சென்னை: எதையும் என் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பா கமல் விரும்புகிறார். அதனால் அவர் என் விஷயத்தில் தலையிடுவதில்லை, நானும் அவரிடம் எதையும் சொல்வதில்லை, என்கிறார் ஸ்ருதி ஹாஸன்.
தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ள ஸ்ருதி, தெலுங்கு மற்றும் இந்தியில் படுபிஸியாக உள்ளார்.
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஸ்ருதியைக் கேட்டபோது, நடிக்க கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம். அந்த அளவுக்கு பிஸியாக உள்ளாராம்.
இதுகுறித்து சமீபத்தில் கேட்டபோது, "இந்தி மற்றும் தெலுங்கில் பிஸியாக உள்ளேன். இதுதான் அப்பா படத்தில் நடிக்க முடியவில்லை. இதற்காக அவர் வருத்தப்பட மாட்டார். மகள் பிசியாக இருக்கிறாளே என்று மகிழ்வார்.
என் வியத்தில் எதிலும் என் அப்பா தலையிடுவதில்லை. எதையும் அனுபவப் பூர்வமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே என் அப்பா விரும்புவார்.
அதனால் அவர் ஆரம்பத்திலிருந்து எந்த விஷயத்தையும் சொல்லித் தரவில்லை. எந்தப் பிரச்சினையையும் நானே தீர்த்துக் கொள்கிறேன்," என்றார்.