தப் படத்தை சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பது!

காரணம் சுல்தானில் சௌந்தர்யா அண்ட் கோ செய்த குழப்படி & குளறுபடியால், தேவையின்றி நீதிமன்ற வழக்கு, பத்திரிகைகளில் தாறுமாறான செய்திகள் என ரஜினிக்கு மனவருத்தம் அடையும் நிலையை ஏற்படுத்தின. கோவா தயாரிப்பிலும் சௌந்தர்யா கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

அதனால் 'கோச்சடையான்' படத்தினை எப்படியாவது கைமாற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.

இதில் ஒரு முயற்சியாக தனக்கு நெருக்கமான ஏவிஎம் சரவணனிடம் தனிப்பட்ட முறையில் கோச்சடையான் பற்றிப் பேசியுள்ளார் ரஜினி.

கேரளா ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் சரவணனைச் சந்தித்த ரஜினி, கோச்சடையான் படத்தயாரிப்பை அப்படியே கை மாற்றிவிட விரும்புவதாகக் கூறினாராம்.

ஆனால் சரவணன் சினிமா தயாரிக்கும் அல்லது வேறு படத்தை வாங்கி விநியோகம் பண்ணும் நிலையில் இல்லை. "சினிமா நிலவரம் சரியில்லை ரஜினி. அதனால் சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை. நீங்களே வலியவந்து கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஸாரி" என்றாராம் சரவணன்.
இதே பயத்தில்தான் அயன் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்று, பின் வருத்தப்பட்டார்கள் ஏவிஎம்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சினிமா என்ற குதிரை யாரை குப்புறத்தள்ளுமோ என்ற பயம்தான்!
Close
 
 

அடுத்த பட ஹீரோ விக்ரம்தான் - முடிவுக்கு வந்தார் ஷங்கர்!

Vikram Is Shankar Hero Aid0136
தனது அடுத்த மெகா படத்தின் ஹீரோ யார் என்பதில் இயக்குநர் ஷங்கர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். எதிர்ப்பார்த்த மாதிரியே, விக்ரம்தான் அவரது அடுத்த பட ஹீரோ.

இந்தப் படத்துக்கு முதல் முறையாக எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) வசனம் எழுதுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தில் முதலில் விக்ரம் நடிப்பார் என்றும், இல்லையில்லை சூர்யா நடிப்பார் என்றும் மாறிமாறி தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிந்ததும் ஷங்கர் படத்துக்கு வந்துவிடுவாராம் விக்ரம்.

சிங்கம் 2 படத்தின் ஹீரோ சூர்யா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான அடுத்த நாள், ஷங்கர் பட ஹீரோ விக்ரம் என செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Close